<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

இலங்கையின் கேந்திர முக்கியத்துவம்


என் பதிவில் எழுதிய அனைவரின் கருத்தையும் படித்ததும் எனக்கு தோன்றியது ::


என் பதிவின் தலைப்பு 'இந்தியா இலங்கைக்கு ஆயுதம் தரவேண்டுமா?' என்பதாக இருந்திருக்கலாம்.

இந்தியா இதனால்தான் தளவாடம் தருகிறதோ என்று என் எண்ணத்தை கருத்தாக அன்றி யூகமாக வெளியிட்டிருக்கலாம்.
இந்தியா ஆயுத உதவி விடுத்து வேறு எந்த உபாயங்களில் இலங்கையை கட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்க வேண்டும் என்ற கேள்வியை படிப்பவர்களுக்கு எழுப்பி ஆக்கபூர்வ விவாத மேடையிட்டிருக்கலாம்.

நானோ (எம்பி பலம் இல்லாமல்) வைகோவோ, கொடுக்கலாம்/ கொடுக்கக்கூடாது என்று சொல்வதால் இந்தியா தனது கொள்கையை மாற்றிக்கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஆயினும் வைகோ கடிதம் எழுதியதன் மூலம் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்தது போலவே, நீங்கள் யாராவது பதிய ஆசைப்பட்டால் http://goidirectory.nic.in என்ற தளத்தில் மேன்மைமிகு. இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் மின்னஞ்சல் முகவரி இருக்கிறது.

என் மனமார்ந்த ஆசை: ஆயுதங்கள் இல்லாத உலகம். பிறந்த மனிதன் இயற்கையாக மரணம் எய்தும் வரை பயமற்ற நிம்மதியான வாழ்க்கை. ஈழத்தமிழர் அவர்தம் மண்ணில் அவர்கள் விரும்பி தேர்ந்தெடுக்கும் அரசால் ஆளப்படுவது... நன்றி.


இந்த மீள்பதிவுக்கு முந்தைய::

இந்திய கடற்கறையை வடக்கில் கொண்டிருக்கும் இலங்கை, இந்திய பெருங்கடலில் இருக்கும் இடம் வியூக முக்கியத்துவம் வாய்ந்தது. கிழக்கில் ஆஸ்திரேலியா வரையும், மேற்கே கிழக்காப்பிரிக்கா வரையும், தெற்கே அன்டார்டிகா வரையும் திறந்த வெளி கடற்பரப்புதான். எண்ணெய் வள மத்திய கிழக்கு நாடுகளை பிற ஆசிய நாடுகளுடன் இணைக்கும் அதிமுக்கிய கடற்பாட்டையில் இருக்கும் இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் எல்லாருக்கும் தெரிந்ததுதான்.

உள்முகம் வெளிமுகம் என்று இரண்டு அமைப்பாக அமைந்திருக்கும் திரிகோணமலை துறைமுகம் உலகத்தின் மிகச்சிறந்த இயற்கை துறைமுகங்களில் ஒன்று. மூன்று பக்கமும் நிலத்தால் சூழப்பட்ட இதன் உள் துறைமுகத்தின் மிக அதிக ஆழம் காரணமாக எவ்வளவு பெரிய கப்பலையும் அதனால கையாள முடியும். நீர்முழுகி கப்பல்கள் உள்ளே சென்று பதுங்கினால் கண்டுபிடிக்க இயலாது.இரண்டாம் உலகப்போரின் போது சிங்கப்பூரில் இருந்த பிரிட்டிஷ் கடற்தளம் ஜப்பானின் ஆக்ரமிப்புக்கு போன பின் இங்கே பிரிட்டிஷ் அரசு அமைத்திருந்த கடற்படை தளம்தான் கூட்டுப்படையினரின் தென்கிழக்காசிய தலைமையகம் ஆனது. இங்கிருந்த வான் நிலையத்திலிருந்துதான் அமெரிக்க வான்படை மியான்மர் மற்றும் மலேயாவில் ஆக்ரமித்திருந்த ஜப்பானின் மேல் குண்டு பொழிந்தது. ஜப்பானும் திரிகோணமலை மேல் குண்டு வீசியது. 1957ல் இந்த துறைமுகத்தை இலங்கை அரசு கையகப்படுத்திக்கொள்ளும் வரை வரை பிரிட்டிஷ் அரசின் கடற்படைத்தளம் இங்கு இருந்தது. (அப்பொழுது கட்டப்பட்ட 99எண்ணெய் சேமிப்புக்கிடங்குகள் - ஒவ்வொன்றும் 15000 டன் எண்ணெய் சேமிக்க கூடியவை - இப்பொழுது இந்திய இலங்கை கூட்டு வர்த்தகத்தில் தனி முக்கியத்துவம் பெற்றது)

1951ல் இலங்கை அமெரிக்கவுடன் ஒரு ஒப்பந்தம் போட்டது. அமெரிக்கா தரும் புதிய ஒளிபரப்பு சாதனங்களுக்கு பதிலாக வாய்ஸ் ஆப் அமெரிக்கா (VOA) நிகழ்ச்சிகளை ரேடியோ சிலோன் (இந்தியாவிலும் அப்போது பிரபலம்) மூலம் ஒளிபரப்புவதுதான் அது. இதன் மூலம் ஆசியா முழுமைக்கும் தன்னுடைய செய்திகளை அமெரிக்கா பரப்பி வருகிறது (இன்றைய மாடர்ன் போர்முறையில் மிக முக்கியமாக ராணுவ நிபுணர்கள் கருதுவது தகவல் தொடர்பைத்தான்)

