<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/12213354?origin\x3dhttp://mugamoodi.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

ரஜினி யார்னு உங்களுக்கு தெரியும்னா மேல படிங்க


நேத்து துள்சி பதிவுல ஒரு அதிர்ச்சியான செய்திய படிச்சி தொலஞ்சிபுட்டேன் (பலகீனமான இதயம் கொண்டவர்கள் மேலே படிக்காதீர்கள்)... செய்தி : ரஜினியைத்தான் எனக்கு பிடிக்குமே தவிர அவரோட படத்தை அல்ல. செய்தியே அதிர்ச்சின்னா அத விட அதிர்ச்சி வாய்ஸ் யாருதுன்றது : நம்ம ரஜினி ராம்கி...
நம்ப முடியல இல்ல... எனக்கும்தான்... படிச்சதிலேர்ந்து நெஞ்சு படக்கு படக்குன்னு அடிச்சிக்கிது. ரஜினிய சினிமா மூலமாத்தானே நமக்கு தெரியும்.. படத்த வச்சித்தான் ரஜினிய புடிக்கணும்னு இவ்ளோ நாளா தப்பு கணக்க போட்டு வாழ்ந்திட்டோமேன்னு ஒரே குழப்பம். பெரண்டு பெரண்டு படுக்கறேன், ராத்திரி முழுக்க தூக்கமே வரமாட்டேங்குது. ரஜினிய புடிச்சா படம் புடிக்கணும்னு அவசியம் இல்லையா? படம் கேவலமா இருந்தாலும் நடிகர புடிக்கலாமா? படத்துக்கும் ஈரோவுக்கும் தொடர்பு இருக்கா இல்லியான்னு ஒரே கன்பூசன் கன்பூசன் கன்பூசன். சரி இருக்கவே இருக்குது நம்ம வாசகர் வட்டம்னு உங்கள நம்பி வந்திட்டேன்... இப்ப நாட்டுக்கு இது ரொம்ப முக்கியமான்னு கேள்வி எல்லாம் கேக்காம தயவு செஞ்சு கீழ இருக்கற நம்ம (கள்ள) ஒட்டு பெட்டியில ஒரு ஒட்ட போட்டு நம்ம கன்பூசன போக்குங்கண்ணா
உங்களுக்கு பிடித்தது ரஜினியா... ரஜினி படமா?
ரஜினியைத்தான் எனக்கு பிடிக்குமே தவிர அவரோட படத்தை அல்ல
ரஜினி படம்தான் புடிக்குமே தவிர ரஜினியை புடிக்காது
ரஜினியும் சூப்பரு ரஜினி படமும் சூப்பரு
ரஜினியும் வேஸ்ட்... ரஜினி படமும் வேஸ்ட்...
முகமூடி'ஸ் பேவரிட் : ரஜினி இமயமலையிலேயே தங்கிகிட்டா ரொம்ப பிடிக்கும்
  


š இப்பதிவை மின்னஞ்சலிட


 

மாநகர காவல்துறை:: சிறந்த தொப்பை காவலருக்கு பரிசு


சிறந்த மீசை வைத்துள்ள காவலர்கள் & தொப்பையில்லாத காவலர்களுக்கு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் சனிக்கிழமை ஒரு நிகழ்ச்சி வச்சி பரிசுகள் வேற கொடுத்து பாராட்டினாராம்... அது என்னா சிறந்த மீசைக்கு பரிசு... போலீஸ்க்கு மீசைய ஒரு கலாச்சார அடையாளமாவே மாத்திட்டாங்களா? ஐ.பி.எஸ் போஸ்டிங்ல வர வடக்கத்தி போலீஸ்காரங்களுக்கு மீசை இருக்காது. அப்ப அவிங்க போலீஸ் இல்லையா? எல்லாத்தையும் விட கூத்து தொப்பையில்லாத போலீஸ்க்கு பரிசு... போலீஸ்னாலே தொப்பை இருக்க கூடாதுன்னுல்ல நாம நினைச்சுகிட்டு இருந்தோம். இப்படியே போனா காக்கி சட்டை போடுற காவலருக்கு பரிசு, பாதணிக்கு பாலீஸ் போட்ட போலீஸ்காரருக்கு பரிசு, டூட்டிக்கு வந்த போலீஸ்காரருக்கு பரிசுன்னு தருவாங்களோ ??


கமிஷனர் அய்யா, ஒரு விண்ணப்பம்... போட்டி இருந்தாத்தானுங்களே அந்த பரிசுக்கே ஒரு மதிப்பு... இப்ப நீங்க தொப்பை இல்லாத மூணு பேருக்கு மட்டும் பரிசு கொடுத்தீங்கன்னா, போட்டியே இல்லைன்னு ஆயிராதா? அதுல என்னாங்கய்யா த்ரில் இருக்கு... போலீஸ்ல இருக்கற மத்த எல்லாருக்கும் போட்டி வச்சி சிறந்த தொப்பைக்கு பரிசு கொடுத்தீங்கன்னா, அது போட்டி... ஆவன செய்வீங்களா அய்யா...

ஆதாரம்: தட்ஸ்டமில்.காம் செய்தி

š இப்பதிவை மின்னஞ்சலிட


 

அப்படி போடு அறுவாள (மே மாத டாப் 14)


சூப்பர் 14. ''தமிழ் இலக்கியம் குறித்து ஒரே மேடையில் என்னுடன் விவாதிக்க கருணாநிதி தயாரா?'' -அதிமுக பிரச்சாரத்தில் விஜய டி.ராஜேந்தர் (இதயெல்லாம் கேக்கற நெலமயில என்ன வச்சிட்டியே ஆண்டவான்னு யாருப்பா அது கோபாலபுரத்துல)

சூப்பர் 13. இந்த தலைமுறை முன்னால் செல்லத் துடிக்கும் ஆர்வம் உள்ள தலைமுறை. அவர்களை திருப்திப் படுத்த வேண்டும் என்பதை மனதில் வைத்து தான் இந்தப் படத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறேன் - நயனதாராவை உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டது பற்றி நடிகர் சிம்பு (அப்பனுக்கு புள்ள தப்பாம... சரி சரி, இதையே உளறல்னா அடுத்த கருத்த பத்தி என்னா சொல்வீங்க)

சூப்பர் 12. இந்தத் தேர்தலினால் தமிழக அரசியல் சூழ்நிலை மாறி விடப் போவதில்லை. எனவே அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதில் தவறில்லை. தேர்தல் பிரசாரத்தில் தி.கவினர் ஈடுபட மாட்டார்கள், தேவைப்பட்டால் காஞ்சிபுரத்தில் மட்டும் தனி மேடை அமைத்து பிரசாரம் செய்வார்கள். அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அதே நேரத்தில், மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் தமது ஆதரவு தொடரும் - தி.க. தீர்மானத்தில் வீரமணி (எத்த தின்னா பித்தம் தெளியும்னு அலையிறது இதுதான் போலருக்கு... பெரியார் ஆவி: : இப்படியெல்லாம் ஆகும்னு தெரிஞ்சிருந்தா ஒன்னு சொத்து சேக்காம இருந்திருப்பேன், இல்ல தி.க வையாவது கலைச்சிருப்பேன்)

சூப்பர் 11. சுயமரியதை திருமணங்களை அகில இந்திய அளவில் செல்லுபடியாகும் வகையில் சட்டமாக்க வேண்டும் - பிரதமருக்கு கருணாநிதி கடிதம் (அத்த ரெஜிஸ்டார் ஆபிஸ்ல பதிவு செஞ்சா செல்லுபடி ஆகாதுங்களாண்ணா)

சூப்பர் 10. காஞ்சிபுரம் தொகுதியில் எங்களது கட்சிக்கு 16,500 ஓட்டுக்கள் உள்ளன. கும்மிடிப்பூண்டியில் 17,000 ஓட்டுக்கள் உள்ளன. (அப்படியா?) எங்களை மதித்து, ஆதரவு கேட்கும் கட்சிக்கே ஆதரவு - மக்கள் தமிழ் தேசம் கண்ணப்பன். (சென்ஸஸ் எல்லாம் எடுத்து வச்சிகினு கெஞ்சறாரு.... யாராவது தயவு செஞ்சி மதிங்கலேம்பா)

சூப்பர் 9. திமுகவினரும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களும் தங்களையும் அறியாமல் செய்துவிடும் விதிமீறல்களை தேர்தல் அதிகாரிகள் சுட்டிக் காட்டினால் அதைப் புரிந்து கொண்டு, உடனே தவறை திருத்திக் கொள்கின்றனர் என்பதை அறிந்து மகிழ்ந்தேன் - கருணாநிதி (ஒரே தமாசுன்னாலும் இது மாதிரி அப்பப்ப வர டயலாக்னாலதான் 'அப்படி போடு அறுவாள' ங்கற நம்ம தலைப்புக்கே ஒரு மருவாதிங்கறன்)

சூப்பர் 8. தேர்தல் களத்தில் எங்களைப் போல் யாரும் தோற்றது இல்லை. களத்தை இழந்திருப்போமேயொழிய படித்ததை இழக்கவில்லை. அந்த யுத்தம் தொடரும் - மதிமுகவின் 12வது ஆண்டு தொடக்க விழாவில் வைகோ (இப்படி இழக்கறத்துக்கு மட்டும்தான் சண்டைகளத்துக்கு போறோம்னு முன்னமே சொல்லியிருந்தா மதிமுகவுக்கே வந்திருக்க மாட்டோமே தல)

சூப்பர் 7. பீகார் சட்டசபையைக் கலைத்தது நியாயமானது தான். ஆட்சியே அங்கு அமையவில்லை. குதிரை வியாபார முயற்சிகளுக்கு முடிவு கட்டப்பட்டு, ஜனநாயக ரீதியில் ஆட்சி அமைய வழி காணப்பட்டுள்ளது. இதை ஜனநாயக விரோத நடவடிக்கை என்று கூற முடியாது - கருணாநிதி (திமுக ஆட்சியை கலைத்தால் மட்டும்தான் அது ஜனநாயக விரோத நடவடிக்கை )

சூப்பர் 6. நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் உழைத்து வரும் உங்கள் அன்புச் சகோதரியின் தலைமையிலான அரசு படைத்து வரும் சாதனைகள் ஏராளம். சுனாமியால் பாதிக்ப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வுப் பணிகளுக்காக 1,000 கோடி நிதியை உடனடியாக ஒதுக்கினோம் - ஜெயலலிதா (அப்படியே யாருக்காக உழைக்கறீங்க, யார் அக்கௌன்டில் ஒதுக்கினீங்கன்னும் சொன்னீங்கன்னா புண்ணியமா போவும்னு பொதுஜனம் சொல்லுது)

