Thursday, November 17, 2005

தாக்குடேக்களும் பொம்மலாட்டமும்


வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும்.

இடுக்கண் வருங்கால் நகுக, சரிதான்... அதுக்காக வீட்டில் இரு தாக்கு டே க்கள் இருப்பதை கூட உணராமல் பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு தாக்கரேவை பார்த்து சிரிப்பது....

சரி, காணத்தவறாதீர்கள்:: "கற்பெனப்படுவது யாதெனில்" - நவீன பொம்மலாட்டம்... தினமும் இரு காட்சிகள். அனுமதி இலவசம்.

Live :: உங்கள் அருகாமையில் உள்ள நீதிமன்றங்களில்...
Highlights :: இரவு 8:00 மணி சன் நியூஸ் நிகழ்ச்சியில்...

உங்கள் ஊர் பட்டியலில் இல்லையா? கவலை வேண்டாம். புதுப்புது யுக்திகளும், கிறீச்சிடும் சவுண்டு எஃபக்ட்ஸும், live animalsம் நிறைந்த இந்த அரிய நிகழ்ச்சியை இலவசமாக கண்டு களிக்க அணுக வேண்டிய முகவரி : குட்டி செயலாளர், கற்பு காப்பாத்தும் கட்சி (அ) அருகாமையிலுள்ள நீதிமன்றம்...

105 comments:

  1. //கற்பு காப்பாத்தும் கட்சி //
    :))

    ReplyDelete
  2. andha pacha selai akka jollyaa sirichutu irukaanga.

    thamizachigallam romba kovama irukaradha pathirikail;e ezhudaranga.

    enge pudicheenga indha photo.

    ReplyDelete
  3. பார்த்துட்டே இருங்க... இந்த பாசிஸ்டுங்க எப்படி தேர்தல்ல மண்ண கவ்வபோறாங்கன்னு.

    நான் பார்த்த வரைக்கும் குஷ்பு மேல இன்னும் பரிதாபம்தான் வந்திருக்கு. அந்தம்மா மேல அநியாயமா கேஸ் போட்டு இவங்கதான் பேர கெடுத்துக்கிறாங்க.

    அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு... அந்த சிரிப்பு அழுகையாக மறைந்திடும் தேர்தல் முடிவு வரும்போது...

    :-))))))))


    (அதுக்கப்புறம் வழக்கம்போல, பார்ப்பனிய மீடியா வெற்றி.. தமிழர்கள் திருந்தமாட்டார்கள் என்று ஒரு பாட்டம் மூக்கைச் சிந்திவிட்டு வழக்கம்போல அடுத்த தேர்தல் நோக்கி காய்கள் பழங்கள் நகர்த்தப்படும்..)

    ReplyDelete
  4. முகமூடி,

    நன்கு யோசித்துப் பாருங்கள்.

    1)கற்புள்ள பெண்தான் வேண்டும் என்று எந்த படித்த ஆணும் கேட்கமாட்டான் - குஸ்பு.

    நீங்கள் படித்தவர்தானே? உங்கள் மனைவி கற்பிழந்தவர் என்று தெரிந்தால் ஏற்றுக் கொள்வீர்களா சுந்தர்.சி அவர்களைப்போல்?

    2)கல்யாணத்துக்கு முன்பு பெண்கள் உடலுறவு கொள்ளலாம் - குஸ்பூ.

    உங்கள் சகோதரியோ அல்லது உங்கள் மனைவியோ அல்லது உங்கள் மகளோ கல்யாணத்துக்கு முன்பு உடலுறவு கொள்வதை வரவேற்கிறீர்களா?

    இதற்கு முதலில் பதில் சொல்லுங்கள். பின்னர் நான் திருமாவளவன், இராமதாசு போன்றவர்களின் போராட்டம் பற்றி உங்களுக்கு விளக்கம் அளிக்கிறேன்.

    ReplyDelete
  5. சுகாசினி அவர்கள் ஒட்டுமொத்த தமிழர் சார்பாக மன்னிப்பு கேட்கிறார். ஒட்டுமொத்த தமிழரின் பிரதிநிதியா அவர்?? யார் தேர்ந்தெடுத்தது அவரை? அவர் மன்னிப்பு கேட்க நினைத்தால் தான் மட்டும் கேட்க வேண்டியதுதானே?

    சானியா மிர்சாவும் இப்போது புதிதாக குஸ்புவுக்கு ஆதரவு அளித்திருக்கிறார். இளம்பெண்கள் கற்பினை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாதாம். பாதுகாப்பாக உடலுறவு கொள்ளுமாறு ஆலோசனை வழங்கி இருக்கிறார்.

    கற்பு என்றால் இனிவரும் காலங்களில் கிலோ என்ன விலைதான்!!!!!!!

    ReplyDelete
  6. எனக்கு ஒன்று புரியவில்லை.

    குஸ்பூ கற்பு வேண்டாம் என்கிறார். எல்லோரையும் பாதுகாபாக உடலுறவு கொள்ளச் சொல்கிறார்.

    சுகாசினி அவருக்கு ஆதரவு அளிக்கிறார்.

    ஆனால் ஒட்டுமொத்த பிராமணர்களும் குஸ்புவின் கருத்தையும் சுகாசினியின் கருத்தையும் ஆதரிக்கிறார்கள். வேறு எந்த ஜாதியினரும் இவர்கள் இருவரையும் ஆதரிப்பதாகத் தெரியவில்லை. எனவே பாதுகாப்பாக உறை போட்டு கல்யாணத்துக்கு முன்பாக உடலுறவு கொள்வதற்கும் பார்ப்பணர்களுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

    என்ன நான் சொல்வது சரிதானே?

    ReplyDelete
  7. கவுண்டபெல், கோல்ட்பெல், சுந்தர... ஜோக்கர வெடிவேலு போன்றவர்கள் பொய்களில் நீந்தி முக்குளிப்பவர்கள் என்பதால்தான் அவர்கள் ஜோக்கர்கள் என்றே அறியப்படுகிறார்கள்.

    //2)கல்யாணத்துக்கு முன்பு பெண்கள் உடலுறவு கொள்ளலாம் - குஸ்பூ.//

    எங்கே சொல்லியிருக்கிறார். காட்டமுடியுமா?

    //ஒட்டுமொத்த பிராமணர்களும் குஸ்புவின் கருத்தையும் சுகாசினியின் கருத்தையும் ஆதரிக்கிறார்கள். வேறு எந்த ஜாதியினரும் இவர்கள் இருவரையும் ஆதரிப்பதாகத் தெரியவில்லை. //

    சானியாவும் குஸ்புவும் பிராம்மணர்கள் என்று எனக்கு இப்போதுதான் தெரிகிறது...

    ReplyDelete
  8. இ.டு-யில் வந்த கருத்துக்கணிப்பு எத்தனை பேருக்கு முதலில் தெரியும்,எத்தனை பேருக்கும் இந்த போராட்டங்களுக்கு பிறகு தெரியும் ? இலவச விளம்பரம் தேடிக்கொண்டது மட்டுமில்லாமல், இந்த கருத்தை விளம்பரம் செய்தது தான் இவர்கள் பண்ணிய காரியம்.. :-))))

    இந்த பதிவில் சொன்ன கருத்தைப்பற்றி இல்லை, அதை எதிர்த்த விதம் பற்றிதான்...

    உருப்படியா செய்ய வேண்டிய விஷயங்கள் பல இருக்க ஏன்யா.. இந்த வெட்டி வேலையெல்லாம்....

    ReplyDelete
  9. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
    ஐந்தும் அகத்தே நகும்.

    என்ற குறளை இங்கே எழுதி மருத்துவர் இராமதாசு, தொல்.திருமா போன்ற தனி மனித ஒழுக்கம் மிக்க தலைவர்களை தொடர்ந்து அவர்களின் தனி மனித ஒழுக்கத்தின் மீது சேறு வாரி இறைப்பது (உடனே முகமூடி நான் எங்கே அப்படி சொன்னேன் என்று இப்படி சொன்னேன் என கூறுவார் எனக்கெல்லாம் இப்படி சுற்றி வளைத்து தந்திரமாக பேசவராது) உங்களுக்கு நியாயம் போலும்....

    தன்னெஞ் அறிவது பொய்யற்க பொய்த்தபின்
    தன்னெஞ்சே தன்னைச் சுடும்

    ReplyDelete
  10. சூடான பஜ்ஜி....!

    பஜ்ஜி

    தேவையான பொருட்கள்:-

    கடலைமாவு - 2 கப்
    மிளகாய்தூள் - 1 மேஜைகரண்டி
    சோடாஉப்பு - சிறிது
    பெருங்காயத்தூள் - சிறிது
    கலர்பொடி - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    கத்திரிக்காய் - 1
    பெரிய வெங்காயம் -1
    வாழைக்காய் - 1
    தண்ணீர் - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :-


    1. கடலைமாவு, மிளகாய்தூள், சோடாஉப்பு, பெருங்காயத்தூள்,கலர்பொடி,உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து தோசைமாவுக்கு கரைப்பது போல் கரைத்துக் கொள்ளவும்.

    2. பிறகு உங்களுக்கு பிடித்தமான காய்கறிகளை மிகவும் மெலிதாக வெட்டி, பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்தவுடன் நறுக்கிய காயை மாவில் தோய்த்து எண்ணெயில் போடவும்.

    3. பஜ்ஜி உப்பி வந்தவுடன் எடுத்து விருப்பமான சட்னியுடன் பரிமாற வேண்டியதுதான். கரகர மொறு மொறு பஜ்ஜி தயார்...!

    ReplyDelete
  11. கவுண்டபெல், உங்களுக்கு பதில் சொல்வது பிரயோசனமானதா என்று தெரியவில்லை... இருந்தாலும் ஊதற சங்கை ஊதறேன்...

    முதலில் கற்பு எனில் என்ன என்று நினைக்கிறீர்கள்? கற்பின் உண்மையான விளக்கம் உங்களுக்கு தெரியாது என்பதாக நான் நம்புகிறேன். நீங்கள் பெண் கணவரை தவிர்த்த மற்றவருடன் கொள்ளும் உறவை கற்பிழத்தலாக சொல்கிறீர்கள் என்ற எண்ணத்தில் இதை பார்ப்போம்...

    என்னை பொறுத்த வரை பெரியவர்கள் பேசி ஏற்பாடு செய்யும் திருமணங்களில், கல்யாணத்துக்கு முன்பு பேசி பழகி ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ள சந்தர்ப்பம் தராத குடும்பங்களில், முன் பின் அறியாத, ஓரிரு முறை சும்மா பார்த்து + காலையில் தாலி கட்டும் போது மட்டுமே நெருக்கத்தில் பார்த்த ஒரு ஆடவனுடன் இரவில் நடக்கும் முதலிரவு என்ற சடங்கே கற்பழிப்புத்தான்... என்ன இது அங்கீகாரத்தோடு நடக்கும் நிகழ்வு, அவ்வளவுதான்... கற்பு என்பது மனசு சம்பந்தப்பட்டது. கற்பு என்பது ஒரு நம்பிக்கை. உடல் என்பது இங்கே இரண்டாம் பட்சம்தான்...

    7G ரெயின்போ காலனி என்று ஒரு படம் வந்தது. கலாச்சார குண்டாந்தடிகள் நிறைந்த நம் நாட்டில் அந்த படத்தை ச்சீ, த்தூ என்றெல்லாம் விமர்சனம் செய்தார்கள். கதாநாயகி எப்படி கதாநாயகனை படுக்கைக்கு அழைக்கலாம் என்று ஒரே திட்டு... அந்த நிதர்சனங்களை நான் பார்த்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன்... காதலிக்கும் போது சிறுபான்மையினர் வேண்டுமானால் பொழுதுபோக்கிற்காக காதலிப்பர். ஆனால் பெரும்பாலானோர் ஒரு நம்பிக்கையின் பேரிலேயே காதலிக்கின்றார்... அந்த நம்பிக்கை மிகவும் ஆழமாக ஆகும்போது, உடல் இரண்டாம் பட்சமாக ஆகும். அதுதான் அந்த படத்தில் காண்பிக்கப்பட்டது... நீங்கள் நினைப்பது போல் பொழுதுபோக்கிற்காகவும், உடலுறவு ஜாலி சமாச்சாரம் என்ற எண்ணத்திலும் கல்யாணத்துக்கு முன் எல்லோரும் அதில் ஈடுபடுவதில்லை... சிறுபான்மையினர் மாறுபடலாம்... ஆனால் பெரும்பான்மை பற்றிய பேச்சுதான் இங்கே..

    // உங்கள் மனைவி கற்பிழந்தவர் என்று தெரிந்தால் ஏற்றுக் கொள்வீர்களா //

    எப்படி தெரிந்துகொள்கிறீர்கள்... பெண் பார்க்க போகும்போது கற்போடு இருக்கிறாரா இல்லையா என்று கேட்பீர்களா? நீங்கள் கல்யாணம் ஆனவெறெனில் உங்கள் மனைவி கற்போடுதான் இருந்தார் என்பது உங்களுக்கு நிச்சயம் தெரியுமா? மகவுக்கு தந்தை யார் என்பது பெண்ணுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் அல்லவா? என்னை பொருத்த வரை மனைவியின் கல்யாணத்துக்கு முந்தைய வாழ்க்கை தேவையில்லாத விஷயம்... மனைவி என்பவள் ஒரு பண்டமல்ல.. நீங்கள் வாங்கும் போது தட்டி பார்த்து வாங்க... அவளை அவளுக்காக இனிவரும் காலங்களில் வாழும் வாழ்க்கைக்காக ஏற்றுக்கொள்கிறீர்கள்... அவ்வளவுதான்..

    // உங்கள் சகோதரியோ அல்லது உங்கள் மனைவியோ அல்லது உங்கள் மகளோ கல்யாணத்துக்கு முன்பு உடலுறவு கொள்வதை வரவேற்கிறீர்களா? //
    என் சகோதரி/மனைவி/மகள் மட்டுமல்ல உங்கள் அல்லது யாராயிருப்பினும் அவர்களது சகோதரி/மனைவி/மகள் என்பவர் கல்யாணத்துக்கு முன்னர் உடலுறவு கொள்வதென்பது அவர்கள் மட்டுமே முடிவெடுக்க வேண்டிய விஷயம். இதில் அங்கீகாரம் தர யாருக்கு யார் அதிகாரம் கொடுத்தது... வரவேற்கிறீர்களா என்று என்ன கேள்வியா இது... என் மகள் கல்யாணத்துக்கு முன் உடலுறவு கொள்வதாக இருந்து அதை பற்றி ஆலோசனை பெற நினைத்தால் கூச்சம் காரணமாக என்னிடம் பேச தயங்கினாலும் என் மனைவியிடம் பேசுவதற்கு அவளுக்கு தயக்கமோ/கூச்சமோ இல்லாமல் இருக்கும் நிலையில்தான் இருக்கும் என் வீட்டு சூழ்நிலை... அந்த சூழ்நிலையில் தான் அனைவரில் வீடும் இருக்க வேண்டும்... உங்கள் குடும்பம், வாழ்க்கையை பற்றி சூழலை நீங்கள் உருவாக்குங்கள்.. எந்த காரணத்தை கொண்டும் மற்றவரிடம் அந்த பொறுப்பை கொடுக்காதீர்கள்...

    ***

    மற்றபடி குஷ்பு என்ன சொன்னார் என்றே தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்... அவரின் இந்தியா டுடே பேட்டியை நிதானமாக படியுங்கள்.. அதில் அவர் தவறாக சொல்லிவிட்டார் என்று எதையாவது நீங்கள் சுட்டினால் நிதானமாக விவாதிக்கலாம்... அதில் ஒரு ப்ரச்னையும் இல்லை.. தினத்தந்தி பேட்டியில் "இன்று தமிழ்நாட்டில் கற்போடு எத்தனை பேர் இருக்கிறார்கள்" என்று அவர் சொன்னதுதான் (அவர் அப்படி சொல்லவேயில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்) ப்ரச்னை என்பது சிலர் வாதம்... அது ஒரு பேச்சிற்கு சொன்னதாகவே நான் நினைக்கிறேன்... "இந்த காலத்து பசங்க எவன் பெரியவங்க பேச்ச மதிக்கிறான்" என்று பெரியவர்கள் சொல்வதில்லை, அதைப்போல...

    ***

    // திருமாவளவன், இராமதாசு போன்றவர்களின் போராட்டம் பற்றி உங்களுக்கு விளக்கம் அளிக்கிறேன் // நன்றி. விளக்கம் தேவையில்லை...
    திருமாவுக்கு என்ன ஆசையோ... என்ன ப்ரச்னையோ... அண்ணனோடு கூடிக்குலாவுகிறார். எதிர்காலம் அவருக்கு புரியவைக்கும் எல்லா விஷயத்தையும்... இராமதாஸ் என்பவர் ஒரு ஜாதிக்காரர்களுக்கு வேண்டுமானால் தெய்வமாக இருக்கலாம்.. ஆனால் அவரால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு விஷச்செடி, இன்று நன்றாக வேர் விட்டு வளர்ந்திருக்கிறது... தமிழ்நாட்டின் நோய்.

    இன்று அதை செய்கிறார், இதை செய்கிறார் என்று சொல்லலாம்... ஆனால் வன்முறையை ஒரு கலாச்சாரமாகவே வளர்த்ததுதான் அவரின் வெற்றி... தேவையானதை வன்முறையின் மூலம்தான் சாதிக்க முடியும் என்று ஒரு அர்த்தத்தை கொடுத்து அதை பின்பற்றும் ஒரு கூட்டத்தையும் உருவாக்கியவர். பஸ் எரிப்பதும் மர்ம் வெட்டுவதும் தர்மபுரி மாவட்டத்தின் கலாச்சாரம்... அன்னை சத்யா கார்ப்பரேஷன் என்று தர்மபுரி பஸ் போக்குவரத்து தலைமையகத்தின் வெளியே "பஸ் எரிப்பது சட்ட விரோதம், அது உங்கள் வரிப்பணம், அதற்கு என்ன தண்டனை" என்றெல்லாம் எழுதி ஒரு பெரிய போர்டு பல வருடம் இருந்தது... இது போன்ற போர்டு வேறு நாடாயிருந்தால் விநோதமான ஒரு விஷயம்... அப்பொழுது அய்யா சும்மா ஒரு அடையாளத்துக்காக கைது செய்யப்பட்டால் போதும் நாலு பள் எரிப்பு, 10 பஸ் கண்ணாடி உடைப்பு என்று ஆரம்பித்தது இன்று மூன்று மனிதர்களை எரித்தது வரை வளர்ந்திருக்கிறது... (அதை செய்தது அதிமுக எனும் ஒரு திராவிட இயக்கம், ஆனால் அதை தர்மபுரியில் கலாச்சாரமாக்கியது அய்யா) தலைமை சொன்னதற்காக ஏர்போர்ட்டில் பாவாடையை தூக்கி காட்டி போராட்டம் நடத்திய மகளிர் அணிக்கு எதற்கு தூக்குகிறோம், என்னத்தை தூக்குகிறோம் என்பது முக்கியமல்ல... தலைமை என்ன சொல்கிறது என்பதுதான் முக்கியம்... கற்பாவது கலாச்சாரமாவது, இன்று தனிப்பெரும் சக்தியாக முன்னேற நடக்கிறது இந்த போராட்டங்கள்... கூலியில்லாத குண்டாந்தடிகளாக தொண்டர்கள்... தாவூத் இப்ராகிம் எப்படி பாலிவுட்டை ஆட்டிப்படைக்கிறானோ அது போன்ற ஒரு முயற்சி கோலிவுட்டில் அரங்கேறுகிறதோ என்பதுதான் நமது சந்தேகம்.

