<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

முதல் விமான பயணத்திற்கு தமிழில் வழிகாட்டி...


இது அமெரிக்காவை மனதில் வைத்து எழுதப்பட்டது என்றாலும் எந்த நாட்டிற்கு செல்பவர்களுக்கும் பொருந்தும். கரன்ஸி மற்றும் அளவீடுகளை மாத்திரம் நீங்கள் செல்லும் நாட்டிற்கு ஏற்றாற் போல் மாற்றினால் போதும்.
(இந்த கட்டுரையை இன்னும் செதுக்கிக்கொண்டு இருக்கிறேன். முழு கட்டுரையும் படங்களுடன் வேண்டுபவர்கள் எனக்கு ஒரு வரி மின்னஞ்சல் அனுப்புங்கள்...)

முன்னேற்பாடு

* செக்-இன் பேகேஜ் மற்றும் கேரி-ஆன் பேகேஜ் அளவு மற்றும் எடைக்கு உங்கள் ஏர்லைன்சை தொடர்பு கொண்டு விசாரியுங்கள்.அமெரிக்காவிற்கு இரண்டு பெரிய பெட்டிகள் (செக்-இன் பேகேஜ்) மற்றும் ஒரு சிறிய சிறிய பெட்டி (கேரி-ஆன் பேகேஜ்) அனுமதி. அது தவிர ஒரு கைப்பையும் (ஹாண்ட் பேக்) வைத்துக்கொள்ளலாம்.
* விமானம் புறப்படும் நேரத்திற்கு குறைந்தது 3 மணி நேரத்திற்கு முன்பாக விமான நிலையத்தில் இருப்பது நலம்.

* உங்கள் கைப்பையில் இருக்க வேண்டியது:

$ பாஸ்போர்ட்
$ விமான் டிக்கட் (நீங்கள் மின்-டிக்கட் வாங்கியிருந்தால் உங்கள் கன்·பர்மேஷன் நம்பர் ப்ரின்ட்-அவுட்)
$ நீங்கள் சந்திக்கப்போகும் நபரின் முகவரி, வீட்டு / கை தொலைபேசி எண்கள். நண்பர்களின் தொலைபேசி எண்கள்
$ நீங்கள் செல்லும் நாட்டின் பணம் - ஐந்து டாலர் அளவில் சில்லறை (அமெரிக்கா என்றால் க்வார்டர்ஸ்)
$ நீங்கள் செல்லும் நாட்டின் உள்ளூர் தொலைபேசி அட்டை (காலிங் கார்டு - பல இலக்கங்கள் கொண்ட எண்களாக இருக்கும். ஒரு காகிதத்தில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இதன் பயன்பாடு பின்னர்)
$ பஞ்சு (விமானம் புறப்படும் போது அழுத்த வேறுபாடுகளால் சிலருக்கு காது வலிக்கும். காதுக்குள் பஞ்சு வைத்தால் ஓரளவு மட்டுப்படும். இப்பொழுது எந்த விமானத்திலும் தருவதில்லை)
$ அத்தியாவசிய மருந்துகள், சாவிகள்

* இருக்கக்கூடாதது
$ கத்தி, கத்தரிக்கோல் முதலியவை
$ எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள்
$ விஷம், கம்ப்ரஸ்டு காஸ்

இது தவிர புத்தகங்கள், கேமிரா முதலியவை உங்கள் கைகளில் இருக்கலாம்.

* மிக நீண்ட பயணம் ஆதலால் செளகரியமான உடையாக அணியுங்கள். ஷ¤ அல்லது ஹீல்ஸ் இல்லாத பாதணி (நீண்ட நடை) நல்லது.

விமான நிலையம் (ஏர்போர்ட்)

