Friday, August 18, 2006
ப்ளேனில் பாம்புகள்
ஒரு நாள் தியேட்டரில் டிக்கெட் வாங்கி வைத்துக்கொண்டு, நட்புக்காக காத்திருந்தபோதுதான் முதன் முதலில் பக்கத்தில் இருக்கும் அந்த போஸ்டர் கண்ணில் பட்டது. Snakes on a plane. ஆஹா ஆரம்பிச்சிட்டானுங்கடா என்று நினைத்துக்கொண்டே கிட்டே போய் நின்று பார்க்க ஆரம்பித்தேன் (தொட்டில் பழக்கம்) கடந்து போனவர்களை எல்லாம் ஒரு நிமிடம் நிற்க வைத்து நமுட்டு சிரிப்பு சிரிக்க வைத்தது அந்த போஸ்டர். பின்னர் சாமுவேல் ஜாக்சன் பெயர் கேள்விப்பட்டதும் விளங்கிய மாதிரிதான் என்று நினைத்துக்கொண்டேன். ப்ளேனில் அகஸ்மாத்தா நாலு பாம்பு புகுந்து கலாட்டா செய்ய நொடிக்கு நூறு முறை mother****er என்று சொல்லிக்கொண்டே - எனக்கு தெரிந்து சாமுக்கு அடுத்து இநத வார்த்தையை உபயோகிப்பது நம்ம கார்த்திக்ராமாஸ்தான் - சாம் அதை வேட்டையாடுவதுதான் கதையாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டே நடையை கட்டினேன். (இவ்வளவு அப்பட்டமாக படத்தின் கதையை சொல்லிய தமிழ் படங்களின் பட்டியல் ஒன்று தயாரிக்க வேண்டும். உடனடியாக நினைவுக்கு வருவது 'இதுதாண்டா போலீஸ்' மட்டும்தான்)
முந்தா நாள் சைன்ஃபெல்ட் சீசன் 5 & 6 வாங்கலாம் என்று circuit city (19ம் தேதி வரை மலிவு விலை - ஒரு சீசனுக்கு $20 மட்டுமே. வரிகள் தனி) போயிருந்தால் கேஷ் கவுண்டரில் ஒரு டிவிடி இலவசமாக கொடுத்தார்கள். பார்த்தால் SoaP முன்னோட்ட ஒளிவருடிவட்டு (DVD). ஒரு ட்ரைலர், 11 நிமிட Behind the Scenes முன்னோட்டம்.
வட்டில் அவர்களே கதையையும் சொல்லிவிட்டார்கள். ஹவாய் தாதா செய்யும் ஒரு கொலையை பார்த்துவிடும் ஒரு இளைஞனை லாஸ் ஏஞ்ஜலீஸ் நீதிமன்றத்திற்கு அழைத்து வர வேண்டும். வருகிறார் FBI ஏஜெண்டு சாம் ஜாக்சன். ப்ளேனில் ஆயுதங்கள் ஏற்ற முடியாத கெடுபிடியில் பாம்புகளை அனுப்பி வைக்கிறான் வில்லன். விமானம் நடுவானில் இருக்கும்போது பாம்புகள், லிவிங் ஸ்மைல் வரிகளில் நாட்டுப்பற்று அவமதிப்பை கண்ட ரவீந்திரன் அந்தோணிசாமி பதிவின் பின்னூட்டங்கள் லெவலுக்கு, கட்டவிழுகின்றன. அப்பாவி அழுவாச்சி பயணிகள் ஒருபுறம், பாம்புகள் மறுபுறம் என்று இரண்டையும் மதர் ஃ***ர் புகழ் சாம் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் கதை. மொத்தம் 450 பாம்புகளாம், BTSல் சொன்னார்கள்.
என்னதான் டகால்டியாக எடுத்தாலும் ராமநாராயணன் தீம்தான்.. எப்படியும் படத்துக்கு போகப்போவதில்லை, சரி ப்ரிவ்யூ பார்த்த மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம் என்று imdb பக்கம் போனால், இந்த விவாதகளம் கண்ணில் பட்டது..
