<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

பார்ப்பன எதிர்ப்புன்னு எவ்ளோ நாள்தான் ஜல்லி அடிக்கறது


இன்னும் எதுக்குய்யா பார்ப்பன எதிர்ப்புன்ன்னு புளிச்சி போன பல்லவியயே பாடிக்கிட்டு இருக்கீங்க... ஒரு சாதி மேல காழ்ப்புணர்ச்சி ஏற்படுத்தி ஜாதி துவேஷத்த மக்கள் மனசுல தீயா மூட்டி குளிர் காஞ்ச நம்ம so called "தலைவர்" களுக்கும் , ஒரு இனத்து மேல துவேஷத்த வளர்த்த ஹிட்லருக்கும் என்னய்யா வித்தியாசம். ரெண்டு பேருமே வன்முறைய தன் மீது திருப்பி பிரயோகிக்காத ஒரு கூட்டத்து மேல வன்முறைய பிரயோகிக்க சொல்லி ஆதாயம் தேடிக்கிட்டாங்க.... யார் யாரெல்லாம் இன்னமும், இந்த 2005லயும் பார்ப்பன எதிர்ப்புன்னு சொல்றாங்களோ அவுங்கள்லாம் ஹிட்லர் செஞ்சத தப்புன்னு சொல்றதுக்கு என்ன அருகதை இருக்கு.

வலைப்பூவில இது ஒரு வியாதியாவே ஆயிடுச்சி... கருத்து வேறுபாடு இருக்க வேண்டியதுதான் ஆனா தனி மனித திட்டு அதுவும் சாதிய சொல்லி திட்டறது கேவலமா இருக்கு. நான் கேட்ட வரையில , நீ எந்த வகையிலடா அய்யிருனால பாதிக்கப்பட்டுறுக்கன்னா சம்பந்தமே இல்லாம "அய்யன்கிட்ட ஒரு வேலைன்னு போ.. சட்டைய தடவி பாத்துத்துட்டு தான் மறுவேலை பார்ப்பான்" ன்னு குருட்டுத்தனமா ஒரு வியாக்கியானம் கொடுப்பாய்ங்க. அதாவது பார்ப்பணர்கள் தன் சாதிக்காரர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறாங்கன்னு அர்த்தமாம். அவன சொல்லி குத்தமில்ல, காலம் காலமா நம்ம தலைவர்க்ள் இதத்தான விதச்சிருக்காங்க....

10 வருஷத்துக்கு மேல தமிழகத்துல சகல அதிகாரமும் கொண்ட ஆட்சிபீடத்துக்கு தலைமை தாங்கிய கருணாநிதி இன்னமும் பார்ப்பண எதிர்ப்புன்னு பேசிகிட்டு இருந்தா எப்படி?? தான் அதிகாரத்துக்கு கையாலாகதவர்னு ஒத்துக்கறாரா? இல்ல மறுமலர்ச்சி உண்டாக்குறதுக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் கேக்கறாரா? எவ்வளவு வருசம் வேணுமாம்... ஸ்டாலின் ஆட்சிலயாவது மறுமலர்ச்சி வந்திடுமாமா?? இப்ப 40 எம்.பி 200க்கு மேல எம்எல்லே... எல்லாம் என்ன அய்யருங்களா இல்ல இவங்க சமுதாய திட்டங்களுக்காக போராடுறத அய்யருங்க தடுக்கறாங்களா? எல்லா அதிகாரிங்களும் அய்யருங்க... ஒத்துழைப்பு கொடுக்க மாட்டேங்கிறாங்கன்னு கீறல் விழுந்த ரெக்கார்ட மறுபடி போடாதீங்க. இப்ப எம்பி எம்எல்லே எல்லாம் என்ன பண்ணுறாங்கன்னு எல்லாருக்கும் தெரியும்.

சரி அப்படியே அய்யருங்க சுயநலவாதின்னு வச்சிகிட்டாலும் இப்ப யாரு யோக்கியம்... கருணாநிதி:: தயாநிதிக்கு வேற சாதின்னுட்டா முக்கிய மந்திரி வாங்கி கொடுத்துருக்கார். தன் ரத்தம், தன் சொந்தம்னு பாசம் வரல? இல்ல தி.க வீரமணி யாராவது ப்ராமணருக்கு தி.க.ல முக்கிய பதவி ஏதாவது கொடுத்திருக்காரா? ஆக definition படி கருணாநிதியையும் வீரமணியையும் பார்ப்பான்னு சொல்லலாமா?

ராமதாஸ பத்தி கேக்கவே வேணாம்... முதலியார் MBC ஆகணும்னா போராடுனாரு, தன் ஜாதியான வன்னியருக்கு MBC வாங்கத்தானே போராட்டம்... உயர் நீதி மன்றத்துல நீதிபதியா வன்னியர் வரணும்னு ஒரு போராட்டம், தன் மகன் முக்கிய மந்திரியாக்குவதுன்னு - இவங்க எல்லாம் மத்த சாதிக்க்காகவா போராடுராங்க... (ஒரு காலத்துல ராமதாஸ் ராணுவத்துல வன்னியர்கள் அதிக அளவுல இருக்கறதுனால வன்னியர் ரெஜிமெண்ட்னு ஓன்னு ஆரம்பிகனும்னு ஒரு அறிக்கை கொடுத்தார்... சீக்கியர், கூர்க்காவுக்கு எல்லாம் ரெஜிமெண்ட் இருக்கும் போது வன்னியருக்கு ஏன் கூடாதுன்னு ஒரு விளக்கம் வேற... சீக், கூர்க்கா எல்லாம் மதம். வன்னியர்னா ஜாதின்னு யாராவது சொன்னாங்களா)

எல்லாருக்கும் தன் இனம், தன் சாதின்னு ஒரு பாசம் இருக்கத்தான்யா செய்யும்... அதுல பார்ப்பனர மட்டும் எதுக்கு திட்டிகிட்டு (அது சரி, பார்ப்பான் பார்ப்பான்னு கூசாம எழுதிறீங்களே, சக ஜாதிங்கற முறையில ஒரு தலித் சாதிய... உதாரணத்துக்கு பறையன்னு சொல்லி யாராவது எழுதறாங்களா...)

இப்பதிவில் எல்லா சாதியையும் ஒரு அடையாள குறியீடாகத்தான் சொல்லியிருக்கிறேன்... யார் மனமும் புண்படுத்துவது நோக்கம் இல்லை

இத படிக்கிற எல்லாம் அட்லீஸ்ட் காலேஜுக்காவது போயிர்ப்பீங்க... outside the box திங்க் பண்ண முடியலன்னாலும் பரவாயில்ல இன்னும் ஜாதி ஜாதின்னு குண்டு சட்டிக்குள்ள குதிர ஒட்டிக்கிட்டே இருந்தா கல்வியில குத்தமா இல்ல பிரச்சினை வேற எங்காவதா?? இந்த உலகத்துல சாதின்னா ரெண்டுதான்... என் முன்னேற்றத்த எவனாலயும் தடுத்து நிறுத்த முடியாது, என் குறிக்கோள அடஞ்சே தீருவேன்னு முன்னேற்ற ஜாதி, தான் முன்னேறலன்னா தப்பு என் மேல இல்லன்னு வேற ஏதாவது காரணம் கண்டு அதனால தனக்கு தானே தடை ஏற்படுத்திக்கிற ஜாதி. சந்தேகம் இருந்தா, நாவலர்கிட்ட கருணாநிதி & அன்பழகன் பத்தி கேட்டு பாருங்க - அவர் சொல்வாரு:: உலக நியதி இதுதான் தம்பி "வாழ தகுதியுள்ளதே வாழும்... தகுதியிருந்தால் வாழ்ந்தே தீரும்" ( தயாநிதி, அன்புமணிக்கெல்லாம் என்ன தகுதின்னு கேட்டு யாரும் அளும்பு பண்ண கூடாது) அதனால யாரயாவது குத்தம் சொல்லிகிட்டே இருக்காம தகுதிய வளத்துக்குவோம்...

பிகு :

1)யாருக்காவது மாற்றுக்கருத்து இருந்தா விவாதம் பண்ணலாம். ஆனா அத கண்ணியமான முறையில சொல்லுங்க... நடுராத்திரி வயக்காட்டுகுள்ள இருட்டுல ஊளையிடுற நரி மாதிரி அனானிமஸா தனி மனித, சாதி அடையாள தாக்குதல் எல்லாம் வேணாம்.

2)எனக்கு ப்ராமண அடையாளம் குத்தனும்னு நினைக்கிறவங்க இத்தயும் படிங்க: சின்ன வயசுல ஸ்கூலுக்கு போவ சொல்லோ அர நிஜார் பசங்க எல்லாம் ஓணான் புடிப்பாய்ங்க - வெளக்குமாத்து குச்சில சுறுக்கு செஞ்சி ஓணான புடிச்சி அதும் கண்ணில என்னமோ ஒரு செடியோட பால வுடுவானுங்க... அதுக்கு பைத்தியம் புடிச்சிறும் - அத பாத்தா நான் அவனுங்க கிட்ட சண்டைக்கு போவேன். அதுக்கு ஒரு சூப்பர் வெளக்கம் கொடுப்பானுங்கோ பாரு... ராமர் சீதைய தேடிக்கிட்டு லங்கைக்கு போவ சொல்சோ தாகமா இருந்திச்சின்னு தண்ணீ கேட்டாரம்... ஓணான் ஒன்னுக்கு அடிச்சி கொடுத்திச்சாம். அணில்தான் எளனி கொண்டாந்து கொடுத்திச்சாம்.. அதனால ஓணானுக்கு பாடம் சொல்லிதரோம்... ஆமா நீ என்னா ஓணானுக்கு வக்காலத்து வாங்கற, நீ ராவணன் ஜாதியான்னுவானுங்க... அவிங்க வயசும் மூளையுந்தான் உங்களுக்கா??


š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


கருத்து பெட்டி திறக்காம இருக்குது.. அதனால ஒரு டெஸ்டிங்
 



நல்ல பதிவு. அதானே, டோண்டு வேறென்னக் கூற முடியும்னு வரும் பின்னூட்டங்களின் மூலம் எண்ணிக்கை நூறைத் தாண்டுமாறு ஆசீர்வாதம் செய்கிறேன்.

ததாஸ்து.

அன்புடன்,
ராகவன்
 



முகமூடி,
//'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்
//
இப்ப தான் உங்க வலைப்பதிவின் மெயின் தலைப்பை பார்த்தேன், வெவரமான ஆள் தான், ஆனா உமக்கு என்ன பயம் ? பிளேன்லல்லாம் ஆட்கள் அனுப்பற அளவுக்கு 'முன்னேற்றம்' வரல :))

கீழுள்ள கருத்துக்கள் யாரையும் புண்படுத்தினால், மன்னிக்கவும்.

முகமூடி, நீங்கள் கூறியுள்ளது சம்மந்தமாக என் கருத்துக்களை சில சமயங்களில் வெளிப்படுத்தியிருக்கிறேன். பார்க்க:
http://kanchifilms.blogspot.com/2005/03/blog-post_111163093476106558.html (my comments)
(http://balaji_ammu.blogspot.com/2005/03/blog-post_19.html).

சொல்வது என்ன என்பதை விட சொல்லுபவர் யார் (என்ன சாதி ?) என்று நோக்கும் நசிவு மனப்பான்மை வலைப்பதிவுகளில் புழங்கி வருகிறது. இம்மாதிரி முத்திரை குத்தும்போது, ஆரோக்கியமான முறையில் விவாதத்தை எடுத்துச் செல்ல முடிவதில்லை. வார்த்தைகள் தடித்து, சண்டையில் முடிந்து, நீங்கள் கூறுவது போல் "தனி மனித திட்டு அதுவும் சாதிய சொல்லி திட்டறது" வரை போய் விடுகிறது.

இருந்தாலும்,
//யார் யாரெல்லாம் இன்னும் பார்ப்பான் எதிர்ப்புன்னு சொல்றானோ அவனெல்லாம் ஹிட்லர் செஞ்சத தப்புன்னு சொல்றதுக்கு ரைட் கிடையாது.
//
இது ரொம்பவே ஓவர் !!!

//( தயாநிதி, அன்புமணிக்கெல்லாம் என்ன தகுதின்னு கேட்டு யாரும் அளும்பு பண்ண கூடாது)
//
நான் சத்தியமா அளும்பு பண்ண மாட்டேன், ஆட்டோ பயம் தான் :)))

மற்றபடி, இந்த பதிவு 200 பின்னூட்டமடிக்கும் (உங்கள் இலக்கும் அது தானே!!!) என்பதில் ஐயமில்லை :)) மேலும், இட்லிவடை மற்றும் டோண்டு அவர்களின் சாதனையை நீங்கள் முறியடித்து, இதை "Shane Warne" பதிவாக்க வாழ்த்துகிறேன்.

என்றென்றும் அன்புடன்
பாலா
 



// யார் யாரெல்லாம் இன்னும் பார்ப்பான் எதிர்ப்புன்னு சொல்றானோ அவனெல்லாம் ஹிட்லர் செஞ்சத தப்புன்னு சொல்றதுக்கு ரைட் கிடையாது // - அது இன்னமும் இந்த காலத்திலயும் என்று வரணும்... அமெரிக்கால நிறத்தையோ குலத்தையோ மற்றும் எந்த ஒரு அடையாளத்தையும் வைத்து வெள்ளையரையும் சரி கறுப்பரையும் சரி, பொதுவில் பேசினால் குற்றம். நம்மூரில்தான் மேடை போட்டு 'பார்ப்பன ஆதிக்கம்' பற்றி பேசுவார்கள். அந்த வீரர்கள் தென்கிழக்கு மாவட்டங்களில் தேவர் சமூகத்தவரையும் தென் மாவட்டங்களில் நாடார் சமூகத்தவரையும் ஆற்காடு பக்கம் முஸ்லீம்களையும் பேசுவார்களா?
//200 பின்னூட்டமடிக்கும் // பின்னூட்டம் எல்லாம் குறிக்கோள் இல்லை பாலா... என் இரண்டு பதிவுகள் சம்பந்தம்... பதிவு ஒரு தமாஷ¤க்காக எழுதப்பட்டது... அதில் 3 முறை அழித்தும் மீண்டும் மீண்டும் (ஒரு) சாதிய திட்டுதல்கள் வந்து கொண்டே இருந்தது. அதன் விளைவே இந்த பதிவு.
 



தம்பி முகமூடி,

யாரும் ஜல்லியச்சாங்கன்னா எங்க வீட்டு கொல்லைப்பக்கம் வந்து கொட்டுங்கன்னா... உங்களூக்கு புண்ணியமாப் போகும்.. புதுக்கோட்டை சைடு கருங்கல் ஜல்லியா இருந்தா கொஞ்சம் நல்லது. அடித்தளம் ஸ்ட்ராங்கா போடலாம். ஏன் ஜல்லி கேட்கிறேன்னா எங்க வூட்டு கொல்லைப் பக்கம் டாய்லெட்டு கொஞ்சம் கெட்டு கெடக்கு.. அதை ஒடைச்சு கட்டலாம்னுதான்!

