<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

கலியனின் நெஞ்சுக்கு சாத்தான் சொன்ன நீதி


ஒரு ஊரில் கலியன்னு ஒருத்தன் இருந்தான். பொழப்புன்னு ஒன்னும் இல்லன்னாலும் மேடையில் எல்லாம் பிரமாதமா பேசுவான். அவன் வாழ்ந்த ஊருல தமிழ் தாத்தான்னு ஒருத்தர் இருந்தார். ரொம்ப ரொம்ப வயசானவரு. கல் தோன்றி மண் தோன்றா காலத்தில இருந்து இன்னிக்கு வரைக்கும், எவ்வளவோ வேத்து மொழி ஆதிக்க ராசாங்களோட அச்சுறுத்தல்களையும் மீறி உயிரோட இருக்கறவரு. தமிழ் தாத்தாவோட அருமை பெருமைய பத்தி கலியன் பேசுனான்னா வாயில் ஈ போனது கூட தெரியாமல் கூட்டம் கை தட்டிக்கிட்டு சொக்கி கெடக்கும்.

ப்ரச்சினை என்னன்னா கலியனோட கற்பன வளம் ஒவரா வேல செஞ்சிடுச்சி. தமிழ் தாத்தா ரொம்ப நோஞ்சானா இருக்காரு. தான் மட்டும் இல்லைன்னா சீக்கிரம் செத்து போயிடுவாறுன்னு தனக்கு தானே ஒரு முடிவுக்கு வந்திட்டான். தாத்தாவுக்கு உயிர் கொடுக்க எதுனா யோசனை சொல்லுங்கடான்னு தன்னோட அடிப்பொடிங்க கிட்ட கேட்டான். ஒரு அடிப்பொடி ஒரு விசயத்த சொன்னான். அவங்க ஊருல பண்ணயாரு என்ன பண்ணுவாருன்னா அவரோட பையன் 2வது ரேங்க் வாங்கிட்டா முதல் ரேங்க் வாங்கிட்ட பையன கொன்னுடுவாறு. அதனால பண்ணயாரு பையன் எப்பவும் முதல் ரேங்க்தான். அத்த மாதிரி நம்மலும் ஏதாவது பண்ணுவோம் தலைவான்னான். கலியனுக்கு இது நல்ல யோசனையா பட்டுச்சி.

அந்த ஊருல ஒரு சாத்தான் இருந்திச்சி. ஊர் மக்கள் கொஞ்சம் பேரு அது வயக்காட்டுல வேல செஞ்சி பொழச்சிக்கிட்டு இருந்தாங்க. கலியன் ஊருக்குள்ள போயி அந்த சாத்தான் பேரு இந்தி. அதுதான் நம்ம தமிழ் தாத்தா நோஞ்சானா இருக்க காரணம். அத நாம கொன்னு போட்டா தாத்தா சரியாயிடுவாருன்னு அடிச்சி விட்டான். அடப்பாவி, ஊருல எல்லாரும் தாத்தாவ கவனிச்சிக்கிற வரைக்கும் அவருக்கு ஒன்னும் ஆகாதுடா, சரியான வகையில சாப்பாடு போட்டா நல்லாயிடுவாரு, அத விட்டுட்டு சாத்தான கொல்றேன்னு அலயாதீங்கடான்னு ஊர் பெருசுங்க சொன்னது, கலியன் அடிப்பொடிங்க ஜால்ரா சத்ததுல யாருக்கும் சரியா காதுல விழல.

கலியன் சாத்தானோட சண்டைக்கு போனான். சண்டைக்கு நடுவுல அடிப்பொடிங்க ரெண்டு பேரு எப்படியோ செத்து போயிட்டானுங்க. சாத்தான்தான் அவங்கள கொன்னுடுச்சின்னு கலியன் அமர்க்களம் பண்ணிட்டான். ஊரே கொந்தளிச்சி போச்சி. சாத்தான் சரணடஞ்சிருச்சி. அது கலியன்கிட்ட சொன்னுச்சி, என்ன விட்டுடு, நான் ஊர விட்டே போயிடுறேன், என் சக்தியால உன்ன ஊர் தலைவரு ஆக்கிடுறேன்னு. இப்படித்தான் கலியன் ஊர் தலைவரானது.

