<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://draft.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

ஒரு விளக்கம்: இலங்கைக்கு இந்தியா இராணுவ உதவி?


நார்வே தூதுக்குழு மேற்பார்வையில் புலிகளும் ரணில் அரசும் சமாதானத்தின் விளிம்பை தொட்ட நிலையில் சந்திரிகா அதை கெடுத்த போது சந்திரிகாவை சபிக்காத தமிழர் இல்லை... அதே சமயத்தில் புலிகளின் மேலும் ஒரு சலிப்பு இருக்கிறது... இன்னும் எவ்வளவு காலம் என்ற கேள்வியின் தொடர்ச்சி அது. காலம்தான் பதில் சொல்ல வேண்டும்..


உலகம் முழுக்கவே ஆயுதங்களால் லாபமடைவது ஆயுத வியாபாரிகளும், பாதிக்கப்படுவது பொதுமக்களும்தான் என்பது வெளிப்படை. ஆயினும் ஆயுத வியாபாரம் நடந்து கொண்டுதான் இருக்கும். தன் உள்நாட்டு பாதுகாப்புக்காக என்றே - எல்லா நாட்டையும் போல - இலங்கை ஆயுதம் வாங்கும். வெளியுலகை பொறுத்தவரை இலங்கை என்னும் அங்கீகரிக்கபட்ட நாட்டை ஆளும் சிங்கள அரசுக்கும் தனிநாடு கேட்டு போராடும் தீவிரவாத இயக்கம் என்று அறிவிக்கப்பட்ட புலிகளுக்கும் சண்டை. ஈழததமிழருக்கு எதிராக இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படமாட்டா என்பது ஏட்டளவில் இருக்கும். புலிகள் அனைவரும் ஈழத்தமிழர்தான் என்றாலும் நான் இங்கே சொல்வது பொதுமக்களை..

இந்தியா பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டுவதற்கும் (பஸ், ரயில் விடுவதற்கு பொதுமக்கள் ஆதரவு எல்லாம் ஒன்றும் இல்லை) இலங்கையுடன் பாராமுகமாயிருப்பதற்கும் அரசியல் இருக்கிறது. அதன் பார்வையில் இலங்கையில் நடக்கும் உள்நாட்டு ப்ரச்னையை விட தன் தென் பிராந்தியத்தில் தன் ஆளுமை முக்கியம்.. அதே சமயத்தில் இந்தியா நிர்பந்தித்தால் இலங்கை அரசோ புலிகளோ கேட்பார்கள் என்று நினைக்கிறீர்களா? பின்பு ஏன் நடுநிலையோடு இல்லாமல் இலங்கை அரசுக்கு மாத்திரம் தளவாடங்கள் கொடுக்கலாம் எனும் கேள்வி வரும்.. அதற்கு காரணம்தான் நான் பதிவில் சொன்னது.

வைகோ சமய சந்தர்ப்பம் தெரியாமல் சில விஷயங்களை பேசி மக்களிடம் எதிர்மறை எண்ணங்களை உருவாக்கிவிடுவார். அவர் புலிகளை பற்றி பேசி பொடாவில் சிறையில் இருந்த போது அவரை 'மாவீரன்' என்றெல்லாம் யாரும் நினைக்கவில்லை (கருத்துக்கணிப்புகள் எல்லாம் எடுக்கப்பட்டன) கட்சி வளர்த்து ஆட்சியில் பங்கு பெற்று பின்பு ஆக்கபூர்வமாக செயல்படுவதை விடுத்து 'சும்மா பேசிவிட்டு' இப்படி சிறையில் கிடக்கிறாரே என்ற எண்ணம்தன் இருந்தது. இரு வாரங்களுக்கு முன் இலங்கை அமைச்சர் இந்தியா வந்தபோதே ராணுவ தளவாடங்கள் பரிமாற்றம் பற்றிய பேசியதாக செய்தி வந்தது.. அப்போது வைகோ தில்லி சென்று பிரதமரை சந்தித்ததாகவும் சில மணி நேரங்கள் இதில் உள்ள பாதகங்கள் பற்றி எடுத்த்து சொல்லியதாகவும் பிரதமர் செவி கொடுத்து கேட்டதாகவும் வைக்கோவின் அறிக்கை சொன்னது... இப்பொழுது திடீரென்று தளவாடங்கள் விற்பனை உறுதிப்படுத்தப்பட்டதென்றும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ பிரதமருக்கு கடிதம் எழுதினாரென்றும் செய்தி வருகிறது... கூட்டணிக்கடசியை சேர்ந்தவர், இன்றைய பிரதமர் மட்டுமல்ல முந்தைய பிரதமர்களும் அன்பு பாராட்டும் வைகோ எடுத்துச்சொன்னது எடுபடாததற்கு ஏதாவது அரசியல் காரணம் இருக்கலாம். வைகோ வீதிக்கு வந்து போராடாமல் கடிதம் மட்டும் எழுதுவதற்கும் ஏதாவது காரணம் இருக்கலாம்.

ஒரு சராசரி தமிழனுக்கு அரசியல் கூத்துக்கள், சினிமா கூத்துக்கள், அன்றாட கூத்துக்கள் தாண்டி ஈழப்ப்ரச்னை பற்றி 'கொடுக்கப்படும்' செய்திகளின் அடிப்படையிலேயே - தினமலர் என்றல்ல, சன் டிவி, மூன் டிவி எல்லாம் சேர்த்துதான் சொல்கிறேன் - அறிவு இருக்கிறது என்ன செய்வது... நான் "சராசரி தமிழனின்" பிரதிநிதி இல்லைதான், ஆனால் ஈழப்பிரச்னையில் ஈழத்தமிழர் அளவு இந்திய தமிழருக்கு 'விஷயம்' தெரிந்திருக்க சாத்தியம் இல்லை என்றளவு தெரிந்தவன்... இந்த பதிவில் நான் சொல்ல வந்த விஷயத்தை நான் சொல்ல நினைத்த விதத்தில் சொல்லவில்லை என்று உணர்கிறேன். சென்சிடிவ் ஆன இந்த விஷயத்தில் மேலும் மேலும் 'எனக்கு தெரிந்த' கருத்தை சொல்ல நான் விரும்பவில்லை. யார் உணர்வாவது புண்பட்டிருக்குமாயின் வருந்துகிறேன்... விரைவில் இனப்பிரச்னைக்கு தீர்வு அமைந்து அமைதி திரும்ப உளமார ப்ரார்திக்கிறேன்...

குறிப்பு: நான் மீள்பதிவு செய்தபோது ஒட்டு நிலவரம் (-12/24) என்ற அளவிலே இருந்தது. மீள்பதிவு செய்ததினால் reset அகிவிட்டது. ஓட்டு போட்டவர்கள் பொறுத்தறுள்க.

ஒரு குறிப்புக்காக மட்டும்:: "இலங்கைக்கு இந்தியா இராணுவ உதவி செய்ய வேண்டும்" என்ற தலைப்பில் வந்த என் முந்தைய பதிவு:

விடுதலைப்புலிகளின் நலன் ஒன்றை மட்டுமே விரும்பும் வைகோ இந்தியா இலங்கைக்கு எந்த ராணுவ தளவாடங்களையும் வழங்கக்கூடாது என்று இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அப்படி வழங்கினால் அது இலங்கை தீவு தமிழர்கள் மட்டுமல்லாமல் இந்தியாவில் வாழும் தமிழர் இதயங்களிலும் ஆற்ற முடியாத காயங்களை ஏற்படுத்தும் என்பது அவரின் வாதம்.

இலங்கை தமிழர் நலன் என்ற தனது வழக்கமான வாசகங்களை உபயோகித்தாலும் அவர் உண்மையில் கூற நினைப்பது இந்தியா ஆயுத உதவி வழங்கினால் அது விடுதலைப்புலிகளுக்கு ஆபத்தாக முடியும் என்பதாகத்தான் இருக்க முடியும்....

விடுதலைப்புலிகள் தமிழர் நலனுக்காக போராடுவதாக பிரச்சாரம் செய்யப்பட்டாலும் உலகத்தின் பார்வையில் அது ஒரு தீவிரவாத இயக்கம் என்பது மறுக்க முடியாத உண்மை... செஷன் தீவிரவாதிகளை பற்றி எந்தளவு நாம் கவலை கொள்கிறோமோ அதே அளவுதான் விடுதலைபுலிகளை பற்றிய உலகத்தின் கவலையும்... ஆக கசப்பாக இருந்தாலும் உண்மை நிலை இதுதான் :: இலங்கை என்ற நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் இராணுவ உதவி என்று கேட்கும்போது இந்தியா தராவிட்டால் வேறு ஏதாவது ஒரு நாடு அந்த உதவியை அளிக்க முன்வரும்... என் விளக்கம் இங்கே

அமெரிக்க அரசு ராணுவ உதவி என்று இலங்கை எதை கேட்டாலும் தர தயாராக இருக்கும்... மாற்றாக அங்கே ராணுவ தளம் குறிப்பாக கடற்படை தளம் அமைக்க அனுமதி கேட்கும்... டியகோ கார்சியா தீவில் ராணுவ தளம் ஏற்படுத்த நடந்த கூத்துக்களை மறக்கக்கூடாது. தென்கிழக்கு பிராந்திய கண்காணிப்புக்கு குறிப்பாக இந்திய நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு இலங்கை ஒரு மிகச்சிறந்த பூகோள சாதக இடம்... இந்த பிராந்தியத்தில் கடற்கண்காணிப்புக்கு அமெரிக்கா தகுந்த வசதியில்லாமல் நிறைய செலவு செய்கிறது... ஏற்கனவே சுனாமி மீட்பு என்ற போர்வையில் தளம் பதிக்க சென்ற அமெரிக்க அரசுக்கு இந்தோனீஷிய அரசும் இந்திய அரசும் அனுமதி மறுத்தது... இலங்கை கட்டுப்பாட்டுடன் கூடிய அனுமதி அளித்தது...

அமெரிக்காவோ அல்லது வேறு எந்த நாடோ இலங்கையில் ராணுவ உதவி என்ற பெயரில் உள்ளே நுழைவதோ அல்லது இலங்கை ஏதோ ஒரு நாட்டிலிருந்து மிக நவீன அன்னிய தயாரிப்பு ராணுவ தளவாடங்களை வாங்குவதோ இந்தியாவின் இறையாண்மைக்கு நல்லதா என்பதை வைகோ போன்றவர்கள் சிந்திக்க வேண்டும்... பிரபாகரன் தனது நண்பர் என்ற காரணத்தால் தன் பிறந்த நாட்டின் கேட்டிற்கு வித்திடத்துணியக்கூடாது...

பி.கு: இதையும் IPKF இலங்கைக்கு சென்றதையும் முடிச்சு போட கூடாது... IPKF என்பது ஒரு கறுப்பு அத்தியாயமாக இப்போது பார்க்கப்பட்டாலும் அது அனுப்பப்பட்ட காலத்தையும் சூழ்நிலையயும் கருத்தில் கொள்ள வேண்டும்

பின்பாட்டு: வைகோவிற்கு இலங்கை தமிழர்கள் மேல் உண்மையான அக்கறை இருப்பின் அவர் இலங்கை தமிழர் நலன் குறித்து பேசியதை தவிர என்ன செய்தார் என்று யாராவது எனக்கு சொல்லுங்கள்... தன் வேரை இழந்து தன்மானத்துக்கு இழுக்கு ஏற்படும் வகையிலான ஒரு வாழ்க்கை தரத்தில், தமிழ்நாட்டு அகதிகள் முகாமில் வாழும் அம்மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த ஏதாவது பாடுபட்டாரா?? அவர்களுக்கு எல்லாம் எந்த அளவில் உழைத்தார்... எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை... பேச்சளவில் வருத்தப்படுவதும் வீறு கொண்டு முழங்குவதும்தான் தமிழர் நலன் என்றால் வைகோவை விட நிறைய பேர் பல மடங்கு மேல்.


š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


//இந்தியாவின் இறையாண்மைக்கு நல்லதா //

தல, பாகிஸ்தான்,பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கும் வேறு எந்த நாடும் ராணுவ தளவாடங்கள் வழங்குவதும், அங்கே ஆசனம் போடுவதும் நம்ம இறையாண்மைக்கு நல்லதில்ல... அதனால பாகிஸ்தான்,பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கும் நம்மதான் ராணுவ உதவி செய்யனும்னு ஒரு பதிவுபோடுங்க தல ;)

//வைகோவிற்கு இலங்கை தமிழர்கள் மேல் உண்மையான அக்கறை இருப்பின் அவர் இலங்கை தமிழர் நலன் குறித்து பேசியதை தவிர என்ன செய்தார் //
எல்லாரும் அமைதியா இருக்கும்போது இவராவது சவுன்டு குடுக்குறாரேனு சொந்தோஷப்படுங்க!!!

