<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("iframes-styles-bubble", function() { if (window.iframes && iframes.open) { iframes.open( '//www.blogger.com/navbar.g?targetBlogID\07512213354\46blogName\75%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\46publishMode\75PUBLISH_MODE_BLOGSPOT\46navbarType\75BLUE\46layoutType\75CLASSIC\46searchRoot\75http://mugamoodi.blogspot.com/search\46blogLocale\75en_US\46v\0752\46homepageUrl\75http://mugamoodi.blogspot.com/\46vt\0753361231228256067100', { container: "navbar-iframe-container", id: "navbar-iframe" }, { }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

தைத்த கவிதைகள் சில


மெள்ள நகரும்
பேருந்தின் ஜன்னலில்
அவசரமாய் கையேந்தும்
பிச்சைக்காரியின்
இடுப்புக் குழந்தை
டாட்டா காட்டுகிறது
பஸ் பயணிகளுக்கு!

- குழந்தை, பி.பழனிச்சாமி

*

கிணற்றில் குழந்தை
தவறி விழுந்த
சேதி கேட்டு
ஓடி வந்தார்கள்
காடு கழனிகளுக்கு
சென்றவர்கள்!

பதற்றத்துடன்
பரபரப்புடன்
எல்லோரும் தேடினார்கள்
அவரவர் குழந்தைகளை!

தேடல், வெ.கிருஷ்ணவேணி

*

நாமிருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களில்
நாற்காலியில் அமர்ந்திருப்பேன் நான்
அடக்கமாக எனக்குப் பின்னால்
நின்றுகொண்டிருப்பாய் நீ

உன் இனத்துக் கற்புக்கரசிகளைச் சொல்லி
உன்னை மிரட்டுவேன் நான்
என் இனத்து அயோக்கியர்களின் பட்டியல்
தெரிந்தும்
அமைதியாக இருப்பாய் நீ

நீ எனக்கிருப்பதை பிறர் கேட்டாலொழிய
சொல்லிக் கொள்வதில்லை நான்
நான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்து
பறைசாற்றியாக வேண்டும் நீ

எனக்குப் பிறகு என் நினைவுகளோடு
வாழவைக்கிறார்கள் உன்னை
உனக்குப் பிறகு உன் தங்கையோடு
வாழவைக்கிறார்கள் என்னை

- நானும் நீயும், ஜெயபாஸ்கரன்

*

வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது
உற்றுக்கேள்
கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசும்பலை

- உயிரின் ஒலி, மகுடேசுவரன்

*

விழுங்கிய மீன்
தொண்டையில் குத்துகையில்
உணர்கிறேன்
தூண்டிலின் ரணம்

- வலி, ஜி.ஆர்.விஜய்

*

கடந்து போகும்
ஜோடிக் கால்களின்
பின்னாலெல்லாம்
ஓடி ஓடிக் களைத்து
ஏமாந்து திரும்புகின்றன
அநாதை நாய்க்குட்டிகள்!
செய்யாத உதவிக்கு
வாலாட்டியபடியே!

- பாதசாரிகள் கவனத்திற்கு, வனவை தூரிகா


*

திருவிழாக் கூட்டத்தில்
குழந்தையைத் தொலைத்துவிட்டு
தவிக்கையில்...
சின்ன வயதில்
வீட்டுத் தொழுவத்தில்
தெருநாய் ஈன்ற குட்டிகளை
கோணிப்பையில் திணித்து
ஊருக்கு வெளியே
கள்ளிக்காட்டிலே
கொண்டுபோய் விட்டதெல்லாம்
நினைவுக்கு வருகிறது!

- வதை, ஜி.விஜயலெட்சுமி

*

ஆறாயிரத்துக்கு
விற்றுவிட்ட பிறகும்
ராவோடு ராவாக
புதிய எஜமானனின்
தொழுவத்துக் கயிற்றை
அறுத்துக்கொண்டு
பத்து கிலோமீட்டர்
பயணம் செய்து
மூச்சிரைத்தபடி
வீட்டு வாசலில்
வந்து நிற்கிற
வெள்ளைப் பசுவைப்
பார்க்கும்போது
உறுத்தத்தான் செய்கிறது
தனிக்குடித்தனம்
வந்தவனுக்கு

- குற்ற மனசு, ஜெ.முருகன்

*

முரண்டு பிடிக்கும் ஆட்டை
அடிக்க முயன்ற
என்னைத்
தடுத்தவாறு சொன்னாள்
அம்மா
"அடிக்காதேடா..
அது
கருப்பசாமிக்கு நேர்ந்துவிட்டது"

- முரண், பி.மணிகண்டன்

*

சொக்கத் தங்கம் நூறு பவுன்
ரொக்கப் பணம் ஐம்பதாயிரம்
ஸ்கூட்டர் டிவி என
பட்டியலிடும் பொழுதுதான்
கண்டுகொள்ள முடிந்தது என்னால்
ஆனால்..
கதவு திறக்கும் பொழுதே
கண்டுகொண்டு குரைத்தது
என் வீட்டு நாய்.

- திருடர்கள் ஜாக்கிரதை, தாமிரபரணி

*

தீர்த்தவாரித் திருவிழாவில்
அலங்கரிக்கப்பட்ட
அர்த்தநாரீஸ்வரரின்
பிரமாண்ட திரு உருவத்தை
கழுத்துப் புண்களில்
ரத்தம் வடிய
கண்களில்
நீர் கசிய
இழுத்து வரும்
வண்டி மாடுகளுக்கு
தெரிந்திருக்காது
அவை
எவ்வளவு பாக்கியம்
பெற்றிருக்க வேண்டுமென்பது!

- புண்ணியம், க.பாலவெங்கடேசன்


நன்றி :: முத்திரை கவிதைகள், 17.11.02 ஆனந்த விகடன் இணைப்பு



š இப்பதிவை மின்னஞ்சலிட


 

மணியம்மையாக குஷ்பு


பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் 'பெரியார்' படத்தில் மணியம்மையாக குஷ்பு நடிக்கவுள்ளார். மோகமுள், பாரதி ஆகிய படங்களை உருவாக்கிய ஞானராஜசேகரன்.ஐ.ஏ.எஸ்., தற்போது பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கவுள்ளார். பெரியார் வேடத்தில் சத்யராஜும், பெரியாரின் மனைவிகளான நாகம்மை மற்றும் மணியம்மை ஆகியோராக மலையாள நடிகை கீது மோகன்தாஸ் மற்றும் குஷ்பு ஆகியோரும் நடிக்கவுள்ளனர். முன்னதாக மணியம்மை வேடத்தில் நடிக்க ஸ்னேகாவை அணுகியபோது அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது - தட்ஸ்தமிழ் செய்தி

இந்த செய்தி வெளியானதும் பெரியார் திடலில் குஷ்பு எதிர்ப்பு விழா நடந்தது. அதுபற்றிய நமது தினமூடி நிருபரின் லைவ் ரிலே ::

நடிகை சினேகா :: இந்த கேரக்டரை நான் ஏன் ரிஜக்ட் பண்ணிச்சுன்னு என் வீட்டு முன்னாடி ஒரே கூட்டம்... நிறைய பேரு ப்ரூம்ஸ்டிக் எல்லாம் வச்சி நாய்ஸ் கொடுக்கறாங்க... (கண்ணை துடைத்துக்கொள்கிறார்) எனிக்கும் மணி மதர் மாதிரி நடிக்கணும்னு ரொம்ப ஆசைதான்... ஆனா புதுப்பேட்டையில் விபச்சாரியா நடிச்சிட்டு மதர் கேரக்டர்ல நடிச்சா உன் மூஞ்சிய ஷேப் மாத்திருவோம்னு டமிள் டாலிபான்ஸ்னு ஒரு க்ரூப்கிட்ட இருந்து கோழி ப்ளட்ல எழுதி லெட்டர் வந்ததுல அப்பா அப்செட் ஆயிடுச்சி... அதான் நடிக்கில... நீங்களே சொல்லுங்க, என் மேல எதுனா தப்பா (அழுகிறார்)

வாலி ::
குஷ்பு, உனக்கு தேவை money அம்மா,
அதற்கு கிடைத்தது எங்கள் மணியம்மையா?
(திரும்பி கலைஞர் சிரிக்கிறாரா என்று பார்க்கிறார், சிரிக்கிறார் என்று தெரிந்ததும்...)
கற்பு மேட்டரில் தமிழகமே பற்றி எரிந்தபோது
உன் மூடுமந்திரத்தால் எங்களுக்கு காட்டினாய்
உன் ராசதந்திரம்
(கைதட்டல்)
உன்
சாணக்கியத்தனத்தை சந்திக்க முடியாமல்
தடுமாறியது சூர்ப்பனகைகளின்
அயோக்கியத்தனம்
(பலமான கைதட்டல்)