அன்புடன்,
மூர்த்தி.
 



//எல்லாருக்கும் தன் இனம், தன் சாதின்னு ஒரு பாசம் இருக்கத்தான்யா செய்யும்...//

இதனைத்தானய்யா காலம் காலமாய்க் கண்டித்து வருகிறேன். கேக்க மாட்றேய்ங்கெ.

//அதுல பார்ப்பனர மட்டும் எதுக்கு திட்டிகிட்டு//

அப்டில்லாம் இல்லீங்னா... யாருமே ஜாதிய சொல்லக் கூடாதுன்னுதேஞ் சொல்றோம்.

//(அது சரி, பார்ப்பான் பார்ப்பான்னு கூசாம எழுதிறீங்களே, சக ஜாதிங்கற முறையில ஒரு தலித் சாதிய... உதாரணத்துக்கு பறையன்னு சொல்லி யாராவது எழுதறாங்களா...//

இங்க வலைப்பதிவுகளில் எந்த பறையனும் நான் பறையன்னு போர்டு மாட்டி உக்காந்துக்கலீங்னா.. இன்னும் சொல்லப் போனா தலித்னு எழுதுனாகூட ஆரும் கோச்சுக்க மாட்டாங்க.. அவங்களை அன்பா ஆதரவா நடத்துனா அதுவே போதுங்னா.. அவங்களுக்கு தட்டு குடுத்து தம்ளர் குடுத்து வெளில அனுப்பி வைக்கிறத போல இருக்கிறது சில வெறியர்களின் எழுத்துக்கள். அதனைத்தானுங்னா கண்டிச்சேனுங்னா..

//ஒரு அடையாளத்துக்கு சொன்னேன், யார் மனமும் புண்படுத்துவது நோக்கம் இல்லை)//

அட... நீங்க சொல்லுங்னா... தாராளமா சொல்லுங்னா.. எனக்கு ஒரு சந்தேகம்னா... கேக்கலாமுங்களா? அது ஏனுங்கன்னா ஜாதி வேணாம்னு சொன்னா பிராமனர்களுக்கு மட்டுமே கோவம் வருது?

***மூர்த்தி.
 



This comment has been removed by a blog administrator.
 



கருத்து மோதல்கள் இருக்கலாம் கெட்ட வார்த்தைகளை பயன் படுத்த வேண்டாம் Anonymous அவர்களே, ஏற்கனவே பல ஃபாரம்கள் இது மாதிரி வசவுகளினால் நாறிப்போயுள்ளன, அதனாலேயே அது மாதிரியான ஃபாரம்களுக்கு பலரும் செல்வதில்லை இதே நிலை இங்கேயும் வரக்கூடாது என எண்ணுகின்றேன் தயவு செய்து இழிசொற்களை பயன் படுத்தாதீர்கள்
 



கருத்துக்களுக்கு நன்றி மூர்த்தி... // ஜாதி வேணாம்னு சொன்னா பிராமனர்களுக்கு மட்டுமே கோவம் வருது? // பிராமணர்களுக்கு மட்டும் வருமா, மற்றவர்களுக்கு வராதா என்று எனக்கு தெரியாது மூர்த்தி... எந்தவொரு பதிவோ பின்னூட்டமோ எப்பொழுது ஜாதி அடிப்படையில் பேச ஆரம்பிக்கிறதோ நான் அப்பொழுதே மேற்கொண்டு படிப்பதை நிறுத்தி விடுவேன். என்னளவில் நான் மனிதனை மனிதனாக மட்டுமே பார்த்து வந்திருக்கிறேன். எனக்கு துரோகம் பண்ணியவர்களை தனி மனிதனாக மட்டுமே பார்த்திருக்கிறேனே ஒழிய அவர்கள் ஜாதி புத்திதான் இப்படி பண்ண வைக்கிறதோ என்று என்னியதில்லை. என் பதவுகளில் எங்காவது சாதீய அடையாளம் என்னை அறியாமல் வந்து இருந்தல் சுட்டி காட்டுங்கள், திருத்தி கொள்கிறேன். நான் ஜெயலலிதாவையோ கருணாநிதியையோ ராமதஸையோ திருமாவையோ கிண்டலடித்தால் அது அவர்களின் சில கொள்கைகளுக்காக இருக்கும். என்னை பொருத்த வரை ஏட்டளவில் நிற்காமல் வீத்க்கு வந்து அசெளாகரியம் கொடுத்தால் அது ராமகோபாலனாக இருந்தாலும் கிருஷ்ணசாமியாக இருந்தாலும் ஒன்றுதான். முன்பே சொன்ன மாதிரி என் இன்னொரு பதிவின் பின்னூட்டத்தில் யாரோ யாரையோ எந்த வித முகாந்திரமும் இல்லாமல் ஜாதி சொல்லி திட்டியதாலேயே இந்த பதிவு. நிறைறறறய பதிவுகளில் இப்படித்தான் நடக்கிறது.
 



நன்றி குழலி.... அனானிமஸ் மாதிரி மூட்டை பூச்சிகள் இருக்குங்கறதால தியேட்டருக்கு போகாம இருக்க முடியுமா. படத்த பாத்துட்டு ஆஸிட் வாஷ் பண்ணிடவேண்டியதுத்டான். (அப்புறம் உங்க பதிவ படிச்சிட்டு ராமதாஸ¤க்கு ஒரு பதிலடி கொடுக்கலாம்னு பாத்தா, என்னிக்கி நேரம் அமையுதுன்னு பாக்கலாம்...)
 



This comment has been removed by a blog administrator.
 



திருப்பியும் ஒரு தபா மூட்டபூச்சி கடிச்சிட்டு இருட்டுல ஒளிஞ்சிகிச்சி.... இந்த மூட்டை பூச்சிங்க தொல்லை தாங்க முடியலடா சாமி...
 



This comment has been removed by a blog administrator.
 



இப்பதானே ஐம்பது வருஷமா "பார்ப்பன எதிர்ப்புன்னு" ஜல்லி அடிக்கிரோம். இன்னும் 1950 வருஷமாச்சும் ஜல்லி கொட்ட வேண்டிவரலாம். அதற்குள் என்ன அவசரம் முகவரிலிகாள்? அசோகமித்தரன் போன்றவர்களே பொருமை இழந்து விட்டபிறகு உம்மால் எப்படி சும்மா இருக்க முடியும்? முடிந்தவரை நீரும் புலம்பலாம்.
//(அது சரி, பார்ப்பான் பார்ப்பான்னு கூசாம எழுதிறீங்களே, சக ஜாதிங்கற முறையில ஒரு தலித் சாதிய... உதாரணத்துக்கு பறையன்னு சொல்லி யாராவது எழுதறாங்களா...)//
எந்த ஒரு தலித்தும் ஒரு பிராமணனைப் பார்த்து, "நீ பிராமணன் எங்கள் சேரிக்கு வரக்கூடாது.வந்தால் எங்கள் சேரிக்கு தீட்டு வந்துவிடும் என்று சொல்லவில்லை.ஆனால் பிராமணன் தான் மத்தவங்கள பார்த்து, நீ "செட்டி" கோவில் உள்ள வா ஆனா மூலஸ்தானத்துக்கு வராத, நீ "பறையன்" கோவில் உள்ளக் கூட வராதன்னு சொல்றான்.
கல்வி அறிவு பிராமணனுக்கு மட்டும் தான் மத்தவனெல்லாம் மாடுமேய்க்க போங்கடான்னு சொல்றது தலிதுங்க இல்ல முகவரிலிகாள் சாட்சாத்து பார்பணர்கள்(இராஜகோபலாச்சாரி)தான்.
வேத பாடங்களை பிராமணனத் தவிர மத்தவங்க கேட்டா, அவர்கள் காதுல ஈயத்தை காய்ச்சி ஊத்தச் சொல்றது தலித்துகள் இல்லை முகவரிலிகாள் உங்க பிராமணர்கள் தான்.
என்ன ஏதுன்னு தெரியரதுக்குள்ளேயே, தான் வகித்த பதவியை துச்சப்படுத்தி, தெருவுல இறங்கி உண்ணாவிரதம் இருக்க சொல்றது தான் ப்ராமண்னியம்,பூநூல் பாசம் சாரே. அதை எதிர்த்து இன்னும் 1950வருஷ்மாச்சும் ஜல்லி அடிச்சாதான் அது அடங்கும் முகவரிலிகாள்.

//இன்னும் ஜாதி ஜாதின்னு குண்டு சட்டிக்குள்ள குதிர ஒட்டிக்கிட்டே இருந்தா கல்வியில குத்தமா இல்ல பிரச்சினை வேற எங்காவதா??//

பூநூல் போட்டுகிட்டு நாங்கள் தனி ஜாதின்னு நீங்க மட்டும் தான் நிக்கிறிங்க வாத்தியரே. மத்தவனுக்கெல்லாம் (அரசியல் வாதிகள் தவிற)நீர் சொன்ன காலேஜுக்கு போரதுக்கு மட்டும் தான் ஜாதி சான்றிதழ் தேவைப்படுது.அதுவும் வேணாமுன்னுதான் நான் ஆரம்பத்திலிருந்து சொல்லிக்கிட்டுவரேன். குண்டு சட்டிக்குள்ள ஓடற குதிரையிலேயே முன்னாடி ஓடற பெரிய குதிரை உம்முடையது ஓய்.
 



////"வாழ தகுதியுள்ளதே வாழும்... தகுதியிருந்தால் வாழ்ந்தே தீரும்" ( தயாநிதி, அன்புமணிக்கெல்லாம் என்ன தகுதின்னு கேட்டு யாரும் அளும்பு பண்ண கூடாது) அதனால யாரயாவது குத்தம் சொல்லிகிட்டே இருக்காம தகுதிய வளத்துக்குவோம்...///

வாழத் தகுதியுள்ளது தான் வாழ மட்டுமல்ல, தன் சந்ததி வாழவும் ஏணிகள், லிப்டுகள் பல செய்து கொள்ளும் என்று திருத்திக் கொண்டால் அது தவறல்ல :-).
 



இராஜகோபலாச்சாரி நான் பிறக்கறதுக்கு முன்னாடியே இறந்து போயிட்டார் காஞ்சி பிலிம்ஸ்... அவர் சொன்னத இன்னமும் நினைச்சிகிட்டு இல்லாம வேற எதுனா யோசிப்போம். அப்புறம் உங்க சில கருத்துக்களுக்கு பதிலை - சரியா இருக்கும்னு - பதிவுலயே போட்டுட்டேன்... மீண்டும் ஒரு தடவை படிக்க வேண்டிய அசௌகரியத்திற்கு மன்னிக்கவும். சுட்டிக்காட்டியதற்கு நன்றி...
 



// வாழத் தகுதியுள்ளது தான் வாழ மட்டுமல்ல, தன் சந்ததி வாழவும் ஏணிகள், லிப்டுகள் பல செய்து கொள்ளும் என்று திருத்திக் கொண்டால் அது தவறல்ல // சாமான்யர்கள் இத உணரும் அளவு நம்ம தலங்க டைம் கொடுக்காதுங்க முத்து.. தமிழக அரசியல் அரங்கத்தில் அறிக்கைங்கற பேர்ல காமெடி, வாய்ச்சண்டை, வேட்டி கிழித்து அண்டர்வேர் காட்டும் கவர்ச்சின்னு தினம் தினம் புத்தம் புதிய ஈஸ்ட்மென் கலரில் படம் ரிலீஸாயிக்கிட்டே இருக்கும். கோமணம் உருவப்படறது தெரியாம எம்மக்கள் பாத்துகிட்டே இருப்பாங்க...
 



முக்குலத்தோர் என்று அரிவாளைத் தூக்கி கொண்டு அலைகிறார்களே, வன்னியர் என்று சொல்லி மரம் வெட்டினார்களே, தலித் ரிசர்வ் தொகுதிகளில் பஞ்சாயத்து செயல்பட விடாது தடுக்கிறார்களே அவர்களைப் பற்றியெல்லாம் எழுத வேண்டியதுதானே? பூணூல் மட்டும் பிரச்சினையா? இதே காஞ்சி பிலிம்ஸ் அவர்கள் தன்னுடைய பதிவாம் "ரஜினியும் வாலியும்" என்ற பதிப்பில் தேவையில்லாது "பார்ப்பன" வாலி என்று எழுதினார். எதற்கு தேவையில்லாமல் பார்ப்பன வாலி என்று போட்டீர்கள் என்று கேட்டதற்கு தமிழன் என்றப் பெயரில் எழுதுபவர் காஞ்சி அவர்களிடம் ஒப்புக்கு ஜாதி என்றெல்லாம் போடாதீர்கள் என்று கூறிவிட்டு மேலும் கூறுவார்: "இதோ வந்து விட்டார் முதல் பார்ப்பனர்" என்று என்னைப் பற்றி எழுதினார். அதனால் சீண்டப்பட்டதும் நான் "என் வெளிப்படையான எண்ணங்களை" எழுதியதற்கு ஒரு முக்கியக் காரணம்.
நான் அங்கு கூறியது, பிறகு என் பதிவுகளில் கூறியது எல்லாம் நீங்கள் படித்திருப்பீர்கள். அவற்றை நான் இங்கே மறுபடி கூறியதாக வைத்து கொள்ளுங்கள்.

பலருக்கு அதில் குமட்டலே வந்துவிட்டதாம். அவர்கள் செய்வது மட்டும் என்ன வாழுகிறதாம்? அதில் ஒருவர் எழுதுகிறார் "ஓலைப் பாயில் பேஞ்சது மாதிரி" என்று மிகக் கண்யமாக. இடக்கரடக்கல் என்பதை சேர்ப்பது புதியத் தமிழ் பண்பாடு போலும்.