வைகோ மற்றும் நெடுமாறன் போன்றோர் அவ்வப்போது இந்தமாதிரி குறைந்த பட்சம் சவுன்டு கூட குடுக்கலேன்னா, டீக்கடையில் தினத்தந்தி படிக்கின்ற தமிழினத்திற்கு இலங்கையில் தமிழர்களும் இருக்கிறார்கள் என்பது தெரியாமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இந்த பதிவிற்கு என் ஓட்டு (-) :(

-- பாண்டி.
 



அதுசரி முகமூடியாரே!
அவரவர் நலன் அவர்களுக்கு.
அமெரிக்கா உள்நுளையக்கூடாதென்பதற்காக இந்தியா எதுவும் செய்யும் என்பது தெரிந்த விடயம்தானே. (பென்னம்பெரிய பயில்வான்களே எதுவும் செய்யத்துணியும்போது, ஒரு நோஞ்சான் தன்னைத்தானே காத்துக்கொள்ள எதுவும் செய்யத் துணியும் என்பது பலருக்கு விளங்கவில்லை.)
ஆனால் ஈழத்தமிழர் என்று கொஞ்சப்பேர் (தமிழகத்தாரோடு ஒப்பிடும்போது கொஞ்சம்தான்) இருக்கிறார்கள் என்பதை உங்கள் பதிவில் காணவில்லையே? அவர்களுக்கான அரசியல் சக்தியாக நீங்கள் யாரைப்பார்க்கிறீர்கள்? எவரையும் குறிப்பிடவில்லையே?
ஆக உங்கள் நலனுக்காக நீங்களும், தங்கள் நலனுக்காக அமெரிக்கா உட்பட மற்றவர்களும் ஆயுதங்களைக் குவித்து அவர்களைக் கொல்வீர்களாம். அதற்கும் அகிம்சை, ஜனநாயகம் என்றெல்லாம் கதைவிடுவீர்களாம்.

வை.கோ. என்ன செய்தார் என்று கேட்டீர்களே? குரல் கொடுப்பதைத்தவிர வேறென்ன செய்ய முடியும் அவரால்? சரி குரல்தான் கொடுக்க விடுகிறீர்களா? அவர்கள் சிறையில் செலவிட்ட காலங்களுக்கு யார் பொறுப்பு?
என்னையா ஜனநாயகம் பேசுகிறீர்கள்?

நீங்கள் கண்ணை மூடிக்கொண்டிருங்கள், அல்லது அப்படியிருப்பதாக நினைத்துக்கொண்டிருங்கள். விரும்பியோ விரும்பாமலோ புலிகளை ஈழத்தமிழரின் பிரதிநிதிகளாக மற்றவர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். இந்தியா தான் இன்னும் 500 வாக்குகளைப் பெற முடியாதவர்களைக்கூட, பெயரே தெரியாத சில தனிநபர்களைக்கூட ஈழத்தமிழரின் பிரதிநதிகளாக அடையாளஞ்சொல்லிக்கொண்டுள்ளது.
 



//வேறு எந்த நாடோ இலங்கையில் ராணுவ உதவி என்ற பெயரில் உள்ளே நுழைவதோ அல்லது இலங்கை ஏதோ ஒரு நாட்டிலிருந்து மிக நவீன அன்னிய தயாரிப்பு ராணுவ தளவாடங்களை வாங்குவதோ இந்தியாவின் இறையாண்மைக்கு நல்லதா என்பதை வைகோ போன்றவர்கள் சிந்திக்க வேண்டும்... //
இதில் சிந்திக்க என்ன இருக்கின்றது, அதற்காக நம் சகோதரர்களை கொல்ல நாமே ஆயுதம் தருவதா??


நேபாள கம்யூனிஸ்ட்களின் புரட்சியை அடக்க நேபாளத்திற்கு உதவி செய்தோம், செய்கிறோம், கேட்டால் நேபாள மன்னர் ஆட்சி கவிழ்ந்துவிட்டால் சீனா அங்கு ஆதிக்கம் செய்யுமென்று, விளைவு நேபாள மக்களின் வெறுப்புக்குள்ளாகி இந்தியர்கள்,இந்திய கடைகளின் மீது தாக்குதல், இந்தி படங்கள் ஓடிய திரை அரங்குகள் மீது தாக்குதல் என மக்கள் கொதித்தெழுந்தனர்,

இங்கே ஈழத்தமிழர் ஆதரவும் புலிகள் ஆதரவும் முடிச்சி போடப்படுகின்றன,

இதை விவாதிப்பது சில சிக்கல்களை கொண்டுவந்துவிடும், அது மட்டுமின்றி புலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தினர், அதைப்பற்றி பேசினால சில சட்டசிக்கல்களும் உண்டு எனவே மேலதிக விவாதத்திலிருந்து விலகுகின்றேன்
 



திரு. பாண்டி :: பதிவின் நீளம் கருதி இலங்கை எந்தளவு strategically important என்பதை நான் சொல்லாததால் இவ்வாறு கேட்கிறீர்கள். இது குறித்து நாளை விளக்கமாக எனது கருத்தை தெரிவிக்கிறேன். வைகோ போன்றவர்கள் குறைந்த பட்சம் சவுண்டு கொடுத்தால் போதும் என்ற மனநிலை சரிதானா? அவர் மத்திய அரசில் எத்துணை சக்தி வாய்ந்தவராக ஏன் இப்பொழுதும் சக்தி வாய்ந்தவராக (கூட்டணியின் முக்கிய நாயகன் கருணாநிதியும் பொழுது போகவில்லை என்றால் ஈழத்தமிழருக்காக சவுண்ட் விடக்கூடியவர்தான்) இருக்கிறார் என்பது தங்களுக்கு தெரியாததல்ல.

என் எண்ணத்தை நான் எழுதினேன். நீங்கள் இதனை மற்றவருக்கு 'படிக்க தகுதியற்றது' என்று பரிந்துரை செய்வது உங்கள் உரிமை. நீங்களாவது ஏன் என்பதற்கான உங்கள் கருத்தை சொன்னீர்கள். அதற்கு நன்றி.
 



வசந்தன் :: // ஆனால் ஈழத்தமிழர் என்று கொஞ்சப்பேர் (தமிழகத்தாரோடு ஒப்பிடும்போது கொஞ்சம்தான்) இருக்கிறார்கள் என்பதை உங்கள் பதிவில் காணவில்லையே? // ஈழத்தமிழர் மேல் நான் மட்டுமல்ல தமிழர் எல்லாருக்கும் பரிவும் பாசமும் உண்டு... அவர்கள் நம்முடைய சொந்தம் என்ற பார்வையில்தான் எல்லா தமிழர்களும் இருக்கிறார்கள் என்பதை நான் ஆணித்தரமாக சொல்ல முடியும். சில விதிவிலக்குகள் இருக்கலாம். நல்ல படியாக சீக்கிரம் ஒரு தீர்வு அமைந்து அவரவர் தங்களுடைய கூட்டுக்கு திரும்பி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று ப்ரார்தனை செய்வதை தவிர பொதுமக்கள் எதுவும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறோம்... இந்த பதிவில் அவர்களை பற்றி சொல்லாததற்கு காரணம், நான் சொல்ல வந்தது வேறு தளம் என்பதால்.

//பெயரே தெரியாத சில தனிநபர்களைக்கூட ஈழத்தமிழரின் பிரதிநதிகளாக அடையாளஞ்சொல்லிக்கொண்டுள்ளது// ராசீவ் காந்தி என்பவர் தமிழக தலைவர் அல்ல... இந்திய அளவில் அடையாளம் காணப்பட்டவர். தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்கள் ஈழத்தமிழர் விஷயத்தை பார்க்கும் முறையே வேறு. நாம் போடோலேண்ட் ப்ரச்னையய் பார்ப்பதை போன்றதுதான்.. ஆக ஒரு இந்திய தலைவர் படுகொலைக்கு பின் இந்தியாவின் புலிகளின் மீதான பார்வை வேறு மாதிரி ஆகிவிட்டது. திரு. ராஜீவின் மனைவி தலைவராக இருக்கும் கட்சி ஆட்சி அமைத்திருக்கிறது. அவர்கள் மட்டுமல்ல யாராகினும் புலிகளுக்கு இந்தியாவில் அங்கீகாரம் என்பது கஷ்டம்தான், புலிகள் அரசாங்கம் என்ற நிலையில் ஆட்சி அமைத்தால் தவிர...

// அவர்கள் சிறையில் செலவிட்ட காலங்களுக்கு யார் பொறுப்பு? என்னையா ஜனநாயகம் பேசுகிறீர்கள்? //தீவிரவாத இயக்கம் என்று அறிவிக்கப்பட்ட இயக்கத்தை பற்றி பேசினால் (அதில் அரசியல் இருந்தாலும்) சிறையில் வாடுவதுதான் ஜனநாயகம். மேலும் நிறைய விஷயங்களை பற்றி பேசுவதற்கு இயலாத நிலையில் இருக்கிறேன்.
 



சரி முகமூடியாரே!
குறைந்த பட்சம் ஈழத்தமிழரை விடவும் எங்களுக்கு எங்கள் நாட்டு நலன்தான் முக்கியம் என்பதையாவது வெளிப்படையாய் ஒத்துக்கொள்ளுங்கள், ஈழத்தமிழர் கொல்லப்படுவதைவிடவும் முக்கியமானதென்று. நீங்கள் கொடுக்கப்போகும் ஆயுத உதவிகள் ஈழத்தமிழரை அழிக்கவல்ல என்பதை சொல்லமுடியுமா? பின்ன என்னத்துக்கு எங்களுக்கும் கரிசனை இருக்கிறது என்றுவிட்டு இப்படியொரு பதிவு போடுகிறீர்கள். உங்களுக்கே இதிலுள்ள முரண் தெரியவில்லையா?

விடுதலைப்புலிகளை இந்தியாவுக்குப் பிடிக்காமலிருக்கலாம். அதற்காக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகள் ஈழத்தமிழரைப் பாதிக்குமென்று அறியாமலா செய்கிறார்கள்? அப்படித் தெரிந்தபின்னும் அவர்கள் மேல் கரிசனை இருப்பதாகச் சொல்வது எவ்வளவு அபத்தம்?

சரி, அரசியல் அங்கீகாரம் வேண்டுமென்று சொன்னால்கூட, அதுவும் இருக்கிறதே. கடைசியாக நடந்த பாராளுமன்றத் தேர்தலில் புலிகள் கைகாட்டியவர்கள் தானே தமிழர் பகுதிகளில் வென்றார்கள். புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று தேர்தல் விஞ்ஞாபனம் செய்தவர்களைத்தானே மக்கள் வெற்றிபெற வைத்தார்கள். இதற்குப்பிறகும் என்ன அங்கீகாரம் தேவை?
தேர்தல் ஆயுத முனையில் பயமுறுத்தி நடத்தப்பட்டதால்தான் அவர்களால் வெல்ல முடிந்தது என்று தோற்றவர்கள் விடும் கதையை நீங்களும் விடாதீர்கள். கடந்த தேர்தல் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் நடக்கவேயில்லை. ஒரு வாக்களிப்பு நிலையம்கூட அவர்களின் பகுதியில் இல்லை. அனைத்துமே இராணுவமும் பொலிசாரும் ஆயுதங்களுடன் புடைசூழ இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் நடத்தப்பட்டன. அப்படியிருந்தும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புத்தான் பெருவாரியான இடங்களைக் கைப்பற்றியது. இன்றும் அவர்கள் சொல்கிறார்கள் புலிகள்தான் ஏக பிரதிநிதிகள் என்று.

ஒருத்தருக்கும் தெரியாமல், சரியானமுறையில் மக்களிடத்தில் கொள்கைப் பரப்புக்கூட செய்யாமல் தலைமறைவு இயக்கங்களாய் சில பத்துக்களில் ஆட்தொகை கொண்டிருந்தபோது அழைத்து ஆயுதமும் பயிற்சியும் கொடுத்த இந்தியா, இன்று வெளிப்படையான ஓர் உண்மையைக் ஏற்க மறுப்பது ஏன் என்பதிலேயே தெரியும் இந்தியாவின் இனப்பிரச்சினை மீதான அணுகுமுறை. (ராஜீவ் கொலைக்குப்பிறகுதான் இந்த நிலையென்று சொல்பவர்கள், அதற்கு முன்பேயே இரண்டரை வருட யுத்தத்தை மறந்துவிடுபவர்கள்.) இதைப்பற்றி அதிர்ச்சியடைய வேண்டிய நிலையெல்லாம் தாண்டி வெகுகாலமாகி விட்டது.

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வுக்கென்று ஒரு தீர்வைக் கொண்டுவர சிங்கள அரசை அழுத்தத் துணியாத இந்தியா, அவ்வப்போது அத்திட்டத்தில் பல தடங்கல்களை ஏற்படுத்திக்கொண்டுள்ள இந்தியா, ஈழத்தமிழர் மேல் தன் பிராந்திய நலன்களைத்தாண்டி கரிசனை கொண்டுள்ளது என்று காதில் பூச்சுற்றுகிறது.