டாக்டர் அய்யா :: மேடையில ஏறுவதற்கு முந்தி நிருபர் கூட்டத்துல இருந்து "கூட்டத்துக்கு தாமதமா வந்தா மன்னிப்பு கேட்பாரா அய்யா"ன்னு ஒரு குரல் வருது... அயோக்கியப்பயலே, எந்த கட்சி பத்திரிக்கைகாரன்டா நீ... (கூல்டவுன் ஆனவராக) ஒரு சினிமா இசைவட்டு நிகழ்ச்சியில கலந்துக்க போயிருந்தேன்.. வழக்கம் போல இந்த சினிமாக்காரனுங்க லேட் பண்ணிட்டானுங்க.. சினிமாக்காரனுங்க புத்தி என்னிக்கி சரியா இருந்திருக்கு... இந்த வாரம் மட்டும் நான் கலந்துகிட்ட பதிமூன்றாவது சினிமா இசை வட்டு வெளியீட்டு விழா இது... ஒரு விழாவாவது நேரத்துக்கு நடக்கணுமே... எல்லா நிகழ்ச்சியிலும் சொன்னத தவறாம இங்கயும் சொல்றேன்.. சமுதாயத்தை கெடுப்பதே சினிமாதான். அதை நாம் அனைவரும் புறக்கணிக்க வேண்டும்... குறிப்பாக இளைஞர்கள் அனைத்தையும் புறக்கணிக்க வேண்டும்... ம்.. சொல்ல மறந்துட்டனே.. இந்த விழாவுக்கு தம்பி திருமாவும் வந்திருந்தார் (பலமான கைதட்டல்) இந்த விழாவ பத்தி சொன்னேன்.. இனமான உணர்வுல துடிச்சார்... ஆனா அன்புத்தோழி படத்துக்கு டப்பிங் கொடுக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைய சொல்லி இங்க வர முடியாததற்கு அண்ணன் கருணாநிதி அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அன்னை மணியம்மை வேடத்தில் நடிக்க குஷ்புவுக்கு என்ன தகுதி இருக்குன்னு கேட்கிறேன். குஷ்புவுக்கு மணியம்மைன்னா யாருன்னு தெரியுமா? இல்லை குஷ்புதான் தமிழ் நடிகையா... குஷ்பு தோட்டத்துக்கு வந்து என்ன சந்திச்சி மன்னிப்பு கேட்டா இந்த படம் ஒரு ப்ரச்னையும் இல்லாம வெளிவரும்.. இல்லைன்னா அதன் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

கி.வீரமணி :: தமிழ் பெயரில் விழா எடுத்து அதற்கு அப்போதைக்கு முதல்வராக இருப்பவர்கள் கலந்து கொள்ளும் பட்சத்தில் பெரியார் திடலுக்கு வாடகை கூட வசூல் செய்யாமல் இன உணர்வோடு நடக்கும் ஒரே கட்சி திராவிடர் கழகம்தான் என்பது அனைவரும் அறிந்ததே (கைதட்டல்) இந்த விழாவில் கலந்து கொள்ள 15 மைல் கடந்து வந்த கருணாநிதிக்கு 15 கிலோ எடையில் ஒரு பரிசு வழங்கியிருக்கிறோம்... கடவுளுக்கு சமமான மணியம்மை அவர்களின் வேடத்திற்கு கற்பு பற்றி கருத்து தெரிவிக்கும் குஷ்புவை நியமித்திருப்பது மணியம்மையின் புனிதத்தன்மையை கெடுக்கும் செயல்... அதுவும் பெரியாருக்கும் அம்மைக்கும் கோயில் அமைக்கலாம் என்று ஒரு நபர் குழு முடிவு செய்திருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கும் ஞானசேகரனின் ஜாதி புத்தியால் நானும் எனது குடும்பத்தாரும் மிகுந்த மனவருத்தம் அடைந்திருக்கிறோம்...

கருணாநிதி :: வீரமணி குடும்பத்தினர் மனவருத்தம் அடைந்திருக்கின்றனர் என்பது தெரிந்து வருந்துகிறேன்... வீரமணியின் குடும்பம் மிகவும் பெரியது. அத்தனை பேருக்கு மனவருத்தம் அளித்து தமிழ்கத்தில் ஒரு சம்பவம் நடைபெறக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இந்த படத்தை தடை செய்து இந்த இடத்திலேயே சட்டத்திருத்தம் கொண்டு வருகிறேன். (கைத்தட்டல் அடங்குவதற்கு ரொம்ப நேரம் ஆகிறது)

*

திடலுக்கு வெளியே விளக்குமாறு, கறுப்பு கொடி விற்பனை அமோகம்.. முப்பது நாட்களில் முப்பது கோர்ட்களில் கேஸ் போடுவது எப்படி? என்ற புத்தகம் சூடாக விற்பனையாகிறது..

கழுதையுடன் வந்திருக்கும் கழுதை கோபால் சோகமாக :: என்னங்க நம்ம பஞ்ச கல்யாணிக்கு வேலை தராமயே கூட்டத்த முடிச்சிட்டாங்க... போன தடவை தமிழ் கல்ச்சர் கூட்டத்துல கலந்துகிட்டதுல இருந்து நம்ம கல்யாணி கல்ச்சர் கூட்டம்னா சுகுராயிட்றா... அழுக்கு பொதிய சுமந்து சுமந்து மிட் லைஃப் க்ரைசிஸ்ல இருக்கறவளுக்கு மனுச பொதின்னா ஒரு உற்சாகம் வரத்தானுங்களே செய்யும்.. நானும் நாலு காசு பாத்தேன்... என்னவோ போங்க.. ஒரு கழுதை ஊர்வலம் கூட இல்லாம என்னா எதிர்ப்போ...

இதற்கிடையில் தினமூடி நாளிதழ் கருத்து கணிப்பை ஆரம்பித்து வைத்து இந்த பிட் நோட்டீஸை விநியோகித்துக்கொண்டிருந்தது

"மணியம்மையாக குஷ்பு" விஷயம் செல்லப்போகும் திசை ::
கற்பு பற்றி கருத்து சொன்ன குஷ்பு மணியம்மையாக நடிக்க அருகதை இழக்கிறார் கற்பு பற்றி கருத்து சொன்ன குஷ்பு அந்த பாவத்தை கழுவவே மணியம்மையாக நடிக்கிறார்   



š இப்பதிவை மின்னஞ்சலிட


 

ஆட்டோ பய க்ராப்


வலைப்பதிவர் பெயர்: முகமூடி

வலைப்பூ பெயர்: முகமூடி

சுட்டி(உரல்) : http://mugamoodi.blogspot.com

ஊர்: நாடோடிக்கு ஊர் ஏது உலகம் ஏது, தற்போதைக்கு குப்பை கொட்டி கொட்டி பொறுக்குவது லாஸ் ஏஞ்ஜலீஸ் நகரத்தில்

நாடு: தாய்நாடு இந்தியா ; தற்போதைய நாடு புதரகம் (ஐக்கிய அமெரிக்க நாடுகள்)

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: நமக்கு நாமே திட்டத்தில்

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : ஏப்ரல் 16, 2005 (சனிக்கிழமை)

இது எத்தனையாவது பதிவு: 158

இப்பதிவின் சுட்டி(url): http://mugamoodi.blogspot.com/2006/06/blog-post_10.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: அட, நம்மகிட்டயும் சொல்றதுக்கு ஏதோ விஷயம் இருக்குல்ல என்று தோன்றியதால்

சந்தித்த அனுபவங்கள்: வலையுலகத்தை நான் குமுகாயத்தின் sampling என்பதாக பார்க்கிறேன். சின்னஞ்சிறிய இந்த வலையுலகில் பரந்த நம் சமுதாயத்தின் எல்லாவித குணங்களும் காணக்கிடைக்கிறது... சமுதாயத்தில் நண்பர்களை நாம் தேடிப்பெறுவோம். நம் நண்பர்கள் வட்டத்துக்கு அப்பாற்பட்ட வெளியில் சிந்தனைவாதி, அரசியல்வாதி (அல்லது பைத்தியக்காரன்) இருவரும் இருப்பார்கள், ஆனால் இவர்கள் இருவரிடமும் நேரடியாக நாம் கருத்து பரிமாறிக்கொள்ளும் சந்தர்ப்பம் மிகவும் குறைவே... இங்கு இருவரிடமும் கருத்து பரிமாற்றம் நிகழ்த்தும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது... (இங்காவது போலித்தனம் களைந்து நாம் நாமாக இருப்போம் என்றில்லாமல் இணைய நட்பு என்னும் கற்பனை வாழ்க்கைக்காக இமேஜ் பில்டப் செய்து கடைசி வரை சுயத்தை தொலைப்பவர்களை சந்தித்தது தனி அனுபவம்.)

பெற்ற நண்பர்கள்: அது "இணைய நட்பெனப்படுவது யாதெனில்" என்பதை பொறுத்து... ஒரு சிலர் உண்டு, ஆனால் பெயரை சொன்னால் அதற்கு மேல் அவர்கள் நண்பர்களாக தொடர்வார்களா என்ற யோசனை இருப்பதால் விடு ஜூட்.

கற்றவை: நாம் நாமாக இருப்பது வலையுலகில் கூட மிகவும் சோதனையான விஷயம்தான்...