சூப்பர் 5. இது அண்ணா பிறந்த மண். ஆனால் திராவிட இயக்கக் கொள்கைக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத ஜெயலலிதா போன்றவர்கள் எல்லாம் வந்து இங்கு வாக்கு கேட்டுச் சென்றுள்ளார்கள் - காஞ்சிபுரம் தொகுதியில் ராமதாஸ் ( ஓட்டுப் போட அதிமுகவினர் ஒரு கையில் பணம் கொடுத்தால் இரு கை ஏந்தி அதை வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் ஓட்டை மட்டும் உதயசூரியனுக்குப் போட்டு விடுங்கள் - இதுவும் ராமதாஸ் சொன்னதுதான்... இதுதான் திராவிட இயக்க கொள்கையான்னு யார்ராவன் கோக்குமாக்கா கேள்வி கேக்குறது)

சூப்பர் 4. அதிகார பலத்தைப் பயன்படுத்தி வாக்காளர்களை மிரட்டியும், பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கியும் இந்த வெற்றியைத் தட்டிப் பறித்திருக்கிறார்கள். இது பணநாயகத்திற்குக் கிடைத்துள்ள தற்காலிக வெற்றி, ஜனநாயகத்திற்குக் கிடைத்த தற்காலிக தோல்வி - இடைத் தேர்தல் முடிவுகள் குறித்து ராமதாஸ் (நாங்க ஜெயிச்சாத்தான் பணநாயகத்திற்குக் நிரந்தர வெற்றி, ஜனநாயகத்திற்குக் நிரந்தர தோல்வி ன்னு அர்த்தம்)

சூப்பர் 3. ஏனோதானோ என்று பேசுவதும், ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு பேட்டி கொடுப்பதும், அறிக்கை விடுவதும், எமர்ஜென்சி காலத்தில் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக இருக்கலாம். ஆனால் ஜனநாயகம் தழைத்தோங்கும் இந்தக் கால கட்டத்தில் இதை ஏற்க முடியுமா என்பதை பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் - கருணாநிதி (இல்ல இல்ல நீங்க நினைக்கிற மாதிரி தன்னைப்பத்தி எல்லாம் பேசிக்கல அவரு... ஜெயலலிதாவ பத்தி சொல்றாரு)


சூப்பர் 2. தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட சக்திகள், சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் குதிரை வியாபாரத்தின் மூலம் ஆட்சியைப் பிடிக்க நடத்திய சூழ்ச்சி இந்தக் கலைப்பின் மூலம் தகர்க்கப்பட்டு விட்டது. கட்சித் தாவல் தடைச் சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதை இந்த நிகழ்வுகள் நமக்கு எடுத்துக் கூறுகின்றன – பீகார் நிகழ்வு பற்றி ராமதாஸ் (கட்சித்தாவல் பத்தி சொன்ன நீங்க கட்சி விட்டு கட்சி தாவறத பத்தியும் ஏதாவது சொல்லியிருக்கலாம்)

இந்த மாத சூப்பர் டாப் நாயகன்: அன்புமணி ::- நடிகர் விஜயகாந்த் இப்போது அரசியலுக்கு வரப்போவதாக கூறி வருகிறார். வந்து ஆட்சியை பிடிக்கும் கனவோடு கிளம்பியிருக்கிறார். அவருக்கு நாங்கள் யார் என்பதை புரிய வைப்போம் (காடுவெட்டி ரெடியா). சுயநலத்துக்காக அவர் அரசியலை பயன்படுத்த நினைத்தால் நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். (பாமக வின் patentஐ அனுமதியின்றி பயன்படுத்துவதாக காப்பிரைட் சட்டப்படி பாமக வழக்கு போடும்) அவரது அரசியல் தமிழ்நாட்டில் எடுபடப் போவதில்லை. (பச்சோந்தி கணக்கா தாவி தாவி முக்கறோம், எங்களுதே இன்னும் எடுபடல) ஒரு விஷயம் புரிந்துகொள்ளுங்கள்... இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் எல்லா சினிமாக்காரர்களுக்கும் நாங்கள் எதிரிகள்தான் (அதுக்குத்தான் நாங்க இருக்கோம்ல...)


ஏப்ரல் மாத டாப் 10 பாத்துட்டீங்களா?

š இப்பதிவை மின்னஞ்சலிட


 

நாய் க் காதல்


வாலாட்டி திரிகிறேன் நான்
வள்ளென்று குரைக்கிறாய் நீ
நம் இருவரில் யாரடி நாய்


பள்ளி பருவத்தில் சுண்டல் கட்டிய வார பத்திரிக்கை காகிதத்தில் படித்த கவிதை இது. காலேஜில் பலமுறை கோபம் தணிக்க உதவியிருக்கிறது. எழுதியவர் யாரோ. நன்றி. படம் உதவி இன்டர்நெட்.

š இப்பதிவை மின்னஞ்சலிட


 

பார்ப்பன எதிர்ப்புன்னு எவ்ளோ நாள்தான் ஜல்லி அடிக்கறது


இன்னும் எதுக்குய்யா பார்ப்பன எதிர்ப்புன்ன்னு புளிச்சி போன பல்லவியயே பாடிக்கிட்டு இருக்கீங்க... ஒரு சாதி மேல காழ்ப்புணர்ச்சி ஏற்படுத்தி ஜாதி துவேஷத்த மக்கள் மனசுல தீயா மூட்டி குளிர் காஞ்ச நம்ம so called "தலைவர்" களுக்கும் , ஒரு இனத்து மேல துவேஷத்த வளர்த்த ஹிட்லருக்கும் என்னய்யா வித்தியாசம். ரெண்டு பேருமே வன்முறைய தன் மீது திருப்பி பிரயோகிக்காத ஒரு கூட்டத்து மேல வன்முறைய பிரயோகிக்க சொல்லி ஆதாயம் தேடிக்கிட்டாங்க.... யார் யாரெல்லாம் இன்னமும், இந்த 2005லயும் பார்ப்பன எதிர்ப்புன்னு சொல்றாங்களோ அவுங்கள்லாம் ஹிட்லர் செஞ்சத தப்புன்னு சொல்றதுக்கு என்ன அருகதை இருக்கு.

வலைப்பூவில இது ஒரு வியாதியாவே ஆயிடுச்சி... கருத்து வேறுபாடு இருக்க வேண்டியதுதான் ஆனா தனி மனித திட்டு அதுவும் சாதிய சொல்லி திட்டறது கேவலமா இருக்கு. நான் கேட்ட வரையில , நீ எந்த வகையிலடா அய்யிருனால பாதிக்கப்பட்டுறுக்கன்னா சம்பந்தமே இல்லாம "அய்யன்கிட்ட ஒரு வேலைன்னு போ.. சட்டைய தடவி பாத்துத்துட்டு தான் மறுவேலை பார்ப்பான்" ன்னு குருட்டுத்தனமா ஒரு வியாக்கியானம் கொடுப்பாய்ங்க. அதாவது பார்ப்பணர்கள் தன் சாதிக்காரர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறாங்கன்னு அர்த்தமாம். அவன சொல்லி குத்தமில்ல, காலம் காலமா நம்ம தலைவர்க்ள் இதத்தான விதச்சிருக்காங்க....

10 வருஷத்துக்கு மேல தமிழகத்துல சகல அதிகாரமும் கொண்ட ஆட்சிபீடத்துக்கு தலைமை தாங்கிய கருணாநிதி இன்னமும் பார்ப்பண எதிர்ப்புன்னு பேசிகிட்டு இருந்தா எப்படி?? தான் அதிகாரத்துக்கு கையாலாகதவர்னு ஒத்துக்கறாரா? இல்ல மறுமலர்ச்சி உண்டாக்குறதுக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் கேக்கறாரா? எவ்வளவு வருசம் வேணுமாம்... ஸ்டாலின் ஆட்சிலயாவது மறுமலர்ச்சி வந்திடுமாமா?? இப்ப 40 எம்.பி 200க்கு மேல எம்எல்லே... எல்லாம் என்ன அய்யருங்களா இல்ல இவங்க சமுதாய திட்டங்களுக்காக போராடுறத அய்யருங்க தடுக்கறாங்களா? எல்லா அதிகாரிங்களும் அய்யருங்க... ஒத்துழைப்பு கொடுக்க மாட்டேங்கிறாங்கன்னு கீறல் விழுந்த ரெக்கார்ட மறுபடி போடாதீங்க. இப்ப எம்பி எம்எல்லே எல்லாம் என்ன பண்ணுறாங்கன்னு எல்லாருக்கும் தெரியும்.

சரி அப்படியே அய்யருங்க சுயநலவாதின்னு வச்சிகிட்டாலும் இப்ப யாரு யோக்கியம்... கருணாநிதி:: தயாநிதிக்கு வேற சாதின்னுட்டா முக்கிய மந்திரி வாங்கி கொடுத்துருக்கார். தன் ரத்தம், தன் சொந்தம்னு பாசம் வரல? இல்ல தி.க வீரமணி யாராவது ப்ராமணருக்கு தி.க.ல முக்கிய பதவி ஏதாவது கொடுத்திருக்காரா? ஆக definition படி கருணாநிதியையும் வீரமணியையும் பார்ப்பான்னு சொல்லலாமா?

ராமதாஸ பத்தி கேக்கவே வேணாம்... முதலியார் MBC ஆகணும்னா போராடுனாரு, தன் ஜாதியான வன்னியருக்கு MBC வாங்கத்தானே போராட்டம்... உயர் நீதி மன்றத்துல நீதிபதியா வன்னியர் வரணும்னு ஒரு போராட்டம், தன் மகன் முக்கிய மந்திரியாக்குவதுன்னு - இவங்க எல்லாம் மத்த சாதிக்க்காகவா போராடுராங்க... (ஒரு காலத்துல ராமதாஸ் ராணுவத்துல வன்னியர்கள் அதிக அளவுல இருக்கறதுனால வன்னியர் ரெஜிமெண்ட்னு ஓன்னு ஆரம்பிகனும்னு ஒரு அறிக்கை கொடுத்தார்... சீக்கியர், கூர்க்காவுக்கு எல்லாம் ரெஜிமெண்ட் இருக்கும் போது வன்னியருக்கு ஏன் கூடாதுன்னு ஒரு விளக்கம் வேற... சீக், கூர்க்கா எல்லாம் மதம். வன்னியர்னா ஜாதின்னு யாராவது சொன்னாங்களா)

எல்லாருக்கும் தன் இனம், தன் சாதின்னு ஒரு பாசம் இருக்கத்தான்யா செய்யும்... அதுல பார்ப்பனர மட்டும் எதுக்கு திட்டிகிட்டு (அது சரி, பார்ப்பான் பார்ப்பான்னு கூசாம எழுதிறீங்களே, சக ஜாதிங்கற முறையில ஒரு தலித் சாதிய... உதாரணத்துக்கு பறையன்னு சொல்லி யாராவது எழுதறாங்களா...)

