<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

அப்படி போடு அறுவாள (ஏப்ரல் மாத டாப் 10)


சூப்பர் டாப்:
அதிமுகவுடனும் பாஜகவுடனும் இனிமேல் எந்தக் காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம். இதை பத்திரப் பதிவு ஆபிஸில் பதிவு செய்துத் தரவும் தயார் என்று நான் கூறிய பின்னரும் சில பத்திரிக்கைகள் இன்னும் பாமக குறித்து கிசுகிசு வெளியுட்டு வருகிறார்கள். யார் அதிக சீட் கொடுக்கிறார்களோ அவர்கள் பின்னால் போய்விடுவேன் என்று என்னைப் பற்றி எழுதுகிறார்கள். மானம், ரோஷம், சூடு, சொரணை அதிகமாக உள்ளவன் இந்த ராமதாஸ். போனமுறை ஜெயலலிதா பக்கம் போனது சீட்டுக்காக அல்ல. அதை கலைஞரிடமே சொல்லியிருக்கிறேன். ஆனால், போனதும் முதல் ஆளாக ஓடி வந்தவன் நான் தான். இனிமேல் அதிமுகவுடன் கூட்டணியே வைக்க மாட்டேன் - ராமதாஸ்...ஏப்ரல் 4, 2005 (தேர்தல் அப்போ திமுகவ விட அதிமுக அதிகமா ஸீட் கொடுத்தாலும் இதயே சொல்லுவீங்களான்னா)

டாப் 02: ஜி.கே.மணியும், அவரது கட்சித் தலைவரும், ஏதோ தாங்கள்தான் தமிழ்க் குடி தாங்கிகள் போலவும், தாங்கள்தான் தமிழை வளர்த்து வருவது போலவும் காட்டிக் கொள்கிறார்கள். எதிர்காலத்தில் அவர்களுடைய கட்சியை நடத்தப் போகும் அவர்களுடைய சின்ன அய்யா, வெள்ளைக்காரர் உடையை மாற்றி, தமிழர் உடையான வேட்டி, சட்டையை முதலில் அணியட்டும். ஆங்கிலத்திற்குப் பதில் தமிழில் பேசட்டும். அதன் பிறகு ஊருக்கு உபதேசம் சொல்லட்டும் - ஜெயலலிதா...ஏப்ரல் 13, 2005 (ஜி.கே.மணி சைக்கிள் பாகங்கள தமிழ்ல சொல்ல தெரியாம சட்டசபைல வழிஞ்சாரே... இப்ப கத்துக்கிட்டாராமா ??)

டாப் 03 : தமிழ்ப் பத்திரிக்கைகள் தமிழுக்கு எதிராக செயல்படுகின்றன. பத்திரிக்கைகளை எடுத்துப் பார்த்தால், அதில் 100 வார்த்தைகளில் 60 வார்த்தைகள் ஆங்கிலத்திலோ அல்லது பிற மொழியிலோ தான் உள்ளன. அந்த சண்டாளர்களைக் கேட்கிறேன். நேருக்கு நேர் பேச வாருங்கள். ஆனால் ஒருத்தரும் வர மாட்டேன் என்கிறார்கள். எவ்வளவு கொழுப்பு இருக்க வேண்டும் அவர்களுக்கு? எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும் அவர்களுக்கு? - ராமதாஸ்... ஏப்ரல் 25, 2005 ("தலைவர்" தகுதிக்கு இன்னா கண்ணியம் இன்னா பண்பாடு... )

டாப் 04 : என் வாழ்க்கையில் நான் செய்த மிகப் பெரிய தவறு, திமுகவில் இரண்டாவது முறை போய்ச் சேர்ந்ததுதான். ஆனால் அந்தத் தவறு மீண்டும் நடக்காது. திமுகவுக்கு எதிரான கூட்டணியை அமைப்பதில் நான் சாணக்கியனாக இருப்பேன். கருணாநிதியை எதிர்த்து தேர்தலில் போட்டியிட மாட்டேன். ஒரு காலத்தில் அவரை எனது தலைவராக ஏற்றுக் கொண்டவன். கொள்கை ரீதியாக அவரை எதிர்ப்பது வேறு, களத்தில் இறங்குவது வேறு. எனவே கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட மாட்டேன் - டி.ராஜேந்தர்...ஏப்ரல் 18, 2005 (முடிவா என்னதாண்டா சொல்றீங்க)

டாப் 05: கள்ளம் கபடமில்லாத உங்களுடைய மனமார்ந்த பாராட்டுக்களுக்கு எனது இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் - சந்திரமுகி படத்தில் புகை பிடிக்கும் காட்சிகள் இடம் பெறாததற்கு பாராட்டு தெரிவித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி எழுதிய கடிதத்திற்கு நன்றி தெரிவித்து ரஜினிகாந்த்... மே 5, 2005 (உங்களாலயே நம்ப முடியாத அளவு பொய் சொல்லியிருக்கேன். சந்திரமுகி படபொட்டிய காட்டுக்கு தூக்கிட்டு ஓட வேணாம்னு காடுவெட்டிகிட்ட ஒரு வார்த்தை சொல்லி வை தல...)