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு (அ) எக்ஸ்டென்ஷியலிஸ சுயதம்பட்டம் : மிகச்சிறிய வயதில் ஞானசம்பந்தர் குறித்து ஒரு பேச்சுப்போட்டியில் திக்கித்திணறி பேசியது புகைமூட்டமாக ஞாபகம் இருக்கிறது. ஐந்தாவது வகுப்பு படிக்குபோது ஆண்டுவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக எங்கள் வகுப்பு தமிழாசிரியை என்னை கூப்பிட்டு "தெளிவாக தமிழ் பேசும் காரணத்தால்" ராஜா வேஷத்தில் நடிக்க பணித்த போது எனக்கு ஏற்பட்ட உணர்ச்சி குவியல் புகைமூட்டமாகக்கூட இப்போது ஞாபகத்தில் இல்லை... ஆனால் வசனம் எல்லாம் மனப்பாடம் செய்துவிட்டு இரு ஒத்திகைகளும் பார்க்கப்பட்ட பிறகு, கட்டியங்காரன் பெண்மையான மென்மை குரலில் பேசுவது நாடகத்துக்கு நல்ல துவக்கமாக இல்லையே என்று "கணீர்" குரல் துவக்கம் வேண்டி என்னிடமிருந்து ராஜா வேஷம் பறிக்கப்பட்டு கட்டியங்காரன் ஆக்கப்பட்டேன்... (ராஜா வேஷம் கட்டியவன் பள்ளி தாளாளரின் சொந்தக்காரன் என்பது எதேச்சையான விஷயம்) "ஏண்டா எப்பவும் போல உச்சஸ்தாயில கத்துனியா, கொஞ்சம் மெதுவா பேசக்கூடாது இப்போ பாரு ராஜாவுல இருந்து காவக்காரன் ஆக்கிட்டாங்க" என்ற குடும்பத்தாரிடம் "அது ஒண்ணும் காவக்காரன் இல்ல, கட்டியங்காரன்" என்று சொன்ன சம்பவத்தை தமிழன்னை எனக்கு ஞானப்பாலூட்டிய முதல் நிகழ்வு என்று ஓவர் பீலா விடலாம். ஆனால் 'ழ', 'ஷ' எல்லாம் இயல்பாவே ஸ்பஷ்டமா உச்சரிக்கிறாங்க பையன், சந்தோஷம்... என்று சொன்ன டீச்சரின் அங்கீகாரம் மட்டுமே நிதர்சனம்.

ஒன்பதாம் வகுப்பில், முதல் தமிழ் மாதத்தேர்வு. நாங்கள் 5 பேர் கூட்டுத்தேர்வு (இதை ஆங்கிலத்தில் காப்பி அடிப்பது என்கிறார்கள்) எழுதியதில் எனக்கு மட்டும் கூட்டணியில் மட்டுமல்ல வகுப்பிலேயே முதன் மதிப்பெண் வந்தபோது கூட்டணி கட்சிக்காரர்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் ஆச்சர்யம்தான்... கூட்டணி தர்மத்தை மீறி உள்குத்தாக நான்கு பதில்கள் அதிகம் எழுதிவிட்டேனோ என்று சந்தேகத்தில் மார்க் ஆராய்ச்சி மேற்கொண்டதில் தமிழாசிரியர் எழுத்துப்பிழை, இலக்கணப்பிழைக்கு எல்லாம் கால் அரை மதிப்பெண்கள் குறைக்கிறார் என்பது அறிய வந்தபோது நான் கையறு நிலைக்கு தள்ளப்பட்டேன். ஒரு காலத்தில் எழுத்துப்பிழை இல்லாமல் மட்டுமல்ல, குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம் முதற்கொண்டு இலக்கண ரீதியாகவும் இயல்பிலேயே சரியாக எழுத வாய்த்திருந்தது என்பதை நினைத்தால் இப்பொழுது பெருமூச்சுதான் விடமுடிகிறது.

ஆங்கில வழி கல்வி என்று பெயர்தான், ஆனால் தமிழில் பேசினால் அபராதம் என்று சொல்லாத அரசுப்பள்ளி என்பதாலும் ; அம்மாவை மம்மி என்றும் கூப்பிடலாம், அப்பாவை டாடி என்றும் கூப்பிடலாம் என்று தெரியாத குடும்ப சூழலாலும் வீட்டிலும் வெளியிலும் தமிழ்தான் பேச்சு மொழியாக இருந்தது. வாரப்பத்திரிக்கை, மாதப்பத்திரிக்கை, நாவல்கள், காமிக்ஸ்கள், தினசரி என்று சம்பளத்தில் கால்வாசி விதவிதமான அச்சு ஊடகத்தில் செலவழிய தமிழ்தான் படிப்பு மொழியாக ஆனது.

கல்லூரியில் தமிழ்ப்பேரவையின் நிர்வாகியாக (போட்டியின்றி தேர்வு) இருந்தபோது நிர்வாகப்பணியில் செலவிட்ட நேரம் கூட தமிழுக்காக செலவழிக்கவில்லை.. நிர்வாகி கவிதை இல்லாமல் பேரவை மலர் வருவதா என்று மலர் ஒருங்கிணைப்பு குழு தலைவர் நான் மேடையில் பேசிய சில எதுகை மோனை வாக்கியங்களை மடக்கி மடக்கி கவிதையாக்கி தலைப்பு கொடுத்து நான் மனதார வேண்டாம் என்பதையும் மீறி பிரசுரித்ததை பார்த்திருந்தால் தமிழன்னை கண்ணகியோடு சேர்ந்து மியூசியத்துக்கு போயிருப்பாள். கல்லூரியில் படிக்கும்போது சென்னை தமிழ், கோவை தமிழ், திருநெல்வேலி தமிழ், சாதா தமிழ் என்று பல பாஷையில் பேசும் பாண்டித்யம் பெற்றேன். ஆனால் மணியார்டர் பாரத்தில் "பணம் கிடைத்தது" என்று எழுதுவதுதான் அதிக பட்ச எழுத்துத்தமிழ் என்றானது.


அமெரிக்கா வந்தபிறகு எனக்கு வாய்த்த ரூம்வாசி ஈரான் தேசத்தவன். பின்பு வங்காளன், மஹாராஷ்ட்ரன், தெலுங்கி என்றே காலம் கழிந்து சில வருடங்களுக்கு பிறகே தமிழ் பேசும் நண்பர்கள் கிடைத்தார்கள். அதுவரை வாரயிறுதியில் பொழுது போகாமல் தமிழ் நண்பர்களுக்கு தொலைபேசுவதை தவிர்த்து தமிழில் பேசுவதே அருகிவிட்ட நிலையில் எழுதுவது சுத்தமாக நின்றே போனது...

ஆவி, குமுதம், தினமலர், CNN, BBC போன்ற சம்பிரதாயமான வாசிப்புகளின் இடையில் வேலைக்கும், படிப்புக்கும் தேவைப்படுவதை மட்டும் கூகிளில் தேடி படித்துக்கொண்டு போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் MBA சம்பந்தமான ஒரு தேடலில் மாட்டியது முதல் ப்ளாக். தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் தான் விடாமல் CAT பரிட்சையில் தோல்வி அடைவதை சுவாரசியமாக (ஆங்கிலத்தில்) எழுதிக்கொண்டிருந்தார். அவரின் ப்ளாக் ரோலை பிடித்து மேய்ந்ததில் இன்னும் சில சுவாரசியங்கள் கிடைத்தது. எல்லாருடைய முகவரியும் ப்ளாக்ஸ்பாட் என்று முடிந்ததால், ஓ ப்ளாக்ஸ்பாட் என்பதில் பெர்சனம் வெப் தளம் உருவாக்கலாம் போலிருக்கிறதே.. நம்முடையதை இதற்கு மாற்றலாம் என்று கல்லூரி முடித்த காலத்தில் உருவாக்கிய freeservers சைட்டை நோண்டினால் "என்ன நக்கலா, இவ்வளவு வருஷமா எட்டிக்கூட பார்க்காம இப்போ வந்தா... எல்லாம் அழித்து தூக்கி போட்டாயிற்று" என்று அன்புடன் சொல்லியது. அப்புறம் மறுநாளுக்கு மறுநாள் ப்ளாக்கர் புரிபட்டு ஒரு ஆங்கில பூ ஆரம்பித்து தபால்காரனுடன் எனக்கு ஏற்பட்ட பிணக்கு, முந்தா நாள் நான் பார்த்த படம் என்று கிறுக்கிக்கொண்டிருந்தேன்.

ஏதோ ஒரு நாள் கமல் பற்றி தேடும்போது எதேச்சையாக கண்ணில் மாட்டியது வெங்கடேஷின் தமிழோவியம் பதிவு. கீழே பின்னூட்டங்களில் ஏகப்பட்ட திட்டு. முதலில் ஒன்றும் புரியாமல் இப்படி திட்டும் அளவு இந்த கட்டுரை வேறு பக்கங்களில் நீண்டு நாம்தான் படிக்காமல் விட்டுவிட்டோமா என்று பார்த்தால் அது ஒரே பக்கம்தான்... அட எப்படி இந்த கட்டுரையை வைத்து ஜாதி ஆராய்ச்சி எல்லாம் செய்திருக்கிறார்கள் என்ற வியப்போடு அப்போதைக்கு விடு ஜூட்...

