<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

இளையராஜாவின் திருவாசகத்தை கேட்க..


இளையராஜாவின் திருவாசக இசை வடிவம், வருகிற ஜுன் 30ம் தேதி சென்னை மியூசிக் அகாடமியில் வெளியாகிறது. ‘இது என் வாழ்நாளின் கனவு, என் தவம்!’ என்கிறார் ராஜா!


"ஒரு வீட்டை இரண்டு நாள் கவனிக்காமல் விட்டால், எங்கிருந்தோ தூசி படிந்துவிடுகிறது. ஒரு வாரமானால், புழுதியும் ஒட்டடையும் நிரம்பிவிடும். ஒரு மாதமானால், எலிகளும் பெருச்சாளிகளும் குடியேறிவிடும். ஒரு வருடம் ஆகிவிட்டால்... அது அரண்மனையே ஆனாலும், மண்மேடாகி விடும். ஆனால், நாம் நம் பொக்கிஷங்களை, கலாசார அடையாளங்களை, ஜென்ம ஜென்மாந்திரமாக கவனிக்காமல் இருந்து வருகிறோம். நம் அலட்சியங் களையும் தாண்டி வாழுகிற பலம், அந்தப் பொக்கிஷங்களுக்கு இருப்பது நம்முடைய பாக்கியம்! இனிமேலாவது நம் வீட்டை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வெளியிலிருந்து கலாசாரக் குப்பைகள், அநாகரிகப் புழுதிகள் நம் வீட்டுக்குள் வராமல் தடுத்தாக வேண்டும். அப்படி யோசிக்கும்போது எனக்கு வந்த சிறிய யோசனை தான் திருவாசகத்துக்கு இசை கோக்கிற முயற்சி"

"இப்படி ஒரு முயற்சியைக் கடந்த ஐந்து ஆண்டுகளாகச் செய்துகொண்டு இருந்தேன். அதிக பணமில்லாமல் இவ்வளவு சிறப்பாகச் செய்ய முடியாது. என் இயல்புக்கு யாரிடமும் போய்க் கேட்க எண்ணம் வராது. அப்படியும் சில முயற்சிகள் எடுத்தேன். யாரும் இசைந்து வரவில்லை. அவர்கள் இதை வியாபார ரீதியாக அணுகியதுதான், இந்த ஐந்து வருட கால தாமதத்துக்குக் காரணம்"
- இளையராஜா (நன்றி: விகடன்)

தற்போதைக்கு ராஜா அடுத்துச் செய்ய விரும்பும் காரியங்கள் :: திவ்ய பிரபந்தத்தை, சிலப்பதிகாரத்தின் சில அபாரமான வரிகளை, ராமாயணம் அல்லது மகாபாரதத்திலிருந்து சில பகுதிகளை இசைவடிவமாக்குவது.

வெளிவராமலே போன அந்த சிம்பனிக்கு, இசைக்கருவி எதுவும் இல்லாமலேயே - நாமெல்லாம் வார்த்தைகளை எழுதுவதை போல - இசைக்குறிப்புகளை(சிம்பனிக்கு 100க்கும் மேற்பட்ட வாத்தியங்களுக்கு இசை கோர்க்க வேண்டும்) எழுதுவதை கவனித்த அந்த சிம்பொனியின் ஒருங்கினைப்பாளர் உலக அரங்கில் இளையராஜாவின் இசை மேதமையை பாராட்டியபோது, நாமெல்லாம் பெருமையடைந்தோம்... பெருமை இருக்கிறது, அந்த இசை மேதையிடம் திட்டங்களும், அபரிமிதமான ஞானமும் இருக்கிறது... இல்லாதது ஒன்றே ஒன்றுதான்... அது நிதி...

நாம் அவருக்கு நிதியுதவி என்று தனியாக எதுவும் செய்ய வேண்டாம். அவரின் இசைத்தட்டுக்களை காசு கொடுத்து வாங்கினாலே போதும். அது அவரின் அடுத்த முயற்சிக்கு உதவியாக இருக்கும். மேதைகளை இருக்கும் போது தாங்கிப்பிடிக்காமல் அவர்கள் இறந்த பிறகு அவருக்கு மணிமண்டபம் கட்டி விருது கொடுத்து மறந்து போகும் கலாச்சாரத்தில் நாமும் பங்கெடுக்க வேண்டாம்....