திரிகோணமலை துறைமுகத்தையும் அமெரிக்கா தன்னுடைய ராணுவ படைகளை deploy செய்யும் கேந்திரமாக பயன்படுத்துவதற்கு முயற்சி செய்தே வந்திருக்கிறது. இங்கேயிருந்தால் சீனாவிற்கு செல்லும் மத்தியகிழக்கின் எண்ணெய் வளத்தை கண்காணிக்கவும் அதன்மூலம் சீனா மேல் ஒரு கண் வைத்திருக்கலாம் என்பது அதன் எண்ணம். உலகம் முழுவதும் தனது விரைந்து தாக்கும் திறனை மேம்படுத்துவதற்கான தளம் தேடும் (base for rapid deployment) முயற்சியில் இறங்கி இருக்கும் அமெரிக்காவுக்கு திரிகோணமலை ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி... சுனாமி மீட்புக்கு கூட USS Hercules என்ற விமானந்தாங்கி கப்பலில் ஆயுதம் தாங்கிய வீரர்களை அனுப்பும் அமெரிக்கா இப்போது பல இடங்களில் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிரான தாக்குதல் என்ற பேரில் - முன்பு தனக்கு அனுமதியே இல்லாத பல இடங்களில் கூட சுலபமாக - ராணுவ கேந்திரங்களை நிறுவி வருகிறது.

பொறுமையாக 1954 வாக்கில் இந்தியா இலங்கையின் விவகாரங்களை பார்க்க ஆரம்பித்தது. இலங்கை இந்தியாவின் ராணுவ பாதுகாப்பு வளையத்தின் மிக அருகில் இருப்பது, இந்திய பெருங்கடலின் கடற்பாதுகாப்பு எல்லையிலும் இருப்பது ஆகிய காரணங்களினால் அந்நிய நாடுகளின் விமான கேந்திரம் அல்லது கடற்தளம் திரிகோணமலையை கட்டுபடுத்த ஆரம்பித்தால் இந்திய நாட்டின் வான் மற்றும் கடல் தளங்களுக்கு ஏற்படும் பின்விளைவுகளை நினைத்து கவலை கொள்ள ஆரம்பித்தது.இந்தியா தன்னை சுற்றிலும் எதிரிகளை வைத்துள்ளது. தன் இடத்தை ஆக்ரமித்த சீனாவிற்கு பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் ஆகியவை நண்பர்கள். அமெரிக்காவும் பரம வைரியான பாகிஸ்தானும் கூட்டாளிகள். இந்தியாவிற்கோ அமெரிக்காவின் எதிரியான ரஷ்யாவுடன் நட்பு.

இந்தியாவிற்கு ஜெயவர்த்தனே அரசு மேற்கத்திய நாடுகளுடன் கூட்டு சேருமோ என்ற கவலை இருந்தது.. 1983 கலவரத்துக்கு பின் இந்தியாவின் தமிழ் போராளிகள் ஆதரவு நிலையால் ஜெயவர்த்தனே அமெரிக்க அரசின் ஆதரவை நோக்கி செல்கிறாரோ என்று எண்ணும்படியான செயல்கள் நடந்தன. போததற்கு ஜெயவர்த்தனே பிரிட்டன் பிரதமர் தாட்சருக்கு '1947ல்ஏற்படுத்திய ஒப்பந்தம் - திரிகோணமலை துறைமுகத்தை பிரிட்டன் உபயோகப்படுத்தும் என்ற - இப்போதும் செல்லும், இன்னும் காலாவதியாகவில்லை' என்று செய்தி வேறு அனுப்பினார். இந்தியாவுக்கு இலங்கையில் இயங்கும் VOA பற்றியும் சந்தேகம் உண்டு.தன்னுடைய தகவல் பரிமாற்றத்தை கண்காணிக்கவும் தன் நீர்முழுகிகளுக்கு சமிஞ்சை அனுப்பவும் அமெரிக்கா VOA சாதனங்களை உபயோகிக்கிறது என்று நினைத்தது அது.

இவ்வளவு விஷயங்களின் பின்னணியில் 1987ல் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாட்டில் பின் இணைப்பாக ஜெயவர்த்தனேவுக்கும் ராஜீவ் காந்திக்கும் இடையில் நடந்த கடிதப்போக்குவரத்து மூலம் சேர்க்கப்பட்ட சில விஷயங்களை பார்க்க வேண்டும்.

அ) இந்திய நலனுக்கு குந்தகம் விளையும் என்பதால் திரிகோணமலையோ அல்லது வேறு எந்த துறைமுகமோ எந்த அயல்நாட்டின் ராணுவ உபயோகத்துக்கும் தரப்படக்கூடாது (சென்ற முறை இந்தியா வந்தபோது ரணில் திரிகோணமலையை துறைமுகத்தை அந்நிய ராணுவ பயன்பாட்டுக்கு அனுமதிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று உறுதியளித்தார். சுனாமி பாதிப்பின் பிறகு திரிகோணமலை மற்றும் கொழும்பு துறைமுகங்களை சுத்தப்படுத்தி வழி ஏற்படுத்தும் முயற்சியை எல்லாருக்கும் முன் இந்தியா செய்தது)

ஆ) திரிகோணமலை எண்ணெய் சேமிப்புக்கிடங்கு புனரமைப்பும், செயல்பாடும் இந்திய-இலங்கை கூட்டு முயற்சியில் நடைபெறும் (இந்த கிடங்குகளை இந்திய அரசாங்கத்திற்கு - IOCக்கு - குத்தகைக்கு விடுவதற்கு இலங்கை அரசுக்கு இருக்கும் உரிமை பற்றி புலிகள் தங்கள் ஈழம் நேஷன் வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்கள்)

இ) வெளிநாட்டு வர்த்தக வானொலி ஒளிபரப்பு நிலையங்கள் இலங்கை அரசுடன் வைத்திருக்கும் ஒப்பந்தங்கள் மறுஆய்வு செய்யப்பட வேண்டும். இந்த நிலையங்கள் பொது ஒளிபரப்பு அன்றி ராணுவ செய்திகளையோ ரகசிய செய்திகளையோ பரிமாற உதவியாக இருக்கக்கூடாது.