பின்பு ஒரு சோம்பலான வெள்ளி காலை, பிறந்த ஊர் பற்றி ஏதோ தேடும்போது பியர்லஸ் தியேட்டர் பற்றிய ரஜினி ராம்கியின் குறிப்பை படத்துடன் பார்க்கையில் கிடைத்த சின்ன வயது நினைவுகள் தந்த சந்தோஷம் தீரும் முன் அவரின் நிறைய பதிவுகளை படித்து அப்படியே நூல் பிடித்து நிறைய வலைப்பூக்களை மேய்ந்து, தமிழில் எழுதுவது எப்படி என்பதை ஆராய்ந்து ஒரு தமிழ் ப்ளாக் ஆரம்பித்து, தமிழ் ஃபான்ட் மேப்பிங்கை பிரிண்ட் அவுட் எடுத்து மானிட்டரில் ஒட்டி அதை பார்த்து பார்த்து முதல் பதிவை மூன்று மணிநேரமாக தட்டச்சி - ஏறக்குறைய ஐந்து வருடங்கள் கழித்து சேர்த்தார்போல் தமிழ் எழுதுகிறேன் - வலையேற்றி, "எப்படி ஐயா பெரிய பெரிய பதிவு எல்லாம் எழுதுகிறீர்கள், ஏதாவது கருவி உள்ளதா" என்று கிடைத்த நாலு பேருக்கு மடல் அனுப்பி விட்டு படுக்கும்போது சனி காலை மூன்று மணி.

காலையில் எழுந்து பார்த்தால் வன்னியன் என்னை வலையுலகுக்கு வரவேற்று பின்னூட்டம் இட்டிருந்தார்... அப்போது ஆரம்பித்தது ஓட்டம்... ஆரம்பத்தில் நிறைய உற்சாகம் இருந்தது. நல்ல பதிவுகள் ஒருபுறம், சீண்டல்கள் மறுபுறம், கருத்தாளரின் ஜாதி மத பின்புலங்களை இல்லாமல் கருத்தை ஒட்டி நடந்த அனல் பறக்கும் விவாதங்கள் என்று ஆரம்பத்தில் பேச்சுக்கு இல்லாமல் உண்மையிலேயே ஒரு குடும்பம் போலத்தான் இருந்தது தமிழ் வலையுலகம்... "தமிழர் என்றோர் இனம் உண்டு , தனியே அதற்கோர் குணம் உண்டு" என்பது 2005 பிற்பகுதியில் ஒரு பொன்மாலைப்பொழுதில் எனக்கு(ம்) விளங்கிய போது, இனி அது போன்ற காலங்கள் சாத்தியமில்லை என்பது புரிந்த போது ஏற்பட்ட உணர்வுகளை சொன்னால் ஓவர் க்ளீஷேவாக போகும்...

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: எந்த inhibitionம் இன்றி, மனசுக்கு தோன்றுவதை புறவெளியில் பகிர்ந்து கொள்ள கிடைத்த வாய்ப்பு...

எதிர்பாராமல் கிடைத்தது:

கல்கி சுட்டி

தினமலர் சுட்டி

இந்தியா டுடே சுட்டி

திசைகள் சுட்டி

இண்டிப்ளாக்கீஸ் சுட்டி

தேன்கூடு

இனி செய்ய நினைப்பவை : இப்போது செய்வதையே தொடர்ந்து செய்வது...

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம் : சொல்லலாம், ஆனால்... ( எதிர்காலத்தில் "என் குளத்தில் பாறாங்கல்லை எறிந்தவர்கள்" என்று சுயசரிதை எழுதும் எண்ணம் இருக்கிறது)


மதுமிதாவின் ஆய்வு

š இப்பதிவை மின்னஞ்சலிட


 

தமிழ் வலைப்பூ சர்க்கஸ் லிமிடெட்


ஒரு ட்ரைலர்.

ரோட்டில் மனித நடமாட்டமாக உள்ளது.. அப்போது "அட நாய்களா" என்று சத்தம் கேட்கிறது. சத்தம் வந்த திசையை நோக்கி சம்பந்தமேயில்லாமல் ஒருவர் ஓடி "ஏண்டா என்னை நாய்னு சொன்ன" என்று கேட்டால் அந்த (அப்)பிராணியை என்னவென்று சொல்வதென்று குழப்பமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். அவரை சோழநாடன் என்று தைரியமாக கூப்பிடலாம். எனது நாய்க்கவிதையை படித்துவிட்டு பின்னூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தவர் திடீரென குடுகுடுவென நாலு கால் பாய்ச்சலில் ஓடிப்போய் "நம்மள எல்லாம் நாய்னு சொல்றான் இளவஞ்சி" என்று காது விடைக்கிறார்... ஹய்யோ ஹய்யோ... இது ரொம்ப பொமரேனியத்தனமால்ல இருக்கு...

*

ஒரு கவிதை

அம்மா படிப்பு ஜாஸ்தி
காரியங்களிலும் கன கச்சிதம்
அப்பா படிப்பு குறைவுதான்.
எப்போதாவது தாங்க முடியாதபோதுதான் சொல்வாள்,
நாளைக்கு பத்து தடவையாவது முட்டாள் பட்டம் அவரிடம் என்று
"உன்ன பத்தி பயங்கர பயம்" இது நான்.
அவள் உடன் சுதாரித்து அப்பாவின் பெருமையில் எதாவது
ஒன்றை சொல்லி அவரை புனிதமாக்க
பிற பெண்களைப் போலவே அம்மாவும் அச்சுப் பிசகாமல்
ஒரே மாதிரியான ஓட்டம்
இந்த விளையாட்டின் நுட்பம் புரிந்து வெகுநாளாயிற்று எனக்கு.
இருந்தாலும் வரவர தூக்கத்தில் அப்பாவின்
அவஸ்தை புலம்பல் சகிக்க முடியவில்லை.

- சஃபி, விருட்சம் கவிதைகள்

*

ஒரு துணுக்குக்கான முன்னுரை

தமிழ்மண உரிமையாளர் காசி மீது அபரிமிதமான அன்பும் நேசமும் கொண்டு, "ஏய்யா, எம்புட்டு பெரிய மனுசன் அவரு.. சராசரி மனுசங்க எல்லாம் அவர பத்தி நாக்கு மேல பல்லு போட்டு எளுதினா அப்புறம் எப்படிய்யா மழை பெய்யும்" என்றெல்லாம் மன உளைச்சல் கொள்ளும் அபாய சுபாவம் உடையவர்கள் இந்த இடத்தில் எஸ்கேப் ஆகி "ஒரு காமெடி" என்ற பகுதியில் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இடத்தில் ஒரு சுயதம்பட்டம் :: என் நினைவு தெரிந்து இதுவரை தமிழ்ச்சேவைக்காக செலவு செய்த கைக்காசு எவ்வளவு என்று குத்து மதிப்பாக கணக்கு போட்டு பார்த்தேன். இந்திய ரூபாய் 16,57,000 என்று வருகிறது. ஆம் பதினாறு லட்சத்தி ஐம்பத்தி ஏழாயிரம். இது தமிழ் வளர்ச்சிக்காக எங்கள் குடும்பம் / நான் செய்த நேரடி கணக்கு மட்டுமே. இதில் தமிழ் தவிர்த்து இதர பிரிவுகளில் அளித்த நிதி, தமிழின் பெயரால் கட்சிகளுக்கு அளித்த கட்டாய நிதி, முக்கியமாக தமிழின் பெயரில் நண்பர்களுக்கு டீ பால் காப்பி போண்டா வடை முறுக்ஸ் வாங்கிக்கொடுத்த பிசாத்து நிதி எதுவும் சேர்க்கப்படவில்லை. இவை அனைத்தும் என்/ங்களின் விருப்பத்தின் ஆர்வத்தின் காரணமாக நடைபெற்ற நிகழ்வென்பதால் இதுவரை யாரிடமும் எந்த சந்தர்ப்பத்திலும் சிறிதும் முனகியதில்லை... தவிர கோயிலுக்கு ட்யூப் லைட் தானம் செய்துவிட்டு அது வெளிச்சமே தர இயலாத அளவு உபயம் :: இன்னார், இன்னார் மனைவி, இன்னாரின் சின்னவீடு, அவர்களின் ஊர் பின்கோடோடு என்று அந்த ட்யூபில் கொட்டை எழுத்தில் சிகப்பு பெயிண்ட் அடித்திருந்ததை தானம் தந்த பெரிய மனுசன் காது படவே ஆறாம் வகுப்பு படித்த போது கிண்டல் அடித்தது மனதில் தங்கிவிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அறிவுப்பசி அண்ணாசாமி :: சென்ற முறை இந்தியா வந்திருந்த போது வலைப்பதிவாளர் சந்திப்புக்கு செல்லும் கடைசி நேரத்தில் குளுகுளு வாகனம் சதி செய்ய நண்பரின் இரு சக்கர வாகனத்தை இரவல் வாங்கி முகமெல்லாம் புகை படிய வண்டி ஓட்டி, சந்திப்பு நடந்த இடத்திலும் செயற்கை மற்றும் இயற்கை குளுகுளு வசதி இல்லாமல் புழுக்கம், வெப்பம் எல்லாம் தாங்கி வியர்க்க வியர்க்க தமிழில் பேசியதால் அதுவும் தமிழுக்க நான் ஆற்றிய தொண்டில் அடங்குமா? இது போன்ற கலந்துரையாடல்களில் கலந்து கொள்ள சென்று வர செலவு செய்த சுத்தகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய்க்கு ஆன தொகை எல்லாம் தமிழ் வளர்ச்சி நிதியில் சேருமா?

