<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

புதன், ஜூன் 15, 2005  

புலிகளின் மூர்க்க குணம்


புலிகளுக்கு போராட்ட குணம் இருக்கும் அதே அளவு மூர்க்க குணமும் அதிகம் என்றும், ஒரு வகையில் மூர்க்க குணமே புலிகளின் survival க்கான முக்கிய தகுதி என்றும் புலிகளை கூர்ந்து கவனித்துவரும் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.


புலிகளின் சில குணாதிசயங்கள்


தன் எல்லையை பாதுகாக்கவும், விரிவுபடுத்தவும், புதிய எல்லையை கைப்பற்றவும், தனக்கு போட்டியாகவோ வருபவற்றை காலி செய்யவும் சண்டையிட தயங்காத புலிகள் சண்டைக்கா கூட்டு சேரும்போது ஆண் பெண் பாகுபாடெல்லாம் பார்ப்பதில்லை... வயது குறைந்த புலிகளும் சண்டையில் ஈடுபடுவதுண்டு.

சில சமயம் புலிகள் தங்களுக்குள்ளேயே எல்லை பிரச்னை காரணமாக சண்டையிடுவதுண்டு.

அதிவேகமாக துரத்திச்சென்று கொல்வது புலிகளின் சிறப்பம்சம். பகலை விட இரவில் செயலபடுவதே புலிகளுக்கு விருப்பம்.

உடலில் இருக்கும் பட்டை பட்டையான அமைப்பை வைத்து புலிகளை அடையாளம் காணலாம்.

காட்டுக்குள் சராசரியாக 15 வருடங்கள் வாழும் புலிகள் காடு அல்லாத சூழ்நிலையில் வாழும் காலம் 16 முதல் 18 வயது வரையே.

நிலத்தில் மட்டுமல்ல நீரிலும் புலிகளுக்கு ஆற்றல் அதிகம். 6-8 கிமீ. அகலமுள்ள நதிகளை சர்வசாதாரணமாக நீந்தவல்ல புலிகளால் 29 கிமீ வரை நீந்த இயலுமாம்.

தாக்குதல் காலங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட விதவிதமான தகவல் தொடர்பை புலிகள் கையாளுவதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.

புலிகளை பாதுகாப்பதற்கு அமைப்பெல்லாம் இருக்கின்றன. அதன் உறுப்பினர்கள் புலிகளின் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார்கள். அழிந்து வரும் புலியினத்தின் பாதுகாப்புக்கும் புணரமைப்புக்கும் நிதி ஆதாரம் திரட்டும் அவர்கள் புலிகளின் மேல் வைத்திருப்பது வெறும் பாசம் என்ற நிலை¨யையும் தாண்டிய ஒரு obsessive நிலையில் இருப்பவர்கள். அதன் ஒரு உறுப்பினர் சொல்வது :: புலிகளின் நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் செயலை செய்பவர்கள் புலிகளின் கைகளில் கூட தப்பித்து விடலாம், எங்கள் கைகளில் மாட்டினால் கைமாதான்.

ஆசியாவில் கடவுளுக்கு ஒப்பாகவும் தீமையை அழிக்க வந்த அவதாரமாகவும் கருத்தப்படும் புலிகளுக்கு கலாச்சார பின்புலமும் முக்கியத்துவமும் மிக அதிகம்.

புலிகளை பற்றி மேலும் விபரங்கள் இங்கே

புலிகளின் நலனுக்க்காக நீங்கள் செய்ய வேண்டியது
புலிகளுக்கு நீங்களும் உதவ முடியும்

டிஸ்க்ளெய்மர்: இந்த பதிவு இந்திய வகை புலிகளான tigris எனப்படும் புலி வகைகளை குறித்து மட்டுமே. மற்ற நாடுகளில் வாழும் புலி வகைகளான அல்டைகா, சும்த்ரே, கார்பெட்டி பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

அறிவுப்பசி அண்ணாசாமி: "புலிநகக்கொன்றை"ன்னு என்னமோ பொஸ்தகம் ரிலீஸ் பண்ணியிருக்காங்களாமே. அது என்னா, புலி நகத்தால எப்படி எதிராளிய வூடு கட்டுறதுங்கறத பத்தியா??

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


முகமூடி,
ஒரு முக்கிய உண்மையைச் சொல்ல மறந்துவிட்டீர்கள். புலி இந்தியாவின் தேசிய விலங்கு :-).
 



அட ஆமாம் முத்து... மிக முக்கியமான இந்த விசயத்த எப்படி விட்டேன்... (இவ்வளவு அருமையான உயிரினத்த விலங்குன்னு சொல்ல மனசு வரல அதான்)
 



தாடியும் சிப்பாவும் சோடாபுட்டி கண்ணாடியும் அணிந்து வானத்துச்சந்திரனை வெறித்துப்பார்த்தபடி AnionMass எ. அனோனிமாசு சொல்வது:
|மனிதனே ஒரு சிறப்பு விலங்கு. விலங்கு என்பதற்கு அர்த்தம் என்னவென்று முகம் மூட முன்னாலேயே அகரமுதலியிலே பார்த்திருக்கக்கூடாதா?|
 



முகமூடி
back in form-ஆ? இந்த நக்கல் தான் உங்கள் பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது...