    ReplyDelete
  12. வெடிவேலு

    போஸ்டர் என்னா, பட்டம் என்னா, கொடி என்னா, தோரணம் என்னான்னு இதுக்கு முன்னாடி "தமிழர்களின் பிரதிநிதி" கோஷம் எத்தனை தடவை கேட்டிருக்கு... அப்பல்லாம் வராத ரோஷம் இப்ப எதுக்கய்யா வருது...

    "கற்பு என்றால் இனிவரும் காலங்களில் கிலோ என்ன விலைதான்" ஆமாம் இருக்கற கற்பை பத்திரமா பிடிச்சி வச்சிக்கவும்....

    ***

    விவேக்கு, இன்னும் போதை தெளியலையா... அதுக்குள்ள எதுக்கு அய்யம்பேட்ட வேலை... கீழ அனானி பஜ்ஜி செய்யறது எப்படின்னு சொல்லியிருக்காரு... அதை செஞ்சி சாப்பிட்டுட்டு க்வார்ட்டர் அடிச்சிட்டு போராட்டத்துக்கு கிளம்பவும்...

    ReplyDelete
  13. முகமூடி, உங்களிடம் இருந்து இப்படி ஒரு பதிலை வரவழைத்த கவுண்டபெல்-ல்லுக்கு நன்றி.

    ReplyDelete
  14. // மருத்துவர் இராமதாசு, தொல்.திருமா போன்ற தனி மனித ஒழுக்கம் மிக்க தலைவர்களை //

    எங்கே போனாலும் இதை ஒரு பிரச்சாரமாக சொல்லிவருகிறார் நண்பர் குழலி...

    மறைந்த திரு. வரதராஜ முதலியார், மறைந்த திரு. அயோத்தியாக்குப்பம் வீரமணி, திரு. ராமதாஸ், இலக்கியத்தின் சிறந்த சிவபக்தனான திரு. இராவணன், திரு. திருமா, திரு. வைகோ, செல்வி. ஜெயலலிதா, திரு. கருணாநிதி, நான் எல்லாரும் தனி மனித ஒழுக்கம் மிக்கவர்கள்தான். அதுல எனக்கு எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை என்பதை இங்கே ஆணித்தரமாக சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்....

    இங்கே ப்ரச்னை அவர்கள் தண்ணி அடிக்கிறார்களா புகை பிடிக்கிறார்களா, கூடாசகவாசமா என்பதல்ல... அது அவர்களின் சொந்த விஷயம்... இவர்கள் சமுதாயத்துக்கு ஏற்படுத்தும் நோய்தான் அது எந்த ஒரு தனிமனித ஒழுக்கத்தை விடவும் முக்கியம்.

    இன்னும் சொல்லப்போனால் எல்லாக்கட்சிகளுக்குமே ஒரு கொள்கையும் கிடையாது... எல்லாருக்கும் பதவி மீதுதான் குறி. அதை பற்றி நமக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை.. ஆனால் அதை அடையும் வழிமுறை பற்றித்தான் இங்கு கேள்வியே...

    ReplyDelete
  15. முகமூடியாரோட பதில் அருமை! நடக்குற இந்தக் கூத்தில உண்மை என்னன்னு தெரியாமலேயே வரிஞ்சு கட்டிக்கினு நிக்கும் பல கோமாளிகளுக்கு இப்பவாவது நிதானமா யோசிக்கத் தோணுச்சுனா நல்லதுதான்! ;-)

    ReplyDelete
  16. //எங்கே போனாலும் இதை ஒரு பிரச்சாரமாக சொல்லிவருகிறார் நண்பர் குழலி...
    //
    அசிங்கமான பொய் பிரச்சாரங்களின் நடுவில் உண்மைகளுக்கும் பிரச்சாரம் தேவையிருக்கின்றது...

    ReplyDelete
  17. முகமூடி,

    போட்டோல கைகள் இணையலை! பொத்திய கைகளுக்குள் விரலைப்பிடிச்சி சீட்டுபேரம் நடக்கறாப்படிதான் தெரியுது! பேரம் படியாமப்போகட்டும்! அன்னைக்கு இருக்கு இதைவிட தமாசு!

    ReplyDelete
  18. //உங்கள் மனைவி கற்பிழந்தவர் என்று தெரிந்தால் ஏற்றுக் கொள்வீர்களா சுந்தர்.சி அவர்களைப்போல்?

    Why not?

    ReplyDelete
  19. //கவுண்டபெல், உங்களுக்கு பதில் சொல்வது பிரயோசனமானதா என்று தெரியவில்லை... இருந்தாலும் ஊதற சங்கை ஊதறேன்...//

    முகமூடி, எனக்குப் பிரயோஜனமாக வேண்டாம். கற்பைப்பற்றி இன்றளவுக்கும் பேசிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு ஜனங்களுக்கு பயன்பட்டால் அதுவே போதும். எங்கே கிளப்பி விடுங்கள்..

    //முதலில் கற்பு எனில் என்ன என்று நினைக்கிறீர்கள்?//

    கற்பெனப்படுவது யாதெனின் யாதொன்றும்
    நுழைக்கபடாத புழை!

    அப்படின்னு குறள் எழுதுவேன்னு பாத்தீங்களா? அதுதான் இல்லை. சரிய்யா அப்ப உடலுறவு கற்பில் சேத்தி இல்ல.. மனசுதான் சுத்தமா இருக்கனும். எப்ப ஒருத்தி கல்யாணத்துக்கு முன்பு உடலுறவு கொள்கிறாளோ அவள் தன் விருப்பப்படி முழு மனதோடுதானே உடலுறவு கொள்கிறாள்? அப்போ அவள் மனமும் ஒத்துழைத்துத்தானே உடலுறவு கொள்கிறாள்? அதுதானே அய்யா கற்பு.

    //கற்பின் உண்மையான விளக்கம் உங்களுக்கு தெரியாது என்பதாக நான் நம்புகிறேன்.//

    ஆமாமுங்க. கொஞ்சம் கற்பு காட்றீங்களா?

    //நீங்கள் பெண் கணவரை தவிர்த்த மற்றவருடன் கொள்ளும் உறவை கற்பிழத்தலாக சொல்கிறீர்கள் என்ற எண்ணத்தில் இதை பார்ப்போம்...//

    அப்படி இல்லீங்கய்யா. கணவருடனேகூட மனம் ஒப்பாத நிலையில் உடலுறவு கொண்டால் அதுவும் கற்பழிப்புதான்னு சட்டம் ஜொள்ளுதுங்க.


    //என்னை பொறுத்த வரை பெரியவர்கள் பேசி ஏற்பாடு செய்யும் திருமணங்களில், கல்யாணத்துக்கு முன்பு பேசி பழகி ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ள சந்தர்ப்பம் தராத குடும்பங்களில், முன் பின் அறியாத, ஓரிரு முறை சும்மா பார்த்து + காலையில் தாலி கட்டும் போது மட்டுமே நெருக்கத்தில் பார்த்த ஒரு ஆடவனுடன் இரவில் நடக்கும் முதலிரவு என்ற சடங்கே கற்பழிப்புத்தான்...//

    நிச்சயதாம்பூலம் முடிந்தபின்னர்தான் நிறைய குடும்பங்களில் பையனும் பெண்ணும் ஈமெயிலு, லெட்டரு, போனு, பேக்சு பண்ணி தங்களைப் பற்றி அறிந்து கொள்கிறார்கள். எனவே முதலிரவில் என்ன பிரச்னை கண்டீர்கள்? அது எப்படி கற்பழிப்பாகும்?

    ஆனா கல்யாணத்துக்கு முன்பே சும்மா பேசிப் பாக்குறோம்கிற போர்வையில் வெளில தள்ளிட்டு போயி நைசா பேசி உறவு கொள்கிறார்கள். இன்னும் சிலர் டேட்டிங் என்ற போர்வையில் தங்களின் இச்சையை தணித்துக் கொள்கிறார்கள். இதுவெல்லாம் கற்பைப் பாதுகாக்கும் ஐடியாங்களா?

    //என்ன இது அங்கீகாரத்தோடு நடக்கும் நிகழ்வு, அவ்வளவுதான்... கற்பு என்பது மனசு சம்பந்தப்பட்டது. கற்பு என்பது ஒரு நம்பிக்கை. உடல் என்பது இங்கே இரண்டாம் பட்சம்தான்...//

    50ரூபாய்க்கு பாரிசில் படுக்குற விலைப் பெண்ணும் தன் முழு மனசோடதானுங்க உடலுறவு கொள்கிறால். அப்போ அதுவும் கற்போட உள்ள பெண்ணாங்க?

    //7G ரெயின்போ காலனி என்று ஒரு படம் வந்தது. கலாச்சார குண்டாந்தடிகள் நிறைந்த நம் நாட்டில் அந்த படத்தை ச்சீ, த்தூ என்றெல்லாம் விமர்சனம் செய்தார்கள். கதாநாயகி எப்படி கதாநாயகனை படுக்கைக்கு அழைக்கலாம் என்று ஒரே திட்டு...//

    பின்னே இல்லீங்களா? ஆச்சாரமான குடும்பத்துல பொறந்துட்டு இப்புடி ஒரு கேள்விய கேக்குறீகளே? காம ஆசையே வந்தாலும் அது கணவனே இருந்தாலும் படுக்கைக்கு முதலில் அழைப்பது பெண்ணாக இருக்கமாட்டார். ஆண் அங்கே அழைக்க பெண் அங்கே நாணிக்கோணி கடைசியில் ஒத்துக்குவாங்க. அதாங்க தமிழ்ப் பண்பாடு! படம்னா எப்படி வேனா எடுக்கலாமுங்களா?

    //அந்த நிதர்சனங்களை நான் பார்த்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன்... காதலிக்கும் போது சிறுபான்மையினர் வேண்டுமானால் பொழுதுபோக்கிற்காக காதலிப்பர்.//

    இந்த சிறுபான்மை என்பது சாதிவாரியா இல்லீங்களே?

    //ஆனால் பெரும்பாலானோர் ஒரு நம்பிக்கையின் பேரிலேயே காதலிக்கின்றார்... அந்த நம்பிக்கை மிகவும் ஆழமாக ஆகும்போது, உடல் இரண்டாம் பட்சமாக ஆகும். அதுதான் அந்த படத்தில் காண்பிக்கப்பட்டது...//

    உடல் ரெண்டாம் பட்சம் என்பதற்காக கல்யாணத்துக்கு முன்பே உடலுறவு கொள்ளலாமாங்க?

    உங்களுக்கு இந்த நேரத்தில் ஒரு உண்மையை நான் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

    நானும் என்னவளும் உயிருக்குயிராக நகமும் சதையுமாக காதலித்தோம். இருவரும் நன்கு படித்தவர்கள். பண்புள்ளவர்கள். நிறைய சம்பாதிப்பவர்கள். கொளத்து தண்ணிய வெள்ளமா வந்து கொண்டு போகப் போகுதுன்னு தொடாம காத்திருந்தேன். தொடனும்கிற விருப்பம் எனக்கோ அவருக்கோ என்றுமே இருந்தது இல்லை. இத்தனைக்கும் தனியாக பல சூழ்நிலைகளில் ஒன்றாக இருந்திருக்கிறோம். தவறு செய்ய நான் நினைத்ததில்லை. அவரும் நினைத்ததில்லை. எந்த வித காரணிகளும் எங்களைத் தூண்டவில்லை. எங்களின் கற்பு அங்கே தெய்வீகமாக மதிக்கப் பட்டது. திருமணத்துக்காக காத்திருந்தது. இதுதாங்க உண்மையான காதல்.

    கல்யாணத்துக்கு முன்பே சோரம்போனது மட்டுமின்றி மற்றவர்களையும் போகச் சொல்லுதல்தான் உண்மையான அறிவுரையா?

    உடல் ரெண்டாம் பட்சம்.. பின் எதற்கு அதற்கு நொண்டி நொடமுள்ள பெண்ணைக் காதலிக்க மறுக்கிறீர்கள்?

    //நீங்கள் நினைப்பது போல் பொழுதுபோக்கிற்காகவும், உடலுறவு ஜாலி சமாச்சாரம் என்ற எண்ணத்திலும் கல்யாணத்துக்கு முன் எல்லோரும் அதில் ஈடுபடுவதில்லை...//

    அப்ப குஸ்பூ கல்யாணத்துக்கு முன்பு ஊடுபடலைங்களா?

    //சிறுபான்மையினர் மாறுபடலாம்... ஆனால் பெரும்பான்மை பற்றிய பேச்சுதான் இங்கே..//

    பெரும்பான்மையினர் கல்யாணத்துக்கு முன்பு சோரம் போக விரும்புவதில்லை!

    //பெண் பார்க்க போகும்போது கற்போடு இருக்கிறாரா இல்லையா என்று கேட்பீர்களா?//

    மொசப் புடிக்கிற நாய மூஞ்ச பாத்தா தெரியாதுங்களா?

    இப்ப சைனாவில் அதுக்காக ஒரு பக்கம் டெஸ்ட் பன்னி அப்புறம் கட்டிக்கிறாங்க.

    இன்னொருபுறம் கன்னிச் சவ்வு கிழைஞ்சவுகளுக்கு தைச்சு விடுறாகளாம்!!!

    //நீங்கள் கல்யாணம் ஆனவெறெனில் உங்கள் மனைவி கற்போடுதான் இருந்தார் என்பது உங்களுக்கு நிச்சயம் தெரியுமா?//

    சத்தியமாக முதலிரவில் தெரிந்துவிடும் நண்பா!

    //மகவுக்கு தந்தை யார் என்பது பெண்ணுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் அல்லவா?//

    இது உண்மை. அதற்காக உடல் சம்பந்தப்பட்டது இல்லை என்பதற்காக ஊர் மேயவா சொல்ல முடியும்?

    //என்னை பொருத்த வரை மனைவியின் கல்யாணத்துக்கு முந்தைய வாழ்க்கை தேவையில்லாத விஷயம்...//

    தேவை இல்லைதாங்க. யாரோ ஒருத்தன் வந்து சொல்கிறார், கல்யாணத்துக்கு முன்பு உங்கள் மனைவியைப் போட்டதாக என்று வைத்துக் கொள்வோம்.

    அதனைக் கொஞ்சம் கூட ஆராய முற்படாதவன் மனிதனே அல்லன்.

    கல்யாணத்துக்கு பின்பும் அவள் அதே ஆணோடு புணர மாட்டாள் என்பது என்ன நிச்சயம்?


    //மனைவி என்பவள் ஒரு பண்டமல்ல.. நீங்கள் வாங்கும் போது தட்டி பார்த்து வாங்க... அவளை அவளுக்காக இனிவரும் காலங்களில் வாழும் வாழ்க்கைக்காக ஏற்றுக்கொள்கிறீர்கள்... அவ்வளவுதான்..//

    உண்மை. ஆனால் அவளின் கடந்த காலம் அறிந்திருக்க விரும்புவதில் தவறொன்றும் இல்லைதானே?!

    தெரியாமல் சோரம்போவது(கற்பழிப்பு) பரவாயில்லை. ஆனால் தெரிந்தே தவறு செய்து விட்டு வந்தவளை ஏற்றுக்கொள்ள எப்படி மனம் வரும்?

    //என் சகோதரி/மனைவி/மகள் மட்டுமல்ல உங்கள் அல்லது யாராயிருப்பினும் அவர்களது சகோதரி/மனைவி/மகள் என்பவர் கல்யாணத்துக்கு முன்னர் உடலுறவு கொள்வதென்பது அவர்கள் மட்டுமே முடிவெடுக்க வேண்டிய விஷயம்.//

    அப்படியா? உண்மையா? 14 அல்லது 15 வயதில் எல்லாம் எனக்கு காம உணர்வு அதிகம் ஏற்பட்டது. அப்போ எப்போது ஆசை ஏற்பட்டாலும் பெற்றோரிடம் கேட்டுட்டு அல்லது கேக்காமலே போகலாங்களா? உங்கள் மகள் 15 வயதில் உறவு கொள்ள ஆசைப் பட்டால் கண்டிப்பாக அவர்கள்ளை சுயமாக செயல்பட அனுமதிப்பீர்களா? கோபப்படாமல் பதில் சொல்லுங்கள்.

    //இதில் அங்கீகாரம் தர யாருக்கு யார் அதிகாரம் கொடுத்தது... வரவேற்கிறீர்களா என்று என்ன கேள்வியா இது... என் மகள் கல்யாணத்துக்கு முன் உடலுறவு கொள்வதாக இருந்து அதை பற்றி ஆலோசனை பெற நினைத்தால் கூச்சம் காரணமாக என்னிடம் பேச தயங்கினாலும் என் மனைவியிடம் பேசுவதற்கு அவளுக்கு தயக்கமோ/கூச்சமோ இல்லாமல் இருக்கும் நிலையில்தான் இருக்கும் என் வீட்டு சூழ்நிலை...//

    ஆக கூச்சம் இல்லை என்றால் உடலுறவு கொள்ளலாம் என்று சொல்ல வருகிறீர்கள். அப்படித்தானே? அந்த இளம்பெண் திருமணத்துக்கு முன்பே தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம்? உங்களால்தானய்யா நிறைய பெண்கள் வயிற்றில் பிள்ளை வாங்கி வந்து நிற்கின்றனர்!!!



    //அந்த சூழ்நிலையில் தான் அனைவரில் வீடும் இருக்க வேண்டும்... உங்கள் குடும்பம், வாழ்க்கையை பற்றி சூழலை நீங்கள் உருவாக்குங்கள்.. எந்த காரணத்தை கொண்டும் மற்றவரிடம் அந்த பொறுப்பை கொடுக்காதீர்கள்...//

    குடும்பம் இருப்பதெல்லாம் சரி. பிள்ளைகளை கல்யாணத்துக்கு முன்பு உடலுறவு கொள்ளச் சொல்லும் சூழ்நிலையில் எல்லாக் குடும்பங்களும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

    ***

    //மற்றபடி குஷ்பு என்ன சொன்னார் என்றே தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்... //

    நாங்க படிக்கவே இல்லாமதான் போராடுறோம்னு எப்படி முடிவு செய்தீங்க? எல்லா மொழியிலும் படித்து முடிச்சிட்டோமுங்க. அதனாலதான் பொங்கி எழுகிறோம்.

    //அவரின் இந்தியா டுடே பேட்டியை நிதானமாக படியுங்கள்.. அதில் அவர் தவறாக சொல்லிவிட்டார் என்று எதையாவது நீங்கள் சுட்டினால் நிதானமாக விவாதிக்கலாம்...//

    எத்தனை வலைப்பதிவுகளில் எத்தனை பேர் எழுதிய பின்னரும் இன்னும் என்னங்க உங்களுக்கு எழுத வேண்டும்?

    1)கல்யாணத்துக்கு முன்பு உடலுறவு கொள்ளலாம். ஆனால் பாதுகாப்பாக எய்ட்ஸ், பால்வினை நோய்கள் தொற்றாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    2)கற்புள்ள பெண்தான் வேண்டும் என்று எந்த படித்த ஆணும் கேட்க மாட்டான்.