*

ஒரு துணுக்கு

குசும்பன் பதிவில் காசி ஒரு பின்னூட்டம் விட்டுருக்கிறார். அதை ஒரு தனிப்பதிவாக போட்டிருக்கலாம். யாரும் கேட்காமலேயே கைக்காசு செலவு செய்து தமிழுக்கு அவர் ஆற்றும் சேவையை பாராட்டியும் ; குடும்பம், தொழில், சுயவிருப்பம் என்று பல்வேறு அற்ப காரணங்களால் புலம் பெயரும் சராசரி மக்களின் இடையில் தேச நலனே முக்கியம் என்று புலம் பெயர்ந்த அவரின் தேசபக்தியை பாராட்டியும் ஆயிரக்கணக்கில் இல்லாவிடினும் நூற்றுக்கணக்கில் பாராட்டு பின்னூட்டங்கள் குவிந்திருக்கும்... (நான் மட்டும் நடிக்க வராவிட்டால் இந்நேரம் ஹார்வார்டில் எம்.பி.ஏ முடித்து டாக்டராகவோ, பைலட்டாகவோ ஆகியிருப்பேன், கலைத்தாய்க்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே தாகத்தில்... என்ற பேட்டியெல்லாம் மனசுகுள்ள வந்து இம்சை பண்ணுது. ) அட மனித இயல்பு தன்னைப்பத்தி நாலு வார்த்தை பெருமையா பேசத்தான் செய்யும்... அதெல்லாம் எனக்கெதுக்கு... நான் என் சம்பந்தப்பட்ட இரு குறிப்புகளை மட்டும் பேசிகிட்டு எஸ்கேப் ஆகிக்கிறேன்..

ஒன்று :: "அதில் அவர்கள் கொடுத்த விருது பதாகையை சிலர் பெருமையாக வேறு போட்டுக்கொண்டார்கள்" என்று நான் இண்டிப்ளாக்கீஸ் அவார்டு லோகோவை சைடிலே போட்டுக்கொள்வதை விமர்சனம் செய்திருக்கிறார். நான் பெருமையாக போட்டுக்கொள்வதற்கு இது மட்டுமல்ல எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. இதுவரை எதையும் நான் சுயதம்பட்டம் அடித்ததில்லை.. சான்ஸ் கிடைத்தும் நூறு நூறு நூறு என்று சொல்லவில்லை, ஐம்பது பதிவு என்று வாண வேடிக்கை விடவில்லை, தினமலர், கல்கி, இந்தியா டுடே, திசைகள் பத்திரிக்கைகளுக்கு நன்றி சொல்லவில்லை, கவுண்டர் ஒரு லட்சம் ஆனதை பற்றி சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளவில்லை. ஆனால் இந்த விருதை போட்டுக்கொள்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இண்டிப்ளாக்ஸுக்கு போட்டி போட்ட போது நாமினேட் ஆனதோடு சரி, எனக்கு ஓட்டு போடுங்கள் என்று கூட நான் கேட்கவில்லை. என் கணிப்பையெல்லாம் மீறி எனக்கு கிடைத்த வெற்றி என்பது நான் எதிர்பாராததுதான். அப்போது கூட "ஏதோ ஒரு காரணத்தினால்" எனது பதிவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி சொல்லும் முகமாக எழுதிய பதிவில் லோகோ போட்டதோடு சரி. ஆனால் அப்புறம் ஒரு அறிவுஜீவி இப்போது காசி கேட்பது போன்ற அதே நக்கல் தொனியில் "தமிழ்மண நடசத்திர தேர்வு முறையை விமர்சித்தவர்கள் இண்டிப்ளாக்கீஸ் வெற்றியை கொண்டாடுகிறார்கள்" என்று ஒரு நபர் விருப்பத் தேர்வு முரைக்கும் ஓட்டெடுப்பு தேர்வு முறைக்கும் உள்ள வித்தியாசம் புரியாமல் உளறியபோது அட ஏன் ஒரு பதிவோட நிறுத்த வேண்டும் என்று நிரந்தரமாகவே லோகோவை போட்டுக்கொண்டேன். கண்டிப்பாக பெருமையாகத்தான் போட்டுக்கொண்டேன். அதில் காசிக்கு என்ன ப்ரச்னை இருக்க முடியும் என்பது எனக்கு புரியவில்லை. ஒரு குழு மட்டும் ஜல்லியடிக்காத ஒரு போட்டியில் போட்டியிட்டு ஜெயித்து வாங்கிய அந்த லோகோ இனி எப்பொழுதும் இப்பதிவில் இருக்கும் என்பதை பெருமையாகவே சொல்லிக்கொள்கிறேன்.. ஒரு வேளை தமிழ்மணம் ஏதாவது அவார்டு தந்து அதை யாராவது போட்டுக்கொண்டால் அதிபர் காசி கேட்கட்டும்..

சிரிக்க சிந்திக்க சில துளிகள் ::

அ)ஏதோ பேரு தெரியாத சைட்டு தமிழ்மணத்துக்கு கொடுத்த ரேட்டிங்கை பெருமையாக ஒரு பதிவாக போட்டு எல்லாருக்கும் நன்றி தெரிவித்தது, காசி.

ஆ) இதெல்லாம் ஒரு அவார்டா எனும் தொனியில் காசி பேசுகிறார். சரிதான்... இதே அவார்டுக்காகத்தான் தமிழ்மணம் வெற்றி பெற வேண்டும் என்று ஒருவருக்கு மேற்பட்டவர்களால் பிரச்சாரம் செய்யப்பட்டது. (நான் எனக்காக பிரச்சாரம் கூட செய்துகொள்ளவில்லை) நானும் தமிழ்மண வாசகன் என்ற முறையில் ஓட்டு போட்டேன். (சும்மா தகவலுக்காக சாமி. இந்த ஓட்டுக்காக எந்த தானியமும் கேட்கவில்லை...)

இ) தமிழ்மணம் ஜெயிக்கவில்லை என்றதும் தமிழ்மண பயன்பாட்டாளர்களை நோக்கி "வாட் த ஃபக்" என்று ஒரு சிந்தனைவாதி பச்சையாக திட்டினார்... அப்போது கூட எத்தனையோ காரணங்களுக்காக ஓட்டு போட முடியாமல் இருந்திருக்கலாம், அதற்காக உங்கள் நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்த தமிழ்மண பயன்பாட்டாளர்களை பார்த்து வாட் த ஃபக் என்றெல்லாம் கேட்கலாமா என்று சூடு சுரணையோடு பல குரல்கள் எழுந்திருக்க வேண்டும், வில்லை... அதை விட சூப்பர் டாப்பாக வயது முதிர்ந்த வலைப்பதிவர் ஒருவர் அங்கு சென்று வருந்துகிறேன், வெட்கப்படுகிறேன் - வாட் த என்று சொல்லப்பட்டதற்காக அல்ல, ஓட்டு போட முடியாததற்காக - என்கிறார். அரசியல்வாதிகளுக்கு சற்றும் சளைக்காமல் சுயமரியாதை போராட்டக்காரர்களின் சுயரூபம் சந்தி சிரிப்பதை அப்போது(ம்) பார்த்தேன்...

ரெண்டு :: என்னை வேலியில் போகிற ஒணானுடன் ஒப்பிடுகிறார். எப்போதும் அரோகரா சத்தம் மட்டுமே கேட்கும் நிலையில் கேள்வி ரூபத்தில் கூட அபசுரமாக வேறு ஒரு சத்தம் எழுந்தால் அது ஓணானின் சத்தமாகத்தான் தெரியும்... ஓணான்களை அடையாளம் காணும் அளவுக்காவது வெளியுலகம் தெரிகிறதே என்று சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான். (அறிந்தோ அறியாமலோ வேட்டிக்குள்ளும் சட்டைக்குள்ளும் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒட்டுண்ணிகளை விட வேலியில் தன் பாட்டுக்கு தன் வழியில் போகும், தனி மடல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத, ஆனால் யாராவது பொதுவில் வாலை பிடித்து இழுத்தால் மட்டும் அபசுரமாக சத்தம் எழுப்பும் ஓணான் எவ்வளவோ மேல் என்பது சிலருக்கு புரியாமலே இருப்பதை குறித்து எனக்கு எந்த ஆட்சேபமுமில்லை)

*

ஒரு காமெடி.