டாப் 06 : வன்முறையை மட்டுமே நம்பி, மக்களையும், ஜனநாயகத்தையும் உதாசீனப்படுத்தி ஆட்டம் போடும் அதிமுகவுக்கு (மட்டும்) இந்த அராஜகம் நிரந்தரமானதல்ல என்று எச்சரிக்க விரும்புகிறேன் - கருணாநிதி...ஏப்ரல் 21, 2005 (திமுகவுக்குத்தான் நிரந்தரம்)

டாப் 07 : ப.சிதம்பரம் தனக்குத் தானே ஆத்ம பரிசோதனை செய்து கொண்டால் தமிழகத்திற்கு தான் எதையும் செய்யவில்லை என்பது புரியும். மக்கள் அபிலாஷைகளை நிறைவு செய்யாமல் துரோகம் செய்ததுதான் அவரது ஒரே சாதனை - ஜெயலலிதா... ஏப்ரல் 25, 2005
(அப்படியே நீங்க கொஞ்சம் ஆத்ம பரிசோதனை செஞ்சு எதுனா சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்)

டாப் 08 : சட்டசபை இடைத் தேர்தலில் கலகமும், மறியலும், வன்முறையும் அரங்கேறக் கூடும். இவற்றை எதிர்த்து திமுகவினரும், தோழமைக் கட்சியினரும் அறவழி ஆயுதம் ஏந்துவதில் எந்தத் தவறும் இல்லை - கருணாநிதி...ஏப்ரல் 22, 2005 (அறவழிங்கற வார்த்தை திமுககாரன் கண்ணுக்கு தெரியுமா ?)

டாப் 09 : ஜெயலலிதா என்னை 10 ஆண்டுகள் சிறையில் அடைத்தாலும் நான் ஆத்திரப்படமாட்டேன். ஆனால் கோடிக்கணக்கான ஏழை மக்களின் வாழ்க்கையில் விளையாடுகிறாரே என்று தான் ஆத்திரப்படுகிறேன் - வைகோ... மே 5, 2005
(நடந்து நடந்து கால் வலிக்குது... தயவு செஞ்சு ஜெயில்ல போடுங்கய்யா)

டாப் 10: ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, கென்யா, தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, இங்கிலாந்து, கனடா, இலங்கை , சீனா ஆகிய நாடுகளில் உலகத் தமிழ் இளைஞர் பேரவை சார்பில் தமிழ்ப் புத்தாண்டு தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டை ஜெயலலிதா தினமாக கொண்டாடப் போகிறோம் - உலகத் தமிழ் இளைஞர் பேரவை (?!) தலைவர் விஜய் பிரபாகர்... ஏப்ரல் 11, 2005 (கெளம்பிட்டாய்ங்கய்யா.... கெளம்பிட்டாய்ங்க...)

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


Kalakkal.

Thamizhmanam Vote poda vasathi pannunganna..
 



எத்தனை முறை நம்ம சனங்களுக்கு சொன்னாலும் புரியாது.காந்தி சொன்னா மாதிரி "மறதி" நமக்கு கடவுள் கொடுத்த வரம்.
 



முகமூடி அவர்களே, நான் கூற விரும்புவது இரண்டே இரண்டு விஷயங்களே.
1. டாப் 10-ல் பத்திலிருந்து ஆரம்பித்து 9, 8, 7, என்று தலைகீழாகப் போவதுதான் வழமையான முறை. சங்கீதத்தில் ஆரோகணம் மாதிரி.
2. கவுண்டமணியின் குரலை கற்பனை செய்து கொள்ளவும்: "அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..."

அன்புடன்,
டோண்டு ராகவன்
 



அனானிமஸ், தமிழ்மணம் வாக்குப்போட வசதி பண்ணிட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி... அப்படியே உங்கள் வாக்கும் போட்டிடுங்க. டோண்டு சார், டாப் 10 கருத்து குறித்த உங்கள் கருத்து மிகவும் சரி. மாற்றினால் நிற ·பார்மாட்டிங் போயிடுது. அதனால நேரம் கிடைக்கிறப்ப மாத்திடறேன்.
 



அன்பு முகமூடி,

9 வது செய்தியையும் அதுக்கு உங்க கமெண்டையும் பாத்து நல்லாவே சிரிச்சேன். கலக்குங்க.
எம்.கே.
 



நன்றி எம்.கே... அவசரத்துல ரஜினிய விட்டுட்டேன் ஹரன்... இப்போ பாருங்க...
 



அர(செ)சியல் வாதிகள வாருரதுன்னா கலக்கலுக்கு கேக்கவா வேணும். அதுவும் உங்களுக்கு!
 



முகமூடி,
நல்லா இருக்கு.

///என் வாழ்க்கையில் நான் செய்த மிகப் பெரிய தவறு, திமுகவில் இரண்டாவது முறை போய்ச் சேர்ந்ததுதான். ஆனால் அந்தத் தவறு மீண்டும் நடக்காது.///

இனிமேல் அது நடக்காதுதான். இனிமேல் சேர்ந்தால் மூன்றாவது முறைதானே ? :-).
 



சரி, உங்க கருத்து ??