    இதெல்லாம் ஆரு சொன்னது?


    // தினத்தந்தி பேட்டியில் "இன்று தமிழ்நாட்டில் கற்போடு எத்தனை பேர் இருக்கிறார்கள்" என்று அவர் சொன்னதுதான் (அவர் அப்படி சொல்லவேயில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்)//

    ஊரே ஒன்னு கூடுனா எதுனா சொல்லி மன்னிப்பு கேட்டுதாங்க ஆகனும். சொன்னதை இல்லேன்னு எப்படி சொல்ல முடியும்?


    //ப்ரச்னை என்பது சிலர் வாதம்... அது ஒரு பேச்சிற்கு சொன்னதாகவே நான் நினைக்கிறேன்... "இந்த காலத்து பசங்க எவன் பெரியவங்க பேச்ச மதிக்கிறான்" என்று பெரியவர்கள் சொல்வதில்லை, அதைப்போல...//

    மதிப்பும் கற்பும் ஒன்னாங்க? இல்ல தெரியாமதான் கேக்குறேன்.

    ***

    //திருமாவுக்கு என்ன ஆசையோ... என்ன ப்ரச்னையோ... அண்ணனோடு கூடிக்குலாவுகிறார். எதிர்காலம் அவருக்கு புரியவைக்கும் எல்லா விஷயத்தையும்...//

    ஆமாங்க. தேர்தல் வந்து புரிய வைக்கும்.

    //இராமதாஸ் என்பவர் ஒரு ஜாதிக்காரர்களுக்கு வேண்டுமானால் தெய்வமாக இருக்கலாம்.. ஆனால் அவரால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு விஷச்செடி, இன்று நன்றாக வேர் விட்டு வளர்ந்திருக்கிறது... தமிழ்நாட்டின் நோய்.//

    இது உண்மைங்க. ஆரம்பத்திலேயே கிள்ளி எறிஞ்சிருக்கனும்.

    //இன்று அதை செய்கிறார், இதை செய்கிறார் என்று சொல்லலாம்... ஆனால் வன்முறையை ஒரு கலாச்சாரமாகவே வளர்த்ததுதான் அவரின் வெற்றி...//

    அவருக்கு முன்பே நம்ப திராவிடக் கட்சிகள் ஆரம்பித்துவிட்டன என்பதுதான் உண்மை.

    //தேவையானதை வன்முறையின் மூலம்தான் சாதிக்க முடியும் என்று ஒரு அர்த்தத்தை கொடுத்து அதை பின்பற்றும் ஒரு கூட்டத்தையும் உருவாக்கியவர்.//

    அவரு மட்டும் இல்லீங்க. எல்லா அரசியல் வாதிகளும்.

    //பஸ் எரிப்பதும் மர்ம் வெட்டுவதும் தர்மபுரி மாவட்டத்தின் கலாச்சாரம்...//

    மூனு பொன்னுங்கள உள்ளாற வெச்சி உயிரோட அவரு எரிக்கலீங்க.

    //அன்னை சத்யா கார்ப்பரேஷன் என்று தர்மபுரி பஸ் போக்குவரத்து தலைமையகத்தின் வெளியே "பஸ் எரிப்பது சட்ட விரோதம், அது உங்கள் வரிப்பணம், அதற்கு என்ன தண்டனை" என்றெல்லாம் எழுதி ஒரு பெரிய போர்டு பல வருடம் இருந்தது... இது போன்ற போர்டு வேறு நாடாயிருந்தால் விநோதமான ஒரு விஷயம்...//

    போர்டுக்கு என்னங்க பன்றது. அதுக்கு திருமாவளவனும் ராமதாசும் எப்படிங்க பொறுப்பு ஏற்க முடியும்??

    //அப்பொழுது அய்யா சும்மா ஒரு அடையாளத்துக்காக கைது செய்யப்பட்டால் போதும் நாலு பள் எரிப்பு, 10 பஸ் கண்ணாடி உடைப்பு என்று ஆரம்பித்தது இன்று மூன்று மனிதர்களை எரித்தது வரை வளர்ந்திருக்கிறது...//

    இது எல்லாக் கட்சிகளிலும் உண்டு. எம்ஜிஆர் இறந்தபோது, ஜெயலலிதா கைது, கருணாநிதி கைதின்போதெல்லாம் நடந்தது தானே?

    //அதை செய்தது அதிமுக எனும் ஒரு திராவிட இயக்கம், ஆனால் அதை தர்மபுரியில் கலாச்சாரமாக்கியது அய்யா//

    அப்டீங்களாய்யா?

    //தலைமை சொன்னதற்காக ஏர்போர்ட்டில் பாவாடையை தூக்கி காட்டி போராட்டம் நடத்திய மகளிர் அணிக்கு எதற்கு தூக்குகிறோம், என்னத்தை தூக்குகிறோம் என்பது முக்கியமல்ல... தலைமை என்ன சொல்கிறது என்பதுதான் முக்கியம்...//

    ஏர்போர்ட்டில் பாவாடையை சுப்பிரமணி சாமிக்காக தூக்கியது அதிமுகவின் மகளிரணி என்பதுஎ ப்படி உங்களுக்குத் தெரியாமல் போனது?


    //கற்பாவது கலாச்சாரமாவது, இன்று தனிப்பெரும் சக்தியாக முன்னேற நடக்கிறது இந்த போராட்டங்கள்... கூலியில்லாத குண்டாந்தடிகளாக தொண்டர்கள்... //

    மக்கள் சக்தியினை வெளிப் படுத்துகிறார்கள். தமிழ்நாட்டுக்குப் பிழைக்க வந்தது எல்லாம் தமிழரின் கற்பைப் பற்றிப் பேசினதால் வந்த வினை.

    //தாவூத் இப்ராகிம் எப்படி பாலிவுட்டை ஆட்டிப்படைக்கிறானோ அது போன்ற ஒரு முயற்சி கோலிவுட்டில் அரங்கேறுகிறதோ என்பதுதான் நமது சந்தேகம்.//

    குஸ்பூக்களும் சுகாசினிக்களும் தமிழச்சியின் கற்பினை தண்டோரா அடித்து ஏலம் போட முயலும்போது சும்மா மூலையில் அமர்ந்து கொள்ள எம் பெண்டிர் என்ன கோழைகளா? விளக்குமாறும் செருப்பும் என்ன? இனிமேல் ஆயுதமும் ஏந்துவார்கள்!

    ReplyDelete
  20. ரஜினி ராம்கி, Why not என்று முகமூடி அவர்களைப் பற்றியா சொன்னீர்கள்?

    ReplyDelete
  21. //2)கல்யாணத்துக்கு முன்பு பெண்கள் உடலுறவு கொள்ளலாம் - குஸ்பூ.//

    எங்கே சொல்லியிருக்கிறார். காட்டமுடியுமா?

    இந்தியா டுடேவில் சொல்லி இருக்கிறார்! காட்ட முடியும், என் அருகில் வந்தால்!!!

    (கல்யாணத்துக்கு முன்பு உடலுறவு கொள்ளலாம் ஆனால் பாதுக்காப்பாக கொள்ளனும் என்று சொல்லி இருந்தார்)


    //சானியாவும் குஸ்புவும் பிராம்மணர்கள் என்று எனக்கு இப்போதுதான் தெரிகிறது...//

    இதற்கு விவேக்கு அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  22. //ரஜினி ராம்கி, Why not என்று முகமூடி அவர்களைப் பற்றியா சொன்னீர்கள்?

    Yes. There are some genuine person who are still having "mugamoodi". I have one friend who is looking for widow from poor family. He is well settled guy, earning Rs.15000/- per month, own a good flat in Adambakkam.

    Helping a particular community people or giving note book to school children will not be a real social work.

    Karpu, kannipen.. useless...

    I'm really proud of my friend.

    ReplyDelete
  23. // அசிங்கமான பொய் பிரச்சாரங்களின் நடுவில் உண்மைகளுக்கும் பிரச்சாரம் தேவையிருக்கின்றது... //

    குழலி. உங்கள் நம்பிக்கையும் விசுவாசவும் எனக்கு ஆச்சரியமேற்படுத்துபவை. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை உள்ளிருந்து ரொம்ப நாள் பார்த்த மாதிரி அவர்கள் தனிமனித ஒழுக்கத்தில் சிறந்தவர்கள் என்று சொல்வதை பற்றி எனக்கு ஒரு கேள்வியும் இல்லை..

    ஆனால் நான் சொல்வதை புரிந்தோ, புரியாமலோ இவர்கள் இணைந்ததால் நான் கலங்கிய மாதிரி ஒரு தோற்றத்தில் நீங்கள் சொல்வது கொஞ்சம் டூ மச்.

    உங்கள் பிரச்சாரம் வீணாகாமல் பயன் கிட்ட வாழ்த்துக்கள்..

    (சந்தன வீரப்பனும் தனி மனித ஒழுக்கத்தில் சிறந்தவனாமே.. அவனுக்கும் நம்ம ஆதரவு உண்டா)

    ReplyDelete
  24. உங்க பதிவிலருக்கற Subjectஎப்படியோ உங்க பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள்ல இருக்கற வாதங்கள், அதுக்கு நீங்க சாமர்த்தியமா பதில் சொல்ற திறமை ரொம்ப நல்லாருக்கு..

    அடுத்துவர்ற ரெண்டு நாளைக்காவது இந்த வாத பிரதி வாதங்கள் தொடரும்னு நினைக்கிறேன்.

    சூடான விவாதங்களுக்கு வாழ்த்துக்கள்..

    அதுசரி அது யார் சார் திரைப்பட நகைச்சுவை நடிகர்கள் பேர்ல எழுதறது? ஒரே ஆள்தானா.. இல்ல வெவ்வேறு ஆளுங்களா?

    ReplyDelete
  25. // ஆண் அங்கே அழைக்க பெண் அங்கே நாணிக்கோணி கடைசியில் ஒத்துக்குவாங்க. அதாங்க தமிழ்ப் பண்பாடு! //
    // சத்தியமாக முதலிரவில் தெரிந்துவிடும் நண்பா! //
    // விலைப் பெண்ணும் தன் முழு மனசோடதானுங்க //
    // எங்களின் கற்பு அங்கே தெய்வீகமாக மதிக்கப் பட்டது. //
    // மொசப் புடிக்கிற நாய மூஞ்ச பாத்தா தெரியாதுங்களா? //

    சுத்தம்... பேசி ஆகப்போறது ஒன்னுமில்ல...

    ReplyDelete
  26. அந்த பஜ்ஜி செய்முறையை போட்டவருக்கு..

    அது யாத்ரீகனுக்கு மட்டுமா, இல்ல எல்லாருக்குமா?


    அதிருக்கட்டும்.. நீங்க சொன்னா மாதிரி செஞ்சா பஜ்ஜிதான் வருமா இல்ல ஏதாவது ஏடாகூடமா வருமா?

    துளசி அக்கா கொஞ்சம் சொல்லுங்களேன்?

    ReplyDelete
  27. //சந்தன வீரப்பனும் தனி மனித ஒழுக்கத்தில் சிறந்தவனாமே.. அவனுக்கும் நம்ம ஆதரவு உண்டா)
    //
    இது உண்மையெனில் நிச்சயமாக உண்டு, எப்போதென்றால் அவனின் தனி மனித ஒழுக்கத்தை யாரேனும் அசிங்கமாக அவதூறு பிரச்சாரம் செய்யும் போது....முகமூடி நீர் ஆங்காங்கே அந்த தலைவர்களின் தனி மனித ஒழுக்கத்தை அசிங்கமான கேவலமான முறையில்(உம்மை பொறுத்தவரை பகடியான முறையில் என கூறலாம் ஆனால் என்னை பொறுத்த வரை படு அசிங்கமான பொய்யான ஒன்றை உருவகப்படுத்துகின்றீர்) அதற்காகத்தான் இந்த எதிர்ப்பு....

    நீர் (மட்டுமல்ல யாராயினும்) எப்போது இந்த பொய் பிரச்சாரம் மேற்கொண்டாலும் அப்போதெல்லாம் என்னால் முடிந்தால் நான் எதிர்ப்பேன்....

    உமக்குக் ஒரு சவாலாகவே சொல்கின்றேன் திருமா, இராமதாசுவின் தனி மனித ஒழுக்கத்தை பற்றி ஒரே ஒரு பத்திரிக்கை கிசு கிசுவாவது காண்பியும் (உம்ம பொய் பிரச்சாரமல்ல)...நான் அத்துடன் நிறுத்திக்கொள்கின்றேன் இந்த எதிர்ப்பை....



    //போட்டோல கைகள் இணையலை! பொத்திய கைகளுக்குள் விரலைப்பிடிச்சி சீட்டுபேரம் நடக்கறாப்படிதான் தெரியுது! பேரம் படியாமப்போகட்டும்! அன்னைக்கு இருக்கு இதைவிட தமாசு!
    //
    வாழ்க்கைமுறையில் பெரிய மாற்றமில்லாமல், எந்த வித விழிப்புணர்ச்சியும் இல்லாமல், எந்த வித முன்னேற்றமுமில்லாமல் இரண்டு சமூகங்களும் அடித்துக்கொண்டு செத்தபோதெல்லாம் இவர்கள் இணைய மாட்டார்களா என சிறுவயதிலிருந்தே ஆதங்கப்பட்டவன் நான், அந்த சூழலில் அந்த இடத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் இந்த இணைப்பு எத்தனை முக்கியமென...எத்தனை தேவையென

    இளவஞ்சி அவர்கள் சீட்டுக்காகவோ, சுயநலத்திற்காகவோ அல்லது என்ன எழவுக்காக இணைந்தாலும் இந்த இணைப்பு இரு சமூக மக்களிடம் பெரும் புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொண்டுள்ளது என்பது உண்மை...

    இது மற்றவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ எம் போன்றவர்களுக்கு புரியும்

    ReplyDelete
  28. அது சரி.. இந்த மேட்டரை பெரிசு பண்ணின டி.வி., மாலை நாளேடு இரண்டின் (முன்னாள்) பார்ட்னர் 'தமிழினத் தலைவர்' அப்படீன்னு அழைக்கப்படுகிறவர் தானே?! அவர் மனைவி, துணைவி, சைடு அது இதுவென்று வைத்துக் கொண்டிருக்கிறாரே. அது தமிழ் பண்பாடா?! யாராவது அறிவு ஜீவிகள் விளக்கம் தரவும்.

    ReplyDelete
  29. குழலி தனி மனித ஒழுக்கம் என்று எதை கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை. ஒரு பொண்டாட்டியோடு சேர்ந்து வாழ்வது மடுமா?! பொது மேடையில் கண்டபடி பேசுவதும் தவறு தான். தலைவனாகப்பட்டவன் தனது பின்பற்றுபவர்களை ஒழுங்காக நடத்திச் செல்ல வேன்டும். 'எனது குடும்பத்தினரை அரசியலுக்கு கொண்டு வந்தால் என்னை கேள்வி கேளுங்கள்' என்று கூறி விட்டு மகனை மந்திரியாக்கியவர் அதற்கென சொல்லும் காரணமெல்லாம் சுத்த ஹம்பக். அதெல்லாமும் தனி மனித ஒழுக்கத்தில் தான் சேரும். சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாதவன் மற்ற எதிலும் ஸ்டடியாக இருப்பான் என்பது என்ன நிச்சயம்?! உங்கள் வாதப்படி வந்தாலும், தி.மு.க. தலைவர் தனி மனித ஒழுக்கம் அற்றவர்கள் என்பதை தைரியமாக சொல்லுவீர்களா?!

    ReplyDelete
  30. அதென்னமோ நான் பேச ஆரம்பித்தால் குறிப்பிட்ட பதிவர்களின் பதிவுகளில் பேச ஆரம்பித்தால் அதுவும் சரியான சில விடயங்களில் உண்மையை விளக்கும் போது பதில் சொல்லமுடியாமல் இருக்கப்படும் போது மட்டும் பச்சை மிளகாய்களாகவும் காஞ்சமிளகாய்களாகவும் மோடி களாகவும் மஸ்தான்களாகவும் ஆவேசமாக பேசி விட்டு அதன் பிறகு சுத்தமாக காணாமல் போய்விடுகிறார்கள்.... ஒரு வேளை இந்த ப்ராக்ஸிகளுக்கு வாழ்நாள் சில மணி நேரங்கள் மட்டும் தானோ.... சரி விடுங்க....

    முகமூடி அவர்களே வன்முறை என்பது வெறுமனே உடல் பாதகம் மட்டுமல்ல.... மேலதிக தகவலுக்கு படிக்கவும் வன்முறை என்பது வெறும் இரத்தத்தின் தெறிப்பா?!

    நீர் திருமாவையும் இராமதாசையும் தனி மனித ஒழுக்கம் இல்லாதவர்கள் போல சித்தரிக்க முயல்கிறீர்களே அதற்கு பெயர் கருத்து சுதந்திரமல்ல கேவலமான யுத்தி மற்றும் அசிங்கமான வன்முறை.... இங்கே கேவலமான, அசிங்கமான என்ற சொற்களை அவசியம் பயன்படுத்த வேண்டுமா என பலமுறை யோசித்து பின் அழுத்தமாக வலியுறுத்தி சொல்ல வேறு வழியின்றி பயன்படுத்துகின்றேன்....

    //தி.மு.க. தலைவர் தனி மனித ஒழுக்கம் அற்றவர்கள் என்பதை தைரியமாக சொல்லுவீர்களா?!
    //
    இதில் என்ன பெரிய தைரியம் வேண்டிகிடக்கு.... உமக்கு பதில் சொல்வதே எனக்கு முழு நேர வேலையில்லை... ப்ராக்சி கொடுப்பதைவிட்டுவிட்டு பதிவில் எழுதுங்க.... முடிந்தால் அங்கே வந்து சொல்கிறேன்.... அதுமட்டுமின்றி இது மாதிரி நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வது மட்டுமே என் வேலையில்லை....

    ReplyDelete
  31. தனிமனித ஒழுக்கத்தில் சிறந்து விளங்க முதல் தேவை "சிவனேன்னு இருக்கிறவங்களை பார்த்து பன்னி'னு திட்டுறதுதான்!!! நல்லாருக்குய்யா உங்க (ஊடக)வன்முறை/தனிமனித ஒழுக்க கோட்பாடுகள்!

    உண்மையை சொல்வதற்கு பதிவு எழுதனும்னு அவசியமில்ல .. பிராக்ஸியே போதும்.

    -- இன்னொரு பிராக்ஸி!!!

    ReplyDelete
  32. பச்சை மிளகாய் நல்லா சுருக்குனு கேட்டீங்க. ஒரு கட்சியோட சேந்து ஓட்டு கேக்கறதும், ஜெயித்தவுடன்
    நேர்மாறான கொள்கையுடைய கட்சியோட கூட்டணிக்கு தாவி ஓட்டி போட்டவர்களை
    ஒட்டுமொத்தமா ஏமாத்தறது தான் ஒழுக்கம்னு சொல்றாங்க. வேற (தமிழ்நாட்டு இலக்கணப்படி ஒழுக்கம்
    குறைவா அறியப்பட்ட) நாடுகளில் இப்படி பண்ணினா டின் கட்டிடுவாங்க. இன்னிக்கும் புஷ்
    பொய் சொன்னார்னு போட்டு பின்னி எடுக்கறாங்க. வாக்காவது புண்ணாக்காவது ? இதுதாங்க
    தமிழ்நாட்டின் ஒழுக்கம். இதுக்காகதான் போராடறாங்க.