பிரச்சினை ஒன்றுமில்லை. இத்தனை நாள் எதற்கு தேவையில்லாத சண்டை என்று விலகிப் போயினர் பார்ப்பனர். இப்போது அவர்களில் ஒருவன் எதிர்க்கேள்வி கேட்பது மற்றவருக்கு பொறுக்கவில்லை, அவ்வளவுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 



This comment has been removed by a blog administrator.
 



ghHg;gdg; gj;jphpiffs;:
rq;fuklj;jpd; ehbj;Jbg;G!
Nt.kjpkhwd;
பிரேமானந்தா கைதானபோதும் சரி, திருவாவடுதுறை இளையமடாதிபதி கைதான போதும் சரி, சமீபத்தில் சதுர்வேதி கைதான போதும் சரி, மக்கள் உணர்வை அந்தக் கைதுகள் பாதித்ததில்லை.
"என்னப்பா இது போலி சாமியார்கள் இவ்வளவு பெருத்துப் போய்ட்டாங்க' என்ற அபிப்பிராயத்தோடு முடித்துக் கொண்டார்கள்.
ஆனால் ஜெயேந்திரன் கைதான போதுதான் மக்கள் இன்ப அதிர்ச்சியில் திக்கு முக்காடிப் போனார்கள். பொது இடங்களில் இரண்டு நபர்கள் பேசிக் கொண்டால் கண்டிப்பாக அதில் ஜெயேந்திரனின் கைதும் இடம் பெறும்.
"என்ன இந்த ஆளு இவ்வளவு கேவலமா இருக்கானே?' என்ற ரீதியில் ஆரம்பித்து தங்கள் கவலைகளை கொஞ்ச நேரம் மறந்து, ஜெயேந்திரனின் உல்லாச, சல்லாப வாழ்க்கையைப் பற்றி கை கொட்டிச் சிரித்துப் பேசி மகிழ்ந்து விட்டுத்தான் கலைகிறார்கள். (இது ஒன்றுதான் ஜெயேந்திரனால் மக்களுக்கு கிடைத்த மகிழ்ச்சி) இத்தனைக்கும், சுவாரஸ்யமாகப் பேசுவதற்கு சதுர்வேதி மீது நிறைய பாலியல் குற்றச்சாட்டுகள் இருந்தும் மக்களின் மனதை உற்சாகமாக வைத்திருப்பதில் ஜெயேந்திரனே முன்னணியில் இருக்கிறார். இந்த வகையில் ஜெயேந்திரனுக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு.
மக்களின் மனநிலை இப்படி இருக்க தினமலர் நாளிதழ் கொஞ்சமும் கூச்ச நாச்சமில்லாமல் இப்படி செய்தி வெளியிடுகிறது. கீழ்க்கண்ட இந்தச் செய்திதான் தினமலரின் அரசியல், தத்துவம், பத்திரிக்கை தர்மம்.
அதாவது, ஆதாரத்தோடு இருக்கிற செய்திகளை பொய் என்பதும், ஆதாரமற்ற செய்திகளை மெய் போல் வெளியிடுவதும்தான் தினமலரின் பத்திரிக்கை தர்மம். இந்த தர்மம் ஆட்களை பொறுத்து ஆதரவாகவோ, எதிராகவோ வெளிப்படும். இதோ ஆதாரமே இல்லாமல் ஒரு ஆதரவு "செய்தி':

""காஞ்சி சங்கரமடத்தை அழிக்க நினைக்கும் சதியின் ஒரு அம்சமாக சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கைது அரங்கேற்றப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மட்டும் அல்லாது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேபாள மன்னரை மடத்தின் தீவிர பக்தராக மாற்றியது உட்பட பல தொழிலதிபர்களையும் மடத்தின் தீவிர ஆதரவாளர்களாக்கியது ஜெயேந்திரரின் நடவடிக்கைகள்தான் என்கிறது அவரது நெருங்கிய வட்டாரம்... ஜெயேந்திரரின் இந்த நடவடிக்கைகளால் மடத்தின் புகழ் பரவியது. இதைப் பிடிக்காமல் பலர் மடத்துக்குள்ளேயே குளறுபடிகள் செய்ய ஆரம்பித்தனர். இந்தக் குளறுபடிகளைச் சரி செய்ய முயன்ற போது அவருக்கு எதிராக கோஷ்டிகள் உருவாகின.... திடீர் திடீர் என மடத்து நிர்வாகிகளுடன் பெண்களைச் சம்பந்தப்படுத்திப் பேசுவது எல்லாம் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது... திட்டமிட்டு கொலை வழக்கில் அவரைச் சிக்க வைத்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் குமுறுகின்றனர். மடத்தில் உள்ள கோஷ்டிகளில் சிலர் இப்போது வெளியில் உள்ள மட எதிர்ப்பாளர்களுடன் ரகசிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது. சங்கராச்சாரியாரை சிறையில் அடைத்துவிட்டு மடத்தைச் சூறையாடவும் ஒரு கும்பல் திட்டமிட்டுள்ளதாக ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது...'' (தினமலர், 14.12.04)

வெட்கங் கெட்டதனத்தின் தமிழ்ப் பத்திரிக்கை வடிவம்தான் தினமலர்.

கருணாநிதி, திருமாவளவன், ராமதாஸ், கிருஷ்ணசாமி, லாலு பிரசாத், விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் இவர்களை தலைப்பிலேயே கேவலப்படுத்தி அவமானப்படுத்தி சவடாலாகச் செய்தி வெளியிடும் தினமலர், ஒரு கிரிமினலான ஜெயேந்திரனைப் பற்றி எப்படி பவ்வியமான தொனியில் தலைப்புகள் வெளியிட்டிருக்கிறது பாருங்கள்.

"ஜெயேந்திரர், கைதுக்கு எதிர்ப்பு. சாதுக்கள் போராட்டம்',
"ஆந்திராவில் நாளை 80 லட்சம் பேர் உண்ணாவிரதம்',
"ஜெயேந்திரர் கைதால் உலக அளவில் பக்தர்கள் கவலை' ஜார்ஜ் பெர்னாண்டஸ் பேட்டி,
"சகோதரர்கள், பக்தர்கள் உருக்கமான சந்திப்பு',
"வேலூர் சிறையில் ஜெயேந்திரர் சுகவீனம்',
"ஜெயேந்திரர் கைதுக்கு சர்வதேச சதி காரணம்' பக்தர்கள் பேரவை குற்றச்சாட்டு,
"வேலூர் மத்தியச் சிறையில் தரையில் உறங்கும் ஜெயேந்திரர்,'
"பாம்புகள் நடுவே வாசம்' (பாவம் பாம்புகள்!)
இப்படி "தானாடவில்லையம்மா தசையாடுது' என்று படிப்பவர்கள் மனதில் இரக்கத்தை ஏற்படுத்துகிற தொனியில் செய்தி வெளியிடுகிறது தினமலர்.
சரி, மோசடிப் பேர்வழி இந்து மதச் சாமியார் என்பதால் ஒரு இந்துமதப் பத்திரிக்கை மத உணர்வோடு இப்படி செய்தி வெளியிடுகிறது என்று பார்த்தாலும், இதோ இன்னொரு இந்து மோசடிப் பேர்வழியைப் பற்றி அதே தினமலர் எப்படிப் பாய்ந்து பிடுங்குகிறது பாருங்கள்.

"சாதாரண ஆள் இல்லீங்க இந்த சதுர்வேதி',
"பண்ணை வீட்டில் மாயாஜாலம்',
"செக்ஸ் சாமியார் சதுர்வேதி சதிராட்டம்'
இதுதான் பார்ப்பனிய தர்மம். பார்ப்பனிய ஒழுக்கம் என்பது, அடுத்தவர்களின் ஒழுக்கமின்மையைச் சுட்டிக் காட்டுவதன் மூலம் தம்மை ஒழுக்கமானவர்களாகச் சித்தரித்துக் கொள்வது; ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதல்ல.
பார்ப்பனியத்தின் இந்த மோசடி அவர்களின் இதிகாச, புராணப் புளுகுகளிலிருந்தே தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ""இராமனின் மனைவி சீதையின் மீது பிரியப்பட்டான் ராவணன்'' இப்படி அடுத்தவர் மனைவி மீது ஆசைப்பட்டதினால் அவனுக்குத் தக்க பாடம் கற்பித்து, அவனைக் கொன்று தனது ஒழுக்கத்தை உலகுக்கு அறிவித்த பார்ப்பனியம், இந்திரனை தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறது. இந்த இந்திரனின் "ஃபுல் டைம் ஒர்க்' அடுத்தவர்கள் மனைவிகளோடு உறவு கொள்வதே. அந்த உறவுக்காக எதையும் செய்பவனே இந்திரன். குறிப்பாக கடும்தவம் புரிகிற ரிஷி பத்தினிகளோடு உறவு கொள்வதில் கைதேர்ந்தவன் இந்திரன்.
சுருங்கச் சொல்ல வேண்டுமானால் இந்திரன், அந்தக் காலத்து ஜெயேந்திரன் விஜயேந்திரன்.

இந்த இந்திரனைத்தான் "தேவர்களின் தலைவன்' என்று கொண்டாடுகிறது பார்ப்பனியம். ""எங்களுக்கு மட்டுமே இந்திர சரஸ்வதி என்ற பட்டம் சொந்தமானது'' என்று பெருமைப் பட்டுக் கொள்கிறது காஞ்சி மடம்.
இந்திரனோடு ஒப்பிட்டுப் பார்த்தால் ராவணனை ஒழுக்கமானவன் என்று கூடச் சொல்லிவிடலாம். சீதை மீது மோகம் கொண்ட ராவணன் அவள் மீது தன் நிழல் கூடப் படாமல் பார்த்துக் கொண்டான். ராவணனின் முறையற்ற காதலுக்கு மரணதண்டனை வழங்கியது பார்ப்பனியம்.
தினத்தந்தியின் மொழியில் சொல்வதானால் "உல்லாசமாக இருந்தபோது கையும் களவுமாகப் பிடிபட்டார்கள்' என்கிற பாணியில் வாழ்ந்த இந்திரனின் முறையற்ற காமத்தை அங்கீகரிக்கிறது பார்ப்பனியம்.
இவைகளிலிருந்து பார்ப்பனியம் சொல்லுகிற நீதி, ""பார்ப்பõனல்லாத ஒருவன் பார்ப்பானின் மனைவியை மனதால் நினைத்தாலும் அவனுக்கு மரண தண்டனை. ஆனால் ஒரு பார்ப்பான் அடுத்தவர்கள் மனைவிகளோடு உறவு வைத்துக் கொண்டாலும், அது தண்டனைக்குரிய குற்றமல்ல.'' இதுதான் பார்ப்பனிய தர்மம். ஒழுக்கம். இதைத்தான் பார்ப்பனியப் பத்திரிக்கைகளான தினமலர், ஜூனியர் விகடன், துக்ளக் போன்றவை முதலாளித்துவ வடிவத்தில் மக்களுக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன.
--------------------

சரவணபவன் ராஜகோபாலின் காதலைக் கண்டறிந்து "அவர் கொலை செய்தார்' என்பதைத் துப்பறிந்து வெளியிட்ட பெருமை தினமலர், ஜூனியர் விகடனையே சேரும். தனக்கு "விளம்பரம் தருகிற பார்ட்டி' என்கிற சமரசம் இல்லாமல் உண்மையைத் துப்பறிந்து உலகுக்குச் சொன்னார்கள். (அண்ணாச்சியோ தினகரன், தினத்தந்தி, நக்கீரன் போன்ற பத்திரிக்கைகளை விட "அவாள்' பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்வதில்தான் ஆர்வம் காட்டுவார். அது அவரின் சைவத் தொழிலின் ரகசியம். தனிப்பட்ட லாபத்திற்காகவே பலபேர் பார்ப்பன அடிமையாக இருப்பதின் ரகசியமும் அதுவே. இதில் புதுவரவு "தேவி' வார இதழ்.)
ஆனால், "ஜகத்குரு ஒரு ஆளை ஜகத்தை விட்டே அனுப்பிவிட்டார்' என்பதை "நக்கீரன்' துப்பறிந்து தொடர்ந்து எழுதியபோதும் கூட ஜூனியர் விகடன் "துப்புக் கெட்டு'க் கிடந்தது. பிறகு லோக குரு கைதாகி லோல்பட ஆரம்பித்த பிறகே வேறு வழியில்லாமல் "கடவுள்' செய்த கொலையைப் பற்றி செய்திகள் வெளியிடத் தொடங்கியது.
அந்தச் செய்திகளை அது இப்படி வரையறுத்துக் கொண்டு வெளியிடுகிறது. "ஜெயேந்திரன் கொலை வழக்கில் சிக்கி இருப்பதற்குக் காரணம் அவர் கொலை செய்ததால் அல்ல, சங்கர மடத்தின் கோஷ்டி தகராறால்' என்கிற பின்னணியில்.
இதில் ஜூனியர் விகடன் ஜெயேந்திரன் கோஷ்டி. (இந்து என்.ராம், டி.என். சேஷன் போன்றோர் விஜயேந்திரன் கோஷ்டி.) இந்தக் கொலையில் ஜெயேந்திரனின் பங்கை அரசல் புரசலாக எழுதும் போது கூட, "வாசகர்களுக்கு ஜெயேந்திரன் மீது அனுதாபத்தை உண்டு பண்ணுவதுபோல் எழுத வேண்டும்' என்பது விகடன் ஆசிரியர் குழுவிற்கு, ஆசிரியர் இட்ட கட்டளை போலும்! இதோ கழுகார் சொல்லுகிறார்:
""ஜெயேந்திரர் அணி, விஜயேந்திரர் அணி என்று இரண்டு கோஷ்டிகள் எதிரும் புதிருமாக கோலோச்சி வந்த கதை இது. இந்த அணிகள் பரஸ்பரம் குழி பறிப்பு வேலையிலேயே மூழ்கி இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தக் குழி பறிப்பின் உச்சகட்டமாகத்தான் இன்று கொலை வழக்கு ரேஞ்சுக்கு அசிங்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
"ஜெயேந்திரர் கைதாகி சிறை செல்ல வேண்டும். அதைத் தொடர்ந்து விஜயேந்திரர் எந்த தங்கு தடையும் இன்றி செயலாற்ற வேண்டும். தேவைப்பட்டால், ஆளும் அரசின் விருப்பங்களையும் சிக்கலில்லாமல் பூர்த்தி செய்யவேண்டும். அந்த எண்ணத்தின் அடிப்படையில்தான் கைது நடவடிக்கை கனகச்சிதமாக அரங்கேற்றப்பட்டது' என்கிறார்கள் இந்த சிலர்!''
— இதுதான் ஜெயேந்திரன் வழக்கை ஜூனியர் விகடன் துப்பறியும் பாணி, சீனியர் விகடனும் இதே பாணிதான். அதுதான் ஆளையே மாத்திடும் (பைத்தியக்காரனா மாத்திடும்) ஆனந்த விகடன்! உதாரணத்திற்கு ஆ.வி.யில் இருந்து ஒரு சில பிட்டுக்கள்:
""ஜெயேந்திரரின் ஜாதகக் கட்டங்களைப் புரட்டிப் பார்த்த விசுவாசிகள், புது விஷயம் சொல்கிறார்கள். "பெரியவாளுக்கு எட்டுல சனி, டிசம்பர் 20ஆம் தேதிக்கு மேல் கஷ்டமெல்லாம் பனியாப் பறந்துடும். அவரை இந்தப் பாடு படுத்தறவாளுக்கு வர்ற ஜனவரியிலிருந்து கஷ்ட தசை ஆரம்பம். இன்றையநிலைமை புது வருஷத்தில் அப்படியே தலைகீழாகும்' என்கிறார்கள்.
இது எப்படி இருக்கு?
இந்தப் பாணியிலேயே எழுதிகிட்டே வந்து, இன்னும் கொஞ்ச நாளில் "சங்கரராமனை ஆள் வைத்துக் கொன்னது அவரு சம்சாரம்தான்'னு எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏன்னா, அதான் ஆளையே மாத்தற ஆனந்த விகடனாச்சே!
------------
ஜெயா டி.வி.யிலே "அரிகிரி அசெம்பிளி'ன்னு ஒரு அநாகரிகமான நிகழ்ச்சியைப் பார்த்து இருப்பீர்கள். அந்த அநாகரிகமான நிகழ்ச்சியிலே ரெண்டு பைத்தியங்கள் நிகழ்ச்சி நடத்தியதையும் கவனித்திருப்பீர்கள். அதுல ஒண்ணு மொட்டை அடிச்சிக்கிட்டு இருக்கும். அது பேரு பாஸ்கி. இந்தப் பைத்தியம் ஆனந்தவிகடனில் சோகமான மனநிலையோட ஒரு நகைச்சுவைப் பக்கம் எழுதியிருக்கு. இதோ அது செய்த "ஜாலி கற்பனை':
"போலீஸ் விசாரணை' என்கிற பேரில் ஜெயேந்திரர் மீது கேஸ் மேல் கேஸ் அடுக்கிக் கொண்டே போகிறார்கள்! போகிற போக்கைப் பார்த்தால், இனிமேல் கீழேவரும் கேஸ்களில் கூட அவரைச் சந்தேகப்படுவார்களோ, என்னவோ?!
மடத்துக்குத் தேவையான சந்தன சப்ளையில் வீரப்பன் மோசடி செய்ததால் ஆத்திரமடைந்த ஜெயேந்திரர், வீரப்பனைத் தீர்த்துக் கட்டிவிட்டார் என்கிறது எஸ்.டி.எஃப் போலீஸ்!

