Friday, January 26, 2007

இண்டிப்ளாக்கீஸ் விருதுகள் . Indibloggies Awards 2006


இண்டிப்ளாக்கீஸ் விருதுகள் 2006க்கான மனு தாக்கல் ஆரம்பமாகிவிட்டது. யார் வேண்டுமானாலும் தங்களுக்கு விருப்பமான பதிவை இவ்விருதுக்காக முன்மொழியலாம். மற்றவர்கள்தான் செய்ய வேண்டுமென்றில்லை, தன் பதிவின் மேல் நம்பிக்கை கொண்டவர்கள் 'நமக்கு நாமே' திட்டத்தில் தமது பதிவை தாமே முன்மொழியலாம். பிப்ரவரி திங்கள் ஐந்தாம் நாள் இந்திய நேரம் இரவு 9 மணிக்கு பரிந்துரைப்பதற்கான கெடு முடிவடைகிறது.

எப்படி முன்மொழிவது என்பதற்கான விளக்கம் இந்த சுட்டியில் காணலாம்

இந்த வருட(மு)ம் பல பிரிவுகளாக இப்போட்டி நடத்தப்படுகிறது. தமிழில் மட்டும் எழுதப்படும் பதிவுகள் Best Indic blog பிரிவில் வரும்.

இவ்வருடம் சிறந்த தமிழ்ப்பதிவாக தேர்ந்தெடுக்கப்படும் பதிவுக்கு பரிசாக (இதுவரை) முகமூடி ரூ.1000 மதிப்பிலான புத்தகங்களும், தமிழோவியம் $25 மதிப்புக்கான அமேசான் பரிசு அட்டையும் தரவிருப்பதாக தெரிகிறது. நீங்கள் தமிழ் பிரிவிலோ அல்லது வேறு ஏதாவது பிரிவிலோ சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படும் பதிவுக்கு பரிசுகள் தர விரும்பினால் இங்கே தெரிவிக்கலாம்

இவ்வருடம் தமிழ் பிரிவுக்கான ஜூரி குழுவில் தமிழ் வலைஞர்கள் பத்ரி சேஷாத்ரியும், முகமூடியும் இருப்பதாக இண்டிப்ளாக்கீஸ் வலைக்குறிப்பு தெரிவிக்கிறது.

இவ்விருது சம்பந்தமாக 'அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்' சிலவற்றுக்கு இந்த சுட்டியில் பதில்கள் தரப்பட்டுள்ளன.

நம்பிக்கை இருப்பவர்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்.



33 comments:

  1. பரிசு வாங்க எவ்வளவு வெட்டனும்? வொயிட்டாவா ப்ளாக்லயா? :-)) எதுக்கு கேக்கறேன்னா, நமக்குப் பரிசுகள் மேல ஆசையில்ல :-)) படம் போட ஒரு சான்ஸ் கிடைச்சா விட்டுறுவோமா :-)) நம்ம குசும்பன் இல்லைன்னா எழுத்தாளினி உஷாஜின்னு சில நண்பர்கள் இருக்காங்க. அதுல ஒருத்தருக்கு வாங்கித் தரலாம்னுதான் :-) (அடப்பாவி, எனக்கு வரவிருந்த பரிசுக்கு உலை வெச்சுட்டியேன்னு குசும்பனும் உஷாவும் திட்டினால் ஒரு மாப்பு மானசீகமாக.)

    நீங்க தேர்ந்தெடுக்கப் போற ஆதிக்க சக்திகள் யாராய் இருக்கும் என்று எங்களுக்கு எப்போதோ தெரியும்னு போஸ்ட்டுங்க ரெடியாயிட்டு இருக்காம் :-)) ரிஜல்ட்ஸ் வந்தவுடனே ரிலீஜ் பண்ணிடுவாங்களாம்.

    அன்புடன், பி.கே. சிவகுமார்

    ReplyDelete
  2. பரிசு வாங்க எதுவும் வெட்ட தேவையில்லை.. ஆனால் வெட்டணும்னு நினைக்கிறவங்க ஆசைய எதுக்கு தடுப்பானேன். ப்ளாக்கோ, ஒயிட்டோ எப்படி கொடுத்தாலும் பரவாயில்லை. கொடுத்தா சரிதான்...

    // நீங்க தேர்ந்தெடுக்கப் போற ஆதிக்க சக்திகள் யாராய் இருக்கும் என்று எங்களுக்கு எப்போதோ தெரியும்னு போஸ்ட்டுங்க ரெடியாயிட்டு இருக்காம். ரிஜல்ட்ஸ் வந்தவுடனே ரிலீஜ் பண்ணிடுவாங்களாம்.. //

    ஆரம்பிச்சிட்டீங்களா... நடத்துங்க..

    ReplyDelete
  3. நம்ம குசும்பன் இல்லைன்னா எழுத்தாளினி உஷாஜின்னு சில நண்பர்கள் இருக்காங்க. //
    ஏனய்யா எத்தினி பேரூ இப்படி கிளம்பி இருக்கீங்க :-)
    பூங்காத்து திரும்பாதா? எம் பாட்டா கேக்காதா
    ஆவேனா நானும் ஒரு நா சூப்பர் ஸ்டாரூ
    கிட்டிபுள் ஆட கூப்பிடு வாங்களான்னு.... நானே சோகமா இருக்கேன். :-)))))))))))))))

    ReplyDelete
  4. முகமூடி நடுவரானதெல்லாம் சரி, அதுக்காக உங்க பதிவு எல்லாம் உள்ளே போக முடியாம பண்னிப்புட்டீங்களே. இன்னிக்கு ஈ வெ ரா குறித்த மிச்ச கச்சேரிய வச்சிக்கிடலாம்னு வந்தேன்,. பாத்தா உங்க பதிவு பூட்டிக் கிடக்கு. சரி நாளைக்கு வச்சிக்கிடுதேன். இந்த விருத நீங்க முன்னாடி வாங்கி போட்டுக்கிட்டதுக்குதானே குய்யோ முறையோன்னு குதிச்சானுங்க ? எப்படியோ இந்த தடவையும் நல்ல பதிவரா பார்த்து தேர்ந்தெடுங்க, நம்ம மண்புழு **** (எதுக்கு உங்களுக்கு * போடுற சிரமம்னு நானே போட்டுட்டேன்) மாதிரி கண்ட கருமாந்திரங்களையும் முதல் பத்து, மூஞ்சில குத்துன்னு தேர்ந்தெடுக்காம இருந்தா சரிதான்.

    அன்புடன்
    ச.திருமலை

    ReplyDelete
  5. "India Bloggies" is really a pretty good idea to appreciate good bloggers. I'm happy that even Tamil blogs are eligible. Can you do something to increase the number of prizes for "tamil blogs" alone?