    விவேக்கு,
    நம்ம சத்யராஜ் கவுண்டர் என்ன சொல்றாருன்னு படிக்கலியா. அவர் சொல்றது "காமமே இயல்பு.
    கடவுளும், கற்பும் கற்பிதம்'.

    இவ்வளவு ஆணித்தரமா குஷ்பு கூட சொல்லலை . இவர எதிர்த்து எந்த செருப்பு, முறங்களும் கிளம்பவில்லை.

    ReplyDelete
  33. //சிவனேன்னு இருக்கிறவங்களை பார்த்து பன்னி
    //
    சிவனேன்னா? ராசா இன்னொரு பிராக்ஸி அந்த செவனேனு இருந்த ஆளு செஞ்ச வேலை தெரியாதா?
    மின்சாரத்தை நிறுத்த முடியுமோ முடியாதோ அடையாள எதிர்ப்பாக நடத்திய போராட்டத்தை கேவலப்படுத்தியது, கர்நாடகத்தில் வாழும் 40 இலட்சம் தமிழர்களின் வாழ்வை ஒரு கர்நாடகத்திலிருக்கும் தமிழர்கள் வாழ்வை இவர்கள் பார்ப்பார்களா? என்று கேள்வி கேட்டு சும்மா இருந்த கன்னட காரர்களை உசுப்புற மாதிரி பேட்டியளித்தது, எந்த மாநிலத்திற்கு எதிராக அவர் உண்ணாவிரதம் இருந்தாரோ அந்த மாநிலத்தின் முதல்வர் இவரின் உண்ணாவிரதம் வெற்றியடைய வேண்டுமென வாழ்த்து தெரிவிக்கிறார், இதிலேயே தெரியலையா அந்த அவரைப்பற்றி, இராமதாசு வெறுமனே பன்றி என்று மட்டுமே சொன்னார், நான் இராமதாசு இடத்திலிருந்தால்..... வேணாமய்ய வாயைக்கிளறாதிங்க...

    ReplyDelete
  34. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  35. முகமூடி வாழ்த்துக்கள்....

    நல்ல விளக்கங்களுக்கு கற்பை பற்றி. உங்கள் கருத்தும் என் கருத்தும் 90% ஒத்துப்போயிருக்கிறது. அரசியல் பேச நான் விரும்பவில்லை.

    ஆனாலும் இதற்கு உங்கள் பதிலை நான் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

    //சரிய்யா அப்ப உடலுறவு கற்பில் சேத்தி இல்ல.. மனசுதான் சுத்தமா இருக்கனும். எப்ப ஒருத்தி கல்யாணத்துக்கு முன்பு உடலுறவு கொள்கிறாளோ அவள் தன் விருப்பப்படி முழு மனதோடுதானே உடலுறவு கொள்கிறாள்? அப்போ அவள் மனமும் ஒத்துழைத்துத்தானே உடலுறவு கொள்கிறாள்? அதுதானே அய்யா கற்பு.//

    ReplyDelete
  36. //Why not?//
    ராம்கி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  37. என்ன கண்றாவி அடையாள எதிர்ப்பு?! நீங்க அடையாள எதிர்ப்பு காட்டி அப்படியே காவிரியிலே அவனுங்க தண்ணிய தொறந்து விட்டுட்டாஙளா?! தமிழ்நாடு முழுசும் பெயர் பலகையெல்லாம் தமிழிலே மாத்தியாச்சா?! சினிமா பேரெல்லாம் இனிமே தமிழிலே மட்டும் தான் வருமா?! அடப்போங்கய்யா. நீங்களும் உங்க அரசியலும். 'அவரை' பன்னின்னு சொல்ல அந்த நாய்க்கு என்ன அருகதை?!

    ஸாரி.. கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு நாய்ன்னு திட்டிட்டேன்.. ஸாரி..ஸாரி.. (உண்மையான) நாய் கோச்சுக்க போகுது.

    குழலி, ராமதாஸ் இடத்திலே நீங்க இருந்தீங்கன்னாவா? ஏமய்யா உமக்கு அப்படி ஒரு கேவலமான எண்ணம்?!

    ReplyDelete
  38. குழலி, மொதலிலே நாய் மாதிரி கொலைக்கிறதை நிறுத்த சொல்லுங்க அந்த ராமதாஸ் பொறம்போக்கை. அதிலே தனி மனித ஒழுக்கத்தை காட்டட்டும். அந்த ஆளெல்லாம் ஒரு தலைவன். அதுக்கு ரெண்டு பாலோயர்ஸ் வேற.

    ReplyDelete
  39. //சிவனேன்னா? ராசா இன்னொரு பிராக்ஸி அந்த செவனேனு இருந்த ஆளு செஞ்ச வேலை தெரியாதா?
    //
    யெய்யா குழலி ராசாதி ராசா!, இங்க அந்தாளோட தனிமனித ஒழுக்கத்த யார்னா தூக்கி பிடிச்சாங்களா? "சிவனே"ங்கிரத பிடிச்சு தொங்க வேண்டாம்.

    //இராமதாசு வெறுமனே பன்றி என்று மட்டுமே சொன்னார், நான் இராமதாசு இடத்திலிருந்தால்..... வேணாமய்ய வாயைக்கிளறாதிங்க..//

    அவர் வாய். உங்கள் வாய்... உங்கள் இஷ்டம். ஆனால் நாளை யார்னா உங்களை கைகாட்டி "தனிமனித ஒழுக்கத்துல தங்கம்"னு சொன்னா ...கேள்வியானது... அப்படி சொல்பவர்களின் தனிமனித ஒழுக்கத்தை பற்றிய "புரிதலை" பற்றியது.

    ReplyDelete
  40. Mugamoodi,
    Really Great.

    Rajni Ramki,
    Thalaiva! Oru vari = 100 Vari.

    Karpu, Kalacharam nu pesareengale. Muthan muthalla Manushan poranthaanle. (South Africa nu solranga). Appaleenthu oru Naahareeham varra varaikkum ithellam illiye Sir. SO, Kaamam enbathu Iyalbu nu Sathyaraj sonnathu correct thaane.

    Civilization, Groupism intha maari yellam vanthavudane, manushanoda adipadai thevaihal, kudumbam ellam vathuchi.

    Yenunga. Avan/Aval aayiram sollinu poraanga. "Karuthu Sudandhiram" nu solvaangey. Loose le vuttunu Velai yai paarkaratha vuttuttu, Politics panninu keeraango allarum.

    ReplyDelete
  41. //சரிய்யா அப்ப உடலுறவு கற்பில் சேத்தி இல்ல.. மனசுதான் சுத்தமா இருக்கனும். எப்ப ஒருத்தி கல்யாணத்துக்கு முன்பு உடலுறவு கொள்கிறாளோ அவள் தன் விருப்பப்படி முழு மனதோடுதானே உடலுறவு கொள்கிறாள்? அப்போ அவள் மனமும் ஒத்துழைத்துத்தானே உடலுறவு கொள்கிறாள்? அதுதானே அய்யா கற்பு.//

    கணேஷ்... விவாகரத்தானவர், கணவனை இழந்தவர், கல்யாணம் ஆகாதவர் என் மூன்று பேர் இருக்கின்றார் எனக்கொள்வோம் (இப்ப பெண்களை பற்றி, ஆண்களை பிறகு பார்ப்போம்)... மூவருமே தத்தமது மனம் கவர்ந்த ஒரே ஒருவருடன் உடலாலும் இணைந்தவர்கள் எனில், முதல் இரண்டு பேர் கற்பிழந்தவர்கள் இல்லை.. (இல்லை அவர்களும் கற்பிழந்தவர் எனில் அந்த சிக் ஜென்மத்துடன் ஒரு பேச்சும் இல்லை) ஆனால் மூன்றாமவர் கற்பிழந்தவர்... அதுதான் இப்ப கோட்பாடாக சொல்லப்படுகிறது. முதல் இருவருக்கும் மூன்றாமவருக்கும் உள்ள வித்தியாசம் நான்கு பேர் சேர்ந்த சமுதாயம் தந்த அங்கீகாரம்... யாருக்கைய்யா வேணும் உன் அங்கீகாரம் என்று கேட்க எல்லாம் யாருக்கும் உரிமை கிடையாது...

    உடலுறவு என்பது தனிமனிதர் சார்ந்த விஷயம்... ஒரு ஆணோ பெண்ணோ அவர்கள் வளரும் போது அவர்களுக்கு நல்லது கெட்டது புரியவைக்கலாம். அவர்கள் மேற்பள்ளி/கல்லூரி போகும் போது ஒரு வயதை தாண்டிய நிலையில் அவர்கள் எதிர்காலம், உடலுறவு குறித்தான சாதக பாதகங்களை எடுத்துச்சொல்லலாம்... ஆனால் அதற்கு மேல் அவர்கள் வளர்ந்த சூழ்நிலை, சுய மதிப்பீடு போன்ற விஷயங்களின் அடிப்படையில் அவர்களே சுயமாக முடிவு செய்துகொள்ள வேண்டியதுத்தான்... அது அவர்களின் அந்தரங்கம்.. அவர்கள் மட்டுமே முடிவு செய்ய வேண்டிய விஷயம்...

    இப்போது ஆண்களை பற்றி... மனைவியை இழந்தவரோ, விவாகரத்தானவரோ மட்டுமல்ல எந்த ஒரு ஆணுமே கற்பில்லாதவராக கருதப்படுவதில்லை... "தனி மனித ஒழுக்கம்" கேட்டகரியில் வந்துவிடுகின்றார். அதற்கு காரணம் உடல் சார்ந்த சிந்தனை... அதனால்தான் கொஞ்ச காலம் பழகிய பின் அவன் கெட்டவன் என்றாலும் பெரும்பான்மை பெண்களால் வெளியில் வர முடிவதில்லை... வேறு ஒருவரை மணக்க நேர்ந்தால் 'உன் புருஷன் கிட்ட சொன்னா என்ன ஆகும் தெரியுமில்ல' என்ற ப்ளாக்மெயில் தொடங்குவது கூட தமிழ்ப்பாண்பாடுதான்... மொச புடிக்கிற நாய மூஞ்ச பாத்தா தெரியாதா என்ற ரீதியில் பெண் பார்க்க போகும் மனிதர்கள் வாழ்க்கையை பார்க்கும் கோணமே வேறு.. முதலிரவின் போது அவள் கற்புள்ளவளா என்று ஆராயும் மனிதன் எப்படிய்யா வாழ்க்கையை "வாழ"ப்போகிறான்... இரண்டு நாள் வெளியூர் போனால் அவன் மனம் ஒழுங்காக சந்தேகப்படாமல் இருக்குமா? தங்களது கற்பு "தெய்வீகமாக" மதிக்கபடுவதை பற்றி அவர்கள் பெருமைப்படுவதை குறித்து ஒரு ப்ரச்னையும் இல்லை... ஆனால் அதையே ஒரு கோட்பாடாக சித்தாந்தமாக உருவாக்க நினைப்பதுதான் இங்கு ப்ரச்னை... அவர்கள் சித்தாந்தத்துக்கு மாற்றாக ஒருவர் வெறுமே கருத்து சொன்னால் போதும் இப்போது நடப்பது எல்லாம் நடக்கும்...

    ReplyDelete
  42. தல,
    நல்ல பதிவு. இல்ல நல்ல பின்னூட்டம்னு தான் சொல்லணும். உங்க நிலை தான் என்னுடையதும்.

    மூஞ்சியப் பாத்தா தெரியாதா, முதலிரவில் தெரிஞ்சிடும் என்றெல்லாம் கமெண்ட் அபத்தங்களில் சிக்கியிருப்பதால், தனியா தொகுத்து பதிவா போட்டுடுங்களேன்.

    ReplyDelete
  43. // எப்போது இந்த பொய் பிரச்சாரம் //

    வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
    ஐந்தும் அகத்தே நகும்

    என்ற குறளுக்கு ஒழுக்க சீலரைப் போல உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும் பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும் என்று பொருள் சொல்கிறார்கள்... இங்கு வஞ்சகர் என்பது ஒரு மனைவி மட்டும் கொண்டிருந்தாலும் நம்பியவரை கைவிடுதல், வாக்கு மாறுதல், நம்பகத்தன்மை இல்லாமை, சுயநலத்துக்காக பொதுநல சொத்துக்களுக்கு பங்கம் ஏற்படுத்துதல், சுயநலத்துக்காக அப்பாவிகளை உபயோகப்படுத்துதல், தனி மனித வன்முறை, பொது இடத்தில் நாகரீகம் இல்லாமல் கண்டபடி பேசுதல் போன்ற விஷயங்களை... இது உங்களுக்கும் தெரியும், இருந்தாலும் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லி மட்டையடித்தால் அதற்கு உண்மைத்தோற்றம் தரலாம் என்றுதான்...

    // தனி மனித ஒழுக்கத்தை பற்றி ஒரே ஒரு பத்திரிக்கை கிசு கிசுவாவது // ஆக பத்திரிக்கை - கிசு கிசு உட்பட - உங்களுக்கு வேதவாக்கு.. ஆனால் ராமதாஸை பற்றி தாக்கி எழுதினால் அதற்கு வேறு பெயர்கள்.. ஊடக வன்முறை, உயர்சாதி குயுக்தி.. நல்லா இருங்க..

    // "தி.மு.க. தலைவர் தனி மனித ஒழுக்கம் அற்றவர்கள் என்பதை தைரியமாக சொல்லுவீர்களா?! " இதில் என்ன பெரிய தைரியம் வேண்டிகிடக்கு.... உமக்கு பதில் சொல்வதே எனக்கு முழு நேர வேலையில்லை... ப்ராக்சி கொடுப்பதைவிட்டுவிட்டு பதிவில் எழுதுங்க.... // அது என்னங்க, மற்ற நேரத்தில் எல்லாம் ப்ராக்ஸிகளுக்கு பதில் சொல்ல தயங்காதவர், குறிப்பிட்ட சில கேள்விகளுக்கு மட்டும் ப்ராக்ஸி கணக்கு பாக்கறீங்க... ராமதாஸே பரவாயில்லப்போவ்.. தோன்றுவதை அவன் இவன் என்றெல்லாம் ஏக வசனத்தில் சொல்லிவிட்டு நாளை சந்தர்ப்பம் மாறும்போது ஏதாவது சால்ஜாப்பு சொல்லி சரிகட்டுவார்... நீங்க என்னடான்னா கழுவுற மீன்ல நழுவுற மீனா இருக்கீங்க... இந்த வித்தைய ராமதாஸுக்கு சொன்னீங்கன்னா, சொரணை கெட்டவர் பட்டமாவது அழியும்... சரி நான் கேட்கிறேன்... உங்க இலக்கணப்படி, திமுக தலைவர் தனி மனித ஒழுக்கம் அற்றவர் என்பதை தைரியமாக சொல்வீர்களா???

    ReplyDelete
  44. அன்பின் முகமூடி,
    உங்களது பதிவும், விவாதங்களும்...அருமை. மிக மிக அழகாக, நிதானமாக விவாதித்திருக்கிறீர்கள். குறிப்பாக, பதிவு எழுதுபவரின் குடும்பத்தையெல்லாம் சகட்டு மேனிக்கு விளித்து அசிங்கப்படுத்தும் அரக்க குணம் கொண்டோருக்குக் கூட, மிகப் பொறுமையாக 'நச்'சென விளக்கியுள்ளீர்கள். பாராட்டுக்கள்!

    - அன்புடன், அருண் வைத்யநாதன்

    ReplyDelete
  45. சுதர்சன், அன்பு, யாத்ரீகன், Tmmal, அருண் + அனைவருக்கும் உங்கள் அன்புக்கு நன்றி...

    இளவஞ்சி எல்லோரும் நினைப்பதுதான் நடக்கப்போகிறது... இருந்தாலும் அப்ப வரப்போற வசனம்தான் கேட்க ஆவல்...

    hats off ராம்கி...

    இராமநாதன்.. உங்கள் யோசனையை செயல்படுத்த முடிகிறதா பார்க்கிறேன்.. நன்றி.

    ReplyDelete
  46. குழலி, அய்யாவ பத்தி ஒரு கிசுகிசு கூட எழுதாத விகடன் இந்த வாரம் எழுதியிருப்பது ::

    கதையைக் கேளும். நடிகை குஷ்புவுக்கு வக்காலத்து வாங்கி சுகாசினி பேசியது இடியாப்பச் சிக்கலாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் சுகாசினியின் பேச்சைப் பொருட்படுத்த வேண்டாம் என்று சொன்ன டாக்டர் ராமதாஸ், திடீரென போராட்டத்தை தீவிரப்படுத்தச் சொன்னதற்கு காரணமிருக்கிறதாம். அதாவது உலகப்பட விழாவில் பேசியதற்குப் பிறகு தனக்கு நெருக்கமான சினிமாக்காரர்களிடம், ‘ராமதாஸ§க் கும் திருமாவளவனுக்கும் என்ன கொம்பா முளைத் திருக்கிறது. அவர்கள் என்ன பால் தாக்கரேவா? சினிமாக்காரர்கள் பற்றி பேச அவர்கள் யார்?’ என்று சுகாசினி கடுமையாகப் பேசினதாக இயக்குநர் சீமான் மூலம் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் காதுகளை எட்டியிருக்கிறது.’’

    ‘‘அப்புறம்?’’

    ‘‘உடனே, ராஜ் டி.வி&யில் சுகாசினி நடத்தும் லேடீஸ் ஜங்ஷன் உள்பட அவருடைய எந்த நிகழ்ச்சியும் எந்த டி.வியிலும் வரக்கூடாது என்று ராமதாஸ் சீறி விட்டாராம். இதைத் தொடர்ந்து பா.ம.க. சார்பில் சி.ஆர். பாஸ்கர், டி.வி. நிறுவனத் திடம் பேசியுள்ளார். ‘அது எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு அல்ல’ என்று டி.வி. தரப்பு தப்பித்துக் கொள்ள, நிகழ்ச்சியை தயாரிக்கும் நிறுவனத்துக்கு மிரட்டல் போயிருக்கிறது. அந்த நிகழ்ச்சி நன்றாக இருப்பதால் டிசம்பர் வரையில் அதற்கு நீட்டிப்பு வாங்கியிருந்த தயாரிப்பு நிறுவனம், எதற்கு வம்பு என்று சுகாசினியை கழற்றிவிட்டதாம். அந்த நிகழ்ச்சியை இனி எஸ்.வி.சேகர் நடத்தப் போகிறார் என்கிறது சேனல் வட்டாரங்கள்.’’

    ஆக தமிழ்ப்பாண்பாடாவது ஒண்ணாவது... என்ன விமர்சனம் பண்ணா நீ காலிங்கற செய்திதான் பலமா சொல்லப்படுது... ரத்தத்தின் தெறிப்பு + இது மாதிரி டி.விய மிரட்டுவது எல்லாமே வன்முறைன்னு உங்கள தவிர மத்தவங்க நினைக்கிறாங்க... இது மாதிரி சுயநலவாத நடவடிக்கைகளை தமிழ்ப்பண்பாடுங்கற பேர்ல நடத்துவதுதான் ஒழுக்கமான செயலா? இனி சீமான், தங்கர் மற்றும் அனைத்து ""தமிழ்"" படைப்பாளிகளும் இன்டஸ்ட்ரியில தனக்கு பிடிக்காத ஆளுங்கள காலி பண்ண காசிமேடு, அயோத்தியாகுப்பம்னு அலைஞ்சு காசு செலவு பண்ண வேணாம்... மாநில அளவுல சீப் & பெஸ்ட் அய்யாவுக்கு விசுவாசியா இருக்கறது...