உங்கள் முடிவை இன்றே எடுங்கள். எடுத்த முடிவை வாக்காக இடுங்கள். காசு கொடுப்பதாக எடுத்த முடிவை மாற்றாதீர்கள். ஓசியில் கேட்கும் முடிவை மாற்றுவது தப்பேயில்லை... கேட்கவே மாட்டேன் என்பது உங்கள் முடிவென்றால், இசைத்தட்டை காசு கொடுத்து வாங்கிய பின் யாருக்கு கொடுப்பது என்பதையும் நீங்களே முடிவெடுங்கள்.


இளையராஜாவின் திருவாசகம் இசையை ::
காசு கொடுத்து கேட்பேன்
ஒசியில் கிடைத்தால் கேட்பேன்
கேட்கவே மாட்டேன்

தலைப்பின் தொடர்ச்சி :: 30ம் தேதிக்கு பிறகு காசு கொடுத்து வட்டு வாங்கவும்

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


//மேதைகளை இருக்கும் போது தாங்கிப்பிடிக்காமல் அவர்கள் இறந்த பிறகு அவருக்கு மணிமண்டபம் கட்டி விருது கொடுத்து மறந்து போகும் கலாச்சாரத்தில் நாமும் பங்கெடுக்க வேண்டாம்....//

சரியாகச் சொன்னீர்கள் அன்பரே!
 



கண்டிப்பாக காசு கொடுத்துதான் கேட்பேன்.
 



நன்றி +veராமா... நன்றி முத்துக்குமரன், அதுதான் அவரின் உழைப்புக்கு நாம் கொடுக்கும் மரியாதை மட்டுமல்ல, நமக்கு கிடைக்கப்போகும் இசைக்கு கொடுக்கும் வரவேற்பும்தான்
 



திருநாவுக்கரசர் விட்ட டுபாகூருக்கும் மடமைக்கும் பின் பாட்டு பாடும் இந்த கேவலங்களை நான் கேட்கவே மாட்டேன். ஆனால் இளையராஜவுக்காக இனி ஒரு வருடத்திற்கு வரும் அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் பூ கொத்துக்கு பதிலாக இந்த ஆல்பத்தை காசு கொடுத்து வாங்கி பரிசளிப்பேன்.
நான் வாங்கும் ஒவ்வோரு ஆல்பத்திற்கும் இளையராஜாவிற்கு கிடைக்கும் பங்கு எவ்வளவு என்பதனை கப்ஸா கஸ்பர் சொல்லவேண்டும்.
 



முகமூடி,
இது போன்ற தன்னார்வ முயற்சிகள் கண்டிப்பாக ஊக்குவிக்கப்படவேண்டியவை. ஆனால் சமீப காலங்களில் ராஜாவின் form-இல் எனக்கு நம்பிக்கையில்லை. பல ஆண்டுகளுக்கு பின் நான் காசு கொடுத்து வாங்கிய ராஜாவின் ஒரே ஒலித்தட்டு விருமாண்டி மட்டுமே. அதனால் விமர்சனங்களையும் இசையையும் ஒருமுறை ஓசியில் கேட்டு அதற்கு பின்னர் பிடித்திருந்தால் மட்டுமே காசு கொடுத்து வாங்குவேன்.

இதுதான் நான் பெரும்பாலும் பின்பற்றும் விதி என்றாலும் விதிவிலக்காக ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் ரஜினிகாந்த் இருக்கும் படங்களின் ஒலித்தட்டுகளை கண்ணை மூடிக்கொண்டு வாங்கிக்கொண்டிருக்கிறேன். (ஆஹா, ரஹ்மானா ராஜாவான்னு ஒரு தீப்பொறி போட்டாச்சு :) ) இந்த விஷயத்தில் மேலும் ஏதாவது கூறினால் RIAA மாதிரி நம்மூர்க்காரர்கள் நாறடித்துவிடுவார்களோ என்று பயமாய் இருக்கிறது.

இந்தியாவில் படங்களைப் பொறுத்தவரை இன்னொரு விஷயம் காஸெட், சிடி விற்பதால் இசையமப்பாளருக்கு நேரடியாக ராயல்டி போவதாக தெரியவில்லை. அவரின் சொந்த கம்பெனியாக இருந்தால்தவிர ராஜாவிற்கு ஹிட் கொடுத்தோம் என்பதைத்தவிர வேறு பிரயோசனமில்லை. ஆனால் ராஜா இந்த ஹிட் பற்றிக் கவலைப்படும் நிலையெல்லாம் தாண்டி, எப்படியிருந்தாலும் ராஜா தான் இசையமைப்பாளர் என்ற எண்ணம் கொண்ட இயக்குனர்களின் படங்களில் மட்டுமே அவர் இசையமைக்கிறார்.

