கலியனின் நெஞ்சுக்கு சாத்தான் சொன்ன நீதி
ஒரு ஊரில் கலியன்னு ஒருத்தன் இருந்தான். பொழப்புன்னு ஒன்னும் இல்லன்னாலும் மேடையில் எல்லாம் பிரமாதமா பேசுவான். அவன் வாழ்ந்த ஊருல தமிழ் தாத்தான்னு ஒருத்தர் இருந்தார். ரொம்ப ரொம்ப வயசானவரு. கல் தோன்றி மண் தோன்றா காலத்தில இருந்து இன்னிக்கு வரைக்கும், எவ்வளவோ வேத்து மொழி ஆதிக்க ராசாங்களோட அச்சுறுத்தல்களையும் மீறி உயிரோட இருக்கறவரு. தமிழ் தாத்தாவோட அருமை பெருமைய பத்தி கலியன் பேசுனான்னா வாயில் ஈ போனது கூட தெரியாமல் கூட்டம் கை தட்டிக்கிட்டு சொக்கி கெடக்கும்.
ப்ரச்சினை என்னன்னா கலியனோட கற்பன வளம் ஒவரா வேல செஞ்சிடுச்சி. தமிழ் தாத்தா ரொம்ப நோஞ்சானா இருக்காரு. தான் மட்டும் இல்லைன்னா சீக்கிரம் செத்து போயிடுவாறுன்னு தனக்கு தானே ஒரு முடிவுக்கு வந்திட்டான். தாத்தாவுக்கு உயிர் கொடுக்க எதுனா யோசனை சொல்லுங்கடான்னு தன்னோட அடிப்பொடிங்க கிட்ட கேட்டான். ஒரு அடிப்பொடி ஒரு விசயத்த சொன்னான். அவங்க ஊருல பண்ணயாரு என்ன பண்ணுவாருன்னா அவரோட பையன் 2வது ரேங்க் வாங்கிட்டா முதல் ரேங்க் வாங்கிட்ட பையன கொன்னுடுவாறு. அதனால பண்ணயாரு பையன் எப்பவும் முதல் ரேங்க்தான். அத்த மாதிரி நம்மலும் ஏதாவது பண்ணுவோம் தலைவான்னான். கலியனுக்கு இது நல்ல யோசனையா பட்டுச்சி.
அந்த ஊருல ஒரு சாத்தான் இருந்திச்சி. ஊர் மக்கள் கொஞ்சம் பேரு அது வயக்காட்டுல வேல செஞ்சி பொழச்சிக்கிட்டு இருந்தாங்க. கலியன் ஊருக்குள்ள போயி அந்த சாத்தான் பேரு இந்தி. அதுதான் நம்ம தமிழ் தாத்தா நோஞ்சானா இருக்க காரணம். அத நாம கொன்னு போட்டா தாத்தா சரியாயிடுவாருன்னு அடிச்சி விட்டான். அடப்பாவி, ஊருல எல்லாரும் தாத்தாவ கவனிச்சிக்கிற வரைக்கும் அவருக்கு ஒன்னும் ஆகாதுடா, சரியான வகையில சாப்பாடு போட்டா நல்லாயிடுவாரு, அத விட்டுட்டு சாத்தான கொல்றேன்னு அலயாதீங்கடான்னு ஊர் பெருசுங்க சொன்னது, கலியன் அடிப்பொடிங்க ஜால்ரா சத்ததுல யாருக்கும் சரியா காதுல விழல.
கலியன் சாத்தானோட சண்டைக்கு போனான். சண்டைக்கு நடுவுல அடிப்பொடிங்க ரெண்டு பேரு எப்படியோ செத்து போயிட்டானுங்க. சாத்தான்தான் அவங்கள கொன்னுடுச்சின்னு கலியன் அமர்க்களம் பண்ணிட்டான். ஊரே கொந்தளிச்சி போச்சி. சாத்தான் சரணடஞ்சிருச்சி. அது கலியன்கிட்ட சொன்னுச்சி, என்ன விட்டுடு, நான் ஊர விட்டே போயிடுறேன், என் சக்தியால உன்ன ஊர் தலைவரு ஆக்கிடுறேன்னு. இப்படித்தான் கலியன் ஊர் தலைவரானது.