எப்படித்தான் உங்களுக்கு இப்டியெல்லாம் எழுதவேண்டுமென்று தோன்றுகிறதோ...
 



சித்தாந்தங்களை சிறுவர்களுக்கும் விளங்கும் வண்ணம் சிறப்பாக செப்பும் AnionMass எ. குருவே... விலங்குக்கு அகரமுதலியில் என்ன அர்த்தமோ சிறியேன் நானறியேன், ஆனால் சமூகத்தில் என்ன அர்த்தம் என்று நிலத்தில் நடக்கும் காலத்தில் கேட்டுத்தெளியுங்கள்.
 



நன்றி இராமநாதன்... எல்லாம் உங்கள மாதிரி நல்லவங்க (சரீ... சரீ...) கொடுக்கற ஊக்கம்தான்.
 



முகமூடி சொன்னதாவது:
||விலங்குக்கு அகரமுதலியில் என்ன அர்த்தமோ சிறியேன் நானறியேன், ஆனால் சமூகத்தில் என்ன அர்த்தம் என்று நிலத்தில் நடக்கும் காலத்தில் கேட்டுத்தெளியுங்கள்.||

AnionMass எ. அனோனிமாசு சொல்வதாவது:
|சோறு என்று சொன்னாற் புரியாது ரைஸ் என்று தமிளிலே சொல் எனும் நிலத்தில் நடக்கும் காலத்துக்குரிய தமிள்ச்சமுதாயத்திடம் இதை எதிர்ப்பார்க்கவேண்டியதுதான். ஏ கேடுகெட்ட தமிள்க்கூலிடாங்கிகளே! தமிளை வாளவிடுங்கல்|
 



தமிழ் சமுதாயம் கண்ணில் விட வாங்கியே விளக்கெண்ணெய் விற்றுத்தீர்ந்ததடா...... பள்ளியிலே கூட விளையாட்டு வகுப்பென்ற ஒன்றில் வாத்தியார் கண்டிப்பு இல்லாமல் திரிவோமே... இங்கே ஊரெல்லாம் நக்கீரர்களாக இருக்கிறார்களே... அனோனிமாசு அண்ணா (அ. அக்காவா) ஒரு தபா விட்டு பிடிக்க கூடாதா...
 



முகமூடி சொன்னதாவது:
||இங்கே ஊரெல்லாம் நக்கீரர்களாக இருக்கிறார்களே... அனோனிமாசு அண்ணா (அ. அக்காவா) ஒரு தபா விட்டு பிடிக்க கூடாதா||

AnionMass எ. அனோனிமாசு சொல்வதாவது:
|அனோனிமாசு பிடிக்க வந்தாளா? இல்லையே. நிலத்திலே காலம் படப் பேசும் மொழி என்பதைக் கேட்டுத்தான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டாள். மன்னிக்கவேண்டும்.

புலியின் ஞாபகசக்தியைப் பற்றி ஒன்றும் எழுதவில்லையே. காயம் பட்ட புலி பழிவாங்க மறப்பதில்லை என்று கற்பித்திருந்தார்களே|
 



// புலியின் ஞாபகசக்தியைப் பற்றி ஒன்றும் எழுதவில்லையே. காயம் பட்ட புலி பழிவாங்க மறப்பதில்லை என்று கற்பித்திருந்தார்களே // இதை பற்றி விசாரித்தேன் மாசக்கா (அனோனி மாசு + அக்கா), அதெல்லாம் வழக்கில் உலவும் கதைகளாம். விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்படவில்லையாம். ஞாபகம் வைத்து பழிவாக்கும் அளவுக்கெல்லாம் புலிகளின் மூளை பரிணாம வளர்ச்சி அடைந்ததில்லையாம் (tigris பற்றிதானே சொன்னீர்கள்?)
 



முகமூடி சொன்னதாவது:
||ஞாபகம் வைத்து பழிவாக்கும் அளவுக்கெல்லாம் புலிகளின் மூளை பரிணாம வளர்ச்சி அடைந்ததில்லையாம்||

AnionMass எ. அனோனிமாசு சொல்வதாவது:
|முகமூடி சொன்னால் சரியாகத்தான் இருக்கும். பூனைவகையைச் சேர்ந்த புலியைத்தானே சொல்கிறீர்கள்? மூளை வளர்ச்சி அடைந்திருக்காது. கழுதைப்புலிக்கும் அப்படியா? அல்லது தன்னையே நக்கும் நாய், அடுத்தவன் கோழியைக் குதறும் ஓநாய் வகையா கழுதைப்புலியா?|
 



///|முகமூடி சொன்னால் சரியாகத்தான் இருக்கும். பூனைவகையைச் சேர்ந்த புலியைத்தானே சொல்கிறீர்கள்? மூளை வளர்ச்சி அடைந்திருக்காது. கழுதைப்புலிக்கும் அப்படியா? அல்லது தன்னையே நக்கும் நாய், அடுத்தவன் கோழியைக் குதறும் ஓநாய் வகையா கழுதைப்புலியா?|//

அனானிமாசு,
முகமூடி சொல்வது இந்தியப் புலி Tigris பற்றியது. ஈழத்தில் புலிகளுண்டா? என்ன பெயர்?. :-).
 



