<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

நாய் க் காதல்


வாலாட்டி திரிகிறேன் நான்
வள்ளென்று குரைக்கிறாய் நீ
நம் இருவரில் யாரடி நாய்


பள்ளி பருவத்தில் சுண்டல் கட்டிய வார பத்திரிக்கை காகிதத்தில் படித்த கவிதை இது. காலேஜில் பலமுறை கோபம் தணிக்க உதவியிருக்கிறது. எழுதியவர் யாரோ. நன்றி. படம் உதவி இன்டர்நெட்.

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


படம் போட்டவர் பெரியநாய்; அதுக்குப் பக்கப்பாட்டு போட்டவர், பப்பிநாய் எனலோமோ?
 



:-) :-)
 



ஷேம் ஷேம் என்று சொல்லாதவரை என்ன சொன்னாலும் சந்தோஷம்தான் பெயரிலி

வாங்க முத்து, வீக்கெண்ட் ஸ்பெஷல் இது ரசித்தீர்கள்தானே?
 



//வள்ளென்று குறைக்கிறாய் நீ//

கு**றை**க்கிறாய்..??
 



/கு**றை**க்கிறாய்..??/
தன்னை நக்கவும் நேரமில்லாமல், விசர்நாய் -பெரியநாய், பப்பிநாய் பேதமில்லாமல்- அப்பிடித்தான் கொஞ்சம் கடுமையாகக் குரைக்கும். ;-)
 



எழுத்துப்பிழை சுட்டிக்காட்டிய பெயரில்லாதவருக்கும் பெயரிலிக்கும் நன்றி :)
 



இதென்ன கேள்வி? யாருக்கு நக்கிக்கொள்ளவும் தமிழில் பேசி, எழுதி படிக்கவும் தெரியுமோ அவர் தான் நாய்.. (சந்தேகமா, வலைப்பூவில் ஜெ.கா பெயரிட்டு தேடிப்பார்க்கவும்)..உளறி மாட்டிக்கொண்டதில் அதிகம் கஷ்டபட்டது ஷக்தி கபூரா? ஜெ.காவா என்று பட்டிமன்றமே வைக்கலாம்..அவ்வளவு பிரபலம்..

விச்சு
 



"மாங்காய் சீசன்", ""தேங்காய் சீசன் மாதிரி வலைப்பதிவுகளுக்கும் ஒவ்வொரு சீசன் இருக்குப் போல கொஞ்ச நாளா சந்திரமுகி சீசன், (ரசனிக்காந்து) வந்து போச்சு பிறகு செயகாந்தன் சீசன் வந்து போய் இப்ப நாய்ச் சீசன் போல. அப்ப கெதியா நானும் நாய்ப் பதிவு ஒண்டு போட வேணும்.
அவள் "வள்" என்று குரைக்காவிட்டால் நாய் தூக்கிக்கொண்டு போயிருக்கும்.
"நாய்க்கு ஏன் போர்த் தேங்காய்"
 



அடப்பாவமே... நான் பாட்டுக்கு வெள்ளிந்தியா ஏதோ நாய் கவிதைய போட போக, அத்த செயகாந்தன் லெவலுக்கு கொண்டுகிட்டு போய் புல்லரிக்க வச்சிட்டீங்களே.... மச்சம்டா முகமூடி... சரி காசா பணமா - சந்தன மால போடுறவங்க எல்லாம் லெப்ட் சைடு, பணமுடிப்பு கோஷ்டியெல்லாம் ரைட் சைடு வாங்க... ஆட்டோகிராப் வேணும்கிறவன் அப்பால வாங்கப்பா... அண்ணன் பிசியா இருக்காருல்ல.
 



:-)
..Aadhi
 



வள் வள் வள் !!!

-- பக்கத்து வீட்டு நாய் ;)
 



//அவள் "வள்" என்று குரைக்காவிட்டால் நாய் தூக்கிக்கொண்டு போயிருக்கும்.//


நாய்க்கு முன்னால உரிச்சொல் ஒண்டு வருமே கறுப்பி, மறந்துபோனியளோ, மறைச்சுப் போனியளோ?
 



Yaradi Naai?

enna, kannadi parkalai ya?

lol
 



சரி, உங்க கருத்து ??