    ReplyDelete
  6. அடப்பாவிங்களா... தனக்கு பரிசு கெடக்காதுன்னு அல்லது வேணாண்னு ஒதுங்கிக் கெடக்காம இப்பிடி கெடக்க சான்ஸ் இருக்குற என்னைய மாதிரி ஆளுங்கக்கெல்லாம் ஏம்ப்பா பிகே"ஏசு" ஆப்படிக்கிறே? நியாயமா? :-))))))

    அப்ப உஷாஜிக்குக்கூட பிரைஸ் நஹியா? (ஒரு சின்ன சந்தோஷம் தாம்ப்பா) ;-)))

    முகமூடி,

    சீக்கிரம் பரிசைக் கொடுங்க. மண்டபத்துக்குப் போகோணும். கையரிக்குது!!!

    ஹாங் சொல்ல மறந்துட்டேனே
    ஜெய்ஹிந்த் !!!

    ReplyDelete
  7. பதிவர் முகமூடி, நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்கிறோம், இது தொடர்பான என் பதிவு முகமூடிக்கு ஜீரி(நடுவர்?!)யாக இருக்க தகுதி உண்டா?

    ReplyDelete
  8. ரிஜல்ட் வருவதற்கும் முன்னயே பதிவு வந்துவிட்டது பார்த்தீங்களா :-))
    http://kuzhali.blogspot.com/2007/02/blog-post_117076157439334519.html

    தகுதியைப் பற்றி யார் பேசுவது என்றே தெரியவில்லை. இடஒதுக்கீடு என்று வரும்போது தகுதி முக்கியமில்லை. ஆனால் இப்போது குழலிக்குத் தகுதி தேவைப்படுகிறது. வெளிநாட்டில் இருக்கிற பிற்படுத்தப்பட்ட தமிழர் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறீர்களே. :-)) அந்தத் தகுதி உங்களுக்குப் போதாதா - குழலியின் அகராதிப்படி என்று கேட்கத் தோன்றுகிறது. :-))

    நமக்கும் இண்டிபிளாக்குக்கும் ரொம்ப தூரம். இதுவரை ஓட்டுப் போட்டதில்லை. போடுகிற எண்ணமும் இல்லை.

    ஆனால் உங்களை அனாமதேயம் என்று சொல்கிற குழலி, அவர் கொள்கைகளுக்குக் காவடி தூக்குகிற நண்பர்களான நியோ, அனாதை ஆனந்தன் ஆகியோர் யாரென்று அட்ரஸ் கொடுக்க முடியுமா. வீரவன்னியன் மற்றும் பார்டெண்டர் ஆகிய பெயர்களில் அனாமதேயமாக ஆபாசமாக எழுதி மாட்டிக் கொண்ட தமிழ்சசிக்கு ஆதரவாக கொடிபிடித்து உட்கார்ந்துவிட்டு, இப்போது அனாமதேயம் என்று யாரைப் பற்றியும் பேச குழலிக்கோ அவர் கும்பலுக்கோ எந்த யோக்கியதை இருக்கிறது. தமிழ் சசி, கேஸ் போடுகிறேன் என்று உதார் விட்டுக் கொண்டிருந்தாரே. இப்போது நான் சொல்கிறேன். தமிழ் சசி தான் தமிழ் பார்டெண்டர் மற்றும் வீர வன்னியன். அதற்கான ஆதாரங்களை வந்தியத்தேவன் காட்ட நான் பார்த்திருக்கிறேன். அந்த ஆதாரங்களில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எந்தக் கோர்ட்டிலும் அது நிற்கும் என்ற நம்பிக்கை.

    நீங்கள் (முகமூடி) அனாமதேயம் இல்லை என்று எல்லாருக்கும் தெரியும். சென்ற ஆண்டு பத்ரி, பிரகாஷ், ராம்கி, டோண்டு என்று பல அணிகளைச் சேர்ந்தவர்களும், ஒரே நேரத்தில் பல அணிகளில் இருப்பவர்களும் :-)) கலந்து கொண்ட வலைப்பதிவர் சந்திப்பில் உங்களை நேரடியாகச் சந்தித்து உரையாடிய இருபதுக்கு மேற்பட்ட வலைப்பதிவர்கள் இங்கு உண்டு. பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருண்டு விடுமாம். அந்த மாதிரி குழலிக்குத் தெரியாதவர்கள் எல்லாம் அனாமதேயம் என்றால், எங்கே போய் முட்டிக் கொள்வது.

    நீங்கள் நடுவராக இருப்பதை ஆட்சேபிப்பது, நீங்கள் நடுவராக இல்லாவிட்டால், கள்ள ஓட்டு போட்டு இந்தக் கும்பல் வெல்ல முயற்சிக்கிறதோ என்ற சந்தேகத்தை விளைவிக்கிறது. :-)) தன் கொள்கைகளை மட்டும் எழுதிக் கொண்டிருப்பவர் இந்தப் பரிசுகளுக்கும் பரிசு கிடைப்பதற்கு முன்னயே யார் நடுவர் என்று இப்படி அலட்டிக் கொண்டும் "அழுவாரா" என்ன? தனக்குச் சாதகமான தீர்ப்பு வரவில்லை என்றால் நீதிபதியைக் குறை சொல்கிற கும்பல், இப்படி எழுதுவது ஆச்சரியமில்லை.

    நீங்கள் ஏற்கனவே இண்டிபிளாக்ஸின் தமிழின் சிறந்த வலைப்பதிவர் பரிசைப் பெற்றிருக்கிறீர்கள். உங்களை நடுவராக இருக்கக் கேட்டுக் கொண்ட இண்டிபிளாக்ஸ் நிர்வாகத்திற்கு நீங்கள் யாரென்று தெரிந்தால் போதும். ஒரு பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர், அந்தப் பதவியைக் கொடுப்பவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்தால் போதுமானது. மற்றபடிக்கு, குழலியின் அதிபுத்திசாலித்தனமான அனாமதேய வரையறைப்படி, :-) எனக்கு அனாமதேயமான குழலி போன்றவர்களின் ஆட்சேபத்தை நீங்கள் பொருட்படுத்தக் கூடாது. :-)) தங்களுக்கோ தங்கள் கும்பலைச் சார்ந்தவர்களுக்கோ நடுவர் பதவி வரவில்லையே என்ற வயிற்றெரிச்சலில் இந்த கும்பல் கத்துகிறது என்று விட்டுவிட்டுப் போங்கள். வேண்டுமானால் அவர்களின் விரட்டியின் மூலம் ஒரு பரிசை வருடாவருடம் அவர்களே நடுவர்களாக இருந்து தங்களுக்குள் கொடுத்துவிட்டு as usual சுயமாகச் சொறிந்து கொள்ளட்டுமே. யார் வேண்டாம் என்றார்கள்.

    குழலியைப் போன்ற ஜாதி வெறியர்களின் ஆட்சேபத்தை இண்டிபிளாக்ஸ் நிர்வாகம் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    பி.கு.: என் சொந்தப் பெயரில் என் கருத்துகளை வைத்திருக்கிறேன். அதனால் என்னைத் தரம் தாழ்ந்து தாக்கி எழுதுபவர்களும், குழலியின் கொள்கைப்படி அனாமதேயமாக எழுதாமல் அட்ரஸ் கொடுத்துவிட்டு எழுதினால், எனக்குப் பல விஷயங்களில் எதிர்காலத்தில் உதவியாக இருக்கும். :-))

    அன்புடன், பி.கே. சிவகுமார்

    ReplyDelete
  9. "அப்ப நீங்க யாருங்கண்ணே?.."
    நான் அங்க இப்படி கேட்டேன்ங்கண்ணா.
    அவரு
    "//அப்ப நீங்க யாருங்கண்ணே?..//
    நான் ஜீரி (நடுவர்?!) இல்லிங்கண்ணா..."