முத்தியது:
||முகமூடி சொல்வது இந்தியப் புலி Tigris பற்றியது. ஈழத்தில் புலிகளுண்டா? என்ன பெயர்?. :-).||

AnionMass எ. அனோனிமாசு சொல்வதாவது:
|தெரியவில்லை. யாராவது ஈழத்தமிழிச்சியிடமே கேட்கவேண்டும். செருமனியிலே நிறையப்பேர் இருக்கிறார்களே. கேட்டுப்பாருங்களேன்|
 



// செருமனியிலே நிறையப்பேர் இருக்கிறார்களே. கேட்டுப்பாருங்களேன் // என்னன்னாலும் மாசக்கா சிந்தனையில உதிர்ற முத்து போல வருமா??
 



புலிக்குடும்பத்தைச் சேர்ந்ததுதான் 'பூனைகளும்' என்று
படு நிச்சயமாகத்தெரிந்து கொண்டிருக்கும்
ரெண்டு பூனைகளின் அடிமை
துளசி சொல்வது
இது நல்ல பதிவு!!!!!
 



முகமூடி ஏன் அப்பா பயப்படுகிறீர் சொல்ல வந்ததை தெளிவாகச் சொல்லலாமே. அதற்கு ஏன் இந்த பூச்சாண்டி வேலையெல்லாம்.
 



வாங்க துளசியக்கா... ரெண்டு பூனை வச்சிருக்கீங்களா?? எங்க வீட்டுல 4 நாய், 2 பச்சை கிளி இருந்தது...(இப்ப இல்ல, அது ஒரு சோக கதை) வளர்ப்புகள் தனி சந்தோசம்தான்... நன்றி சம்மி, அதுல சந்தேகம் என்ன.
 



இளையவன்... தெளிவா சொன்னதாதானே நினைச்சேன்... இந்த பதிவு இந்திய வகை புலிகளான tigris எனப்படும் புலி வகைகளை குறித்துன்னு டிஸ்க்ளெய்மர் வேற போட்ருந்தேனே... பயந்ததா வேற சொல்றீங்க.... ஒன்னுமே புரியல உலகத்திலே
 



back to form ..

Eppadithan ippadiyellam thonutho??
 



இன்னும் ஒன்று புலிகளைப் பற்றி தன் இனத்தைக் காட்டிக் கொடுத்த தன்னினத்தவனாக இருந்தாலும் சரி அவைகள் மன்னிப்பதில்லையாம்.(நானும் இந்தியப் புலியைப் பற்றித்தான் சொன்னேன்)
 



இளையவன்
தன் இன புலிகளென்று எதை சொல்கிறீர்கள்? இந்திய புலிகளைத்தானே...
 



// தன் இனத்தைக் காட்டிக் கொடுத்த தன்னினத்தவனாக இருந்தாலும் சரி அவைகள் மன்னிப்பதில்லையாம்.(நானும் இந்தியப் புலியைப் பற்றித்தான் சொன்னேன்) //

தமிழ் ஆசான் நன்னன் சொல்றது என்னன்னா :: புலியை பற்றி குறிப்பிடும்பொது தன்னினமாக என்று சொல்ல வேண்டும்... தன்னினத்தவன் என்றால் அது உயர்திணை. எங்க சொல்லுங்க பாக்கலாம், தன்னினம்ம்ம்ம்

தமிழ் அறியா நான் சொல்றது என்னன்னா :: உங்க கருத்த விசாரிச்சா அதெல்லாம் வழக்கில் உலவும் கதைகளாம். விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்படவில்லையாம். காட்டிக்கொடுப்பதை உணர்தல், மன்னித்தல் என்ற அளவுக்கெல்லாம் புலிகளின் மூளை பரிணாம வளர்ச்சி அடைந்ததில்லையாம்
 



// Eppadithan ippadiyellam thonutho?? // வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி
 



//ஆசியாவில் கடவுளுக்கு ஒப்பாகவும் தீமையை அழிக்க வந்த அவதாரமாகவும் கருத்தப்படும் புலிகளுக்கு கலாச்சார பின்புலமும் முக்கியத்துவமும் மிக அதிகம்.//

இது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப் பட்டிருக்கா? முகமூடியை கழட்டி வைச்சிட்டு பதில சொல்லுங்கோ.
 



// நம்ம எல் எல் தாஸு சொல்றது என்னன்னா:
இளையவன்
தன் இன புலிகளென்று எதை சொல்கிறீர்கள்? இந்திய புலிகளைத்தானே...//