இந்த ஒப்பந்த இணைப்பு வாசகங்களை இலங்கை மீறாமல் இருப்பது இன்றும்/என்றும் இந்தியாவுக்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்த விஷயம்.

1962ல் க்யூபாவில் தன்னுடைய ஏவுகணைகளை நிறுவ ரஷ்யா (அப்போது யு.எஸ்.எஸ்.ஆர்) முயற்சித்த போது அதை கடுமையாக எதிர்த்தது அமெரிக்கா. அணுஆயுத போரின் விளிம்பு வரை அழைத்து சென்ற அந்த 13நாள்நாடகத்தை உலகமே கவலையாக பார்த்தது. எல்லா வகையிலும் ரஷ்யாவிற்கு நெருக்கடி கொடுத்தது அமெரிக்கா. ரஷ்யா எதையும் கண்டுகொள்ளவில்லை. திறை மறைவில் நடந்த ரகசிய பேச்சு வார்த்தையில் தன் நட்பு நாடான துருக்கியில் நிலை கொண்டிருக்கும் தன்னுடைய ஏவுகணைகளை காலப்போக்கில் திருப்பி எடுத்துக்கொள்வதாகவும், க்யூபாவின் மேல் எந்த காலத்திலும் படை எடுக்க மாட்டோம் என்றும் - கென்னடியின் தம்பியே ரஷ்ய தூதரை நேரில் கண்டு - உறுதி அளித்ததன் பேரில் ரஷ்யா தன் ஏவுகணை கட்டமைப்பை கலைத்துக்கொண்டது. உலகின் மற்ற எந்த நாட்டை விடவும் மிக அதிக அளவில் அணு ஆயுதம் மட்டுமன்றி மற்ற எல்லாவித ஆயுதங்களையும் குவித்து வைத்திருந்த அமெரிக்காவே தன்னுடைய அண்டை நாட்டில் இன்னொரு நாட்டின் ராணுவம் நிலை கொள்வதை அனுமதிக்கவில்லை. ஏன் என்பதற்கு காரணம் யோசித்தால் புரியும்.

அப்படியிருக்க இந்தியா என்னும் - 100 கோடி மக்களையும், துணைக்கண்டம் என்ற அளவில் மிகப்பெரிய நிலப்பரப்பையும், மூன்று பக்கமும் நட்பில்லாத நாடுகளையும் கொண்டிருக்கும் - நாடு தன் தேச நலன் கருதி அருகிலிருக்கும் தேசத்தை அரவணைத்து செல்ல வேண்டியது அவசியமாகிறது. ராணுவ உதவி கேட்டால் செய்ய கூடாது. பொருளாதார உதவி கேட்டால் கொடுக்கக்கூடாது (அதன் மூலமும் தளவாடங்கள் தானே வாங்கப்போகிறது) என்றால் என்ன செய்ய வேண்டும். இந்தியா உதவி செய்யாவிட்டால் இலங்கை சும்மா இருந்துவிடாது. உலக அளவில் உதவி கோரும். இலங்கைக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தேசம் என்ற அடையாளம் இருக்கிறது. அது பிரிவினை கோரும் - தீவிரவாத இயக்கம் என்று அமெரிக்கா, இந்தியா மற்றும் இதர நாடுகள் முத்திரை குத்திய - இயக்கத்துடன் செய்த/செய்யும் போருக்கு செலவழிக்க தளவாடங்கள் என்று கேட்டாலும் சரி, சிதைந்து போன தன் உள்கட்டுமானத்தை சரி செய்ய பொருளுதவி என்று கேட்டாலும் சரி - ஆயுதம் வழங்கவும் மற்ற உதவிகள் வழங்கவும் நிறைய நாடுகள் தயாராகவே உள்ளன. அப்படி வரும் நாடுகள் போடும் ஒப்பந்தங்கள் இலங்கைக்கு சாதகம் என்பதை விட இந்தியாவுக்கு பாதகம் என்பதுதான் என் கருத்து.

நேரம் இருந்தால் ஒரு முறை இலங்கைக்கு இந்தியா உதவி என்ற என் சென்ற பதிவை படியுங்கள்


š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


கருத்து பெட்டி திறக்காமல் கிடந்ததால் ஒரு டெஸ்டிங்
 



நீங்கள் யாரென்று நான் கண்டுபிடித்து விட்டேன்
 



Dear Mugamoodi

As still I don’t have a separate blog and didn’t know to create one in Tamil I am writing in English(I love to write in tamil as through that only I think I can express my exact feelings-but i have done some cutpaste inbetween).

My first question is how many more years you people will claim that LTTE is terrorist organisation?

இன்னும் எத்தனை நாளைக்குதான் புலிகள் தீவிரவாத இயக்கமுன்னு ஜல்லி அடிப்பிங்க?

Even INA founded by Subhash chandrabose is listed as terrorist outfit in British records.

In my view if the LTTE is not like how it was, Srilankan Army would have wiped them off long time ago(ஒருவேளை அதைதான் உஙகளை மாதிரி ஆளுக விரும்புகிறீகளோ?
). To survive, that too fighting for principle, one has to employ the tactics like.

First let us accept the ground reality that LTTE is the sole representation of Eelam Tamils.

Everyone is proud to write that JEWs were tortured and killed by Hitler but how many of you will accept the fact that the sufferings Eelam Tamils had was none less than that, But still some of our media and people view those only with blind eye.

We should also not forget that the same Indian bureaucrats were helping LTTE in the beginning and also conducting training camps in tamilnadu even though LTTE was considered as terrorist organisation by almost every country at that time. So the steps taken to deliver arms to Lanka is nothing of principle but with some other hidden motives.

And now the second question comes?