அது ஆச்சி ரொம்ப வருஷம். தமிழ் தாத்தா நெலமயில ஒரு முன்னேற்றமும் இல்ல. கலியனும் குடும்பமும் சந்தோஷமா சுகபோகமா இருந்ததுதான் மிச்சம். இப்படி நம்மள ஏமாத்திப்புட்டானேனு ஊருக்குள்ள எல்லாருக்கும் வருத்தம் வேற வந்திடுச்சி.

சரி ஊர் மக்கள திசை திருப்பலன்னா பதவிக்கு ஆபத்துன்னு நெனச்ச கலியன் இந்த வாட்டி என்னா பன்றதுன்னு பாத்தான். அந்த ஊருல இங்கிலீஷ்னு இன்னொரு சாத்தான் இருந்திச்சி. இது இந்தியோட தம்பி. இந்தி ஊர விட்டு போனதுனாலயும், தமிழ் தாத்தா நெலமயில ஒரு முன்னேற்றமும் இல்லங்கறதாலயும் இப்ப நெறய பேரு இங்கிலீஷோட வயக்காட்டுல வேல செஞ்சி பொழச்சிக்கிட்டு இருந்தாங்க. இருந்தாலும் கலியன் இந்த சாத்தானோடயும் சண்டைக்கு போனான். இந்த வாட்டி என்ன ஆச்சின்னா சண்டையில சாத்தான் ஈஸியா ஜெயிச்சிடுச்சி. கலியனுக்கு ஒன்னுமே புரியில. அத சாத்தான் கிட்டயே கேட்டான்.

சாத்தான் கலியனுக்கு சொன்ன நீதி
போன வாட்டி நீ தாத்தாவுக்காக சண்டை போட்ட (ன்னு ஊரு நினச்சிது). உன் நோக்கத்துல பொது நலம் இருந்திச்சி. அதான் நீ ஜெயிச்ச. இந்த வாட்டி நீ போட்ட சண்டை உன் சுயநலத்துக்காக. அதான் தோத்துபோயிட்ட.

பி.கு 1 : கலியன் இன்னமும் ஊர் மக்கள ஏமாத்த முயற்சி பண்ணிக்கிட்டுத்தான் இருக்கான்.
பி.கு 2 : சாத்தானோட சண்டை போடுற வேலய இப்ப மஞ்ச மாக்கானும் ·பாரின் ஷ¤ பக்கிரியும் கலியன விட மோசமான முறையில செஞ்சிகிட்டு இருக்கானுங்க.
பி.கு 3 : கலியன் பாத்திரம் நம்ம கற்பனையே. யாரையும் குறிப்பது அல்ல.

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


சாத்தான் கதை பிரம்மாதம். கலக்கிபுட்டீங்க.
ஆனா, உங்க கதையிலே ஒரு விஷயத்துல எனக்கு உடன்பாடு கிடையாது. இந்தி சாத்தான் தன் பாட்டுக்கு இருந்திருந்தா, அத விரட்ட வேண்டிய அவசியமே இருந்திருக்காது. அது தமிழ் தாத்தாவ கொன்னு (for whatever reason) ஊருக்குள்ள பொழைக்க னெனைச்சது தான் தப்பு.
கலியன், சாத்தான எதிர்க்கலை, அதோட கொலைகார சிந்தனைய தான் எதிர்த்தான்.
ஒரே வரியில சொல்லனும்னா, திணிப்ப தான் எதிர்ததாங்ளே தவிர இருக்க கூடாதுன்னு சொல்லலை.
திணிப்பே இல்லைன்னு சொன்னா, நம்ம வயசு கம்மின்னு அர்த்தம்.
 