ஆமாம் தாஸ் நான் இந்தியப் புலிகளைப் பற்றித்தான் சொன்னேன். நல்லவைகளைப் பாதுகாக்கத்தான் உலகில் அமைப்புக்கள் உள்ளன. அந்த வகையில் புலிகளைப் பாதுகாப்பதற்கு இந்தியாவில் அமைப்புக்கள் இருக்கென்று நினைக்கும்போது சந்தோசமாக இருக்கு. ஆனா புலிகள் தம்மைப் பாதுகாக்க மற்றவைகளின் உதவியை நாடுவதில்லை. ஆசியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் புலிகள் சம்பந்தமாக இன்னும் ஒரு நம்பிக்கையும் உண்டு அவைகள் மனச்சாட்சிக்குச் சரியென்றுபட்டவைகளைச் செய்யிற விலங்குகளாம். புலிகள் காட்டு ராசா என்று சொல்லப்படுற சிங்கத்தையே எதிர்த்துப் போராட கூடிய வல்லமை பொருந்தியவைகள். சிங்கம் காட்டு ராசா என்ற காரணத்தால் பச்சோந்திகள் நரிகள் மற்றும் ஏனைய விலங்குகள் கூட சிங்கத்தின் பக்கம்தானாம் நிற்கிறதுகள். ஆனா புலிகள் அவைகளைக் கண்டெல்லாம் பயப்படாமல் போராடி அவைகளை மண்கவ்வ வைக்கிற ஆற்றல் கொண்டவை.
 



//ஆசியாவில் கடவுளுக்கு ஒப்பாகவும் தீமையை அழிக்க வந்த அவதாரமாகவும் கருத்தப்படும் புலிகளுக்கு கலாச்சார பின்புலமும் முக்கியத்துவமும் மிக அதிகம்.//

// இது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப் பட்டிருக்கா? முகமூடியை கழட்டி வைச்சிட்டு பதில சொல்லுங்கோ. //

நான் கடவுள் என்ற வார்த்தையில் கொடுத்த linkஐ (http://www.seaworld.org/infobooks/Tiger/consertiger.html) சுட்டி பார்த்தீர்களானால்,
C. Biological and cultural values என்ற தலைப்பில் பத்தி 2.ல் இருக்கும் இந்த வாக்கியங்களை நீங்கள் பார்க்கலாம்
>>In Asia, tigers have been identified with gods and considered conquerors of evil. Ironically, the belief that tigers hold great power, even in their bones, is leading to their decline.<<
(வாக்கியத்தின் இரண்டாம் பாகத்தை பதிவில் போட என்னமோ மனசு வரல...)
 



என்னவோ ஏதோன்னு ஓடிவந்து படிச்சிப் பாத்தா...

ச்சை.. காட்டுப் புலியப் பத்தியா..

கலக்கீட்டியளே
 



அது ஒரு நம்பிக்கை தானே தவிர விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. அதேமாதிரித்தான் நான் சொன்னதும் ஒரு நம்பிக்கைதான்.
 



வியாசர் கூற்று:
*********************
குடிமக்களைக்
காப்பாற்றாது வரி விதித்துத் தன்னைக்
காத்துக்கொள்ளும்
அரசாங்கம் தோன்றும்.
அரசர்கள், பிராமணர்,
சூத்திரர்களுக்குச் சேவை
செய்வார். சூத்திரர்கள்
பிராமணர்போல் இருப்பார்கள்.
பிராமணன் ஆயுதம்
தரிப்பான். யாகம்
முதலியவைகள் நடக்காது. சமபந்தி
போஜனம் நடக்கும்.
கள்ளர்கள் அரசாங்க
வேலைகளிலும், அரசர்கள்
கள்ளர்களுக்கு உடந்தையாகவும்
இருப்பார்கள். பிராமணர்
வேதத்தை விற்பார்கள். பெண்கள்
கற்பை விற்பார்கள்.
யுகமுடிவில் மக்கள்
கீழ்நோக்கியே செல்வார்கள்.
வேலையற்ற பிராமணர்கள்
நட்சத்திரங்களை எண்ணிக்
கொண்டிருப்பர். பேராசையுடன்
படிக்காமல் ஞானிபோல்
நடிப்பார்கள்.
நட்சத்திரங்கள் நிறம் மாறும்.
அந்தியில் சந்திரன்
சிவப்பாகும். அப்பனை
மகனும், மாமியாரை மருமகளும் அடிமை
போல வேலை
வாங்குவார்கள்.
 



இப்ப உங்களுக்கு தேவையானது பரபரப்பு. அதுக்கு புலி தேவைப்படுது.
சும்மா போங்கைய்யா..!
 



கோபி காட்டு புலிய பத்திதான். வீட்டு புளிய பத்தின்னா 'ல' வுக்கு பதிலா 'ள' போட்றுப்பேனே. // என்னவோ ஏதோன்னு ஓடிவந்து படிச்சிப் பாத்தா... // வீட்டு புளிய பத்தி தெரிஞ்சிக்க அவ்ளோ ஆர்வமா?
 



தபால்காரரே, தாங்கள் இரும்பொறையின் கருத்தை தவறான முகவரியில் டெலிவரி செய்துவிட்டீர்கள். தயவு செய்து கீழ்க்கண்ட முகவரிகளுக்கு டெலிவரி செய்யவும் ::

http://கருத்தாஸ்ரமம்.திருவண்ணாமலை.காம்
http://இமயமலைரஜினி.குமுதம்.காம்
http://பிரேமானந்தா.சென்ட்ரல்ஜெயில்.காம்
 



வாங்க மயூரன்... உங்க தவறிழைக்கிறோமா? பதிவு இன்றுதான் பார்த்தேன். அழகாகவும் தெளிவாகவும் உங்கள் கருத்தை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.
 