இலங்கையின் கேந்திரமுக்கியத்துவத்தைப்பற்றி எழுதுங்கள். திருகோணமலையத்துறைமுகத்தின் முக்கியத்துவத்தைப்பற்றியும். இரண்டாம் உலகப்போரிலும் அதன் முக்கியத்துவம். இந்தியாவும் அமெரிக்காவும் அதற்காக போட்ட, போட்டுக்கொண்டிருக்கும் சண்டையைப் பற்றியும். இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கு காரணியாக அத்துறைமுகத்துக்கு இருந்த பங்குபற்றியும்.

கடைசியாக,
//ஈழத்தமிழர் மேல் நான் மட்டுமல்ல தமிழர் எல்லாருக்கும் பரிவும் பாசமும் உண்டு... அவர்கள் நம்முடைய சொந்தம் என்ற பார்வையில்தான் எல்லா தமிழர்களும் இருக்கிறார்கள் என்பதை நான் ஆணித்தரமாக சொல்ல முடியும். //

அது நன்றாகத் தெரியும். இந்தியா என்று நான் சொல்வது (ஏன் நீங்கள் சொல்வதும்கூட), இந்தியா என்ற ஒரு பிராந்திய வல்லரசை, கருத்துருவாக்கத்தை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
 



//கூட்டணியின் முக்கிய நாயகன் கருணாநிதியும் பொழுது போகவில்லை என்றால் ஈழத்தமிழருக்காக சவுண்ட் விடக்கூடியவர்தான்//

ஆனால் கருணாநிதியையும் வை.கோ. வையும் எவ்வாறு ஒன்றாக ஒப்பிடுகிறீர்களோ தெரியாது. இந்திய இராணுவத்துடன் ஈழத்தில் சண்டை நடந்தபோதே வன்னிக்காடுவரை வந்து சென்றவர் வை.கோ. அதையே பிரச்சினையாக்கியவர் கலைஞர். அவரின் ஈழ ஆதரவும் புலிகள் ஆதரவும் இன்று நேற்று வந்ததன்று. அதுசரி, அரசியல் ஆதாயத்துக்காகத்தான் அவரின் கோசங்கள் என்கிறீர்களா? அப்படியானால் கருணாநிதியோ ஜெயலலிதாவோ வெற்றிபெற முடியாதே. ஈழ மற்றும் புலிகள் ஆதரவு அரசியல், ஆதாயத்தைவிட பாதகங்களையே அதிகம் கொண்டுள்ளது என்று எண்ணுகிறேன். இதுபற்றியும் உங்கள் கருத்தறிய ஆவல்.

//தீவிரவாத இயக்கம் என்று அறிவிக்கப்பட்ட இயக்கத்தை பற்றி பேசினால் (அதில் அரசியல் இருந்தாலும்) சிறையில் வாடுவதுதான் ஜனநாயகம். //

பதிலுக்கு நன்றி.
 



முகமூடியாரே ஈழத்தமிழர்கள் மீது எங்களுக்கு கரிசனை உண்டு ஆனால் இந்திய இறையண்மை என்னும் பெயரில் ஈழத்துக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி அங்குள்ள தமிழ்மக்களைக் கொன்றுகுவித்தாலும் எனக்குக் கவலையில்லை என்ற அடிப்படைப் புரிந்துணர்வை வெளிக்காட்டியதற்கு நன்றி.
இராணு உதவிக்கும் இந்தியா இலங்கைக்கு சமாதனப் படையாய் வருவதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.இந்தியா சமாதானம் காக்கும் படையாய் வந்தாலாவது கடந்த தவறுகளை திரும்பவும் விடாமல் முக்கியமாக ஈ.பி.ஆர்.எல்.எப் போன்று பொம்மை அரசாங்கங்களை அமைக்காமல் உலக நாடுகளுக்கு மதிப்பளித்து நடக்குமென ஆகக்குறைந்தளவு எதிர்பார்க்கலாம்.ஆனால் இலங்கை இராணுவத்துக்கு ஆயுத தளவாட உதவியை செய்யவேண்டும் என நீங்கள் கூறுவது ஈழத்தமிழர்களை கொன்றுகுவிக்க மட்டுமே பயன்படும்.இதையும் கூறிவிட்டு ஈழத்தமிழர்கள் மேல் கரிசனை உண்டென்றும் கூறுவது.அபத்தத்திலும் அபத்தம்
 



முகமூடி, கொஞ்சம் தயவுசெய்து தெஹல்கா கொஞ்ச காலத்திய இதழ்களைப் படித்துவிட்டு புலிகளைப் பற்றிய உங்களின் கருத்துக்களை மாற்றிக் கொள்ளுங்கள். புலிகளை இன்னமும் எத்தனை நாள் தீவிரவாத இயக்கம் என்று ஜல்லியடிக்கப் போகிறீர்கள். ஒரு நாட்டினுள், தன்னந்தனியாக இன்னொரு நாட்டினை உருவாக்கி, திறம்பட நிர்வாகம் செய்து வருகிறார்கள். இந்தியாவிற்கு வேண்டுமானால் அவர்கள் தீவிரவாத இயக்கமாக இருக்கலாம், ஆனால் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் நிர்வாகிகள். ஈழத்தமிழர்களின் நம்பிக்கை. தமிழீழத்தின் ஒரே தலைமை நிர்வாகிகள்.

ராசீவ் காந்தி, ராசீவ் காந்தி என்று உருகுகிறீர்கள். "ராஜீவ் கொலையில் மறைக்கப்பட்ட உண்மைகள்" புத்தகத்தினைப் படித்துப் பாருங்கள். விவரங்கள் புரியும். ஒரு இந்திய தலைவர் தமிழ் மண்ணில் உயிரிழந்தது துரதிர்ஷ்டம்தான். ஆனால் அதை விட கொடுமையான விஷயம் நாம் இலங்கைக்கு அனுப்பிய IPKF-இன் அட்டுழியங்கள்.

தமிழகத்தில் எந்த தலைவன் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக 18 மாதங்கள் சிறையில் இருந்தான் ? எந்த தலைவன் பாராளுமன்றத்தில் புலிகளைப் பற்றி பேசினான் ? தமிழ் என் மூச்சு என்று சொன்னவர்கள் எல்லாம் சேனல் யுத்தத்தில் தீவிரமாய் இருந்தபோது, எவனொருவன் ராஜீவ் கொலைகைதிகளுக்காக பரிந்து பேசினான் ? வை.கோ ஒருவனைத் தவிர வேறெவரையும் உங்கள் விரல் காட்ட முடியாது. இலங்கை என்று பேசினாலே சிறை செல்லப்படும் அபாயங்களிருக்கும் இடத்தில், நெஞ்சு நிமிர்த்தி இன்னமும் ஈழத்தமிழர்களைப் பற்றி பேசுபவன் அவனொருவனே. வை.கோவின் அரசியல் ஆட்டங்களில் எனக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம். ஆனால், புலிகளையும், ஈழத்தமிழர்களையும் பற்றி தொடர்ந்து பேசி வருபவன் அவனொருவனே.

அதையெல்லாம் விடுங்கள். உங்கள் வீட்டுக் குழந்தை உங்களுக்கு அடங்காமல் அழுது உங்களை எரிச்சல் உண்டாக்குகிறது என்று வைத்துக் கொள்வோம், நீங்கள் உடனே உங்களின் பக்கத்து வீட்டுக்காரரை அழைத்து அடிக்கச் சொல்வீர்களா?
 



வசந்தன், கார்கில் போர்ல எத்தனையோ உயிர்களை கொன்று குவித்த பாகிஸ்தானுடன் கைகுலுக்கவும்., வாய் நிறைய இளித்து அங்கு சென்று வக்கணை பேசவும் எங்களால் முடியும். ஆனால் ஈழத்தமிழருக்கு ஆதரவா பேச முடியாது. பேசரவங்களையும் அவர் என்னாத்த பண்ணிப்புட்டாரு?ன்னு வாய் நோகாம கேள்விகேட்கவும் முடியும்.

இராணுவத் தளவாடங்களை இலங்கை அரசு புலிகளுக்கு எதிராக மட்டும்தான் பயன்படுத்தும், அப்பாவி மக்களுக்கள்மீது ஏவாது என எப்படி நினைக்கிறீர்கள். என்ன அசட்டுத்தனமான ஒரு பதிவு.
 



நல்ல பதிவு..

ஆனால் ஒன்று, இந்தியா ஆயுதங்களை நேரடியாக புலிகளிடமே கொடுக்கலாம். எதற்காக சுற்றி வளைத்து இலங்கை ராணுவம் ஊடாக புலிகளுக்கு கொடுக்க முயற்சி செய்கிறதோ தெரியவில்லை.

எப்பிடிப் பார்த்தாலும் ஆயுதங்கள் இறுதியில் போய்ச் சேரப்போவது புலிகளிடம் தானே!

யுத்தம் ஒன்று ஆரம்பித்தால்.. கனரக மற்றும் நவீனரக ஆயுதங்களை இந்தியா இலங்கை ராணுவத்துக்கு வழங்க வேண்டும்.

ஆனால் அடுத்தடுத்த சண்டைகளில் இலங்கை ராணுவ முகாம்களுக்குள் வந்து விழும் ஷெல்களிலும் ரொக்கட்டுக்களிலும் இப்பிடி இருக்கும்..

Made in India
 



தென்னாபிரிக்கா.. எந்த (தொப்புள் கொடி)உறவும் இல்லாத நாடு. எங்கோ தூரத்தில் இருக்கிறது. நெல்சன் மண்டேலா பதவியேற்பின் பின்னர், இலங்கை அரசுக்கான ஆயுத விற்பனையை உடனடியாக நிறுத்தியது அந்நாடு. இற்றை வரை அது தொடர்கிறது. ஏனெனில் அவர்களுக்கு தெரியும் அடக்கப்படும் ஒரு இனத்தின் உணர்வுகள்..

பிற்குறிப்பு: இந்தியா இலங்கையின் பக்கத்தில் இருக்கின்ற கலாசார தொடர்புகள் உள்ள ஒரு நாடு!

முகமூடி.. அமெரிக்கன்காரன் வந்து தமிழர்களை கொல்லக்கூடாது. நாங்க தான் கொல்லணும்.. இல்லையென்றால் நம்ம இறையாண்மை என்னாகிறது என்று கேட்கிறீங்க.. நல்லது.. இலங்கைத்தமிழர்களுக்கும் இறையாண்மை இருக்கக் கூடும் என்பதை நினைவில் கொள்வீராக..

மற்றும் படி.. தெற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்கா முதலான நாடுகள் காலூன்றாமல் இருக்க இந்தியா வல்லரசாக இருக்க வேண்டும் என்பதே எனதும் விருப்பம். ஆனால் அதை இலங்கைத் தமிழரை கொலை செய்து தான் நிரூபிப்போம் என்றால்..

அதை நீங்கள் செய்தால் என்ன..? அமெரிக்கா.. செய்தால் என்ன.. வாங்கய்யா.. வந்து கொன்னுட்டு போங்க..
 



ஈழத்தமிழர்கள் தனி நாடு பெறுவதை இந்தியா மிக முக்கிய மாக எதிர்க்க காரணம் என்னவென்றால் தமிழர்களுக்காக தனி நாடு உருவானால் உடனே தமிழ்நாட்டையும் இந்தியாவிலிருந்து பிரிக்க தமிழர்கள் எண்ணுவர் என அரசாங்கம் நினைப்பது,

இரண்டாவது மிக முக்கிய காரணம் சாதீதீதீதீதீதீதீதீதீதீ

தமிழீழத்தையோ, தமிழீழம் அடைய போராடும் இயக்கங்களையோ எதிர்ப்பவர்கள் யாரென பாரும் அங்கே பிராமணர்களின் குரலை அடையாளம் காணலாம், தமிழீழத்திற்காக போராடும் இயக்கங்களை ஆதரித்து பேசும் ஒரே ஒரு பிராமணரை அடையாளம் காண்பியுங்கள், நிச்சயம் உங்களால் முடியாது, ஏனென்றால் தனி மாநிலமாக இருக்கும் போதே தமிழ்நாட்டில் அவர்களின் பிழைப்பில் மண்விழுந்துவிட்டது, இந்த நிலையில் தமிழீழம் கிடைத்து நாளை ஒரு வேளை தனித்தமிழ்நாடு கேட்டு போராடினாலோ அல்லது ஒரு வேளை தனித்தமிழ்நாடு கிடைத்துவிட்டாலோ தம் பிராமண இனத்தவரின் கதி என்ன ஆகுமோ என்ற பயத்தினால் இப்போதே தற்காத்துகொள்ளும் முயற்சிதான் இந்த எதிர்ப்பு
 



AnionMass எ. அனோனிமாசு சொல்வதாவது:
|ஏன் முகமூடி நீங்க முகம் மூடாத சமயத்திலே இலியான் உயூரிச்சு செயகாந்தன் ஆகியோரின் புத்தகங்களை வாசித்துக்கொண்டிருப்பீர்களா?|
 



அன்புள்ள முகமுடிக்கு, ஆக்கப்பூர்வமாஎ விவாதிப்பதாக இருந்தால் இக்கட்டுரை தொடர்பாக விரிவாக எழுதாலாம். ஆனால் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு எதிராக தீர்மானமான எண்ணம் கொண்ட தங்களைப் போன்றோர்க்கு பதில் சொல்லி காலத்தை வீணடிப்பதை விட உருப்படியாக வேறு ஏதாவது செய்யலாம்.
நன்றி.