    இப்படி பதில் சொன்னாருங்கண்ணா..

    அதுக்கு நானு
    " கழுத விட்டையில முன்விட்டை என்ன பின்விட்டை என்னனு" கேட்டேனனுங்கண்ணா்.

    இன்னும் வெளியே விடமாட்டேனுங்குறாருங்கண்ணா?..
    ஏன்னு கேட்டு சொல்லுங்கண்ணா.

    ReplyDelete
  10. //நீங்கள் நடுவராக இல்லாவிட்டால், கள்ள ஓட்டு போட்டு இந்தக் கும்பல் வெல்ல முயற்சிக்கிறதோ என்ற சந்தேகத்தை விளைவிக்கிறது. :-))//
    அது சரி, இன்னொரு ஜீரியான பத்ரியை இப்படி ஒரேயடியாக வாரிவிட்டுட்டிங்களே, அப்போ பத்ரியும் நடுவர் குழுவில் தானே இருக்கார்? அய்யயோ அப்போ பத்ரி என்ன செய்வார்? புரியலையா? அட விடுங்க புரியலைனாலும் மத்தவங்களுக்கு புரியும், அஞ்சாநெஞ்சன், நியாயத்தராசின் முள்ளை நடுவில் பிடித்துக்கொண்டிருப்பவரை தேர்தல் பார்வையாளராக போட தேர்தல் ஆணையம் தேடிக்கொண்டிருக்கின்றதாம், பேசாம நீங்களே ரெக்கமன்ட் செய்யலாம். :-)

    //இடஒதுக்கீடு என்று வரும்போது தகுதி முக்கியமில்லை. ஆனால் இப்போது குழலிக்குத் தகுதி தேவைப்படுகிறது. வெளிநாட்டில் இருக்கிற பிற்படுத்தப்பட்ட தமிழர் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறீர்களே. :-)) அந்தத் தகுதி உங்களுக்குப் போதாதா - குழலியின் அகராதிப்படி என்று கேட்கத் தோன்றுகிறது. :-))
    //
    மிக்க நன்றிங்கோவ்... இப்படித்தான் அப்பப்போ வெளிப்படுத்திக்கிறிங்க ... எதை வெளிப்படுத்திக்கிறிங்களா அட இதுவேற தனியா நான் சொல்லனுமோ?!!! பாத்துங்கோவ் இந்தியாவில தான் சட்டமெல்லாம் பரணையில தூங்குது , அந்த ஊர்ல இப்படி எவனையாவது பேசி கீசி தொலையாதிங்கோ.... ஒரு பாசத்துல தான் சொல்றேன், எனக்கு அறிமுகம்(அட இண்டர்நெட்லதாங்கோ) ஆனவங்க யாரும் அங்கே 'உள்ளே' இல்லை, அப்புறம் எனக்கு இண்டர்நெட்ல தெரிஞ்சவர் ஒருத்தர் 'உள்ள' இருக்காருங்கற பெருமை வந்துடப்போகுது :-)

    //தன் கொள்கைகளை மட்டும் எழுதிக் கொண்டிருப்பவர் இந்தப் பரிசுகளுக்கும் பரிசு கிடைப்பதற்கு முன்னயே யார் நடுவர் என்று இப்படி அலட்டிக் கொண்டும் "அழுவாரா" என்ன? தனக்குச் சாதகமான தீர்ப்பு வரவில்லை என்றால் நீதிபதியைக் குறை சொல்கிற கும்பல், இப்படி எழுதுவது ஆச்சரியமில்லை.
    //
    அட நீங்கவேற இந்த இண்டிப்ளாக் அவார்டு பரிசு வாங்கிதான் சிங்கப்பூர்ல ஒரு கோண்டோவும் சென்னையில வேளச்சேரியில ஒரு 40 இலட்சத்துக்கு ஒரு ஃப்ளாட்டும் வாங்கலாம்னு ப்ளான் போட்டிருக்கேன் :-)

    ReplyDelete
  11. //குழலியைப் போன்ற ஜாதி வெறியர்களின் ஆட்சேபத்தை இண்டிபிளாக்ஸ் நிர்வாகம் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
    //
    ஆகா போன பின்னூட்டத்துல இத்த உட்டுட்டனே, எனக்கு அடிக்கடி ஒரு பின்னூட்டம் வரும் என்னை ஜாதிவெறியன்னு சொல்லி, தமிழ்ல, இங்கிலிபிசுல, தங்கிலீசுல, ஆனா மேட்டர் என்னமோ ஒன்னுதான், என்னை ஜாதிவெறியன்னு சொல்லி அப்புறம் கொஞ்சம் என்னை பாராட்டி :-) வரும், யார்ரா அது என்னையும் போய் ஜாதிவெறியன்னு சொல்லி போடுறாங்களேனு நினைச்சிக்கிட்டு இருந்தேன்.... புரியுது புரியுது இதான் மேட்டரா?!

    ReplyDelete
  12. //வரும், யார்ரா அது என்னையும் போய் ஜாதிவெறியன்னு சொல்லி போடுறாங்களேனு நினைச்சிக்கிட்டு இருந்தேன்.... புரியுது புரியுது இதான் மேட்டரா?! //

    மேலே உள்ள கமெண்ட்டை நிஜ குழலி எழுதி இருந்தால் என் பதில் இது. ஏனென்றால், நான் எழுதவில்லை வேறு யாரோ எழுதிவிட்டார்கள் என்று அவர் சொல்லலாம் இல்லையா. அதனால் அவர் எழுதி இருந்தால் இந்தப் பதில்.

    எங்கள் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். "பச்சைப் புடவை கட்டியவள் எல்லாம் உன் பெண்டாட்டி இல்லையப்பா" என்று. அந்த மாதிரி இருக்கிறது உங்களை ஜாதிவெறியர் என்று அனானியாக எழுதியதெல்லாம் நான் என்று உங்கள் ஆலகால அறிவை நீங்கள் காட்டுவது. :-)) உங்களை ஜாதிவெறியர் என்று சொல்ல எனக்கு முகமூடி தேவையில்லை. இப்போதுதான் சொல்லியிருக்கிறேன். எப்போது இப்படி அபாண்டமாகப் பழி சொல்லலாம் என்று அலைவது உங்கள் கும்பலின் புத்தியாக இருக்கலாம். நான் அனானியாக எங்கும் எழுதியதில்லை. நீங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிற விரட்டியின் நிர்வாகக் குழுவில் உள்ளவர்களில் பலரும்தான் இப்படி அனானியாக அடுத்தவர்களைத் தாக்கித் தாக்கிக் கையும் களவுமாக மாட்டிக் கொண்டவர்கள். இப்போது சொல்கிறேன். இதை எழுதியது நீங்கள் என்றால், ஜாதிவெறியர் என்று அனானியாக எழுதியது நான் என்று நிரூபிக்கவும். இல்லையென்றால் உங்களைவிடப் பெரிய ஜோக்கர் யாருமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சொர்ணம் சங்கரபாண்டிக்கு ஜூனியராகப் போகலாம் நீங்கள் - அபாண்டமாகக் குற்றம் சாட்டுவதில், மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதில்.