"ராஜீவ் காந்தியைக் கொன்ற தற்கொலைப் படைப் பெண்மணி தணுவின் கையில் இருந்த பூமாலைகூட ஜெயேந்திரர் வழக்கமாகப் பூ வாங்கும் பூக்காரி தொடுத்ததோ?' என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.

இவை தவிர மகாத்மாகாந்தி, ஆப்ரஹாம் லிங்கன், கென்னடி போன்றோர் கொல்லப்பட்ட வழக்குகளில் கூட ஜெயேந்திரருக்குத் தொடர்பு இருக்கக் கூடும் என்று இன்டர்போல் ஆராய்ந்து வருவதாகக் கேள்வி!
இது நகைச்சுவையாம்! இதைப்படிக்கிற சங்கரமட பக்தருக்கு ஜெயேந்திரன் மீது பரிதாப உணர்வு வரும். நமக்கு கோபம் வருகிறது. இந்த எழுத்தை அது "ஜாலியாக கற்பனை' செய்ததாம். இந்த ஜாலியில் பாஸ்கியின் ரத்தக் கண்ணீர் தெரிகிறது.
சிலர் சிரிப்பார், சிலர் அழுவார், ஆனால் இவர் சிரித்துக் கொண்டே அழுகின்றார்.

இந்தக் காரியப் பைத்தியம் பாஸ்கி வேறு யாரும் அல்ல. தலைவர் ஸ்டாலினைப் பற்றி கேவலமாக எழுதிய, நம்ம "கக்கா' மதன், அதான் "ஆய்' மதன் இவருக்கு அத்திம்பேர்!
---------------

மொட்டைத்தலை என்றவுடன்தான் "சோ'வின் யோக்யதை ஞாபகத்திற்கு வருகிறது. ஜெயேந்திரன் கைதில் "சோ' என்ன சொல்லியிருப்பார்? அவர் எதுவும் சொல்லாமல் இருந்தாலே "அவர் கருத்து இதுவாகத்தான் இருக்கும்' என்பது முன் முடிவான ஒன்று. கழுதை வாய்திறந்தால் குயில் போலவா கூவும்?
ஆனாலும், துக்ளக்கைப் படிக்கும்போதுதான் ஜெயேந்திரன் கைதில் இன்னொரு மகிழ்ச்சியான சம்பவம் நடந்திருப்பது தெரியவருகிறது. அதாவது "சோ'வுக்கு பைத்தியம் பிடித்திருப்பது.
சங்கரமடம் அவரின் உயிராக இருக்கிறது. இப்படி ஒரு கைது நடந்திருப்பதைத் தாங்கிக் கொள்ளும் சக்தி சோவுக்கில்லை. பதட்டத்தோடு இருக்கிறார். பதட்டத்திலும் அவர் கருணாநிதியை வசைபாடுவதை, பெரியார் கொள்கைகளை திட்டித் தீர்ப்பதை நிறுத்தவில்லை. (பார்ப்பான் பைத்தியக்கார நிலையில் இருந்தாலும் பெரியாரைத் திட்டுவதில் மட்டும் தெளிவு இருக்கும்போல.)
ஜெயேந்திரனைக் கைது செய்தது ஜெயலலிதா. சோ திட்டுவது கருணாநிதியை. (சோவிற்கு கடா பல்லில் வலி வந்தால் கூட கருணாநிதி சிரித்து சந்தோசமாக இருக்கிறார், அதனால்தான் எனக்குப் பல் வலிக்கிறது என்பார் போலும்.)
"ஜெயேந்திரன் கொலை செய்திருக்கமாட்டார்' என்று உறுதியாக நம்புகிறார். ஆனாலும் "அரசு ஆதாரமில்லாமல் கைது செய்திருக்காது' என்றும் மிரளுகிறார். சோ குழம்புகிற குழப்பத்தில் அவர் மொட்டைத் தலையில் "மயிரே' முளைத்து விடும்போல் தெரிகிறது. அதனாலேயோ என்னவோ அவரின் "கேள்வி பதில்' பகுதி வழக்கத்தைவிட அருவெறுக்கத்தக்க நிலையில் கேவலமாக இருக்கிறது.
வி.எஸ். கவிதா மீனா,
செட்டிப்புலம

கே: ஜெயேந்திரரை, சங்கரராமன் தொடர்ந்து ப்ளாக் மெயில் செய்து மிரட்டிக் கொண்டே இருந்திருக்கிறாரே! அது குற்றமில்லையா?

ப: பத்திரிகைச் செய்திகளை வைத்துப் பார்க்கிறபோது, சங்கரராமன் செய்தது "கிரிமினல் இன்டிமிடேஷன்' என்கிற குற்றத்திற்கான பிரிவின் கீழ் வரக்கூடிய தன்மை படைத்த செயல் என்று கூறலாம். இதைத் தவிர, வேறு பெயரில் மறைந்து கொண்டு, சம்பந்தப்பட்ட கடிதங்களில் சிலவற்றை எழுதியதால், அது தனிப் பிரிவின் கீழ் வரும். இரண்டுமே குற்றங்கள். ஒவ்வொரு குற்றத்திற்கும், இரண்டாண்டு காலம் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கலாம். ஆனால் சங்கரராமன் உயிருடன் இல்லாதபோது, இது சட்டத்தை அறிந்து கொள்கிற சமாச்சாரமே தவிர, நடவடிக்கை கேட்கிற கோரிக்கை அல்ல.
கொலை செஞ்சதுக்கு என்னய்யா தண்டனைன்னு கேட்டா, இவரு ப்ளாக் மெயிலுக்கான தண்டனையைப் பத்தி எழுதுறாரு. அப்போ சங்கரராமன் என்ன தற்கொலையா செஞ்சிக்கிட்டாரு? சோவின் இந்த வக்கிரத்தைப் படிக்கும்போது நமக்கு ஒன்று ஞாபகம் வருகிறது. ஒரு திரைப்படத்தில் சிவாஜி, சோவைப் பார்த்துப் பாடுவார், ""போட்டாளே, போட்டாளே உன்னையும் ஒருத்தி பெத்துப் போட்டாளே'' என்று. இந்தப் பாடல் சோவின் கதாபாத்திரத்தைப் பார்த்துப் பாடிய பாடலாகத் தெரியவில்லை.
ஜெயேந்திரன் கம்பி எண்ணுகிறார்; சோ பைத்தியக்காரனாகி இருக்கிறார். மக்கள் கை கொட்டிச் சிரித்து மகிழ்கிறார்கள். ஒரு சம்பவம் எல்லோருக்கும் ஒரே மாதிரியான உணர்வை ஏற்படுத்துவதில்லை. சிலர் உளறுவார், பலர் மகிழ்வார்.
---------------------

கடைசியாக ஒன்று:

பக்தர்கள் ஜெயேந்திரனை நம்ப வேண்டாத நேரத்தில் நம்பினார்கள். நம்ப வேண்டிய நேரத்தில் நம்ப மறுக்கிறார்கள். ஜெயேந்திரனை நாம் எப்போதுமே நம்பியதில்லை. ஆனால் இப்போது நம்புகிறோம். அவர் இந்தக் கொலையைச் செய்திருப்பார். இன்னும் இதற்கு மேலே பல கிரிமினல் வேலைகளையும் செய்திருப்பார்.
"அக்கிரகாரத்து அழகிகள்'
பார்ப்பனியம் மற்ற சாதிக்காரர்களுக்குச் செய்த தீங்கை விடவும் தன் சொந்தச் சாதிப் பெண்களுக்குச் செய்த தீங்கு சொல்லித் தீராது. விதவைகளை அவமானப்படுத்தி, கொடுமைப்படுத்தி, உயிரோடு கொளுத்தியிருக்கிறது பார்ப்பனியம். கங்கை நதியின் வற்றாத தன்மைக்குக் காரணம், அதில் தள்ளிக் கொலை செய்யப்பட்ட பார்ப்பன விதவைப் பெண்களின் கண்ணீரே என்றாலும் மிகையாகாது.
சிறுமிகளை கிழட்டுப் பார்ப்பானுக்கு மணம் முடித்துக் கொடுமைப்படுத்தியது பார்ப்பனியம். பார்ப்பனத் திருமணங்களில் பெண்ணை தந்தை தன் மடியில் உட்கார வைத்துத் "தாரை வார்த்துக் கொடுப்பது' பால்ய விவாகத்தின் மிச்ச சொச்ச பழக்கம்தான். சிறுமி மணமேடையில் அமராமல் விளையாட்டுத்தனமாக எழுந்து ஓடி விடாமல் தடுக்க, தந்தை மடியில் உட்கார வைத்துப் பிடித்துக் கொண்டதனால் ஏற்பட்ட பழக்கம் அது.
"ஆணுக்குப் பெண் மட்டமில்லை'யென்று பர்ப்பனப் பெண்கள் கருதலாம். உண்மையும் அதுதான். அவர்கள் பிரதமர் பதவியில் கூட அமர முடியும், ஆனால் சங்கராச்சாரியாக முடியாது. ஏன் சங்கர மடத்தில் ஒரு குமாஸ்தா வேலை பார்ப்பதற்குக் கூட அவர்களுக்கு அனுமதி கிடையாது. ""வேலைக்குப் போகும் பெண்களெல்லாம் ஒழுக்கம் கெட்டவர்கள்'' என்பது ஜெயேந்திரனின் "அருள் வாக்கு'. பார்ப்பனியம் என்பது மற்ற சாதியினரை மட்டுமின்றி பார்ப்பனப் பெண்களையும் கொடூரமாக ஒடுக்கி வந்திருக்கிறது. இந்தக் கணம் வரை இது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. சுயமரியாதை உள்ள எந்தப் பெண்ணும், பார்ப்பனியத்திற்கு எதிரானவராகத்தான் இருப்பார். இருக்க வேண்டும். இதற்கு மேலும் பார்ப்பனப் பெண்கள் ஜெயேந்திரனுக்காக உண்ணாவிரதமிருந்தால், அவர்களை "அக்கிரகாரத்து அழகிகள்' என்றுதான் அழைக்க வேண்டி வரும்.