* விமான நிலையத்தில் அறிமுகம் இல்லாதவர் ஏதாவது பொருளை உங்களிடம் கொடுத்தால் வாங்காதீர்கள். 'உயிர் காக்கும் மருந்துங்க இது... என் பொண்ணு ஏர்போர்ட்ல வந்து வாங்கிக்குவா... ஒரு உயிர காப்பாத்துன புண்ணியமா போகும்' என்றாலும் சரி... 'என் பையன் உங்க ·ப்ளைட்டுல தான் இருக்கான். அவசரத்துல இத விட்டுட்டு போய்ட்டான். இத 27ம் நம்பர் ஸீட்ல இருக்கற குப்புசாமிகிட்ட கொடுக்க முடியுமா' ன்னு கேட்டாலும் சரி. தயவு தாட்சணயம் இல்லாமல் மறுத்து விடுங்கள். ஏதோ ஒரு வகையில் அதில் சட்ட விரோத பொருள் இருந்து நீங்கள் பிடிபட்டால் நீங்கள் மாட்டிக்கொள்வீர்கள் (சிங்கப்பூர் மற்றும் மத்திய கிழக்கு
நாடுகளில் போதை மருந்துடன் பிடிபட்டால் கருணையே கிடையாது. மரண தண்டனைதான்)

* உங்களுக்கு எந்த சந்தேகம் என்றாலும் அடையாள அட்டை அணிந்த விமான நிலைய பணியாளரிடம் கேளுங்கள். கேள்வியோ பதிலோ சிறிய வாக்கியத்தில் இருக்கட்டும். எஸ்கலேட்டர் என்னும் நகரும் படிக்கட்டில் சென்று பழக்கம் இல்லையா? பெரிய விஷயம் இல்லை. முதல் படியில் மாடிப்படி ஏறுவது போலவே ஒரு கால் மட்டும் வைத்து அப்புறம் இன்னொறு காலை வையுங்கள். இறங்கும் போது அதே போலவே முதல் காலை வெளியில் வைத்தவுடன் நடக்க துவங்குங்கள். பொதுவாக சாதாரண படிக்கட்டுகளும் இருக்கும். விசாரியுங்கள்.

* உங்கள் லக்கேஜ் களை தள்ளுவண்டியில் வைத்துக்கொள்ளுங்கள். நிறைய நடக்க வேண்டி இருக்கும். 'போர்டிங் பாஸ்' வழங்கும் இடத்துக்கு செல்லுங்கள். அங்கே உங்கள் பாஸ்போர்ட், டிக்கட்டை சரி பார்ப்பார்கள். பொதுவாக இரண்டு கேள்விகள் கேட்பார்கள். 'உங்கள் பெட்டியை நீங்கள்தான் அடுக்கி வைத்தீர்களா?, யாராவது ஏதாவது எடுத்து செல்லும்படி கொடுத்தார்களா?" இரண்டுக்கும் பதில் 'ஆம்' தானே? சரி இப்பொழுது உங்கள் பெரிய பெட்டியை எடை பார்பார்கள். பின்பு 'போர்டிங் பாஸ்' தருவார்கள். அதை பத்திரமாக கைப்பையில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் விமானம் ஏற வேண்டிய கேட் நம்பர் சொல்வார்கள்.

* உங்கள் பெரிய பெட்டிகளை சோதிக்கும் இடத்துக்கு கொண்டு செல்லுங்கள். பூட்டாதீர்கள். அவர்கள் 'ஸ்கேனர்' மூலம் சோதனை செய்த பின் உங்கள் பூட்டை கொடுத்து உங்கள் பெட்டியை பூட்டுமாறு கேளுங்கள்.

* 'எம்பார்கேஷன் கார்டு' என ஒன்று தருவார்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி, பிறந்த ஊர், பிறந்த நாடு, எந்த தேசத்தவர்(நேஷனலிட்டி), பாஸ்போர்ட் நம்பர், அதை கொடுத்த இடம், வழங்கப்பட்ட தேதி, இந்தியாவில் உங்கள் முகவரி, போய் சேரும் இடம் (நீங்கள் இறங்கும் ஏர்போர்ட்), நீங்கள் பயணிக்கும் விமான எண் ஆகியவை அதில் கேட்கப்பட்டு இருக்கும். அதை பூர்த்தி செய்யுங்கள்.

* உங்கள் சிறிய பெட்டி, கைப்பையுடன் போர்டிங் ஏரியா (விமான பயணிகள் காத்திருப்பு அறைக்கு) செல்லுங்கள். அப்பொழுது உங்களையும் உங்கள் சிறிய பெட்டி மற்றும் கைப்பையையும் சோதனை செய்வார்கள். நீங்கள் எந்த கேட்டிற்கு செல்ல வேண்டும் என்று விசாரித்து அந்த கேட்டுக்கு எதிரே இருக்கும் இருக்கைகள் ஒன்றில் அமர்ந்து காத்திருங்கள். பக்கத்தில் இருப்பவரிடம், அந்த விமானம் உங்கள் ஊருக்குத்தான் போகிறதா என்று விசாரித்து தெளியுங்கள். உங்கள் ஸீட் எண் ஞாபகம் இருக்கா?