நான் எழுத்தாளன், நான் கவிஞன் :: இப்படியெல்லாம் தன்னைத்தானே விளம்பிக்கொண்டு ஆடம்பரமாக எழுதுபவர்களை பற்றி என் இலக்கிய சந்திப்பு பேசுகிறது... அல்லது கிண்டலடிக்கிறது. இதை பார்த்துவிட்டு "ஏன் ஒருவருக்கு எழுத்தாளனாகும் ஆசை வரக்கூடாதா, கவிஞனாகும் ஆசை வரக்கூடாதா" என்று கேட்கிறார் நமது செலக்டிவ் கேள்வியாளர். இது போன்ற தர்க்கக்கேள்விகள் க்ரீமி லேயர் சோதாத்தனம் என்ற வகைப்பாடலில் வரும்.

சம்பவம் 1) சில வருடங்கள் முன்பு ஆந்திராவில் ஒரு கிராமத்தில் ஒரு பெரியவர் திடீரென ஒரு வழக்கு போட்டார். இந்தி திரைப்பட நடிகை ஸ்ரீதேவி மீது. அதாவது ஸ்ரீதேவி தன்னுடைய மனைவி என்றும் தன்னோடு வாழ அவரை பணித்து சேர்ந்து வைக்குமாறும்...

சம்பவம் 2) நேரு பிரதமராயிருந்த சமயம் ஒரு முறை மனநல மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அங்கே மருத்துவர் தாதியர் என்று பலரிடம் பேசிய பின்பு சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஒருவரிடம் பேச சென்றார்... சிகிச்சையாளி நேருவை பார்த்து "நீங்கள் யார்" என்று கேட்க, நேரு அவரிடம் "நான்தான் ஜவஹர்லால் நேரு, இந்தியாவின் பிரதமர்" என்றார். உடனே அவர் நேருவை நெருக்கத்தில் அழைத்து கிசுகிசுப்பாக சொன்னார் "சத்தமா சொல்லிராதீங்க... இதயேத்தான் நானும் சொன்னேன், என்னய கொண்டு வந்து இங்க அடச்சிட்டாங்க..."

இளநீதி :: உண்மை சம்பவம் நம்பர் ஒன்றையும் உண்மையா எனத்தெரியாத சம்பவம் இரண்டையும் பற்றி படிக்க நேர்ந்தால் அவர்கள் இந்த நிலையில் இருப்பதற்கான குமுகாய இச்சாதாரங்களை சாடி தார்மீக கோபத்தை தட்டச்சு பலகையை தட்டி அடிச்சி பதிவெழுதுவதை விடுத்து கிண்டலாக சிரிப்பவன், முக்க்கியமாக சத்தமாக சிரிப்பவன் மனித தன்மையற்றவன்..

*

ஒரு கிச் கிச்

வலையுலகில் முதல் முதலில் ஆரம்பிக்கப்பட்ட கட்சி நான் நிறுவன தலைவராக இருக்கும் பமகதான்... நல்ல வேளையாக எனக்கும் கட்சியில் இருப்பவர்களுக்கும் பமக என்பது ஜாலி விஷயம்தான், இதன் மூலம்தான் உலகம் தலைகீழாக மாறப்போகிறது என்ற சாளேஸ்வரம் எல்லாம் எப்பொழுதும் வராத காரணத்தினால் அதற்கு பிற்பாடு வலையுலகில் உதயமான எந்த கட்சிகளையும் ஜாலியாகவே பார்த்தோம்..

கிச் அ) புதிதாக துவங்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட கட்சி அடையும் பிரபலத்தை கண்டு பொறுக்க முடியாமல் முகமூடிக்கு பொறாமை - புது கட்சியின் அன் அஃபிஷியல் ஸ்டாப் ரிப்பர்

கிச் ஆ) ஹாலண்டில் சிவாஜி படப்பிடிப்பில் ஷ்ரேயாவுடன் உல்லாசமாக டூயட்டில் இருந்த ரஜினி திடீரென டான்ஸ் மூவ்மெண்ட் சரிவர வராமல் கஷ்டப்பட்டார்.. இம்சை அரசன் படத்தில் வடிவேலுவுக்கு கதாநாயகன் சான்ஸ் கிடைத்ததை அறிந்தவுடன் ரஜினிக்கு வடிவேலு மேல் ஏற்பட்ட பொறாமையே மூவ்மெண்ட் கோளாறுக்கு காரணம் என்று கோடம்பாக்கம் பட்சிகள் கூவுகின்றன - தினமுயக்கம் ஸ்டாஃப் ரிப்போர்ட்டர்.

*

ஒரு வாய்ஸுக்கு முந்தைய முன்னூட்டம்

தேர்தலுக்கு முன்பே நான் வெளியிட்ட கருத்து கணிப்பு திமுக 163, அதிமுக 69, விஜயகாந்த் 1, சுயேட்சை 1 ஜெயிக்கும் என்பதாகும். என்ன எளவு, இதை வழக்கம் போலவே என் வீட்டு பாத்ரூமில் எழுதி வைத்தேன். அது பாத்ரூமில் மூச்சா போன நண்பர்களை கேட்டால் தெளிவாக தெரியும். சின்ன வயதில் இருந்தே பாத்ரூமில் கருத்து கணிப்பு எழுதுவதுதான் எனக்கு பழக்கம். ரொம்பவும் அக்யூரேட்டாக இருப்பதால் தமிழகத்தில் தலையெழுத்து மாறிவிடக்கூடாதே என்று பாத்ரூமில் மட்டும் எழுதுவது பழக்கம்.

*

ஒரு வாய்ஸ்

முதல் முறையாக ஒருவர் சுயதம்பட்டம் அடிக்கிறோம் என்ற சுயநினைவோடு வாய்ஸ் கொடுத்திருக்கிறார்... (ஆனா எதிர்பார்த்த பலன் கிடைக்கல போலிருக்கே.. ஸ்டாண்டர்டு பின்னூட்ட செட்லயே நாலு பேர் குறையுது?)

குழலி எந்த கூட்டணிக்கு எத்தனை இடங்கள்? என்ற முதல் கேள்விக்கான பதிலில் விஜயகாந்த் கட்சிக்கு 0 என்று குறிப்பிடுகிறார்.

நாலாவது கேள்வியில் விஜயகாந்த் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் (அல்லது தோற்பார்) என்ற கேள்விக்கு 2000 - 3000 என்று பதில் எழுதியிருக்கிறார். இப்போது வசதியாக அவர் 2000-3000 வாக்கு வித்தியாசத்தில் தோற்பார் என்றுதான் சொன்னேன் என்று சொல்லலாம்.

உண்மையான முடிவு திமுக 163, அதிமுக 69, விஜயகாந்த் 1, சுயேட்சை 1

குழலியின் கணிப்பான திமுக 197, அதிமுக 36, விஜயகாந்த் 0, மற்றவர்கள் 1 என்பது தேர்தல் முடிவுகளோடு மிகவும் நெருங்கி வந்ததாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். குமுதத்தின் கணிப்பான திமுக 145, அதிமுக 80 என்பது உண்மையான தேர்தல் முடிவுகளிலிருந்து மிகமிக விலகியது. ஏனெனில் "குமுதமெல்லாம் ஒரு பத்திரிக்கை, அது கணிப்பு போடுது.. ஊர் ஊராக பிரயாணம் செய்து அதை போட்டோ போட்டு எழுகிறார்களே தவிர அதுல அறிவியல் பூர்வம்னு ஏதாச்சும் இருக்கா... குமுதத்தின் கணிப்பு உள்நோக்கம் கொண்டு, காசு வாங்கிக்கொண்டு, பொறுப்பாசிரியரின் ஜாதி பற்றில் தன் கருத்தை வாசகர் கருத்தாக எழுதப்பட்ட கருத்து திணிப்பு..." என்று இவர்கள் குமுதத்தை பற்றி எழுதுவது அறிவார்ந்த நையாண்டி எனப்படும்.

ஏனெனில் அறிவுபூர்வமான சிந்தனையை தன் வசப்படுத்திய இவர்களால் எழுதப்படும் நகைச்சுவைக்கு நையாண்டி அல்லது தமாசு என்று பெயர். ஆனால் ஊர் ஊராக போகாதது மட்டுமல்ல, நாட்டிலேயே இல்லாமல் வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு ஏதோ ஒரு ஆராய்ச்சி செய்து அரசியல் அலசலை வெளியிடும் - அதுவும் கடந்த தேர்தல் முடிவுகளை extrapolation முறையில் எல்லாம் துவைத்து கணிப்பு வெளியிட்ட - இவர்களை பார்த்து இவர்கள் குமுதத்தை பார்த்து சொல்வதில் கொஞ்சமே கொஞ்சத்தை, அதாவது தமது மன ஆசையை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை மட்டும், யாராவது சொல்லிவிட்டால் அது அங்கதம் என்ற கேவலமான ஜோக்கு பட்டியலில் வரும். (நெருப்பாற்றில் நீந்தி கொள்ளிக்கட்டையால் துவட்டிக்கொண்டே எழுதும் நக்கீரனின் கணிப்பான திமுக 207 அதிமுக 26 என்பது அறிவியல் பூர்வ நடுநிலை கணிப்பு... ஏனேனில் சமூக கோமியம் அப்படி...)