---
இராமநாதன்
 



// இனி ஒரு வருடத்திற்கு வரும் அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் பூ கொத்துக்கு பதிலாக இந்த ஆல்பத்தை காசு கொடுத்து வாங்கி பரிசளிப்பேன் // அருமையான முடிவு. வாடிப்போகும் பூக்களை விட வாடாத இசைமாலை நல்லதொரு பரிசுதான்.. நன்றி
 



இராமநாதன்... // .... இசையையும் ஒருமுறை ஓசியில் கேட்டு அதற்கு பின்னர் பிடித்திருந்தால் மட்டுமே காசு கொடுத்து வாங்குவேன். // இதில் எனக்கு உடன்பாடு இல்லையெனினும் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று உண்டு... இசை என்பது ஒரு அனுபவம். கேட்பவரின் சூழ்நிலையும், ரசனையும் பொறுத்து அந்த அனுபவம் மாறுபடும். உங்களுக்கு இந்த இசை பிடிக்கவில்லை எனில் மற்றவரிடம் 'ஊத்திகிச்சி' என்று சொல்லாதீர்கள்.

// ரஜினிகாந்த் இருக்கும் படங்களின் ஒலித்தட்டுகளை // இது என்ன நியாயம்

// இசையமப்பாளருக்கு நேரடியாக ராயல்டி போவதாக தெரியவில்லை // கண்டிப்பாக போகிறது... விற்பனையில் மட்டுமல்ல ஆல் இண்டியா ரேடியோ போன்றவை ஒலிபரப்பினால் கூட ராயல்டி தரும் (தனியார் பற்றி தெரியாது). நடைமுறையில் என்ன நடக்கிறது என்பதை ஆராயவேண்டும்

// ராஜா இந்த ஹிட் பற்றிக் கவலைப்படும் நிலையெல்லாம் தாண்டி // சரிதான். இந்த இசை கோர்வையை நான் ஆதரிப்பது கூட இந்த இசைவட்டுக்களை வெளியிடுவோர் லாபம் அடைந்தால் அவர்கள் ராஜாவின் அடுத்த இசை வடிவத்துக்கு ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கையிலேயே...

வெளிநாட்டில் பார்த்ததை சொல்கிறேன்.. இவ்வளவு மேதமையை வைத்திருக்கும் ஒருவர் வெளிச்சத்துக்கும் வந்திருந்தால் அவரின் நிலையே வேறு.
 



//உங்களுக்கு இந்த இசை பிடிக்கவில்லை எனில் மற்றவரிடம் 'ஊத்திகிச்சி' என்று சொல்லாதீர்கள்.//
என்னிடம் நல்லாயிருக்கா இல்லையா என்று கேட்போருக்கு மட்டுமே, என் வலைப்பதிவிலும் (அதை படிப்போரும் அவர்கள் தம் சொந்த கருத்து உடையவர்கள்!) நான் பதிக்க முடியும். இல்லையா?

தமிழில் அதுவும் திருவாசகத்தைப் பற்றி வருகின்றது என்பதாலேயே அது நல்லதொரு இசையென்று முடிவுக்கு வருவதில் எனக்கு உடன்பாடில்லை. அதற்கு, உதாரணத்திற்கு 200Rs விற்கபடுவதென்றால், என்னுடைய கருத்தைக் கேட்பொரிடம் மேற்கூறிய "தமிழ்" காரணம் ஒன்றிற்காகவே நன்றாக இருக்கிறதென்று எனக்கு பிடிக்காததொன்றினைப் பற்றிக் நல்லதெனக் கூறச் சொல்கிறீர்களா?

//// ரஜினிகாந்த் இருக்கும் படங்களின் ஒலித்தட்டுகளை // இது என்ன நியாயம்//// இது என் தனிப்பட்ட கருத்து. ஏ.ஆர்.ரஹ்மானென்றால் அவரின் Bombay Dreams-ஐக் கூட வாங்கத் தயங்காத ரசிகன் நான். ரசிகன் என்ற வகையில் தான் கூறினேன். ஒருவரின் திறமை மேல் நம்பிக்கை இருக்கிறது என்ற வகையில் தான், திரையில் வெளிவராத ரஹ்மான், ரஜினி படங்களின் ஒலித்தட்டுகளை வாங்குவேன் என்று கூறினேன். இதிலும் சந்திரமுகியில் என்னை ரஜினி ஏமாற்றிவிட்டதாகவே கருதுகிறேன். வாங்குவேன் என்று கூறினேனே ஒழிய, வாங்குங்கள் என்று ஒருபோதும் கூறியதில்லை.