* விமானத்துக்குள் செல்ல அழைப்பு வரும். ஸீட் எண்ணை பொருத்து குழுவாக அழைப்பார்கள் (ஸீட் எண்கள் 10 முதல் 30 வரை இப்பொழுது வரவும்...) உங்கள் முறை வரும் பொழுது செல்லுங்கள். விமானம் உள்ளே இருக்கை எண்கள் தலை மேல் இருக்கும். இருக்கை கண்டுபிடிக்க கஷ்டமாக இருந்தால் விமான பணியாளரிடம் கேளுங்கள். கைப்பெட்டியை தலை மேல் இருக்கும் ஓவர் ஹெட் கம்பார்ட்மெண்டில் (பை வைக்கும் இடம்) வையுங்கள்.

விமானத்தில்

* விமானம் புறப்படும்போதும் இறங்கும்போதும் உங்கள் சீட் நேராக இருக்க வேண்டும். மற்ற நேரங்களில் உங்கள் வசதிக்கேற்ற மாதிரி சாய்ந்து ஓய்வு எடுங்கள். பொதுவாக கைப்பிடியில் இருக்கும் பித்தானை அழுத்திக்கொண்டு உங்கள் முதுகால் ஸீட்டை அழுத்தினால் ஸீட் பின்னால் செல்லும். தேவையான சாய்வு கிடைத்தவுடன் பித்தானை விட்டு விடுங்கள். ஸீட்டை முன்னால் கொண்டு வர நீங்கள் முன்னால் சாய்ந்து கொண்டு பித்தானை அழுத்துங்கள். பொதுவாக நீண்ட தூர விமானங்களில் ஒரு போர்வையும் சின்ன தலையனையும் கொடுப்பார்கள். உங்களுக்கு தரப்படும் உணவு, தண்ணீர், பழரசம், பியர், வைன் முதலியவை இலவசம். வேறு எதுவும் என்றால் நீங்கள் காசு கொடுக்க வேண்டுமா என்று கேட்டுக்கொள்ளுங்கள்.

* எப்பொழுது வேண்டுமானாலும் மனித உருவம் இருக்கும் பித்தானை அழுத்தி விமான சிப்பந்தியை கூப்பிடலாம். நிறைய தண்ணீர் குடியுங்கள். தூங்க முயற்சி செய்யுங்கள். படம் பார்கலாம். விளக்கு பித்தானை அழுத்தினால் உங்களுக்கு மட்டும் விளக்கு எரியும். புத்தகம் படிக்கலாம். பாத்ரூம் (லாவெட்டரி என்று கூறுவார்கள்) வெளியே இருக்கும் விளக்கில் பச்சை என்றால் உள்ளே யாரும் இல்லை, சிகப்பு என்றால் உள்ளே ஆள் உள்ளது என்று அர்த்தம். பொதுவாக லாவெட்டரி கதவுகள் நடுவில் அழுத்தினால் உள்ளே திறந்து கொள்ளும் அமைப்பில் இருக்கும். உள்ளே மிதமான அளவில் எரியும் விளக்கு, பளிச் என்று எரிந்தால்தான் நீங்கள் சரியாக தாளிட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். லாவெட்டரி மிகவும் சிரியதாக இருக்கும். கம்மோடுக்கு பின்னே கம்மோடு மேல் போடுவதற்கு பேப்பர் இருக்கும். அதை உபயோகப்படுத்துங்கள். வாஷ் பேசினில் சோப்பு கலந்த நீர் வரும். சுடு தண்ணீரும் குளிர் தண்ணீரும் உங்கள் பதத்திற்கு நீங்கள் கலந்துகொள்ளலாம்.

ட்ரான்ஸிட் (விமான மாற்றம்)

* நீண்ட தூர விமானங்கள் நடுவில் ஒரு முறை பெட்ரோல் நிறப்புவதற்கும் விமானம் சுத்தப்ப்டுத்துவதற்கும் நிற்கும். அப்பொழுது நீங்கள் விமானத்தை விட்டு இறங்கி பின்பு மீண்டும் அதே விமானத்திலேயோ அல்லது மாற்று விமானத்திலேயோ ஏற வேண்டும். இதனை ட்ரான்ஸிட் என்று கூறுவார்கள்.