Just think of the people who are opposing LTTE(Elam Tamils) in India?

Cho Ramasamy
Dinamalar
Mugamoodi
Mayavarathan
Raghavans

Here also we have to accept the fact that maximum no of those are Brahmins.
It is not the fault of their caste but are due to the way they were brought up in biased media.

If India would have helped srilanka by offering its assistance to solve the ethnic crisis an interim solution would have been arrived by this time but some faraway country like Norway is willing to help them than the famous, secular and democratic India. It is only adding fuel to the crisis by supplying arms during ceasefire time.


LTTE doesn’t like to fight for life time and they would also have dream of leading a peaceful life.

If you are not able to assist of this then atleast keep silent but don’t make an attempt to spoil their dreams.

And I have seen some comments above criticising Nedumaran. Just see the way of simple life he is leading and you should be ashamed of the worst comments. He was the one instrumental in saving lakhs of Tamils in Karanataka during Rajkumar Kidnapping episode

Last question?

Even a normal man(if not tamilian) will be having some sympathy towards Elam Tamils if they know about their sufferings but I cant understand why these people claiming to be Human Rights saviours are continuously viewing them with hatred?

Time to review yourself humans.

அன்புடன்
வெற்றி திருமலை

PS:- I still have many more to write but waiting for help from Bloggers to create a tamil blog for myself.

So bloggers be ready as I going to arrive in the blogging community with a bang.
 



நண்பர்களுக்கு... நான் ஏற்கனவே மேலே குறிப்பிட்டபடி விடுதலைப்புலிகள் குறித்தோ அல்லது ஈழ விடுதலைப் போராட்டம் குறித்தோ எந்தக் கருத்தும் இட்டதில்லை இதுவரை. எனவே அநாவசியமாக இங்கே எனது பெயரை இழுத்து நான் சொல்லாத கருத்தை சொல்லுவதாக திரிக்க முயலும் அயோக்கியர் யாரென்று தெரியும். ஏற்கனவே ஒரு முறை இதே போல என் பெயரை அநாவசியமாக இழுத்து மேல் விபரங்கள் கேட்டவுடன் தலை தெறிக்க ஓடியது நினைவிருக்கலாம். இப்போது தன்னை தமிழீழ மக்களின் சார்புள்ளதாகக் காட்டிக் கொண்டு மற்றவர் மேல் களங்கத்தை, வீண் பழியை சுமத்த முயலும் கயமையை என்னவென்று சொல்ல! மீண்டும் சொல்கிறேன். விடுதலைப் புலிகள் மீதான எனது கருத்து, நான் வெளியில் சொல்லாதது. சொல்ல வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அடுத்தவரை குற்றம் சாட்டுவதற்கு முன்பு உன்னை திருத்திக் கொள்ள வழியைப் பார். சும்மாவாச்சும் தமிழில் வலைப்பதியப் போகிறேன் என்றெல்லாம் பில்டப் கொடுக்க வேண்டாம். அப்படி தைரியசாலியாக இருந்தால், தமிழில் வலைப்பதிய நான் உதவுகிறேன். மின்னஞ்சல் முகவரியை தர தயாரா?!
 



முகமூடி........உங்கள் கருத்தோடு ஒத்துப் போக முடியவில்லை. கண்டிப்பாக இலங்கைக்கு இந்தியா பொருளாதார ஆயுத உதவிகளைச் செய்யக் கூடாது.

பாதுகாப்பு என்றே வைத்துக் கொண்டாலும் தவறுதான். பிறகு அட்டூழிய அமெரிக்காவின் பெரியண்னன் தனத்திற்கு இந்தியாவும் பழகிவிடும். நல்ல வேளையாக இன்னமும் இந்தியா பெரியண்ணன் மனப்பாங்கிற்கு பழகவில்லை. நீங்கள் சொல்லிக் குடுத்து விடுவீர்கள் போல இருக்கிறது.

சுனாமி நிவாரணத்திற்கு எல்லா நாடுகளும் சந்திரிகாவிற்குச் சொல்வது என்ன? புலிகளோடு இணைந்து செயல்படுமாறுதானே.....அதுதான் இலங்கைக்கு நல்லது. இதிலிருந்து விலகினால் நட்டம் முழுக்க முழுக்க இலங்கைக்குதான்.
 



முகமூடி சொன்னதாவது:
||என் மனமார்ந்த ஆசை: ஆயுதங்கள் இல்லாத உலகம்.||

AnionMass எ. அனோனிமாசு சொல்வதாவது:
|எனதும் அதே. குறிப்பாக, சாத்துவீகத்தின் தாத்தாவான காந்திப்பெரியார் பிறந்த இந்தியாவிடம் ஆயுதங்கள் இலங்கை அரசுக்குக் கொடுக்க மட்டுமல்ல தனக்கென்றும் இல்லாத உலகம். சுருக்கமாகச் சொன்னால், இராணுவமே இல்லாத இந்தியாவும் இலங்கையும் உள்ள உலகம்|
 



//சுருக்கமாகச் சொன்னால், இராணுவமே இல்லாத இந்தியாவும் இலங்கையும் உள்ள உலகம்//

ஒரே சோக்குதான் போங்க. :-)
 



முகமூடியாரே மீள்பதிவு போடுறதே பிழைப்பா போச்சு.
ஏன் திரும்ப திரும்ப அரைத்த மாவையே அரைக்கிறீர்கள். //ஈழத்தமிழர் அவர்தம் மண்ணில் அவர்கள் விரும்பி தேர்ந்தெடுக்கும் அரசால் ஆளப்படுவது... //

மேலே சொல்வது போல்
அதில் ஈழத்தமிழரில் அக்கறை உள்ளவர் போல் பசப்பு வார்த்தைகள் வேறு.
 