அன்புடன்
மு.முத்துகுமரன்
 



//அமெரிக்கன்காரன் வந்து தமிழர்களை கொல்லக்கூடாது. நாங்க தான் கொல்லணும்.. இல்லையென்றால் நம்ம இறையாண்மை என்னாகிறது என்று கேட்கிறீங்க.. //

இதையே நானும் கேட்க நினைத்தேன்.
 



//அமெரிக்காவோ அல்லது வேறு எந்த நாடோ இலங்கையில் ராணுவ உதவி என்ற பெயரில் உள்ளே நுழைவதோ அல்லது இலங்கை ஏதோ ஒரு நாட்டிலிருந்து மிக நவீன அன்னிய தயாரிப்பு ராணுவ தளவாடங்களை வாங்குவதோ இந்தியாவின் இறையாண்மைக்கு நல்லதா என்பதை வைகோ போன்றவர்கள் சிந்திக்க வேண்டும்... பிரபாகரன் தனது நண்பர் என்ற காரணத்தால் தன் பிறந்த நாட்டின் கேட்டிற்கு வித்திடத்துணியக்கூடாது//

அமெரிக்கா முழு ஆதரவு கொடுத்து,ஆயுதம் கொடுத்து வளார்த்துவிட்ட பாகிஸ்தான் பாதிக்காத இறையாண்மையினை, சீனா]
பாதிக்காத இறையாண்மையினை எப்படி
இலங்கை பாதிக்கும் என்பதுதான் என்க்கு புரியவில்லை.

இந்திய வரைபடத்தினை வெளிநாட்டு புத்தகங்களில் பாத்திருக்கிறீர்களா.பல ப்குதிகள் இல்லை.அவை எல்லாம் எங்கே பாகிஸ்தானிடமும்,சீனாவிடமும்
இருக்கின்றன.இந்தியாவில் நீங்கள் பார்க்கும் இந்திய வரைபடம் பாகிஸ்தானிடமும் சீனாவிடமும் இருக்கும் பகுதிகள் நீக்காமல் காட்டப்படுவது.

நிலங்களை இழந்து ,எத்தனையோ யுத்தங்களை நடத்தி உயிர்களை இழந்தும்
பாகிஸ்தானுக்கு பஸ் விட்டு ந்ல்லெண்ணம் பாராட்டமுடிகிறது.நிலங்களை பறித்த சீனாவுடன் நல்லெண்ணம் பாராட்ட முடிகிறது (தலைலாமா அம்பேல்)

ஆனால் ஈழத்தமிழர்கள் மேல் வன்மம் தான் காட்டப்படுகிறது. ஒரு பேச்சுக்கு ஹிந்தி மொழிபேசும் மக்கள் இலங்கையில் வாழ்ந்து சிங்களவருடன் பிரச்சனை ஏற்பட்டு இருந்தால் அப்போது இந்தியா இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுத்து உதவி செய்து கொண்டிருக்குமா? இந்தியாவில் வாழும்
ஹிந்தி மொழி பேசுவோர் விட்டுவிடுவார்களா?

இலங்கை வாங்கும் நவீன தளபாடங்கள்
எப்படி இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஆகும்.பாகிஸ்தானிடமும் சீனாவிடமும் இல்லாத ஆயுதங்களா? சிலவேளை
இலங்கை இந்தியாவின மேல தாக்குதல் செய்யக் கூடும் என் சொல்லவருகிறிர்களா? தமிழ்நாட்டில்
இருந்து வெளிவரும் இந்து,தினமலருக்கு
அடுத்தபடியாக இருக்கிறது உங்கள் பதிவு.

ஒரு காலத்தில் நெல்சன் மண்டேலாவை
பயங்கரவாதி என்றுதான் உலகம் சொன்னது. யாசீர் அரபாத்தினையும் பயங்கரவாதி என்றது.அனால அவர் சார்ந்தவர்களுக்கு அவர்கள் தேசிய தலவர்கள்.இன்று அவர்களை உலகம் என்ன சொல்கிறது?.அவரவர் நலனுக்கு
உவப்பாக இருந்தால் அவர் போராளி அவரவர் ந்லனுக்கு எதிராக இருந்தால் பயங்கரவாதி.


இலங்கையில் புலிகள் கைகாட்டிய 22 பேர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள்.புலிகள் தான் தமிழ்ம்க்களின் ஏக பிரதிநிதிகள் என்ற கோஷத்துடன் அறிந்திருக்கிறீர்களா?

முகமூடி; நீங்கள் உங்கள் முகமூடியினை கொஞ்சம் கழற்றிவிட்டு பாருங்கள்.
 



கருத்து பதிந்த அனைவருக்கும் நன்றி... எனக்கு தோன்றியதை மீள்பதிவாக கொடுத்திருக்கிறேன்.. முத்துகுமரன் மட்டுமல்ல நிறைய பேர் மற்றவர் எழுத்தை படிக்கும் போது அது அவர்களின் தீர்மானமான எண்ணம் என்றே முடிவுக்கு வந்து விடுகிறார்கள்... மற்றவரை பற்றி தெரியாது, 'நான் சொல்வதே சரி' என்னும் எண்ணம் கொண்டவனில்லை நான். ஆக மாற்றுச்சிந்தனைக்கு வித்திடும் செய்திப்பதிவு எங்காவது இருந்தால் - அல்லது நீங்கள் எழுதினாலும் கூட - சொல்லுங்கள்... என் சிந்தனையை விரிவு படுத்திக்கொள்ள எப்பொழுதும் தயாராகவே உள்ளேன்.
 



//பதிவின் நீளம் கருதி இலங்கை எந்தளவு strategically important என்பதை நான் சொல்லாததால் இவ்வாறு கேட்கிறீர்கள். இது குறித்து நாளை விளக்கமாக எனது கருத்தை தெரிவிக்கிறேன்//

முகமூடி அவர்களே, இலங்கை எந்தளவு strategically important என்பதை நான் புரிந்தே வைத்திருக்கிறேன். இருந்தாலும் உங்களது கருத்தை அறியவும் ஆவல்.

//வைகோ போன்றவர்கள் குறைந்த பட்சம் சவுண்டு கொடுத்தால் போதும் என்ற மனநிலை சரிதானா? //

போதும் என்ற மன நிலை கண்டிப்பாக இல்லை... ஆனால் அவரது கைகள் கட்டப்பட்டிருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

//அவர் மத்திய அரசில் எத்துணை சக்தி வாய்ந்தவராக ஏன் இப்பொழுதும் சக்தி வாய்ந்தவராக //

அவர் மத்திய அரசின் அங்கமாக இருந்த போதே அவரை அவரால் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை என்பதுதானே உண்மை?

Narain : well said.
--பாண்டி.
 



நான் எனது இரண்டாவது பின்னூட்டத்தை தட்டச்சிடும்போது மீள்பதிவு செய்திருக்கிறீர்கள்.

மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து மீள்பதிவு செய்தமைக்கு நன்றி.

--பாண்டி.
 



//தமிழீழம் கிடைத்து நாளை ஒரு வேளை தனித்தமிழ்நாடு கேட்டு போராடினாலோ அல்லது ஒரு வேளை தனித்தமிழ்நாடு கிடைத்துவிட்டாலோ தம் பிராமண இனத்தவரின் கதி என்ன ஆகுமோ என்ற பயத்தினால் இப்போதே தற்காத்துகொள்ளும் முயற்சிதான் இந்த எதிர்ப்பு//

எப்படிய்யா இப்படியெல்லாம் சிந்திக்க வருகிறது உங்களுக்கு? உங்களையெல்லாம் சொல்லி குற்றமில்லை. நாஞ்சில் மனோகரனின் கவிதை தான் நியாபகத்துக்கு வந்து தொலைக்கிறது.
 



முகமூடி என்ற பெயரில் எழுதிவரும் மாயவரத்தான் அவர்களே,

வணக்கம். முதலில் மனிதாபிமானத்தோடு சிந்தித்துப் பாருங்கள். அங்கே கரிகாலன் அவர்களும் முத்துக்குமரன் என்பவரும் சொன்ன கருத்துக்களில் உள்ள உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். தமிழ்நாட்டில் பிராமனர்களைத் தவிர வேறு யாரும் இலங்கைத் தமிழர்களை வெறுக்கவில்லை! இது 100% சத்தியமான உண்மை. இங்கே வலைத்தளங்களிலும் குரூப்புகளிலும் மட்டுமின்றி தினமலர் வாயிலாகவும் உங்கள் துவேஷத்தினை வளர்க்கிறீர்கள்.

ராஜீவைக் கொன்றதை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் சொல்வீர்கள்? நாங்களேகூட ராஜீவைக் கொன்றது தவறென்றுதான் சொல்கிறோம். கொலைக்குற்றத்துக்காக மற்ற தமிழ் சொந்தங்களையுமா வெறுக்கச் சொல்கிறீர்கள்?

தமிழ்நாட்டில் இருந்து எம்ஜிஆர் ஆட்சியின்போது அரிசியும் பருப்பும் ஆயுதங்களும் இன்னும் ஏராளமான வசதிகள் இலங்கை தமிழ் நண்பர்களுக்கு சென்றதே? அப்போது என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? இன்றுதான் தெரிகிறதா உங்களுக்கு அவர்கள் கெட்டவர்கள் என்று?

கரிகாலன் சொன்னதுபோல அங்கே இருப்பவர்கள் ஹிந்தி பேசுபவர்கள் என்றால் இந்நேரம் கொதித்து எழுந்திருப்பார்கள். தமிழனாக பிறந்தது அவர்கள் செய்த பாவமா?
 



//முகமூடி என்ற பெயரில் எழுதிவரும் மாயவரத்தான் அவர்களே//

ஆகா.. நல்லதொரு நகைச்சுவை பின்னோட்டம் இது. நான் தான் அங்கே 'மாயவரத்தான்' என்ற பெயரில் ஒரு பதிவு வைத்துக் கொண்டிருக்கிறேனே. அப்புறம் எதுக்கு இப்படி அநாவசியமாக முகமூடி என்ற பெயரில் இங்கே வேறு எழுதித் தொலைக்க வேண்டும்? என்னோட பதிவுகள் எனக்கு தாக்கத்தை ஏற்படுத்துபவை பற்றி தான். விடுதலைப் புலிகள் பற்றியெல்லாம் நான் பதிவு எழுதுவதாகவே இல்லை. அநாவசியமாக மாயவரத்தான் தான் முகமூடி என்று இன்னொரு பிரச்னையை இங்கே கிளப்ப வேண்டாம். எனக்கு விடுதலைப் புலிகள் மீது எழுதத் தோன்றவில்லை. அப்படி எழுதத் தோன்றும் போது எனது பதிவில் கண்டிப்பாக எழுதுவேன். இப்படி வேறு பெயரில் எனது கருத்தை எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படி குப்சாமி, முன்சாமி என்றெல்லாம் பெயர் வைத்துக் கொண்டு தங்கள் முகவரியை சொல்ல தைரியம் இல்லாத கோழைகள் என்னைப் பற்றி இப்படி அவதூறு பரப்புவது தான் வேடிக்கை.
 



//தமிழ்நாட்டில் பிராமனர்களைத் தவிர வேறு யாரும் இலங்கைத் தமிழர்களை வெறுக்கவில்லை!//

//ராஜீவைக் கொன்றதை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் சொல்வீர்கள்? நாங்களேகூட ராஜீவைக் கொன்றது தவறென்றுதான் சொல்கிறோம். //

//தமிழ்நாட்டில் இருந்து எம்ஜிஆர் ஆட்சியின்போது அரிசியும் பருப்பும் ஆயுதங்களும் இன்னும் ஏராளமான வசதிகள் இலங்கை தமிழ் நண்பர்களுக்கு சென்றதே? அப்போது என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்?//

இதற்கெல்லாம் நான் பதில் சொல்லவிரும்பவில்லை. காலம் பதில் சொல்லும் கண்டிப்பாக.
 