    ReplyDelete
  47. chrap and best nu eppadi sonneenga

    election varumpodhu protection money kudakalaenna vittruvangla?

    ReplyDelete
  48. // election varumpodhu protection money kudakalaenna vittruvangla? //

    cost/benefit ratio படி பாத்தீங்கன்னா, இது ரொம்ப செலவு கம்மிதான்...

    இப்போ 36 இடத்துல கேஸ் போடனும்னு வச்சிக்கிங்க, எல்லா ஊர்லயும் போயி 36 கைத்தடிங்கள ரெடி பண்ணனும். அது ரொம்ப செலவும் நேரமும் பிடிக்கும் விஷயம்... ஆனா ஒரே பேமண்ட் protection money கொடுத்தா, வேலைய ஒப்படைச்சோமா வறுத்த "முந்திரி" + ஜானி வாக்கர்ஸோட ஜாலியா இருந்தோமான்னு இருக்கலாம்...

    அதே மாதிரி காசிமேட்டுல காசு கொடுத்தா எந்நேரம் அவன் நமக்கு எதிரா போலீஸ¤க்கு போவான், என்ன நடக்கும்னு தெரியாது.. ஆனா இங்க போலீஸே கைய வக்க முடியாத இடத்துல இல்ல இருக்கோம்... கைய வச்சாலும் கலவரம் வெடிக்கும் கவலை வேண்டாம்...

    ஆக protection money என்பது ஒப்பீட்டளவில் கொசு கடிக்கும் காசுங்க

    ReplyDelete
  49. இதற்கு முன்னால் ஞாநியின பல கருத்துக்களோடு உடன்படாதவன்... ஆனால் "டார்கெட் விஜயகாந்த்?" என்ற தலைப்பில் ஞாநி இன்றைய விகடனில் எழுதி வந்துள்ள கட்டுரையில் நான் சொன்ன, சொல்ல ஆசைப்படுகிற பல விஷயங்கள் உள்ளதை கண்டு அதை இங்கு மறுபதிப்பு செய்ய ஆசைப்படுகிறேன்... நன்றி :: ஞாநி / ஆனந்த விகடன்

    ‘ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தால், அதை உண்மை என்று எல்லாரும் நம்ப ஆரம்பித்து விடுவார்கள்’ என்றார் ஹிட்லரின் பிரசார அமைச்சர் கெப்பல்ஸ். (கோயபல்ஸ் என்பது சரியல்ல).

    கெப்பல்ஸின் தத்துவத்துக்கு அண்மைக் கால எடுத்துக்காட்டு... குஷ்பு விவகாரம்.

    திருமணத்துக்கு முன்பே செக்ஸ் உறவு கொள்வது, இந்திய நகரப் பெண்கள் இடையே அதிகரித்து வருவதாகத் தெரிவித்த ஒரு ஆய்வு பற்றி குஷ்பு கருத்து தெரிவித்திருந்தார். இந்த வாரம், ஆசியாவின் நம்பர் 1 ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிடும் ‘மும்பை மிரர்’ நடத்திய சர்வேயில், மும்பையில் கல்லூரி மாணவர்களில் 58 சதவிகிதம் பேர் ஏற்கெனவே செக்ஸ் உறவுகள் கொண்டிருப் பதாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில், மாணவர்களுக்காக இப்போது ஆணுறை விற்கும் மெஷின்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. இதுதான் இந்தியக் கற்பின் யதார்த்த நிலை!

    குஷ்பு தெரிவித்த கருத்துக்கள் திரிக்கப்பட்டு, தமிழ்ப் பெண்கள் கற்பில்லாதவர்கள் என்று அவர் சொன்னதாக சில அமைப்புகளால், சில ஊடகங்களால் இன்று வரை திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு வருகிறது.

    இந்த சர்ச்சையில் அடுத்தபடியாகச் சிக்கியிருப்பவர் நடிகை சுஹாசினி.

    குஷ்பு & -சுஹாசினி இருவரையும் கடந்த காலத்தில், நான் வேறு விஷயங்களுக்காகக் கடுமையாக விமர்சித்து இருக்கிறேன். அதே சமயம், தங்கள் கருத்துக்களை வெளியிடும் உரிமை அவர்களுக்கும் உண்டு. அவர்களை விமர்சிப்பவர்களுக்கும் உண்டு. கருத்தைத் தெரிவிக்கவிடாமல் கழுதை, துடைப்பக் கட்டைகளால் தடுப்போம் என்று சொல்லும் உரிமை மட்டும் யாருக்கும் கிடையாது.

    குஷ்பு விவகாரம் ஒருவழியாக ஓய்ந்துவிட்ட நிலையில், சுஹாசினி திரும்ப இதை ஆரம்பித்தார் என்று தமிழ்ப் பெண்களின் கற்புக் («)காவலர்கள் (த.பெ.க.கோ) சொல்கிறார்கள். இந்த விவகாரம் ஓய்ந்துவிட்டது என்று சொல்வதே ஒரு கெப்பல்ஸ் உத்திதான். ஏனென்றால், த.பெ.க.கோ&வினர்தான் விவகாரத்தை ஓயவிடாமல் பல நீதிமன்றங்களில் குஷ்பு மீது வழக்குப் போட்டு, அவர் மன்னிப்பு கேட்ட பிறகும், அவற்றைத் திரும்பப் பெறாமல் விவகாரத்தை உயிரோடு வைத்திருக்கிறார்கள்.

    குஷ்புவுக்கு ஆதரவாக சுஹாசினி பேசியது பற்றி த.பெ.க.கோ எழுப்பி யிருக்கும் ஆட்சேபங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

    ‘என் கருத்தைக் கேட்டிருந்தால் இவர்களையெல்லாம் கிழித்திருப்பேன்’ என்றார் சுஹாசினி. இது தவறு என்கிறார்கள். ஒரு வாதத்தில் எதிர்த் தரப்பு வாதங்களைத் தவிடுபொடி ஆக்குவேன் என்பது போலத்தான் எதிர்த் தரப்பைக் கிழிப்பேன் என்பதும். அதாவது, அவர்களின் கற்புக் காவலர் முகமூடிகளைக் கிழிப்பேன்; அசல் முகங்களை வெளிப்படுத்துவேன் என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். அவ்வளவுதான்! ‘நீ யார் எங்கள் முகமூடிகளைக் கிழிக்க? நாங்களே எங்கள் பேச்சு/அறிக்கை/செயல் மூலம் கிழித்துக்கொள்வோம் என்று கோபப் படுகிறார்களோ என்னவோ!

    அடுத்த ஆட்சேபம், கொம்பு சம்பந்தப்பட்டது. த.பெ.க.கோ&வினர் குஷ்புவை வட இந்தியப் பெண் என்ற அர்த்தத்தில் விமர்சித்து, தங்கள் தமிழ் அடையாளத்தைப் பெருமையாக சொல்லிக்கொண்டு, குஷ்புவை ‘தமிழ் நாட்டை விட்டுப் போ!’ என்று சொன் னதை சுஹாசினி விமர்சிக்கையில், ‘தமிழர்கள் என்றால் என்ன, கொம்பா முளைத்திருக்கிறது?’ என்று கேட்டது கண்டிக்கப்படுகிறது.

    குஷ்பு, தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றி சொல்லாததைச் சொன்னதாகச் சித்தரித்தது போலவே, சுஹாசினி தமிழர்களின் கொம்பு பற்றிச் சொல்லாததைச் சொன்னதாக இந்தக் கண்டனங்களில் திரிக்கப்படுகிறது.

    சுஹாசினி தமிழர்களுக்குக் கொம்பு இருப்பதாகச் சொன்னதாகவும், ‘நாங்கள் என்ன ஆடா மாடா’ என்றும் த.பெ.க.கோ. கேட்கிறது. ‘உனக்கு மட்டும் என்ன கொம்பா முளைச்சு இருக்கு?’ என்று கேட்டால், ‘உனக்குக் கொம்பு எதுவும் இல்லை. அதனால், மற்றவர்களைப் போலத்தான் நீயும்’ என்றுதான் பொருள்கொள்ள முடியும். எனவே, சுஹாசினி சொன்னதன் அர்த்தமே, ‘தமிழர்களுக்கு என்று தனியே கொம்பு எதுவும் இல்லை. தமிழரானாலும், குஷ்பு மாதிரி வட இந்திய முஸ்லிமானாலும், எல்லா மனிதர்களும் ஒன்றே!’ என்பதுதான்.

    தமிழக கெப்பல்ஸ்களின் அடுத்த ஆட்சேபம், குஷ்புவை தமிழ்நாட்டை விட்டுப் போ என்றெல்லாம் சொல்லி மன வருத்தம் ஏற்படுத்தியதற்காக, தமிழ்நாட்டு மக்கள் சார்பில் சுஹாசினி, குஷ்புவிடம் மன்னிப்புக் கேட்டது பற்றியது. ‘தமிழ்நாட்டு மக்கள் சார்பாக மன்னிப்புக் கேட்க நீ யார்? நீ என்ன, முதலமைச்சரா?’ என்கிறது த.பெ.க.கோ.

    இருப்பதிலேயே மிக அபத்தமான ஆட்சேபம் இதுதான். ஒரு வாதத்துக்காக குஷ்புவிடம் முதலமைச்சரே தமிழக மக்கள் சார்பில் மன்னிப்புக் கேட்டதாக வைத்துக்கொள்வோம். அப்போதும், ‘நீ யார், தமிழக மக்கள் சார்பில் பேச?’ என்றுதான் கேட்பார்கள். ‘உனக்கு ஓட்டளிக்காதவர்களின் சதவிகிதம் 60&க்கும் மேல்’ என்றுதான் சொல்லி இருப்பார்கள்.

    இதில் விசித்திரம் என்னவென்றால், குஷ்புவைக் கண்டிக்கத் துடைப்பக் கட்டையும் கழுதையுமாக வந்தபோது, தமிழ்ப் பெண்கள் சார்பாக குஷ்புவைக் கண்டிக்க நாம் யார் என்று இவர்கள் யோசிக்கவில்லை என்பதுதான். தமிழ்ப் பெண்கள் எல்லாரும் ஏதாவது தேர்தல் நடத்தித் தங்கள் காவலர்களாக இவர்களைத் தேர்ந்தெடுத்தார்களா, என்ன? தமிழர்கள் சார்பாக இவர்கள் கண்டிக்கலாம் என்றால், தமிழர்கள் சார்பாக சுஹாசினி மன்னிப்பு கேட்கலாமே..!

    இன்னொருவர், தமிழர்கள் சார்பாக இவர்கள் எல்லாரையுமே கண்டிக் கலாம். இன்னொருத்தர் தமிழர்கள் சார்பாக, ‘சபாஷ்! சரியான பொழுது போக்கு. மஜாவா இருக்கு. தூள் பண்றீங்க. வுடாதீங்க, தொடர்ந்து செய்யுங்க. ஜாலியா இருக்கு’ என்றுகூட உற்சாகப்படுத்திப் பாராட்டலாமே!

    .இதுதான் அசல் பிரச்னை. இவர்கள் கெப்பல்சாக மட்டுமல்ல, ஹிட்லராகவும் இருக்க விரும்புகிறவர்கள். ‘நாங்கதான் கலாசாரக் காவலர்கள். நாங்க வெச்சது தான் சட்டம். எங்களுக்குப் பிடிக்க லைன்னா துடைப்பக் கட்டை, கழுதை வரும். ஜாக்கிரதை!’ என்பதுதான் இவர்கள் தரும் செய்தி.

    இந்த துடைப்பம், கழுதை, போராட்டம் என்பதை ஒடுக்கப்பட்ட வர்களின் அமைப்புகளே செய்வது வேதனையானது. கேவலமாகக் கருதப்படும் மனிதக் கழிவை அகற்றும் வேலையில் ஈடுபடுத்தப்படும் சாதி யினரைக் கேவலமாகப் பார்க்கும் அவலம் இன்னமும் இங்கே தொடர் கிறது. துப்புரவுத் தொழிலாளர்களும், சலவைத் தொழிலாளர்களும் பயன் படுத்தும் கருவிகளும் கேவலமானவை யாகக் கருதப்படுகின்றன. அதனால்தான் துடைப்பமும், அழுக்குத் துணியைச் சுமக்கும் கழுதையும் இழிவின் குறியீடு களாக இருக்கின்றன. யாரையாவது இழிவுபடுத்த வேண்டுமென்றால் துடைப்பமும், கழுதையும் பயன்படுத் தப்படுவது, ஆதிக்க சாதிப் பார்வை. தலித்துகளை இழிவுபடுத்தவே துடைப் பமும் கழுதையும் இழிவுச் சின்னங் களாக வரலாற்றில் ஆக்கப்பட்டன. இந்த இழிவைப் போக்கத்தான் பாரதி ‘சந்தித் தெரு பெருக்குவதை’ ‘சாத்திரம்’ என்றும், அதைக் ‘கற்போம்’ என்றும் பாடினான்.

    கருத்துச் சுதந்திரம் என்பது எல்லாருக்கும் உரியது. குஷ்புவின் கருத்து பத்திரிகையில் பிரசுரமாகிறது. அதை மறுத்து, அதே பத்திரிகையில் விவாதிக்கலாம். அதற்கு மறுப்பும் தொடரலாம். தன் கூட்டத்திலேயே தன் பேச்சை விமர்சித்துக் கேள்விகள் கேட்க அனுமதித்து, அப்படி கேள்வி கேட்டவருக்கு எழுதப் பென்சிலும் கொடுத்தவர் பெரியார். மாற்றுக் கருத்தைப் பேசவே விட மாட்டோம் என்று சொல்லுபவர்கள் பெரியார் பெயரைப் பயன்படுத்துவது வேதனையான விசித்திரம்!

    இந்த டிராஜடிக்கு நடுவே காமெடியாக இருப்பது, நடிகர் சங்கம் சுஹாசினிக்கு நோட்டீஸ் அனுப்பி யதுதான். சுஹாசினி, குஷ்பு கருத்துக் களைப் பற்றி நடிகர் சங்கம் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும், நடிகர் சங்கப் பொறுப்பில் இருக்கும் சரத்குமார், சுஹாசினியிடம் விளக்கம் கேட்டிருப்பதும் அபத்தமானவை. விஜயகாந்த், சரத்குமார், நெப்போலியன், ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன் போன் றோர் அரசியல்வாதிகளாக மேடையில் பேசும் பேச்சுக்கெல்லாம் அவர்களை நடிகர் சங்கம் விளக்கம் கேட்க முடியுமா என்ன? திருமாவளவன், ஜக்கி வாசுதேவிடம் போய் யோகா படித்துவிட்டு அவரை மார்க்ஸ்,-பெரியார், -அம்பேத்கர் ஆகியோருக்கு நிகராகப் பேசியது பற்றி விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப முடியுமா என்ன?

    கற்பு & -குஷ்பு & -சுஹாசினி எனத் தொடரும் இந்த விவகாரம் உண்மையில் கலாசாரப் பிரச்னை அல்ல. இது ஒரு அரசியல்! குஷ்புவின் கருத்தைவிடப் புரட்சிகரமாக அதே பாலியல் ஆய்வு பற்றிக் கருத்து தெரிவித்த கவிஞர் சுகிர்தராணிக்கு எதிராக த.பெ.க.கோ. வாயைத் திறக்கவில்லை. பாலியல் பற்றிய கட்டுரை வெளியிட்ட பத்திரிகை, குஷ்புவின் கருத்தை ஆதரித்து துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு விநியோகித்த சமூக ஆய்வாளர் பேராசிரியர் அ.மார்க்ஸ், பேட்டிகளில் ஆதரவு தெரிவிக்கும் வழக்கறிஞர் ரஜினி, சமூகப் பணியாளர் ஷெரீபா என்று யாருக்கும் எதிர்ப்புக் காட்டவில்லை.

    சினிமா துறை சார்ந்தவர் களுக்கு எதிராக மட்டுமே இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. அதன் உள் நோக்கம் என்ன என்பதும், த.பெ.க.கோ&வினரின் அறிக்கை களில் அம்பலமாகிவிட்டது. நடிகர் சங்கத் தலைவர் விஜய்காந்த், குஷ்பு பற்றி இப்போது என்ன சொல்லப் போகிறார், சுஹாசினி பேச்சு பற்றி என்ன செய்யப்போகிறார் என்று திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள். அதாவது, இவர்களின் அசல் இலக்கு அரசியலில் நுழைந்திருக்கும் விஜய்காந்த்தை தர்மசங்கடப்படுத்து வதுதான்.

    நமது சமூகத்தின் பாலியல் பிரச்னைகள் பற்றிய உண்மையான அக்கறை இருந்தால், நகரங்களில் மட்டுமல்ல, கிராமங்களிலும் டீன் ஏஜ் பெண்களிடையே அதிகரித்து வரும் கருச்சிதைவுகளுக்குக் காரணம் என்ன என்ற ஆய்வில் இறங்கவேண்டும். பள்ளிகளில் 9&வது வகுப்பு முதல் செக்ஸ் எஜுகேஷன் அறிமுகப்படுத் தப்பட உடனடி நடவடிக்கை எடுக்கும் படி மத்திய நல்வாழ்வு அமைச்சர் அன்புமணியை வற்புறுத்த வேண்டும்.

    ஆனால், நடப்பது அற்பமான தேர்தல் அரசியல். இதில் பலியாவது இரண்டு விஷயங்கள். ஒன்று, போலி ஒழுக்க முகமூடியைத் திணித்து பாலியல் பற்றிய நேர்மையான ஆய்வுக்கு வழி இல்லாமல் செய்வது. இரண்டாவது கருத்துச் சுதந்திரம்.

    குஷ்புவின் கருத்துக்களுடன் உடன்படுவோரும் சரி, உடன்படா தோரும் சரி, கருத்துச் சுதந்திரத்தில் நம்பிக்கை உள்ளோரானால், குஷ்புவுக்கும் சுஹாசினிக்கும் எதிராக நடைபெறும் இந்தத் தொடர் வன்முறையைக் கண்டிக்க முன்வர வேண்டும். நாளை தமிழ்நாட்டில் ஒரு கருத்தை வெளியிடுவதானால், கலாசார ஹிட்லர்களின் ஒப்புதல் இல்லாமல் வெளியிட முடியாது என்ற நிலை உருவாவதை இன்றே தடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

    மௌனம் காக்கும் கலைஞர்களும் எழுத்தாளர்களும்... குஷ்பு கருத்தை முதலில் கேட்டு வாங்கி வெளியிட்ட பத்திரிகை உட்பட எல்லா ஊடகங் களும் வாயை இப்போது திறக்கா விட்டால், பிறகு எப்போதும் திறக்க முடியாமல் போய்விடும்!


    ****

    இது நம்ம : இவரக்ளை தமிழ்நாட்டின் தாக்கரே என்று சொன்னதற்கு வருந்துகிறேன்... தமிழ்நாட்டை நூற்றாண்டு கணக்கில் பின்னுக்கு இழுக்கும் இவர்களை ஹிட்லருடன் ஒப்பிடலாம்.. ஆனால் அவரின் பிணம் மீண்டும் ஒரு முறை சமாதியிலிருந்து எழுந்து தற்கொலை செய்துகொள்ளும் சாத்தியம் இருப்பதால்...