மயூரன் உங்க பதிவிலேயே என் கருத்தை பின்னூட்டமாயும், அதே கருத்தை - இங்கே எழுதினால் இந்த பதிவு வேற திசையில திரும்பிடும் என்பதால் - என் இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் பதிவிலேயும் எழுதியிருக்கேன். படித்துவிட்டு சொல்லுங்கள்

இந்த பதிவு tigris புலிகளுக்கு மட்டுமே
 



"ஆமாம் தாஸ் நான் இந்தியப் புலிகளைப் பற்றித்தான் சொன்னேன். நல்லவைகளைப் பாதுகாக்கத்தான் உலகில் அமைப்புக்கள் உள்ளன. அந்த வகையில் புலிகளைப் பாதுகாப்பதற்கு இந்தியாவில் அமைப்புக்கள் இருக்கென்று நினைக்கும்போது சந்தோசமாக இருக்கு. ஆனா புலிகள் தம்மைப் பாதுகாக்க மற்றவைகளின் உதவியை நாடுவதில்லை. ஆசியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் புலிகள் சம்பந்தமாக இன்னும் ஒரு நம்பிக்கையும் உண்டு அவைகள் மனச்சாட்சிக்குச் சரியென்றுபட்டவைகளைச் செய்யிற விலங்குகளாம். புலிகள் காட்டு ராசா என்று சொல்லப்படுற சிங்கத்தையே எதிர்த்துப் போராட கூடிய வல்லமை பொருந்தியவைகள். சிங்கம் காட்டு ராசா என்ற காரணத்தால் பச்சோந்திகள் நரிகள் மற்றும் ஏனைய விலங்குகள் கூட சிங்கத்தின் பக்கம்தானாம் நிற்கிறதுகள். ஆனா புலிகள் அவைகளைக் கண்டெல்லாம் பயப்படாமல் போராடி அவைகளை மண்கவ்வ வைக்கிற ஆற்றல் கொண்டவை."

he he...:-)
 



"ஆமாம் தாஸ் நான் இந்தியப் புலிகளைப் பற்றித்தான் சொன்னேன். நல்லவைகளைப் பாதுகாக்கத்தான் உலகில் அமைப்புக்கள் உள்ளன. அந்த வகையில் புலிகளைப் பாதுகாப்பதற்கு இந்தியாவில் அமைப்புக்கள் இருக்கென்று நினைக்கும்போது சந்தோசமாக இருக்கு. ஆனா புலிகள் தம்மைப் பாதுகாக்க மற்றவைகளின் உதவியை நாடுவதில்லை. ஆசியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் புலிகள் சம்பந்தமாக இன்னும் ஒரு நம்பிக்கையும் உண்டு அவைகள் மனச்சாட்சிக்குச் சரியென்றுபட்டவைகளைச் செய்யிற விலங்குகளாம். புலிகள் காட்டு ராசா என்று சொல்லப்படுற சிங்கத்தையே எதிர்த்துப் போராட கூடிய வல்லமை பொருந்தியவைகள். சிங்கம் காட்டு ராசா என்ற காரணத்தால் பச்சோந்திகள் நரிகள் மற்றும் ஏனைய விலங்குகள் கூட சிங்கத்தின் பக்கம்தானாம் நிற்கிறதுகள். ஆனா புலிகள் அவைகளைக் கண்டெல்லாம் பயப்படாமல் போராடி அவைகளை மண்கவ்வ வைக்கிற ஆற்றல் கொண்டவை."

;-)
 



இப்படியும் உண்டு. தெரியுமோ?
http://members.aol.com/jshartwell/hybrid-bigcats2.html

Oorukaimoodi
 



¬Á¡õ Ó¸ãÊ, ¸½ì¸¢ø ÒÄ¢ ±ý¦ÈøÄ¡õ ¦º¡øÅ¡÷¸§Ç, ÒÄ¢ ¸½ìÌ §À¡ÎÁ¡? «¼, ¸¡ðÎô ÒÄ¢Âô Àò¾¢ò ¾¡ý §¸ð§¼ý

áˆ
 



போன பின்னூட்டம் ::

ஆமாம் முகமூடி, கணக்கில் புலி என்றெல்லாம் சொல்வார்களே, புலி கணக்கு போடுமா? அட, காட்டுப் புலியப் பத்தித் தான் கேட்டேன்

ராஜ்
 



ராஜ்,

வேட்டைக்கு தேவையான முக்கிய அறிவே கணக்குதானே... சில சமயம் கணக்கு தப்பாகும்போது இறை தப்பிவிடும்... அதனாலென்ன, அடுத்த முறை சரியாக போட்டுக்கொள்ள வேண்டியதுதான்
 



This comment has been removed by a blog administrator.
 



//உடனடியாக கிளம்புங்கள் செவ்வாடைத் தோழர்களே!//


ஓ...மேல்மருவத்தூர் பக்தர்களா?!
 



//ஓ...மேல்மருவத்தூர் பக்தர்களா?!//
மாயவரத்தான் அவர்களே ஒரு சிறிய ஆலோசனை...
உங்களுக்கு அது மாதிரியான பின்னூட்டமிட்டவரை தாக்க வேண்டுமானால் நேரடியாக தாக்குங்கள்,
என்னுடைய பதிவில் கூடத்தான் பின்னூட்டமிட்டார், அதை அழித்துவிட்டேன்...