இப்பதிவில் எல்லா சாதியையும் ஒரு அடையாள குறியீடாகத்தான் சொல்லியிருக்கிறேன்... யார் மனமும் புண்படுத்துவது நோக்கம் இல்லை

இத படிக்கிற எல்லாம் அட்லீஸ்ட் காலேஜுக்காவது போயிர்ப்பீங்க... outside the box திங்க் பண்ண முடியலன்னாலும் பரவாயில்ல இன்னும் ஜாதி ஜாதின்னு குண்டு சட்டிக்குள்ள குதிர ஒட்டிக்கிட்டே இருந்தா கல்வியில குத்தமா இல்ல பிரச்சினை வேற எங்காவதா?? இந்த உலகத்துல சாதின்னா ரெண்டுதான்... என் முன்னேற்றத்த எவனாலயும் தடுத்து நிறுத்த முடியாது, என் குறிக்கோள அடஞ்சே தீருவேன்னு முன்னேற்ற ஜாதி, தான் முன்னேறலன்னா தப்பு என் மேல இல்லன்னு வேற ஏதாவது காரணம் கண்டு அதனால தனக்கு தானே தடை ஏற்படுத்திக்கிற ஜாதி. சந்தேகம் இருந்தா, நாவலர்கிட்ட கருணாநிதி & அன்பழகன் பத்தி கேட்டு பாருங்க - அவர் சொல்வாரு:: உலக நியதி இதுதான் தம்பி "வாழ தகுதியுள்ளதே வாழும்... தகுதியிருந்தால் வாழ்ந்தே தீரும்" ( தயாநிதி, அன்புமணிக்கெல்லாம் என்ன தகுதின்னு கேட்டு யாரும் அளும்பு பண்ண கூடாது) அதனால யாரயாவது குத்தம் சொல்லிகிட்டே இருக்காம தகுதிய வளத்துக்குவோம்...

பிகு :

1)யாருக்காவது மாற்றுக்கருத்து இருந்தா விவாதம் பண்ணலாம். ஆனா அத கண்ணியமான முறையில சொல்லுங்க... நடுராத்திரி வயக்காட்டுகுள்ள இருட்டுல ஊளையிடுற நரி மாதிரி அனானிமஸா தனி மனித, சாதி அடையாள தாக்குதல் எல்லாம் வேணாம்.

2)எனக்கு ப்ராமண அடையாளம் குத்தனும்னு நினைக்கிறவங்க இத்தயும் படிங்க: சின்ன வயசுல ஸ்கூலுக்கு போவ சொல்லோ அர நிஜார் பசங்க எல்லாம் ஓணான் புடிப்பாய்ங்க - வெளக்குமாத்து குச்சில சுறுக்கு செஞ்சி ஓணான புடிச்சி அதும் கண்ணில என்னமோ ஒரு செடியோட பால வுடுவானுங்க... அதுக்கு பைத்தியம் புடிச்சிறும் - அத பாத்தா நான் அவனுங்க கிட்ட சண்டைக்கு போவேன். அதுக்கு ஒரு சூப்பர் வெளக்கம் கொடுப்பானுங்கோ பாரு... ராமர் சீதைய தேடிக்கிட்டு லங்கைக்கு போவ சொல்சோ தாகமா இருந்திச்சின்னு தண்ணீ கேட்டாரம்... ஓணான் ஒன்னுக்கு அடிச்சி கொடுத்திச்சாம். அணில்தான் எளனி கொண்டாந்து கொடுத்திச்சாம்.. அதனால ஓணானுக்கு பாடம் சொல்லிதரோம்... ஆமா நீ என்னா ஓணானுக்கு வக்காலத்து வாங்கற, நீ ராவணன் ஜாதியான்னுவானுங்க... அவிங்க வயசும் மூளையுந்தான் உங்களுக்கா??


š இப்பதிவை மின்னஞ்சலிட


 

இரண்டு பதிவுகள். தொடர்பு இருக்கா இல்லையா தெரியாது.


டோண்டு பதிவுக்கும் இட்லி பதிவுக்கும் தொடர்பு இருக்கா இல்லையான்னு ஆராய்ச்சி செஞ்சி டாக்டரேட் வாங்கலாம்னு சென்னை பல்கலைக்கழகத்திலே சொம்மா ஒரு அப்ளிகேஷன் போட்டு வச்சேன்.... ஒடனே தமிழ்நாட்டுக்கே தெரிஞ்சு போச்சிது... வுட்டாங்கோ பாரு அறிக்கை:


கருணாநிதி : கழகக்கண்மணிகளாம் டோண்டுவும் இட்லியும் தூங்கிக்கிடந்த தமிழுள்ளங்களை சுனாமி பேரலைகளை போல் சுழற்றி விட்டதை கண்டு உலகத்தமிழர்கள் எல்லாம் உவகை கொண்டார்கள்... இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஆக்கமும் ஊக்கமும் கொண்ட திராவிட தம்பிகள் காட்டாட்சி நடத்தும் மடநாரீமணியின் மாயையை வெளிச்சம் போடும் நாள் எப்போ என்பதே மக்கள் கேட்கும் கேள்வி (எனக்கு மட்டும் தோனற கேள்விய மக்கள் கேக்கறாங்கன்னு இன்னும் எவ்வளவு நாள் ஜல்லியடிக்கணுமோ தெரியல... தொண்டன் - தலைவர நிறுத்த சொல்லுங்கப்பா... நாலு கூட்டத்துல பேசற பேச்ச வச்சி மார்கெட் போன சந்திரசேகர ஈரோவா போட்டு இவரு பாட்டுக்கு பொன்னம்மானு படம் ரிலீஸ் பண்ணிடுவாரு... தியேட்டர் காரனுங்கள கால பிடிச்சி, எல்லா டிக்கட்டையும் நம்மளே வாங்கி, யாருக்கும் தெரியாம அத குப்பையாக்கின்னு நம்ம பொழப்பு நாறி போகுது...)

வைகோ : (மைக்கை பிடித்தவுடன் அழுகிறார்... பின் கண்ணை துடைத்துக்கொண்டு) இந்த கூட்டத்திற்கு தாமதமாக வந்ததற்கு ஒரு காரணம் உண்டு (துரைமுருகன் - அழுவாச்சில வேற கொஞ்ச நேரம் வேஸ்ட். இந்த ஆளு இப்படி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிடரான்... அடுத்த கூட்டத்துல அத பாலோ பண்ணி நாம அழறதுகுல்ல தாவு தீர்ந்து போயிடுது...) டோண்டு / இட்லி இருவருக்கும் சிறந்த தமிழ் குடிமக்கள் விருது வழங்க வேண்டும் என்று அறிவாளியான பிரதமரையும் அன்னை சோனியாவையும் சந்தத்து மனு கொடுத்து 4 மணி நேரம் பேசிக்கொண்டு இருந்தேன். பிரதமர் தலைப்பாகை மூடியிருந்தாலும் காது கொடுத்து கேட்டதாக சொன்னார்... பின்பு மெரீனாவில் நடக்கும் இந்த விழாவிற்காக உடனே கிளம்பிவிட்டேன்... மத்திய பிரதேசம் போபால் வந்த போதுதான் தம்பிகள் சொன்னார்கள், இப்படியே நடந்து போனால் ஸ்டாலின் மகன் முதலமைச்சர் விழாவிற்குதான் போக முடியுமென்று... உடனே ம.பி போலீசை விட்டு துரத்த சொல்லி அவசர அவசரமாக ஓடி வந்தேன்... (குலுங்கி குலுங்கி அழுகிறார். திரும்பி உதவியாளரிடம் - இனிமே க்ளிசரின் வேண்டாம்யா... பழகி பழகி கண்ணீர் தானாவே வருது...)

ராமதாஸ் : நானும் தம்பி திருமாவும் சொன்னத கேக்காம டோண்டுவும் இட்லியும் அவங்க இஷ்டத்துக்கு பதிவு போட்டுகிட்டு இருந்தாங்க... மக்கள் அவங்கள உதாசீனப்படுத்திட்டாங்க.... அப்புறம் நாங்க சொன்னதுல உள்ள உண்மைய புரிஞ்சி ஒழுங்கு மரியாதயா பதிவு போட்டாங்க... இப்ப பாருங்க மக்கள் கொடுக்கிற ஆதரவ.... புரிஞ்சுதா? நான் கேக்குறேன்... எதுக்குய்யா சுதந்திரம் வாங்கினோம். நாங்க சொல்றபடி கேட்டு அப்படியே செயல் படுத்த கூட முடியலன்னா அப்புறம் எதுக்கு இந்தியாவுக்கு சுதந்திரம், எதுக்கு ஜனநாயகம்... இதுக்கு மேல உங்க இஷ்டம்... (திருமா அவர் இஷ்டத்துக்கு கன்டின்யூ பண்ணுவார்) பாட்டாளி சொந்தங்கள் அவங்க அவங்க இஷ்டத்துக்கு கோடாலிசாமி சொல்றபடி கண்டினியூ பண்ணுவாங்க.

வைரமுத்து : ஏஏய் தமிழா... டோண்டுவும் இட்லியும் ஒரு சேதி சொல்லியிருக்கிறார்கள்... அவர்களின் பாதையில் நீ செல்... மற்றவரிடமும் சொல்... மனிதர்களுக்கு மட்டுமல்ல... படுத்திருக்கும் நாயிடம் சொல்... பிறாண்டும் பாயிடம் சொல். பழுக்கபோகும் காயிடம் சொல். டை அடிக்கா சோவிடம் சொல்... யாரிடமாவது சொல்.. எப்படியாவது சொல்... கணீர் என்று சொல்... கஞ்சா அடித்து சொல்... இதுக்கு மேல சொல்றதுக்கு தெம்பில்ல... எப்படியாவது சொல்லிருங்கப்பா....