— வே. மதிமாறன
 



nul;il ehf;F mk;gpfs;!
""அவா அவா செய்த கர்ம வினையை அவா அவா அனுபவிச்சே ஆகணும்! போய் அம்பாளுக்கு நெய் தீபம் போடுங்கோ!'' என்று "மத்தவாளு'க்குத் தத்துவம் பேசும் பார்ப்பனக் கும்பல், செக்ஸ் அண்டு கிரைமாதிபதிகளான ஜெயேந்திரன், விஜயேந்திரன் விஷயத்தில் எவா எவாளப் பாத்தா டில்லியில காரியம் நடக்கும் என்று படைகட்டி வேலை செய்வதுடன் இந்தக் கயவர்களின் பாங்கனாக துக்ளக், தினமலர் வகையறாக்களை வைத்து இது பொய்வழக்கு, போலீஸ் ஜோடனை, மனித உரிமை மீறல் என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டது.
ஏற்கெனவே வாயைத் திறந்ததற்கே வாய்தா மேல் வாய்தா என்பதால் "பெரிசு' மவுன விரதம் சாதிக்கிறது. "அட்சர சுத்தமாய்' புளூ ஃபிலிமை பூக்கூடைக்குள் போட்டு வாங்கத் தெரிந்த "சிறுசோ' ஆயிரம் விளக்கு போலீசு நிலையத்தில் இடது கைப் பெருவிரலைக் கை நாட்டி வாரா வாரம் சட்டத்தின் முகத்தில் பீச்சாங்கையை வைத்து நக்கலாகச் சிரிக்கிறது. விளக்குக் கம்பத்தில் கட்டித் தோலை உரிக்க வேண்டிய இந்த இரண்டு சமூக விரோதிகளுக்காகவும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., பார்ப்பன ரவுடிகள் முதலாக, ஆர்.வி., சேஷன், சோ, தினமலர் கிருஷ்ணமூர்த்தி போன்ற கேடிகள் வரை ""எப்படி எங்களவா மேல வழக்கை வைக்கலாம்?'' என்று வரிந்து கட்டிக் கொண்டு வந்து விட்டனர். பின்னே, கதாநாயகர்களைக் கைது செய்தால் பாங்கர்களுக்குப் பதறாதா?
குறுந்தொகைப் பாடல் கூறுவதைப் போல
""பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!
எழுதாக் கற்பின் நின் சொல்லுள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ! மயிலோ இதுவே!''
பிரிந்தோர் கூடுவதற்கான வேலைகளைச் செய்ய, ஊருக்குத் தெரியாமல் கூட்டிக் கொடுக்க பார்ப்பன மகனாம் பாங்கனை அழைப்பதே பழைய மரபு. இப்போது, ""ஆமாம், நான்தான் சங்கர்ராமனைப் போட்டேன்! அனுராதா ரமணனை லுக்கு விட்டேன்! சொர்ணமால்யாவுக்குச் சொடக்குப் போட்டேன்! இப்ப என்னாங்குறே? ஆதாரம் இருக்கா?'' என்று வக்கீலை வைத்து விவாதிப்பதோடு, துக்ளக், தினமலரை வைத்து ""போலீசை நம்பமுடியாது'' என்று புராணமும் பாட ஆரம்பித்து விட்டது பார்ப்பனக் கும்பல்.
தமிழகத்தில் பிற உழைக்கும் மக்களும், அரசு ஊழியர்களும், அரசியல் கட்சிகளும், புரட்சிகர இயக்கங்களும் போலீசு அராஜகத்தை எதிர்த்துப் போராடும் போதெல்லாம் போராடுபவர்களை நக்கலடித்தும், உள்நோக்கம் கற்பித்தும், "அக்கார்டிங் டு லா (சட்டப்படி)' என்று வக்கணை பேசிய பார்ப்பனக் கும்பல், கேவலம் பொம்பளைப் பொறுக்கி காஞ்சி மடாதிபதிகளுக்காகக் கச்சம் கட்டிக் கொண்டு போலீசை எதிர்த்து கார்ட்டூன் போடுவதென்ன?
""பேச நா இரண்டு உடையாய் போற்றி!'' என ஆரியமாயையில் அண்ணாதுரை சொன்னதுபோல, அவாளின் சாதிவெறி நாக்கை இழுத்து வைத்து அறுக்க வேண்டாமா?
ஆழ்வார்ப்பேட்டை ஆளுடா!
அண்ணா சாலை நூலுடா!
இன்று சங்கராச்சாரியை, பெரிசையும் சின்னதையும் போலீசு காவலில் நடத்திய விதம் "டூ மச்!' என்றும், மேலிடத்து உத்திரவு என்றும் புலம்பும் சோ பார்ப்பனக் கும்பல், சாதாரண மக்கள் போலீசாரால் சித்திரவதைக்குள்ளாகும்போதும், ஒரு குடம் தண்ணீருக்காகத் தடியடி நடத்தும் போதும் நியாய அநியாயங்களைப் பேசாமல், ""எது தர்மம்'' (துக்ளக், 16.1.2002) என்று ""நதர்மா அதர்மௌ சரதி ஆவம் ஸ்வ இதி'' என்று லத்திக்கம்பால் வேத வியாக்கியானம் காட்டியதோடு, ""போலீசுக்காரர் என்ன ஸ்கவுட்டா? கூட்டத்தினரைப் பார்த்து, எல்லோரும் தயவு செய்து விலகிவிடுங்கள்; மகாத்மா காந்தி அமைதியாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்; ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி சொல்லியிருக்கிறார், எல்லோரும் அமைதியாக விலகவேண்டும் என்று கூறிவிட்டு மூலையில் போய் உட்கார்ந்து கொள்ள முடியுமா? அதுதான் போலீசாரின் கடமையா? நாலு பேரையாவது பிடித்து அடி அடி என்று அடித்தால்தான் கூட்டமே சிதறி ஓடும். அது அவர்களுடைய தர்மம். போலீசு ஸ்டேஷனில் ஒருவனை சித்திரவதை செய்தார்கள் என்று செய்திவரும், உடனே எல்லோரும் பெரிய அட்டூழியம், போலீசு அராஜகம் என்று சொல்வோம். பிடித்தவனை நாலு அடி கொடுக்கட்டும், அப்படியாவது திருட்டுப் போன சாமான் கிடைக்கட்டும் என்பதுதானே நமது எண்ணமாக இருக்கும்?'' என்று போலீசுக்கு வக்காலத்து வாங்கிய சோ இப்போது உள்ளே இருப்பது மகா அயோக்கியனாக இருந்தாலும் அவாளாக இருப்பதால் ""அவருடைய பெயரைக் கெடுக்கக் கூடிய வதந்திகளைச் சேகரிப்பதுதான் போலீசின் வேலையாகி வருகிறது... அதுமட்டுமல்ல போலீசுத் துறையின் ஒலிபெருக்கியாகி போலீசுதரப்புப் பிரச்சாரம், புலனாய்வு என்ற அந்தஸ்தைப் பெற்று பத்திரிக்கைகளை பிட் நோட்டீஸ் பிரசுரங்களாக மாற்றிவிட்டது'' (22.12.2004, துக்ளக்) என்று போலீசு சொல்வதை அப்படியே ஏற்க முடியாது என்று தனக்கொரு நியாயம் பேசுகிறது ஆரியக் கைத்தடி.
போலீசு அத்துமீறலை உழைக்கும் மக்கள் கேள்வியின்றி ஏற்க வேண்டும் என்பதற்குப் புராணத்தையும், வேதத்தையும் பிட்நோட்டீசாக்கி நம்மிடம் விநியோகிக்கும் இந்த "நடுநிலைவாதி'க்கு, கொலைகாரப் பாவிக்கு லாடம் கட்டாமல், குற்றச் செயல்களை வெளியிடுவதே அத்துமீறலாகப் படவேண்டிய அவசியமென்ன? திருமூலரைப் போல, இந்த சாலத்தனத்தைப் பார்த்து ""நாதம் ஏது? வேதம் ஏது? நற்குலங்கள் ஏதடா; வேதம் ஓதும் வேதியா விளைந்தவாறு பேசடா!'' என்று நாம் தான் ஏடு கிளப்பியாக வேண்டும்.
கருணாநிதி, புராணங்களை எடுத்துப் பேசினாலே, "இந்துக்களை இழிவுபடுத்துகிறார்' என்று நூல்விடும் தினமலரோ, தான் ஏற்றிப் போற்றும் விண்ணகக் கடவுளே பூமிக்கு வந்தாலும் ஜெயலலிதா போலீசு பொய்வழக்கு போட்டுவிடும் என்று பயந்து ஒளிவதாகக் கேலிச் சித்திரம் வரைகிறது. (பார்க்க: தினமலர் கேலிச் சித்திரம்) ஏழு லோகத்தையும் ஆட்டிப் படைப்பதால் ஏற்றி விடும் கடவுளை கேவலம் போலீசின் லத்திக் கம்புக்குப் பயந்தவனாய்க் காட்டுவது மட்டும் இந்துக்களுக்கு இழிவில்லையா? ஏற்கெனவே, பிட்டுக்குப் பிரம்படி வாங்கிய பெருமான் உங்கள் சங்கரமட "பிட்டுக்கு' மட்டும் முதுகைக் காட்டமாட்டானா என்ன? ""தனக்கு ஆதாயம் இல்லை என்றால் பார்ப்பான் கடவுளைத் தூக்கிப் போட்டு விடுவான்'' என்று பெரியார் சொன்னது "பெரியவா' விசயத்தில் விளங்குகிறது.
கடவுளைக் கடாசுவது கூட ஒரு பக்கம் இருக்கட்டும். தெருவில் அல்லல்பட்டுக் காய் விற்கும் ஒரு கூடைக் காரியிடம் கூட எதற்கெடுத்தாலும் சட்டவாதம் பேசும் பார்ப்பனக் கும்பல் கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்த போது இரட்டை நாக்குப் பேர்வழி சோ, ""சட்டத்தில் அவ்வாறு இடமுண்டு'' என்று பேசியதோடு, ""மத்திய அமைச்சர் மாறனும், டி.ஆர். பாலுவும் கடமையைச் செய்த போலீசாரைத் தடுக்க முனைந்தனர்... இதையெல்லாம் சாதாரணக் குடிமகன் செய்தால் சட்டப்படி குற்றம்? ஆனால் மத்திய அமைச்சர்கள் செய்தால்? அப்படி ஓர் உரிமை அவர்களுக்கு எந்தச் சட்டத்தில் தரப்பட்டிருக்கிறது?'' (11.7.2001, துக்ளக்) என்று சட்டவாதம் பேசும் சட்டாம் பிள்ளைகள், காமக் கொடூரன் ஜெயேந்திரனை ஜாமத்தில் பிடித்த போது டி.வி.யில் குமுறும் அம்பிகள் வரை, ""இட் இஸ் ஹியூமன் ரைட்ஸ் வயலேஷன்... தாட்... பூட்..'' என்று தாண்டிக் குதிப்பது ஏன்? சட்டப்படி சங்கராச்சாரி முன்வராமல், ஆறுமணி நேரம் அண்டர்கிரவுண்ட் வேலை பார்த்தது ஏன்? சோவின் முட்டைக் கண்ணுக்கு இந்த முறைகேடு தெரியாத மர்மம் என்ன?
20.3.2002, துக்ளக், அட்டைப்படத்திலேயே (பார்க்க: படம்) ""என்ன இது? பந்தோபஸ்து அமர்க்களப்படுதே! ஜனாதிபதி, கவர்னர், பிரதமர் யாராவது வராங்களா?'' ""அதெல்லாம் ஒண்ணுமில்லே! ஒரு தீவிரவாதியை கோர்ட்டுக்கு அழைச்சிகிட்டுப் போறாங்க'' என்று அரசியல்வாதிகளை "சட்டப்படி' நடத்துவதையே நக்கலடிக்கும் சோ அம்பிக்கு ஒவ்வொரு வாய்தாவுக்கும் கோர்ட் வளாகத்தில் பார்ப்பனத் தடியர்களும், பாரதிய ஜனதாக் கொடியர்களும் ஜெயேந்திரனுக்குப் புடைசூழ வருவதும், டி.எஸ்.பி. போலீஸ் படை என்று வாகனங்கள் புடைசூழ வருவதும், காஞ்சிபுரத்து வழக்கறிஞர்களே ""இது என்ன கோர்ட்டா? மடமா?'' என்று விரட்டுமளவுக்கு இந்தக் காவி உடைப் பாவிகளுக்குக் களேபர பந்தோபஸ்து நடப்பது மட்டும் கேவலமாகப் படவில்லையே, ஏன்?
""கோவைச் சிறையில் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு செல்போன்?'' என கட்டம் கட்டி எழுதியது தினமலர்; வேலூர் ஜெயிலில் ஜெயேந்திரன் விளக்கு, பூ, பழம், பூசை வரை போட்டதையும், "சின்னவன்' சென்னைச் சிறைக்கு நெய்யில் வறுத்த பாதாம்பருப்பு வாளியை நகர்த்திக் கொண்டு போனதையும் எந்தச் சட்டம் அனுமதிக்கிறது? ஏன் அண்ணாசாலைப் பூணூலுக்கு இந்தச் செய்தி அகப்படவில்லை? இதுமட்டுமல்ல, ஈழ அகதிகளுக்கும் சிறையிலிருக்கும் போராளிகளுக்கும் ஒரு பால் டின் தந்தால் கூட "போலீசில் சில "மால்' ஆட்கள்! அபாயம்!' என்று அலறும் தினமலருக்கு, ஜெயேந்திரனுக்கு போலீசு காவலில் தொடங்கி வேலூர் சிறை வரைக்கும் செய்து கொடுக்கப்பட்ட சிறை வசதிகள் பற்றி கட்டம் கட்ட ஏன் கை வரவில்லை?
சிறையில் அடைக்கப்பட்ட புலிகளை மொட்டைத் தலை முருகன் என்றெல்லாம் கேவலப்படுத்திய அவாள், "மொட்டைத் தலை' விஜயேந்திரனையும், "ஊத்தைவாய்' ஜெயேந்திரனையும் பற்றி மற்ற பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுவதைப் பற்றி மட்டும், ""சங்கராச்சாரியாரின் பெயரையும், மடத்தின் மதிப்பையும் நாசம் செய்துவிட வேண்டும் என்ற முனைப்பில் தங்கள் செயல்பாடுகள் பெண்கள் பலரை அவமானப்படுத்துவதில் முடிகிறது என்பதைப் பற்றிக் கூட போலீசாரும், பத்திரிக்கை உலகமும் கவலைப்படவில்லை'' (22.12.2004, துக்ளக்) என்று அங்கலாய்க்கிறார்கள். ""வேலைக்குப் போகும் பெண்களிடம் "சுத்தம்' கியைடாது'' என்று ஜெயேந்திரன் உழைக்கும் பெண்களை இழிவுபடுத்தியபோது நியாயம் பேசாத சோவும், தினமலரும் அனாதைப் பார்ப்பனச் சிறுமிகளையும் விட்டு வைக்காத அயோக்கிய மடாதிபதிகளுக்கு ஆஜராவது ஏன்?
சூத்திரர் என்றால் தோலை உரி
பார்ப்பான் கொன்றால் மனித உரிமை!
""நள்ளிரவில் சென்று கைது செய்திருக்கக் கூடாது என்ற அபிப்ராயமும் பேசப்படுகிறது'' (24.11.2004, துக்ளக்) என்று பேசும் சோ, சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் போலீசு தடியடி நடத்தியதைப் பற்றிய கேள்விக்கு ""அந்தச் சூழ்நிலையில் அது தேவைப்படவில்லை என்று எப்படி நிச்சயமாக கூறுவது? அந்தத் தடியடி நடக்கவில்லை என்றால் பெரும் கலவரமே கூட வெடித்திருக்கலாம்..'' என்று மாணவர்கள் மீது தடியடி நடத்தியதைச் சரி என்கிறார். அப்படியென்றால் சம்மனை வைத்துக் கொண்டு அரெஸ்ட் செய்யப் போன போலீசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சங்கராச்சாரியையும், சுற்றியுள்ள பார்ப்பனத் தடியர்களையும் சட்டப்படியே வெளுத்திருக்க வேண்டாமா? சோவின் "எச்சரிக்கை' மூளை இந்த விசயத்தில் இயங்காதது ஏனோ?
இது மட்டுமல்ல. வீரப்பனுக்கு உதவியதாக சந்தேகத்துக்கு உள்ளான மலைவாழ் மக்களை சிறை, சித்திரவதை, பாலியல் கொடுமைகளை இழைத்து மைசூர் சிறையில் வாட்டியபோதும், குறிப்பாக, பல மலைவாழ் பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் தேவாரத்தைப் பாராட்டி, ""வீரப்பனைப் பிடிப்பதிலும் ஒரு புதிய தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. தேவாரத்தின் நியமனம் முன்பு பணியாற்றிய விஜயகுமார் என்ற போலீசு அதிகாரிகளின் நியமனம் ஆகியவை முனைப்புக்கு அத்தாட்சிகளாகத் தெரிகின்றன.'' (20.6.2001, துக்ளக்), என்று போலீசு நடவடிக்கைக்குத் தோரணம் கட்டிய பார்ப்பன சோவும், பிஜேபி கும்பலும், காஞ்சி மாவட்ட எஸ்.பி.யாக பிரேம்குமார் நியமிக்கப்பட்டவுடன் சங்கராச்சாரியை அவர் விசாரித்ததால், அவர் ஏற்öகனவே மனித உரிமை மீறியவர் என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறது.
போலீசுக்கும் மனித உரிமைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது ஏழை மக்களுக்குத் தெரியும். ஆனால் மனித உரிமை பற்றி வாய்கிழியும் வக்கிரக் கண்ணன் சோவோ, வீரப்பன் வேட்டையில் நடந்த அத்துமீறல்கள், மனித உரிமை மீறல்களுக்காக என்ன சொல்கிறார்?: ""அநியாயம் நடந்துவிட்டது என்று குற்றம் சாட்டுகிற மனித உரிமைக்காரர்களிலிருந்து பலரும்.... மற்றபடி இதற்கு எந்தவிதமான அங்கீகாரமும் கிøடயாது. சுயவிளம்பர விசாரணைக் குழுக்கள் அளிக்கும் முடிவுகள் யாரையும் கட்டுப்படுத்தவும் செய்யாது. பத்திரிக்கைகள் அளிக்கிற முக்கியத்துவம், ஒரு பிரச்சார உத்தியை, நியாயத் தீர்ப்பாக மாற்றி விடாது'' என்ன ஒரு வக்கிரம்? நடந்தவைகளைப் பற்றிச் சொல்வது உத்தியாம், பிரச்சாரமாம்!
""தர்மபுரியில் நக்சலைட் சிவா சுட்டுக் கொல்லப்பட்டதில் மனித உரிமை மீறல் உள்ளது என்று மனித உரிமை அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளது பற்றி?'' என்ற கேள்விக்கு (18.12.2002, துக்ளக்) ""தீவிரவாதிகளையும், குற்றவாளிகளையும், சமூக விரோதிகளையும் மட்டுமே மனித உரிமைக்காரர்கள் மனிதர்களாகக் கருதுகிறார்கள். அவர்களால் பாதிக்கப்படுகிற அப்பாவிகளை மனிதர்களாகக் கருதுவதே இல்லை. அதனால்தான் இந்த மாதிரி வக்கிரமான புகார்கள் வருகின்றன'' — இது சோவின் பதில்.
சுட்டுக் கொல்லப்பட்டதற்கு விளக்கம் இல்லை. பொத்தாம் பொதுவாக இறந்தவர் மேலேயே தீர்ப்பை வக்கிரமாக எழுதும் இந்த "அப்பாவி'தான் சுந்தரேச அய்யர், ரகு அய்யர் மீதெல்லாம் குண்டர் சட்டத்தில் வழக்கு போட்டது சரியா என ஆராய்ச்சி செய்கிறது.
மேலும், ""சங்கராச்சாரியார் வாக்குமூலத்தை போலீசு காவலில் பதிவு செய்தபோது அது வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படி வீடியோவில் பதிவு செய்ய போலீசார் நீதிமன்ற அனுமதியைப் பெற்றார்களா? போலீசு தன்னிச்சையாக வீடியோ எடுக்கும்போது அதை அவர்கள் சௌகரியத்திற்கு ஏற்ப எதுவும் செய்யலாம்.'' (15.12.2004, துக்ளக்) என்று துருவி ஆராய்கிறது.
இப்படி, அவாளுக்கென்றால் சட்டத்தையும், போலீசையும் நம்ப முடியாது; சாதாரண ஆளாய் இருந்தால் தகவல் தர மறுத்தாலே நீயும் ஒரு தீவிரவாதி என்று முத்திரை குத்தும் பொடா என்ற சட்டத்திற்கும், போலீசுக்கும் இதே சோ காவடி தூக்குகிறார்: ""தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில், பொதுவாக என்ன நடக்கிறது? கைது நடக்கிறபோது ஓரிரு விதிமுறைகள் மீறப்பட்டன என்பதைக் காட்டி கைதே சட்டவிரோதமானது என்று வாதிடப்படும்... பயங்கரவாத தடுப்புச் சட்டமே கூடாது என்றால் நாட்டில் எந்த விதிமுறையும் இருக்க முடியாது.'' (7.11.2001, துக்ளக்). இப்படி எவனாயிருந்தாலும் தகவல் தராவிட்டால் தப்புதான் என்று தாவிக் குதிக்கும்
பார்ப்பனக் கும்பல் சுதேசி ஜாக்ரண் மஞ்ச் குருமூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டவுடனே "ஏன் அடிக்கடி போலீசு விசாரணை?' என்று ஒரு சின்ன விசாரணைக்கே அண்ட சராசரத்திலும் அண்டர் கிரவுண்ட் வேலை ஆரம்பித்துவிட்டது. குஜராத் பெஸ்ட் பேக்கரி வழக்கில் ஜஹீரா ஷேக் பின்வாங்கியதை வைத்துக் கொண்டு ""யார் சொல்வது உண்மை? ஜஹீரா ஷேக் மீண்டும் தனது சாட்சியத்தை மாற்றமாட்டார் என்பது என்ன நிச்சயம்? ....ஒருவேளை பொய் சொல்கிற உரிமையும் மனித உரிமைகளில் ஒன்றோ, என்னவோ!....'' (17.11.2004, துக்ளக்) என்று வக்கணை பேசுகிறது. ஆனால் ""கதிரவனும், சின்னாவும் மீண்டும் பல்டியடிக்க மாட்டார்களென்பது என்ன நிச்சயம்?'' என்று துக்ளக் எழுதுமா?
தெருவில் ஒரு கிரிக்கெட் பந்து தொலைந்தாலே ""கூப்பிடுறா போலீசை'' என்பதுதான் பார்ப்பனர்களின் பொதுப்புத்தி. இன்று நேற்றல்ல, வரலாறு நெடுக. அரசனின் காவல் படையை வைத்துக் கொண்டே பிற சாதி மக்களை, குறிப்பாக, உழைக்கும் மக்களை ஒடுக்கிய கும்பல் பார்ப்பனக் கும்பல். தனது அதிகாரம் செல்லாதபோது புஷ்யமித்திரனைப் போல தானே "பிரம்ம சத்திரியனாகி' போர்த் தொழில் புரிந்ததும், பிற மக்களிடமிருந்த வளங்களைப் பிடுங்கித் தின்றதுமே வரலாறு.
கபிஸ்தலம் அருகே உத்தமதானபுரம் என்ற ஊருக்கு சரபோஜி வம்ச மன்னர் வந்தபோது வெற்றிலை பாக்கு போட்டானாம். ஏகாதசியில் தாம்பூலம் போட்டது மன்னனுக்கு நல்லதல்ல என்றும், இதற்குக் கழுவாயாக, ""அங்கே ஓர் அக்கிரகாரத்தை அமைத்து 48 வீடுகளைக் கட்டி, இரண்டு வீடுகளுக்கு ஒரு கிணறு வைத்து, 48 பிராமணர்களை வருவித்து ஒவ்வொருவருக்கும் 12 "மா' நன்செய்யும், புன்செய்யும் தானம் தந்தால் பாபம் நீங்கும்'' என பார்ப்பனக் கும்பல் கதை கட்ட, படைகொண்ட மன்னன் நடுநடுங்கி அவ்வண்ணமே இந்த ""பிராம்மண உத்தமர்களுக்கு''த் தானம் செய்ததால் உத்தமதானபுரம் என்ற ஊரையே கொள்ளை அடித்தது பழைய வரலாறு.
பாவத்தின் கழுவாயாக இப்போது இந்த அம்மா தரப்போவது எத்தனை "மா' நிலமோ? திரும்பத் திரும்ப, மற்றவர்கள் வெற்றிலை போட்டாலும், வெறும் வாயை அசைத்தாலும் கூட பாவம்! தானமாகவும், தாக்குதலாகவும் பிறரைக் கழுவிலேற்றியும், தனக்கென்றால் கழுவாய் தேடியும் ஆதாயம் தேடுவதும் அடுத்தவனை ஒடுக்குவதும் பார்ப்பன வரலாறு.
பஸ் ஊழியர் போராட்டத்தின்போது கூட, சோ, ""போனஸ் பிரச்சினைக்காக முழு அடைப்பு தேவையா?'' என்ற கேள்விக்கு, ""இந்த ஸ்டிரைக்கிற்குத் தேவை முழு அடைப்பு அல்ல முழு உடைப்பு'' (5.12.2001, துக்ளக்) என்று போலீசு தாக்குதலை ஏவிவிட்டும், இன்னொரு சந்தர்ப்பத்தில், ""அரசுப் பணியில் கண்மூடித்தனமாகப் பலர் சேர்க்கப்படுவது என்று பல வருடங்களாக நடந்து வருகிறது. இந்த நிலையைச் சீர்செய்ய நடவடிக்கை எடுப்பது வரவேற்கத்தக்கதே'' (19.12.2001, துக்ளக்) என்று அரசுப் பணி ஆட்குறைப்புக்கு அரசு நடவடிக்கையை வரவேற்றும் வால் பிடிக்கிறார்.
தவிர, அரசு ஊழியர் வேலை நிறுத்தத்தின் போது ஆயிரக்கணக்கான ஊழியர்களைக் குற்றவாளிகளாக அரசுத் தரப்பு வக்கீல் பேசியபோது, ஆகா ஓகோ என்று ரசித்த சோவின் பார்ப்பனக் காதுகளுக்கு ஜெயேந்திரன் விசயத்தில் மட்டும் ""ஜெயேந்திரர் மிக மோசமான கிரிமினல்'' என்று அரசு வழக்கறிஞர் கூறிய உடனே நாராசமாய் இருக்கிறது. பிராசிக்யூசன் வக்கீல், குற்றம் சாட்டப்பட்டவரின் நடத்தை பற்றி இறங்கலாமா என்று கேட்டு, ""பப்ளிக் பிராசிக்யூட்டரின் கடமை ஒரு விளக்கம் (15.12.2004, துக்ளக்)'' என்று கட்டுரையே வரைந்துவிட்டார்.
இப்படி, பஸ் ஊழியர் தொடங்கி, சாலைப் பணியாளர், சத்துணவுப் பணியாளர், ரேசன் கடைப் போராட்டம் என்று பல பிரிவு மக்கள் போராடும் போதெல்லாம் ""போட்டு மிதி'' என அரசை ஏவிவிடுவதே இந்தப் பார்ப்பனக் கும்பலின் வாடிக்கை.
வரலாறு நெடுக, மனித உரிமைக்கு முதல் எதிரி பார்ப்பனியமே:
சுரங்கத்திற்குள் போன பழனி போகர் திரும்ப வரவேயில்லை;
அறைக்குள் சென்ற வள்ளலார் "ஜோதி' மயமானார்;
சிவனைப் பார்க்கப் போன நந்தனாரின் சவம் கூடத் திரும்பவில்லை;
அனைவரையுமே ஆண்டவன் ஆட்கொண்டதாகப் பார்ப்பனர்கள் கூறுகிறார்கள். திரும்பத் திரும்ப நம்முன்னே நமக்கெதிராகப் பிரசன்னமாகிக்கொண்டிருக்கும் ஜெயேந்திரன் உள்ளிட்ட பார்ப்பனக் குற்றக் கும்பலை "ஆட்கொள்ளும்' திறமை அந்த ஆண்டவனுக்கு வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம்; உழைக்கும் வர்க்கத்திற்குக் கட்டாயம் உண்டு.
· துரை. சண்முகம்
 