குலக்கண்டரே... என்ன பண்றது சொல்லுங்க புதுக்கருத்தா சொல்லியிருக்கலாம். இல்ல சொல்லாமலே இருந்திருக்கலாம். நீலிக்கண்ணீர் வடித்திருக்கலாம். அய்யகோ என்று கூக்குரலிட்டுவிட்டு என் வேலைய பாத்திருக்கலாம். கடிதம் எழுதியதாக அறிக்கை விட்டிருக்கலாம். புலிகளை புகழ்ந்து பேசியிருக்கலாம். இல்ல பேசாமலே இருந்திருக்கலாம். வேணும்கறப்போ தமிழ், தமிழினம் பத்தியும் வேணாம்கறப்போ அமைதியாவும் இருக்கும் தமிழின தலைவர்கள்கிட்ட இருந்து இன்னும் என்ன என்னமோ கத்துகிட்டு இருந்திருக்கலாம். கோவணம் கட்டாத ஊர்ல கோவணம் கட்டினவன் கதையா என்னத்துக்கு கருத்த எழுதி, தன்னிலையில பிடிவாதமா இல்லாம ஏற்கனவே காயம்பட்ட ஒரு இனத்த நாம வேற புண்படுத்த கூடாதுன்னு அதுக்கு ஒரு மீள்பதிவு வேற போட்டு வருத்தம் தெரிவிச்சு... எல்லாத்துக்கும் ஒரு புத்தி வேணும்லா.... என்னுடையது பசப்பு வார்த்தைன்னு கண்டுபிடிச்ச உங்கள் புத்தி கூர்மையை வியக்கிறேன்.
 



முகமூடியாரே!

ஒரு serious பதிவு பொட்டு முழம் சறுக்குறீங்க.. மீள்பதிவு போட்டு சாண் ஏறுறீங்க... அப்புறம் ஏதாவது அனாமதேயம் வந்து அதி புத்திசாலித்தனமான "அவன ஆம்பிளையின்னா ரோட்டுல அம்மனமா நடக்க சொல்லு பார்ப்போம்" ங்கிற ரீதியில எச்சமிட்டு போனால் அதை வழிமொழிந்து மீண்டும் முழம் சறுக்குறீங்களே :( வேலைப்பழு அதிகமோ?

எது எப்பிடியோ ... பிடிச்சதுக்கு மூணுதான்னு நிக்காம மாற்று சிந்தனைகளுக்கும் இடம் தருகிற வரைக்கும் சந்தோஷந்தேன்!!!
ஈழ வரலாறு தெரிய வருகையில் மனம் மாறுவீர்களென்ற நம்பிக்கை இருக்கிறது.

i must say i like your nakkal pathivus.

--பாண்டி.
 



AnionMass எ. அனோனிமாசு சொல்வதாவது:
|ஏன் முகமூடியாரே உங்கள் மூடிக்குப் பின்னாலே மோப்பம் பிடிக்கிற மூக்கு இருக்கிறதா? இருந்தால் சரியாக நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள் என்று மோப்பம் பிடித்துவிட்டுப் பின்னால் எங்களுக்குச் சொல்லுங்கள். ஒவ்வொரு பதிவுக்கு ஆளுங்கட்சி எதிர்க்கட்சி, இடைக்கட்சி, முழுக்கச்சு என்று மாற்றி மாற்றிப் பேசிக் குழப்புகிறீர்களே|
 



முகமூடி,
ஒரு பாதுகாப்பு வல்லுனரின் அலசலுக்கான சில அம்சங்கள் இக்கட்டுரைக்கு இருப்பது போல ஒரு தோற்றம் எனக்கு. ( ஒரு வேளை "ரா" வில் இருக்கிறீர்களோ ? ) :-))

இந்தியா இப்போது இலங்கை அரசுடன் பொருளாதார, தொழில்முறை உறவுகள் வைத்துள்ளதுபோல அந்தப்பக்கமும் ஆக்கப்பூர்வமாய் உறவுகளை வளர்த்துக்கொள்ளல் இந்தியாவுக்கும் சேர்த்தே நன்மை தரும். ஆயுதங்களை யாருக்குக் கொடுத்தாலும் அது என்றாவது ஒருநாள் கொடுத்தவரிடமே திரும்பி வர சாத்தியம் அதிகம். எனவே ஆக்கப்பூர்வமாய் இந்தியா ஏதாவது செய்யலாம்.
 



// Just think of the people who are opposing LTTE(Elam Tamils) in India? Cho ramasamy,Dinamalar,Mugamoodi,Mayavarathan,Raghavans .... Here also we have to accept the fact that maximum no of those are Brahmins. // வெற்றி திருமலை... ஏற்கனவே உங்களை போன்றவர்களுக்கு பலமுறை சொல்லிவிட்டேன்... ஜாதி உள்ளடக்கமாக இல்லாத பதிவில் எல்லாம் போய் சொல்லியவரின் சாதி குறித்து ஆராய்பவர்களுக்கு என் பதில் மௌனம்தான்... எனினும் நீங்கள் புள்ளிவிவரப்புலியாக (பேச்சு வாக்கில் சொல்லிவிட்டேன், தவறாக எடுத்து கொள்ளாதீர்கள்) இருப்பதால் கீழ்கண்ட பட்டியல்களை கொடுத்து உதவினீர்கள் என்றால் எனக்கு உபயோகமாக இருக்கும்..