தி.க. வீரமணி : டோண்டுவும் இட்லியும் இவ்வளவு ஒட்டு வாங்கியிருப்பது பார்ப்பனரான ஜெயலலிதாவுக்கு ஒரு எச்சரிக்கை மணி (ஒரு கருப்பு சட்டை - அண்ணே இப்ப நாம அதிமுகல இருக்கோம்... நீங்க 4 நாள் முன்ன எழுதி வச்ச அறிக்கய படிக்கறீங்க. வீரமணி சுதாரித்து கொண்டு) இவ்வளவு ஒட்டு வாங்கியிருப்பது எதை காட்டுகிறது என்றால் பிஜேபியை எதிர்க்கும் திராணி உள்ள மத சார்பற்ற ஒரே தலைவியாம் புரட்சி தலைவி ஆட்சியை மக்கள் எந்தளவு விரும்புகிறார்கள் என்பதையே... (மொதல்ல எல்லா சொத்தையும் எந்த வில்லங்கமும் இல்லாம நம்ம பேர்ல பத்திரம் பண்ணனும்ப்பா... எப்ப எத பேசறதுன்னு யார ஆதரிக்கறதுன்னு தெரியாம நாக்கு தள்ளி போவுது... இப்படியே போனா தி.க.ல இருக்கற 23 உறுப்பினரும் காணாம போயிடுவாங்க)

ஒ.பன்னீர்செல்வம் : டோண்டுவுக்கும் இட்லிக்கும் வாழ்த்து சொல்லி ஹைதராபாத்தில் ஒய்வெடுக்கும் புரட்சி தலைவி, அற்புத அன்னை, அருமை தாய், மாதர்குல மாணிக்கம், மண்ணின் மைந்தி, மக்களை பெறாத மகராசி, பச்சை விளக்கு (முடியலடா சாமி, எவனாவது தமிழ் புலவர பெர்மனன்டா வேலைக்கு வச்சிக்க வேண்டியதுதான்) அறிக்கை அனுப்பி இருக்கிறார். வழக்கம் போலவே அத்த நான் படிக்கிறேன்.

சுப்ரமணிய சாமி : டோண்டுவுக்கு வாழ்த்துக்கள்... ஆனா இட்லி இவ்வளவு ஒட்டு பெற்றதுல ஜார்ஜ் புஷ்க்கும் CIA வுக்கும் தொடர்பு உண்டுன்னு என்னோட laptop சொல்லுது.... இது சம்பந்தமா நான் மட்டும்தான் உண்மையா விசாரிக்க முடுயும்னு நம்பி ஹ¤யாங் புயாங் (யாருன்னே தெரியலயேப்பா) என்ன கேட்டுண்டிருக்கார். மேலும் சோனியாவும் இத்தாலில இருக்கற அவரோட ஒன்னு விட்ட சித்தப்பாவுக்கும் இட்லியோட link இருக்குங்கறதுக்கு என்கிட்ட ஆதாரம் இருக்கு. இது சம்பந்தமா கோபி அன்னான் என்ன சந்திக்கனுமுன்னு நச்சரிச்சதால நாளக்கி நானும் சந்திரலேகாவும் ஜப்பான் போறோம் (அங்க கோபி அன்னான் இருப்பாரான்னு தெரியல... ஆனா நான் ஜப்பான் போயி ரொம்ப நாளாறது... அதான் அங்க போறோம்)

இவ்வளவு களேபரத்துல எனக்கு ஆராய்ச்சி கட்டுரை எழுதறதா வேணாமான்னு ஒரே குழப்பமா இருக்கு. உங்கள் கருத்து மற்றும் ஒட்ட பொருத்து அத்த நான் முடிவு பண்றேன்... போடுங்கம்மா ஒட்டு நட்சத்திறத்த பாத்து - இந்தியா கள்ள ஓட்டுனாலதான் உருப்படாம போவுதுன்னு நம்பறவங்க மினிமம் 30 ஒட்டாவது போடுங்க...

š இப்பதிவை மின்னஞ்சலிட


 

குரான் அவமதிப்பு களேபரங்கள்


வழக்கமா டிவிய போட்ட குற்றவாளி எவனுக்காவது தூக்கா ஆயுளான்னு jury எடுக்கற முடிவ பத்தி பேசுவாய்ங்க... (லேட்டஸ்டா மைக்கேல் ஜாக்ஸன வேற காமிச்சி பயமுறுத்தறானுங்கப்பா) இன்னிக்கி திடீர்னு abc channel, newsweek பொ.ஆவ பேட்டி எடுக்குது... அவிங்க பேசிகிட்டதுல விசயம் இதுதான்...

நியூஸ்வீக் தன்னோட மே 9ல் இதழில் குரான் பற்றிய ஒரு செய்தி வெளியிடுது : குவாண்டானமோ பே சிறையில் தாலிபன் கைதிகளை விசாரிக்கும் அதிகாரிகள் குரானை அவமதித்தார்கள் (எப்படின்னு அந்த கருமத்த நான் வேற சொல்லனுமா? )

நியூஸ்வீக்கிற்கு இந்த செய்தியை கொடுத்தது பென்டகனில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் ஒரு அதிகாரி

பொதுவா அமெரிக்கன் பத்திரிக்கைகள் பண்ணாத விதமா, இந்த செய்திய வெளியிட எதுனா ஆட்சேபனை இருக்கான்னு newsweek கார்ங்க pentogan கிட்ட கேக்கிறாங்க. அங்க இருந்து எந்த ஆட்சேபனையும் இல்ல

கட்டுரை வெளியானதும் எதிர்பாரா விதமா (அல்லது எதிர்பார்த்தவிதமா) முஸ்லீம் நாடுகள்ல குறிப்பா ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்ல கலவரம் வெடிக்குது.... 15 பேர் ஒரே வாரத்துல கலவரத்துல உயிரிழக்கிறாங்க

இப்ப பென்டகன், ஜார்ஜ் புஷ், கான்டலீஸா ரைஸ், நடுநிலையாளர்கள்னு எல்லா பயலும் newsweek மேல பாயராய்ங்க...

மத அவமதிப்பவிடவும் இவங்க கவலைப்படற முக்கியமான விஷயங்கள் என்னான்னா, அமெரிக்க ராணுவ வீரர்கள் இன்னமும் ஆப்கானிஸ்தான்லயும் பாகிஸ்தான்லயும் இருக்காங்க... அவங்க உயிருக்கு ஆபத்து கூடியிருக்கு... அமெரிக்காவிற்கு எதிரா ப்ரச்சாரம் பண்ற முஸ்லீம் பிரச்சாரர்களுக்கு தீனி கிடைச்சிடுச்சி...

இதுல கூத்து என்னான்னா, இது மாதிரி சம்பவம் நடக்கவே இல்லைன்னு ஆணித்தரமா இன்னும் யாரும் சொல்லவே இல்லை. pentagon இது சம்பந்தமா உயர்மட்ட அளவில விசாரணை நடத்துது... newsweek இது மாதிரி எதிர்காலத்துல எப்படி நடக்காம பாத்துக்கறதுன்னு ஆராய்ச்சி பண்ணுது... இதுக்கு நடுவில ராணுவ - கேம்ப்/சிறை - கோட்டையான guantanamo bay ல என்ன நடக்குதுன்னு அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

š இப்பதிவை மின்னஞ்சலிட


 

முதல் விமான பயணத்திற்கு தமிழில் வழிகாட்டி...


இது அமெரிக்காவை மனதில் வைத்து எழுதப்பட்டது என்றாலும் எந்த நாட்டிற்கு செல்பவர்களுக்கும் பொருந்தும். கரன்ஸி மற்றும் அளவீடுகளை மாத்திரம் நீங்கள் செல்லும் நாட்டிற்கு ஏற்றாற் போல் மாற்றினால் போதும்.
(இந்த கட்டுரையை இன்னும் செதுக்கிக்கொண்டு இருக்கிறேன். முழு கட்டுரையும் படங்களுடன் வேண்டுபவர்கள் எனக்கு ஒரு வரி மின்னஞ்சல் அனுப்புங்கள்...)

முன்னேற்பாடு

* செக்-இன் பேகேஜ் மற்றும் கேரி-ஆன் பேகேஜ் அளவு மற்றும் எடைக்கு உங்கள் ஏர்லைன்சை தொடர்பு கொண்டு விசாரியுங்கள்.அமெரிக்காவிற்கு இரண்டு பெரிய பெட்டிகள் (செக்-இன் பேகேஜ்) மற்றும் ஒரு சிறிய சிறிய பெட்டி (கேரி-ஆன் பேகேஜ்) அனுமதி. அது தவிர ஒரு கைப்பையும் (ஹாண்ட் பேக்) வைத்துக்கொள்ளலாம்.
* விமானம் புறப்படும் நேரத்திற்கு குறைந்தது 3 மணி நேரத்திற்கு முன்பாக விமான நிலையத்தில் இருப்பது நலம்.

* உங்கள் கைப்பையில் இருக்க வேண்டியது:

$ பாஸ்போர்ட்
$ விமான் டிக்கட் (நீங்கள் மின்-டிக்கட் வாங்கியிருந்தால் உங்கள் கன்·பர்மேஷன் நம்பர் ப்ரின்ட்-அவுட்)
$ நீங்கள் சந்திக்கப்போகும் நபரின் முகவரி, வீட்டு / கை தொலைபேசி எண்கள். நண்பர்களின் தொலைபேசி எண்கள்
$ நீங்கள் செல்லும் நாட்டின் பணம் - ஐந்து டாலர் அளவில் சில்லறை (அமெரிக்கா என்றால் க்வார்டர்ஸ்)
$ நீங்கள் செல்லும் நாட்டின் உள்ளூர் தொலைபேசி அட்டை (காலிங் கார்டு - பல இலக்கங்கள் கொண்ட எண்களாக இருக்கும். ஒரு காகிதத்தில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இதன் பயன்பாடு பின்னர்)
$ பஞ்சு (விமானம் புறப்படும் போது அழுத்த வேறுபாடுகளால் சிலருக்கு காது வலிக்கும். காதுக்குள் பஞ்சு வைத்தால் ஓரளவு மட்டுப்படும். இப்பொழுது எந்த விமானத்திலும் தருவதில்லை)
$ அத்தியாவசிய மருந்துகள், சாவிகள்

* இருக்கக்கூடாதது
$ கத்தி, கத்தரிக்கோல் முதலியவை
$ எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள்
$ விஷம், கம்ப்ரஸ்டு காஸ்

இது தவிர புத்தகங்கள், கேமிரா முதலியவை உங்கள் கைகளில் இருக்கலாம்.

* மிக நீண்ட பயணம் ஆதலால் செளகரியமான உடையாக அணியுங்கள். ஷ¤ அல்லது ஹீல்ஸ் இல்லாத பாதணி (நீண்ட நடை) நல்லது.