இந்த பதிவில் நான் என்ன சொல்கிறேன் என்று சரிவர புரிந்து கொள்ளாமல் பிராமணீயத்தை புகுத்தி பின்னூட்டமிட்டு பதிவின் போக்கை திசை திருப்ப முயற்சித்த அனானிமசுக்கு பதில் கூறுவதன் மூலம் அவரின் நோக்கத்தை நிறைவேற்ற நானே உதவியாக இருக்க கூடாது என்றுதான் பதில் கூற விரும்பாமல் சும்மா இருந்தேன். இப்போது மாயவரத்தான் பெயரை இழுத்து திசை திருப்பும் வேலையய் குப்சாமி ஆரம்பித்து வைத்திருக்கிறார்... எந்த விஷயத்தை எடுத்தாலும் ஒரே கண்ணோட்டம் மட்டுமே கொண்ட இவர்கள் போன்றவர்களின் எண்ணம் ஆரம்பிக்கும் இடத்தை பற்றியும் சிந்திக்கும் முறையை பற்றியும் எனக்கு ஆச்சர்யம் உண்டு... நீங்கள் மற்றவரின் கருத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பது இங்கு முக்கியமே இல்லை... ஆரோக்கியமான முறையில் நடக்கும் கருத்து பரிமாற்றத்தை திசைதிருப்பி மற்றவருக்கு இடைஞ்சல் கொடுக்காமல் இருந்தால் அதுவே போதும்... வித்தியாசமாக இருக்கும், ஒரு முறை முயற்சிதான் செய்து பாருங்களேன்
 



சிந்திக்கும் முறையா? அப்படியென்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர்களிடம் சிந்திக்கும் முறை பற்றி பாடம் எடுக்கிறீர்களே முகமூடி சார். வீட்டில் தண்ணி வரவில்லையா?! கேடுகெட்ட அரசாங்கத்தை கேள்வி கேட்க துப்பு கிடையாது, ரேஷனில் அரிசி மண்ணெண்ணை பதுக்கிறார்களா? கேள்வி கேட்க துப்பு கிடையாது.. வெட்டு, குத்து என்று ஊரே அல்லோலகல்லோலப்படுகிறதா.. எதிர்த்துக் கேட்க தைரியம் கிடையாது... ஏனென்றால் இதையெல்லாம் கேட்டால், மூஞ்சி மொகறையை பெயர்த்து விடுவார்களே. ஆனால் உட்கார்ந்த வாக்கில் பிராமணர்களைப் பற்றியும், பிராமணியத்தைப் பற்றியும் எழுத வேண்டுமா? கண்டதற்கும் எழுதித் தள்ளுவார்கள். ஏனென்றால் எதிர்த்துக் கேட்க மாட்டார்கள், அப்படியே கேட்டாலும் நா கூசும் கெட்ட வார்த்தைகளில் ரெண்டை எடுத்து போட்டு விட்டால் கிட்டே நெருங்கவே மாட்டார்கள் என்றெல்லாம் நினைத்துக் கொண்டு திரிபவர்களிடம் என்ன சொல்லி என்ன பயன். அவர்களின் 'சிந்தனையின் எல்லை' அவ்வளவு தான். மேலே ஒருவர் சுட்டிக் காட்டியபடி மறைந்த நாஞ்சில் மனோகரனின் கவிதையை தான் உதாரணம் காட்ட வேண்டும். விட்டு தள்ளுங்கள்.
 



இதில் சிரிப்பு என்னவென்றால், அரசாங்க வேலைகளில் இட ஒதுக்கீடு என்று முறையை வெற்றிகரமாக செயல்படுத்தி அனைத்து தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கையை சுதந்திரத்திற்குப்பிறகு மிகவும் முன்னேற்றி விட்டு, இப்போது தனியார் துறையிலும் ஒதுக்கீடு என்ற கோரிக்கை எழ ஆரம்பித்திருக்கிறது. பார்த்துக் கொண்டே இருங்கள். அமெரிக்க சாப்டுவேர் கம்பெனிகளில் பிராமணர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது, எனவே அங்கேயும் இட ஒதுக்கீடு தேவை என்று கோரிக்கை எழுப்ப ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. (இந்தக் கருத்தை 'உண்மையாகவே' இட ஒதுக்கீடு முறையினால் பயன்படுபவர்களைக் கருத்தில் கொண்டு நான் எழுதவில்லை. ஓரிரண்டு வார்த்தைகளை சர்ட்டிபிகேட்டில் சேர்த்தோ, எடுத்தோ எழுதி அடுத்த கட்ட பிரிவினரின் சலுகைகளை அனுபவித்து வரும் கயவர்களை கருத்தில் கொண்டே!) சரி.. இது குறைத்து வேறொரு நாளில் பதிவு எழுதுகிறேன். இந்தப் பதிவுக்கு சம்பந்தமில்லாத கருத்து!!
 



Dear Mugamoodi

Well said. I agree with you 100%. Let them first surrender Prabaakaran and Pottu Amman to Indian authorities for killing Rajoiv Gandhi after that let them speak about thoppul kodi uravu etc etc. Unless those murderers are surrendered India should treat tigers as a national threat and crush them.

These terrorists not only killed Rajiv, they killed their own brethern too. Even when they live in other countries like Canda they extend their terrorist notions. They threatened Visu and now SV Shkar in Canada. These guys proudly speak about their rowdism so shamelessly in public forums. Thy again and again prove their terrorist mindset. They are cunning and never be entertained again in Indian soil. Our interests should be more in maintaining our soverignity than worrying about these backstabbers and killers. If the Indian govt is still loyal to Rajiv let them bring his killers to justice. Let Prabahakaran and Pottu Amman be hanged then let us bother about listening to their grievances.

Kudos for your bold views
 



அப்ப வன்னிக்குள்ள புல்லுப்புடுங்கினது ஞாபகமிருக்கோ.
 



// Kudos for your bold views // ஈழத்தமிழர் ப்ரச்னையை இந்தியா பார்க்கும் விதத்தை சொன்னால், ஏற்கனவே இரண்டு பக்கம் தலைவலியை வைத்துக்கொண்டு விழிபிதுங்கும் இந்தியா இலங்கையில் வேறு ஒரு ஆதிக்க சக்தி வந்து உட்கார்ந்து கொண்டு திருகுவலி வராமல் தடுப்பதற்காக செய்யும் உபாயங்களை சொன்னால், அண்டை நாட்டில் நடக்கும் உள்நாட்டு ப்ரச்னையை விட தன்னுடைய இறையாண்மை (இந்திய அரசாங்கத்தின் பார்வையில் பாருங்கள்... என் பார்வை அவசியமன்று) குறித்த அதன் கவலையை சொன்னால் எனக்கு கிடைப்பது தமிழ்துரோகி மற்றும் பார்ப்பண பட்டம்... என் நோக்கம் (நாந்தான் சரிவர சொல்லவில்லை என்று சொன்னேனே... அடுத்த பதிவு இலங்கை strategic importance பதிவு வரும் வரை காத்திருங்கள்) சரிவர புரிந்துகொள்ளப்படாததால் கிடைக்கும் வசைகளுக்கு மத்தியில் மாறுதலாக கிடைத்த தங்களின் வாழ்த்துக்கு நன்றி
 



//எந்த விஷயத்தை எடுத்தாலும் ஒரே கண்ணோட்டம் மட்டுமே கொண்ட இவர்கள் போன்றவர்களின் எண்ணம் ஆரம்பிக்கும் இடத்தை பற்றியும் சிந்திக்கும் முறையை பற்றியும் எனக்கு ஆச்சர்யம் உண்டு.//

எந்த விஷயத்தை எடுத்தாலும் ஒரே கண்ணோட்டத்தோடுதான் முகமூடி அவர்களே பார்க்க வேண்டும். உங்களைப்போல சமயத்துக்கு தகுந்தார்போல பச்சோந்தியாக மாறச் சொல்கிறீர்களா? எங்களின் எண்ணம் ஆரம்பிக்கும் இடம் சரியான கோணத்தில் இருந்துதான். நாங்கள்தான் பார்ப்பனர் என்று புகழ்பாடிக் கொண்டிருக்கிறோமா? நாட்டில் பார்ப்பனர் தவிர்த்த வேறொன்றுமே இல்லையா? நீங்கள் எங்கு எந்த பதிவை எடுத்தாலும் அதில் பார்ப்பன ஆதரவுதானே மேலோங்கி நிற்கிறது! நீங்கள் இருவரும் ஒருவரேதான் முகமூடி அவர்களே!


//பிராமணர்களைப் பற்றியும், பிராமணியத்தைப் பற்றியும் எழுத வேண்டுமா?//

நாங்களும் அதையேதான் கேட்கிறோம்! ஏன் பார்ப்பனர் என்று சொல்லித் திரிகிறீர்கள்? நாட்டில் வேறு பிரச்னைகளே இல்லையா? ஆற்றில் தண்ணீர் இல்லை. அலுவலகத்திலோ லஞ்சத் தொல்லை. ரேஷன் கடையில் அளவில் குறைவு. வாங்கி வந்த அரிசியில் ஒரே புழுத்தொல்லை. தண்ணீர் பைப்பைத் திறந்தால் வெறும் காற்றுதான் வருகிறது. இதையெல்லாம் கேட்டு எதிர் கேள்வி கேட்பதை விடுத்து பார்ப்பனரை யார் திட்டுகிறார்கள் என பார்க்க ஏன் நீங்கள் வர வேண்டும்? அப்படித்தான் யார் உங்கள் பார்ப்பன ஜாதியை திட்டுகிறார்கள் அல்லது எழுதுகிறார்கள்? நீங்களேதானே எழுதிக் கொள்கிறீர்கள்?

இலங்கைத் தமிழர்களை வெறுப்பவர்கள் யார்? நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள் மாயவரத்தான் அவர்களே!
 



Mahatma Gandhiji was killed by a Brahmin. Did we raise against the brahmins and kick them out of India?? or did we show any indiffernce towards Brahmins and cut off their links??

Indra Gandhi was killed by her Sikh Bodyguard. Eventhough the gundas killed about 2000 sikhs after that, did we kick all the sikhs out of India or did we start disliking all the sikhs??

So why are we treating the Srilankan Tamils like this??. Is it because of Rajiv's death?. If the indians can forgive/forget about a Brahmin & a Sikh why cant they show the same magnanimity against the Tamil?

The answer lies in the previous postings. The bureaucracy of India (mostly filled up by the brahmins) are scared that a independant Tamil Eelam will pave a way to a separte Tamil Nadu one day.
 



நன்றி முகமூடி!
இதைத்தான் எதிர்பார்த்தேன். எந்தக் கேள்வியுமின்றி அந்தப் பாராட்டை ஏற்றதோடு, நன்றியும் தெரிவித்துவிட்டீர். ஆக அந்தக் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறீர்.

பிரபாகரனும் பொட்டம்மானும் சரணடைவது இருக்கட்டும், ஈழத்தமிழருக்கு இந்தியா இழைத்த கொடுமைகளுக்கு என்ன முடிவு? கால அடிப்படையில் பார்த்தாலும் யார் முதலில் செய்ய வேண்டும்? குறைந்தபட்சம் ஒரு வருத்தம் கூட தெரிவிக்க இயலாத, விரும்பாத நீங்கள் (இந்தியா தானே நீங்கள்?) ஈழத்தமிழருக்குத் தரும் நீதி என்ன? அவற்றை முதலில் செய்துவிட்டு சரணடைவதைப் பற்றிப் பேசுங்கள். (நீதிமன்றம் விதித்த தீர்ப்பு அன்று இங்கே பிரச்சினை. சரணடையச்சொல்லி நீங்கள் கேட்கிறீர்கள் பாருங்கள்.)

ஒட்டுமொத்த ஈழத்தமிழரையும் புலியாகவே பார்த்துவிட்டீர்கள். பிறகென்ன ஈழத்தமிழர் மேல் கரிசனையென்ற நடிப்பு? கனடாவில் ஒரு நிகழ்ச்சியைப் பகிஸ்கரிப்பது பயங்கரவாதமாகத் தெரிகிறது உங்களுக்கு, கூடவே புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் புலிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் தெரிகிறார்கள். பிறகேன் ஈழத்தமிழர்கள் என்ற கரிசனை.

உங்களை யார் தமிழின விரோதியென்று சொல்லப்போகிறார்கள்? வேண்டுமானால் தேசியப்பற்றுள்ளவன் என்று சொல்வார்கள். இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் பற்றி யாருக்குத் தெரியாது? அதற்கும் ஈழத்தமிழர்களை அழிப்பதற்கும் நீங்கள் சொல்லும் சம்பந்தம் தானே பிரச்சினை. இருந்தாலும் எழுதுங்கள் உங்கள் கேந்திர முக்கியத்துவத்தை.