அது ஆச்சி ரொம்ப வருஷம். தமிழ் தாத்தா நெலமயில ஒரு முன்னேற்றமும் இல்ல. கலியனும் குடும்பமும் சந்தோஷமா சுகபோகமா இருந்ததுதான் மிச்சம். இப்படி நம்மள ஏமாத்திப்புட்டானேனு ஊருக்குள்ள எல்லாருக்கும் வருத்தம் வேற வந்திடுச்சி.
சரி ஊர் மக்கள திசை திருப்பலன்னா பதவிக்கு ஆபத்துன்னு நெனச்ச கலியன் இந்த வாட்டி என்னா பன்றதுன்னு பாத்தான். அந்த ஊருல இங்கிலீஷ்னு இன்னொரு சாத்தான் இருந்திச்சி. இது இந்தியோட தம்பி. இந்தி ஊர விட்டு போனதுனாலயும், தமிழ் தாத்தா நெலமயில ஒரு முன்னேற்றமும் இல்லங்கறதாலயும் இப்ப நெறய பேரு இங்கிலீஷோட வயக்காட்டுல வேல செஞ்சி பொழச்சிக்கிட்டு இருந்தாங்க. இருந்தாலும் கலியன் இந்த சாத்தானோடயும் சண்டைக்கு போனான். இந்த வாட்டி என்ன ஆச்சின்னா சண்டையில சாத்தான் ஈஸியா ஜெயிச்சிடுச்சி. கலியனுக்கு ஒன்னுமே புரியில. அத சாத்தான் கிட்டயே கேட்டான்.
சாத்தான் கலியனுக்கு சொன்ன நீதி
போன வாட்டி நீ தாத்தாவுக்காக சண்டை போட்ட (ன்னு ஊரு நினச்சிது). உன் நோக்கத்துல பொது நலம் இருந்திச்சி. அதான் நீ ஜெயிச்ச. இந்த வாட்டி நீ போட்ட சண்டை உன் சுயநலத்துக்காக. அதான் தோத்துபோயிட்ட.
பி.கு 1 : கலியன் இன்னமும் ஊர் மக்கள ஏமாத்த முயற்சி பண்ணிக்கிட்டுத்தான் இருக்கான்.
பி.கு 2 : சாத்தானோட சண்டை போடுற வேலய இப்ப மஞ்ச மாக்கானும் ·பாரின் ஷ¤ பக்கிரியும் கலியன விட மோசமான முறையில செஞ்சிகிட்டு இருக்கானுங்க.
பி.கு 3 : கலியன் பாத்திரம் நம்ம கற்பனையே. யாரையும் குறிப்பது அல்ல.
மஞ்ச மாக்கானும் பூதங்களும்
ஒரு ஊருல ஒரு மஞ்ச மாக்கான் இருந்தான். அவனுக்கு ஒரு நாள் ஒரு அற்புத வெளக்கு கெடச்சிது. ஹா அடிச்சிதுறா லக்கி ப்ரைஸ்னு அதை தேய்ச்சான். வழக்கம் போல ஒரு பூதம் வரும்னு பாத்தா, ஏகப்பட்ட பூதங்க வந்துடிச்சிங்க. இப்ப ப்ரச்சின என்னான்னா அந்த பூதங்களுக்கு மாக்கான் ஏதாவது வேல கொடுத்துகிட்டே இருக்கணும். இல்லன்னா அதுங்களுக்கு அறிவு வந்துடும். அதுங்களுக்கு அறிவு வந்துட்டா அப்புறம் அவனுக்குத்தான் ப்ரச்சினை.