* உங்கள் அனைத்து பொருட்களையும் எடுத்து கொண்டு இறங்குங்கள்நீங்கள் மீண்டும் ஏற வேண்டிய விமானம் நிற்கும் கேட் நம்பர் மற்றும் புறப்படும் நேரம் ஆகியவற்றை விமான பணியாளரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். கவனிக்க வேண்டிய விசயம் - அவர்கள் சொல்லும் நேரம், உள்ளூர் நேரம்... உங்கள் கைக்கடிகாரம் காட்டும் நேரம் அல்ல (நீங்கள் மாற்றி வைத்துக் கொண்டிருந்தால் தவிர)முதலில் உங்கள் விமான கேட்டுக்கு சென்று சரி பார்த்துக்கொள்ளுங்கள். பின் ரொம்ப தூரம் செல்லாமல் பக்கத்திலேயே டாய்லட் செல்வது/ காபி வாங்குவது போன்ற வேலைகளை செய்யலாம். நேரம் அதிகமாக இருப்பின் விமான நிலையத்தை சுத்திப்பார்க்கலாம், ஆனால் விமானம் புறப்ப்டுவதற்கு 30 நிமிடங்கள் முன்பே மீண்டும் கேட்டுக்கு சென்று விடுங்கள். மீண்டும் நீங்கள் சோதனை செய்யப்படலாம்.

டிஸ்எம்பார்கேஷன்

* விமானம் தரை இறங்கும் முன் விமான சிப்பந்திகள் 2 விண்ணப்பங்கள் கொடுப்பார்கள். ஒன்று வருகை-புறப்பாடு ·பார்ம், மற்றொன்று கஸ்டம்ஸ் ·பார்ம். ஆங்கிலம் எழுத வராதெனில் பக்கத்தில் உள்ளவர் உதவியுடன் தெளிவான கையெழுத்தில் இந்த ·பார்ம்களை பூர்த்தி செய்யுங்கள். விமானம் நின்றவுடன் உங்கள் அனைத்து பொருட்களையும் எடுத்து கொண்டு இம்மிக்ரேஷ-செக் பகுதிக்கு வாருங்கள். அங்கே குடிமக்கள் மற்றும் குடிமக்கள் அல்லாதோருக்கு என தனித்தனியாக வரிசைகள் இருக்கும். சரியான வரிசையில் நில்லுங்கள்.

* இம்மிக்ரேஷன் அதிகாரி உங்கள் பாஸ்போர்ட்/ வருகை-புறப்பாடு ·பார்ம் வாங்கி சரி பார்ப்பார். பின்பு உங்களிடம் நீங்கள் யார், என்ன விஷயத்திற்காக வந்திருக்கிறீர்கள், எவ்வளவு நாள் இருப்பீர்கள் போன்ற கேள்விகள் கேட்பார். பின்பு உங்கள் பாஸ்போர்டை முத்திரையிட்டு, வருகை-புறப்பாடு ·பார்மின் ஒரு பகுதியுடன் உங்களிடம் தருவார். பின்பு உங்கள் பெரிய பெட்டிகள் தானியங்கி பட்டையில் (கன்வேயர் பெல்ட்) வரும். அதனை எடுத்து தள்ளுவண்டியில் வைத்து கொள்ளுங்கள்.

* கஸ்டம்ஸ் க்ளியரன்ஸ் என்ற வழியே செல்லுங்கள். பெருன்பான்மை நாடுகளில் விவசாய பொருட்கள் எடுத்து வர அனுமதி இல்லை. ஆகவே பச்சை காய்கறிகள், செடிகள், விதைகள், சிறிய வளர்ப்பு பிராணிகள் ஆகியவை இருந்தால் அதனை கஸ்டம்ஸ் ·பார்மில் தெரிவிக்க வேண்டும். மேலும் எவ்வளவு பணம் எடுத்து வருகிறீர்கள் என்றும் ·பார்மில் இருக்கும். கஸ்டம்ஸ் அதிகாரி நீங்கள் என்ன கொண்டு வருகிறீர்கள் என்று கேட்பார். உங்கள் பதில் பொதுவாக துணிமணி, மருந்து மாத்திரை என்று இருக்கும். உங்கள் பெட்டிகளை அவர்கள் சோதனை செய்ய நினைத்தால் செய்வார்கள். பயப்பட ஒன்றும் இல்லை.

