<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/12213354?origin\x3dhttp://mugamoodi.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

லூஸ் மோகன் -கோயம்பேடு பயணம் (சூன் 27,28)


அண்ணன் லூஸ் மோகனிடம் அவர் காய்கறி வாங்குவது சம்பந்தமாக பேசுவதற்கு கடந்த 6 நாட்களாக தொடர்புக் கொள்ள முயற்சித்து தற்பொழுது பேசும் வாய்ப்பு ஏற்பட்டது. திங்கள் செவ்வாய் கோயம்பேட்டில் உள்ளார்.

கோயம்பேடு நண்பர்கள் பேசி, பழகி உங்கள் மெட்ராஸ் பாஷையை வளர்த்துக்கொள்ளலாம்

வருகிற சூலை மாதம் முழுவதும் அவர் வீட்டில்தான் இருக்கிறார் என்பது கூடுதல் செய்தி

நன்றி
முகமூடி

பின்னூட்டம் விடுபவர்களின் copy-paste வசதிக்காக சில டெம்ப்ளேட்டுகள் ::


1. இத்தகவலுக்கு நன்றி முகமூடி

2. நீங்கள் லூஸ் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவரா

3. நன்றி முகமூடி

4. கோயம்பேட்டில் எந்த பஸ்ஸில் வருகிறார், எந்த கடையில் கறி வாங்குவார் என்று விரிவான அறிக்கை அளித்தால் சந்திக்க முயற்சிப்போமே?

5. முகமூடி இப்படி முடியோடு சொன்னா எப்பிடி... லூஸ் மோகனை சந்திக்க ரொம்ப இஸ்ட்ரெய்ன் எடுத்துக்கிறேன். எப்பிடி மீட் பண்ரதுன்னு ஒரு தபா சொல்லுப்பா


கேள்வி 2க்கு பதில்:: சினிமா, நாடகம் எல்லாம் செந்தமிழும், விளங்காத தமிழும் எழுதி பேசி தனக்கு தானே ரசித்து வந்த மேட்டுக்குடி மேலாதிக்க மக்களை நாங்கள் அண்ணாந்து மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலையை மாற்றி என்னை மாதிரி தற்குறிகளும் புரிந்து கொள்ளும் வகையில் நாங்கள் பேசும் அதே மெட்ராஸ் பாஷையில் பேசும் அண்ணன் லூஸ் மோகனுக்கு நான் பெரும் ரசிகன்...
அவருடைய எளிய பேச்சில் அந்த அப்பிராணி மனசில் என் மனதை பறிகொடுத்தவன்...
மெட்ராஸ் பாஷையை தீண்டத்தகாத பாஷையாக கருதும் மெட்ராஸில் வாழாத மேல் சாதி மக்களுக்கு சம்மட்டி அடி கொடுத்த அவரின் மெட்ராஸ் தமிழுக்கு பெரும் ஆதரவாளன்...


பின் குறிப்பு: இந்த பதிவை எழுத உதவியவை

1. மணிக்கூண்டு தொடங்கி வேறு பல பேர் வரை ஒத்ததாக எழுதப்பட்ட சில பயணக்குறிப்புகள். அவற்றிற்கு என் நன்றிகள்


š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


கலக்கல் முகமூடி!!!
மதுரை தாஸ்....


பி.கு... இதுவும் ஏதோ பாதிப்புல...
 



இதான் லேட்டஸ்ட் பேஷன் லாடு... இந்த பதிவ பத்தி நீங்க எழுதணும் அப்புறம் அதுக்கு நான் மறு பதிவு போடணும்... சோக்காகீதுல்ல...
 



This comment has been removed by a blog administrator.
 



யோவ் அனானி:: எப்பப்பாரு தீவிர சிந்தனையோடவே அலைவீரா... திருமாவளவனை லூஸ் மோகன்னு சொல்லலைய்யா... நெசமாவே லூஸ் மோகனத்தான் சொன்னேன்... அத கூட வெளங்கிக்காம...

அப்புறம் நீர் குறிப்பிட்ட பாலாஜி-பாரி, மனிதன், தங்கமணி, விஜயகுமார், ஈழநாதன் இவங்கள நான் நக்கல் பண்ணதா நினைக்கல... அவங்க அப்படி நினைச்சாங்கன்னா, அவங்ககிட்ட என் விளக்கத்த நான் கொடுத்துக்கறேன்... நீர் ஒன்னும் மத்த நாட்டு மக்கள் விடுதலைக்கு கவலப்படுற பெரியண்ணன் வேலய பாக்க வேணாம்...

