<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

கபட நாடக தலைவர்கள் vs களிமண் மண்டை தொண்டர்கள்


குமுதம் ரிப்போர்டர் 05.05.2005 இதழ் ·ப்யரிங் ஸ்பாட் பகுதியில்...

டாக்டர் ராமதாஸ் என்ன சொல்லப் போகிறார்?

எனது நண்பர் டெல்லியில் தேசிய வங்கி ஒன்றில் பணி புரிகிறார். தமிழ்ப் பற்று மிக்கவர். டெல்லி தமிழ்ச் சங்கத்தில் தீவிர ஈடுபாடு உடையவர். அவர் சென்ற வாரம் எனக்கு எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு அதிர்ந்து போய்விட்டேன். அக்கடிதத்திலிருந்த விஷயம் இதுதான்:
‘‘தமிழக அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளைக் கண்டு இங்குள்ள பிற மொழிக்காரர்கள் சிரிக்கிறார்கள். இங்குள்ள தமிழர்களுக்கு இது அவமானமாக இருக்கிறது. அங்கே தந்தை தமிழுக்காக மூன்றாவது மொழிப் போர் பிரகடனம் பண்ணுகிறார். ஆனால், இங்கே அமைச்சராக இருக்கிற அவரது மகன் அன்புமணியின் இரண்டு குழந்தைகளும் ‘மேட்டர் டே’ என்ற ஆங்கில _ இந்திப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள்!
இந்தப் பள்ளியில் தமிழே கிடையாது!

இவ்வளவிற்கும் டெல்லி தமிழ்ச் சங்கம் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளை இங்கே நடத்துகிறது... இவற்றில் எதிலும் சேர்க்காமல் ஆங்கில-இந்திப் பள்ளியில் தன் குழந்தைகளைச் சேர்த்திருக்கிறார் அன்புமணி...’’

ராமதாஸ் பெரியாரைப் போற்றுகிறவர். ‘பிற மதங்களை விமர்சிக்காமல் ஏன் இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கிறீர்கள்?’ என்று பெரியாரிடம் கேட்டபோது, ‘எனது வீட்டில் உள்ள அசிங்கங்களைச் சுத்தப்படுத்தாமல் எதிர்வீட்டைப் பற்றியும் அண்டை வீட்டைப் பற்றியும் விமர்சித்தால் அவமானம்தான் மிஞ்சும்’ என்று பதில் சொன்னார். ஆனால் டாக்டர் ராமதாஸ்?

vs படித்தால் சிரிப்புத்தான் வருகிறது!

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அரசினர் மருத்துவமனையின் பெயர் ‘ராஜாஜி மருத்துவமனை.’ மூதறிஞர் ராஜாஜியின் பெயர் சூட்டப்பட்ட இம்மருத்துவமனை வாசலில் தற்போது வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகையில், ‘ராசாசி மருத்துவமனை’ என எழுதப்பட்டுள்ளது! ராஜாஜியில் உள்ள வடமொழி எழுத்துக்களை நீக்கி விட்டு தனித் தமிழில் எழுதுகிறோம் என்று ‘ராசாசி’ என எழுதி வைத்துள்ளனர்!

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


அவர்கள் உபதேசம் ஊருக்கும் அவரை நம்பியிருக்கும் படிப்பறிவு இல்லாத, ஏமாளிக் கூட்டத்துக்கு மட்டும் தான்.

சொந்தமாக சிந்திக்கத் தெரிந்த எவனும் அந்த கும்பலின் பின்னால் அலையமாட்டான்.
 



This comment has been removed by a blog administrator.
 



Padithal siriputhan varugirathu..padithal vedhanai than ippadipatta tamil parralarkalai ninaithu..peyarai kooda molimatram seikirargala
 



தமிழக மக்களுக்கு தான் அவர் வாழ்க்கை, உபதேசம் எல்லாம், தன் பேரப்பிள்ளைகளுக்கு இல்லை... ! இப்படி சுயநலமில்லாமல் இருக்கும் ஒரு தன்னலமற்ற தலைவரைப் ..போய்....
வேறென்ன சொல்ல ..இப்படி தான் தேற்றிக்கொள்ள வேண்டும்.. :( :(

வீ.எம்
 



//ராமதாஸ் பெரியாரைப் போற்றுகிறவர்//

பாரீசுக்கு ராமதாசும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் ஒரு முறை உல்லாச பயணம் வந்திருந்தார்கள். பாரிஸில் உள்ள பல சுற்றுலா தளங்களையும் பார்த்துக்கொண்டு வரும்பொழுது "sacré couer" என்னும் மாதா கோவிலுக்கு அவர்கள் அனைவரும் வந்தனர். அது சாதரண மாதா கோவில் மட்டுமன்று. வரலாற்று புகழ் வாய்ந்த ஒரு இடம். பாதிரிமார்களிடம் முன்பு அரசாங்கம் அகப்பட்டுக்கொண்டு இருந்ததை எதிர்த்து நடந்த புரட்சியின் போது பல பேருக்கு தஞ்சம் அளித்த இடம் அந்த கோவில்.பல பாதாள வழிகள், அறைகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அது மட்டுமில்லாமல் அந்த கோவிலுக்கும் நம் இந்திய தேசிய தலைவருக்கும் ஒரு சம்பந்தம் உண்டு. ஆம் பிரான்சில் இந்திராகாந்தி படிக்கும் பொழுது பெரோஸ் காந்தியை திருமணம் செய்துகொண்டது இந்த கோவிலில் வைத்தான்.
அது மட்டுமில்லாமல் அந்த கோவிலின் கட்டிட அமைப்பும், வண்ணகண்ணாடி வேலைப்பாடுகளும் உலக பிரசத்தி பெற்றவை.
இந்த கோவிலுக்குள் வர மறுத்துவிட்டார் நம்ம பெரியார் தொண்டர் ராமதாஸ். உள்ளே வந்தால் அவரின் பகுத்தறிவு கேள்விகுறியாகிவிடுமாம். பழைமை,பாரம்பரியம்,கட்டிடகலை,வரலாற்று சிறப்பு என்று எவ்வளவொ விஷயங்கள் இருக்க இவரின் பகுத்தறிவுக்கு மாதா மட்டுமே அந்த கோவிலுக்குள் தெரிந்தார். அவர் குடும்பத்தார் அந்த கோவிலை பார்த்து வரும் வரையில் கோவிலுக்கு வெளியில் ஒரு "வேன்"யில் உட்கார்ந்திருந்தார் நம்ம பகுத்தறிவு புலி.

பகுத்தறிவு என்பது மற்றவர்கள் சொல்லி வருவதில்லை.புத்தகங்கள் படித்து வருவதில்லை. தனக்கு தானே பல ஆயிரம் கேள்விகள் கேட்பதினால் வருவது பகுத்தறிவு.பின்னர் வேண்டுமானால் பிறருடன் ஒப்பிட்டு கொள்ளலாம்.
ஒரு கோவிலினுள் போவதால் தன்னுடைய பகுத்தறிவுக்கு பங்கம் வந்துவிடும் என்று நினைக்கும் இவரை போன்ற அரை வேக்காடுகளை "பேரியாரை போற்றுகிறவர் " என்று சொல்லவேக்கூடாது நண்பரே.
 



சரி, உங்க கருத்து ??