"ஒரே வரியில சொல்லனும்னா, திணிப்ப தான் எதிர்ததாங்ளே தவிர இருக்க கூடாதுன்னு சொல்லலை."
அதனாலத்தானே கலியனோடப் பேரன் இந்தி சாத்தானோட சேர்ந்து மந்திரியாக முடிஞ்சது.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 



ஒரே வரியில சொல்லனும்னா, திணிப்ப தான் எதிர்ததாங்ளே தவிர இருக்க கூடாதுன்னு சொல்லலை

நான் தேசிய மாணவர் படையில் தமிழ்நாடு சார்பாக புதுதில்லியில் நடந்த நேஷனல் இன்டக்ரேஷன் கேம்பில் கலந்து கொண்ட போது, "தமிழ்நாடு, பாண்டிச்சேரி தவிர ஏனைய அனைத்து" மாநில பள்ளிக்கல்வி முடித்த மாணவர்களுக்கும் ஹிந்தி தெரிந்திருந்தது என்பதை கண் கூடாக கண்டேன்.
"ஒரே வரியில சொல்லனும்னா, திணிப்ப தான் எதிர்ததாங்ளே தவிர இருக்க கூடாதுன்னு சொல்லலை." தமிழ் நாட்டில் பள்ளிக்கல்வி முடித்த எத்தனை பேருக்கு ஹிந்தி தெரியும் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

தமிழ் நாடு, பாண்டிச்சேரி, புதுதில்லி, ஹரியானா ஆகிய மாநிலங்கள் சேர்ந்த எங்கள் குழுவிற்கு தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்டு 3 நாட்கள் கழித்து எனக்கும் எங்கள் குழுவிற்கு பயிற்சி அளித்த ராணுவ ஊழியருக்கும் இருந்த மொழி ப்ரச்னை காரணமாக இரண்டாம் நிலை தலைவனாக ஆக்கப்பட்டபோதும் "எதுக்கு ஹிந்தி, அது தெரியாததால எங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை - தமிழ் தெரியாதனால நீங்க வருத்தப்படுறீங்களா என்ன?" என்று எதிர்வாதம் செய்ததை இன்று நினைத்து பார்த்தால் கலியன்களின் பிரச்சாரம் நம்மை எவ்வாறு மூலைச்சலவை செய்திருந்தது என்று புரியும்.

கன்னட திரைப்பட இயக்கத்தார் தமிழ் படங்களால் கன்னட படங்கள் பாதிக்கப்படுகிறது என்று புதிய தமிழ் திரைப்படங்கள் திரையிடுவதை எதிர்த்த போது "மொதல்ல கதய மாத்துங்கடா. அப்புறம் ராஜ்குமார் பசங்க ஒருத்தனும் நடிக்க கூடாது, அதிலயும் ஹீரோவா எந்த காரணம் கொண்டும் நடிக்கவே கூடாது. தேவதைங்க மாதிரி இருக்கற ஹீரோயினுங்க ராஜ்குமார் பசங்கள கட்டி புடிக்கறத மனசாட்சி உள்ள ஒருததனும் ஏத்துக்க மாட்டான்" என்று நாம் எப்படி எல்லாம் எள்ளி நகையாடியிருப்போம். வெளியிலிருந்து பாருங்கள், நம்மை பார்த்து உலகம் சிரிப்பது புரியும்.


"ஒரே வரியில சொல்லனும்னா, திணிப்ப தான் எதிர்ததாங்ளே தவிர இருக்க கூடாதுன்னு சொல்லலை." போன வாரம் மாவளவன் (என்ன பெரிய திரு வேண்டிக்கிடக்குது) "வணிக நிறுவனங்கள் மட்டுமல்லாது அனைத்து நிறுவனங்களின் பெயர் பலகைகளிலும் உள்ள ஆங்கில வார்த்தைகளை எங்கள் இயக்கத்தார் அழிப்பார்கள்" என்று சொல்லியிருக்கிறார். இப்படித்தான் ஆரம்பிக்கிறார்கள்....
 



இப்படியே விட்டால் ஆங்கிலத் திணிப்பு என்றும் கதைக் கட்டத் தொடங்கி விடுவார்கள்!
 



துரதிஷ்டவசமாக தமிழ் திரைப்பட வசன கர்த்தாக்களை நாம் தலைவர்களாக்கிவிட்டோம் .
ஹிந்தி சினிமா படங்கள் இங்கே ஓடினால், அவர்கள் வயிற்று பிரச்சினையை யார் பார்ப்பார்கள் ..


http://lldasu.blogspot.com/2005/02/blog-post_28.html
 



சரி, உங்க கருத்து ??