Board: Snakes on a Plane (2006)
part two... comes out December 2007.... "monkeys on a plane" dont miss it... i wonder what the third part is going to be called
Snails on a Bus
Zombies on a Plane
Zombies on a Train
Zombies on a Bus
Pretty much zombies on anything...
Nah, the cool thing about it being on a plane is that once you're in the air, it's a lot harder to get off. You can easily stop a train or a bus, but you can't stop a plane in mid-air. Pretty much the only other confined spaces you can't get out of once they're in action are boats and submarines.
Bears on a Submarine!
beavers on a hovercraft.
Snakes on a boat and ladies in the water
"Snakes In The Rain", which is a romantic comedy, featuring an all snake cast.
monkeys on a plane
Drunks on a yacht
gays on a gondola
Pigs on a Yacht!
Penguins on a Spaceshuttle
killer dildos on a train
Hornets on a School Bus
Cats on an Ice Cream Truck.
Llamas on a motorboat
Hamsters on a wheelbarow.
Giraffes On A Ferris Wheel
morons on a message board.
Scorpions on a Dirigible
KKK in the hood
Minesota Vikings on the Love Boat
IDIOTS IN A CINEMA:
whiney guy on a message board.
priests and nuns on a mile high club plane
Priests and Small boys in a Church.... alone
Lice on a Pube
hippos on a raft
Micheal Jackson on a playground Or
Michael Jackson on a school bus
Sharks on a Seaplane
Mice on a Greyhound...
Bedbugs on a Vibrator
ninjas on a submarine
streakers in a elevator
Turtles on a Train
FLEAS ON A WAGON
Wheels on a Bus
balls on a pooltable
Moose on a Moped
Turtels on a freeway.
Ironside on a wheelchair
Ants in my pants
Grandmas in the hot tub, Carrot top in a blimp, and watching Little Man with The Wayans brothers on a plane (in like a week when they start showing it on flights). ahhhhhh!
toothpaste, bottled water, make up, shampoo, and contact solution on a plane.
Goats on a Boat! It rhymes!
Gophers on a Golf Cart
Mel Gibson on a Jihad
SHARKS ON A PLANE
Can-Openers on a convayerbelt.
monkeys on a plane - They did that movie already. It's called "Air Force One.
hemmorhoid on the butt
Broke Back Mountain dudes in your room
Snakes in a Gay Bar.
Gorillas in a pop corn machine
Sharks in a subway
rhinos on a lamp
ron jeremy on my bed (thriller)
micheal jackson on a jungle gym
fruitflies on a fruit
Snakes on a Imperial Class Calamari Cruise Ship
Spiders on a space shuttle
Samuel L Jackson on anything
Snakes on a Plane தமிழ்ப்பதிவுகள்
ஐயா தலைவரே...
ReplyDeleteபத்துட்டீங்களா...Mothe F*****g Snakes on the mothe F****g plane ஐ...!!
அத்தெ வெச்சு இல்லாத பொல்லாத காமெடி பண்ணிகிட்டு இருந்தோம்லெய்யா நாங்க...
daily show
இன்னும் அந்த ப்ளேன் பென் குரியன் விமான நிலையத்தில் தரை இறங்கவில்லை!! சத்ரபதி சிவாஜி விமான நிலயத்திற்கு வந்து விடும் போல...முதலில்...!!
என்கே இருக்கிறது - எப்படி தேடுவது...
ReplyDeleteஎன்று தெரியாமல் உள்குத்தை வைத்துவிடும் தமிழ்மண சூப்பர் ஸ்டாட்டர்...
:))
அடுத்தவார விவகாரமும் நான் தானுங்கோ !!!!!!!!!
ReplyDeleteஆனால் பதிவர் தான் ஒரு காய்கறி :))
:))))
ReplyDelete:))))
ReplyDeleteTag தமிழ்ப்பதிவுகள்? ;-))
ReplyDeleteஇந்த படத்தை பத்தி ஒரு டிரெய்லர் ரொம்ப நாளுக்கு மின்னாடியே நானும் போட்டேனுங்க.
ReplyDeleteவந்துச்சுப்பாருங்க அதுக்கு ஒரு சூப்பர் பின்னூட்டம்.