விமான நிலையம் (ஏர்போர்ட்)

* விமான நிலையத்தில் அறிமுகம் இல்லாதவர் ஏதாவது பொருளை உங்களிடம் கொடுத்தால் வாங்காதீர்கள். 'உயிர் காக்கும் மருந்துங்க இது... என் பொண்ணு ஏர்போர்ட்ல வந்து வாங்கிக்குவா... ஒரு உயிர காப்பாத்துன புண்ணியமா போகும்' என்றாலும் சரி... 'என் பையன் உங்க ·ப்ளைட்டுல தான் இருக்கான். அவசரத்துல இத விட்டுட்டு போய்ட்டான். இத 27ம் நம்பர் ஸீட்ல இருக்கற குப்புசாமிகிட்ட கொடுக்க முடியுமா' ன்னு கேட்டாலும் சரி. தயவு தாட்சணயம் இல்லாமல் மறுத்து விடுங்கள். ஏதோ ஒரு வகையில் அதில் சட்ட விரோத பொருள் இருந்து நீங்கள் பிடிபட்டால் நீங்கள் மாட்டிக்கொள்வீர்கள் (சிங்கப்பூர் மற்றும் மத்திய கிழக்கு
நாடுகளில் போதை மருந்துடன் பிடிபட்டால் கருணையே கிடையாது. மரண தண்டனைதான்)

* உங்களுக்கு எந்த சந்தேகம் என்றாலும் அடையாள அட்டை அணிந்த விமான நிலைய பணியாளரிடம் கேளுங்கள். கேள்வியோ பதிலோ சிறிய வாக்கியத்தில் இருக்கட்டும். எஸ்கலேட்டர் என்னும் நகரும் படிக்கட்டில் சென்று பழக்கம் இல்லையா? பெரிய விஷயம் இல்லை. முதல் படியில் மாடிப்படி ஏறுவது போலவே ஒரு கால் மட்டும் வைத்து அப்புறம் இன்னொறு காலை வையுங்கள். இறங்கும் போது அதே போலவே முதல் காலை வெளியில் வைத்தவுடன் நடக்க துவங்குங்கள். பொதுவாக சாதாரண படிக்கட்டுகளும் இருக்கும். விசாரியுங்கள்.

* உங்கள் லக்கேஜ் களை தள்ளுவண்டியில் வைத்துக்கொள்ளுங்கள். நிறைய நடக்க வேண்டி இருக்கும். 'போர்டிங் பாஸ்' வழங்கும் இடத்துக்கு செல்லுங்கள். அங்கே உங்கள் பாஸ்போர்ட், டிக்கட்டை சரி பார்ப்பார்கள். பொதுவாக இரண்டு கேள்விகள் கேட்பார்கள். 'உங்கள் பெட்டியை நீங்கள்தான் அடுக்கி வைத்தீர்களா?, யாராவது ஏதாவது எடுத்து செல்லும்படி கொடுத்தார்களா?" இரண்டுக்கும் பதில் 'ஆம்' தானே? சரி இப்பொழுது உங்கள் பெரிய பெட்டியை எடை பார்பார்கள். பின்பு 'போர்டிங் பாஸ்' தருவார்கள். அதை பத்திரமாக கைப்பையில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் விமானம் ஏற வேண்டிய கேட் நம்பர் சொல்வார்கள்.

* உங்கள் பெரிய பெட்டிகளை சோதிக்கும் இடத்துக்கு கொண்டு செல்லுங்கள். பூட்டாதீர்கள். அவர்கள் 'ஸ்கேனர்' மூலம் சோதனை செய்த பின் உங்கள் பூட்டை கொடுத்து உங்கள் பெட்டியை பூட்டுமாறு கேளுங்கள்.

* 'எம்பார்கேஷன் கார்டு' என ஒன்று தருவார்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி, பிறந்த ஊர், பிறந்த நாடு, எந்த தேசத்தவர்(நேஷனலிட்டி), பாஸ்போர்ட் நம்பர், அதை கொடுத்த இடம், வழங்கப்பட்ட தேதி, இந்தியாவில் உங்கள் முகவரி, போய் சேரும் இடம் (நீங்கள் இறங்கும் ஏர்போர்ட்), நீங்கள் பயணிக்கும் விமான எண் ஆகியவை அதில் கேட்கப்பட்டு இருக்கும். அதை பூர்த்தி செய்யுங்கள்.

* உங்கள் சிறிய பெட்டி, கைப்பையுடன் போர்டிங் ஏரியா (விமான பயணிகள் காத்திருப்பு அறைக்கு) செல்லுங்கள். அப்பொழுது உங்களையும் உங்கள் சிறிய பெட்டி மற்றும் கைப்பையையும் சோதனை செய்வார்கள். நீங்கள் எந்த கேட்டிற்கு செல்ல வேண்டும் என்று விசாரித்து அந்த கேட்டுக்கு எதிரே இருக்கும் இருக்கைகள் ஒன்றில் அமர்ந்து காத்திருங்கள். பக்கத்தில் இருப்பவரிடம், அந்த விமானம் உங்கள் ஊருக்குத்தான் போகிறதா என்று விசாரித்து தெளியுங்கள். உங்கள் ஸீட் எண் ஞாபகம் இருக்கா?

* விமானத்துக்குள் செல்ல அழைப்பு வரும். ஸீட் எண்ணை பொருத்து குழுவாக அழைப்பார்கள் (ஸீட் எண்கள் 10 முதல் 30 வரை இப்பொழுது வரவும்...) உங்கள் முறை வரும் பொழுது செல்லுங்கள். விமானம் உள்ளே இருக்கை எண்கள் தலை மேல் இருக்கும். இருக்கை கண்டுபிடிக்க கஷ்டமாக இருந்தால் விமான பணியாளரிடம் கேளுங்கள். கைப்பெட்டியை தலை மேல் இருக்கும் ஓவர் ஹெட் கம்பார்ட்மெண்டில் (பை வைக்கும் இடம்) வையுங்கள்.

விமானத்தில்

* விமானம் புறப்படும்போதும் இறங்கும்போதும் உங்கள் சீட் நேராக இருக்க வேண்டும். மற்ற நேரங்களில் உங்கள் வசதிக்கேற்ற மாதிரி சாய்ந்து ஓய்வு எடுங்கள். பொதுவாக கைப்பிடியில் இருக்கும் பித்தானை அழுத்திக்கொண்டு உங்கள் முதுகால் ஸீட்டை அழுத்தினால் ஸீட் பின்னால் செல்லும். தேவையான சாய்வு கிடைத்தவுடன் பித்தானை விட்டு விடுங்கள். ஸீட்டை முன்னால் கொண்டு வர நீங்கள் முன்னால் சாய்ந்து கொண்டு பித்தானை அழுத்துங்கள். பொதுவாக நீண்ட தூர விமானங்களில் ஒரு போர்வையும் சின்ன தலையனையும் கொடுப்பார்கள். உங்களுக்கு தரப்படும் உணவு, தண்ணீர், பழரசம், பியர், வைன் முதலியவை இலவசம். வேறு எதுவும் என்றால் நீங்கள் காசு கொடுக்க வேண்டுமா என்று கேட்டுக்கொள்ளுங்கள்.

* எப்பொழுது வேண்டுமானாலும் மனித உருவம் இருக்கும் பித்தானை அழுத்தி விமான சிப்பந்தியை கூப்பிடலாம். நிறைய தண்ணீர் குடியுங்கள். தூங்க முயற்சி செய்யுங்கள். படம் பார்கலாம். விளக்கு பித்தானை அழுத்தினால் உங்களுக்கு மட்டும் விளக்கு எரியும். புத்தகம் படிக்கலாம். பாத்ரூம் (லாவெட்டரி என்று கூறுவார்கள்) வெளியே இருக்கும் விளக்கில் பச்சை என்றால் உள்ளே யாரும் இல்லை, சிகப்பு என்றால் உள்ளே ஆள் உள்ளது என்று அர்த்தம். பொதுவாக லாவெட்டரி கதவுகள் நடுவில் அழுத்தினால் உள்ளே திறந்து கொள்ளும் அமைப்பில் இருக்கும். உள்ளே மிதமான அளவில் எரியும் விளக்கு, பளிச் என்று எரிந்தால்தான் நீங்கள் சரியாக தாளிட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். லாவெட்டரி மிகவும் சிரியதாக இருக்கும். கம்மோடுக்கு பின்னே கம்மோடு மேல் போடுவதற்கு பேப்பர் இருக்கும். அதை உபயோகப்படுத்துங்கள். வாஷ் பேசினில் சோப்பு கலந்த நீர் வரும். சுடு தண்ணீரும் குளிர் தண்ணீரும் உங்கள் பதத்திற்கு நீங்கள் கலந்துகொள்ளலாம்.

ட்ரான்ஸிட் (விமான மாற்றம்)

* நீண்ட தூர விமானங்கள் நடுவில் ஒரு முறை பெட்ரோல் நிறப்புவதற்கும் விமானம் சுத்தப்ப்டுத்துவதற்கும் நிற்கும். அப்பொழுது நீங்கள் விமானத்தை விட்டு இறங்கி பின்பு மீண்டும் அதே விமானத்திலேயோ அல்லது மாற்று விமானத்திலேயோ ஏற வேண்டும். இதனை ட்ரான்ஸிட் என்று கூறுவார்கள்.

* உங்கள் அனைத்து பொருட்களையும் எடுத்து கொண்டு இறங்குங்கள்நீங்கள் மீண்டும் ஏற வேண்டிய விமானம் நிற்கும் கேட் நம்பர் மற்றும் புறப்படும் நேரம் ஆகியவற்றை விமான பணியாளரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். கவனிக்க வேண்டிய விசயம் - அவர்கள் சொல்லும் நேரம், உள்ளூர் நேரம்... உங்கள் கைக்கடிகாரம் காட்டும் நேரம் அல்ல (நீங்கள் மாற்றி வைத்துக் கொண்டிருந்தால் தவிர)முதலில் உங்கள் விமான கேட்டுக்கு சென்று சரி பார்த்துக்கொள்ளுங்கள். பின் ரொம்ப தூரம் செல்லாமல் பக்கத்திலேயே டாய்லட் செல்வது/ காபி வாங்குவது போன்ற வேலைகளை செய்யலாம். நேரம் அதிகமாக இருப்பின் விமான நிலையத்தை சுத்திப்பார்க்கலாம், ஆனால் விமானம் புறப்ப்டுவதற்கு 30 நிமிடங்கள் முன்பே மீண்டும் கேட்டுக்கு சென்று விடுங்கள். மீண்டும் நீங்கள் சோதனை செய்யப்படலாம்.