LTTE (Elam Tamils) ஐ

தமிழ்நாட்டில் ஆதரிப்போர் - பிராமணர் பட்டியல்
தமிழ்நாட்டில் ஆதரிப்போர் - பிராமணர் அல்லாதோர் பட்டியல்
தமிழ்நாட்டில் எதிர்போர் - பிராமணர் பட்டியல்
தமிழ்நாட்டில் எதிர்ப்போர் - பிராமணர் அல்லாதோர் பட்டியல்
இந்தியாவில் ஆதரிப்போர் - பிராமணர் பட்டியல்
இந்தியாவில் ஆதரிப்போர் - பிராமணர் அல்லாதோர் பட்டியல்
இந்தியாவில் எதிர்போர் - பிராமணர் பட்டியல்
இந்தியாவில் எதிர்ப்போர் - பிராமணர் அல்லாதோர் பட்டியல்

அப்புறம் முக்கியமாக உங்கள் ஜாதி, நீங்கள் ஆதரிக்கிறீர்களா இல்லையா, உங்கள் எண்ண அமைப்பில் (thinking pattern) உங்கள் ஜாதியின் தாக்கம் தயவு செய்து இந்த பட்டியலை முடிந்தால் தக்க ஆதாரத்துடன் தந்தால் நன்றியுடையவனாக இருப்பேன்
 



நன்றி பாண்டி... சாண் ஏறி முழம் சறுக்கறதுக்கு காரணம் இந்த பதிவு தொட்டு செல்லும் விசயம்தான்... வேற ஏதாவது விசயத்த பத்தின்னா கருத்த போட்டு தாக்கிடலாம். ஆனா இதுல நிறையா யோசிக்க வேண்டி இருக்கு... யோசிக்கிறதுக்குன்னாலே நமக்கு வேப்பங்காய்... அதனால ஏகப்பட்ட்ட விசயத்த சொல்லாமலே இருந்திட்டேன். அதான் அப்படி ஒரு தோற்றம்.
 



AnionMass எ. அனோனிமாசு நீங்க அனேகமா தாடி ஒண்ணு வச்சிகிட்டு கறுப்பு ·ப்ரேம் கண்ணாடி போட்டு, வெள்ளை ஜிப்பா, தோள்ல ஜோல்னா பை, விட்டத்தை வெறிக்கும் சிந்தனைன்னு ஒரு மார்க்கமா இருப்பீங்கன்னு நினைக்கிறேன் (ஆணா பெண்ணான்னு தெரியல.... ஆணா இருப்பீங்கன்ற அனுமானத்துல சொல்லிட்டேன்... பெண்ணா இருந்தா எப்படி இருப்பீங்கன்னு சொல்லுங்க. பெண் சிந்தனாவாதியின் சூழல் பத்தியும் தெரிஞ்சிக்கிறேன்)
 



நன்றி முத்து... // ஆயுதங்களை யாருக்குக் கொடுத்தாலும் அது என்றாவது ஒருநாள் கொடுத்தவரிடமே திரும்பி வர சாத்தியம் // மிகச்சரி... தாலிபன்கள் இதற்கு மிகச்சிறந்த உதாரணம். visionaryகள் இல்லாத நிலையில் அல்லது அவர்கள் கணிப்பு காலப்போக்கில் மாறும் எதிர்காலம் தெரியாத நிலையில், நிகழ்கால நலனை கருத்தில் கொண்டுதானே செயல்படவேண்டியிருக்கிறது.
 



தமிழர்களை இங்குள்ள பலரும் ஏன் இந்தியாவிலிருந்து பிரித்துப் பார்க்கிறீர்கள்? தமிழ்நாடு அரசோ தமிழர்களோ இந்திய அரசிற்கு எடுத்துச் சொல்ல முடியுமேயன்றி, எள்ளளவிலும் அதன் தொலைநோக்குடன் செய்யப்படும் காரியங்களில் influence செய்ய முடியாது.

முகமூடியும் மற்ற என்னைப் போன்ற இந்தியர்களும் இந்த வகை நிலைப்பாட்டிலிருந்தே இந்தப் பிரச்சனையை எதிர்நோக்க முடியும். இதை ஏன் திரித்து ஜாதி அடிப்படையில் பார்க்கவேண்டும். முகமூடி அவர்களைப் பற்றி தெரியாது, என்னைப் பொறுத்த வரையில் சிங்கப்பூர், மலேசியா, ஏன் பிஜியில் வாழும் தமிழ் பேசும் மக்களைப் போன்றே ஈழத்தமிழரையும் பார்க்கிறேன். என் மொழி பேசுவதால், என் மதம் பின்பற்றுவதால் மட்டும் வேறு ஒரு நாட்டில்லுள்ளோரை (தமிழகம் தவிர்த்து) என் இரத்த சம்பந்தமாக ஏற்பதில் எனக்கு உடன்பாடில்லை. இந்த வகை தப்பான புரிதல் உள்ளதால் தான் செசனியா, ஆப்கானிலிருந்து வந்து எங்கள் காஷ்மீரில் வந்து வன்முறை நடத்திச் செல்கின்றனர். சரியா? தவறா? இந்த என் பார்வையில் தவறுள்ளதாயின், வசையின்றி constructive-ஆக எவரும் கூறினால் ஏற்க தயாராய் உள்ளேன்.
 



// என்னைப் பொறுத்த வரையில் சிங்கப்பூர், மலேசியா, ஏன் பிஜியில் வாழும் தமிழ் பேசும் மக்களைப் போன்றே ஈழத்தமிழரையும் பார்க்கிறேன். என் மொழி பேசுவதால், என் மதம் பின்பற்றுவதால் மட்டும் வேறு ஒரு நாட்டில்லுள்ளோரை (தமிழகம் தவிர்த்து) என் இரத்த சம்பந்தமாக ஏற்பதில் எனக்கு உடன்பாடில்லை. //

இது தவறான கருத்தாகத் தோன்றுகிறது இராமநாதன்.

நீங்கள் ஏற்காவிட்டாலும் இந்தியா இவர்களை ஏற்கிறது. அரசியலமைப்புச் சட்டப்படி இவர்கள் இந்திய பூர்விகக் குடியினர்.

எங்கோ ஒரு தீவில் பிரதமராக இருந்த ஒரு இந்தியருக்கு அவலம் நேர்ந்த பொழுது இந்திய என்ன நிலைப்பாட்டை எடுத்தது? விட்டு ஓடி விட்டதா? இல்லை அல்லவா?