    - PK Sivakumar

    ReplyDelete
  13. // மிக்க நன்றிங்கோவ்... இப்படித்தான் அப்பப்போ வெளிப்படுத்திக்கிறிங்க ... எதை வெளிப்படுத்திக்கிறிங்களா அட இதுவேற தனியா நான் சொல்லனுமோ?!!! பாத்துங்கோவ் இந்தியாவில தான் சட்டமெல்லாம் பரணையில தூங்குது , அந்த ஊர்ல இப்படி எவனையாவது பேசி கீசி தொலையாதிங்கோ.... ஒரு பாசத்துல தான் சொல்றேன், எனக்கு அறிமுகம்(அட இண்டர்நெட்லதாங்கோ) ஆனவங்க யாரும் அங்கே 'உள்ளே' இல்லை, அப்புறம் எனக்கு இண்டர்நெட்ல தெரிஞ்சவர் ஒருத்தர் 'உள்ள' இருக்காருங்கற பெருமை வந்துடப்போகுது :-) //

    Please dont worry too much about it. Thanks for your concern. You or your gang not ruling USA. So, there is better civil rights here.

    - PK Sivakumar

    ReplyDelete
  14. அன்புள்ள ஆஸ்கார் விருது வழங்கும் குழுவினருக்கு,

    ராமராஜன் எழுதும் கண்ணீர் கடிதம்.

    நீங்கள் 2006ம் வருடத்துக்கான ஆஸ்கார் விருதுகளை வழங்க இருப்பதாக அறிந்தேன்.அந்த விருதுக்கான போட்டியில் கலந்துகொள்ள எனக்கு விருப்பமில்லை என்றாலும் என்னுடைய "அரைடிரவுசர் அருணாசலம்" "பசுநேசன்" ஆகிய படங்களை எனக்கு தெரியாமலே நண்பர்கள் போட்டிக்கு அனுப்பி வைத்துவிட்டார்கள்.

    நீங்கள் உடனடியாக உங்கள் விருதுவழங்கும் கமிட்டியில் உள்ள அனைவரின் பெயர், முகவரி மற்றும் தகுதி ஆகியவற்றை எனக்கு அனுப்ப வேண்டும்.நீங்கள் தேர்ந்தெடுத்த நீதிபதிகள் தகுதி உடையவரா இல்லையா என்று நான் முடிவு செய்து சான்றிதழ் அளித்த பின்னர் தான் நீங்கள் போட்டியை துவக்க வேண்டும்.

    மேலும் உங்கள் நடுவர் கமிட்டியில் உள்ள ஒரு நடுவர் சில சினிமா பத்திரிக்கைகளில் என்னுடைய முந்தைய படங்களான "அம்மான்னா சும்மாவா" மற்றும் "புல்புல் ஹவுஸ் புல்" ஆகிய காவிய படைப்புகளை 'கண்டாலே குமட்டுகிறது' என்று விமர்சனம் எழுதிவிட்டார். அந்த விமர்சனங்களை அவர் பத்திரிக்கையில் புனைபெயரில் எழுதினார். அதனால் அவரை நீங்கள் எப்படி நீதிபதியாக நியமிக்கலாம்? ஒரு வேளை என்னை நீங்கள் அடுத்த வருடம் நீதிபதியாக தேர்ந்தெடுத்து அவரது படம் ஏதேனும் போட்டிக்கு வந்திருந்தால் நான் உடனடியாக நடுவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருப்பேன்.

    மேலும் ஜூரர்கள் அனைவரும் பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று உடன்பிறப்பு நியோ-லெமூரியன் கூறியிருப்பதால் ஒரு படையாச்சி ஜூரியையாவது நியமிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

    இப்படிக்கு
    டவுசர் பாண்டியன் ராமராஜன்

    ReplyDelete
  15. //இதை எழுதியது நீங்கள் என்றால், ஜாதிவெறியர் என்று அனானியாக எழுதியது நான் என்று நிரூபிக்கவும். இல்லையென்றால் உங்களைவிடப் பெரிய ஜோக்கர் யாருமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
    //
    பிகேஎஸ், நானேத்தான் எழுதினேன், ஆனால் நீங்கள்தான் அனானியாக ஜாதிவெறியர் என்று எழுதினீர்கள் என்றா எழுதியிருக்கிறேன், நல்லா படிச்சி பாருங்க, தமிழ் தெரியுமில்ல? :-)

    பின்குறிப்பு:
    இப்படியாக எழுதுவது சிலருக்கு மட்டும் சொந்தமில்லை, எல்லோருக்கும் இந்த கலை கை வரும்

    மற்றொமொரு பின்குறிப்பு:
    இந்த பின்னூட்டம் அதுக்கு பதில் என தொடர்ந்து ஃபாலோ செய்வதற்கு தற்போதைக்கு நேரமில்லை, அதைவிட வேறு வேலைகள் இருக்கிறது, எனவே பெருசா நீளமா எதுனா பின்னூட்டம் போட்டா உடனே பதில் போடனும்னு எதிர்பார்க்காதிங்கோ....

    ReplyDelete
  16. //இப்போது சொல்கிறேன். இதை எழுதியது நீங்கள் என்றால், ஜாதிவெறியர் என்று அனானியாக எழுதியது நான் என்று நிரூபிக்கவும். இல்லையென்றால் உங்களைவிடப் பெரிய ஜோக்கர் யாருமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
    //
    என்னங்க பி.கே.எஸ். வழக்கமா கேஸ் போடுவேன்னு கிளம்புவிங்க, இங்க என்னடானா ஜோக்கர் பட்டம் கொடுக்கறதோட நிறுத்திட்டங்க? :-)

    அதான் சொன்னேனே சில கலைகள் சிலருக்கு மட்டும் சொந்தமில்லை, அந்த கலைகளை பயன்படுத்த ஆரம்பித்தால் என்ன ஆகும்னு தெரிஞ்சிக்கலாம் அதிபுத்திசாலிகள் எல்லாம்.

    நன்றி

    ReplyDelete
  17. //பிகேஎஸ், நானேத்தான் எழுதினேன், ஆனால் நீங்கள்தான் அனானியாக ஜாதிவெறியர் என்று எழுதினீர்கள் என்றா எழுதியிருக்கிறேன், நல்லா படிச்சி பாருங்க, தமிழ் தெரியுமில்ல? :-)//

    பி.கே.எஸ் எழுதியதையும் நன்றாக படித்து பாருங்கள்

    //இதை எழுதியது நீங்கள் என்றால், ஜாதிவெறியர் என்று அனானியாக எழுதியது நான் என்று நிரூபிக்கவும். இல்லையென்றால் உங்களைவிடப் பெரிய ஜோக்கர் யாருமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். //

    //அந்த மாதிரி இருக்கிறது உங்களை ஜாதிவெறியர் என்று அனானியாக எழுதியதெல்லாம் நான் என்று உங்கள் ஆலகால அறிவை நீங்கள் காட்டுவது. :-)) //

    நீங்கள் பி.கே.எஸ்ஸை அப்படி சொன்னீர்கள் என்று அவர் எங்கே சொன்னார்? அப்படி உட்பொருள் வரும்படி எழுதியிருக்கிறீர்கள் என்று தான் சொல்லியிருக்கிறார்.