டிஸ்எம்பார்கேஷன்

* விமானம் தரை இறங்கும் முன் விமான சிப்பந்திகள் 2 விண்ணப்பங்கள் கொடுப்பார்கள். ஒன்று வருகை-புறப்பாடு ·பார்ம், மற்றொன்று கஸ்டம்ஸ் ·பார்ம். ஆங்கிலம் எழுத வராதெனில் பக்கத்தில் உள்ளவர் உதவியுடன் தெளிவான கையெழுத்தில் இந்த ·பார்ம்களை பூர்த்தி செய்யுங்கள். விமானம் நின்றவுடன் உங்கள் அனைத்து பொருட்களையும் எடுத்து கொண்டு இம்மிக்ரேஷ-செக் பகுதிக்கு வாருங்கள். அங்கே குடிமக்கள் மற்றும் குடிமக்கள் அல்லாதோருக்கு என தனித்தனியாக வரிசைகள் இருக்கும். சரியான வரிசையில் நில்லுங்கள்.

* இம்மிக்ரேஷன் அதிகாரி உங்கள் பாஸ்போர்ட்/ வருகை-புறப்பாடு ·பார்ம் வாங்கி சரி பார்ப்பார். பின்பு உங்களிடம் நீங்கள் யார், என்ன விஷயத்திற்காக வந்திருக்கிறீர்கள், எவ்வளவு நாள் இருப்பீர்கள் போன்ற கேள்விகள் கேட்பார். பின்பு உங்கள் பாஸ்போர்டை முத்திரையிட்டு, வருகை-புறப்பாடு ·பார்மின் ஒரு பகுதியுடன் உங்களிடம் தருவார். பின்பு உங்கள் பெரிய பெட்டிகள் தானியங்கி பட்டையில் (கன்வேயர் பெல்ட்) வரும். அதனை எடுத்து தள்ளுவண்டியில் வைத்து கொள்ளுங்கள்.

* கஸ்டம்ஸ் க்ளியரன்ஸ் என்ற வழியே செல்லுங்கள். பெருன்பான்மை நாடுகளில் விவசாய பொருட்கள் எடுத்து வர அனுமதி இல்லை. ஆகவே பச்சை காய்கறிகள், செடிகள், விதைகள், சிறிய வளர்ப்பு பிராணிகள் ஆகியவை இருந்தால் அதனை கஸ்டம்ஸ் ·பார்மில் தெரிவிக்க வேண்டும். மேலும் எவ்வளவு பணம் எடுத்து வருகிறீர்கள் என்றும் ·பார்மில் இருக்கும். கஸ்டம்ஸ் அதிகாரி நீங்கள் என்ன கொண்டு வருகிறீர்கள் என்று கேட்பார். உங்கள் பதில் பொதுவாக துணிமணி, மருந்து மாத்திரை என்று இருக்கும். உங்கள் பெட்டிகளை அவர்கள் சோதனை செய்ய நினைத்தால் செய்வார்கள். பயப்பட ஒன்றும் இல்லை.

* விமான நிலையத்தை விட்டு வெளியே வாருங்கள். உங்களை அழைத்து செல்பவரை கண்டுபிடிக்க முடியாவிட்டால் பயப்படாதீர்கள். சற்று நேரம் அங்கேயே காத்திருங்கள். அவர்கள் ட்ரா·பிக் நெரிசலில் மாட்டியிருக்கலாம்... அல்லது காலிங் கார்டு இருக்கிறதல்லவா அதன் மூலம் பொது தொலைபேசி கொண்டு அவர்களை அழையுங்கள். காலிங் கார்டு இல்லையென்றாலும் உங்களிடம் இருக்கும் சில்லரை கொண்டு அவர்களை அழைக்கலாம்....

இந்த இடத்தில் உங்கள் முதல் பயணம் இனிதே நிறைவடைந்தது... வருக வருக...

* நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான இன்னொரு விஷயம் இருக்கிறது.... இரண்டு நாட்கள் கழித்து ஜெட் லாக் எல்லாம் கழிந்தவுடன், இந்த பதிவிற்கு மறக்காமல் ஒட்டு போடுங்கள்....

© முகமூடி...
இதனை பகுதியாகவோ முழுதாகவோ பயன் படுத்த நினைப்போர் செய்ய வேண்டியது :
அ) உங்கள் பயன்பாட்டில் நன்றி என்று
முகமூடி பதிவிற்கு இணைப்பு கொடுங்கள்
ஆ) இந்த பதிவிற்கு ஓட்டு போடுங்கள்.

மீறுபவர்களுக்கு தூங்கும்போது எதுவும் கண்ணுக்கு தெரியாமல் போகக்கடவது...

டிஸ்க்ளெய்மர்: இந்த கட்டுரை ஒரு வழிகாட்டி மட்டுமே... இதனால் ஏற்படும் பண, மன உளைச்சல்களுக்கு நான் பொருப்பல்ல.


š இப்பதிவை மின்னஞ்சலிட


 

பழைய சோறு - ரஜினிக்கு தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது


கணினிய முறைபடுத்தலாம்னு உட்கார்ந்தப்போ இந்த கட்டுரை கண்ணில பட்டுச்சி. அனேகமா 'ஆண்டவனால் கூட காப்பாத்த முடியாது' பஞ்ச் டயலாக் ரிலீஸானப்போ வந்ததா இருக்கணும். அப்பல்லாம் தமிழ் நாடு திரைப்பட கலைஞர்ன்ற பேர்ல நடக்கிற எந்த விழானாலும் - லைட்மேன் வீட்டு காது குத்துனாகூட - கருணாநிதி இருந்தா பக்கத்து ஸீட் தம்பி ரசினிக்குத்தான். பாபா பொட்டி காணாம போனப்போதான் பாவம் அண்ணனுக்கு அனஸ்தீஸியா வந்திறுச்சி... ஹ¤ம்.. காலத்தின் கோலம். சரி இப்ப இந்த கட்டுரைய மறுபதிப்பு பண்றதுக்கு என்னா அவசியம் வந்துச்சிங்கறீங்களா... சொல்ல முடியாதுங்க... தைரியலட்சுமி கடாட்சத்துல சந்திரமுகில சிறப்பா நடிச்சதுக்காக மீண்டும் இதே சங்கதி நடந்தாலும் நடக்கும்... கள்ளம் கபடம் இல்லாத நண்பர்கள் வேற எதுனா பண்ணனும்னு இருக்காங்க.... ஆக படையப்பா, கருணாநிதி க்கு பதிலா சந்திரமுகி, ஜெயலலிதா ன்னு மாத்தி இதே கட்டுரை கொஞ்ச நாள் கழிச்சி வந்தாலும் வரும்... அதான் ஒரு தொலைநோக்கு பார்வையோட இப்பவே... ஹிஹி...


சிறந்த நடிகர் விருதை ரஜினி வாங்கக்கூடாது _ கோடம்பாக்க குமுறல்

ஆஸ்காரில் துவங்கி லோக்கலில் உள்ள டுபாக்கூர் சபாக்கள்வரை விருதுகள் என்றாலே சர்ச்சைகள்தான். டுபாக்கூர் விருதுகள் என்றவுடன் அவசரப்பட்டு யாரும் தமிழகஅரசு விருதுகளைப் பற்றி எண்ணிவிடவேண்டாம். காரணம் டு. சபாக்கள் விருது தரும் நோக்கங்கள் அல்பமானவை. இன்னும் சொல்லப்போனால் எப்போதாவது அவை சரியான நபர்களுக்கேகூட விருதுகளைத் தந்துவிடுகின்றன.

கடந்த வியாழன்று சென்ற ஆண்டுக்கான விருதுகள் பட்டியலை தமிழகஅரசு அறிவித்தது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் ரஜினியை தி.மு.க.வுக்குள் இழுக்க எத்தனையோ வழிமுறை இருக்கும்போது, இவ்வளவு வெளிப்படையாக கருணாநிதி தன்னை எக்ஸ்போஸ் செய்துகொள்வார் என்று தி.மு.கவினர் உட்பட யாருமே எதிர்பார்க்கவில்லை.

தேசிய விருதை ஒரு ஓட்டில் தவறவிட்ட 'சேது' விக்ரமுக்கும் ஆறுதலுக்காக சிறப்புப்பரிசு தரப்பட, படையப்பாவுக்காக ரஜினிகாந்த் சிறந்தநடிகர் விருதைப் பெற்றிருக்கிறார். பாவம் விக்ரம் அவருக்கென்று தமிழ்நாட்டில் ரசிகர்கள், ஓட்டுக்கள் இல்லை. அவருக்குத் தெரிந்ததெல்லாம், அனைவரும் வியக்கும்படி நடித்ததுதான். ரஜினிக்கு சிறந்த நடிகர் விருது தந்த ஒரு கூத்து போதாதென்று கடந்த ஆண்டின் சிறந்த படமாகவும் படையப்பாவே தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

ஜெயலலிதா போன்ற ஒரு பாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணனை நடிக்கவைத்து கருணாநிதியை சந்தோஷப் படுத்தியது, ரஜினி படம் என்பது போக அந்தப் படத்துக்கு விருது வாங்க என்ன தகுதி இருந்தது என்பது அந்த படையப்பாவுக்கே வெளிச்சம். அதிக மூட நம்பிக்கைகளையும் மசாலா அயிட்டங்களையும் பீடி, சிகரெட்டுகளுக்குப் பதிலாக சுருட்டு விளம்பரங்களையும் கொண்டது என்பதைத் தவிர அந்தப்படத்தில் சிறப்பு என்ன என்பதைத் தமிழக முதல்வரே அறிவார்.

இப்படி ரஜினிக்கு மட்டும் ஐஸ் வைத்துவிட்டு, மற்றவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்தால் எப்படி என்று நினைத்தார்களோ கமல், இயக்குநர் மகேந்திரன், விஜய் என்று இன்னொரு கூட்டத்திற்கு முறையே சிவாஜி விருது, அண்ணா விருது, எம்.ஜி.ஆர். விருது என வழங்கியிருக்கிறார்கள்.வைரமுத்து வழக்கம்போல் சிறந்த கவிஞர் விருதைப் பெற, இவரைப் போலவே விருதுபெற்ற தி.மு.க. ஆதரவு கோஷ்டிகளின் எண்ணிக்கையும் ஏராளம்.

இந்த விருதுகளையெல்லாம் செலக்ட் பண்ண ஒரு நீதிபதி தலைமையில் தேர்வுக்குழு ஒன்றை அமைக்கிறார்கள். இந்தத் தேர்வுக்குழுவின் வேலை என்ன தெரியுமா? அறிவாலயத்தில் தீர்மானிக்கப்பட்டு வருகிற பட்டியலுக்கு ஓ.கே. சொல்லவேண்டியதுதான். இது பற்றிப் பேசும்போது, தேர்வுக்குழுவில் கலந்துகொண்ட ஒருவர், தன் பெயரை வெளியில் சொல்லக்கூடாது என்று சத்தியம் வாங்காத குறையாக சொன்ன தகவல் இது.
"இந்த முறை ரஜினிக்கு விருது தர கலைஞர் முடிவு செய்திருப்பதை விருதுக்கமிட்டிக்கு முன்கூட்டியே தெரிவித்தார்கள். ஆனால் சிறந்தபடம், சிறந்த நடிகர் இரண்டையுமே படையப்பாவுக்குத் தருவது அனைவருக்கும் தர்மசங்கடமான விஷயமாக இருந்தது. ஆனால் மேலிடம் அதில் தீர்மானமாக இருப்பதாக 'நடுவில்' இருந்தவர்கள் சொன்னார்கள். வேறு வழியில்லாமல் அனைவரும் படையப்பாவுக்கு ஓட்டுப்போட்டோம்" என்றார் அவர்.

