<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

ரஜினி யார்னு உங்களுக்கு தெரியும்னா மேல படிங்க


நேத்து துள்சி பதிவுல ஒரு அதிர்ச்சியான செய்திய படிச்சி தொலஞ்சிபுட்டேன் (பலகீனமான இதயம் கொண்டவர்கள் மேலே படிக்காதீர்கள்)... செய்தி : ரஜினியைத்தான் எனக்கு பிடிக்குமே தவிர அவரோட படத்தை அல்ல. செய்தியே அதிர்ச்சின்னா அத விட அதிர்ச்சி வாய்ஸ் யாருதுன்றது : நம்ம ரஜினி ராம்கி...
நம்ப முடியல இல்ல... எனக்கும்தான்... படிச்சதிலேர்ந்து நெஞ்சு படக்கு படக்குன்னு அடிச்சிக்கிது. ரஜினிய சினிமா மூலமாத்தானே நமக்கு தெரியும்.. படத்த வச்சித்தான் ரஜினிய புடிக்கணும்னு இவ்ளோ நாளா தப்பு கணக்க போட்டு வாழ்ந்திட்டோமேன்னு ஒரே குழப்பம். பெரண்டு பெரண்டு படுக்கறேன், ராத்திரி முழுக்க தூக்கமே வரமாட்டேங்குது. ரஜினிய புடிச்சா படம் புடிக்கணும்னு அவசியம் இல்லையா? படம் கேவலமா இருந்தாலும் நடிகர புடிக்கலாமா? படத்துக்கும் ஈரோவுக்கும் தொடர்பு இருக்கா இல்லியான்னு ஒரே கன்பூசன் கன்பூசன் கன்பூசன். சரி இருக்கவே இருக்குது நம்ம வாசகர் வட்டம்னு உங்கள நம்பி வந்திட்டேன்... இப்ப நாட்டுக்கு இது ரொம்ப முக்கியமான்னு கேள்வி எல்லாம் கேக்காம தயவு செஞ்சு கீழ இருக்கற நம்ம (கள்ள) ஒட்டு பெட்டியில ஒரு ஒட்ட போட்டு நம்ம கன்பூசன போக்குங்கண்ணா
உங்களுக்கு பிடித்தது ரஜினியா... ரஜினி படமா?
ரஜினியைத்தான் எனக்கு பிடிக்குமே தவிர அவரோட படத்தை அல்ல
ரஜினி படம்தான் புடிக்குமே தவிர ரஜினியை புடிக்காது
ரஜினியும் சூப்பரு ரஜினி படமும் சூப்பரு
ரஜினியும் வேஸ்ட்... ரஜினி படமும் வேஸ்ட்...
முகமூடி'ஸ் பேவரிட் : ரஜினி இமயமலையிலேயே தங்கிகிட்டா ரொம்ப பிடிக்கும்
  


š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


அடடே பாண்டி... இத்த ஒரு சாய்ஸா சேக்காம வுட்டுட்டனே (நமக்கும் ஈரோயினத்தான் ரொம்ப பிடிக்கும் ஹிஹி..)
 



அன்புள்ள முகமூடி,

இது ஒரு நல்ல கருத்துக்கணிப்பு( இது தமிழ்தானே?)தான்.
ஆனா, அவரை இமயமலையிலேயே தங்கிடச் சொல்றது கொஞ்சம் "ஓவரா" இல்லே?

பாவம், ஒரு தகப்பன், ஒரு கணவன்ற முறையிலே குடும்பத்துக்கூட இருக்கட்டும்.

ரஜனி, ஒரு 'நல்ல' நடிகர்தான். ஆனா இது அவரோட ஆரம்பப் படங்களிலேதான்!
அப்புறம், ஆளாளுக்கு கொம்பு சீவிவிட்டு, அவரை உச்சாணிக்கிளையிலே கொண்டுபோய்
வச்சுட்டாங்க!!!எதுக்கு? தொபுக்கடீர்னு ஒருநா தூக்கிப் போடறதுக்கோ என்னவோ?

நடிகனை, நடிகனா நினைக்காம 'கிளி ஜோசியக்காரனா' நினைச்சுக்கிட்டு சீட்டு எடுக்கச்
சொல்றதுபோல, அரசியல்லே உங்க கருத்தைச் சொல்லுங்க, நீங்க சொல்ற 'கூட்டத்துக்கு'
ஓட்டு போடறொம்னு கேட்டுக்கறது என்னான்னே விளங்கலை!!!!