    //பின்குறிப்பு:
    இப்படியாக எழுதுவது சிலருக்கு மட்டும் சொந்தமில்லை, எல்லோருக்கும் இந்த கலை கை வரும்//

    கானமயிலாட கண்ட வான்கோழி மேடையேறி கேவலப்பட்ட கதை தான் நினைவுக்கு வருகிறது.

    பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

    ReplyDelete
  18. மற்றொமொரு பின்குறிப்பு:
    இந்த பின்னூட்டம் அதுக்கு பதில் என தொடர்ந்து ஃபாலோ செய்வதற்கு தற்போதைக்கு நேரமில்லை, அதைவிட வேறு வேலைகள் இருக்கிறது, எனவே பெருசா நீளமா எதுனா பின்னூட்டம் போட்டா உடனே பதில் போடனும்னு எதிர்பார்க்காதிங்கோ.... //


    இப்படி எல்லாம் சொன்னா எப்படி?நாங்க எல்லாம் வேலை வெட்டி இல்லாம உங்க பதில் பின்னூட்டத்துக்காக பதினாறு வயதினிலே மயிலு மாதிரி தபால் பெட்டி, போஸ்டாபிசுன்னு பாத்து,பாத்து காத்திருக்கிறோம். உங்க பதில் பின்னூட்டம் வந்தபின் தான் சோறுதண்ணியே தொண்டைகுழியில் இறங்கும். அதனால் உடனடியா உங்கள் பின்னூட்டத்தை அனுப்பி வைக்கவும்.

    ReplyDelete
  19. //Please dont worry too much about it. Thanks for your concern. You or your gang not ruling USA. So, there is better civil rights here. //
    அப்படியே நான் உங்களுக்கு சொல்ல நினைத்ததே, அங்கே சிவில் ரைட்ஸ் அதிகம் அதனால் தான் அப்படி சொன்னேன், சாதிவெறித்திமிரோடு பேசினால் இந்தியா மாதிரி விட்டுடமாட்டாங்க உள்ள வச்சிடுவாங்கன்னு.... அடடே சாதிவெறித்திமிரோடு நான் எங்கே பேசினேன்னு ஆரம்பிச்சா விட்டதுசிகப்பு பதிவு உங்க பதிவுனு சுட்டிக்காகலாம் தேடமுடியாது, கேஸ் எதுனா போட்டிங்கனா அப்போ தேடித்தரேன்.

    வாங்க லக்கிமேன்....

    //கானமயிலாட கண்ட வான்கோழி மேடையேறி கேவலப்பட்ட கதை தான் நினைவுக்கு வருகிறது.//
    வச்சிக்கலாம் அப்படிக்கூட , மயில் கறி பிரியாணி நன்றாக இருக்குமாமே? இதுவரைக்கும் சாப்பிட்டது தான் இல்லை.... பிகேஎஸ் இந்த விசயத்துல என்னோட குரு னு கூட சொல்லலாம், இங்கே தான் பிகேஎஸ் எழுத்திலிருந்து கற்றுக்கொண்டேன் ஏகலைவனைப்போல, அதுக்காக குருதட்சணையா கட்டைவிரலை கேட்டுடாதிங்கப்பு, நானொன்று அந்த கால இனாவானா ஏகலைவன் அல்ல, அங்கே அப்படி என்ன எழுதியிருந்தாரா? கீழே போடுறேன் படிங்க....
    //ஹலோ விசிதா மேடமா? வாங்க மேடம் வாங்க! உங்களைப் பார்த்தால் அண்ணன் ரவி ஸ்ரீனிவாஸைப் பார்த்த சந்தோஷம் வருகிறது. உங்களை மட்டுமல்ல, இணையப் பத்திரிகைகளில் ராதா ராமசாமி எழுதுவதைப் பார்த்தாலும் அண்ணன் ரவி ஸ்ரீனிவாஸைப் பார்க்கிற சந்தோஷம் வருகிறது. வலைப்பதிவுக்கு விசிதா, இணையப் பத்திரிகைகளுக்கு ராதா ராமசாமி என்று ஏரியா பிரித்துக் கொண்டு, அண்ணன் ரவி ஸ்ரீனிவாஸை நினைவுபடுத்தி வருவதற்கு நன்றிதானே சொல்ல வேண்டும். கொஞ்சம் பொறுங்க. நீங்களும் ராதா ராமசாமியும் அண்ணன் ரவி ஸ்ரீனிவாஸ் மாதிரி அறிவுபூர்வமாக எழுதுகிறீர்கள் என்று சொல்ல வந்தேன். வேறு மாதிரி கோக்குமாக்கா நினைச்சுக்க்காதீங்க.

    விசிதா மேடம், அதப் பாருங்க. அசோகமித்திரன் பிரச்னை என்னவென்று நான் நினைக்கிறேன் என்றால் - பெண்கள் பெயரில் ஐ.டி. கிரியேட் செய்து கொண்டு, தனக்குத் தானே சப்போர்ட்டிங் ஆர்க்யூமெண்ட்ஸ் வைக்கவும், அடுத்தவரைத் திட்டி எழுதவும் கற்றுக் கொள்ளாததுதான் என்று நினைக்கிறேன். ஒருவேளை, அப்படி இன்னொரு பெயரில் - அதுவும் பெண் பெயரில் எழுதினால் எல்லாரும் நம்பி விடுவார்களோ என்றோ, கடுமையான எதிர் விமர்சனம் இருக்காது என்றோ நம்பிக்கைகளில் - அப்படிப்பட்ட ஒரு ஐ.டி.யை உருவாக்கிக் கொண்டு, தன் வாதத்துக்குத் தானே சப்போர்ட் சேர்க்கிற Pathetic நிலைமைக்கு இன்னும் அசோகமித்திரன் வராதது கண்டு உங்களைப் போன்ற மேடம்களுக்கு பிரச்னையாகத்தான் இருக்கும்.
    //

    ----------
    லக்கிமேன் எப்படி மயிலாட்டம் சூப்பரா?

    ReplyDelete
  20. கீழ்க்கண்ட பதிவுகள் Best Indic Blog (Tamil) பிரிவில் வாசகர் ஓட்டெடுப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன... இனி வாசகர் சாய்ஸ் எதுவோ அது சிறந்த இண்டிப்ளாக் 2006 (தமிழ்) என அறிவிக்கப்படும்.

    Ellorum Ellamum Pera Vendum

    E-Tamil

    Kalam

    Manggai

    Thaniththiru Vizhiththiru Pasiththiru

    Theriyala!