* விமான நிலையத்தை விட்டு வெளியே வாருங்கள். உங்களை அழைத்து செல்பவரை கண்டுபிடிக்க முடியாவிட்டால் பயப்படாதீர்கள். சற்று நேரம் அங்கேயே காத்திருங்கள். அவர்கள் ட்ரா·பிக் நெரிசலில் மாட்டியிருக்கலாம்... அல்லது காலிங் கார்டு இருக்கிறதல்லவா அதன் மூலம் பொது தொலைபேசி கொண்டு அவர்களை அழையுங்கள். காலிங் கார்டு இல்லையென்றாலும் உங்களிடம் இருக்கும் சில்லரை கொண்டு அவர்களை அழைக்கலாம்....

இந்த இடத்தில் உங்கள் முதல் பயணம் இனிதே நிறைவடைந்தது... வருக வருக...

* நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான இன்னொரு விஷயம் இருக்கிறது.... இரண்டு நாட்கள் கழித்து ஜெட் லாக் எல்லாம் கழிந்தவுடன், இந்த பதிவிற்கு மறக்காமல் ஒட்டு போடுங்கள்....

© முகமூடி...
இதனை பகுதியாகவோ முழுதாகவோ பயன் படுத்த நினைப்போர் செய்ய வேண்டியது :
அ) உங்கள் பயன்பாட்டில் நன்றி என்று
முகமூடி பதிவிற்கு இணைப்பு கொடுங்கள்
ஆ) இந்த பதிவிற்கு ஓட்டு போடுங்கள்.

மீறுபவர்களுக்கு தூங்கும்போது எதுவும் கண்ணுக்கு தெரியாமல் போகக்கடவது...

டிஸ்க்ளெய்மர்: இந்த கட்டுரை ஒரு வழிகாட்டி மட்டுமே... இதனால் ஏற்படும் பண, மன உளைச்சல்களுக்கு நான் பொருப்பல்ல.


š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


will be useful definitely.

thanks for the post.
 



Good one mugamoodi!!!
...aadhi
 



இதுமாதிரி நல்லவிசயமெல்லாம் ஏம்பா முகமூடி போட்டுட்டு எழுதறீங்க... ரொம்ப நன்றி, பயனுள்ள பதிவு. உங்களுக்கு இப்போதே நன்றி சொல்லி சேமித்துவைக்கிறேன்....
 



my father is coming soon... He doesn't know english and I was wonderig how much I can explain to him and how much he'll remember. thanks much for yourguide, he can carry this and it will definitely be of great help for him. sundar
 



Romba nalla karathulla katturaingna...Kalikalam.. Nalla vishayatha kooda mugamoodi pottu solla vediyirukuthu..Intha mathiri nalla vishayam ezhuthina kooda Auto anupuvangala enna?

Ramesh
 



very usefull.. keep it up
 



This is a commendable work...i am sure Tamil speaking community will benefit a lot from such articles...Keep up the good work!!

Regards
Chandramohan S
 



அய்யே...என்னா இது சிறு புள்ளாத்தனமால்ல இருக்கு?! தமிழ்மனத்திலே இப்படி ஒரு உபயோகமான பதிவா?!
 



seat belt pOttuk koLvadhu patRi ondRum ezhudhavillaiyE ? :-))
 



சீட் பெல்ட் குறித்தும் மற்ற அனைத்து 'safety procedures' குறித்தும் flight safety card மற்றும் இதர படங்களுடன் பாகம் 2ல் விளக்குகிறேன் லதா... உங்கள் கருத்துக்கு நன்றி.
 



மிகவும் நல்ல பதிவு. உபயோகமானது. சேமித்துவைக்கத் தகுதியானது. நன்று. வாழ்த்துக்கள்.
 



இந்த பதிவுக்கு மதிப்புக்குறிய ஒருத்தர் நெகட்டிவ் ஒட்டு போட்டுறுக்கார்... யாருன்னு எனக்கு நல்லாவே யூகிக்க முடியுது... என்ன படிச்சி என்ன புண்ணியம்... மனச திறக்க முடியலயே இந்த படிப்பால...
 