அதுவும் அவரோட 'கதை இலாகா' இருக்கே, அதுக்கு ஒரு கதைதான் தெரியும்!
ரஜனி ஏழையா ஒரு வீட்டுலே இருப்பாரு, ஆனா ஏழை இல்லே! ஃப்ளாஷ் பேக் லே
அவரு ஒரு மாபெரும் பணக்காரர்/ராஜா இத்தியாதி!!! லலித மஹால்லே குதிரை
ஓட்டிக்கிட்டுக் கட்டாயம் வந்துருவாரு!!! திருப்பித்திருப்பி இந்தக் கதையைத்தான்
வெவ்வேறு பேருலே எடுக்கறோம்ன்றது அவுங்களுக்கே தெரியலை போல!!!

" ஆண்டவரே, அறியாமையால் செய்த/செய்துகொண்டிருக்கற பிழைகளை மன்னியும்"

என் மனசுக்கு என்ன தோணுதுன்னா, பஸ் கண்டக்டரா வாழ்க்கையைத் தொடங்கியப்ப
அவரு மனசுலே ரொம்பப் பெருசா இருந்த ஆசை 'அந்த மைசூர் மகாராஜாவோட அரண்மனைகளும்,
மகாராஜான்ற பெருமையும்' போல! அதைத்தான் தன் படங்களிலே நிறைவேத்திக்கறாரோ அல்லது
அவரோட உள் மனசுலே இந்த ஆசை இருந்திருக்குமுன்னு 'நினைச்சுக்கிட்டு' இந்தக் கைத்தடிகள்
இந்தக் கதை & காட்சிகளையெல்லாம் புகுத்துறாங்களோ!!!!!

அதுக்கு அப்புறம் மனசாட்சி வந்து ஆடுமே! அதுக்குத்தான் 'இமயமலை வாசம்'!!!!
அதுவும் தன் பையைத் தானே(!) தூக்கிக்கிட்டுப் போறாராமேப்பா!!!!!!!!!!( இதுலே என்ன தப்பு?)

இது கூட ஒரு அதிசயமாப் போச்சு, இல்லே?

என்னமோப்பா, பின்னூட்டம் பெருசாப் போச்சு. மாப்பு!!!!!
 



துளசி.. அது கருத்துக்கணிப்பு தமிழ்தான் (சந்தேகமா இருந்தா அகராதி புடிச்ச ஜிகேமணிகிட்ட, மன்னிச்சுகோங்க... ஜிகேமணிகிட்ட இருக்கற அகராதியில பாத்து தெளிஞ்சிக்குவோம்) புடிச்சாலும் ஒரு பாயிண்ட இஷ்ட்ராங்கா புடிச்சீங்க... ஒவ்வொரு தேர்தல்லயும் ரஜினி வாய்ஸ் கொடுக்கிறாரா இல்லையான்னு கட்சிக்காரன் கவல படுறமாதிரி ஒரு மாயை உருவாக்குதே இந்த மீடியா, ரஜினி சொல்ற படிதான் எல்லா ரசிகருங்களும் ஒட்டு போடுவாங்க, சுயமா சிந்திக்க மாட்டாங்கன்னு முடிவு பண்ணிகிட்டாங்களா? அதயும் கருத்துக்கணிப்புல சேத்திருக்கலாம்... யாராவது ரஜினி ரசிகருங்க சொல்லுங்களேம்பா...
 



// இமயமலையிலேயே தங்கிடச் சொல்றது கொஞ்சம் "ஓவரா" இல்லே? // அது நான் சொல்லலீங்க என் மனசாட்சியோட குரல்... இருந்தாலும் சும்மாச்சுக்கும் ஒரு கருத்தா சேத்துக்கலாம்னு போட்டா, அதுதான் இப்போதைக்கு லீடிங்க்ல இருக்கு... (அறிவாளிங்க எல்லாம் ஒத்தாப்புல சிந்திப்பாங்கன்னு சும்மாவா சொன்னாங்க)
 



//நடிகனை, நடிகனா நினைக்காம 'கிளி ஜோசியக்காரனா' நினைச்சுக்கிட்டு சீட்டு எடுக்கச்
சொல்றதுபோல, அரசியல்லே உங்க கருத்தைச் சொல்லுங்க, நீங்க சொல்ற 'கூட்டத்துக்கு'
ஓட்டு போடறொம்னு கேட்டுக்கறது என்னான்னே விளங்கலை!!!!//

ஓட்டு போடுறோமா இல்லையாங்கறது வேறன்னேனாம்,

//பஸ் கண்டக்டரா வாழ்க்கையைத் தொடங்கியப்ப
அவரு மனசுலே ரொம்பப் பெருசா இருந்த ஆசை 'அந்த மைசூர் மகாராஜாவோட அரண்மனைகளும்,
மகாராஜான்ற பெருமையும்' போல! அதைத்தான் தன் படங்களிலே நிறைவேத்திக்கறாரோ அல்லது
அவரோட உள் மனசுலே இந்த ஆசை இருந்திருக்குமுன்னு 'நினைச்சுக்கிட்டு' இந்தக் கைத்தடிகள்
இந்தக் கதை & காட்சிகளையெல்லாம் புகுத்துறாங்களோ!!!!!
//
எனக்கு கூட ரொம்ப நாளா இந்த சந்தேகம் உண்டுன்னேனாம்

//அதுவும் தன் பையைத் தானே(!) தூக்கிக்கிட்டுப் போறாராமேப்பா!!!!!!!!!!( இதுலே என்ன தப்பு?)