இந்த பதிவ புரிஞ்சிக்காம விஷம் கக்குற நீரு என்ன பாம்புன்னு சொல்றது வேடிக்கை. மேலும் சம்பந்தமில்லாம சாதிய இழுக்கும் உமக்கு என் கண்டனத்த தெரியப்படுத்துறேன், உம் பின்னூட்டத்தையும் அழிக்கிறேன்... முடிந்தா சாதி இல்லாம ஒரு பின்னூட்டம் விடும்.
 



ஹலோவ், எங்கள் அண்ணன் 'தேமே' என்றிருக்கும் லூஸ் மோகனை வம்புகிழுத்த முகமூடியை வன்மையாக கண்டிக்கிறோம். சரி, லூஸ் மோகன் பட வாய்ப்பு இல்லாமல் கஷ்டத்தில் இருக்கிறாராமே?. ஏதாவது தெரியுமா உங்களுக்கு?

இவண்,
லூஸ் மோகன் ரசிகர்கள் பேரவை தலைவர்

(யோவ் முகமூடி, நீர் என்னுடைய மெயில் காண்டாக்டில் இருக்கும் ஒரு ஆளாகத்தான் இருக்க வேண்டும். இல்லையென்றால் கடைசிப்பெயருக்காக சேர்த்திருக்கும் என் தந்தைபெயர் உமக்கு எப்படி தெரியும்?. சீக்கிரமே உங்க முகமூடியை கிழிச்சறலாமுன்னு நினைக்கிறேன்)
 



அடச்சே! என்னுடைய user profile -அ கொட்டை எழுத்துல என்னுடைய மொதப்பெயர் கடைசிப்பெயர் எல்லாத்தையும் போட்டிருக்கிறேன். கடைசி வரிகளை வாபஸ் வாங்கிக்கிறேன்.
 



"சினிமா, நாடகம் எல்லாம் செந்தமிழும், விளங்காத தமிழும் எழுதி பேசி தனக்கு தானே ரசித்து வந்த மேட்டுக்குடி மேலாதிக்க மக்களை நாங்கள் அண்ணாந்து மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலையை மாற்றி என்னை மாதிரி தற்குறிகளும் புரிந்து கொள்ளும் வகையில் நாங்கள் பேசும் அதே மெட்ராஸ் பாஷையில் பேசும் அண்ணன் லூஸ் மோகனுக்கு நான் பெரும் ரசிகன்...
அவருடைய எளிய பேச்சில் அந்த அப்பிராணி மனசில் என் மனதை பறிகொடுத்தவன்...
மெட்ராஸ் பாஷையை தீண்டத்தகாத பாஷையாக கருதும் மெட்ராஸில் வாழாத மேல் சாதி மக்களுக்கு சம்மட்டி அடி கொடுத்த அவரின் மெட்ராஸ் தமிழுக்கு பெரும் ஆதரவாளன்... "

மேற்கண்ட வரிகளை படித்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. இதுதான் வஞ்சப்புகழ்ச்சி அணியா? நீங்கள் மேல்சாதி என்று சொல்லாமல் சொல்லி எங்கள் பார்ப்பனர்களை கேவலப் படுத்திவிட்டீர்கள். மற்றவர்கள்தான் பார்ப்பனர்களை திட்டுகிறார்கள். நீங்களுமா முகமூடி அவர்களே?

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
 



// முகமூடியை வன்மையாக கண்டிக்கிறோம். // இதெல்லாம் இப்ப வேலக்காகாதப்பு... இப்ப நான் தனிமரம் அல்ல... ப.ம.க என்ற தோப்பு

// லூஸ் மோகன் பட வாய்ப்பு இல்லாமல் கஷ்டத்தில் இருக்கிறாராமே? // தம்மடிக்க கூடாது, தண்ணியடிக்க கூடாது, பெண்களை தொட்டு பேசி நடிக்க கூடாது, ஆண்கள்தான் பெண்கள் வேஷம் கட்ட வேண்டும் என்பது போன்ற சமூக சீர்திருத்த சட்டங்கள் எல்லாம் போடப்பட்ட பின்பு சினிமா எடுக்க கூடாது என்று சட்டம் இல்லாவிட்டால் ப.ம.க சினிமா படம் பிடிக்கும், அப்போது லூஸ் மோகன் தான் கதாநாயகன் என்று இந்த நேரத்திலே சொல்லிக்கொள்கிறேன்
 



மேலே டோண்டு என்ற பெயரில் வந்த பின்னூட்டம் உண்மையான டோண்டு அல்ல என்று நம்புவதற்கு சாத்தியம் இருப்பதால் (அவர் ப்ளாக்கர் ஐ.டி 4800161 என்று இருந்தாலும், அவர் பின்பற்றும் வேறு ஒரு முறை இன்னும் காணவில்லை என்பதால்) இப்போதைக்கு அந்த பின்னூட்டத்திற்கு பதிலளிப்பதை நிறுத்தி வைக்கிறேன்...
 