அவரு பயங்கர சாம் ஜாக்ஸன் விசிறி போல கீது. :-)
அட்ரா அட்ரா சக்கை
ReplyDeleteநடத்துங்க ராசா நடத்துங்க
நல்ல டைமிங்கா போட்டு தாக்கி இருக்கீங்க
சூப்பர்
//இவ்வளவு அப்பட்டமாக படத்தின் கதையை சொல்லிய தமிழ் படங்களின் பட்டியல் ஒன்று தயாரிக்க வேண்டும். உடனடியாக நினைவுக்கு வருவது 'இதுதாண்டா போலீஸ்' மட்டும்தான்//
ReplyDeleteதலை,
இப்படி எல்லாம் சொன்னால் தமிழ்படங்களில் கதை இருக்கிறது என நம்பி விடுவோமாக்கும்?தமிழ் ஹீரோக்கள் இரண்டு ஹீரோ சப்ஜெக்டில் நடிக்க மாட்டார்கள் என்பது தெரிஞ்ச விஷயமாச்சே.ரஜினி என்ற நாயகன் இருக்க கதை என்ற இன்னொரு நாயகன் எதற்கு?குழப்பம் வந்துடாதா?:))
என் நடிப்பை விமர்சிக்காமல் வெருமனே நான் பேசும் வசனத்தை மட்டும் விமர்சிக்கும் முகமூடிக்கு என் கண்டனங்கள்: நீங்கள் பார்க்க வேண்டிய என் படங்கள்:
ReplyDelete1.SWAT
2.CHANGING LANES
3.TWISTED
3.BASIC
4.SHAFT
5.THE NEGOTIATOR
6.DIE HARD WITH A VENGEANCE
7.Rules of Engagement
//இவ்வளவு அப்பட்டமாக படத்தின் கதையை சொல்லிய தமிழ் படங்களின் பட்டியல் ஒன்று தயாரிக்க வேண்டும். உடனடியாக நினைவுக்கு வருவது 'இதுதாண்டா போலீஸ்' மட்டும்தான்//
ReplyDeleteபிழைதிருத்தம். 'இதுதாண்டா போலீஸ்' திராவிட, அஃதாவது தமிழ் படமல்ல. அது தெலுகு டப்பிங். (நான் டாக்டர் ராஜசேகர் ரசிகனாக்கும்)
சின்னவரே...
அய்யா சாமி உயிரோடதான் இருக்கீகளா? பா(ர்ட்)டு ஸிம்ஸா... நம்ம ஸிம்சை அரசன் 69 கிலிகேஸி'ன்னு போஸ்ட்டு போட்டு அசத்துறதுதான? வீணாப்போன ஆப்பாயில் ஆம்லேட் படத்த விட நல்லாருக்கும்ல... :-)
வஜ்ரா, டெய்லி ஷோ நல்லா இருந்தது.. இந்த படத்தை பார்க்க விருப்பமில்லை.. அதான் Snakes in Tamil Blogdom திகில் காமெடியை தினமும் பார்க்கிறோமே.. இன்னொரு காமெடி வேறா என்றுதான்...
ReplyDelete*
செந்தழல்.. அது விவகாரம் இல்ல கண்ணு... விகாரம் :))
*
நன்றி புன்னகை சங்கர்
*
சின்னவன்.. எங்க ரெம்ப நாளா ஆளே காணோம போயிட்டீங்க. எதுனா ஸ்டார்டிங் ட்ரபுளா. பாப்பார பசங்களுக்கு எல்லாம் இந்த 2006லயும் எஞ்சினியரிங் படிப்புக்கு சீட்டு கிடைக்குது, என்னா ஒரு அநியாயம் 3 +3 = 43 விகிதாச்சாரப்படி பாத்தா இது ஒரு ஏமாத்து ; எங்கப்பாரு வளைச்ச பொறப்போக்கு நிலத்து மேல பட்டா வாங்க போட்ட கேசு எதிராளிக்கு சாதகமா தீர்ப்பாயிடுச்சி... நீதிபதியா எங்கண்ணன் இல்லாததாலதான் எஞ்சாதி ஆளுங்களுக்கு அநீதி அப்படி இப்படின்னு எதயாவது அடிச்சி ஆடுவீங்களா?