திரு.துரைசண்முகம் உங்களது ஆதங்கங்கள் எனக்கும் உண்டு, வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட போது மனித உரிமை என பேசியவர்கள் மீது எகிறி எகிறி குதித்தவர்கள், சங்காராச்சாரியார்கள் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்ட போது பத்திரிக்கைகள் மீதும் அரசாங்கத்தின் மீதும் மனித(தெய்வ?)உரிமை என பேசினர், அதுமட்டுமல்லாமல் சங்கராச்சாரியர்கள் மீது வழக்கு மட்டும் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது குற்றம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றனர், நியாயமான கேள்விதான் இதே மனித உரிமை ஆர்வலர்கள் வீரப்பனின் மீதும் வெறும் வழக்குதான் பதிவுசெய்யப்படுள்ளது ஆனால் எந்த வழக்கிலும் வீரப்பன் தண்டிக்கப்படவில்லை ஏன் அவரை சுட்டுக்கொன்றார்கள் என கேள்வி கேட்கவில்லை, கேள்வி கேட்டவர்களின் மீதும் எகிறி குதித்தனர், இதற்கெல்லாம் என்ன காரணம் என தெரிந்து கொள்ளலாமா?

இதெல்லாம் சம காலத்திய நிகழ்வுகள்,
எனக்கு வேதம் பற்றியெல்லாம் எதுவும் தெரியாது,
வேதம் பற்றியும் அதில் விளக்கப்பட்டுள்ள வர்ண பேதங்களையும் தாத்தாச்சாரி அவர்கள் நக்கீரனில் தெளிவாக எழுதிக்கொண்டுள்ளார்(காஞ்சிபிலிம்ஸ் அதை உங்கள் பதிவுகளில் மீள்பதிவு செய்யலாமே?), அதைப்படிக்கும் போது இந்த பதிவே ஒரு ஜல்லியடிப்பகத்தான் தெரிகின்றது, இருந்தாலும் கடந்த கால நிகழ்ச்சிகளை வைத்துக்கொண்டு அதையே குத்தி கிளறுவதும் சரியாகத்தெரியவில்லை, இந்த சாதி அந்த சாதி என்றில்லாமல் எல்லா சாதியும் மேலாதிக்க மனப்பாண்மையிலிருந்து வெளிவரவேண்டும்.
 



(காஞ்சிபிலிம்ஸ் அதை உங்கள் பதிவுகளில் மீள்பதிவு செய்யலாமே?)

செய்துவிடுகிறேன் குழலி அவர்களே.

சாதி வேண்டும் என்று யாரும் இப்போது விரும்பவில்லை என்றாலும், அதன் மூலத்தை, தோற்றுவித்த கயவர்களை அடையாளம் காட்டியே ஆகவேண்டும்.

சாதி உள்ளது, அது தேவையான ஒன்று, அதனை தெளிவுறசெய்து போற்றும் கீதையை ஒவ்வொரு இந்தியனும் படிக்கவேண்டும் என்று ஜேயகாந்தன் பேசியதை கேட்டீர்களா குழலியரே?
 



//சாதி உள்ளது, அது தேவையான ஒன்று, அதனை தெளிவுறசெய்து போற்றும் கீதையை ஒவ்வொரு இந்தியனும் படிக்கவேண்டும் என்று ஜேயகாந்தன் பேசியதை கேட்டீர்களா குழலியரே?
//

நான் பிகேசிவக்குமாரின் பதிப்பிலிருந்த்தைத்தான் கேட்டேன் அது தான் முதன் முதலாக கேட்ட ஜெயகாந்தனின் பேச்சு(மற்றதெல்லாம் பத்திரிக்கைகளில் படித்தது தான்),
கீதை,இராமாயணம்,மகாபாரதம் இதிலெல்லாம் எமக்கு நம்பிக்கையில்லை, அதுவுமில்லாமல் நான் என்னை நானே நக்கிக்கொள்ளும் நாய், ஜெயகாந்தனின் எழுத்துக்களை முன்பு படித்துள்ளேன், இனி அவரது படைப்பை படிப்பதும் அவரது பேச்சை கேட்பதும் என்னளவில் சந்தேகமே, நான்(ங்கள்) நக்கிக்கொள்ளும் நாயாகவே இருந்துவிட ஆசைப்படுகின்றேன்.
 