//இந்த பதிவுக்கு மதிப்புக்குறிய ஒருத்தர் நெகட்டிவ் ஒட்டு போட்டுறுக்கார்... யாருன்னு எனக்கு நல்லாவே யூகிக்க முடியுது... என்ன படிச்சி என்ன புண்ணியம்... மனச திறக்க முடியலயே இந்த படிப்பால...//

(வலைப்பூ) அரசியலிலே இதெல்லாம் சர்வ சாதாரணப்பா..! இதுக்கெல்லாம் ரொம்ப பீல் ஆவாதீங்கண்ணா..!! (ரெண்டு பேரு போலருக்கு?!)
 



ஆடு மாடுங்களுக்கு தன் படம் புரியலயேன்னு மணிரத்னம் ·பீலிங்கா ஆகறாரு... அட ராமநாராயணனே ஆவரதில்ல.... ஸோ ·பீலீங் எல்லாம் ஒன்னும் இல்ல மாயவரத்தான்... எப்ப பாத்தாலும் இப்படி எரிச்சலும் வெறுப்பிலயுமே அலையரானுங்களேன்னு ஒரு பரிதாபம்தான்.
 



//எப்ப பாத்தாலும் இப்படி எரிச்சலும் வெறுப்பிலயுமே அலையரானுங்களேன்னு ஒரு பரிதாபம்தான்.//

ஒருவேளை பைல்ஸ் கம்ப்ளைண்ட்டோ என்னவோ, விட்டுத்தள்ளூங்க சார்!
 



முகமூடி அண்ணாச்சி.
நல்ல பதிவு ஒண்ணு தந்திருக்கீங்க.கும்புடுரேங்க பிளேனுக்கு
பெட்ரோல் எல்லாம் இப்ப
போடுறது இல்லை அண்ணாச்சி.மற்றம்
படி எல்லாம் ஓ.கே...
டாங்ஸ்யுங்க முகமூடி அண்ணாச்சி.
 



கரிகாலன் :: அல்வாசிட்டி.ச யின் பேட்டரி விசயத்தையும் நிங்களுடைய பெட்ரோல் விசயத்தையும் அடுத்த பதிப்பில கவனிச்சிடுறேனுங்கோ !!!
 



excellent entry, thanks for the same.
 



முகமூடி,

இப்பொது தான் படித்தேன். மிகவும் நன்றாக இருக்கிறது.
(thanks to endrendrum anbudan baala
http://balaji_ammu.blogspot.com/2005/06/ii-class.html)

இரண்டு விஷயங்கள்.

1. உள்ளூர் பணமும் கொஞ்சம் எடுத்துச்செல்ல வேண்டும். வயதானவர்கள் பெட்டியைத் தூக்கி வைக்க முடியாமல் உதவி பெறும் போது உதவி செய்பவருக்கு தர மற்றும் காத்திருக்கும் போது காப்பி டீ சாப்பிட.

2. காது அடைப்பதை தடுக்க பஞ்சு வைப்பது பலன் தராது என்று என் காது மூக்கு தொண்டை நிபுணர் கூறினார். கும் அல்லது மிட்டாய் வாயில் போட்டு உண்ணும் போது உமிழ்நீர் வருமே அதை விழுங்குவது உதவி செய்யும் என்று சொன்னார். எனக்கு சரியாக இருந்தது.. நீங்களும் செய்து பார்க்கலாம்.

அன்புடன் விச்சு
 



நன்றி விச்சு... நீங்கள் குறிப்பிட்ட இரண்டாவது விஷயம் உண்மைதான்... நீண்ட நாட்களுக்கு முன் ஆரம்பித்த 2ம் பாகத்தையும் மொத்த கட்டுரையையும் PDF கோப்பாக்கும் விஷயத்தையும் முடிக்க வேண்டியதுதான். அப்போது உங்கள் கருத்தையும் இதற்கு முந்தைய கருத்துக்களையும் சேர்த்துக்கொள்கிறேன். நன்றி
 



நல்ல விளக்கமான பதிவு.. சில மாதங்களுக்கு முன்னமே எழுதி இருந்தால் முதல் முறை அமெரிக்கா வந்த தந்தைக்கு இத பற்றி சொல்ல வீணாக்கியா தொலைபேசி காசை மிச்சபடுத்தி இருப்பேன்..
 



சரி, உங்க கருத்து ??