Thanks Mugamoodi for your understanding. You are right. The above comment in my name is not mine. Your reasoning in your personal mail to me is flawless.

I take this opportunity to request my wellwishers to keep vigilant. Kindly check your email inbox for the comments' origin. My comments come from raghtransint@gmail.com

Mr. Mugamoodi I take the liberty of reproducing your email to me. Please forgive me. I feel that this has to be given the widest possible publicity.

Here goes:
"Dear Mr. Dondu,

Today there's a comment in my blog post
http://mugamoodi.blogspot.com/2005/06/2728.html. for a moment I thought its
you and also replied to the comment.

then I check your blog post
http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html where you keep all your
comments. I dint find this latest comment there, but your explanation to
Pediyans' blog ... so I was suspicious

then I came back to my mail and found the comment is not from
raghtransint@gmail.com, but anonymous-comment@blogger.com. I'm not sure the
comment was done by you...

also I found a comment in your name in post
http://lldasu.blogspot.com/2005/06/blog-post_24.html. because of the last 2
sentences in that comment, I know its not you.

I'm really sorry that these kinda things happens to you... If I get any
technical know-how I'll let you know.."

I am not at home and am not in a mood to try to type in Tamil with Suratha's converter. I am depressed.

Regards,
Dondu Raghavan
Blogger No. 4800161 (for what it is worth)
 



இத்தகவலுக்கு நன்றி முகமூடி
 



இதன் மூலம் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு தெரிவிப்பது என்னன்னா, இந்த பதிவுல நான் திருமாவ லூஸ் மோகனோட ஒப்பீடு செய்றதா சில அறிவிலிகள் பறையடிச்சி ஊருக்கு பொய் செய்தி சொல்லுதுகள்.... ஏன் லூஸ் மோகனுடைய பயணக்குறிப்ப பதிவுல போட கூடாதா? இது லூஸ் மோகனோட பயணக்குறிப்பு மட்டுமே,மட்டுமே, மட்டுமேன்னு அதுகளுக்கு சொல்ல வேண்டியது என் கடமை.

மேலும் திருமாவ லூஸ்மோகனோட ஒப்பீடு செய்வதன் மூலம் திருமாவ கேவலப்படுத்தறதா நீங்க நினைக்கிறீங்க... எவ்வளவு கேவலமான சிந்தனை... என்னை பொறுத்த வரை இருவருமே மனிதர்கள்... ஒருத்தர் உசத்தி, ஒருத்தர் தாழ்த்தி கிடையாது.... திருமாவ லூஸ் மோகனோட ஒப்பீடு செய்வதன் மூலமா லூஸ் மோகன கேவலப்படுத்தறீங்கன்னு நான் சொல்லலாமா....
 



///யோவ் அனானி:: எப்பப்பாரு தீவிர சிந்தனையோடவே அலைவீரா... திருமாவளவனை லூஸ் மோகன்னு சொல்லலைய்யா... நெசமாவே லூஸ் மோகனத்தான் சொன்னேன்... அத கூட வெளங்கிக்காம////

இதை மட்டும் படிச்சுட்டு வாய்விட்டு சிரிச்சேன்.:-)

கலக்குங்க முகமூடி!

எம்.கே.
 



மதிப்பிற்குரிய ஆருயிர் அண்ணன், கலங்கரை விளக்கம், முத்தமிழ் நாடு பெற்றெடுத்த முத்து, வாழ்நாள் முழுதும் தூய தமிழிற்காக தன் இன்னுயிரை ஈயத் துடிக்கும் பைந்தமிழ் பகலவன் டாக்டர் மோகனார் அவர்களை கோயம்பேட்டிற்கு வருக வருக என்று வரவேற்கிறோம்.

- அ.இ.ஜெ.பூ. கோயம்பேடு கிளை
 



சரி, உங்க கருத்து ??