    Asuran

    Dispassionated DJ

    Kaiman Alavu

    Karisal

    Kavithaich Chalai

    Kirukkal.com

    Manarkeni

    Nirangal

    Pinathalkal

    Pons Pakkangal

    Summa Time Pass Machchi!

    Thaniththuvamanavan, Ungalaip Polave

    Ulagin Puthiya Kadavul

    ReplyDelete
  21. என்னங்க முகமூடி,

    அங்கே ஓட்டுப்போடலாமுன்னு போனா,

    முதல் பக்கத்துலே (கள்ள) நல்ல ஓட்டு எல்லா வகைகளுக்கும் போட்டாத்தான் அந்தப் பக்கத்தையே
    கடக்க முடியுமாம். அதுலெ போட்டுருக்க வகைகளில் ஒண்ணுகூட நான் இதுவரை படிச்சதும் இல்லை.
    அதைப்பத்தி ஒண்ணும் தெரியாமலேயே எதாவது 'குத்தி'வச்சுட்டுப் போனா அடுத்தபக்கம் பார்க்க வருது.

    எனெக்கென்னவோ இது சரின்னு படலை. படிக்காத ப்ளொக்குகளுக்குப் போட்ட நல்ல ஓட்டுக்களும் இப்பக்
    கள்ள ஓட்டாதான் தெரியுது.

    இந்த சர்வேயைச் சுலபமாக்கி, நாம் தேர்ந்தெடுக்கும் வகைகளுக்கு மட்டும் ஓட்டுப்போடும் வழி செஞ்சால்
    நல்லா இருக்குமே. அட்லீஸ்ட் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்தேன் என்ற நிம்மதி இருக்குமில்லெ?

    இப்ப இதாலே என் ராத்தூக்கம் போச்சு. மனசு குடையுது(-:

    ReplyDelete
  22. துளசி,

    நான் ஓட்டுச்சாவடிக்கு போகாததால கவனிக்க முடியல... இப்பத்தான் கவனிச்சேன். முதல் பக்கத்துல எல்லாத்துக்கும் எதையாவது தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியமில்லை. முதல் பிரிவான Best Indiblog 2006 மட்டும் எதையாவது செலக்ட் செய்ய சொல்லுது, மத்த எல்லாத்துக்கும் 'no answer' என்று செலக்ட் செய்யலாம். இருந்தாலும் முதல் பிரிவிலும் இந்த ஆப்சன் தேவைதான். இதை இண்டிப்ளாக்கீஸ் நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தி இருக்கிறேன். அவர்கள் பதில் என்னவென்று பார்ப்போம். நன்றிங்க..

    ReplyDelete
  23. //கீழ்க்கண்ட பதிவுகள் Best Indic Blog (Tamil) பிரிவில் வாசகர் ஓட்டெடுப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன... இனி வாசகர் சாய்ஸ் எதுவோ அது சிறந்த இண்டிப்ளாக் 2006 (தமிழ்) என அறிவிக்கப்படும்.

    Summa Time Pass Machchi!
    //

    அண்ணாத்தே!

    இதெல்லாம் எனக்கே ரொம்ப ஓவரா படுது :-))))))

    ReplyDelete
  24. // இதெல்லாம் எனக்கே ரொம்ப ஓவரா படுது //

    அப்புறம்... ஜனரஞ்சகமான படம்னா ஒரு வடிவேலுவோ விவேக்கோ வேணாமா லக்கி...

    ஜோக்ஸ் அபார்ட், ஆக்ஸிடெண்ட்ஸ் டூ ஹாப்பன். அ.மு.க களத்துல உண்டா?

    ReplyDelete
  25. பி கே எஸ்

    யாருகிட்ட போய் நியாயம் பேசுகிறீர்கள் ? முதலில் முகமூடியை ஜுரியாகப் போடக் கூடாது என்று சொல்வதற்கும், அவரது நடுநிலைமையில் சந்தேகம் கற்பிப்பதற்கும் இவர்களுக்கு என்ன அருகதை உள்ளது என்று சற்று பார்க்கலாம்.

    முதலில் முகமூடியின் பெயர் , விலாசம், தகுதி தெரியாததால் அவரை ஜீரியாகத் தேர்ந்தெடுத்ததை எதிர்க்கிறார்களாம். என்ன கேனத்தனமான வாதம் அது ?

    முழுப் பரீட்சை எழுதும் பொழுது திருத்தப் போகும் வாத்தியார் மூஞ்சியப் பார்த்த பின்னால்தான் திருத்த அனுமதிக்கிறோமோ ? திருத்தப் போகும் வாத்தியாருக்கு எந்தவித பிண்ணனி வேண்டுமானாலு, விருப்பு வெறுப்பு வேண்டுமானாலும் இருக்கக் கூடுமே ? அவர்கள் எல்லோரும் முகமூடிகள்தானே ?

    பத்திரிகைகளில் பல நேரங்களில் புனைப் பெயர்களில் எழுதும் எழுத்தாளர்களை நடுவர்களாகப் போடுகிறார்களே. ஆக விருது கொடுக்கும் அமைப்பிற்கு ஜூரியின் அடையாளங்கள் தெரிந்திருந்தாலே போதுமானது. அதைக் கேள்வி கேட்க வேறு யாருக்காவது அருகதை இருக்கலாம் ஆனால் இவர்களுக்கு நிச்சயம் கிடையாது.

    அடுத்து முகமூடி சாய்வு நிலை எடுப்பதனாலும் அவருக்கு என்று தனிப்பட்ட கருத்துக்காள் இருப்பதினாலும் அவரை நடுவராக இருக்கக் கூடாது என்கிறார்கள். அப்படி சொந்தமாக சிந்திக்கும் கருத்துக்கள் இல்லாத ஆட்களை நடுவராகக் கொண்டு வர வேண்டுமானால் செவ்வாய் கிரகத்தில் இருந்தோ அல்லது சிம்பன்சியையோதான் ஜூரியாகக் கொண்டு வர முடியும்.

    இது போன்ற கூறுகெட்டத்தனமான சொத்தை காரணங்களை எந்த ந்டுவர் மீதும் சுமத்தலாம், ஏன் எந்த வம்பு தும்புக்கும் போகாத நடுநிலை பதிவர் என்று கருதப் படும் (நான் கருதவில்லை) துளசி போன்றவர்கள் கூட் இது போன்ற அபத்தமான வாதங்களை வைத்து நடுவராக இருக்கக் கூடாது என்று சொல்லலாம். முகமூடி கூடாது என்றால் பத்ரியும் கூடாது என்று இன்னொருவர் சொல்லலாம், பத்ரி ஒரு பப்ளிஷர் ஆகவே போட்டி பதிப்பாளரான மனுஷ்யபுத்திரன், பி கே எஸ் போன்றவர்களின் பதிவுகளை அவர் நிராகரிக்கக் கூடும், பத்ரி இந்திய இறையாண்மைக்கு எதிரானவர் தீவீரவாதிகளுக்கு ஆதரவாளர் ஆகையால் அவர் செல்வன் போன்ற இந்திய தேசியத்தை ஆதரிக்கும் பதிவர்களை நிராகரிக்க வாய்ப்புள்ளது அதனால் அவரை ஜூரியாக இருக்க அனுமதிக்கக் கூடாது என்று எவனாவது ரோட்டில் போகிறவன் சொன்னால் அது எப்படி கேனத்தனமாக இருக்குமோ அதை விடக் கேனத்தனமாக இருக்கிறது முகமூடி நடுவராக இருக்கக் கூடாது என்னும் வாதமும்.