என்ன பண்றது.... சரி எல்லாம் போயி மரம் வெட்டுங்கன்னு உத்தரவு போட்டான். கிடுகிடுன்னு எல்லா பூதங்களும் மரத்த வெட்டி ரோட்டுல போட்டுட்டு அடுத்த வேல என்னான்னு கேக்குதுங்க. சரி இருக்கவே இருக்குது பஸ்ஸ¤, ஓங்க அப்பனுதா எங்க அப்பனுதா போயி அத்த கொளுத்துங்கன்னான். எல்லாம் ஜாலியா போயி பஸ்ஸ கொளுத்திட்டு இப்ப என்னாங்குதுங்க. ஹா மாட்னோம்டான்னு நெனக்கிறதுகுள்ள அவன் சுக்ற தெச அடுத்த வேல தானா வந்திருச்சி. தூக்குங்கடா படப்பொட்டிங்களன்னான் நம்மாளு. சூப்பரு வேலடா மக்கான்னு எல்லா பூதமும் படப்பொட்டிய தூக்கிக்கிட்டு போயி காட்டுல மறச்சி வச்சிட்டு குத்தாட்டம் போட்டிச்சிங்க.
இந்த சமயத்தில என்னாச்சின்னா, கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும் கெழவிய தூக்கி மனையில வைங்கற மாதிரி நம்மாளுக்கு திடீர்னு (சினிமா) தமிழ் மேல பாசம் பொத்துகிச்சி. போதா கொறக்கி பிசாசு கூட்ட தலைவன் ·பாரின் ஷ¤ பக்கிரி வேற எனக்கும் (சினிமா) தமிழ் மேல பாசங்கறான். கள்ளு குடிச்ச குறங்க தேளும் கொட்னா மாதிரி பூதங்களோட இப்ப பிசாசுங்க வேற கூட்டணி சேந்துகிச்சா பேனற கிழிக்கிறதென்னா, தியேட்டர் ஓனற மெரட்டுறதென்னான்னு, ஒரே குஷியும் கும்மாளமும்தான்.
தமிழயும் பண்பாட்டயும் காப்பாத்த வேண்டியது நமக்கும் கடமைங்கறதால, அதுக்காக ரொம்ப போறாடுற மாக்கானுக்கும் பக்கிரிக்கும் என்னால முடிஞ்ச அளவுல சில யோசனைங்க சொல்லியிருக்கேன். ஒங்களால முடிஞ்ச அளவுல யோசனை இருந்தாலும் கொஞ்சம் சொல்லுங்க.
1. காலம் காலமா தமிழனுக்கு அடையாளம் கோமணம்தான். இப்ப மேற்கத்திய கலாச்சாரத்தினால அத்த வுட்டுட்டு எல்லா தமிழனும் ஜட்டி மாட்டிக்கிட்டு அலையிறான். இப்படியே போனா அடுத்த தலைமுறைக்கு கோமணம்னா என்னன்னே தெரியாம போயிடும். அதனால எல்லா தமிழனும் கோமணம்தான் கட்டணும். (மாண்புமிகு மத்திய அமைச்சர்கள் ரெண்டு பேருக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு)
2. சினிமா நடிகனுங்க கார் வச்சிக்கறதால அவனுங்கள அப்பிடியே ·பாலோ பண்ற வீணா போன தமிழ் இளைஞ்சனுங்க கட்ட வண்டியோட அருமையே தெரியாம கார் கார்னு திரியறானுங்க. அதனால சினிமா நடிகனுங்க எல்லாரும் கட்ட வண்டிதான் வச்சிக்கனும். மீறி ஓட்டினாலும் கார்ங்கள கொளுத்த கூடாதுன்னு பூதங்களுக்கு கட்டள போட்டுறுக்கேன். அதையும் மீறி அதுங்க எதாவது பண்ணா நான் பொறுப்பு இல்ல.
பிகு: மஞ்ச மாக்கான், பக்கிரி, பூதம், பிசாசு, தமிழன் எல்லாம் நம்ம கற்பனையே. யாரையும் குறிப்பது அல்ல.