//சாதி வேண்டும் என்று யாரும் இப்போது விரும்பவில்லை என்றாலும், அதன் மூலத்தை, தோற்றுவித்த கயவர்களை அடையாளம் காட்டியே ஆகவேண்டும்.//
இன்னும் எத்தனை நாளைக்கு?
வெறும் அடையாளம் காட்டிகளாகவே இருந்து விட விருப்பமா?
உங்களுக்காக முன்னேற விருப்பம் இல்லையா?
பிராமண எதிர்ப்பு இல்லாத தலித் மறுமலர்ச்சி எப்போது சாத்தியம்?
 



//வேத பாடங்களை பிராமணனத் தவிர மத்தவங்க கேட்டா, அவர்கள் காதுல ஈயத்தை காய்ச்சி ஊத்தச் சொல்றது தலித்துகள் இல்லை முகவரிலிகாள் உங்க பிராமணர்கள் தான்.//
வேத பாடங்களை கேட்க எத்தனை தலித்துகள் தயார்?
சும்மா வெத்து வாதம்.
 



//வேத பாடங்களை கேட்க எத்தனை தலித்துகள் தயார்?
சும்மா வெத்து வாதம்//

வேத பாடங்களை கேட்க இப்போது பிராமணர்களுக்கே பிடிக்கவில்லை. ஆனால் மநு பிராமணர்களை வேத பாடங்களை மட்டும் தான் படிக்க சொன்னது.அது வேரு விஷயம். இப்ப அதை பற்றி பேச வேண்டாம்.

காதுல ஈயத்தை ஊத்த சொன்னது எதற்காக என்பது தான் இங்கு கேள்வி? அதாவது கல்வி அறிவு என்பது பிராமணர்களுக்கு மட்டும் தான் இருந்ததற்கான எடுத்துக்காட்டு. அதற்காக உடனே தலித்துகள் எங்கே புரோகிதராக வந்துவிடப்போகிறான் என்று பயப்படவேண்டாம்.
 



//கீதை,இராமாயணம்,மகாபாரதம் இதிலெல்லாம் எமக்கு நம்பிக்கையில்லை//

உணர்ச்சிவயப்பட்டு பேசுவதில் பிரயோசனம் இல்லை. இனிமேல் தான் நீங்கள் ஜெயகாந்தனுடைய பேச்சுக்களை கூர்ந்து கவனிக்கவேண்டும்.
சாதி வேண்டும் என்று விவேகானந்தரை மேற்க்கோள்காட்டி ஜெயகாந்தன் பெசியவற்றை மீண்டும் ஒரு தரம் பாருங்கள். இன்னும் புரியும் ஜெயகாந்தனைப் பற்றி.

உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போனாலும் இந்த மூன்று கொடிய விஷங்களையும் நம்முடைய சிறார்களுக்கு பாடபுத்தகத்தில் வாயிலாக பரிமாரப்படுகின்றன என்பதை மறந்துவிடாதீர்கள். பார்பனியத்தின் கண்டுபிடிப்பான மநுவின் அடிப்படையில் உருவான இந்த மூன்றும் இருக்கும் வரை நம்மால் வெருக்கப்படும் சாதியும்,பெண் அடிமைத்தனமும்,சமுதாய ஏற்றத்தாழ்வும் அழியாது.
 



//வேத பாடங்களை கேட்க இப்போது பிராமணர்களுக்கே பிடிக்கவில்லை. //
அது உங்களைப்போன்றோரின் கைங்கர்யம்தான்.

வேத பாடங்களைப்பற்றி படிக்க அக்கறை இல்லாதபோது, வேத காரியங்களை மதிக்க அக்கறையில்லாதபோது, அதற்கு உரிமை கோருவது மட்டும் எந்த வகை நியாயம்?
 



பார்ப்பனர்களே, தேவையற்று குற்ற உணர்ச்சிக்கெல்லாம் ஆளாகாதீர்கள். மரம் வெட்டியவர்கள், அரிவாளைச் சுழற்றுபவர்கள், தலித் பஞ்சாயத்து நடத்த விடாமல் தடுப்ப்வர்கள் எல்லோரும் ஒரு குற்ற உணர்ச்சியுமற்று இருக்கிறார்கள். 60 லட்சம் யூதர்களைக் கொன்ற ஜெர்மானிய கும்பல் சந்தோஷமாக இருக்கிறது. வேலையற்ற ஆங்கில சரித்திர ஆய்வாளர்கள் கூறியதைப் பிடித்து கொண்டு தொங்கும் சிலர் இன்னும் மனு தர்ம காலத்தை பேசிக்கொண்டு உங்கள் செயலாக்கத்தை தடுக்க முயற்சி செய்கிறார்கள். உங்கள் மேல் கட்டுப்பாடுகளை விதிக்க இவர்களுக்கு நாட்டாமை அளிக்காதீர்கள். போடா ஜாட்டான் என்று போய் கொண்டேயிருங்கள். நமக்கு தலைமேல் வேலை இருக்கிறது.

பார்ப்பனீயத்தின் எதிரிகள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு தனி அஜெண்டாவே இருக்கிறது. அதை அவர்கள் பார்த்து கொள்ளட்டும். நீங்கள் அதற்கு தீனி போடாதீர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 



கருணா ( வே. மதிமாறன / துரை. சண்முகம்) ::

தினமலர், விகடன் குழுமம், துக்ளக் ஆகியவை ஒரு சார்பு நிலை எடுத்திறுக்கின்றன எனபது உங்கள் ஆதங்கம். எடுக்கக்கூடாது, நடுநிலையோடு இருக்க வேண்டும் என்கிறீர்களா. எனில் நடுநிலை என்பதை விளக்குங்கள்.. உங்களுக்கு நடுநிலையாக தோன்றுவது மற்றவருக்கு தோன்றாமல் போகலாம். எல்லோரும் உங்கள் சிந்தனையை ஒத்து சிந்திக்க வேண்டும் என்று எண்ண முடியுமா? என்னளவில் 'நடுநிலை' மீடியா என்பது உலகத்தில் எங்குமே கிடையாது... எல்லாவற்றிற்கும் முதலாளிகளின் எண்ணத்திற்கேற்ப ஒரளவிற்காவது சார்பு நிலை எடுக்கும்.. அதுவுமில்லாது அவர்களது குறிக்கோள் அவரது வாசகர் வட்டத்தை மேலும் விரிவாக்கி பத்திரிக்கை விற்பனை அதிகப்படுத்துவதாக இருக்கும். மக்களை இந்த பத்திரிக்கையைத்தான் படிக்க வேண்டும் என்று யாரும் துப்பாக்கி முனையில் வற்புறுத்தவில்லை... நக்கீரன், முரசொலி, நமது எம்.ஜி.ஆர் ஆகியவற்றுக்கு வாசகர்கள் இருக்கிறார்கள்... அவர்களுக்கும் ஒரு சார்பான செய்தியே போய் சேருகிறது... அப்பத்திரிக்கை ஆசிரியர்களை ஜாதி கண்ணோட்டத்தோடா குற்றம் சுமத்துகிறீர்கள் ??
உங்கள் ஆதங்கம் எம்மக்களை இப்படி வடிகட்டிய ஒரு சார்பான செய்திகளை சொல்லி திசை திருப்புகிறார்களே என்பதா? என்றாலும் நீங்கள் கவலைப்படும் அளவு ஒன்றுமில்லை... மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். இல்லை என்று நாம் நினைப்பதுதான் ப்ரச்சினை.. செய்தியில் 'உண்மை' தான் வேண்டுமென்று நினைக்கும் மக்கள் அதற்காக உழைத்து உண்மையை கண்டுகொள்வார்கள்... இல்லை தமக்கு கிடைக்கும் செய்தியே போதுமெனில், எங்கிறுந்து செய்தி கிடைக்கவேண்டும் என்றும் அவர்கள்தான் முடிவு செய்கிறார்கள். அது அவர்கள் உண்மை என்று நம்பும்தன்மையை பொறுத்து... நான் சொன்னது இதுதான்: ஒவ்வொரு தனிமனிதனும் மற்றவர்களிடம் குற்றம் குறை கண்டுபிடிக்கும் நேரத்தில் தன் முன்னேறத்தை சிந்திக்க வேண்டும்... "வேலைக்குப் போகும் பெண்களெல்லாம் ஒழுக்கம் கெட்டவர்கள்'' என்ற சங்கராச்சாரியாரின் கருத்தை மற்றவர்கள் ஆராய்ச்சி பண்ணும் அளவு சம்பந்தப்பட்டவர்களே பண்ண மாட்டார்கள். அவர்கள் தெளிவாக உள்ளார்கள்... 'கடலில் நீ எத்தனை அலைகளை சமாளித்தாய் என்பதை பற்றி உலகத்துக்கு அக்கறை இல்லை, கப்பலை கரை சேர்த்தாயா என்பதை மட்டும் சொல்' என்பார்கள்.... அதுபோல இப்படி செய்தார்கள் அப்படி செய்தார்கள் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்... சொல்லும் இடத்தில் இருந்து சொல்லுவதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். தகுதியை வளர்த்துக்கொள்ள விட மாட்டேன் என்கிறார்கள் என்றால் அதற்கு பதில் பதிவிலேயே இருக்கிறது

பிகு: நீங்கள் கருத்தை எடுத்துறைத்த விதம் அருமை... அனானிமஸாக வந்து இரண்டொரு வரிகளில் கேவலமான முறையில் வசை பாடிவிட்டு செல்பவர்கள் உங்கள் கருத்துப்பதிவை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்...
 



The link of Paappaan, when clicked leads to Dhurvasar at http://www.blogger.com/profile/9267865; on clicking further we come to http://www.kamalogam.com/, a porno site.
Some of the forum titles are:
1. புதிய தகாத உறவுக் கதைகள்
2. புதிய காம ஆலோசனை/விவாதங்கள்
3. புதிய காமக் கவிதைகள்/விடுகதைகள்
4. புதிய காமச் சிரிப்புகள்
This Dhurvasan has a nerve exposing himself like that.
Fellow Brahmins, this paappaan is a blot on our community. Discard his advice with the contempt it deserves.
Regards,
Dondu Raghavan
 



//நக்கீரன், முரசொலி, நமது எம்.ஜி.ஆர் ஆகியவற்றுக்கு வாசகர்கள் இருக்கிறார்கள்//

நக்கீரனைப்போய் முரசொலி,நமது எம்ஜியார்ர்வரிசையில் செர்ந்த்துவிட்டீரே, எமக்கு ஒரு சந்தேகம் நீங்கள் முன்னெப்பொழுதாவது நக்கீரன் படித்துள்ளீரா? அது ஒரு எதிர்கட்சிப்பத்திரிக்கை, அதாவது எந்த கட்சி ஆளும் கட்சியாக இருந்தாலும் அதை எதிர்த்து எழுதும் பத்திரிக்கை.

நீங்கள் சொன்ன முரசொலி நமது எம்ஜியார் எல்லாம் தினமலர் மாதிரி நடுநிலை நாளிதழ் என விளம்பரம் செய்து கொள்வதில்லை.
 



//வேத பாடங்களைப்பற்றி படிக்க அக்கறை இல்லாதபோது, வேத காரியங்களை மதிக்க அக்கறையில்லாதபோது, அதற்கு உரிமை கோருவது மட்டும் எந்த வகை நியாயம்?//

வேத பாடங்கள்,வேத காரியங்களும் வெரும் சுத்துமாத்துகளே என்றான பிறகு பிராமணர்கள் உட்பட யாரும் அதை உரிமை கோருவது கிடையாது.போடா ஜோட்டான் என்று பிராமணர்களே வேதத்தை பரணையில் ஏற்றி விட்டார்கள். மற்றவர்கள் அதற்கு உரிமைக் கோருவதாக நீர் சொல்வது அதீத கற்பனையே.

//வேத பாடங்களை கேட்க இப்போது பிராமணர்களுக்கே பிடிக்கவில்லை. //
அது உங்களைப்போன்றோரின் கைங்கர்யம்தான்.//

பூநூலுக்கும் அதே நிலைமை வரும் நாள் தொலைவில் இல்லை அன்னியனே.இப்போதே பல பிராமணர்கள் அதை மறைக்க ஆரம்பித்துவிட்டனர்.

//மரம் வெட்டியவர்கள், அரிவாளைச் சுழற்றுபவர்கள், தலித் பஞ்சாயத்து நடத்த விடாமல் தடுப்ப்வர்கள் எல்லோரும் ஒரு குற்ற உணர்ச்சியுமற்று இருக்கிறார்கள்//
இந்த வெருப்புகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் தோற்ற்வித்தவர்கள் பிராமணர்களே.அவர்கள் சொன்ன வேதங்களே. அதனால் குற்ற உணர்ச்சி மற்றவர்களுக்கு வரத்தேவையில்லை. இந்த பேதங்களை தோற்றுவித்தவர்களே வெக்கமற்று இருக்கிறார்கள்.
 



"இந்த வெறுப்புகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் தோற்றுவித்தவர்கள் பிராமணர்களே.அவர்கள் சொன்ன வேதங்களே. அதனால் குற்ற உணர்ச்சி மற்றவர்களுக்கு வரத்தேவையில்லை. இந்த பேதங்களை தோற்றுவித்தவர்களே வெக்கமற்று இருக்கிறார்கள்."
ஆகவே அதை இன்னும் செய்பவர்களும் வெட்கமின்றி இருக்கிறார்கள் போலும்.
ரொம்ப நல்லதா போச்சு. ஆகக்கூடி யாரும் வெட்கம் அடையத் தேவையில்லை. எல்லாரும் ஒரு தபா ஜோரா கைதட்டிட்டு அவங்கவங்க வேலையைப் போய் பாருங்கப்பா.
பார்ப்பனர்களே முன்னேறுங்கள். பார்ப்பன எதிர்ப்பு ஜல்லியடிப்பவர்களுக்கு அதுவே காசு கொடுக்கும் தொழில். அவர்களை அதை செய்யவிட்டு விட்டு உங்கள் முன்னேற்றத்துகு பாடுபடுங்கள். எந்த ஜாட்டானும் நமக்கு பொருட்டல்ல என்பதை நினைவில் வைக்கவும். அமைச்சர் அன்புமணி ஐயா காட்டிய வழியில் சுய முன்னேற்றம் பெறுவோம். வர்ட்டா.

அன்புடன்,
டோண்டு ராகவையங்கார்
 



Karunna... Your argumetns are very good. To have more visibility, could you please add these to your blog as posts?
I appreceiate your long lengthy arguments.
 



//வேத பாடங்கள்,வேத காரியங்களும் வெரும் சுத்துமாத்துகளே என்றான பிறகு பிராமணர்கள் உட்பட யாரும் அதை உரிமை கோருவது கிடையாது.//
அப்போ பிரச்சனையே இல்லையே.
நீங்கதான் காஞ்சி சொன்னீங்க, தலித்துக்கள் மறுக்கப்படுகிறார்கள், ஒதுக்கப்படுகிறார்கள் என்று.
வேத பாடங்களைக் கற்றுக்கொண்டு பிறவிப் பெருங்கடலை நீந்தும் உபாயம் இருக்கிறது.
அதைச்செய்து வந்ததால்தான் பார்ப்பனன் (தன்னைப் பார்ப்பவன் யார் என்று திருப்பிப் பார்ப்பவன்) என்று பெயர். வெறுமனே குலத்தில் பிறந்ததாலோ அல்லது பூணுல் போட்டுக்கொள்வதாலோ அல்ல.
காஞ்சி, எவையெல்லாம் வெறும் அடையாளங்களே. எஞ்சிய விழுமியங்களைப் பிடித்துக்கொண்டு 'தையத்தக்கா' செய்வதில் பயனேதும் இல்லை.