இது கூட ஒரு அதிசயமாப் போச்சு, இல்லே?
//
யக்கோவ் உங்களக்கு ரொம்பத்தான் குசும்பு
 



// அந்த 2-3 பேருதான் ரஜினிய கெடுத்துப்புட்டானுக // அய்யய்யோ.. இப்படி ஒரு கோணத்துல யோசிக்காம போய்ட்டனே... ச்சே ச்சே நம்ம பதிவுல அதெல்லாம் நடக்காது சம்மி (அப்படின்னு நம்புவோம்)
// பின்னூட்டம் அதிகரிக்க // அதுக்கு எதுக்கு மெனக்கட்டு பதிவெல்லாம் போடுறது. இட்லி மாதிரி ஒரு வேண்டுகோள் வச்சிட்டா நம்ம கண்மணிகள் பிச்சி ஒதறிட மாட்டாங்க.... அப்புறம் குழலிக்கு ஒரு கூட்டாளி கெடச்சாப்ச்சிப்போ (சும்மா தமாஷ்)
 



முகமூடி,

ரஜினி ராம்கி ஏன் அப்டி சொன்னாருன்னு புரியலே, சந்திரமுகி, நல்லா தான் (ஜனரஞ்சகமா) இருக்கு!!!

அப்டியே, குடிதாங்கிகளைப் பத்தியும் ஏதாவது ஒரு POLL வைத்து உங்க நடுநிலமையை மக்களுக்கு காட்ட வேண்டாமா ?

இல்ல, நீங்களும் "சிலபேர்" மாதிரி ரஜினி பேர எடுத்தாலே டென்ஷனாயிடுற பார்ட்டியா :)

என்றென்றும் அன்புடன்
பாலா
 



//ரஜனி, ஒரு 'நல்ல' நடிகர்தான். ஆனா இது அவரோட ஆரம்பப் படங்களிலேதான்!//

100% உண்மை
 



பாலா, இந்த பதிவுக்கு எந்த சார்பு நிலையும் இல்லை... பொதுவாக படம் பிடிக்கும், இல்லை படமும் நடிகரும் பிடிக்கும் என்றே கேள்விப்பட்டிருந்த எனக்கு படம் பிடிக்கிறதோ இல்லையோ நடிகரை பிடிக்கும் என்று சொன்ன ரஜினி ராம்கியின் கருத்து வித்தியாசமாக இருந்தது. எல்லார் போலும் இல்லாமல் நடிகர் என்ற நிலையை தாண்டி ரஜினி என்ற மனிதரை அருகாமையிலிருந்து பார்க்கும், பழகும் வாய்ப்பு பெற்றதால் அவர் அப்படி சொல்கிறார் என்பது என் எண்ணம். அதை தொடர்ந்து சும்மா நகைச்சுவையாக இந்த பதிவு... நாம எப்பவுமே நடுநிலைதாங்க... அப்புறம் தினமலர் செய்திக்கு வாழ்த்துக்கள்.
 



ஹலோ, முகமூடி அண்ணாச்சி,

நானும் எனக்குப் பட்ட கோணத்துல ரஜினியைப் பத்தி கொஞ்சம் கிளறியிருக்கேன்.
படிச்சுப் பார்த்துட்டு பதிலுங்க!
 



அடடா, கருத்துக் கணிப்புல நெறைய கேள்விகள் விட்டுப் போச்சிங்க....

ரஜினி ரசிகர் வலைத்தளம் நடத்தும் கருத்துக்கணிப்புல பாருங்க

இது எப்படி இருக்கு...
 



ரஜினி நடிச்சது எனக்குத் தெரிஞ்சு ஒரே ஒரு படம்தான். "ஆறு முதல் அறுபது வரை" அதுக்கு அப்புறம் அவர் எங்கே நடிச்சார்? சும்மா வந்துட்டு இல்லை போனார்? :P ஒரு பத்து நாளா இணையத்துலே தொல்லை தாங்கலை, எங்கே போனாலும் ரஜினியோட "சிவாஜி ட்ரயிலர்" ரஜினியோட சிவாஜி படப் பாட்டு, டைரக்டர் பேட்டின்னு இணையத்தின் மூலம் மெயிலுன்னு மெயில் பாக்ஸைத் திறக்கக் கூடப் பயமா இருக்கு! :P
 



சரி, உங்க கருத்து ??