    ReplyDelete
  50. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  51. //சரிய்யா அப்ப உடலுறவு கற்பில் சேத்தி இல்ல.. மனசுதான் சுத்தமா இருக்கனும். எப்ப ஒருத்தி கல்யாணத்துக்கு முன்பு உடலுறவு கொள்கிறாளோ அவள் தன் விருப்பப்படி முழு மனதோடுதானே உடலுறவு கொள்கிறாள்? அப்போ அவள் மனமும் ஒத்துழைத்துத்தானே உடலுறவு கொள்கிறாள்?//

    இதற்கு சுத்த பேத்தல் திலகம் சொன்ன பதில் லூஸ்தனமாக இருக்கிறது.

    ஒருத்தி தன் முழு மனதோடுதானே அடுத்தவனோடு உறவு கொள்கிறாள்? அங்கே மனதும்தானே சம்பந்தப் பட்டிருக்கிறது?

    ReplyDelete
  52. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  53. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  54. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  55. The volunteers of these parties who protest just for money are the real prostitutes...

    not those men or women who have premarital sex...

    ReplyDelete
  56. கவுண்டபெல், உங்களின் அனானிக்கான பதில், அனானி உங்களுக்கு கேட்ட கேள்வி இரண்டையும் அழிக்கிறேன்... மேலும் நீங்கள் எனக்கு சொல்லிய செய்தி கிடைத்தது... உங்கள் mind setஐ மாற்றும் நோக்கம் எனக்கு இல்லை... உங்கள் எண்ணம் உங்களோடு... ஆனால் அதை விளக்கமாக தெரிந்து கொள்ளவும் எனக்கு ஆர்வம் இல்லை.. உங்கள் வாதம் ஒரு எல்லைக்கோட்டுக்குள் இருந்த போது உங்களுடன் விவாதம் புரிய தயாராக இருந்த நான், நீங்கள் திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை பல்வேறு விதமாக எல்லை மீறி சொல்லும்போது மேலும் விவாதிக்க தயாராயில்லை...

    குஷ்பு தவறாக எதுவும் சொல்லவில்லை, அப்படியே சொன்னாலும் அதை கண்மூடித்தனமாக பின்பற்றும் நிலையில் எமக்குத்தெரிந்த தமிழ்ப்பெண்டிர் இல்லை... மேலும் அவர் மீது திணிக்கப்படும் பாஸிஸ வன்முறை சமுதாய எதிர்கால நலன் கருதி கண்டிக்கப்படவேண்டியது... இதுவே என் நிலை... இதில் மாற்றம் எதுவும் இல்லை... நன்றி...

    விவேக்கு, அனான்னிக்கு நீங்கள் விடுத்த பதிலில் புரிந்து கொள்ளல் ஒன்றும் இல்லை, வெறும் எல்லை மீறல் மட்டுமே.. ஆகவே அதுவும் அழிக்கப்படுகிறது..

    ReplyDelete
  57. கற்பு காற்றினில் இவ்வளவு பறக்க விடுவது பற்றி இணையத்தில் முன்முதலாகப் பார்க்கிறேன். தூக்கில் தொங்கலாம் போலத் தெரிகிறது.

    ReplyDelete
  58. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  59. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  60. ஞாநியின் கட்டுரை உண்மை நிலவரத்தை அழகாக ரிப்போர்ட் செய்திருக்கிறது, ஆனால், இவரும், சுகிர்தராணி, சுஹாசினி பற்றி மட்டுமே கூறியுள்ளாரே தவிர, கனிமொழியின் குஷ்பூ ஆதரவு நிலை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அது ஏன் மழுங்கடிக்கப்படுகிறது?

    ReplyDelete
  61. ஞானியின் செருப்பு, துடைப்பம் பற்றிய பொருட்களை எதிர்ப்புக்கு பயன்படுத்தை மற்றிய விமர்சனத்திற்கான பதில்.

    எது இழிவு என புகுத்தினார்களோ அதையே அவர்களுக்கு பயன்படுத்தினால் தான் அந்த வலி தெரியும் அதை விடுத்து ‘பூணுலால் அடி’ என்று கூறுவது என்னளவில் இரட்டை தம்ளர் முறையில் பாதிக்கப்பட்டவர்களை நோக்கி நீ ஏன் அவர்கள் உங்களை விலக்கி வைத்ததாக நினைக்கின்றாய், நீ அவர்களை விலக்கி வைத்ததாய் நினைத்துக் கொள் என்று அறிவுரை கூறும் கருத்துக்கு இணையானதாக கருதுகின்றேன்…

    இது தொடர்பாக தங்கமணி பதிவில் நடந்த ஒரு விவாதம் http://bhaarathi.net/ntmani/?p=174

    ReplyDelete
  62. இந்த விஷயத்தில் கனிமொழி ஒரே மா(ஆ)றுதல்.. விகடனில் அவர் கருத்தாக ::

    "ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு கருத்து இருக்கும். இப்படி மாறுபட்ட கருத்துகள் இருப்பது தான் எந்த விஷயத்தையும் ஒரு விவாதப் பொருளாக்கும். மாற்றுக் கருத்துகளையும் மதிக்கிற மனப்பான்மையை வளர்க்க வேண்டும். எதிர்க் கருத்து உள்ளவர்கள் எதிரியாகத்தான் இருக்க வேண்டும் என்கிற கலாசாரத்தை முதலில் மாற்ற வேண்டும். ஒருவருக்குத் தனது கருத்தைச் சொல்ல உரிமை இருப்பது போலவே அதை மறுக்கவும் இன்னொருவருக்கு உரிமை உண்டு. ஆனால், அந்தக் கருத்தை மறுப்பதற்குப் பதிலாக, அவரையே மறுக்கக் கூடாது. ‘உன்னுடைய கருத்தில் எனக்குக் கொஞ்சமும் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், அதை வெளிப்படுத்தும் உனது கருத்துச் சுதந்திரத்தைக் காப்பாற்றும் போராட்டத்தில், என் உயிரையும் தருவேன்’ என்று வால்டேர் சொன்னதுதான் இந்த விஷயத்தில் எங்களின் ஒருமித்த கருத்து!’’ என்கிற கனிமொழி...

    ReplyDelete
  63. என் பூணூலால்!

    what the hell!

    ReplyDelete
  64. // எது இழிவு என புகுத்தினார்களோ அதையே அவர்களுக்கு பயன்படுத்தினால் தான் அந்த வலி தெரியும் // இங்கே கழுதையும் செருப்பும் உபயோகப்படுத்துபவர்கள் பாமக கொடியை அல்லவா தூக்கிப்பிடிக்கிறார்கள்...

    தலித்துக்களை கீழ்சாதிக்காரர்கள் நிலையில் வைத்து வன்கொடுமை செய்யும் வன்னியர்களை குறிக்க என்ன அடையாளம் உபயோகிப்பீர்கள் குழலி..

    ReplyDelete
  65. //இங்கே கழுதையும் செருப்பும் உபயோகப்படுத்துபவர்கள் பாமக கொடியை அல்லவா தூக்கிப்பிடிக்கிறார்கள்...
    //
    வார்த்தை விளையாட்டு!!!

    //தலித்துக்களை கீழ்சாதிக்காரர்கள் நிலையில் வைத்து வன்கொடுமை செய்யும் வன்னியர்களை குறிக்க என்ன அடையாளம் உபயோகிப்பீர்கள் குழலி..
    //
    முதலில் வன்னியர்களுக்கு என்று தனியாக சாதீய அடையாள குறியீடுகள் கிடையாது, நீங்களே அந்த அடையாளத்தை சொல்லுங்களேன்...

    வன்கொடுமை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இழிபிறப்புகள், அந்த வன்கொடுமைக்கு வர்ணத்தை வளர்க்கவும் பாதுகாக்கவும் நேரடியாக அல்லது மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கும் எழுதும் அத்தனையும் நாய்களையும் விட கேவலமான இழிபிறவிகள், அந்த இழிபிறவிகள் அறிவுஜீவி போர்வையில் மறைந்திருந்தாலும்....

    ReplyDelete
  66. // எது இழிவு என புகுத்தினார்களோ அதையே அவர்களுக்கு பயன்படுத்தினால் தான் அந்த வலி தெரியும் அதை விடுத்து ‘பூணுலால் அடி’ என்று கூறுவது என்னளவில் இரட்டை தம்ளர் முறையில் பாதிக்கப்பட்டவர்களை நோக்கி //

    போராடுவது பாமக, விசி... போராட்டம் குஷ்புவை நோக்கி.. இப்ப பூணுல் எங்கே வந்தது... இது குறித்து கேட்டால் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் வர்ணம், கறுப்பு வெள்ளைன்னு வழக்கமான பல்லவியை பாட வந்துவிட்டீர்கள்... கொஞ்சம் சந்தர்ப்பம் கிடைத்தால் போதும், எல்லாப்ரச்னையையையும் சாதி/மத ரீதியக அணுகினால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும் அதானே...

    வழக்கம் போல மறைக்க வேண்டியதை மறைத்து, திரிக்க வேண்டியதை திரித்து தனக்கு வேண்டிய மாதிரி ப்ரச்னையை சாதகமாக்கி குருட்டுப்பூனை இருட்டை பார்த்தது போல் தனக்கு தோன்றிய எதையாவது மீண்டும் மீண்டும் மட்டையடியாக ப்ரச்சாரம் மேற்கொள்வதை மிகவும் நேர்த்தியாக மேற்கொள்கிறீர்கள்.. சைடுகிக்காக அறிவுஜீவி பற்றி விமர்சனம் வேறு...

    என்ன பேசுகிறோம் என்று கொஞ்சமாவது உணர்ந்துதான் பேசுகிறீர்களா?

    ReplyDelete
  67. செருப்பு துடைப்பமும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார கருவிகள் அதை இழிவு பொருட்களாக பயன் படுத்துவதை எதிர்த்து பூணுலால் அடி என்று குறிப்பிட்டதை ஏன் செருப்பு துடைப்பத்தை இழிவு பொருட்களாக பயன் படுத்தகூடாதா? என்பதற்காகவே அந்த பின்னூட்டம், முழு context க்கும் தங்கமணியின் பதிவை பார்க்கவும்...

    முகமூடி அவர்களே,
    வன்கொடுமை பற்றி இங்கே பேச ஆரம்பித்தவர் நீங்கள் பிறகு பேச ஆரம்பித்தவுடன் ஏன் குத்துது குடையது என அலறுகின்றீர், எத்தனை ஆனவமாக அறிவு ஜீவி 'சோ'வும் மற்றொரு அறிவுஜீவி ஜெயகாந்தன் வர்ணபேதமிருந்தால் தான் வாழ்க்கை ருசிக்கும் என்றும் வர்ணாசிரமத்தை தூக்கிபிடித்து பொதுவிலேயே பேசுகின்றனர், இது போதும் போதாதென்று அமி, வாசந்தி என இன்ன பிற அறிவுஜீவிகள்.... வன்கொடுமை பற்றி பேசும்போது இவர்களும் நிச்சயம் விமர்சிக்கப்பட வேண்டியவர்களே....

    திரித்தது எதை, திரித்தவர் யார் என எல்லோருக்கும் தெரியும்...

    உமக்கு தெரியவேண்டுமென்பதற்காக இதெல்லாம் பேசவில்லை, நீர் வழக்கமாக உங்கள் பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தவும்

    ஒன்றே ஒன்று சொல்ல ஆசைப்படுகின்றேன்.

    தன்னெஞ் அறிவது பொய்யற்க பொய்த்தபின்
    தன்னெஞ்சே தன்னைச் சுடும்

    ReplyDelete
  68. மேலே முகமூடியால் நீக்கப்பட்ட 'மாயவரத்தான்' என்ற பின்னூட்டமிட்டது நான் இல்லை. அனைவருக்கும் அது தெரிந்திருக்கும். நான் மீண்டும் மீண்டும் சொல்வது இது தான். அந்த ஈனப்பிரவிக்கு ஏன் இந்த வேலை? ஒரு வேலை பேர் வைக்க அந்த ஈனப்பிறவிக்கு அப்பா,அம்மா இருந்ததில்லை போலும். அதான் அடுத்தவர் பெயரை தனக்கு பயன்படுத்தி பேத்திக் கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  69. குழலி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக உங்களவர்கள் வன்கொடுமை செய்(த)து வருவதையெல்லாம் அந்த லிஸ்ட்டில் சேர்க்காமல் சாமர்த்தியமாக மறைப்பது மட்டும் எந்த வகையில் சேர்த்தி? அதே குறளை உங்களுக்கும் சொல்கிறேன்... "தன்னெஞ்..."

    ReplyDelete
  70. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  71. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  72. // வன்கொடுமை பற்றி இங்கே பேச ஆரம்பித்தவர் நீங்கள் // ;-)) குழலி... proof is in the pudding.. ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தால், அதை உண்மை என்று எல்லாரும் நம்ப ஆரம்பித்து விடுவார்கள்’ என்றார் ஹிட்லரின் பிரசார அமைச்சர் கெப்பல்ஸ்.'

    ஞாநி சொன்ன மற்ற எல்லா கருத்துக்களும் இருக்க, இங்கு நடக்கும் விவாதத்தின் சாரம் வேறு என்பது ஒருபுறம் இருக்க, குஷ்பு சொன்ன கருத்து இருக்க, ஒரு கருத்து சொல்ல அவருக்கு உரிமை இருக்கிறதா இல்லையா என்பது இருக்க, ஒரு கருத்து சொன்னதற்காக அவர் மீது கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறை, 36 ஊர்களில் அவர்மீது பாமக் வழக்கு தொடுப்பது சரியா தவறா என்பதெல்லாம் இருக்க, இதே கருத்தை அரசியல் சார்ந்த பிரபலம் ஒருவர் (இதை விட மோசமாக பெண்களை எல்லா கட்சிக்காரர்களும் பொதுமேடைகளில் இழிவுபடுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்) சொன்னால் ராமதாஸுக்கும் திருமாவுக்கும் இதே அளவு ரோஷம் இருக்குமா என்பது ஒரு புறம் இருக்க, இதே பதிவின் பின்னூட்டங்களில் உங்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் இருக்க, எல்லாவற்றிற்கும் மேலாக இந்த ஆபாச பாஸிச நாடகத்தை பொறுத்த வரை உங்களின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி இருக்க, "செருப்பு துடைப்பத்தை இழிவு பொருட்களாக பயன் படுத்தகூடாதா?" என்று பூணுலையும் இரட்டை தம்ளர் முறையையும் துணைக்கழைத்து அறிவுஜீவிகளையும் ஜெயகாந்தன் சோவையும் சாடி ஒரு விளக்கம் கொடுப்பது என்பது உங்களின் கருத்து சுதந்திரம்... ஆனால் இதற்கு முன் சொல்வீர்கள் பாருங்கள், கருத்தின் போக்கையே திசை திருப்புகிறார்கள் என்று, அதை இனி சொல்லாதீர்கள்...

    ReplyDelete
  73. காலை வரை மாடரேஷன் அமலில் இருக்கும் :) போலிகளை தவிர மற்றவர்களின் கருத்துக்கள அனைத்தும் வெளியாகும்

    ReplyDelete
  74. அப்பாடா...தேங்க்ஸ்..முகமூடி சார்.. கிரிக்கெட் பாக்குறதுக்காக நீங்க கண் முழுச்சி உட்காந்திருந்ததுனாலே என்னொட போலி அளித்த பின்னூட்டம் போச்சு..! :)

    ReplyDelete
  75. // கிரிக்கெட் பாக்குறதுக்காக //

    கிரிக்கெட்டா, அதெல்லாம் காலையில் வெறும் ஸ்கோர் கார்டு பாக்கறதோட சரி.. மத்தபடி போலி பின்னூட்டம் அழிக்கறது தண்ணிபட்ட பாடாயிடுச்சி :)

    ReplyDelete
  76. ஞானி சொன்ன அத்தனையும் ஏதோ இன்று சொன்ன புது கருத்துகள் இன்று தான் இவை இங்கே விவாதிக்கப் படுவது மாதிரியும் சொல்கின்றீரே, ஞானி சொன்ன இந்த கருத்துகளை தானே குஷ்புவை ஆதரிப்பவர்களும் தங்கரை எதிர்ப்பவர்களும் கடந்த சில மாதங்களாக மாற்றி மாற்றி விவாதித்தனர், அதில் கடும் சலிப்பு ஏற்பட்டதினால் தான் இந்த விவாதத்தில் அதிகம் அடிபடாத செருப்பு, துடைப்பம் இழி குறியீடாக பயன்படுத்தலைப் பற்றிய ஒரு பின்னூட்டமும் அது தொடர்பாக சிறப்பான (அதாவது வார்த்தை ஜாலங்களும் மட்டையடி விமர்சங்களும் இல்லாத ஹைய்யா எப்படி மடக்குனேன் பாரு என்கிற தொனி இல்லாத, ஒரு கருத்து பற்றி பேசிக்கொண்டிருக்கும் போதே அடுத்ததிற்கு தாவுகின்ற யுத்தி இல்லாத என் தமிழ்மணம் வாழ்க்கையில் கண்ட வெகு சில நேர்த்தியான விவாத களத்தில் ஒன்றாக அந்த தங்கமணியின் பதிவையும் அது தொடர்பாக நடந்த விவாதத்தையும் கருதுகின்றேன்...) பதிவை சுட்டிக் காட்டினேன்

    நீங்கள் ஞானி குறிப்பிட்டதாக கூறிய கேள்விகள் எல்லாம் கடந்த சில மாதங்களாகவே அலுப்பூட்டும் வரை அலசப்பட்டுவிட்டது.

    வன்கொடுமை பற்றி பேசி தாவி விவாதத்தை திசை மாற்றியது நீங்கள் தானே.... பிறகு ஏன் இந்த கலவரக் கூச்சல் அய்யோ விவாதம் திசை மாறுகிறதே என....

    இரட்டை தம்ளர்,மற்றும் பூணுல் பற்றிய முழு context தங்கமணியின் பதிவில் இதை ஏற்கனவே நான் கூறியும் நீங்கள் மீண்டும் இதையே கூறுவது எதை நிறுவுவதற்காக செய்கின்றீர் என புரியவில்லை....

    கடந்த சில மாதங்களாக குஷ்பு,தங்கர் பிரச்சினையில் அலசப்படாத (பலருக்கு குஷ்பு,தங்கர் என்பதைவிட இராமதாசு,திருமா எதிர்ப்பு பிரச்சாரமாக மட்டுமே பயன்பட்டது) என்ன புது கருத்து இந்த பதிவிலும் பின்னூட்டத்திலும் சொல்லப்பட்டுவிட்டது என்ற அலுப்பு தான்.... இப்போது புரிகின்றதா பதிவின் போக்கை மாற்றியது யாரென்று

    ReplyDelete
  77. Mugamoodi,

    Namma makkalai munnetraraangalo illiyo, intha maathiri Kalacharam, Naathiham, Varnam, Jaadhiyam ellam pesi paahubaatai valarthukine keeraango. Intha vishayathai politicians panninathu phoha ippo common makkalum panna aarambichuttanga.
    Irukkara chance ii vechi munnerratha vuttuttu Intha politicians pinnadi suthinu irukkanga paarunga. Avangala chollanum. Enna problem na konjam munneriyavarhalum Thangaloda Thalaivani sariya analyse panni paarkarathulle.