பாகிஸ்தானோடு எத்தனை பிரச்சனைகள். இருந்தும் பஸ் விடுகிறார்கள். போய்ப் பேசுகிறார்கள். குடும்பங்கள் சந்திக்கின்றன என்று உருக்கமான நாளேட்டுச் செய்திகள். ஒரு இந்தியராக அவற்றை ஒத்துக் கொள்ளாமலா போகின்றீர்கள்.

இலங்கை இந்தியா என்பதெல்லாம் நூறு வருடத்துக் கணக்குத்தானய்யா....அதுக்கு முன்னால் என்ன இருந்தது?

இன்றைக்கு நீங்கள் அழுதால்தான்...நாளைக்கு உங்களுக்கு அழுவார்கள்.
 



சம்மி டம்மி தம்பி இப்புடியா தெர்யாத வெசயத்திலல்லாம் கருத்து கந்தசாமியா பேசுற நேரத்துல யேன் நீரு ரெண்டு துக்கடா ராமதாசு தாக்குதல் பண்ணிட்டே இருக்கக்கூடாது?
சும்மாவா சொன்னாங்க. முட்டாளுக்கு கால்ல பீ பெரண்டா ஒடம்புல ஆறு எடத்துல பெரட்டித்தான் விடுவான்னு. நீரு அந்த வகை. ஒண்ணுலயும் வெவரம் ஒரு செப்புக்காசுக்கும் உருப்படியா புர்யதில்ல. ஆனா, எல்லாத்துலயும் ஒம்மோட சின்ன பாம்புநாக்கெ வெச்சு நக்கிட்டுத்தான் போவீரு.

கூத்தாடி
 



// ஏதும் கருத்து கூற உண்மையிலேயே பயமாக உள்ளது, பின் என்னையும் ஈழமக்கள் எதிர்பாளன் என்று கூறிவிட்டால்? // அல்வா உண்மையில் கருத்துக்கு எதிர்கருத்து இடும் பெரும்பான்மையானோர் தர்க்க ரீதியாகவும் கண்ணியமாகவும்தான் தன் பக்கத்து எண்ணத்தை வைக்கின்றனர்... உணர்ச்சியின் மிகுதியில் அவர்களிடமிருந்து வரும் சில கடும்சொற்களும் ஏற்புடையதே... ஆனால் வெகுசிலரே அடங்கிய ஒரு கூட்டம், பதிவுக்கு சம்பந்தமில்லாமல் கூத்தாடுவதும் வசைமாரி பொழிவதுமாக எக்காளமிட்டுக்கொண்டு இருக்கிறது... அவர்களே அனாமதேயமாக வெவ்வேறு பெயர்களில் வருவதால் பெரும்பான்மையினர் கருத்து போன்ற ஒரு மாயத்தோற்றம் உள்ளது. இவர்களின் ஒரே குறிக்கோள், நம்மை முத்திரை குத்திவிடுவார்களோ என்று நீங்கள் பயப்படுவது போலவே மற்றவரின் மனநிலையிலையையும் மாற்ற முனைவது. இதை போன்ற ஈனப்பிறப்புக்கள் கூட்டம் ஏற்கனவே அருமையான சில வலைப்பதிவாளர்கள்/கருத்தாளிகளை பதிவுகளை விட்டே வெறுத்து ஒதுங்க வைத்தது. இவர்களுக்கும், நிதியமைச்சருக்கு விமான நிலையத்தில் புடவையை தூக்கி காட்டி வரவேற்பளித்த மகளிர் அணியினருக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. இவர்கள் திருந்தவும் மாட்டார்கள்... ஆகையால் உங்கள் கருத்தை நீங்கள் செஞ்சு நிமிர்த்தி சொல்லுங்கள். அவரவர் கருத்து அவரவருக்கு... உலகம் பெரியது....
 



கூத்தாடி, அல்வா தன்னோட கருத்தா சில விசயங்கள சொல்லி இருக்கார்.... இப்படி பொத்தாம் பொதுவா கூத்தாடாம அவரோட எந்த கருத்தோட உடன்பட முடியலையின்னு தெளிவா சொல்லலாம்ல... இல்ல அதுக்கு விருப்பமில்லையின்னா நமக்கு ஏத்த மாதிரி எங்க கருத்து சொல்றாங்களோ அங்க போயி கூத்தாடலாம்...
 



//கருத்த சொல்ல பயப்படலை, அதுல இந்த மாதிரி பேரில்லாப்பிச்சைகள் புகுந்து நாம சொல்ல வந்தத திரிச்சி மத்த மக்கள் //

:-) :-)

கண்ணாடி ஊட்டுக்குள்ள இர்ந்துகினு கல்லெறியாத மாமு. பேரில்லாப் பிச்சை வலப்பதிஞ்சா வர்றவன் மட்டும் முழுப் பேரோட வருவானா
முக்காடு போட்டாச்சுன்னா எதுக்கும் துணியணும்.

இன்னொரு பேஇபி
 



Mayavarathan avarkela

As in your comment u mentioned u have nothing to write abt Tigers i thought u are also against them.
If my assumption is wrong i am sincerely apologise to you. Then regarding the mail id u asked for.
I dont want my mail id to known to everyone so i have sent a seperate mail to u thru gmail account.