இந்த விருது தரப்பட்ட அரசியல் இப்போது கோடம்பாக்கத்தில் பெரும் சர்ச்சைக்குரிய டாபிக்காக ஆகியிருக்கும் நிலையில், ரஜினி இந்த விருதை ஏற்காமல் இருப்பதே அவருக்கு கௌரவமான விஷயம் என்று பலர் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். பத்துமுறைக்கும் மேல் தனக்குத் தொடர்ந்து ஃபிலிம்பேர் விருது அளிக்கப்பட்டபோது கமல் இதைத்தான் செய்தார். "நான் நிறையமுறை விருது வாங்கிவிட்டேன். விருதுகள் பட்டியலில் என்னைவிட்டுவிட்டு புதிய தலைமுறைக்கு அந்த விருதுகளை வழங்குங்கள்'' என்று கமல் சொன்னார். அதே பெருந்தன்மையை ரஜினியிடம் எதிர்பார்க்கலாமா? அப்படிச் செய்தால்தான் கொஞ்சம் வெட்கமின்றி அரசியல் நோக்கத்துக்காக மட்டுமே தனக்குத் தரப்பட்ட விருதை நிராகரிப்பதால் மட்டுமே ரஜினி தன் மதிப்பைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

தமிழகஅரசின் இந்த விருதுக் காமெடிகளைப் பற்றிப் பேசும்போது தவிர்க்க முடியாமல் இன்னொரு சமாச்சாரத்தைப் பற்றியும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. அது கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட 17 படங்களுக்கான அரசு மானிய விவகாரம்.

குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட கம்மியான பிரிண்டுகள் போடப்பட்ட 'தரமான' படங்களுக்கு அரசு வழங்கிவரும் மானியமும் இன்னொரு கூத்துதான். இந்தமுறை அறிவிக்கப்பட்ட படங்களில் வழக்கத்தைவிட சற்று அதிகமான தி.மு.க.காரர்களின் படங்கள் இருந்தன. அதையும்விட அதிர்ச்சி பட்டியலில் இடம்பெற்றிருந்த படங்களில் பெரும்பாலானவை தரமான, லோ பட்ஜெட், குறைந்த பிரிண்டுகள் என்ற எந்த வரைமுறைகளுக்குள்ளும் அடங்காதவை. உதாரணத்திற்கு மானியம் வழங்கப்பட்டுள்ள 'திருப்பதி ஏழுமலை வெங்கடேசா' படம் அமோகமாக ஓடி ஏகப்பட்ட பிரிண்டுகள் போடப்பட்ட படம். அந்தப் படத்தைத் தயாரித்து இயக்கியவர் தி.மு.க.காரரான ராமநாராயணன் என்பதைத்தவிர, மானியம் வாங்குவதற்கான எந்தத் தகுதியும் அந்தப்படத்துக்கு இருந்ததாகத் தெரியவில்லை. மேலும் உள்ள 16 படங்களில் 'மல்லி', 'முகம்' ஆகிய இரு படங்களைத்தவிர மீதியுள்ள பெரும்பாலான படங்களில் கவர்ச்சி, சண்டை, மூடநம்பிக்கைகள் மலிந்து கிடந்தன. 'நல்ல படம். ஆனால் மக்கள் பார்க்கவில்லை என்ற ஆதங்கத்தை வரவழைக்கும் படம் எதுவுமே மானியப்பட்டியலில் இடம் பெறவில்லை.

இப்படி நடப்பது இதுவே முதல் முறையல்ல. விருதுகள், மானியங்கள் விவகாரங்களில் ஒவ்வொரு அரசும் இப்படித்தான் நடந்துகொள்கிறது. நியாயமாக, இந்த காமெடிகளைக் கண்டுகொள்ளாமல் விடவேண்டும். ஆனால் என்ன செய்வது? 'சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா.' (நன்றி- முத்துராமலிங்கன், குமுதம்)

š இப்பதிவை மின்னஞ்சலிட


 

ஆத்திச்சூடி ஞாபகம் இருக்கா ?


சமீபத்தில் toys 'r' us க்கு ஒரு பொம்மை வாங்கலாம்னு போனா அடேங்கப்பா... குழந்தைகளுக்கான பொம்மைகள் தயாரிப்பு எவ்ளோ பெரிய வர்த்தக சாம்ராஜ்யமாக வளந்திருக்கு. (பிராணிகள் பராமரிப்பு இன்னொரு சாம்ராஜ்ஜியம்). என் சின்ன வயசு பொம்மை ஞாபகங்களான பச்சைக்கிளி (ப்ளாஸ்டிக் கிளி அடியில் சின்னதாய் இரண்டு சக்கரம் இருக்கும்) , நடவண்டி , நுங்கு வண்டி எல்லாம் இன்னும் வழக்கில் இருக்கான்னு தெரியல.


பேசும்/பாடும் பாடபுத்தகங்கள பாத்தப்போ நான் படிச்ச தமிழ் ரைம்ஸ் (இதுக்கு தமிழ் என்ன - மழலை பாடல்கள் என்பது சரியா) என்னான்னு யோசிச்சேன். 'அம்மா இங்கே வா வா' ஞாபகம் இருக்கு.... வேற ஒன்னும் இப்போதைக்கு ஞாபகம் வரல.. குழுவா மொத்த க்ளாஸ¤ம் ஒப்பிப்பதில் ஆத்திச்சூடி (முழு ஆத்திச்சூடியும் முதல் கமெண்ட்டில்) - ஆறுவது சினம் வரை ஞாபகம் வருது. அது வரைதான் இன்று அர்த்தமே புரிகிறது. முயற்சி செய்தால் வேறு சிலவற்றின் அர்த்தம் புரிகிறது. ஒளவியம் பேசேல் என்பதற்கு சத்தியமாக அர்த்தம் புரியவில்லை. தப்பு என்மேலன்னு எனக்கு தோனல. விரும்பு, சினம், ஊக்கம், கைவிடல், இகழ்ச்சி என்பதை தவிர மற்ற வார்த்தைகள் நமது அன்றாட பேச்சு வழக்கில் இன்று இருக்கிற மாதிரி எனக்கு தெரியவில்லை. ஆத்திச்சூடி கற்கும் ஒரு குழந்தை அதை ஒரு பாடமாக தவிர - அதிக பட்சம் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு பாடிக்காண்பிக்க - வேறு விதத்தில் உபயோகப்படுத்துகிறதா? அப்புறம் எப்படி அடிமனதில் பதியும்.

ரொம்ப வருஷங்களுக்கு முன்பு சுஜாதா ஒரு கட்டுறையில் அவரது நண்பர் ஒருவர் - ராமானுஜம்? - குழந்தைகளுக்கான நர்சரி ரைம்ஸை அழகான தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருப்பதாக, பா பா ப்ளாக் ஷீப்பின் மொழி பெயர்ப்பை கொடுத்திறுந்தார். எளிமையாகவும் அழகாகவும் இருந்தது அது. (யார்கிட்டயாவது நல்ல தமிழ் ரைம்ஸ் இருக்கா). இப்போ மெட்ராஸ் பாஷையில் 'ட்விங்கிள் ட்விங்கிள்' பாடினால் இப்படி இருக்குமா?

பளிச்சி பளிச்சி தம்மாத்தூண்டு இஸ்டாரே!
ஆச்சரியமாத்தான்கீது நான் உன்ன பாக்க சொல்லோ!
ஒலகத்த விட்டு யம்மான் ஒசரத்துல கீர,
வானத்துல ஒரு வைரமணியாட்டமா மின்னிக்கினு
பளிச்சி பளிச்சி தம்மாத்தூண்டு இஸ்டாரே!

š இப்பதிவை மின்னஞ்சலிட


 

திருமாவளவனுக்கு வீரம் இருக்கா ?


... பாட்டாளி மக்கள் கட்சியும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தில் இடம் பெற்றிருக்கிறோம். இந்த மாதம் இருபத்து மூன்றாம் தேதி - மொழிப் போர் - பிற மொழிச் சொற்களைக் கறுப்பு மை பூசி அழிக்கும் போராட்டம் நடத்த இருக்கிறோம். இதில் மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி, பழ.நெடுமாறன், டாக்டர் சேதுராமன், நான் ஆகியோர் கலந்துகொள்ள இருக்கிறோம் - இது
விகடனுக்கு திருமாவளவன் கொடுத்திறுக்கிற பேட்டி.


படம் உதவி: தினமலர்

எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் :
அ) ராமதாஸ¤க்கும் நம்பகத்தன்மைக்கும் சுட்டுப்போட்டலும் சம்பந்தமே கிடையாது.
ஆ) திடீர் தமிழ்பற்று ராமதாஸ் aka பாமகவோட வழக்கமான அரசியல் ஸ்டண்ட்.
இ) எல்லா அரசியல்வியாதிங்க மாதிரி ராமதாஸ¤ம் ஊருக்கு உபதேசம் செய்யிற ஆளு, அவ்ளோதான்.
ஈ) கேவலம் மொழிப்போருக்காக எல்லாம் தட்டியில இருக்கற பிற மொழிய அழிச்சி அனாவசியமா கைக்காச செலவு பண்ண மாட்டாறு. ( தட்டிக் கேட்டா என்ன நடக்கும்னு தெரியும்கறதால யாரும் தட்டி கேக்கவும் மாட்டாங்க.)

எல்லாரும் தெரிஞ்சிக்க விரும்பற விசயம் : தமிழ காக்க தனி மனிதனா போராடுற ex-போராளி திரு. திருமாவளவனுக்கு பாமக தட்டியில இருக்கற பிற மொழிய அழிக்கிற வீரமும் தீரமும் இருக்கா ??