தேவையின்றி யாருடைய உணர்வையும் காயப்படுத்த வேண்டாம்...

எதற்காக தேவையேயில்லாமல் இங்கே மேல்மருவத்தூரை இழுக்கின்றீர்கள் எனப்புரியவில்லை...

இது மாதிரியான உங்கள் பின்னூட்டங்களால் நீங்களும் சிலர் சொல்வதை உண்மை என நிரூபிக்கின்றீர்களொ என எண்ணத்தோன்றுகினறது
 



//ஓ...மேல்மருவத்தூர் பக்தர்களா?!//
மாயவரத்தான் அவர்களே ஒரு சிறிய ஆலோசனை...
உங்களுக்கு அது மாதிரியான பின்னூட்டமிட்டவரை தாக்க வேண்டுமானால் நேரடியாக தாக்குங்கள்,
என்னுடைய பதிவில் கூடத்தான் பின்னூட்டமிட்டார், அதை அழித்துவிட்டேன்...

தேவையின்றி யாருடைய உணர்வையும் காயப்படுத்த வேண்டாம்...

எதற்காக தேவையேயில்லாமல் இங்கே மேல்மருவத்தூரை இழுக்கின்றீர்கள் எனப்புரியவில்லை...

இது மாதிரியான உங்கள் பின்னூட்டங்களால் நீங்களும் சிலர் சொல்வதை உண்மை என நிரூபிக்கின்றீர்களொ என எண்ணத்தோன்றுகினறது

பின்னூட்டமிட்டவர் - குழலி குழலி குழலி
 



குழலி... செவ்வாடைத் தோழர்கள் என்றால் மேல்மருவத்தூர் பக்தர்கள் தான். எதற்காக இங்கே சம்பந்தமில்லாமல் இப்படி ஒரு கோரிக்கையை அவர் வைத்தாரென்று யாரும் கேள்வி எழுப்பினீர்களா? நீங்களெல்லாம் ரெண்டு பக்கம் வெவேறு கலர்களில் தெரியும் கண்ணாடி அணிந்து பார்க்கிறவர்கள். வேறு என்னத்த சொல்ல?!
 



//குழலி... செவ்வாடைத் தோழர்கள் என்றால் மேல்மருவத்தூர் பக்தர்கள் தான். எதற்காக இங்கே சம்பந்தமில்லாமல் இப்படி ஒரு கோரிக்கையை அவர் வைத்தாரென்று யாரும் கேள்வி எழுப்பினீர்களா? நீங்களெல்லாம் ரெண்டு பக்கம் வெவேறு கலர்களில் தெரியும் கண்ணாடி அணிந்து பார்க்கிறவர்கள். வேறு என்னத்த சொல்ல?!
//

பொதுவாக நான் சாக்கடைகளில் கல் எறிவதில்லை... என்றாவது இது மாதிரியான பின்னூட்டங்களுக்கு ஆதரித்தோ எதிர்த்தோ பின்னூட்டமிட்டு பார்த்திருக்கின்றீர்களா??

எனது பதிவிலும் இவர் இதை பதிந்திருந்தார் நான் அதை அழித்துவிட்டேன்... அவ்வளவே...
ஓரளவு புரிந்தவர்களுக்கு மட்டுமே விமர்சனம் அறிவுரை(இலவசமாக) கொடுப்பேன்... தங்களை நான் அவரின் கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை... ஆதலால் தான் என் மனதிற்கு பட்டதை சொன்னேன்...

நான் எப்போதும் சாக்கடையில் கல் எறிய மாட்டேன்...
 



//குழலி... செவ்வாடைத் தோழர்கள் என்றால் மேல்மருவத்தூர் பக்தர்கள் தான். எதற்காக இங்கே சம்பந்தமில்லாமல் இப்படி ஒரு கோரிக்கையை அவர் வைத்தாரென்று யாரும் கேள்வி எழுப்பினீர்களா? நீங்களெல்லாம் ரெண்டு பக்கம் வெவேறு கலர்களில் தெரியும் கண்ணாடி அணிந்து பார்க்கிறவர்கள். வேறு என்னத்த சொல்ல?!
//

பொதுவாக நான் சாக்கடைகளில் கல் எறிவதில்லை... என்றாவது இது மாதிரியான பின்னூட்டங்களுக்கு ஆதரித்தோ எதிர்த்தோ பின்னூட்டமிட்டு பார்த்திருக்கின்றீர்களா??

எனது பதிவிலும் இவர் இதை பதிந்திருந்தார் நான் அதை அழித்துவிட்டேன்... அவ்வளவே...
ஓரளவு புரிந்தவர்களுக்கு மட்டுமே விமர்சனம் அறிவுரை(இலவசமாக) கொடுப்பேன்... தங்களை நான் அவரின் கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை... ஆதலால் தான் என் மனதிற்கு பட்டதை சொன்னேன்...

நான் எப்போதும் சாக்கடையில் கல் எறிய மாட்டேன்...