இந்த லட்சணத்தில் இலவச அறிவுரை வேற... கிண்டல் செய்பவர்கள் எல்லாம் அதில் இருந்து விடுபட்டு உருப்படியாக எழுத வேண்டுமாம். கிண்டலாக எழுதப்படுபவை எல்லாம் உருப்படி இல்லாத ஐட்டம் என்று யார் வரைமுறை செய்கிறார்களோ தெரியவில்லை. அட இதிலாவது கிண்டல் மிச்சம் இருக்கிறது. அவர்கள் உருப்படியாக எழுதுவதாக நினைத்து எழுதுவதில் மிச்சம் என்று பார்த்தால் ஒன்றுமேயில்லை. தமிழ் வலைப்பதிவு அத்தாரிட்டி ஆப் இண்டியா என்ற கற்பனை போஸ்டில் நமக்கு நாமே திட்டத்தில் நியமித்துக்கொண்டவர்கள் பாடும் பல்லவி இது. யப்பா என்ன கருத்து சுதந்திரமடா? ஒருவரது ரசனைக்கு ஒத்து வரும் பதிவுகள் எல்லாம் உயர்தரமானது, மற்றவை குப்பை அல்லது உருப்படி இல்லாதவை.... ஸ்ப்ப்பாஆஆ எக்கச்சக்கமா கண்ண கட்டுதுடா சாமி...

*

இன்னொரு கவிதை

பூனை
குறுக்கே
வரவே செய்யும்
வரும் போதும்
போகும் போதும்
அது சாலையை
கடந்தே ஆக வேண்டும்
அவர் சொன்னார்
சாலையின் ஓரத்தில் நடக்க
பூனையை பழக்க வேண்டும்
சரிதான்
............
ஆனால்.......

- இரா.நரசிம்மன், விருட்சம் கவிதைகள்

*

ஏன்?

இதை நண்பர் ராசா கேட்டிருந்தார். அவ்வளவுதான் கேள்வியே... ஆனால் விடை அறியும் ஆர்வத்தில் என்னிடம் கேட்டிருக்க மாட்டார் என்று நம்புகிறேன்... ஏனெனில் என்னிடம் இருக்கும் ஏகப்பட்ட "ஏன்"களுக்கே இன்னமும் பதில் கண்டுபிடித்த பாடில்லை.. இதில் இவர் ஏனுக்கு நான் எங்கே போவது?

கக்கூஸ் க்ளீனர் என்ற வார்த்தை பிரயோகத்தை என் பதிவில் படித்ததை மட்டும் நினைவுக்கு கொண்டு வந்து அவ்வார்த்தை ஏன் எழுதப்பட்டது, எதற்கு எழுதப்பட்டது என்பதெல்லாம் எதுவும் தெரியாமலேயே அவ்வார்த்தையின் பொலிடிக்கலி கரெக்ட்னஸ் பயன்பாட்டை ஆராய்ந்து தானே ஒரு முடிவுக்கு வந்து வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் பட தலைப்புக்கு டாக்டர்கள் கோபப்பட்ட ரேஞ்சுக்கு முந்தி கோபப்பட்ட இளவஞ்சி அது எனக்கு இன்னமும் ஏன் என்பது புரிவதற்கு முன்பே இன்னமொரு முறை கேள்வி கேட்டிருக்கிறார். இன்னமும் பல முறை கேள்வி கேட்பார். ஆனால் மனதில் இருப்பதையெல்லாம் கொட்டிவிட்டு - break even point என்றால் இப்போதாவது என்னவென்று புரிகிறதா? - சிம்பிளாக பாடம் கற்பிப்பதற்காக என்று இமேஜ் பில்டிங் செய்வது ஏன்?

பொதுவாழ்க்கைக்கு வந்தவர்களை விமர்சிக்கலாம்தான். ஆனால் பொதுவாழ்வுக்கு வந்தவர்களின் போலித்தனங்களை விமர்சனம் செய்வதையே தாங்க முடியாதவர்கள் பலர் இங்கு உண்டு. ஒரே ஒரு முறை ராமதாஸ் கடிதத்தை படிக்க முடியாமல் திணறினார் என்று எழுதியதற்கு ராம்தாஸ் தண்ணி அடிப்பார் என்று கீழ்த்தரமாக எழுதுகிறாயா என்று நெஞ்சு துடித்தவர்கள் உண்டு. ஆனால் ஜெயகாந்தன் முடி மழிப்பதையும், சாயிபாபா தலையை வைத்து பரட்டையன் என்றும் இன்னும் பல பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை தாக்கி எழுதும் சிலருக்கு பொதுவாழ்வில் இருக்கும் கவிஞர் அறிவுமதியின் - அவர் தொழிலை கூட இல்லை - சூழ்நிலை வயப்பட்ட அரசியல் நிலைப்பாட்டை விமர்சனம் செய்ததால் கோபம் தலைக்கேறி சக வலைப்பதிவரை மரியாதை குறைவாக தனிப்பட தாக்கி விமர்சனமும் கவிதையும் எழுதிய ஒரு பதிவரை பதில் மரியாதைக்காக வெறுமே கவிஞர் காத்துவாயன் என்று சொல்வது கூட இங்கு நடுநிலைகளுக்கு நெஞ்சு பொறுக்குதில்லையே அது ஏன்? (த.தா.பா.வ)

தாம் வசதியாக வேண்டிய கல்வியை படித்து பட்டம் பெற்று அயல்நாட்டுக்கு வந்து அன்னிய மொழியில் கம்ப்யூட்டர் தட்டி சம்பாதித்து ஊருக்கு காசு அனுப்பிவிட்டு பொழுது போகாத நேரத்தில் பிரியாணி சாப்பிட்டுக்கொண்டே போலித்தனமாக தமிழ்நாட்டின் எல்லாப்பயலும் தமிழைத்தான் கல்லூரியில் படிக்கவேண்டும் என்று இடும் முழக்கத்தை கேள்வி கேட்டால் அதை தரங்கெட்ட நகைச்சுவை என்று பிரச்சாரிப்பது ஏன்? (த.தா.பா.வ)

அனுமதிப்பதா இல்லையா என்ற உளத்தத்தளிப்பிற்கு கூட தேவையில்லாமல் எனக்கு நேரடியாக தோன்றிய, அமெரிக்காவில் இருக்கும் அனைவருக்கும் ஒரே அர்த்தம் தோன்றிய ஒரு பின்னூட்டத்தை கருத்துச்சுதந்திரம் காரணமாக அனுமதித்த பின்னாலே அதில் இரட்டை அர்த்தம் தோன்றிய காரணத்தால் ஏதேதோ கற்பனையில் நினைத்துக்கொண்டு தேவையில்லாமல் என்னை ஏகவசனத்திலே திட்டி வழக்கு என்றெல்லாம் வந்த பதிவுக்கப்பாலே என்ன ப்ரச்னை எதற்கு ப்ரச்னை என்றெல்லாம் ஒன்றுமே அறியாமல் "இவனுங்களை பற்றி தெரியாதா என்ன" என்று ஒரு ஆட்டு மந்தை கூட்டம் கனைக்கும் நிலை உருவானதே அது ஏன்? (த.தா.பா.வ)

ஒரு சிலர் வெளிப்படையாகவே ஜிமெயில் டாக்கில் பேசினோம், தனிமெயில் பரிமாறிக்கொண்டோம் என்றெல்லாம் சொல்லிக்கொள்வார்கள். ஆனால் மற்றவர்கள் கூட்டணியாக இருப்பதாக இவர்களே உருவகப்படுத்திக்கொண்டு அதை என்னவோ கொலைக்குற்றம் மாதிரி ப்ரொப்பகாண்டா செய்வார்கள். அப்படியே கூட்டணியாக இருந்தால் இப்போது என்ன ப்ரச்னை என்பது ஒரு புறம் இருக்கட்டும், செய்கிறார்கள் செய்கிறார்கள் என்று ஊகங்கள் அடிப்படையிலேயே புலம்பிக்கொண்டிருப்பது ஏன்? அய்யோ அவர் பதிவில் எல்லாம் பின்னூட்டம் போட்டுவிடாதே, அவருக்கு பதில் சொல்லாதே என்றெல்லாம் அறிவுஜீவிகள் காபந்து செய்ததை நினைத்து உண்மையிலேயே சிரிப்புதான் வந்தது... இருக்கும் குண்டு சட்டிக்குள் இத்தனை விதமான குதிரை ஓட்டல்கள் ஏன்?

இன்று பெண்கள் நிலை பற்றியெல்லாம் அக்கரையுடன் பேசப்படுவது சந்தோஷமான விஷயம்தான். ஆனால் தங்கமணியின் இந்து மத ஒழிப்பு பதிவில் விவாதம் செய்துகொண்டிருந்த ஜெயஸ்ரீயை அனாதை ஆனந்தன் என்ற *** மிகவும் கீழ்த்தரமாக தனிப்பட்ட முறையில் - அது ஜெயஸ்ரீ என்பதாக இல்லாமல் வேறு சில பெண்களாக இருந்திருந்தால் அப்படி எழுதிய அனாதை ***க்கு என்ன கதி ஏற்பட்டிருக்கும் என்று ஒரு கணம் நினைத்து பார்க்கிறேன் - தாக்கி எழுதிய பின்னர் எட்டு மணி நேரம் கழித்துதான் "தொழில் நுட்ப கோளாறால்" அடுத்த பின்னூட்டம் வெளியானது. இடைப்பட்ட காலத்தில், அட அதற்கு அப்புறம் கூட ஒருவர் கூட அதை குறித்து முனக கூட இல்லையே அது ஏன்?