    தொடரும்....

    அன்புடன்
    ச.திருமலை

    ReplyDelete
  26. ஆக முகமூடியை ஜூரியாக தேர்ந்தெடுத்தே தவறு என்று இவர்கள் சொல்லுவது சரியான சொத்தை வாதம்.

    அடுத்து இதைச் சொல்ல இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது என்று பார்க்கலாமா ?

    முகமூடி நடுநிலையுடன் இருக்க மாட்டார் ஏனென்றால் அவர் முகத்தை மூடிக் கொண்டு எழுதுகிறார் என்று சொல்லும் இவர்களின் வரலாறு என்ன ?

    ஒரு கண்ணியமான பெண் பதிவரிடம் போய் ஆபாசப் பதிவைப் படி என்று சொன்ன பொறுக்கி அல்லவா இவர்கள் ? இவரது மனைவியிடம், சகோதரியிடம், தாயாரிடம் அதே ஆபாசப் பதிவைப் படிக்கச் சொல்லி சிபாரிசு செய்திருப்பாரா ? செய்ய முடியுமா ? செருப்படி கிடைத்திருக்காது ? அப்படி முகமூடி போட்டுக் கொண்டு ஆபாச மிரட்டல்கள் செய்யும் ஈனப் பிறவிகளுக்கு வக்காலத்து வாங்கும் இழிபிறவிகள் எல்லாம் முகமூடியைக் கேள்வி கேட்க கிளம்பி விட்டார்கள்.

    அடுத்து, ஒரு பொறுப்புள்ள பதிவரும், பதிப்பாளரும், எழுத்தாளரும் ஆகிய பி கே எஸ்ஸே சொல்லுகிறார் பார் டெண்டர் என்ற பெயரில் பத்ரியையும், ரஜினிராம்கியையும், என்னையும், பிகேஎஸ்ஸையும் இனி பலரையும் ஆபாசமாக எழுதியதும் வீரவன்னியன் என்ற பெயரில் ஜாதி வெறிக் கருத்துக்களைப் பரப்பியதும் தமிழ் சசி என்ற சசி குமார் என்று. பிகேஎஸ்ஸும் அதே நியுஜெர்சியில்தானே இருக்கிறார், ஏன் முகமூடி போட்டுக் கொண்டு ஆபாச மிரட்டல் செய்த பொறுக்கி இந்த சசி இல்லையென்றால் யோக்கிய்வான் என்றால் பி கே எஸ் மீது கேஸ் போடுவதுதானே ? ஏன் போட வில்லை ? ஒரு பொறுப்புள்ள இந்திய நேவியின் ஆபிசரான வந்தியத்தேவன் சொன்னாரே என் ஆதாரங்களை நான் எந்த நடுநிலைப் பதிவர் முன்பும் கொடுக்கத் தயார் என்று, ஏன் அவரது சவாலை ஏற்றுக் கொள்ளவில்லை ? ஆக அப்படிப் பட்ட ஒரு ஆபாசப் பிறவியை ஆதரித்த கும்பல் இன்று முகமூடியின் நடுநிலமை குறித்துக் கேள்வி கேட்கிறது. அது போன்று முகமூடி போட்டுக் கொண்டு பத்ரி போன்றவர்களை அசிங்கமாக எழுதிய பிறவிகள்தான் தமிழ் திரட்டியை நடத்துகிறார்கள். அதில் உள்ள நிர்வாகிகளில் பாதி பேருக்கு மேலே வேறு பெயர்களில் ஆபாசமாக எழுதுவதும் ப்ளாக் மெயில் செய்வதும்தான் முழு நேரத் தொழிலே அவர்கள் அத்தனை பேரின் இழி முகங்களையும் பி கே எஸ்ஸும், குசும்பனும், வந்தியத்தேவனும் பல முறை கிழித்திருக்கிறார்கள். அது போன்ற பொறுக்கிகளும் ஆபாச ஈனப் பிறவிகளையும்தரிக்கும் கும்பலுக்கு முகமூடியைக் கேள்வி கேட்க என்ன அருகதை உள்ளது ?

    முகமூடி அணிந்து கொண்டோ அல்லது வேறு பெயர்களில் எழுதுவதிலோ அல்லது அனானியாக எழுதுவதிலோ தவறில்லை ஆனால் அந்த சுதந்திரத்தை வைத்துக் கொண்டு அப்பாவிப் பதிவர்களை ஆபாசமாக எழுதுவதும் மிரட்டுவதும்தான் தவறு. அப்படிச் செய்த பார் டெண்டர் என்ற அயோக்கியன் ஒருவனுக்கு வக்காலத்து வாங்கும் மிருகங்களுக்கு முகமூடியைக் கேள்வி கேட்க எவ்வித அருகதையும் கிடையாது.

    இவர்கள் போக ஒரு பெரிய நடுநிலை பதிவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் போலியைக் கண்டிக்கிறேன் என்றூ அவ்வப் பொழுது அறிக்கை விட்டுக் கொள்கிறார்கள். ஆனால் அதே நடுநிலைப் பதிவர்கள் பார் டெண்டர் போன்ற ஆபாசப் பிறவிகளின் உண்மை முகம் வெளிப்பட்ட பின்பும் கூட அந்த இழிபிறப்பின் பதிவில் போய் ஆதரித்துமப் பின்னூட்டம் போடுகிறார்கள். ஆக இவர்களுக்கு வேண்டியவர்கள் முகமூடி போட்டுக் கொண்டு ஆபாசமாக எழுதினால் சரியா ? என்னே ஒரு இரட்டை வேடம் ? முகமூடி போட்டுக் கொண்டு என்னைத் திட்டுகிறான் என்று ஒரு இடத்தில் ஒப்பாரி வைப்பது, இன்னொரு இடத்தில் போய் அது போன்ற ஈனச்செயல் செய்யும் பிறவிகளுக்கு ஆறுதல் பின்னூட்டம் போட வேண்டியது, போலியார் என்று மரியாதை கொடுத்து அழைக்க வேண்டியது. இணையத்தில் இப்படியும் பிழைக்க வேண்டுமா? ஏனிந்த கயமைத்தனம் ? ச் சீ நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு. இவர்கள் எல்லோருக்கும் முகமூடி போட்டுக் கொண்டாலும் கண்ணியமாக எழுதும் முகமூடியைக் கேள்வி கேட்க எவ்வித அருகதையோ, உரிமையோ, தார்மீக வலுவோ, நேர்மையோ, கிடையாது. முதலில் பார் டெண்டர் என்ற பெயரில் மிரட்டல்களை அசிங்கங்களை பரப்ப்பிய மூஞ்சியில் காறித் துப்பி விட்டு வரட்டும் முகமூடியிடம் கேள்வி கேட்க.

