<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

மாநகர காவல்துறை:: சிறந்த தொப்பை காவலருக்கு பரிசு


சிறந்த மீசை வைத்துள்ள காவலர்கள் & தொப்பையில்லாத காவலர்களுக்கு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் சனிக்கிழமை ஒரு நிகழ்ச்சி வச்சி பரிசுகள் வேற கொடுத்து பாராட்டினாராம்... அது என்னா சிறந்த மீசைக்கு பரிசு... போலீஸ்க்கு மீசைய ஒரு கலாச்சார அடையாளமாவே மாத்திட்டாங்களா? ஐ.பி.எஸ் போஸ்டிங்ல வர வடக்கத்தி போலீஸ்காரங்களுக்கு மீசை இருக்காது. அப்ப அவிங்க போலீஸ் இல்லையா? எல்லாத்தையும் விட கூத்து தொப்பையில்லாத போலீஸ்க்கு பரிசு... போலீஸ்னாலே தொப்பை இருக்க கூடாதுன்னுல்ல நாம நினைச்சுகிட்டு இருந்தோம். இப்படியே போனா காக்கி சட்டை போடுற காவலருக்கு பரிசு, பாதணிக்கு பாலீஸ் போட்ட போலீஸ்காரருக்கு பரிசு, டூட்டிக்கு வந்த போலீஸ்காரருக்கு பரிசுன்னு தருவாங்களோ ??


கமிஷனர் அய்யா, ஒரு விண்ணப்பம்... போட்டி இருந்தாத்தானுங்களே அந்த பரிசுக்கே ஒரு மதிப்பு... இப்ப நீங்க தொப்பை இல்லாத மூணு பேருக்கு மட்டும் பரிசு கொடுத்தீங்கன்னா, போட்டியே இல்லைன்னு ஆயிராதா? அதுல என்னாங்கய்யா த்ரில் இருக்கு... போலீஸ்ல இருக்கற மத்த எல்லாருக்கும் போட்டி வச்சி சிறந்த தொப்பைக்கு பரிசு கொடுத்தீங்கன்னா, அது போட்டி... ஆவன செய்வீங்களா அய்யா...

ஆதாரம்: தட்ஸ்டமில்.காம் செய்தி

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


தட்ஸ்டமில்.காம் இன்றைய செய்தியில் ஹரி. இதோ லிங்க்
 



அட நான்கூட நீர் ஏதோ இட்டுக்கட்டி எழுதுகிறீர் என்றுதான் நினைத்தேன். செய்தியைப் பார்த்தபிறகுதான் விளங்கியது.

நல்ல பம்பல்.
 



இப்படி சொல்லிப்போட்டீங்களே வசந்தன்.... உண்மை, நேர்மை, வாய்மை இத தவிர வேறொன்றும் தெரியாது இந்த முகமூடிக்கு (நெசமாவா சொல்றீங்கன்னு யாரது அங்க)
 



கூட படித்த புகுமுக தொ.நு.கல்லூரி நண்பனின் தந்தை த.நா அரசு காவலர். அவருக்கு, தனது மீசையை மிடுக்குடன் முறுக்கி வளர்க்க மாதம் ஊக்குவிப்பு தொகை ரூ.15/- ( என்பதாக ஞாபகம்) உண்டு என்பதாக நண்பன் சொன்னதுண்டு.

எல்லோராலும் கன்னத்தில் வளைவாக மீசை வளர்க்க முடியாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்!

வாசன்
vassan.weblogs.us
 



அட இது எனக்கு புதிய செய்தி வாசன்... மீசை வைக்க ஊக்குவிப்பு தொகை... ம்ம்...ஒரு காலத்துல குழந்தைங்க அழுதிச்சின்னா ஒன்னு போலீஸ்ல புடிச்சி கொடுத்திடுவேன் (மீசை வச்ச போலீஸ்) இல்ல பூச்சாண்டிகிட்ட புடிச்சி கொடுத்திடுவேன்னு சொல்வாங்க (காலப்போக்குல ரெண்டுக்கு அர்த்தம் ஒன்னுங்கற மாதிர் ஆகிப்போனத் வேதனையான விசயம்) ஆனா வீரப்பனுக்கு பின்னாடி மீசைக்கு யாரும் போலீஸை சொல்றதில்லை...அதான் நான் கேட்டேன்: மீசை என்ன போலீஸ்காரனுக்கு ஒரு அடையாளமா அரசாங்கமே அறிவிச்சிடுச்சா?? ஊக்குவிப்பு, பரிசெல்லாம் தாராய்ங்க...
 



Kusumbin sikaram sir nInga ;-)
 



இணைய குசும்பன் வாயால 'குசும்பின் சிகரம்' பட்டம் வாங்குறது புல்லரிக்குதுப்பா... ராமதாஸ் தன் உடன் பிறவா சகோதரன 'அன்பு தம்பி'ன்னு கூப்பிட்டப்போ தம்பிக்கு எப்படி இருந்திருக்கும்... தம்பி திருமா 'மருத்துவர் தமிழ்குடிதாங்கி'ன்னு தன் அன்பு அண்ணன வாய் நிறைய கூப்பிட்டப்போ அண்ணனுக்கு எப்படி இருந்திருக்கும்... வைகோவ என்னதான் பொய் சொல்லி தொரத்தி வுட்டாலும் திருப்பி திருப்பி தன் காலையே சுத்தி சுத்தி வந்து மேடை போட்டு உணர்ச்சி வசப்படறப்ப்போ அண்ணனுக்கு எப்படி இருந்திருக்கும் அப்படீங்கறதெல்லாம் என்னால் இப்ப, இப்ப நல்லாவே ·பீல் பண்ண முடியுதுப்பா...
 



ஒருவேளை ஒரு மூணு பேருக்கு பரிசு கொடுத்தால் மத்தவங்களும் அடுத்த வருஷம் நாமும் வாங்கனும்ங்கிற ஆசையில குறைச்சிறமாட்டாங்களா.....அப்டீன்னு நினைச்சு கொடுத்திருப்பார்கள்

ஆனா

//போலீஸ்னாலே தொப்பை இருக்க கூடாதுன்னுல்ல நாம நினைச்சுகிட்டு இருந்தோம். இப்படியே போனா காக்கி சட்டை போடுற காவலருக்கு பரிசு, பாதணிக்கு பாலீஸ் போட்ட போலீஸ்காரருக்கு பரிசு, டூட்டிக்கு வந்த போலீஸ்காரருக்கு பரிசுன்னு தருவாங்களோ ?? ///

ரொம்ப குசும்புதான் சார் நீங்க
 



சரி, உங்க கருத்து ??