எவனாவது கருத்து முரணான கேள்வி ஒன்றை கேட்டால், உடனே அவர்களை எப்படியாவது மடக்கி விட வேண்டும் என்று ஏதாவது சொல்வது ஒரு ஃபேஷனாகவே ஆகிவிட்டது... குமரனை பார்த்து முத்து தமிழினி "விடாது சிகப்பு" நீதானே என்கிறார். - முத்து தமிழினி போலியுடன் சமரசம் பேசுகிறார். நக்கீரன் கோபாலுடன் தம்மை ஒப்பிட்டுக்கொள்கிறார். நக்கீரன் கோபால் சந்தன வீரப்பனுடன் கயவாளிக்கூட்டு வைத்திருந்தவர் என்பது எனக்கும் வேறு பலருக்கும் நீண்ட நாள் சந்தேகம். அது போலவே முத்து தமிழினி கேட்டவுடன் போலி சமரசத்துக்கு வருகிறார் என்பதால் முத்துதான் போலியாக இருக்கக்கூடும் என்று ஒருவேளை குமரன் எழுதினால் அவருக்கும் நடுநிலையாளர்கள் "பாடம்" கற்பிக்கும் பதிவு போட முயல்வார்களோ? - குமரன் விடாது சிகப்பு இல்லையென்றால் அதை குமரனே நிரூபிக்கவும் வேண்டுமாம். ஆப்சென்ட் ஆனவங்க எல்லாம் கைதூக்குங்க என்று பேசுவதெல்லாம் "எழுத்து" என்று நிறுவப்படுவது ஏன்?

என்னை பார்த்து முகத்தை மூடிக்கொண்டிருப்பதால்தான் "தரம்" என்று இன்னும் எவ்வளவு ஜல்லி வருமோ தெரியவில்லை... சொந்தமாக போட்டோவும் பெயரும் இல்லாமல் பதிவு எழுதுபவர்களை குறித்து இப்படி சொல்வது சிலருக்கு பொழுதுபோக்காகவே இருக்கிறது - பேராசிரியர் தருமி இந்த கேள்விக்கு ஆயுட் கால உறுப்பினர். அவர் நிறைய பதிவுகள் முகம் மறைத்து பெயர் மறைத்து எழுதியவர்தான். பிறகு ஒரு நாள் திடீரென வெளிப்பட்டார். உடனே ஓவர் நைட்டில் அவரின் தொனி மாறி முகம் மறைத்து எழுதுபவர்களை விமர்சனம் செய்வதாக மாறிவிட்டது - அப்படி செய்யும் ஒருவரான முத்துவின் கட்சியில் கொ.ப.செவாக இருக்கும் நியோவின் பூர்வீகம் என்ன? என்னையாவது சிலர் பார்த்திருக்கிறார்கள். என் பெயர் நிறைய பேருக்கு தெரியும். நியோ யார்? காலையில் எழுந்து கரண்ட் கட் என்றால் கூட பார்ப்பானின் சதி என்று திட்டுகிறார் இவர். ஜாதி சொல்லி திட்டாத ஒரு பதிவோ சக வலைப்பதிவர்களுக்கு பொச்சரிப்பு போன்ற தரமான வார்த்தைகளோ இல்லாமல் இவரின் ஒரு பதிவும் இருக்காது. இப்பேற்பட்ட அறிவுக்கொழுந்து பற்றி கேள்வி கேட்காமல் கூட்டு வலைப்பதிவு நடத்துவார்கள். அதோடு இல்லாமல் அதற்கு சப்பைகட்டு கட்டி இது போன்றவை மேல்தரம், எதிரித்து எழுதுவது **** எதிர்ப்பு என்று மட்டையடி செய்யப்படுவது ஏன்?

எப்படி ஜாதி தாண்டி பார்ப்பவர்கள் - அல்லது அப்படி உதட்டளவில் கூறிக்கொள்பவர்கள் - தான் இன்ன ஜாதியில் பிறந்ததற்காக பெருமைப்படுகிறேன் என்று சொல்பவர்களை இழிவாக பார்க்கிறார்களோ, அதே போல இனம் தாண்டி, மொழி தாண்டி பார்ப்பவர்கள் தன் இனத்தை பற்றி தன் மொழியை பற்றி பெருமைப்படுபவர்களை மட்டமாக பார்க்கும் வாய்ப்பு உள்ளது என்பதை சிலர் உணருவதேயில்லை என்பது மட்டுமல்ல எதிர்கருத்து கூறினால் உடனே இவன் அங்கிருந்து வந்தவன், நம்மாளு இல்லை என்றெல்லாம் பேசப்படுகிறதே, அது ஏன்?

இதெல்லாம் சும்மா இப்போதைக்கு ஞாபகம் வந்த சாம்பிள் "ஏன்"கள் தான்... கேட்கப்படாத அலுப்பூட்டும் ஏகப்பட்ட ஏன்கள் மிச்சம் இருக்கின்றன.. அவ்வப்போது தோன்றினால், ஓவர் போலியாக தோன்றும் பில்டப் விஷயங்களை சம்பந்தப்பட்டவருக்கு மட்டும் - கொஞ்சம் முயற்சி செய்தால் அடுத்தவருக்கும் - புரியும் வண்ணம் கிண்டல் அடிப்பது தவறு என்று உங்களுக்கு தோன்றினால் தாராளமாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். அதற்குத்தானே பதிவு வைத்திருக்கிறீர்கள்... என்னை பற்றி விமர்சனம் செய்யுங்கள். திட்டி எழுதுங்கள். உங்களால் முடிந்த அளவு புழு பூச்சி என்றெல்லாம் உருவகம் செய்து கவிதை புனையுங்கள். ஆனால் அதன் மூலம் எனக்கு அறிவுரை சொல்லிவிட்டோம் என்று தலை ஃபிகரும் நல்ல பாடம் கற்பித்துவிட்டீர்கள் தல என்று அடிப்பொடிகளும் பரஸ்பரம் முதுகு சொறிந்து கொள்ளாதீர்கள். சுற்றி முற்றும் பாருங்கள். ரசனைகள் வேறுபடும் என்ற அடிப்படை ஞானம் கூட இல்லாமல் பதிவுகளின் தரத்தை அளவீடு செய்யும் அளவுக்கெல்லாம் அதிகாரமும் தகுதியும் நமக்கு கொடுத்தது யார் என்பதை சற்று அமைதியாக சிந்தித்து பாருங்கள்... அதோடு சேர்ந்து என் சகிப்புத்தன்மை பற்றி வேறு கேள்வி.. சகிப்புத்தன்மை இல்லையின்னா தமிழ் பதிவுகள படிக்கறத மொத்தமா நிறுத்தி இல்ல இருக்கோணும். முழுசா இருக்கு சாமிகளா சகிப்புத்தன்மை... அடுத்தவங்க இப்படித்தான் நினைத்திருக்க வேண்டும் என்று உங்களுக்கு நீங்களே கற்பனை குதிரைய தட்டிவிட்டுகிட்டு எழுதறத கொஞ்சம் மட்டுப்படுத்தி ஓவர் பில்டப் இல்லாம சாதா ரணமா எழுத முயற்சி பண்ணுங்க ராசாங்களா....

*

கருத்து அல்லது நீதி :: ச(கு)முகாயம் என்று ஒன்று இருந்தால் பொழுதுபோக்க சர்க்கஸ் போன்ற சமாச்சாரங்களும் இருக்கும். சர்க்கஸ் என்ற ஒன்று இருந்தால் கோமாளிகள் என்று சிலரும் இருப்பர். கோமாளிகள் என்று இருந்தால் கோணங்கித்தனத்திற்கும் பஞ்சமிருக்காது. கோணங்கித்தனத்தை கண்டால் சிரிப்பு என்பது இயல்பிலேயே வருமளவு மக்கள் படைக்கப்பட்டிருக்கின்றனர். பெரும்பாலானோருக்கு அமைதியாக மனதிற்குள்ளாகவே சிரிக்கும் வாய்ப்பு வெகுமதியாக இருக்கிறது. என்னை போன்ற சிலர் சத்தம் போட்டு சிரித்து விடுகின்றனர். அவ்வளவு பெரிய கூட்டத்தில் சிலர் மட்டுமே சத்தம் போட்டு சிரிப்பதால் அவர்களால்தான் தம் செயல்களுக்கு கோமாளித்தனம் கிடைக்கிறது என்று கோமாளிகள் நினைப்பது குமுகாயத்தின் துரதிர்ஷ்டமே. கூட்டம் சிரிக்கக்கூடாது என்று கோமாளிகள் எண்ணுவார்களேயானால் ஒன்று கோணங்கித்தனம் விடுத்து நல்வித்தை பழகட்டும். அல்லது சிரிப்பை கண்டுகொள்ளாத மனமாவது வாய்க்கும் பாக்கியம் கிடைக்கட்டும்.




š இப்பதிவை மின்னஞ்சலிட