<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

பழைய சோறு - ரஜினிக்கு தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது


கணினிய முறைபடுத்தலாம்னு உட்கார்ந்தப்போ இந்த கட்டுரை கண்ணில பட்டுச்சி. அனேகமா 'ஆண்டவனால் கூட காப்பாத்த முடியாது' பஞ்ச் டயலாக் ரிலீஸானப்போ வந்ததா இருக்கணும். அப்பல்லாம் தமிழ் நாடு திரைப்பட கலைஞர்ன்ற பேர்ல நடக்கிற எந்த விழானாலும் - லைட்மேன் வீட்டு காது குத்துனாகூட - கருணாநிதி இருந்தா பக்கத்து ஸீட் தம்பி ரசினிக்குத்தான். பாபா பொட்டி காணாம போனப்போதான் பாவம் அண்ணனுக்கு அனஸ்தீஸியா வந்திறுச்சி... ஹ¤ம்.. காலத்தின் கோலம். சரி இப்ப இந்த கட்டுரைய மறுபதிப்பு பண்றதுக்கு என்னா அவசியம் வந்துச்சிங்கறீங்களா... சொல்ல முடியாதுங்க... தைரியலட்சுமி கடாட்சத்துல சந்திரமுகில சிறப்பா நடிச்சதுக்காக மீண்டும் இதே சங்கதி நடந்தாலும் நடக்கும்... கள்ளம் கபடம் இல்லாத நண்பர்கள் வேற எதுனா பண்ணனும்னு இருக்காங்க.... ஆக படையப்பா, கருணாநிதி க்கு பதிலா சந்திரமுகி, ஜெயலலிதா ன்னு மாத்தி இதே கட்டுரை கொஞ்ச நாள் கழிச்சி வந்தாலும் வரும்... அதான் ஒரு தொலைநோக்கு பார்வையோட இப்பவே... ஹிஹி...


சிறந்த நடிகர் விருதை ரஜினி வாங்கக்கூடாது _ கோடம்பாக்க குமுறல்

ஆஸ்காரில் துவங்கி லோக்கலில் உள்ள டுபாக்கூர் சபாக்கள்வரை விருதுகள் என்றாலே சர்ச்சைகள்தான். டுபாக்கூர் விருதுகள் என்றவுடன் அவசரப்பட்டு யாரும் தமிழகஅரசு விருதுகளைப் பற்றி எண்ணிவிடவேண்டாம். காரணம் டு. சபாக்கள் விருது தரும் நோக்கங்கள் அல்பமானவை. இன்னும் சொல்லப்போனால் எப்போதாவது அவை சரியான நபர்களுக்கேகூட விருதுகளைத் தந்துவிடுகின்றன.

கடந்த வியாழன்று சென்ற ஆண்டுக்கான விருதுகள் பட்டியலை தமிழகஅரசு அறிவித்தது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் ரஜினியை தி.மு.க.வுக்குள் இழுக்க எத்தனையோ வழிமுறை இருக்கும்போது, இவ்வளவு வெளிப்படையாக கருணாநிதி தன்னை எக்ஸ்போஸ் செய்துகொள்வார் என்று தி.மு.கவினர் உட்பட யாருமே எதிர்பார்க்கவில்லை.

தேசிய விருதை ஒரு ஓட்டில் தவறவிட்ட 'சேது' விக்ரமுக்கும் ஆறுதலுக்காக சிறப்புப்பரிசு தரப்பட, படையப்பாவுக்காக ரஜினிகாந்த் சிறந்தநடிகர் விருதைப் பெற்றிருக்கிறார். பாவம் விக்ரம் அவருக்கென்று தமிழ்நாட்டில் ரசிகர்கள், ஓட்டுக்கள் இல்லை. அவருக்குத் தெரிந்ததெல்லாம், அனைவரும் வியக்கும்படி நடித்ததுதான். ரஜினிக்கு சிறந்த நடிகர் விருது தந்த ஒரு கூத்து போதாதென்று கடந்த ஆண்டின் சிறந்த படமாகவும் படையப்பாவே தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