வேத காலத்தில் ஜாதி வழக்கம் தேவைப்பட்டு இருந்தது. அதனால் அதை அன்று செய்தார்கள். இன்றும் அதைப்பிடித்துக்கோண்டு தொங்குவர்களை சட்டை செய்ய வேண்டாம். முன்னேறும் வழியை மட்டும் பாரும். அதற்கு இந்து மதத்தைப்போல சிறந்ததொரு வழி இல்லை.
 



Dondu's comment: //பார்ப்பனர்களே, தேவையற்று குற்ற உணர்ச்சிக்கெல்லாம் ஆளாகாதீர்கள். மரம் வெட்டியவர்கள், அரிவாளைச் சுழற்றுபவர்கள், தலித் பஞ்சாயத்து நடத்த விடாமல் தடுப்ப்வர்கள் எல்லோரும் ஒரு குற்ற உணர்ச்சியுமற்று இருக்கிறார்கள். 60 லட்சம் யூதர்களைக் கொன்ற ஜெர்மானிய கும்பல் சந்தோஷமாக இருக்கிறது.//

And...
;-)1
;-)2
;-)3
;-)4
;-)5

I apologize I couldn't type more because I can't type in Tamil at present... As for all the Aristotelian pseudo-syllogisms like the ones above, it's jus all mouth and no ears, eh? ;-) Heh hee!!
 



மாட்ரீஸர் அவர்களே தமிழில் தட்டச்சு செய்ய முடியாவிட்டால் பரவாயில்லை. குறைந்த பட்சம் ஆங்கிலத்தில் புரியும்படியாகவாவது எழுதக் கூடாதா?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 



This is getting more and more ridiculous. The 41st comment above is given in my name after creating a new blogger identity. It leads to http://bramin.blogspot.com
If you click the blog title in that URL, it leads to my regular blog.
This is a sure way of destroying the trust in the blogging world.
I can only hope that this madness will stop.
By the way, my original blogger number is 4800161, whereas the number of the misleading blogger is 9267865. I request the fellow bloggers to remember that such a thing can happen to anybody else.
Regards,
N.Raghavan
 



Dear mask(mugamoodi)
are the brahmins are ready to remove their threads(poonool). And also i request someone to explain the reason for wearing the same.

then about u saying "ரெண்டு பேருமே வன்முறைய தன் மீது திருப்பி பிரயோகிக்காத ஒரு கூட்டத்து மேல வன்முறைய பிரயோகிக்க சொல்லி ஆதாயம் தேடிக்கிட்டாங்க" who said brahmins are not indulging in violence. The who are the sangparivars and RSS who involved in demolition of Masjid.are they not brahmins?
In my view still brahmins are narrow minded comparted to other caste people in tamilnadu. Brahmin friends just think about ur surroundings and families and then reply to this comment with open heart.(i know a brahmin lady who refused to teach music to another caste girl eventhough she had good voice)

By
Vetri thirumalai
 



வெற்றி திருமலை, பூணுல் போடுவதின் அர்த்தம் எனக்கு தெரியாது... ஆனால் அவர்கள் எதற்கு பூணுலை அறுக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க வேண்டும்... அது அவர்களின் பழக்க வழக்கம், அதை கேள்வி கேட்க மற்றவருக்கு உரிமை இல்லை. உங்கள் சாதி அல்லது மதத்துக்கென்று ஒரு பழக்கம் இருக்கும். உதாரணம் உங்கள் சாதியில் திருமணம் என் சாதி முறைக்கு வித்தியாசமாக இருக்கும். என்னை பொறுத்த வரை அது உங்கள் சாதி வெறியை குறிக்கிறது என்று நினைக்கிறேன் என்றால் மாற்றுவீர்களா? அதை போலத்தான் மற்றவரும்.... அரசியல் கட்சிகள் அவர்கள் ஆதாயத்துக்காக போடும் கோஷத்தில் நீங்கள் சிந்தனை இழக்காதீர்கள்.... இந்த பதிவின் நோக்கமே எந்த ஒரு குழுவையும் தனிப்பட்ட முறையில் தாக்க கூடாது என்பதுதான்...

பாபர் மசூதி இடித்தவர்கள் பிராமணர்கள் என்று சொல்வதிலேயே அது சம்பந்தமான உங்களின் அறிவு நிலை தெரிகிறது... அதை இடித்தவர்கள் இந்துக்கள்... தமிழ்நாட்டளவில்பிராமணர்கள் மற்ற ஜாதி விட குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள் என்பதை சொல்லும்போது குருட்டாம்போக்காக சொல்லாமல் (என் பக்கத்து வீட்டில் இப்படி நடந்தது, பள்ளியில் அப்படி நடந்தது என்பதெல்லாம் சரியல்ல) அது சம்பந்தமாக உங்களின் ஆராய்ச்சியை எனக்கு சொல்லுங்கள்... ஏனெனில் எனக்கு நடந்தவற்றில் பெரிய துரோகத்தை செய்தவன் பிராமணன் அல்ல வேற ஜாதி. இவ்வளவு நாளாக என் மூளை வளர்ச்சி முழுமை அடையாமல் அவன் தனிமனித புத்தியால்தான் அப்படி செய்தான் என்று தப்புகணக்கு போட்டுவிட்டேன். உங்கள் விளக்கத்துக்கு பின் அவன் ஜாதி புத்தியால்தான் அப்படி செய்தான் என்று நினைத்து மகிழ்ச்சி அடைவேன்.
 



முகமூடி என்று பெயரோடு எழுதி வரும் தங்களின் பதிவுகளை நான் படித்து வருகிறேன்.

எனக்கு பல விடயங்கள் புரிந்தன. அவைகள்:-

1)பிராமன ஆதரவு.
2)ஜெயலலிதாவை மறைமுகமாக ஆதரித்தல்.
3)கருணாநிதியை தீவிரமாக எதிர்த்தல்.
4)ரஜினியை மறைமுகமாக ஆதரித்தல்.
5)கரசேவகர்கள், ஆர்.எஸ்.எஸ், பாரதீய ஜனதா ஆதரவு.
6)நிறைய பிராமன நண்பர்கள்.

இவைகள் எல்லாவற்றில் இருந்தும் எனக்குத் தெரிந்தது ஒன்றே ஒன்றுதான். நீங்கள் ஒரு பூணூல் பார்ட்டி!
 



நன்றி அனாமதேயரே... உங்கள் கருத்துக்கு ஒரு சிறு விளக்கம்

1)பிராமன ஆதரவு. - பிராமன எதிர்ப்புக்கு எதிர்ப்பு என்று வேண்டுமானால் சொல்லலாம்
2)ஜெயலலிதாவை மறைமுகமாக ஆதரித்தல். - எப்படி சொல்கிறீர்கள்
3)கருணாநிதியை தீவிரமாக எதிர்த்தல். - அப்படியே எல்லா அரசியல்வாதிகளையும் என்று சேர்த்துக்கொள்ளுங்கள்
4)ரஜினியை மறைமுகமாக ஆதரித்தல். - இதை படித்துவிட்டா சொல்கிறீர்கள்
5)கரசேவகர்கள், ஆர்.எஸ்.எஸ், பாரதீய ஜனதா ஆதரவு. - எங்கே கண்டீர்கள்
6)நிறைய பிராமன நண்பர்கள். - தவறு. நிறைய நண்பர்கள் என்பதே சரி.

என்னை பூணுல் பார்ட்டி என்று அடையாளப்படுத்துவதால் எனக்கு ஒரு பாதிப்பும் இல்லை. என் பதிவுக்கு நீங்கள் தொடர்ச்சியாக வந்து தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்த வேணும்.
 



Intha Padivu potta udaneye nenaichen ungalaiyum "Parpanarnnu" Muthirai kuthiduvangannu.Athe mathiri nadanthuduchu...

Oru vishayam solvanga..oruthar kannathula adichappa valicha valiya vida athai nenaichu nenaichu partha, nenaikum pothu ellam antha valiya vanthu pogumnnu.

Athe mathiri parpana atharavalargalai vida, ethirppunnu sollikkittu thiriyira koottam than innum Jathiya pathi athigama pesaranga(Ana naan jathiye vendam, Manitha neyam vendumnnu sollikittu asingama pinnoottam kudupanga...vada poadannuttu)

Oru unmaiya sollattuma - Madhavan oru Brahminnnu naan ethirpalarkitta than therinjukitten, avanga kudutha pinnottathunala...

Eppadithan evalo padichum evangalala ippadi yosika mudiyutho..

Senthil
(Pinnottam kudutha udane ennaiyum particular jathila serkatheenga..Naan Manithan..Ana mathavangalukku mansalavula kooda thunbam kudukatha Jathi ethirpalan..)
 



Dear Mugamoodi sir

I have some difficulty in composing the same in tamil so i cant explain the exact things what i intended to do. Anyway i am trying to give my views in detail in the following comments

Even i didnt had any bad perception about brahmins till i finished my schooling (as it was a boarding school) to be exact i didnt had any perception at all. Once i joined the college i faced the reality and anlalysed the situations,but not through other's writings or view. It was all my self analysis with some help with my friends(including brahmins). I have many brahmin friends and some are very close also(they also aware about my views)

I accept your view that every caste has "jathi verri" in tamilnadu but who is the route cause of the same.
You would have heard of vikramadithya kadaikal. In that father of vikarmadithya(i forget his name so let us call him FV) is a brahmin and he would be loved by a sudra girl. The king will order FV to marry the sudra girl. On hearing this FV will tell king that he has committed a blunder by ordering a brahmin to mary a sudra girl so to rectify the same FV should mary three m ore brides from each other varnams(brahmana,Kshatriya,vysya & Sudra) otherwise the king will get dosham. So king, apart from allowing him to marry other two brides, will also give his own daughter to FV. And vikramadithya is the son of King's daugter.

What this story trying to convey? are all men are not equal by birth?

Mask sir i am not hating brahmins are asking them to move out of country. I am asking them only to change their attitude that they are superior than others.

How many brahmins are ready to teach gayathri manthram to others?. I think u know how good to say this every morning but has this been spread other than brahmins. Not only gayathri manthrams but there are also many goods things which cannot be accessed by other people. I think u might have known that story that many refused to teach music(muraipadi sangeetham) to ilayaraja because of caste.

There are lot of examples like the music-nonbrhamin girl one given in the previous comments. But i dont want to spread hatred as i dont want any riots physically. All i like is a knowledge revolution so that anyone can learn anything they like.

About poonool, i think they are still wearing it to differentiate from others. Thats why i have asked to remove the same. If u have any genuine reason please convey so that i can understand.

Even i(we) have been treached mostly by a non brahmin(even from my same caste people) but they are all normal happenings. Those are done not because of any ideology but simply for their own advantages and profits.

But the propaganda maintained by Dinamalar & Tughlaq are with some ideology.(even Kungumam is doing the same thing but in other way which is also dangerous)

Take Kanchi Sankaracharya issue. Tell from your true heart that whether Dinamalar was purposefully covering(blacking) this issue or not.

To end i dont hate Brahmins but only hate Brahminism which i think is the route cause of present caste riots in the country.

regards
Vetri Thirumalai
 



2005லயே இதெல்லாம் சொல்லியாச்சா?

ஒண்ணும் மாற்றம் வரலியே.

"தூங்கரவன எழுப்பிடலாம், தங்குவது போல் நடிப்பவனை?" - இதுதான் ஞாபகம் வருது.
 



பூணூல் போடுவது பிராமண "குழு"வின் அடையாளம். அதை அணிந்தவன் என்று "கற்பிக்கப்" பட்டதே.

பூணூல் போடும் பழக்கம் சில நாட்களில் அழிந்து விடும் என்று நண்பர் கொக்கரிக்கிறார். காலத்திற்க்கு தகுந்தவாறு மாறாத எதுவும் நிலைபெற்றிருக்காது என்பதை நாங்கள் அறிவோம். அந்த பிரச்சனையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

செவிடர்களுக்கும் முட்டாள்களுக்கும் இனி பதில் சொல்லப் போவதில்லை என்று சொல்லாம் போல. எத்தனை தடவை தான் சொல்வது.

முகமூடி,
உங்களால் வேறு நல்ல பதிவுகளை தர முடியும். நீங்கள் ஒருவர் யாரையும் திருத்த முடியாது. தயவுசெய்து இது போன்ற பதிவுகளை தவிர்த்து விடுங்கள். Atleast, "பார்ப்பன எதிர்ப்பு" ஜல்லியை அதனால் குறைக்கலாம்.
 



My dear Vetri Thirumalai
Let me answer with your questions on top:

How many brahmins are ready to teach gayathri manthram to others?
You can buy a Rs 100 CD and listen and recite thats what most Brahmin boys do now. No one prevents you from listening or reciting the Vedas and if you think some one is holding your hand, its a myth.

Many refused to teach music (muraipadi sangeetham) to ilayaraja because of caste.
Have you heard of a singer called Bharat Ratna MS Subbulakshmi? Is she a Brahmin? Do you know who is Thiruvavaduthurai Rajarathnam Pillai and his contribution to Carnatic music?

All i like is a knowledge revolution so that anyone can learn anything they like.
Thats good spirit boy

About poonool, i think they are still wearing it to differentiate from others. Thats why i have asked to remove the same. If u have any genuine reason please convey so that i can understand.
Yes. Earlier days Brahmins used to poke their ears and put a kammal and have kattu kudumi. Others made fun and they abandoned it to look normal. Now many non Brahmin boys (sorry to use this word) have kudumi like singer Hariharan and poke their ears now. What was once an object of ridicule has now become a fad? Poonal reminds Brahmins his duty and to be responsible. Will you dare ask a Sikh why has a Kirpan, a small knife or a Muslim why he wears a topi or sport a beard or worse Kalaignar why he wears a yellow cloth blessed at Alangudi Guru Bhaagavan temple? As long as a Brahmin does not use it like a manja kayaru to cut, he has the freedom enshrined in the Indian Constitution to wear it and not explain to all Tom Dick and Harry.

Take Kanchi Sankaracharya issue. Tell from your true heart that whether Dinamalar was purposefully covering (blacking) this issue or not.
Dinamaar was doing responsible journalism and not write Kumudam or Nakkeran for whom circulation is primary even at the cost of integrity. Can I say that Dina Thanthi does not write about the corruption of the DMK government because they are not owned by Brahmins?
Prakaash Iyer
 



சரி, உங்க கருத்து ??