    ச.திருமலை

    ReplyDelete
  27. வலைப்பதிவு திரட்டி நிர்வாகிகள் கைது
    ---------------------------------

    Greek blog aggregator arrested
    Published 3 months, 3 weeks ago in Internet, Journalism, Technology, WSIS, IGF
    The Internet Governance Forum will start on Monday morning but already the debate has started - and it is surrounding freedom of speech online.

    There are several reports that the Greek authorities arrested a man for linking - not writing, but linking - to blog posts that had satirised a businessman (possibly a TV evangelist). The businessman complained to the police and the police picked up the adminstrator of blog aggregation site blogme.gr - and charged him.

    Update: The man arrested was Antonis Tsipropoulos and the target of the satire was Dimosthenis Liakopoulos - a controversial Greek tele-evangelist. The satire site that mocks Mr Liakopoulos can be found at funel.blogspot.com, but since it is hosted in the US, neither the Greek authorities nor even Mr Liakopoulos can get at it.
    What Mr Tsipropoulos has been charged with, god only knows. But this is a spectactular own goal by the Greek authorites on the eve of the IGF. Particularly since making a crime of linking to someone else's content is pure, and legally foolhardy, censorship.

    It's all over the Greek blogosphere, but I can't understand the majority of it. Except for the fact that there appears to be movement building to protest outside the conference hotel as a statement against the arrest.

    Yesterday, Amnesty International started a campaign to draw attention to those blogger across the world that have been imprisoned because of information they have posted online.



    விடாமல் ஆபாசக் கருத்துக்களை பதியும், விடாமல் பார்ப்பனர்களை அசிங்கமாக பதியும், பாப்பாத்தி பாட மறுப்பாளா என்று கேள்வி கேட்கும் பதிவுகளைத் திரட்டும் தமிழ் நாறும் விரட்டிக்கும் , அது போன்ற ரேஷியல் பதிவுகளை மீள் பதிவு செய்து வெளியிட்டு தனது இனவெறுப்பை அப்பட்ட்டமாகப் பறை சாற்றிக் கொண்டு நாற்றமெடுக்கும் பூந்தோட்டத்திற்கும் இதே கதி வருமா ?

    வரும், சீக்கிரமே வரத்தான் போகிறது. இதே போல் இனவெறுப்பைத் தொடர்ந்து செய்து வருவார்களேயாயின் அதன் நிர்வாகிகளும் அமெரிக்க ஜெயில் கஞ்சி குடிக்கப் போகும் நாட்கள் அதிக தூரத்தில் இல்லை.

    ச.திருமலை

    ReplyDelete
  28. //மயில் கறி பிரியாணி நன்றாக இருக்குமாமே? //

    வாங்க குழலி. மயில்கறி பிரியாணியை விட வான்கோழி கறி பிரியாணி தான் நன்றாக இருக்கும், நிறைய பேர் சாப்பிடுவதாகவும் கேள்வி.

    /இங்கே தான் பிகேஎஸ் எழுத்திலிருந்து கற்றுக்கொண்டேன் ஏகலைவனைப்போல, அதுக்காக குருதட்சணையா கட்டைவிரலை கேட்டுடாதிங்கப்பு, நானொன்று அந்த கால இனாவானா ஏகலைவன் அல்ல/

    நீங்கள் சரியாக கற்றுக்கொள்ளவில்லை என்பதால் உங்களிடம் கட்டைவிரலை கேட்க வேண்டிய அவசியமுமில்லை குழலி. நீங்கள் துரோணரை கண்டு கற்ற ஏகலைவனல்ல. ரஜினியை போல் தலை சிலுப்பி நடிக்கும் சின்னி ஜெயந்த். சின்னி ஜெயந்திடம் ரஜினி கட்டைவிரலையா கேட்பார்? கண்டுகூட கொள்ள மாட்டார்.


    /லக்கிமேன் எப்படி மயிலாட்டம் சூப்பரா? /

    மயிலாட்டம் சூப்பர் குழலி. வான்கோழி ஆட்டம் தான் சகிக்கவில்லை என்று சொல்கிறேன்:-D

    ஒருத்தர் பாணியை இன்னொருத்தர் காப்பி அடிப்பது சரிவராது குழலி. தனக்கென்று தனிப்பாதை வகுத்துக்கொள்ள வேண்டாமா?பிகேஎஸ் பாணியில் நீங்கள் எழுத முயன்று ஏமாந்ததை தான் சொன்னேன்.உங்களுக்கு வழக்கமா மொட்டைதலை + முழங்கால் + விளக்கெண்ணை விளக்கம் இதுதான் சரியா எழுத வரும். நீங்களும் விட்டேனா பார் என்று காமடி, கவிதை, கதை என்றெல்லாம் எழுதினீர்கள். எவனாவது கண்டு கொண்டானா? ஐய்யரு பொண்ணு மீன்வாங்க வந்த கதையை எழுதினிர்கள்.அதை படித்துவிட்டு அவனவன் பின்புறத்தில் தான் சிரிப்பதாக கேள்வி.

    இப்போது இதெல்லாம் போதாது என்று நிர்வாணமாக இருக்கும் பெண்களின் கவர்ச்சி போட்டோவை போட்டு சர்க்குலேஷன் ஏற்ற பார்க்கிறீர்கள். முழு விடியோவை போட்டால் ஓரளவு சர்க்குலேஷன் ஏறலாம்:-D

    அதனால் நீங்கள் இனிமேல் செய்ய வேண்டியதெல்லாம் சம்பந்தமில்லாத போட்டோ + வாசகம் + விளக்கெண்ணை தலைப்பு + வெண்டைக்காய் பதிவு என்று போட்டுவிட்டு வருபவர்கள் போகிறவர்களை எல்லாம் உங்கள் அல்லக்கைகளை வைத்து வசைபாடித்திரியும் உங்கள் வழக்கமான பாணியை தொடர்ந்து கடை பிடிப்பது தான்.

    என்ன சொல்கிறீர்கள்:-D

    ReplyDelete
  29. 2006க்கான சிறந்த இண்டிப்ளாக்ஸ் (தமிழ்) விருது பினாத்தல்களுக்கு கிடைத்திருக்கிறது...

    வாழ்த்துக்கள் பெனாத்தலார்

    ReplyDelete
  30. இண்டிப்ளாக்கீஸ் (தமிழ்) வாக்குப்பதிவின் ஓட்டு விபரம் இங்கே

    ReplyDelete
  31. Best Direcctory/Clique/Service பிரிவில் கில்லி இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

    வாழ்த்துக்கள் கில்லி

    ReplyDelete
  32. தலைவா, பெனாத்தலாரை வாழ்த்திப் பதிவே போட்டுட்டோமில்ல! இங்க பாருங்க.

    ReplyDelete
  33. //அப்புறம்... ஜனரஞ்சகமான படம்னா ஒரு வடிவேலுவோ விவேக்கோ வேணாமா லக்கி...//

    ஒஹோ... அதனால தான் அண்ணாத்தைய ஜூரியா போட்டாங்களா :-)

    வெளங்கினாப்புல தான்.

    ReplyDelete