ஒன்றில் தெளிவாகவே சொல்லுங்கள், இந்தியாவின் இறையாண்மையென்பது ஈழத்தமிழர்களைக் கொல்வதிலும் அழிப்பதிலும்தான் தங்கியுள்ளதென்று. (இதில் இந்தியாவின் நிலையிலிருந்து பார்க்கச் சொல்கிறீர்கள். நீங்கள் தானே பதிவை எழுதியது. ஆனால் ஈழத்தமிழரின் நிலையிலிருந்து பாருங்கள் என்று உங்களை யாரும் கேட்கப்போவதில்லை.) இதற்குள் ஈழத்தமிழர்மேல் கரிசனை என்ற முகமூடி எதற்கு? (பெயர் நல்ல கச்சிதமாகவே தேர்ந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்)

நீங்கள் சொல்லத்தயங்கியவற்றை இப்போது ஆங்கிலப் பின்னூட்டமிட்ட அனாமதேயம் சொல்லிவிட்டார். முகமூடிகளைத் தாண்டியும் முகங்கள் தெரிகிறது.


இலங்கையின் கேந்திர முக்கியத்துவப் பதிவு வந்துதான் உங்கள் நோக்கம் தெரியவேண்டுமென்பதில்லை. இப்போதே தெரிந்து விட்டது. இப்போதே கேட்கிறேன். கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததால் ஈழத்தமிழரைக் கொல்ல வேண்டிவந்தாலும் பரவாயில்லை, இறையாண்மையே முக்கியம் என்பதுதானே உங்கள் தொனிப்பொருள்.

ராஜீவ் கொலை பற்றிச் சம்பந்தமில்லாத பதிவு இது என்று தொடங்கினீர்கள். எப்படி வந்திருக்கிறது பார்த்தீர்களா?
 



சரி விடுங்கப்பா இந்தியா இலங்கைக்கு இராணுவ உதவி வழங்கினால், அது பொறுக்காமல் அமெரிக்கா புலிகளுக்கு இராணுவ உதவியை வழங்கிட்டு போகும்.
அமெரிக்காவிடமா இந்தியாவிடமா ரொம்ப நல்ல ஆயுதங்கள் இருக்கு?
 



முகமூடியைப் பாராட்ட ஏன் அய்யா 'அனானிமசு' ஆக வருகிறீர்கள்?., இறையான்மையை கட்டி காக்கும் உங்களுக்கு எந்தவித இடஞ்சலும் வந்துவிடாது. தைரியமாக பேர் போட்டே எழுதுங்கள். முகமூடி., தொப்புள் கொடி உறவென்றெல்லாம் வேண்டாம்., எங்கோ உகாண்டாவில் பஞ்சம் என்றால் நெஞ்சம் துடிப்பீர்களே., அப்படி ஒரு துடிப்பு கூடவா 'இந்தியா இலங்கைக்கு இராணுவ உதவி' என்று படித்தபோது உங்களுக்கு எழவில்லை., எந்த தைரியத்தில்., அதை ஆதரித்துப் பதிவு போடுகிறீர்?
//நாந்தான் சரிவர சொல்லவில்லை என்று சொன்னேனே... //
ஒரு 'நுட்பமான' ('சென்சிட்டிவான')., பதிவை கவனக்குறைவாக போடாலாமா?., இப்படி அவசரமாக பதிவிடுங்கள் என்று யாரேனும் அடித்தார்களா?.
 



//இதற்குள் ஈழத்தமிழர்மேல் கரிசனை என்ற முகமூடி எதற்கு? (பெயர் நல்ல கச்சிதமாகவே தேர்ந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்)//


முகமூடியா? அது தெரியாதவர்களை நம்ப வைக்க வேண்டும் என்பதற்காக! மாயவரத்தான் அவர்கள்தான் முகமூடி. பார்ப்பனர் என்ற ஒர்ரே ஒரு பெருமை(!)யோடு எல்லா விஷயங்களையும் அணுகும் முறையைக் கண்டாலே அது விளங்கும்! இலங்கையில் பிறந்த தமிழர்கள் எல்லோருமே புலிகள் என்று அவர் பிதற்றுவதைக் கண்டாலே உண்மை விளங்கும்!
 



மீண்டும் மீண்டும் மாயவரத்தான் தான் முகமூடி என்று கூறிக் கொண்டே இருங்கள். அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். முகமூடி என்ற பெயரில் எழுதுவது நான் இல்லை என்று மேலேயே நான் கூறியிருக்கிறேன். முடிந்தால் நான் தான் முகமூடி என்ற பெயரில் எழுதுகிறேன் என்று நிருபிக்க முடியுமா குப்சாமி?! அது சரி.. நீங்களே யாரென்று பெயர் சொல்ல விரும்பாத தைரியசாலி! பரவாயில்லை.. முகமூடி தான் மாயவரத்தான், டோண்டு தான் மாயவரத்தான், இப்படி எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள்.
 



நாங்கள் அவ்வாறு சொல்லவில்லை. மாயவரத்தான் அவர்கள்தான் முகமூடி என்ற பெயரில் எழுதுவது. நீங்கள் டோண்டு, அருண், பாலா போன்றவர்களுக்கு ஆதரவாக எழுதுகிறீர்கள்.
 



தா‎ன்‎ தீர்மானமான எண்ணம் கொண்டவர் அல்ல மாற்றுக் கருத்துக்களை சிந்திக்கும் பக்குவம்
உடையவனே எ‎‎ன்று சொல்லியிருக்கும் முகமுடிக்கு நன்றி. அந்த நம்பிக்கையிலே தொடர்கிறே‎ன்

முதலில் விடுதலைபுலிகள் தீவிரவாத இயக்கம் என்பது ஏற்க முடியாது. போராட்டத்திற்கும் தீவிரவாதத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. தீவிரவாதம் அதிகாரத்திலிருப்பவர்கள் நேரிடையாக செய்வதால் வருபவை. செசன்யா தீவிரவாதத்தை போன்றதே விடுதலைப்புலிகளின் போராட்டமும் எ‎று சொல்கிறீர்கள். ஒரு இனம் ‏இழந்த த‎ன் உரிமையை கேட்பதை எல்லாம் தீவிரவாதம் எ‎ன்ற சொல்லை வைத்தே நசுக்கப்படுகிறது. உலகி‎ன் மிகப்பெரிய தீவிரவாதிகள் அமெரிக்காவும் பிரிட்டனுமே அன்றி உரிமைக்காக போராடும் இயக்கங்கள் அல்ல. யுதப் பரவலால் பொதுமக்களே பாதிக்கப்படுகிறார்கள் என்று தங்கள் கவலையை சொல்லியிருக்கிறீர்கள். உணர்கிறேன். இலங்கை இனப்பிரச்சனை தீராமலிருப்பதற்கு இந்தியாவின் பொறுப்பற்ற பாராமுகமும் காரணமே. னால் ஒன்றைத் தெளிவாக கட்டமைக்க முயற்சித்திருக்கிறீர்கள். புலிகளினால் இந்தியாவிற்கு எதிரானவர்கள் என்று. ஈஇந்தியாவிடம் யுதம் வாங்கவில்லை எ‎‎‎ன்றால் பாகிஸ்தானிடமோ, சீனாவிடமோ ‏இலங்கை அரசு வாங்கும். அது பொதுமக்களுக்கு எதிராகவே பய‎ன்படுத்தப்படும். அந்தப் பொது மக்கள் தமிழர்களே என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா? மு‎ன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் படுகொலையை மட்டும் வைத்து ஒரு இனத்தின் விடுதலைக்கு எதிராக செயல்படுவது மன்னிக்க முடியாது. இலங்கை அரசு இதுவரை இந்தியாவிற்கு ஒரு நம்பகமான தோழனாக இருந்ததே கிடையாது. சீனாவுடனான யுத்தம் உட்பட. விடுதலைப் புலிகளி‎ தலைவரே சொல்லியிருக்கிறார் இந்தியா எங்கள் தந்தையர் நாடென்று. இன்னும் நிறைய சொல்லலாம்.
அதே நேரத்தில் இந்திய பாகிஸ்தான் அமைதி முயற்ச்சிகளுக்கு மக்களிடம் வரவேற்பில்லை என்னும் போது தங்கள் முகமுடி கிழிந்துவிட்டது. குளிரூட்டிய அறையில் அமர்ந்து கொண்டு எ‎ன்ன வேண்டுமானாலும் சொல்லலாம். மக்களிடம் வெறுப்பு இல்லை. அந்த உணர்வைத் தூண்டி ஓட்டைப் பொறுக்க வேண்டிய நிர்பந்தம் ஜனநாயக காவலர்களுக்கு.

மேலும் வைகோ வேறு எ‎ன்ன செய்ய வேண்டும் நினைக்கிறீர்கள். சொன்னால் அவர்க்கு தெரியப்படுத்தலாம். வைகோ சிறையிலிருந்த போது மக்கள் அது குறித்து எதுவும் கவலை கொள்ளவில்லை என்று கருத்து கணிப்புகள் தெரிவித்ததாக சொல்லியிருக்கிறீர்கள். உண்மைதான் ஊடகங்கள் தங்கள் பத்தினித்த‎ன்மையை தூக்கி எறிந்து விட்டு பணம் சம்பாதிக்க விபச்சாரம் செய்பவர்கள்தானே. இந்த நேரத்தில் ஒ‎ன்றை சொல்லி கொள்ள முடியும் மக்கள் விழிப்புணர்வடையாமல் ‏இருக்கவே ஊடகங்களும் அரசியல்வாதிகளும்
இரட்டை குழல் துப்பாக்கிகளாக இணைந்தே செயல்பட்டு வருகிறார்கள். உங்கள் தோட்டாக்களுக்கு வாழ்த்துக்கள்.
 



இங்கு நடக்கும் விவாதத்தைப் பார்த்தேன். (விவாதம் என்று சொல்ல முடியுமா தெரியவில்லை.) இது சம்பந்தமாக (குறிப்பாக ஆயுத உதவிகள் சம்பந்தமாக) என் கருத்தொன்றை என் பக்கத்தில் இடுகிறேன். நன்றி.
 



இந்தியாவின் அணுகுமுறை சரியில்லை இலங்கை விடயத்தில். அதோடுகூட இந்தியாவில் இலங்கைத்தமிழர்களை வெறுப்பவர்கள் மேல்ஜாதியினர் மட்டுமே.
 



நான் எழுதுவதாகச் சொன்ன பதிவு
எழுதப்பட்டுவிட்டது. இங்கே
வாசிக்கவும்.
 



திரு. முகமூடி
முதலில் தமிழ்மணத்தில் நான் மிகவும் ரசிக்கும் ஒரு வலைப்பதிவு உங்களுடையது.
---

இந்த விவாதத்தில் (?) என் 2 அனா

இந்தியாவிற்கும் புலிகளுக்கும் carrot and stick மனப்பான்மையே இருந்து வந்துள்ளது. அது இப்போது stick phase இல் இருப்பதாய் நினைக்கிறேன்.

ஒரு விஷயம், ஒரு ஜனநாயக நாட்டில் எந்த வகை கருத்தைக் கொண்டும் தீவிரவாதத்தில் ஈடுபட்டால் அதற்கு அந்த தீவிரவாதிகளையும் விட அதிகமான பயங்கரத்தை கட்டவிழ்த்து விடுவதே வழக்கமாகி விட்டது. இதில் இந்த guerilla யுத்தத்தை நடத்துவோரும் சரி, அரசு இயந்திரத்தை பின்னாலிருந்து இயக்குபவர்களும் சரி குற்றவாளிகள். ஆனால் ஒரு விஷயம், இன்றைய தேதியில் ஒரு அமைப்பிற்கு தீவிரவாதம் பட்டம் கிடைப்பது அதன் goal-க்கு எதிர்மனை விளைவுகளைத் தான் உண்டாக்கும்.

ஈழத்தமிழர் என்ன கருதுகின்றனர் என்று தெரியவில்லை. இந்தியனான எனக்கு இது இலங்கையில் நடக்கும் உள்நாட்டுப் பிரச்சனை என்றுதான் தோன்றுகிறது. இதில் பஞ்சாயத்து செய்வது கத்திமேல் நடப்பது போன்றது. இந்தியா IPKF அனுப்பியது எவ்வளவு தவறோ அதே போல் புலிகளுக்கு பயிற்சி வழங்கியதும் தவறு. ஒரு தலைப்பட்சமாக இந்தியா இலங்கையின் இறையாண்மையில் குறுக்கிட முடியாது. பங்களாதேஷில் செய்தீர்களே என்றால் அப்போதைக்கும் இப்போதைக்கும் இருக்கும் உலகம் மிகவும் மாறுபட்டது.