*
நன்றி நாகை சிவா..
*
செல்வன். தமிழ் படத்துல கதைன்னு சொன்னது தப்புதான். தப்புதான். தப்புதான் (இருந்தாலும் உதாரணத்துக்கு கதைன்னா என்னன்னே தெரியாத ரஜினிய சொல்லியிருக்க வேண்டாம்)
*
சாம்.. என் ஃபேவரைட்டு Pulp Fictionஅ லிஸ்டுல உட்டுட்டியே. அது உன் நடிப்பு அசத்தல் ராசா... (அந்த வசனம் மாடுலேஷனோட எனக்கு மனப்பாடம்)
*
யுவர்... இது என்ன ஜங்கா, இல்ல உண்மையிலேயே எனக்கு/யாருக்காவது செய்தி கொடுக்கறியா.. ஒண்ணுமே புரியலை உலகத்துல
*
டப்பிங் என்றாலும் அதில் அனைவரும் தமிழில் பேசியிருப்பதால் அது தமிழ்ப்படமே... இன்னிக்கி ரிலீஸ் ஆயிருந்தா, தமிழ் டைட்டிலுக்காக கரு. அரசு ரூவா கொடுத்திருந்தாலும் கொடுத்திருக்கும்.. அத்த போயி டப்பிங்கு அது இதுன்னுகிட்டு (நான் ராசசேகரு சம்சாரம் சீவிதா ரசிகன் ஹிஹி.. அந்தம்மாவுக்கெல்லாம் ரசிகனான்னு கேக்க கூடாது.. பொதுவா நடிகைன்னாலே ரசிகனாவுறது நம்ம வயக்கம்)
*
CT // I said we are two, myself and my snake // :)))
நடுநடுல சில பல M***F*** தூவி கண்ண உருட்டிகிட்டே சொல்லியிருக்கணும் நீங்க...
பல்ப் பிக்ஸன் எனக்கும்தாம்பா பிடிக்கும் ஆனா அதுல என்னிய விட நம்ம பைலட் ஜான் டிராவோல்டா அண்ணாத்த பின்னியிருப்பாரு அதனால சொல்லலை
ReplyDelete// Tag தமிழ்ப்பதிவுகள்? ;-)) //
ReplyDeleteபாபா. இத பாத்தா தமிழ் பதிவு மாதிரி தெரியலையா... ஒரு கிசு கிசு சொல்றேன்.. சில பேரு ஆங்கில தலைப்பு வச்சி பதிவு எழுதி தமிழ்ப்பதிவுகள்னு டாக் செய்றாங்க... யாருன்னு கண்டுபிடிங்க பாப்போம்...
*
// நம்ம பைலட் ஜான் டிராவோல்டா // என்ன ப்ரோக்கன் ஆரோ பாதிப்பா... உண்மையில ட்ரவோல்டாவ ஸ்டைல் மன்னன்னுதான் சொல்லணும்... (ரஜினிக்கே ஸ்டைல்ல குரு அவரு)
thlaiva nan ungali thodarndhu padithhu varugirane.. nalla eludhureenga..ungal pakkathirkku en pakkthil irundhu link kodukirane..ungal anumadhiyodu..appdiye numma pakkthukkum vandhu parunga..ungal karuthukkal sollunga..bye
ReplyDeleteயோவ் முகமூடி, இவ்வார ஸ்டார் பதிவு என்று ஒன்றைப் போட்டு எங்களை நேரத்தை வீணாக்க வைத்துவிட்டீர். இப்போது இவ்வார ஸ்டார் இடுகை என்று ஒரு லிங்க்கா? அடப்பாவி. சரி, இவ்வார ஸ்டார் பின்னூட்டம் என்று என் பின்னூட்டத்துக்கு ஏன் லிங்க் கொடுக்கவில்லை. இதைக் கடுமையாக ஆட்சேபிக்கிறேன். :-)
ReplyDeleteஇதோ இவ்வார ஸ்டார் பின்னூட்டத்துக்கான லிங்க்.
http://vanthiyathevan.blogspot.com/2006/09/blog-post.html#115716570464956234
அன்புடன், பி.கே. சிவகுமார்