ஜெயலலிதா போன்ற ஒரு பாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணனை நடிக்கவைத்து கருணாநிதியை சந்தோஷப் படுத்தியது, ரஜினி படம் என்பது போக அந்தப் படத்துக்கு விருது வாங்க என்ன தகுதி இருந்தது என்பது அந்த படையப்பாவுக்கே வெளிச்சம். அதிக மூட நம்பிக்கைகளையும் மசாலா அயிட்டங்களையும் பீடி, சிகரெட்டுகளுக்குப் பதிலாக சுருட்டு விளம்பரங்களையும் கொண்டது என்பதைத் தவிர அந்தப்படத்தில் சிறப்பு என்ன என்பதைத் தமிழக முதல்வரே அறிவார்.

இப்படி ரஜினிக்கு மட்டும் ஐஸ் வைத்துவிட்டு, மற்றவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்தால் எப்படி என்று நினைத்தார்களோ கமல், இயக்குநர் மகேந்திரன், விஜய் என்று இன்னொரு கூட்டத்திற்கு முறையே சிவாஜி விருது, அண்ணா விருது, எம்.ஜி.ஆர். விருது என வழங்கியிருக்கிறார்கள்.வைரமுத்து வழக்கம்போல் சிறந்த கவிஞர் விருதைப் பெற, இவரைப் போலவே விருதுபெற்ற தி.மு.க. ஆதரவு கோஷ்டிகளின் எண்ணிக்கையும் ஏராளம்.

இந்த விருதுகளையெல்லாம் செலக்ட் பண்ண ஒரு நீதிபதி தலைமையில் தேர்வுக்குழு ஒன்றை அமைக்கிறார்கள். இந்தத் தேர்வுக்குழுவின் வேலை என்ன தெரியுமா? அறிவாலயத்தில் தீர்மானிக்கப்பட்டு வருகிற பட்டியலுக்கு ஓ.கே. சொல்லவேண்டியதுதான். இது பற்றிப் பேசும்போது, தேர்வுக்குழுவில் கலந்துகொண்ட ஒருவர், தன் பெயரை வெளியில் சொல்லக்கூடாது என்று சத்தியம் வாங்காத குறையாக சொன்ன தகவல் இது.
"இந்த முறை ரஜினிக்கு விருது தர கலைஞர் முடிவு செய்திருப்பதை விருதுக்கமிட்டிக்கு முன்கூட்டியே தெரிவித்தார்கள். ஆனால் சிறந்தபடம், சிறந்த நடிகர் இரண்டையுமே படையப்பாவுக்குத் தருவது அனைவருக்கும் தர்மசங்கடமான விஷயமாக இருந்தது. ஆனால் மேலிடம் அதில் தீர்மானமாக இருப்பதாக 'நடுவில்' இருந்தவர்கள் சொன்னார்கள். வேறு வழியில்லாமல் அனைவரும் படையப்பாவுக்கு ஓட்டுப்போட்டோம்" என்றார் அவர்.

இந்த விருது தரப்பட்ட அரசியல் இப்போது கோடம்பாக்கத்தில் பெரும் சர்ச்சைக்குரிய டாபிக்காக ஆகியிருக்கும் நிலையில், ரஜினி இந்த விருதை ஏற்காமல் இருப்பதே அவருக்கு கௌரவமான விஷயம் என்று பலர் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். பத்துமுறைக்கும் மேல் தனக்குத் தொடர்ந்து ஃபிலிம்பேர் விருது அளிக்கப்பட்டபோது கமல் இதைத்தான் செய்தார். "நான் நிறையமுறை விருது வாங்கிவிட்டேன். விருதுகள் பட்டியலில் என்னைவிட்டுவிட்டு புதிய தலைமுறைக்கு அந்த விருதுகளை வழங்குங்கள்'' என்று கமல் சொன்னார். அதே பெருந்தன்மையை ரஜினியிடம் எதிர்பார்க்கலாமா? அப்படிச் செய்தால்தான் கொஞ்சம் வெட்கமின்றி அரசியல் நோக்கத்துக்காக மட்டுமே தனக்குத் தரப்பட்ட விருதை நிராகரிப்பதால் மட்டுமே ரஜினி தன் மதிப்பைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

தமிழகஅரசின் இந்த விருதுக் காமெடிகளைப் பற்றிப் பேசும்போது தவிர்க்க முடியாமல் இன்னொரு சமாச்சாரத்தைப் பற்றியும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. அது கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட 17 படங்களுக்கான அரசு மானிய விவகாரம்.

குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட கம்மியான பிரிண்டுகள் போடப்பட்ட 'தரமான' படங்களுக்கு அரசு வழங்கிவரும் மானியமும் இன்னொரு கூத்துதான். இந்தமுறை அறிவிக்கப்பட்ட படங்களில் வழக்கத்தைவிட சற்று அதிகமான தி.மு.க.காரர்களின் படங்கள் இருந்தன. அதையும்விட அதிர்ச்சி பட்டியலில் இடம்பெற்றிருந்த படங்களில் பெரும்பாலானவை தரமான, லோ பட்ஜெட், குறைந்த பிரிண்டுகள் என்ற எந்த வரைமுறைகளுக்குள்ளும் அடங்காதவை. உதாரணத்திற்கு மானியம் வழங்கப்பட்டுள்ள 'திருப்பதி ஏழுமலை வெங்கடேசா' படம் அமோகமாக ஓடி ஏகப்பட்ட பிரிண்டுகள் போடப்பட்ட படம். அந்தப் படத்தைத் தயாரித்து இயக்கியவர் தி.மு.க.காரரான ராமநாராயணன் என்பதைத்தவிர, மானியம் வாங்குவதற்கான எந்தத் தகுதியும் அந்தப்படத்துக்கு இருந்ததாகத் தெரியவில்லை. மேலும் உள்ள 16 படங்களில் 'மல்லி', 'முகம்' ஆகிய இரு படங்களைத்தவிர மீதியுள்ள பெரும்பாலான படங்களில் கவர்ச்சி, சண்டை, மூடநம்பிக்கைகள் மலிந்து கிடந்தன. 'நல்ல படம். ஆனால் மக்கள் பார்க்கவில்லை என்ற ஆதங்கத்தை வரவழைக்கும் படம் எதுவுமே மானியப்பட்டியலில் இடம் பெறவில்லை.

இப்படி நடப்பது இதுவே முதல் முறையல்ல. விருதுகள், மானியங்கள் விவகாரங்களில் ஒவ்வொரு அரசும் இப்படித்தான் நடந்துகொள்கிறது. நியாயமாக, இந்த காமெடிகளைக் கண்டுகொள்ளாமல் விடவேண்டும். ஆனால் என்ன செய்வது? 'சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா.' (நன்றி- முத்துராமலிங்கன், குமுதம்)

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


காலம் கடந்தாலும் எப்போதும் பொருந்தக்கூடிய பதிவு. சேதுவை மட்டுமன்று ஹேராமையும் ஓரங்கட்டித்தான் படையப்பாவுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. தமிழக அரசின் விருது கேலிக்கூத்தாகவே இருக்கிறது. ஒன்றில் மசாலாப் படங்களுக்குக் கொடுக்கலாம். அல்லது சிறந்த படங்களுக்குக் கொடுக்கலாம். எல்லாம் கலந்து ஒரு சாம்பாராகக் கொடுப்பார்கள். பாரதி படத்துக்கு விருது கொடுத்ததைப் பார்க்கலாம். எது நல்ல படம் என்பதில் பைத்தியமே பிடித்துவிடும்.
 