இலங்கை அரசும் பின்னர் IPKF செய்தவற்றை தவறு என்று சொல்லும் அதேநேரத்தில் LTTE-இன் செயல்களை விடுதலைப்
போராட்டம் என்று கூறி whitewash செய்யக்கூடாது. இதில் இந்தியா போன்ற பிராந்திய வல்லரசுகள் பொறுப்பில்லாமல் மூக்கை ஒரு பக்கமாக நுழைப்பது வருத்தம் தருகிறது. அமெரிக்காவைத் திட்டித் தீர்க்கும் இந்தியர்கள் பலர், நம் நாடு இதே காரியத்தை சமீபத்தில் நேபாள, திபெத்த விவகாரங்களில் செய்து வருவது பற்றி கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. இந்த செல்வாக்கை, நார்வே போன்ற எங்கோ இருக்கும் நாடுகள் காட்டும் அக்கறையை ஏன் இந்தியா காட்டவில்லை?

நான் எழுதுவது ஈழத்தில் இருக்கும் தமிழர்களுக்கு ஆதரவாய் மட்டுமே. புலிகளை நான் தீவிரவாத அமைப்பாகவே கருதுகிறேன். ஆனால் சந்தர்ப்ப சூழல் காரணமாய், அராபத்தின் அமைப்பைப் போன்று, மிக பரந்த அரசியலமைப்பையும் கொண்டிருப்பதால் அவர்களோடு தான் பேசியாக வேண்டும். வேறு ஒரு moderate leader இனி பிறந்து வந்து ஈழத்தமிழருக்காக அறப்போராட்டம் நடத்தும்வரை காத்திருந்தால் அதுவரை அவர்கள் இனமே இலங்கையில் இருக்குமா என்பது சந்தேகத்துக்குரியதாகிவிடும். எனவே அவர்களை moderate-களாய் pressure கொடுத்து மாற்றி, அடக்குமுறை செய்யும் இலங்கை இராணுவத்தை கட்டுப்படுத்தி பேச்சு வார்த்தைகளுக்கு உந்துதல்சக்தியாய் (நடுவராய் அல்ல, ஏனென்றால் இது இன்னமும் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனை) இருப்பதற்கு வழிகள் தேடுவதை விட்டுவிட்டு தேவையில்லாமல் கல்லெறிகிறது இந்தியா என்பது என் கருத்து.
 



For my open challenge to surrender Prabahakaran, few tiger loyalists responded so absurdly.

First the killer of Gandhi was legally tried and hanged. So is the case with Indra's killers too. But what happened to Rajiv murder's plotters? They are still at large like cowards. Let the srilankan Tamils first hand such cowardly killers to Indian Govt before asking for any help. Till then India should show no mercy at those terrorists, their loyalists and theri cause however genuine it may be. India should never poked its nose into Ealam affairs at all. They should have respected Srilankan soverignity and kept quiet. These thankless elements will never understand that.


Another false propaganda spread here here by these tiger thugs is 'Only bhramins oppose tigers'. No it is another goebellian lie. Bhramins are not even 3% of TN population. Out of them not even 10% will cast their votes. If that is true why cant Vaiko the famouse kallathoni kalavaani, contest in the election just with a one point agenda 'Please vote our party if you support tigers' Why didn't he dare to do that so far? Let him and his gang go to the people and see how many votes he gets. If all non-bhramins are supporting tigers, why Vaiko could not even capture his deposit? Tamilians in Tamil Nadu are peaceloving. They hate the gun culture spread by tigers inside their state, irresptective of their castes. They hate their violent politics, They hate the terroists by all means, Elections held after Rajiv's murder and Coimbatore blasts are standind examples. So dont try fool yourself by polotting such stories. All in TN except few anti national anti social elements like VaiKo hate Tigers and their violent path. Unless Lankan Tamils disown such a dictator you will never win Indian Tamils sympathy.
Rowdism, Roguesim, killings will never earn any good will among the Indian Tamils. Wherever you go even as refugees, you indulge in blackmail, violent threats, like in the case of Visu and Se Ve Shekar in Canada. Such an attitude bring more ire and anger on the Lankan Tamils instead of bringing in sympathy and support. Stop threatening others. Learn to respect opposite views democratically.

Revisit your violent path and learn to respect human beings. Try to live amicably with your Sinhalese brethern. Now it proves beyond doubt that who would have started all these problems in the beginning. You are culprit. Stop violence. Live like a human being. Our friendship and sympathy will follow. There is no hope for Lankan Tamils as long as Tigers are controlling them. Get rid of Tigers and see progress and proeperity will knock the doors of Srilankan Tamils.

Congratulations to Mugamoodi for starting this topic so bravely.
 



முகமூடி சொன்னதாவது:
||இந்த பதிவில் நான் என்ன சொல்கிறேன் என்று சரிவர புரிந்து கொள்ளாமல் பிராமணீயத்தை புகுத்தி பின்னூட்டமிட்டு பதிவின் போக்கை திசை திருப்ப முயற்சித்த அனானிமசுக்கு பதில் கூறுவதன் மூலம் அவரின் நோக்கத்தை நிறைவேற்ற நானே உதவியாக இருக்க கூடாது என்றுதான் பதில் கூற விரும்பாமல் சும்மா இருந்தேன்.||

AnionMass எ. அனோனிமாசு சொல்வதாவது:
|அபாண்டமாகப் பேசுகின்றீர்களே முகமூடி. பிராமணியம் என்று அனோனிமாசு எழுதியிருந்தாள் என்றால் காட்டுங்களேன் பார்க்கலாம். தாங்களே தவளைபோலக் குரலெழுப்பி பிராய்ட்டின் வழுக்கலிலே வழுக்கிவிட்டீர்கள் என்றுதான் மேலே நீங்கள் எழூதியதை வாசிக்கும் பாம்புகள் சொல்லப்போகிறன|


|மேலே ஆங்கிலத்திலே எழுதியிருக்கும் AnnoyingMouse வானம் மட்டுமே பார்த்து நடக்கும் எலியென்றே தெரிகிறது. தன் ஞானம் பற்றி என்ன கர்வம்! என்ன அகம்பாவம்! என்ன இலவச ஆலோசனை! அடுத்தானின் அறிவு குறித்து என்ன அலட்சியம்! அடடா அடடா!| பாரதி கண்ட நிமிர்ந்த நெஞ்சு நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் எவர்க்கும் அடங்காச் செருக்கும்! இப்படிப்பட்ட சுண்டெலிகளுக்காகவே பிரபாகரன்புலிகள் உலாவவேண்டும்!|
 



போன பதிவின் பின்னூட்டத்தில் சொன்னதுபோல இலங்கையின் முக்கியத்துவத்தை ஒரு பதிவாக இட்டிருக்கிறேன்... போன பதிவில் விட்டுப்போன விசயத்தை ஓரளவு இது சொல்லும் என்று நம்புகிறேன்..இங்கே பதிவிட்ட அனைவருக்கும் நன்றி... வேலைப்பளுவால் என் தரப்பு விளக்கத்தை சொல்ல இயலாத நிலையில் உள்ளேன்... முடிந்த வரை சொல்ல முயற்சிக்கிறேன்... உங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
 



நீங்கள் யாரென்பதை நான் கண்டுபிடித்து விட்டேன்
 



வன்னியன் உங்கள் பதிவில் எமக்கு துவேசம் என்று சொல்கிறீர்கள் // வை.கோ. சிறையிலடைக்கப்பட்டது சரியே என நிறுவும் அப்பதிவர் மேலும் சொல்லும் விசயங்கள் தெளிவாகவே சொல்லிவிடுகிறது, அவரின் துவேசத்தை //

வசந்தன் கேட்டது இது :: // வை.கோ. என்ன செய்தார் என்று கேட்டீர்களே? குரல் கொடுப்பதைத்தவிர வேறென்ன செய்ய முடியும் அவரால்? சரி குரல்தான் கொடுக்க விடுகிறீர்களா? அவர்கள் சிறையில் செலவிட்ட காலங்களுக்கு யார் பொறுப்பு? என்னையா ஜனநாயகம் பேசுகிறீர்கள்? //

என் பதில் இது :: //தீவிரவாத இயக்கம் என்று அறிவிக்கப்பட்ட இயக்கத்தை பற்றி பேசினால் (அதில் அரசியல் இருந்தாலும்) சிறையில் வாடுவதுதான் ஜனநாயகம். //

இதில் துவேஷம் என்னவென்று மேற்கொண்டு படித்துவிட்டு சொல்லுங்கள்:: தமிழ்நாட்டிக் மதுவிலக்கு என்று ஒரு கூத்து நடக்கும். திடீரென மதுவிலக்கு அமலுக்கு வரும். அப்பொழுது யாரும் நாட்டு சாராயம் குடிக்க கூடாது... ஆனால் அண்டை மாநிலம் பாண்டிச்சேரியில் மது அருந்தலாம்... பாண்டிக்கு அருகாமையில் வாழும் மக்கள் நடந்து சென்று மது அருந்திவிட்டு திருமபி வருவார்கள். மது வயிற்றுக்கு வெளியே இருந்தால் அது குற்றம். அப்புறம் மதுவிலக்கு நீக்கப்படும். மக்கள் தாராளமாக மது அருந்தலாம். ஆக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் 'எல்லா' மக்களுக்கும் விருப்பம் இருக்கிறதோ இல்லையோ சட்டம் என்று ஒன்றை இயற்றினால் அதை பின்பற்றி நடக்க வேண்டியது மக்களின் கடமை. என் கொள்கைக்கு முரணாக இருக்கிறதென்று அதை மீறினால் அது குற்றம், இழைத்தவர் தண்டிக்கப்படுவர். இந்த நிலைமையில் தடை செய்யப்பட்ட எந்த தீவிரவாத இயக்கத்தையும் எந்த முறையில் ஆதரித்தாலும் பொடா பாயும் என்று சட்டம் இயற்றியாயிற்று. சாமான்யன் மதிக்கும் சட்டத்தை மக்கள் பிரதிநிதி வைகோ மதிக்க வேண்டியது இல்லையா? இத்தனைக்கும் 'இந்திய அரசியல் சாசனப்படி...' என்று பல முறை சத்தியம் செய்தவர் அவர்... முன்னுதாரணமாக திகழ வேண்டிய அவர் சட்டத்தை மீறும் போது சிறையிலடைக்கப்படுவதை அநீதி என்று சொல்ல வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்களா?? நாளை வேறு யாராவது அல்குவைதாவுக்கு ஆதரவாய் பேசியதற்காக கைது செய்யப்பட்டால் வைகோவுக்கு ஒரு நீதி எனக்கு ஒரு நீதியா என்று கேட்டால் என்ன சொல்வீர்கள் (அல்குவைதாவை புலிகளோடு நான் ஒப்பிடுகிறேன் என்று சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்)
 



ராஜ்குமார், நான் யார் என்பது பல பேருக்கு தெரியும்.. (அதில் முக்காவாசி பேரு என் பதிவ படிக்கறவங்க இல்லன்றது வேற விசயம்) நான் முகமூடி பேர்ல எழுதறது நான் யார்ங்கறத விட என் கருத்து என்னங்கறது வெளில தெரிஞ்சா போதும்னு நான் நினைக்கறதால... இருந்தாலும் உங்களுக்கு தெரிஞ்சத எனக்கு தனி மடலில் தெரிய படுத்துங்க. உங்க துப்பறியும் திறமைய பாப்போம்
 



AnionMass, AnnoyingMouse என்றெல்லாம் இருக்கும் பின்னூட்டம் எனக்கு விளங்கவில்லை. நமக்கு புரியர மாதிரி தமிழ்ல எழுதுங்கப்பு
 



தங்கள் பாராட்டுக்கு நன்றி இராமநாதன்... உங்கள் கருத்து சரிதான்... ஈழத்தமிழர் ப்ரச்னையை பஞ்சாயத்து செய்வது கத்தி மேல் நடப்பது போன்ற ஒரு காரியம்தான். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் ப்ரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியா விரும்பினாலும் நார்வே போன்று active நிலைப்பாட்டில் இல்லாமல் இந்தியா passive நிலைப்பாட்டில் இருக்கிறது என்பது என் கருத்து. இந்தியாவின் இலங்கை உதவியைத்தான் கல்லெறிவது என்ற அர்த்தத்தில் குறிப்பிட்டிருந்தீர்களாயின் அதற்கு என்ன காரணமாக இருக்க முடியும் என்ற என் எண்ணம்தான் இந்த பதிவும் அடுத்த பதிவும்.
 



// Bhramins are not even 3% of TN population. Out of them not even 10% will cast their votes. If that is true why cant Vaiko the famouse kallathoni kalavaani, contest in the election just with a one point agenda 'Please vote our party if you support tigers' Why didn't he dare to do that so far? Let him and his gang go to the people and see how many votes he gets. // நல்ல கேள்விதான். யாராவது அறிவுபூர்வமாக பதில் சொல்கிறார்களா அல்லது மிக சுலப முறையான 'முத்திரை குத்தும் வேலையை' உங்களிடமும் செய்துவிட்டு வாளாவிருக்கப்போகிறார்களா என்று பார்ப்போம்
 



முகமூடி!
தனிப்பட்ட உங்களுக்கான விளக்கத்தை 'எம்மை' என்ற பதத்துக்கூடாகப் பன்மையாக்குகிறீர். யாரையோ துணைக்கழைக்கிறீர் அல்லது என் குற்றச்சாட்டை முழு இந்தியத்தமிழருக்கும் பொதுமைப்படுத்த நினைக்கிறீர்.

