Tuesday, July 10, 2007

நாயின் கானம்


போன வார நடுநிசியில்
வயதான நாயொன்று
வசதியான இடத்திலிருந்து
கானமிசைக்க தொடங்கியது

நேற்று முளைத்த நாய்களெல்லாம்
வயதானதனை மதிப்பதில்லை
என வருத்தத்தோடுவொரு வகுளாபரணம்

தம்மினத்தின் குணம் காக்கும்
தனதிருப்பின் முக்கியத்தை
நாயுலகம் உணருவதில்லையென
உயிர்நிலையிலிருந்துவொரு முகாரி

உயிர்வாழ இரை தேடும்
இன்றியமையா இடைவெளியிலும்
இ(ம்)சையை பாட நேர்ந்த.தன் அவலத்தை
எண்ணிவொரு ஏமாவதி

எத்தனை வித கானங்கள் அதில்
எத்தனையெத்தனை விசயங்கள்
உணரா மர உலகை தனக்குள்ளே
நொந்துவொரு நடபைரவி

*

அவசரமாய் ஓடிவந்து
அதிவிரைவு பேருந்துக்கு
காத்திருந்த இடைவெளியில்
ஆரம்பித்தான் காலனிவாசி
"வாரமா அந்த நாயோட
ஊளை தாங்க முடியலில்ல?"



11 comments:

  1. வாங்க ஐயா, சரியான் நேரத்துக்குதான் வந்து இருக்கீங்க. ஆனா இப்படி ஒரு உவமை தேவையா? எங்கே தொட்டாலும் குத்துது, உங்க பதிவுதான்

    ReplyDelete
  2. தல ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க. ஆனா இந்த கவுஜ எழவு எல்லாம் நமக்குப் புரியறது இல்லீங்க.

    அதனால ஒரு வணக்கம் வெச்சுக்கிட்டு அப்படியே ஓரமா குந்திக்கிறேன்.

    ReplyDelete
  3. நாயிங்களை எல்லாம் ரொம்ப தேடாதீங்க சார்..

    ஊளையிடற நாயை பிடிக்கறதுக்கு பதிலா உங்களை பிடிச்சிட்டு போயிடப்போறாங்க...

    ஊர் கெட்டுக் கிடக்கு.

    காணாமல் போன நாயை தேடிய சிறுவன் கைது

    :-))

    ReplyDelete
  4. ரொம்ப நாள் கழிச்சு தலை திரும்பி வந்திருக்காரே, பதிவில் பிரச்சனை இல்லாத ஏதாவது பகுதியா பார்த்து தேர்ந்தெடுத்து கருத்து கந்தசாமியா மாறி கருத்து சொல்லலாம்னு பார்த்தா அப்படி எந்த பகுதியும் இல்லையே?எங்க தொட்டாலும் ஷாக் அடிக்குது?அப்புறம் என்னன்னு பின்னூட்டம் போட?:))))))

    அதனால நோ கமெண்ட்ஸ்..கொத்தனார் மாதிரி ஒரு உள்ளேன் அய்யா..அப்புறம் ஓரமா குந்தல்ஸ்..அம்புட்டுதேன்:))

    ReplyDelete
  5. அண்ணாச்சி, நலமா இருக்கீயளா? ஏதோ கவிதை எல்லாம் போட்டா போல இருக்கு? ஆனா
    படிச்சிப் பார்த்தா முன்ன எளுதுன கவிதை மாதிரியே இருக்கே? ஏதோ எனக்கு வெளங்கினது
    அம்புட்டுதான்.
    நா ஒரு போஸ்ட் போட்டிருக்கேன் http://nunippul.blogspot.com/2007/07/blog-post_31.html
    படிச்சிப் பாருங்க.

    ReplyDelete
  6. ஐயயோ முக்கியமானத சொல்லாம விட்டுட்டேனே, அது இப்ப எளுதினது இல்லே, போன வாரம் போட்ட போஸ்ட் அது. அத மனசுல நல்லா ஏத்திக்கிட்டு படிங்க அண்ணாச்சி.

    ReplyDelete
  7. //தம்மினத்தின் குணம் காக்கும்
    தனதிருப்பின் முக்கியத்தை
    நாயுலகம் உணருவதில்லையென
    உயிர்நிலையிலிருந்துவொரு முகாரி//

    முகமூடி அய்யா,
    ஃபோட்டோவில நாயைப் பாத்தா வெள்ளை தாடி வச்ச தீவிரவாத தந்தை நாயா தெரியுது;ஆனா ஒப்பாரி வைக்கறதப் பாத்தா மஞ்சக் காலர் வச்ச நாய் மாறி தெரிகிறதே.கன்ஃப்யூஷன்.

    பாலா

    ReplyDelete
  8. வணக்கம்...

    நலமா இருக்கிறியளே..!!!!

    ReplyDelete
  9. அல்லாருக்கும் நன்றி

    *

    துளசியக்கா.. இந்தளவுக்கு கேள்வி கேக்கற அளவு ஒண்ணுமேயில்ல பதிவுல. வெறுமே நாய் குலைக்கிறத பத்திதான்...

    *

    உஷா... இத கவிதைன்னு நான் சொல்லியிருக்கனா, இல்ல உங்களுக்கு முன்னாடி பின்னூட்டம் போட்டவங்கதான் சொல்லியிருக்காங்களா... கவுஜக்கு கூட தகுதியில்லாதத, இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதான்..

    உங்க போஸ்ட அப்பவே படிச்சிட்டேன். நீங்க அத்த இங்க லிங்கு கொடுக்கறீங்களே.. எதுனா உள்குத்து?

    *

    பாலா.. நம்ம பதிவுக்கும் நாட்டு அரசியல் "தல"ங்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமுமில்லை.. எத்தையாவது புத்தம் புது கோணத்துல கொளுத்தி போடாதீரும்.

    ReplyDelete