Anne கட்டுறை ya speeling mathunganna chinna ra varanum
 



//ஹேராமையும் ஓரங்கட்டித்தான் படையப்பாவுக்கு இவ்விருது வழங்கப்பட்டது//

நல்ல நகைச்சுவை, ரசித்து சிரித்தேன் நன்றி Must Do
 



மஸ்ட் டூ.... தமிழக அரசு விருதுக்கு எல்லாம் எதுனா மதிப்பு இருக்குதா என்ன... பொழுதுபோக்கு பத்திரிக்கைகள் வாசகர் ஓட்டெடுப்பு மூலம் கொடுக்கும் விருதை விட கேவலமானது தமிழக அரசின் விருது.... அதைவிட தமாஷ் கலைமாமணி விருதுகள்.... எங்க நம்மள பாத்தா நமக்கும் கொடுத்திருவாங்களோன்னு அவனவன் துண்ட காணும் துணிய காணும்னு ஓடறானுங்க.. பின்ன கலைமாமணி வாங்கினா மார்கெட் காலின்னு அர்த்தம்ல.
 



நன்றி (முதல்) அனானிமஸ்... மாத்திட்டேன்... (இரண்டாம்) அனானிமஸ்.. மஸ்ட் டூ சொன்னது தமாஷல்ல... வேதனை...
 



ஓய்!
தமிழக அரசு மறந்தாலுமுன்னு திரும்பத் திரும்பப் போடுறீரா?
என்னோட பின்னோட்டத்த விளக்கினதுக்கு நன்றி.
ஆமா, இப்பிடி கலாய்க்குறீரே, பக்தர்கிட்டயிருந்து அடிவிழாதா?
முகமூடி போட்டிருக்கிற தகிறியமா?
 



பக்தர்கள்கிட்ட இருந்து அடியா?? தமாஷ் பண்ணாதீங்க மஸ்ட் டூ.... அவங்க என்னிக்கி யார அடிச்சியிருக்காங்க... தலைவா நீ ஒரு வார்த்தை சொல்லு, தமிழகமே கொந்தளிக்கும்னு சவுண்டு மட்டும் விடுவாங்க... ஆனா தலைவர் எதுவும் சொன்னாதானே...
 



முகமூடி அண்ணாத்தே,

அண்ணன் அவார்டும் குடுத்தார்... ஆப்பும் குடுத்தார்...
அண்ணன் குடுக்காரேன்னு ஒரு மருவாதிக்கோசரம் தலிவர் அவார்டும் வாங்கினார்.. ஆப்பும் வாங்கினார்... தானிக்கி தீனிக்கி சரியா போச்சி... இப்பொ இன்னாத்துக்கு பழச கெளரி ரசிக கம்மணிகளுக்கு டென்சன் குடுக்கிறே....

-- முகமூடன் ( இதெப்பிடி இருக்கு ;)
 



ஒங்க கருத்த படிச்சி அனுபவிச்சி சிரிச்சேன் முகமூடன் (பேரு நல்லாவே இல்ல... மாத்திக்கிங்க) ... ரசிக கம்மணிகளுக்கு டென்சன் கொடுக்கறது நம்ம நோக்கம் கெடியாது... இத்தே அடுத்த வருசம் நடந்தா நம்மள தீர்க்கதரிசின்னு ஒலகம் சொல்லுமேன்ற நப்பாசதான். அப்பால சோசியம் சொல்றது, கல்லு, வாஸ்து, பிள்ளபேறு கொடுக்கறதுன்னு அப்பிடியே பிக்கப் பண்ணி போய்க்கினே இருக்கலாம்ல...
 



//பிள்ளபேறு கொடுக்கறது// please make me incharge for one of your branches specializes in this field
 



அடிக்கிறதா? அடிவாங்கித்தான் பழக்கம்! அது கிடக்கட்டும். அதைப்பத்தி எது எழுதினாலும் ஹிட் ரேட்டு எங்கேயோ போயிடுதே.. எப்டீங்க?!
 



//அதைப்பத்தி எது எழுதினாலும் ஹிட் ரேட்டு எங்கேயோ போயிடுதே.. எப்டீங்க?! // ரஜினி ரசிகருங்க அடிவாங்குறத பத்தியா... அதுசரி திருவிழந்தூர் விஷயம் என்னான்னு கண்டுபிடிச்சீங்களா ராம்கி ?
 



சரி, உங்க கருத்து ??