அடுத்து, வை.கோ. பிரச்சினை. உங்கள் விளக்கம் சுவாரசியமாக இருக்கிறது. அப்படியாயின் ஏன் அவர் பேசியது குற்றமன்று, அப்படி ஆதரவு தெரிவித்துப் பேசுவதும் குற்றமன்று என்று முடிபு கொடுக்கப்பட வேண்டும்? உங்கள் பதிலில் வை.கோ.வுக்கு எதிரான கருத்தையே கண்டேன்.

மேலும், நீங்கள் போட்ட அடுத்த பதிவிலும் ஒன்றும் புதிதாய்ச் சொல்லவில்லை. சுத்திவளைத்து அதே புள்ளியில்தான் நிற்கிறீர்கள். உங்களால் புதிதாகச் சொல்லவும் முடியாது. கேள்வி இதுதான். இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்துக்காக அந்நாட்டுக்கு ஆயுத உதவிகள் செய்வது சரியென்றால், ஈழத்தமிழரைக் கொல்வதற்குத் துணைபோகும் பழியை இந்தியா ஏற்கத்தயாரா?

சுத்திச் சுத்தி அயுத உதவி செய்வது சரியே என்பதைச் சொல்லுகிறீர்கள். ஆகவே தன் இறையாண்மைக்கும் சொந்த நலனுக்காகவும் ஈழத்தமிழரை அழித்தொழிக்க இந்தியா உதவி செய்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள். அதை ஒத்துக்கொள்ளும் தைரியம் இல்லாமல் பசப்புவதற்காக வேறு கதைகளை விடுகிறீர்கள். ஈழத்தமிழரைப்பற்றி எந்தக் கவலையுமில்லை, எங்களுக்கு எங்கள் நலன் மட்டுமே முக்கியம், அதற்காக எதுவேண்டுமானாலும் இந்தியா செய்ய வேண்டும், என்ற தொனியைச் சொல்லும் நீங்கள், ஈழத்தமிழர் மேல் அக்கறையுள்ளதாகக் காட்ட முற்படும் வேடத்தனத்தையே அடையாளப்படுத்த நான் எழுதினேன்.

இந்தியா 'விற்காவிட்டாலும்' அவர்கள் வேறிடத்தில் ஆயுதம் வாங்கத்தான் போகிறார்கள் என்பது தெரியும். இந்தியா செய்வது விற்பனை தாண்டிய உதவி. இவ்வளவு காலம் செய்ததும் விற்பனை தாண்டிய உதவிகள்தான். இப்போது செய்யவிளைவதும் அதுதான். ஈழத்தமிழர் என்ன அங்கீகரிக்கப்படாத உயிர்களா? அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கம் என்பதற்காக எதையும் செய்வீர்களா?
நான் சொல்வது இதுதான். இப்பதிவுக்காக உங்கள் மேல் கோபமில்லை. ஆனால் ஈழத்தமிழரில் ஏதோ கரிசனை உள்ளவர்கள் போல் நடிக்கிறீர்கள் பாருங்கள், அதை தயவு செய்து நிறுத்துங்கள். இனியும் உங்கள் நீலிக்கண்ணீரை காட்டி மற்றவர்களை ஏமாற்றாதீர்கள்.

இவ்வளவு கூச்சமில்லாமல் சந்தையில் விலைகூறி விற்பது போல எங்கள் உயிர்களையும் உணர்வுகளையும் பொருட்பண்டமாக விலைகூவுகிறீர்கள். இலங்கையின் அமைவிட முக்கியத்துவம் என்று புள்ளிவிவரக் கணக்குக்கூட காட்டுகிறீர்கள். தேர்ந்த வியாபாரியின் லாவகத்தோடு உங்கள் பேரங்ளை அரங்கேற்றுகிறீர்கள்.

இப்போதும் சொல்கிறேன். கொடுக்கும் இராணுவ, ஆயுத உதவிகள் ஈழத்தமிழரை அழிக்கப்பயன்படாது என்று எங்கும் நீங்கள் நிறுவவில்லை. நிறுவவும் முடியாது. இந்நிலையில் ஆயுத உதவிகள் செய்ய வேண்டுமென்று நீங்கள் கூறுவது எந்த விதத்தில் ஈழத்தமிழருக்கு எதிரான கருத்தாக அமையாது என்பதை நீங்கள் தான் தெளிவுபடுத்த வேண்டும். நான் கேட்பதன் அர்த்தம் தெளிவாகவே இருக்கிறது. முடிந்தால் பதில் சொல்லுங்கள். அல்லாத பட்சத்தில் நான் தெளிவாகவே சொல்கிறேன், ஈழத்தமிழரின் அழிவைப்பற்றி எந்தக் கவலையுமில்லாத, அவர்களின் அழிவுக்குத் துணைபோகும் ஒரு பதிவும் கருத்தும் உங்களிடமிருந்து வெளிப்பட்டுள்ளது.
 



Dear Mugamoodi

As still I don’t have a separate blog and didn’t know to create one in Tamil I am writing in English(I love to write in tamil as through that only I think I can express my exact feelings-but i have done some cutpaste inbetween).

My first question is how many more years you people will claim that LTTE is terrorist organisation?

இன்னும் எத்தனை நாளைக்குதான் புலிகள் தீவிரவாத இயக்கமுன்னு ஜல்லி அடிப்பிங்க?

Even INA founded by Subhash chandrabose is listed as terrorist outfit in British records.

In my view if the LTTE is not like how it was, Srilankan Army would have wiped them off long time ago(ஒருவேளை அதைதான் உஙகளை மாதிரி ஆளுக விரும்புகிறீகளோ?
). To survive, that too fighting for principle, one has to employ the tactics like.

First let us accept the ground reality that LTTE is the sole representation of Eelam Tamils.

Everyone is proud to write that JEWs were tortured and killed by Hitler but how many of you will accept the fact that the sufferings Eelam Tamils had was none less than that, But still some of our media and people view those only with blind eye.

We should also not forget that the same Indian bureaucrats were helping LTTE in the beginning and also conducting training camps in tamilnadu even though LTTE was considered as terrorist organisation by almost every country at that time. So the steps taken to deliver arms to Lanka is nothing of principle but with some other hidden motives.

And now the second question comes?

Just think of the people who are opposing LTTE(Elam Tamils) in India?

Cho Ramasamy
Dinamalar
Mugamoodi
Mayavarathan
Raghavans

Here also we have to accept the fact that maximum no of those are Brahmins.
It is not the fault of their caste but are due to the way they were brought up in biased media.

If India would have helped srilanka by offering its assistance to solve the ethnic crisis an interim solution would have been arrived by this time but some faraway country like Norway is willing to help them than the famous, secular and democratic India. It is only adding fuel to the crisis by supplying arms during ceasefire time.


LTTE doesn’t like to fight for life time and they would also have dream of leading a peaceful life.

If you are not able to assist of this then atleast keep silent but don’t make an attempt to spoil their dreams.

And I have seen some comments above criticising Nedumaran. Just see the way of simple life he is leading and you should be ashamed of the worst comments. He was the one instrumental in saving lakhs of Tamils in Karanataka during Rajkumar Kidnapping episode

Last question?

Even a normal man(if not tamilian) will be having some sympathy towards Elam Tamils if they know about their sufferings but I cant understand why these people claiming to be Human Rights saviours are continuously viewing them with hatred?

Time to review yourself humans.

அன்புடன்
வெற்றி திருமலை

PS:- I still have many more to write but waiting for help from Bloggers to create a tamil blog for myself.

So bloggers be ready as I going to arrive in the blogging community with a bang.
 



//// Bhramins are not even 3% of TN population. Out of them not even 10% will cast their votes. If that is true why cant Vaiko the famouse kallathoni kalavaani, contest in the election just with a one point agenda 'Please vote our party if you support tigers' Why didn't he dare to do that so far? Let him and his gang go to the people and see how many votes he gets. // நல்ல கேள்விதான். யாராவது அறிவுபூர்வமாக பதில் சொல்கிறார்களா அல்லது மிக சுலப முறையான 'முத்திரை குத்தும் வேலையை' உங்களிடமும் செய்துவிட்டு வாளாவிருக்கப்போகிறார்களா என்று பார்ப்போம்//


முகமூடி அண்ணாத்தே,

100% மிகச்சரியான அறிவுபூர்வமான பதில் இதோ : "தமிழக அரசியல் ஞானம் = சூனியம்"

--பாண்டி.
 



//Just think of the people who are opposing LTTE(Elam Tamils) in India?

Cho Ramasamy
Dinamalar
Mugamoodi
Mayavarathan
Raghavans //

I strongly object the nameless idiot to bringing my name in this list as an opposer of LTTE. I've already expressed my stand on LTTE in this blog's comment itself. Unless otherwise I express my support/oppose directly, no one can point-out me with his/her own imagination. Withdraw your comments on me idiotic anonymous - nameless idiot.
 



//நாளை ஒரு வேளை தனித்தமிழ்நாடு கேட்டு போராடினாலோ அல்லது ஒரு வேளை தனித்தமிழ்நாடு கிடைத்துவிட்டாலோ தம் பிராமண இனத்தவரின் கதி என்ன ஆகுமோ என்ற பயத்தினால்//

இதை விட உலக மகா ஜோக் எதுவுமே இருக்க முடியாது. தமிழ் ஈழம் நிச்சயமாக வெகு விரைவில் மலரும். அதில் சந்தேகமேயில்லை. ஆனால் இந்த தனித் தமிழ் நாடு என்பதை இப்போது மட்டுமல்ல இன்னும் பல நூறாண்டுகள் போனாலும் கனவிலும் கிடைக்காது. இதற்காக பிராமணர்கள் பயப்படுகிறார்கள் என்பது உலக மகா ஜோக். மண்டையில் கொஞ்சமாவது மசாலா வைத்துக் கொண்டு எழுத வாருங்கள். எழுத்தில் மசாலா கலக்க வேண்டாம்.
 



***தொப்புள்கொடி சொந்தத்தை வேரறுக்க ஆயுதம் தருவது இந்தியாவின் இறையாமையை காக்க என்று பதிவு போடுபவரும்**தொப்புள்கொடி சொந்தமா? நீங்கள் தான் சொல்கிறீர்கள். அவர்களோ மலையகத்தமிழர்கள் தான் தமிழகத் தமிழர்களோடு தொப்புள் கொடி சொந்தக்காரர்கள் என்று தெளிவாக இருக்கீறார்கள்.
 



குப்ஸாமி,
//நாங்கள் அவ்வாறு சொல்லவில்லை. மாயவரத்தான் அவர்கள்தான் முகமூடி என்ற பெயரில் எழுதுவது. நீங்கள் டடீண்டு, அருண், பாலா போன்றவர்களுக்கு ஆதரவாக எழுதுகிறீர்கள்.
//

என் பெயரை அனாவசியமாக இழுத்து எனக்கு 'சாதி முத்திரை' குத்தாதீர்கள். அது, இங்கு நடக்கும் விவாதத்திற்கு,
சம்மந்தமில்லாதது, தேவையில்லாதது. மேலும், சாதி குறித்து பெருமைப்படவோ, சிறுமைப்படவோ ஏதுமில்லை என்பது என் தாழ்மையான கருத்து. மேலும், நான் சாதியை முன்னிலைப்படுத்தி இதுவரை எங்கேயும் எதுவும் எழுதியதில்லை.

நீங்கள் வேண்டுமானால் உங்கள் "கேடு கெட்ட" சாதியை (அதோடு, முடிந்தால் உங்கள் பெயரையும்!) பிரகடனப்படுத்தி
பெருமை கொள்ளுங்கள். மடமையையும் அற்பத்தனத்தையும் வெளிக்காட்டிக் கொள்வதில் ஏன் இவ்வளவு ஆனந்தம்
உங்களுக்கு ?
 



தமிழன் மேல அனுதாபம் இருக்கட்டும். தமிழன் எங்காவது போய் மூடிகிட்டு இருக்கானா?

இலங்கைல பிரச்சனை, பெங்களுர்ல பிரச்சனை,மும்பாய்ல பிரச்சனை, லண்டன்ல ரவுடித்தனம்.... மலையாத்தானும் உலகமெல்லாம் இருக்கான்..ஏதாவது பிரச்சனை. உண்டா? எப்பதான் நாம திருந்தப்போறமோ?
 



This is a good argument. Can see valid points on both sides. Wish this should continue and end in a healthy way.
Murali.
 



சரி, உங்க கருத்து ??