Dear mugamoodi
About the caste thing i mentioned i need someone's sincere reply to the vikarmadityan story posted my in the post "பார்ப்பன எதிர்ப்புன்னு எவ்ளோ நாள்தான் ஜல்லி அடிக்கறது" it is the last comment. And i want the stand of mugamoodi in the same whether he still stands by the varnam concept.
Still i am making my stand clear that i am not against brahmins but against the caste system which implies men are different by birth itself and has to be treated with partiality as per that. As i think Brahmins are responsible for creation of the caste i want them to rectify the same by useful contributions. In my view Cho Ramasamy & Dinamalar are still in support of the varnams and their main propoganda is to justify the same.


thats all folks
Vetri Thirumalai
 



வெற்றி திருமலையாரே.. உங்கள் பின்னோட்டத்திற்கு நன்றி. உங்கள் மின்னஞ்சல் கிடைத்தது. பதில் அனுப்பியிருக்கிறேன். அதற்கும் நன்றி.

பிறாமனர்கள் ஜாதிகளை தோற்றுவித்தார்கள் என்று இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் ஜல்லியடிக்கப் போகிறீர்கள்? அதனால் அதிகப் பயன் பெற்றவர்கள், பெற்றுக் கொண்டிருப்பவர்கள் இன்னும் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.

தினமலரும், சோவும் வர்ணாசிரம தத்துவத்தை பின்பற்றுபவர்கள் என்பது அபாண்டமான குற்றசாட்டு. உண்மையிலேயே ஜாதி, மதம் ஒட்டு மொத்தமாக அழிந்து விட்டதா? அல்லது பிராமணர்களைத் தவிர வேறு யாரும் அவர்கள் ஜாதியை விட்டுஒழிந்து விட்டார்களா? எனவே இன்னமும் பிராமணர்கள் தான் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமேயில்லை. யாராவது ஒருவர் ஜாதியே இல்லை என்று கூறுவாரேயானால், அவர்கள் குடும்பத்தில், சுற்று வட்டாரத்தில், சொந்தக்காரர்களில் எல்லாருமே ஜாதியை விட்டு விட்டார்கள் என்று அறுதியிட்டு கூற முடியுமா? முடியாதெனில், முதலில் தங்கள் சுற்றத்தை சுத்தப்படுத்த முயலட்டும். அதன் பிறகு அடுத்தவரை நோக்கி சுட்டு விரலை நீட்டலாம். அதுவரை அநாவசியமாக குற்றம் சாட்டுவர்களிடமிருந்து எங்களை காத்துக் கொள்ள இன்னும் நூறு சோ. ராமசாமிகளும், தினமலர்களும் தேவை தான் படுகிறார்கள்.
 



மயூரனின் தவறிழைக்கலாமா?? பதிவில் நான் எழுதிய பின்னூட்டம் இங்கும் பொருத்தமாக இருக்கும் என்று கருதியதால்...

இந்தியா என்ற நாடு தன்னுடைய நலனுக்காக செய்யும் ஒரு செயலாகவே இலங்கைக்கு செய்யும் உதவியை கருதினேன்.. அதற்கான என்னுடைய யூகத்தையும் கூறினேன்.

உடனே நீ தமிழர்கள் உயிரிழப்பதை விரும்புகிறாயா?? ஆயுதங்கள் கொல்லத்தானே வருகின்றன?? நீ ஒரு புலி எதிர்ப்பாளனா என்றெல்லாம் என்னை சிலர் கேட்டால் அதற்கு என் பதில் மௌனமாகத்தான் இருக்கும்... ஒரு காலத்தில் எங்கள் புலி நிலைப்பாடு வேறு, இப்போது காலம் வேறு. இந்திய பிரஜை - முக்கியமாக தமிழக பிரஜை புலிகளை ஆதரித்து பேசுவது சட்ட விரோதம். நான் முதலில் இந்திய பிரஜை. என் தனிப்பட்ட விருப்போ வெறுப்போ இங்கு முக்கியமில்லை. ஆகையால் நான் சொல்லும் கருத்துக்களில் என் தனிப்பட்ட நிலைப்பாட்டை பற்றி கவலை கொள்ளாமல் கருத்தை மட்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வோம்.

மேலும் சிலர் புலிகளை எதிர்த்தால் அவர்கள் ஏன் அப்படி சொல்லுகிறார் என்று கேட்காமல் அவர்களை உடனே ஈழத்தமிழர் எதிர்ப்பாளர் என்று எப்படி முத்திரை குத்துகின்றனர். இந்த நிலை வரவேண்டும் என்றுதான் புலிகள் தங்களுக்கு எதிராக அல்ல, மாற்றாக கூட யார் வளர்ந்தாலும் அவர்களை தங்கள் சட்டப்படி காலி பண்ணிவிடுகிறார்களா? (சிறீசபாரத்தினம், பத்மனாபா எல்லாம் ஈழத்தமிழர் நலனுக்கு எதிரானவர்களா, அல்லது ஈழத்தமிழர் நலன் என்றால் இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று வகுக்கப்பட்ட புலிகளின் சித்தாந்தங்களுக்கு எதிரானவரா) எல்லோருமே புலிகளை மட்டுமே கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும் என்று ஏன் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். புலிகளை பிடிக்காமல் ஈழத்தமிழரை நேசிப்பது சாத்தியமற்றதா? இந்த கேள்வியெல்லாம் கேலி பேசுவதற்காக கேட்பது அல்ல... உங்கள் இந்த பதிவை போலவே நிதானமாக நீங்களோ அல்லது வேறு யாராவதோ தெளிவு படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையிலேயே.
 



வெற்றி திருமலை... உங்கள் பின்னூட்டத்திற்கு பதில் எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன்... என் பதிவை ஆற அமர படிக்காமல், அவசரமாக ஒரு முடிவுக்கு வந்து வர்ணாசிரமம் குறித்து என் நிலைப்பாடு என்ன என்று கேட்கிறீர்கள்... உங்களுக்கு விளக்க நிறைய சொல்ல வேண்டும். அதற்குள் அடுத்த பதிவுகளுக்கு வந்து விட்டேன்... சற்று நாட்களில் விளக்கமாக சொல்கிறேன். தங்கள் வருகைக்கு நன்றி
 



சரி, உங்க கருத்து ??