    //ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தால், அதை உண்மை என்று எல்லாரும் நம்ப ஆரம்பித்து விடுவார்கள்’ என்றார் ஹிட்லரின் பிரசார அமைச்சர் கெப்பல்ஸ்.//
    Ithe maathiri kettu kettu nammalunga Aattu manthayile apdiye Aikiyam aayidaraanga.

    ReplyDelete
  78. பிளாஷ் நியூஸ்....

    குஷ்புக்கு எதிராக நாங்க ஒண்ணும் கேஸ் போடலைன்னு ஜகா வாங்கியிருப்பது திருமாவளவன்.

    முழுமையான விவரங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு என்டிடிவியில்....

    ReplyDelete
  79. //‘ராமதாஸுக் கும் திருமாவளவனுக்கும் என்ன கொம்பா முளைத் திருக்கிறது. அவர்கள் என்ன பால் தாக்கரேவா? சினிமாக்காரர்கள் பற்றி பேச அவர்கள் யார்?’ என்று சுகாசினி கடுமையாகப் பேசினதாக இயக்குநர் சீமான் மூலம் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் காதுகளை எட்டியிருக்கிறது.’’ //

    இது நீங்கள் மேலே உங்கள் பின்னூட்டமொன்றில் குறிப்பிட்டிருப்பது. கீழேயுள்ளது குமுதம் ரிப்போர்ட்டரில் நான் படித்தது.

    //இயக்குநர் சீமான்தான் மிகவும் ஆவேசப்பட்டிருக்கிறார்.
    ‘‘ ‘என்னிடம் கருத்துக் கேட்டால் கிழித்திருப்பேன்’ என்று கூறுகிறார். என்னத்த கிழித்துவிடப் போகிறாராம். எந்த தைரியத்தில் அப்படிப் பேசுகிறார். ‘தமிழர்கள் சார்பாக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்’ என்கிறார். அவர் யார் கேட்பதற்கு? சுஹாசினி தமிழச்சியே அல்ல. அப்படி இருக்கும்போது, தமிழர்கள் சார்பா என்ன வேண்டிக்கிடக்கு! ‘என்னை பரமக்குடிக்கு ஓடு என்பார்களா?’ என்கிறார். எதற்கு? அவர் ஓடவேண்டிய இடம் கைபர்போலன் கணவாய்தான். பூர்வீகம் அவர்களுக்கு அங்கேதான். அப்படிப்பட்டவர் எப்படி தமிழச்சி என்று கூறிக் கொள்ள முடியும்?’’ என்று ஆவேசப்பட்டிருக்கிறார் சீமான்.//

    சானியா மிர்சா, குஷ்பு போன்றவர்கள் இஸ்லாமியர்கள், அவர்கள் எப்படி இப்படிச் சொல்லலாம் என்று இஸ்லாமியப் பக்கத்திலிருந்து தாக்குதல்கள், குஷ்பு மகாராஷ்டிராவுக்கு ஓடு என்று வெற்றுத் தமிழ் அராஜகவாதிகளின் கூக்குரல், இப்போது சுஹாசினி சொல்லியிருப்பதற்கு, சினிமாத்துறை ஃபுல்மீல்ஸ் பஞ்சாயத்து கோஷ்டிகளில் சமீபத்திய second-line defense சேர்க்கையான சீமான் சீறியிருப்பதைப் பார்த்தால் இன்னும் தமாஷாகத்தான் இருக்கிறது. ஒரு உதாரணத்துக்குச் சொல்கிறேன் - இதே சீமான், இந்து மதத்தைக்குறித்து விமர்சித்திருந்தால் இந்துத்துவ அடிப்படைவாத ரௌடிகளால் எப்படி நார் நாராய் விமர்சிக்கப்பட்டுக் கிழித்துத் தொங்கவிடப்பட்டு, நீ ஓடு கைபர் போலன் கணவாய்க்கோ அரேபியக் கண்டத்துக்கோ எனப்பட்டிருப்பாரோ, அது எவ்வளவொரு அருவருக்கத்தக்க, அராஜகமானதொரு விஷயமாக இருந்திருக்குமோ, அதே அராஜகத்துடன் அவரும் இப்போது கைபர் போலன் கணவாய் வழியாக ஓடு என்று சுஹாசினியைச் சொல்வதைப் பார்த்தால்தான் படு காமெடியாக இருக்கிறது. பிறந்த இடம் மட்டுமல்ல, வரித்துக்கொண்ட இடமும்கூடத்தான் கலாச்சாரம் என்ற அடிப்படை விஷயங்கூடப் புரிந்துகொள்ளாமல் ஆதித் தமிழ்க்குரங்கிலிருந்து வந்தவர்கள்தான் தமிழ்க் கலாச்சாரத்தைத் தூக்கிப்பிடிக்கவேண்டும் என்ற ரீதியில் உளறும் மடையர்கள்தான் தமிழ்க் கலாச்சாரம் என்ற ஒன்றுக்கு சீட்டுக்கடியில் குண்டு வைப்பவர்கள் என்பதை ஒருவர் மாற்றி ஒருவராக வரிசையில் வந்து உணர்த்திக்கொண்டே இருக்கிறார்கள். குஷ்புவை மஹாராஷ்டிராவுக்கும் சுஹாசினியை கைபர் போலன் கணவாய்க்கும் ஓடச்சொல்வதுபோல, வேற்று மாநிலங்களில், வளைகுடாவில், மேற்கத்திய நாடுகளில் இருக்கும் தமிழர்கள் அனைவரும் பெங்களூரில் அடித்துத் துவைக்கப்பட்டதுபோல, சொறிநாயைக் கல்லாலடிப்பதுபோல அடித்துத் துவைத்தெறியப்பட்டுத் துரத்தப்பட்டால் இந்தக் கலாச்சாரக் காவலர்களிடம் போய் கூடாரமும் கெரோஸின் பம்ப் அடுப்பும் தருமாறு கேட்கவேண்டியதுதான். எதையாவது சொன்னால்தான் அப்படி உதைபடவேண்டுமென்பதில்லை - அதுதான் "எதைச் சொன்னாலும்" தங்களுக்கு இஷ்டப்பட்டவாறு திரித்து உதைக்கலாம் என்று இவர்களே உதாரணபுருஷர்களாக பொளந்து கட்டுகிறார்களே; பிறகு வேறு யாரும் அதைத் "தமிளர்கள்" மேல் செய்தால் மட்டும் எந்த மூஞ்சை வைத்துக்கொண்டு வக்காலத்து வாங்க வருவார்களென்றுதான் தெரியவில்லை.

    திருமாவளவன் மேலும் குமுதம் ரிப்போர்ட்டரில் சொல்லியிருப்பது கீழே; இதில் விளக்குவதற்கு என்று ஒன்றும் பெரிதாக இல்லை, அனைத்துமே self-explanatory, படித்து அனுபவியுங்கள்:

    //இந்த சர்ச்சை பற்றி தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவரான தொல். திருமாவளவனிடம் பேசினோம்.

    நடிகை சுஹாசினி பேசியதற்கு எதிராக கிளம்புவது கருத்து சுதந்திரத்தைப் பறிப்பதாகாதா?

    ‘‘கருத்து சுதந்திரத்தைப் பற்றி பிறகு பேசலாம். முதலில் ஒன்றைக் கூறுகிறோம். தமிழகமே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. தலைநகர் சென்னை மிதக்கிறது. மீட்பு நடவடிக்கைகள் முழுதுமாக முடியவில்லை. நிவாரண உதவி வாங்கச் சென்ற ஆறு பெண்கள் இறந்து போன அதிர்ச்சி சோகம் இன்னும் அலையாய்ப் பரவிக்கிடக்கிறது.

    ஆனால், இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் வேற்றுக் கிரக மனிதர் மாதிரி சுஹாசினி செயல் இருக்கிறது. திடீரென்று குதித்து வந்து, அதுவும் எப்போதோ முடிந்துபோன குஷ்பு விவகாரத்திற்கு, இப்போது வந்து ‘கிழித்து விடுவேன்’ என்பதின் அவசியம் என்ன? தமிழகத்தின் இன்றைய நிலையோடு சமூகச் சூழலோடு இணைந்து வாழாத, கொட்டமடித்து கும்மாளம்போடும் கூட்டத்தைச் சேர்ந்தவராகத்தான் இருக்கிறார் சுஹாசினி.’’

    நடிகை குஷ்பு, எய்ட்ஸ் நோய் பற்றிய கருத்து சொன்னதற்கு எதிராக நீங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதைத் தானே தவறு என்கிறார்?

    ‘‘நடிகை குஷ்பு, எய்ட்ஸ் நோய் பற்றி இந்தியா டுடே இதழில் கருத்து சொன்னது பற்றி எந்தப் பிரச்னையுமில்லை. அதன் பிறகு தினத்தந்தி நாளேட்டிற்குக் கொடுத்தாரே பேட்டி, அதைத்தான் திமிர்த்தனம் என்று கண்டித்தோம். அது கூட, குஷ்பு மன்னிப்புக் கேட்டழுததோடு முடிந்து போயிற்றே.இப்போது அதைப்பற்றி என்ன பேச்சு. சம்பந்தமே இல்லாமல் இப்போது பேச வேண்டிய பின்னணி எது? தொடர்பே இல்லாமல் வந்து, ‘தமிழர்கள் என்றால் கொம்பு முளைத்திருக்கிறதா?’ என்றால், என்ன திமிர்த்தனம். கேலிக்குரியவன் தமிழன். கேட்பாரற்ற சமூகம். அதனால் எப்படியும் பேசலாம் என்ற சுஹாசினியின் ஆணவப் போக்கா என்பதுதான் இப்போதைய பிரச்னை.’’

    சுஹாசினியும் தமிழர்தானே. தமிழக மக்கள் சார்பில் குஷ்பு விவகாரத்துக்காக மன்னிப்புக் கேட்கிறேன் என்று பேசியிருக்கிறார்....

    ‘‘தமிழக மக்கள் சார்பாக மன்னிப்புக் கேட்க அவர் யார்? அதற்கு அவருக்கு என்ன அருகதை? அவருக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்குமான தொடர்பு என்ன? ஏற்கெனவே உலக மக்களால் தமிழனத் தலைவர் என அடையாளம் காட்டப்படும் கலைஞர் இருக்கிறார். கி.வீரமணி, பழ.நெடுமாறன் போன்றோர் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு, தமிழ்மக்கள் சார்பாக சுஹாசினி பேச என்ன திமிர் வேண்டும்! என்ன ஒரே இரவில் தமிழினத்தின் தலைவியாகி விட்டாரா? எந்தப் பின்னணி முகமூடியை மாட்டிக் கொண்டு அப்படி பேசினார் என்பதுதான் எங்கள் கேள்வி.’’

    பின்னணியா...?

    ‘‘முகமூடியாக இருப்பது வேறு யாருமல்ல. ‘பெண்ணியவாதம்’ எனப் பேசும் சில மூளை வீங்கிகள்தான். அவர்கள்தான் ஒரு கட்டமைப்போடு இருக்கின்ற தமிழ்ச் சமுதாய கலாசாரப் பண்பாட்டு கற்பு நெறிகளை எல்லாம் கொச்சைப்படுத்தி வருபவர்கள். குஷ்பு மாதிரி, குஷ்பு சொன்னமாதிரி ‘எல்லோரும் ஆணுறையைக் கையில் வைத்துக் கொண்டு அலையுங்கள்’ என்று கூறுபவர்கள். அவர்கள் வீட்டிலுள்ள பையன்களுக்கும், பெண்களுக்கும் தினமும் ஒரு ஆணுறையைக் கொடுத்து ‘கற்பு கெடக்கட்டும் போ, எப்படி வேண்டுமானாலும், யாருடன் வேண்டுமானாலும் உறவு வைத்துக்கொண்டு விட்டு வாருங்கள்’ என்று சொல்லி அனுப்புபவர்கள். அந்த அறிவு ஜீவிகள் எனும் மூளைவீங்கிகள்தான் சுஹாசினியின் குரலுக்குப் பின்னணியாக இருக்கிறார்கள்.

    ஏற்கெனவே சுஹாசினி தமிழ் சமுதாயத்தைக் கெடுத்து குட்டிச்சுவராக்கியது போதாது என்று, இளைஞர்களின் சிந்தனையை ‘ஆடைகளை அவிழ்த்துக்காட்டி சுரண்டியது போதாது என்று, இப்போது புதிய அரிதாரம் பூசி வருகிறார். என்ன நெஞ்சழுத்தம், திமிர்த்தனம் இருந்தால் தொடர்பே இல்லாமல் மேடையில் அப்படி பேச வருவார்? அந்தளவிற்கு நாதியற்றுக் கிடக்கிறதா தமிழ் சமூகம்?’’

    இதில் நடிகர் விஜயகாந்த்தை ஏன் இழுத்து வருகிறீர்கள். அவருக்கு புகார் கடிதம் அனுப்பும் அவசியம் என்ன?

    ‘‘ஏற்கெனவே குஷ்பு பிரச்னையில், ‘யாரும் என்னிடம் புகார் தரவில்லை. அதனால் நடிகர் சங்கத்தில் அவரை அழைத்து விசாரிக்கவில்லை’ என்றார் அவர். இப்போது அவர் நடிகர் சங்கத்திற்குத் தலைவர் மட்டுமல்ல, ஒரு அரசியல் கட்சித் தலைவரும் கூட. நானும் தமிழன்தான் என்பவர், முடிந்துபோன குஷ்பு பிரச்னைக்கு, இப்போது சுஹாசினி ‘தமிழர்களுக்கு எல்லாம் இரண்டு கொம்பு முளைத்திருக்கிறதா?’ என்று கொச்சைப்படுத்தி உலகத் தமிழர்கள் எட்டுக் கோடிப் பேரின் மனதையும் புண்படுத்தி சீண்டிப் பார்த்திருக்கிறார். தமிழன் என்று கூறிக்கொள்ளும் விஜயகாந்த் தட்டிக் கேட்க வேண்டும். அல்லது நடிகர் சங்கத் தலைவர் என்ற முறையிலாவது நடந்துகொள்ள வேண்டும். அதற்காக முறைப்படி கடிதம் அனுப்பியிருக்கிறோம். ஒரு நடிகையைப் பற்றி சாதாரணமாகக் கருத்து தெரிவித்ததற்கே தங்கர்பச்சானை மன்னிப்புக் கேட்கÊ வைத்த போது, எட்டுக் கோடி தமிழ் மக்களின் உணர்வுகளை அடித்துச் சீண்டியதற்கு மன்னிப்புக் கேட்க வைக்க வேண்டுமல்லவா?’’

    ‘தமிழர்களுக்குக் கொம்பு முளைத்திருக்கிறதா?’ என்று சுஹாசிணி சொன்னதில் என்ன சர்ச்சை?

    ‘‘முதலில் கலைஞர், கி.வீரமணி, பழ.நெடுமாறன், மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி, தந்தை பெரியார் இவர்களுக்கெல்லாம் கொம்பு முளைத்திருக்கிறதா என்று சுஹாசினி வந்து பார்க்கட்டும். கொம்பு முளைத்தவர்கள் என்றால்... என்ன ஆடு மாடுகளா, அல்லது காட்டுமிராண்டிகளா? பண்பட்ட தமிழ்ச் சமுதாயத்தை உலக அரங்கே பேசி வரும்போது, யாரை அவர் காட்டு மிராண்டிகளாகச் சித்திரிக்கிறார். அனைத்திற்கும் மேலாக தமிழினப் பெண்களின் ஆதரவோடு, முதல்வராக உள்ள ஜெயலலிதாவே ‘குஷ்பு சொன்னது தவறு’ என்று கூறியிருக்கும்போது, அந்த முதல்வரின் கருத்துக்கு எதிராக ‘கிழித்திருப்பேன்’ என்றால், யாரை முதல்வரையேவா? அல்லது அவரையும் கொம்புமுளைத்த காட்டுமிராண்டிதான் என்கிறாரா சுஹாசினி. தெளிவுபடுத்த வேண்டும். இதுதான். வேறு அர்த்தம் ஏதும் இல்லை.’’

    சுஹாசினி பேசிய மேடையில் பாரதிராஜாவும் இருந்திருக்கிறாரே....

    ‘‘இயக்குநர் இமயம் பாரதிராஜா ஒரு சொரணை உள்ள தமிழ் உணர்வாளர். இந்த மண்ணின் மைந்தர். அவர் அந்த மேடையில் அமைதி காத்தது எங்களுக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் அதிர்ச்சி வேதனையை அளித்திருக்கிறது. அப்படிப்பட்ட அமைதிதான் தமிழ் இனத்திற்கும், மொழிக்கும், மண்ணுக்கும் எதிராக அமைந்து விடுகிறது. ஆபத்தானதாக இருந்து விடுகிறது. சுஹாசினியைப் போன்றவர்கள் எல்லாம்கூட, தமிழினத்தைக் கேவலப்படுத்திக் கொண்டே இருக்கும்படியாகிறது. பாரதிராஜா அந்த மேடையிலேயே எதிர்த்துப் பேசியிருந்தால் அந்த மண்ணின் மைந்தன் சிங்கமாக இருந்திருப்பார். அது பொய்த்துப் போய் விட்டதோ என்ற ஆதங்கம் உள்ளது.’’

    இறுதியாக என்ன சொல்கிறீர்கள், அடுத்தகட்ட போராட்டம் ஏதாவது உண்டா?

    ‘‘நிபந்தனையற்ற மன்னிப்பை சுஹாசினி கேட்க வேண்டும். விஜயகாந்த் இதை முன்னின்று செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில், பிறகு என்ன விதமான போராட்டத்தை நடத்தப் போகிறோம் என்பதை சொல்வதிற்கில்லை. பொறுத்திருந்து பாருங்கள்’’ என்றார் திருமாவளவன்.//

    ReplyDelete
  80. // குஷ்புக்கு எதிராக நாங்க ஒண்ணும் கேஸ் போடலைன்னு ஜகா வாங்கியிருப்பது திருமாவளவன். //

    வழக்கம் போல தமிழுணர்வுள்ள மக்கள் அவர்களா சொரணை வந்து கேஸ் போடறாங்க... வெயிலுக்கு இதமா பிடிக்க எங்க கட்சி கொடிய தூக்கிகிட்டு போறாங்கன்னுவாரு அவரு.. இந்த கொடுமைய பாக்குறதுக்கு அஜீத் படம் எதுனா இருந்தா பாக்கலாம்...

    ReplyDelete
  81. // அவர் ஓடவேண்டிய இடம் கைபர்போலன் கணவாய்தான் //

    இதை சொல்வதற்கு சீமானுக்கு முழு அருகதை இருக்கிறது... இந்தியா பிச்சிகிட்டு வந்து ஆசியாவுடன் ஒட்டிய பிறகு தெற்கு கோடியில் உருவாகிய பாசி பரிணாம வளர்ச்சி அடைந்து மாறிய குரங்கின் அடுத்த கட்ட வளர்ச்சிதான் சீமான்.. அதன் பிரதிபலிப்பை இன்னமும் அவரிடம் காணலாம்... அதை தனது பல படங்களிலும் நிரூபித்தவர்...