//கண்டிப்பாக போகிறது... விற்பனையில் மட்டுமல்ல ஆல் இண்டியா ரேடியோ போன்றவை ஒலிபரப்பினால் கூட ராயல்டி தரும் (தனியார் பற்றி தெரியாது). நடைமுறையில் என்ன நடக்கிறது என்பதை ஆராயவேண்டும்//
இதைப்பற்றி எனக்கு தெரிந்த வரையில் என்றே கூறினேன். எனக்குத்தெரிந்த வரையில் ஒரு சம்பளத்தை இசையமைப்பாளருக்கு கொடுத்துவிட்டு மிச்ச எல்லா audio rights profit-களையும் தயாரிப்பாளர்கள் அடைவார்கள் என்றே கேள்விப்பட்ட்டுள்ளேன்.

முகமுடி என்னும் நான் மிகவும் மதிக்கும், நடுநிலையானவர் என்று நான் இன்னமும் கருதும் ஒருவரிடமிருந்து வரும் கருத்தாக, தான் சொல்வதிலேயே உண்மை இருக்கிறது என்று தொனிக்கும்படியான கருத்துகள் வெளியாகுமென்பது நான் இதுவரை கனவிலும் நினைத்துப்பார்த்ததில்லை.
---
தங்களை மனவருத்தற்திற்குள்ளாக்கியிருந்தால் மன்னிக்கவும்..

அன்புடன்
இராமநாதன்
 



அடடே ராமநாதன்... பேசும் போது தொனியை வைத்து ஒருவர் என்ன அர்த்தத்தில் சொல்கிறார் என்று உணர முடியும்.. எழுதுவதால் தெரியாதில்லையா, அதான் நான் சொன்னது வேறு மாதிரி தோன்றியிருக்கிறது உங்களுக்கு... இப்பொழுது இப்படி மாத்தி படியுங்கள்

.... உங்களுக்கு இந்த இசை பிடிக்கவில்லை என்றாலும் மற்றவரிடம் 'ஊத்திகிச்சி'ப்பா சுமாராத்தான் இருக்கு என்று சொல்லாமல் "எனக்கு பிடிக்கல, ஆனா உங்களுக்கு பிடித்தாலும் பிடிக்கும், நீங்க கேட்டு பாருங்க" என்று சொல்ல முடிந்தால் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். (பொதுவா படம் பத்தி சொல்லும்போது ஹா படம் வேஸ்ட்டும்மா, இதுக்கெல்லாம் கொடுத்து காச வேஸ்ட் பண்ணாத என்றுதான் சொல்லுவோம், நானும் சொல்லியிருக்கிறேன்... அதான் அதுமாதிரி வேண்டாமே என்று)

.....ஒலிபரப்பினால் கூட ராயல்டி தரும் (தனியார் பற்றி தெரியாது) என்பதாகத்தான் அறிந்திருக்கிறேன். நடைமுறையில் என்ன நடக்கிறது என்பதை பற்றி (எனக்கும் தெரியாது) ஆராய்ச்சி செய்ய வேண்டும்...

// தான் சொல்வதிலேயே உண்மை இருக்கிறது என்று தொனிக்கும்படியான கருத்துகள் // விபத்தாக அப்படி வெளிப்பட்டிருக்குமேயன்றி ஒரு குறிக்கோளாக அப்படி சொல்ல கண்டிப்பாக நான் விரும்ப மாட்டேன்...

வருத்தப்படவெல்லாம் ஒன்றுமில்லை... இசையில் உயர்வு தாழ்வு எல்லாம் இல்லை. நம் தேசத்து இசைவடிவங்களை யார் செய்தாலும் அதற்கு என் ஆதரவு உண்டு.. ஆனால் ரஹ்மான் அளவு மார்க்கெட்டிங் தெரிந்தவரில்லை இளையராஜா. ரஹ்மானுக்கு ஒரு ஆல்பம் என்றால் ஓடிவரும் தயாரிப்பாளர்கள் ராஜாவுக்கு ஓடிவருவார்களா என்று தெரியாது... காசு போடும் அவர்கள் கவலை அவர்களுக்கு.. ஆனால் கஷ்டப்பட்டு செய்யப்படும் ஒரு முயற்சிக்கு நாம்தானே ஆதரவு தரவேண்டும். அதனாலேயே இந்த பதிவு...
 



ஓசி ஓசியை தவிர வேறு எதையும் கேட்பதும் இல்லை பார்ப்பதுமில்லை. ஓசிக்காகவே சிவாஜிக்கு வெஜிட்டிங்.
 



சரி, உங்க கருத்து ??