š இப்பதிவை மின்னஞ்சலிட


 

அப்படி போடு அறுவாள (ஏப்ரல் மாத டாப் 10)


சூப்பர் டாப்:
அதிமுகவுடனும் பாஜகவுடனும் இனிமேல் எந்தக் காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம். இதை பத்திரப் பதிவு ஆபிஸில் பதிவு செய்துத் தரவும் தயார் என்று நான் கூறிய பின்னரும் சில பத்திரிக்கைகள் இன்னும் பாமக குறித்து கிசுகிசு வெளியுட்டு வருகிறார்கள். யார் அதிக சீட் கொடுக்கிறார்களோ அவர்கள் பின்னால் போய்விடுவேன் என்று என்னைப் பற்றி எழுதுகிறார்கள். மானம், ரோஷம், சூடு, சொரணை அதிகமாக உள்ளவன் இந்த ராமதாஸ். போனமுறை ஜெயலலிதா பக்கம் போனது சீட்டுக்காக அல்ல. அதை கலைஞரிடமே சொல்லியிருக்கிறேன். ஆனால், போனதும் முதல் ஆளாக ஓடி வந்தவன் நான் தான். இனிமேல் அதிமுகவுடன் கூட்டணியே வைக்க மாட்டேன் - ராமதாஸ்...ஏப்ரல் 4, 2005 (தேர்தல் அப்போ திமுகவ விட அதிமுக அதிகமா ஸீட் கொடுத்தாலும் இதயே சொல்லுவீங்களான்னா)

டாப் 02: ஜி.கே.மணியும், அவரது கட்சித் தலைவரும், ஏதோ தாங்கள்தான் தமிழ்க் குடி தாங்கிகள் போலவும், தாங்கள்தான் தமிழை வளர்த்து வருவது போலவும் காட்டிக் கொள்கிறார்கள். எதிர்காலத்தில் அவர்களுடைய கட்சியை நடத்தப் போகும் அவர்களுடைய சின்ன அய்யா, வெள்ளைக்காரர் உடையை மாற்றி, தமிழர் உடையான வேட்டி, சட்டையை முதலில் அணியட்டும். ஆங்கிலத்திற்குப் பதில் தமிழில் பேசட்டும். அதன் பிறகு ஊருக்கு உபதேசம் சொல்லட்டும் - ஜெயலலிதா...ஏப்ரல் 13, 2005 (ஜி.கே.மணி சைக்கிள் பாகங்கள தமிழ்ல சொல்ல தெரியாம சட்டசபைல வழிஞ்சாரே... இப்ப கத்துக்கிட்டாராமா ??)

டாப் 03 : தமிழ்ப் பத்திரிக்கைகள் தமிழுக்கு எதிராக செயல்படுகின்றன. பத்திரிக்கைகளை எடுத்துப் பார்த்தால், அதில் 100 வார்த்தைகளில் 60 வார்த்தைகள் ஆங்கிலத்திலோ அல்லது பிற மொழியிலோ தான் உள்ளன. அந்த சண்டாளர்களைக் கேட்கிறேன். நேருக்கு நேர் பேச வாருங்கள். ஆனால் ஒருத்தரும் வர மாட்டேன் என்கிறார்கள். எவ்வளவு கொழுப்பு இருக்க வேண்டும் அவர்களுக்கு? எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும் அவர்களுக்கு? - ராமதாஸ்... ஏப்ரல் 25, 2005 ("தலைவர்" தகுதிக்கு இன்னா கண்ணியம் இன்னா பண்பாடு... )

டாப் 04 : என் வாழ்க்கையில் நான் செய்த மிகப் பெரிய தவறு, திமுகவில் இரண்டாவது முறை போய்ச் சேர்ந்ததுதான். ஆனால் அந்தத் தவறு மீண்டும் நடக்காது. திமுகவுக்கு எதிரான கூட்டணியை அமைப்பதில் நான் சாணக்கியனாக இருப்பேன். கருணாநிதியை எதிர்த்து தேர்தலில் போட்டியிட மாட்டேன். ஒரு காலத்தில் அவரை எனது தலைவராக ஏற்றுக் கொண்டவன். கொள்கை ரீதியாக அவரை எதிர்ப்பது வேறு, களத்தில் இறங்குவது வேறு. எனவே கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட மாட்டேன் - டி.ராஜேந்தர்...ஏப்ரல் 18, 2005 (முடிவா என்னதாண்டா சொல்றீங்க)

டாப் 05: கள்ளம் கபடமில்லாத உங்களுடைய மனமார்ந்த பாராட்டுக்களுக்கு எனது இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் - சந்திரமுகி படத்தில் புகை பிடிக்கும் காட்சிகள் இடம் பெறாததற்கு பாராட்டு தெரிவித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி எழுதிய கடிதத்திற்கு நன்றி தெரிவித்து ரஜினிகாந்த்... மே 5, 2005 (உங்களாலயே நம்ப முடியாத அளவு பொய் சொல்லியிருக்கேன். சந்திரமுகி படபொட்டிய காட்டுக்கு தூக்கிட்டு ஓட வேணாம்னு காடுவெட்டிகிட்ட ஒரு வார்த்தை சொல்லி வை தல...)

டாப் 06 : வன்முறையை மட்டுமே நம்பி, மக்களையும், ஜனநாயகத்தையும் உதாசீனப்படுத்தி ஆட்டம் போடும் அதிமுகவுக்கு (மட்டும்) இந்த அராஜகம் நிரந்தரமானதல்ல என்று எச்சரிக்க விரும்புகிறேன் - கருணாநிதி...ஏப்ரல் 21, 2005 (திமுகவுக்குத்தான் நிரந்தரம்)

டாப் 07 : ப.சிதம்பரம் தனக்குத் தானே ஆத்ம பரிசோதனை செய்து கொண்டால் தமிழகத்திற்கு தான் எதையும் செய்யவில்லை என்பது புரியும். மக்கள் அபிலாஷைகளை நிறைவு செய்யாமல் துரோகம் செய்ததுதான் அவரது ஒரே சாதனை - ஜெயலலிதா... ஏப்ரல் 25, 2005
(அப்படியே நீங்க கொஞ்சம் ஆத்ம பரிசோதனை செஞ்சு எதுனா சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்)

டாப் 08 : சட்டசபை இடைத் தேர்தலில் கலகமும், மறியலும், வன்முறையும் அரங்கேறக் கூடும். இவற்றை எதிர்த்து திமுகவினரும், தோழமைக் கட்சியினரும் அறவழி ஆயுதம் ஏந்துவதில் எந்தத் தவறும் இல்லை - கருணாநிதி...ஏப்ரல் 22, 2005 (அறவழிங்கற வார்த்தை திமுககாரன் கண்ணுக்கு தெரியுமா ?)

டாப் 09 : ஜெயலலிதா என்னை 10 ஆண்டுகள் சிறையில் அடைத்தாலும் நான் ஆத்திரப்படமாட்டேன். ஆனால் கோடிக்கணக்கான ஏழை மக்களின் வாழ்க்கையில் விளையாடுகிறாரே என்று தான் ஆத்திரப்படுகிறேன் - வைகோ... மே 5, 2005
(நடந்து நடந்து கால் வலிக்குது... தயவு செஞ்சு ஜெயில்ல போடுங்கய்யா)

டாப் 10: ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, கென்யா, தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, இங்கிலாந்து, கனடா, இலங்கை , சீனா ஆகிய நாடுகளில் உலகத் தமிழ் இளைஞர் பேரவை சார்பில் தமிழ்ப் புத்தாண்டு தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டை ஜெயலலிதா தினமாக கொண்டாடப் போகிறோம் - உலகத் தமிழ் இளைஞர் பேரவை (?!) தலைவர் விஜய் பிரபாகர்... ஏப்ரல் 11, 2005 (கெளம்பிட்டாய்ங்கய்யா.... கெளம்பிட்டாய்ங்க...)

š இப்பதிவை மின்னஞ்சலிட


 

கபட நாடக தலைவர்கள் vs களிமண் மண்டை தொண்டர்கள்


குமுதம் ரிப்போர்டர் 05.05.2005 இதழ் ·ப்யரிங் ஸ்பாட் பகுதியில்...

டாக்டர் ராமதாஸ் என்ன சொல்லப் போகிறார்?

எனது நண்பர் டெல்லியில் தேசிய வங்கி ஒன்றில் பணி புரிகிறார். தமிழ்ப் பற்று மிக்கவர். டெல்லி தமிழ்ச் சங்கத்தில் தீவிர ஈடுபாடு உடையவர். அவர் சென்ற வாரம் எனக்கு எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு அதிர்ந்து போய்விட்டேன். அக்கடிதத்திலிருந்த விஷயம் இதுதான்:
‘‘தமிழக அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளைக் கண்டு இங்குள்ள பிற மொழிக்காரர்கள் சிரிக்கிறார்கள். இங்குள்ள தமிழர்களுக்கு இது அவமானமாக இருக்கிறது. அங்கே தந்தை தமிழுக்காக மூன்றாவது மொழிப் போர் பிரகடனம் பண்ணுகிறார். ஆனால், இங்கே அமைச்சராக இருக்கிற அவரது மகன் அன்புமணியின் இரண்டு குழந்தைகளும் ‘மேட்டர் டே’ என்ற ஆங்கில _ இந்திப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள்!
இந்தப் பள்ளியில் தமிழே கிடையாது!

இவ்வளவிற்கும் டெல்லி தமிழ்ச் சங்கம் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளை இங்கே நடத்துகிறது... இவற்றில் எதிலும் சேர்க்காமல் ஆங்கில-இந்திப் பள்ளியில் தன் குழந்தைகளைச் சேர்த்திருக்கிறார் அன்புமணி...’’

ராமதாஸ் பெரியாரைப் போற்றுகிறவர். ‘பிற மதங்களை விமர்சிக்காமல் ஏன் இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கிறீர்கள்?’ என்று பெரியாரிடம் கேட்டபோது, ‘எனது வீட்டில் உள்ள அசிங்கங்களைச் சுத்தப்படுத்தாமல் எதிர்வீட்டைப் பற்றியும் அண்டை வீட்டைப் பற்றியும் விமர்சித்தால் அவமானம்தான் மிஞ்சும்’ என்று பதில் சொன்னார். ஆனால் டாக்டர் ராமதாஸ்?

vs படித்தால் சிரிப்புத்தான் வருகிறது!

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அரசினர் மருத்துவமனையின் பெயர் ‘ராஜாஜி மருத்துவமனை.’ மூதறிஞர் ராஜாஜியின் பெயர் சூட்டப்பட்ட இம்மருத்துவமனை வாசலில் தற்போது வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகையில், ‘ராசாசி மருத்துவமனை’ என எழுதப்பட்டுள்ளது! ராஜாஜியில் உள்ள வடமொழி எழுத்துக்களை நீக்கி விட்டு தனித் தமிழில் எழுதுகிறோம் என்று ‘ராசாசி’ என எழுதி வைத்துள்ளனர்!

š இப்பதிவை மின்னஞ்சலிட