- குழலி
 



இந்த செந்தூரன் ங்கர முகவரியில்லாத ஜந்து தொண்டமான்கற பேர்லயும் (வேறு சில பேர்கள்லயும்) இதயே காப்பி பேஸ்ட் செஞ்சி ஒட்டிகிட்டு இருக்கு... (தி.க. கட்சிக்கு போஸ்டர் ஒட்டினா டீ, பன்னுக்காவது காசு கிடைக்கும்) அத்த கண்டுக்காதீங்க நண்பர்களே..
- முகமூடி
 



குழலி பச்சோந்தி கட்சி தலைவர பத்தி அடுத்த பதிவு ரிலீஸாயிடுச்சி போல... ஆற அமர படிச்சி சிரிக்கணும் (தெரிஞ்சே சொல்லப்படுகிற பொய்ய படிச்சா எனக்கு சிரிப்பு வரும்), பொறுமையா வாரேன் -- முகமூடி
 



//குழலி பச்சோந்தி கட்சி தலைவர பத்தி அடுத்த பதிவு ரிலீஸாயிடுச்சி போல... ஆற அமர படிச்சி சிரிக்கணும் (தெரிஞ்சே சொல்லப்படுகிற பொய்ய படிச்சா எனக்கு சிரிப்பு வரும்), பொறுமையா வாரேன் --//

எனது பதிவின் கடைசி பகுதி உங்களை மாதிரி ஆட்களுக்காகத்தான் எழுதப்பட்டுள்ளது

மொத்தமும் மாற
காத்திருக்கின்றோம்
நாங்கள்


அதுவரை வரும்
தீய்ந்த
வாசனைகளுக்கு
பதில் தர
அலுத்துப்போய்...

மொத்தமும் மாற
காத்திருக்கின்றோம்
நாங்கள்

- குழலி
 



எங்கட ஈழத்து தேசத்தின் தமிழர்களையே அடியோடு வெறுத்தவர் நீங்கள். எங்களின் தமிழ் ஈழ கோரிக்கையை கொச்சைப்படுத்தியவர் நீங்கள். புலிகளைக் கிண்டல் என்ற பெயரில் நகைத்தவர் நீங்கள். உங்களுக்கு வேண்டியதெல்லாம் பார்ப்பனீயம், மற்றும் பார்ப்பன சாதிக்கட்சிகள் மற்றும் காஞ்சி சங்கராச்சாரியார்கள். தமிழ் தலைவர்களைப்பற்றி மிகக் கேவலமாக பேசி இருப்பது நான் அல்ல. அதுதான் ஜந்து. வெவ்வேறு பெயர்களில் நான் வரவேண்டிய அவசியமில்லை உங்களைப் போன்று!
 



செந்தூரன், உஷ்ணம் ஜாஸ்தியானால் தீக்குளிக்கவும்.... மன்னிக்கவும் தலை குளிக்கவும்...
 



அடடே!
செந்தூரன், புல்லரிக்குதப்பா. பார்ப்பான், சங்கராச்சாரியார், சாதிக்கட்சிகள் பற்றி ஈழத்தவரான உங்களுக்கேனப்பு கவலை வரவேணும்? குறிப்பா அசோகமித்திரனின்ர செவ்வி பற்றின அந்தப் பதிவைப்பற்றி உங்களுக்கேன் சூடு கிழம்ப வேணும்? இருந்தாலும் புத்திசாலியா இருப்பீங்கள் போல, ஒரே கல்லில ரெண்டு மாங்காய்.
 



அடடே!
செந்தூரன், புல்லரிக்குதப்பா. பார்ப்பான், சங்கராச்சாரியார், சாதிக்கட்சிகள் பற்றி ஈழத்தவரான உங்களுக்கேனப்பு கவலை வரவேணும்? குறிப்பா அசோகமித்திரனின்ர செவ்வி பற்றின அந்தப் பதிவைப்பற்றி உங்களுக்கேன் சூடு கிழம்ப வேணும்? இருந்தாலும் புத்திசாலியா இருப்பீங்கள் போல, ஒரே கல்லில ரெண்டு மாங்காய்.
-வசந்தன்-.
(மேலெழுதியதும் நானே.)
 



வசந்தன்,

செந்தூரனை தொண்டமான் என்று சொன்னது முகமூடி! முகமூடி என்பது அவரது உண்மைப் பெயரா? அவரே ஊருக்கும் உலகத்துக்கும் பயந்துதான் முகமூடி என எழுதுகிறார். அவருக்கு இருப்பது புலிகள் மீதான எதிர்ப்பு. உங்களுக்கும் புலிகள் மீதான வன்மம் இருக்கலாம். ஆனால் ஈழம் என்று வரும்போது ஒன்றாக நிற்கவேண்டும். உண்மையான ஈழத்து ரத்தம் உங்கள் உடம்பில் ஓடினால் அவரின் ஈழத்துக் கொள்கையைக் கண்டித்து இருப்பீர்கள்!

நான் பல பதிவுகளிலும் படித்து வருகிறேன். இவருடைய எழுத்து பார்ப்பனீயத்தின் ஆதரவாகவே உள்ளது. மற்றபடி விடயம் எல்லாம் இவர் பதிவில் இல்லை.

(?ஜயந்தன், வசந்தன், மஸ்டூ பிரச்னை தீர்ந்ததா?)
 



//உண்மையான ஈழத்து ரத்தம் உங்கள் உடம்பில் ஓடினால்//

ஐயோ! அத எங்கபோய் 'செக்' பண்ண வேணும். தெரிஞ்சுகொண்டால் எனக்கும் நல்லதுதானே?
பார்ப்பனர் பற்றி ஈழத்தவர் எனச்சொல்லிக்கொள்ளும் நீங்கள் ஏன் இவ்வளவு தூரம் துள்ளிக்குதிக்க வேணும் எண்டதுதான் என்ர கேள்வி. அதோட ஒரே பின்னூட்டத்த எல்லாப்பதிவிலயும் போய் அப்பிப் போட்டுவந்த காரணமும் எனக்கு சத்தியமா விளங்கேல.

மற்றும்படி பெயர்ப்பிரச்சினை சம்பந்தமா 'கரிசனையோட' கேட்டதுக்கு மெத்த நன்றி. வழக்கு நிலுவையில இருக்கிறதால மேற்கொண்டு எதுவும் சொல்ல முடியாது.
-வசந்தன்-
 



செந்தூரன்...
// முகமூடி என்பது அவரது உண்மைப் பெயரா? // உண்மை பெயரை சொன்னால் என்ன கிழிப்பதாக உத்தேசம்... உண்மை பெயரோ இல்லையோ எனக்கென்று ஒரு வலைத்தளம் உள்ளது, ஒரு முகவரி உள்ளது... ஆக நான் பேசினால் யார் பேசுகிறார்கள் என்பதாவது உலகுக்கு தெரியும். உங்களுக்கு என்ன இருக்கிறது... முகவரி இல்லாத செந்தூரன் சொன்ன அதே வாக்கியங்களை இதற்கு முந்தைய என் பதிவில் முகவரி இல்லமல் தொண்டமான் எழுதினால் நான் என்னவென்று அர்த்தம் கொள்வது??

// அவரே ஊருக்கும் உலகத்துக்கும் பயந்துதான் முகமூடி என எழுதுகிறார் // குளித்துவிட்டு வரும் யானை சாக்கடையில் பிரண்டு மீண்டு வரும் பன்னியை கண்டு ஒதுங்கி போவதை பார்த்து பன்றி சொல்லுமாம் :: யானைக்கு என்னை கண்டு பயம்.

// நான் பல பதிவுகளிலும் படித்து வருகிறேன். இவருடைய எழுத்து பார்ப்பனீயத்தின் ஆதரவாகவே உள்ளது. // என்ன பதிவுகளில் என்னத்தை கண்டீர்... செக்ஸ் நோயாளி டாக்டரிடம் சென்ற போது அவர் கோடு வரைந்தாலும், வட்டம் வரைந்தாலும், கட்டம் வரைந்தாலும் அதில் அந்த நோயாளி பெண்ணின் அங்கங்களாக கண்டதாக ஒரு கார்ட்டூன் உண்டு.. அது போலவே எதை படித்தாலும் அதில் பார்ப்பணீயம் என்று கண்டால் கோளாறு மற்றவரிடம் இல்லை... மேலும் உங்கள் பார்வைக்கு பார்ப்பணீயம் என்றால்தான் என்ன??

மேலும் பார்ப்பனரை பற்றிய பதிவோ இல்லையோ எல்லா பதிவுகளிலும் அந்த அசோகமித்திரனை விசயத்தை பதிப்பதற்கும் பார்ப்பன எதிர்ப்பு கோஷங்களுக்மும் என்ன அவசியம் இருக்கிறது. அடுத்தவன் தோட்டத்தில் கரும்பு விளைந்தால் என்ன வாழை விளைந்தால் என்ன, வேலி இல்லாத வரை சௌகரியம், வெளிச்சத்துக்கு முன் கழிந்து விட்டு போகலாம் என்ற எண்ணம் கொண்ட கூட்டத்தை சேர்ந்தவரா நீங்கள்??

இதில் ஈழத்தமிழர் என்ற போர்வை வேறு. வசந்தன் கேட்பது போல நீங்கள் உண்மையிலேயே ஈழத்தமிழராயிருந்தால் பார்ப்பான், சங்கராச்சாரியார், சாதிக்கட்சிகளை விடவும் நீங்கள் கவலை கொள்ள ஆயிரம் விசயமுண்டு...

முடிந்தால் ஒரு வலைப்பதிவு ஆரம்பியுங்கள். உங்கள் எண்ணங்களை அங்கு பதியுங்கள். அங்கு கேளுங்கள் உங்கள் கேள்விகளை...
 



நன்றி வசந்தன்... செந்தூரன் ஈழத்து தமிழர் என்ற போர்வையில் உசுப்பி விடும் வேலையை பார்க்கிறார். நன்கு கேட்டீர்கள் அவரை.
 



நண்பரே, உஙகள் கருத்துகள் குதிரைக்கு கடிவாளம் போட்டுது மாதிரி இருக்கு
கொஞ்சம் வெளியே வாங்க
 



good satire :)வாழ்த்துக்கள், நேரம் கிட்டும்போது உங்கள் பதிவுகள் முழுமையும் வாசிக்க முயற்சிக்கிறேன். நன்றி
 



சரி, உங்க கருத்து ??