    // "எதைச் சொன்னாலும்" தங்களுக்கு இஷ்டப்பட்டவாறு திரித்து உதைக்கலாம் என்று இவர்களே உதாரணபுருஷர்களாக பொளந்து கட்டுகிறார்களே; பிறகு வேறு யாரும் அதைத் "தமிளர்கள்" மேல் செய்தால் மட்டும் எந்த மூஞ்சை வைத்துக்கொண்டு வக்காலத்து வாங்க வருவார்களென்றுதான் //

    அப்பொழுதெல்லாம் இவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பு இருக்கும்... வக்காலத்து வாங்கவெல்லாம் நேரம் இருக்காது...

    நமக்கு புரியாத விஷயம் இந்த கேஸ்களில் என்ன கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்... தமிழினம் என்று பொத்தாம்பொதுவாக வழக்கு போட முடியுமா? மன்னிப்பு கேட்டதை தவிரவும் இவர் மீது என்ன தண்டனை பெற முடியும்.. ஏன் இதை ஒரே வழக்காக ஹை-கோர்ட்டில் இதை consolidate செய்யாமல் நேரம் செலவழித்துக்கொண்டு இருக்கிறார்கள்

    ReplyDelete
  82. கருத்துச் சுதந்திரக் காப்பு இயக்கத்தின் தளபதி (தலைவர்?) முகமூடியின் பதிவில் "This post has been removed by a blog administrator" , "வெறும் எல்லை மீறல் மட்டுமே.. ஆகவே அதுவும் அழிக்கப்படுகிறது.." போன்ற வாசகங்களா?? கமெண்ட் மாடரேஷனா?? 'போலிகளை தவிர மற்றவர்களின் கருத்துக்கள்' எப்படி கண்டுபிடிப்பதென்றும் ஒரு பதிவு போடலாமே என்று நண்பர் ஒருவர் கேட்டிருந்தார்...

    இது குறித்த என் சிறுகுறிப்பு :: பெயர், படம் எல்லாம் ஒன்று போலவே வைத்து ஆனால் ப்ளாக்கர் ஐடி மாற்றி எழுதப்படும் பின்னூட்டங்களை அவை நல்ல விதமாகவே எழுதப்பட்டாலும், (அது போலியென தெரிந்ததல்) அழிப்பதை ஒரு பழக்கமாக வைத்திருக்கிறேன்... இதுவரை அதை அடையாளம் தெரியாத வகையில் (delete permanently) அழித்திருப்பதால் அவ்வளவாக தெரியவில்லை... இன்று கொஞ்சம் மிச்சம் விட்டு வைத்ததால் இப்படி ஒரு கேள்வி வந்திருக்கிறது. இன்று மாயவரத்தான், l.l.dasu ஆகியோர் பெயரில் போலி பின்னூட்டங்கள் வந்தன. போலிகளை எப்படி கண்டுபிடிப்பதென்று பலமுறை பல பதிவுகளில் பலர் எழுதியுள்ளனர்.. சுலபமான வழி எலிக்குட்டியை எழுதுபவர் பெயரில் வைத்தால் ப்ளாக்கர் ஐ.டி தெரியும்.

    மற்றபடி என் பதிவையும் பின்னூட்டங்களையும் அனைவரும் படித்திருக்கலாம்.. எல்லையில் நிற்கும் ஆனால் கொஞ்சமாவது சம்பந்தமிருக்கும் பல விஷயங்கள் இன்னமும் பதிவில் இருக்கின்றன.. பலவற்றுக்கு நிதானமாக பதிலும் சொல்லியிருக்கிறேன்... ஆனால் கருத்துடன் சற்றும் சம்பந்தம் இல்லாது, வெறும் உடலுறுப்புக்களை குறிக்கும் வார்த்தைகளை மட்டும் உபயோகப்படுத்தி ஏதாவது உளறினால் அதை எல்லை மீறலாக கருதுவதற்கு எனக்கு உரிமை உள்ளது... கமெண்ட் மாடரேஷன் 5 மணி நேரங்கள் மட்டுமே அமலில் இருந்தது... மீறியும் அந்த பின்னூட்டங்களை நாங்கள் அறிந்தே ஆகவேண்டும் என்று கருத்துத்தாகம் யாருக்கும் இருப்பின் வக்கிர மனம் கொண்ட ஒருவருக்கு ஃபுல் பாட்டில் வாங்கிக்கொடுத்து அவரை பேச சொல்லி கேட்கலாம் அல்லது அழிக்கப்பட்ட பின்னூட்டங்களில் சிலதை ஃபார்வேர்டு செய்யச்சொல்லி எனக்கு தனி மடல் அனுப்பலாம்...

    ReplyDelete
  83. //அதன் பிரதிபலிப்பை இன்னமும் அவரிடம் காணலாம்... அதை தனது பல படங்களிலும் நிரூபித்தவர்//

    பல படங்களிலும் காணலாமா? அப்படி ஒரு ஆளு இருக்குதா தமிழ் (ஸாரி.. தமிள்) சினிமாவில்?!

    ReplyDelete
  84. நிதி திரட்டுவதென்றால் அனைத்து நடிகர் நடிகைகளையும் அரவணைத்து செல்லும் ஆதரவு கோரும் நடிகர் சங்கம், தனது உறுப்பினர் ஒருவருக்கு எதிராக ஆபாசமாக நடக்கும் செய்கைகளை கண்டிக்க "சினிமாவில் இறுதியாக வரும் போலீஸ்" போல ஒரு வழியயக முடிவு செய்துள்ளதாக தினமலர் சொல்கிறது.. செய்தி உண்மையாக இருந்தால் நடிகர் சங்கத்தின் வீரத்துக்கு நமது பாராட்டு.

    குஷ்புக்கு ஆதரவு கொடுக்க நடிகர் சங்கம் தயார் * முதல்வரிடம் பிரச்னையை எடுத்து செல்ல முடிவு

    சென்னை: "கற்பு' பற்றி கருத்து கூறி சிக்கலில் மாட்டியுள்ள குஷ்பு மற்றும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் கடும் எதிர்ப்பை சந்தித்து வரும் சுகாசினிக்கு நடிகர் சங்கம் தற்போது ஆதரவு கரம் கொடுக்க முன் வந்துள்ளது.

    இதுகுறித்து நடிகர் சங்க பொதுச் செயலரும், நடிகருமான சரத்குமார் கூறியவதாது:
    நடிகைகள் குஷ்பு, சுகாசினிக்கு எதிர்ப்பாக நடந்து வரும் நடவடிக்கைகளை பார்த்து கொண்டு நடிகர் சங்கம் இனி அமைதியாக இருக்காது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சங்கத் தினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். எதிர்காலத்தில் நடிகர், நடிகைகளுக்கு எதிரான இதுபோன்ற நடவடிக் கைகளை தடுக்க, தேவைப்பட்டால் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுப் பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    நடிகர் சங்கத்தில் நடிகைகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர் என்ற நிலை கிடையாது. நடிகர், நடிகைகளின் உரிமைகளை பாதுகாக்க அரசியல் சார்பை தாண்டி ஒன்றுபட்டு செயல்படுவோம். அதேநேரத்தில் பொது இடங்களில் நடிகர்கள், நடிகைகள் கருத்துக்களை தெரிவிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களால் திரையுலகத்திற்கே பாதிப்பு ஏற்படுகிறது என்பதை உணர வேண்டும்.

    குஷ்பு, சுகாசினி ஆகியோருக்கு எதிராக நடந்து வரும் நடவடிக்கைகள் குறித்து அனைத்து நடிகர்களிடமும் பேசி வருகிறோம். எந்தவகையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விரைவில் முடிவு செய்யப் படும். நடிகை குஷ்பு தெரிவித்த கருத்து அவரது சொந்த கருத்தே. அதற்கும் சங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதேநேரத்தில் அவருக்கு எதிர்ப்பு காட்டுகிறோம் என்ற பெயரில் நடக்கும் விஷயங்கள் சரியல்ல. செருப்புகளை எறிவது, துடைப்ப கட்டைகளை காட்டுவது, அழுகிய முட்டைகளை எறிவது, கொடும்பாவி எரிப்பு போன்ற சம்பவங்கள் ஏற்புடையது அல்ல. அனைவரிடமும் மன்னிப்பு கேட்க சொல்வது சரியல்ல. இதுபோன்ற பிரச்னைகளை நடிகர் சங்கம் வலிமையுடன் எதிர்கொள் ளும். நாங்கள் குஷ்புவை கைவிட்டுவிட மாட்டோம். செயற்குழுவில் இருந்து அவரை விலக்கி வைக்க வேண்டும் என சிலர் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் நாங்கள் அது போல் செய்யவில்லை.இப்பிரச்னையை விரைவில் முதல்வரிடம் எடுத்துச் செல்வோம். மேலும், தணிக்கை குழு, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஆகியோரிடம் இப்பிரச்னை எடுத்துச் செல்லப்படும்.இவ்வாறு நடிகர் சரத்குமார் கூறினார்.

    ReplyDelete
  85. Chidambarm decries protests against Kushboo

    Sunday, 20 November , 2005, 17:06

    Sivaganga: Union Finance Minister P Chidambarm on Sunday disagreed with the protests against film actress Kushboo for her remarks on pre-marital sex by women, saying freedom of speech cannot be curtailed.

    "There is no need for one to react to another's views. I am not going to comment on it. But, in India one has got the right to speech and freedom to express views. Attempts to curtail or take away these cannot be accepted," he said on Saturday night when asked to respond to Kushboo's remarks.

    Kushboo is facing a volley of court cases and protests over her comments on pre-marital sex published as part of a sex survey in the magazine.

    எங்கே தனது பெயர் தவறாக பிரச்சாரம் செய்யப்பட்டுவிடுமோ என்று அமைதி காக்கும் பல சா(சோ)தா அரசியல்வாதிகள் போல் இல்லாமல் வெளிப்படியாக தமிழ்சேனைத்தொண்டர்களின் பாஸிஸத்தை எதிர்த்து கருத்துக்கூறிய ப.சிதம்பரத்திற்கு நமது பாராட்டுகள்...

    ReplyDelete
  86. குஷ்பு விவகாரத்தில் வன்முறை கூடாது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கருத்து

    குஷ்பு விவகாரத்தில் வன்முறை கூடாது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கருத்து

    சென்னை, நவம்பர் 20-:

    நடிகை குஷ்பு பிரச்சினையில் வன்முறையை உருவாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்டு கம்நனிஸ்டு கட்சி கூறியுள்ளது.

    மார்க்சிஸ்ட் கம்நனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் என். வரதராஜன் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் கூறி இருப்பதாவது-

    நடிகை குஷ்பு தெரிவித்த கருத்து சம்பந்தமாக தமிழகத்தில் ஒரு சிலர் கண்டன ஆர்ப்பாட்டம், உருவபொம்மை எரிப்பு, கிரிமினல் வழக்குகள் தொடுப்பது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். சமீபத்தில் நடிகை குஷ்புவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நடிகை சுகாசினி மீதும் இது போன்ற வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

    குஷ்பு தெரிவித்துள்ள கருத்து ஏற்புடையது அல்ல. ஆனால் மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கிற முறை ஜனநாயக ரீதியிலும், ஆரோக்கியமான முறையிலும் இருக்க வேண்டும். தமிழக மக்களிடையே எத்தனையோ வாழ்க்கை பிரச்சினைகள் குவிந்து கிடக்கிறபோது, இந்த பிரச்சினையில் நடந்து வரும் நிகழ்ச்சிகள் விரும்பத்தக்கதல்ல. எனவே வன்முறையை உருவாக்கக்கூடிய நடவடிக்கைகள் கைவிடப்பட வேண்டும்.

    இவ்வாறு என். வரதராஜன் கூறி உள்ளார்.

    இந்திய கம்நனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    குஷ்பு கூறிய கருத்தை கண்டித்து இயக்கம் நடத்துவதும், வழக்குகள் போட்டு இருப்பதும் விரும்பத்தகாத நடவடிக்கை ஆகும். டென்னீஸ் வீராங்கனை சானியா மிர்சா எத்தகைய உடை அணியவேண்டும் என்று மிரட்டுகின்ற அளவுக்கு தரம் தாழ்ந்திருக்கிறது. நீதிமன்ற உத்தரவுப்படி ஆஜர்ஆக வந்த ஒருவரை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பே கீழ்த்தரமாக நடத்திய நிகழ்ச்சிகள் கடும் கண்டனத்திற்கு உரியவை ஆகும்.


    தமிழக பெண்களின் கற்பு பண்பாடு பற்றி கவலைப்படுவோர் சதாசிவம் குழு பரிந்துரைகளை படிக்க வேண்டும். குஷ்பு கருத்துக்கு உடன்பாடு இல்லாதவர்கள் மறுப்பு கருத்துக்களை வெளியிடலாமே தவிர ஜனநாயக நெறிகளுக்கு மாறான முறையில் போராட்டங்கள் நடத்துவதை கைவிடவேண்டும்.


    இவ்வாறு தா. பாண்டியன் கூறி உள்ளார்.

    நன்றி: விகடன்

    ReplyDelete
  87. // முகமூடி, உங்கள் வலைப்பதிவு பற்றி ஒரு சிறிய குறிப்பு இன்று வந்த இந்தியா டுடேயில் 'தகவல்கள்' பக்கத்தில் வந்திருக்கிறது. தினமலருக்கு இது எவ்வளவோ மேல். //

    தகவலுக்கு நன்றி rebellious.. நண்பரிடம் வாங்கச்சொல்லி எழுதியிருப்பதை அறிந்து மகிழ்ந்தேன்.. (தமிழ் இந்தியா டுடே இருப்பவர்கள் யாராவது ஸ்கேன் செய்து அனுப்ப முடியுமா? மேலும் தகவல்கள் பகுதி பற்றி அறிந்தவர்கள் சொல்லுங்கள்)

    ****

    நன்றி வெற்றிவேல்..

    // It served to divide India into a northern Aryan and southern Dravidian culture which were made hostile to each other // அது இன்னமும் பலருக்கு பயன்படுகிறது

    // Tolerance is not in allowing a false view of one's own culture and religion to be propagated without question. That is merely self-betrayal // என்பது காட்டான்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.. ஆனால் இதை ப்ரச்சாரம் செய்யும் ஆசான்களுக்கு தெரியாமலா இருக்கும் என்று நினைக்கிறீர்கள்

    ***

    // `DPI, PMK not responsible' Mr. Tirumavalavan denied that that DPI and Pattali Makkal Katchi workers were behind the agitations against Ms. Kusuhboo, as was alleged. When pointed out that both the PMK and DPI workers were found participating in an agitation against Ms. Kushboo at Mettur, Mr. Tirumavalavan said the public on their own organised the agitation in various parts of the State and some people might have carried party flags.

    முன்பு பேட்டி வருவதற்கு முன் ராம்கி சுட்டிய போதே நான் குறிப்பிட்டது இது "வழக்கம் போல தமிழுணர்வுள்ள மக்கள் அவர்களா சொரணை வந்து கேஸ் போடறாங்க... வெயிலுக்கு இதமா பிடிக்க எங்க கட்சி கொடிய தூக்கிகிட்டு போறாங்கன்னுவாரு அவரு.. இந்த கொடுமைய பாக்குறதுக்கு அஜீத் படம் எதுனா இருந்தா பாக்கலாம்..." இவர்களை சிறுத்தைகள் சும்மா விடாது என்று கர்ஜனை செய்துவிட்டு, இப்போது அண்ணன் பாணியில் அந்தர் பல்டி அடிக்க கற்றுக்கொண்டுள்ளார் திருமா.. இவர்களின் செயல்களுக்கு கண்டனங்கள் எழ ஆரம்பிக்கும் போதே பல்டியடிக்கும் இவரின் தைரியத்தை எண்ணி இவரை நம்பும், இவரை ஆதர்சமாக கருதும் திராவிட குளுவான்கள் பெருமைப்படலாம்...

    ***

    // இங்கு உங்கள்(!) குஸ்பு மற்றும் சுகாசினி ஆகியோருக்கு ஆதரவாக எழுதப்பட்ட பின்னூட்டங்கள் அப்படியே இருக்கின்றன. ஆனால் குஸ்பு, சுகாசினி பேசியது தவறு என்று சொல்லப்பட்ட பின்னூட்டங்கள் அழிக்கப் பட்டிருக்கின்றன. //

    போலியன், நன்றாக மீண்டும் ஒரு முறை எல்லாவற்றையும் படித்துப்பார்க்கவும்... இதையும் படிக்கவும்.... ஆதரித்து எழுதப்பட்டவையா, எதிர்த்து எழுதப்பட்டவையா என்றெல்லாம் பார்த்து அழிக்கப்படவில்லை.. நான்காம் தர வார்த்தைகளை கொண்டிருந்த பின்னூட்டங்களே அழிக்கப்பட்டன.. உங்களுக்கு அப்பின்னூட்டங்கள் வேண்டுமெனில் எனக்கு தனி மின்னஞ்சல் செய்யவும்... நீங்கள் சுகாசினி, குஷ்பு கருத்தை எதிர்த்து தாராளமாக எழுதலாம், ஆனால் எல்லை மீறாமல்...

    ReplyDelete
  88. குஷ்புவுக்கு எதிராக போராட்டம்: பா.ம.க-விடுதலை சிறுத்தைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? தமிழக அரசுக்கு கலெக்டர் அறிக்கை - மாலைமலர்

    சேலம், நவ. 21-

    பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு தெரிவித்த கருத்து தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி 20க்கும் மேற் பட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    சேலம் மாவட்டம் மேட்டூர் 2-வது ஜ×டிசியல் கோர்ட்டிலும் பா.ம.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் குஷ்புவுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து அவர் கடந்த 16-ந் தேதி மேட்டூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். குஷ்பு மீதான பிடிவாரண்டு ரத்து செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

    குஷ்பு மேட்டூர் கோர்ட்டில் சரண் அடைய வந்தபோது அவருக்கு எதிராக பா.ம.க., விடுதலை சிறுத்தை அமைப்பை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    குஷ்பு கோர்ட்டில் இருந்து வெளியே வந்த போது அவருக்கு எதிராக விடுதலை சிறுத்தை இயக்கத்தை சேர்ந்த பெண்கள் செருப்புகளை காட்டினார்கள். மேலும் அவரது கார் மீது செருப்பு, அழுகிய தக்காளி, முட்டை வீசப்பட்டன. இதனால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினார்கள்.

    குஷ்புவுக்கு எதிராக நடந்த சம்பவங்கள் தொடர்பாக சேலம் கலெக்டர் சுகுமாரனிடம் 2 பக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேட்டூர் தாசில்தார் பயாஸ் முகமதுகான் அந்த றிக்கையை சேலம் கலெக்டரிடம் தாக்கல் செய்துள்ளார்.

    குஷ்பு கோர்ட்டில் சரண் அடைய வந்தபோது ஏற்பட்ட சட்டம் மற்றும் ஒழுங்கு பற்றி அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செருப்பு, முட்டை வீசப்பட்டது பற்றியும் விரிவாக அறிக்கையில் எழுதப்பட்டுள்ளது.

    அறிக்கையோடு வீடியோ டேப்பும், போலீசார் எடுத்த போட்டோக்களும் இணைத்து தாக்கல் செய்யப்பட்டன. மேட்டூர் கோர்ட்டு முன்பு போலீசாரின் காவலை மீறி பா.ம.க., விடுதலை சிறுத் தையினர் தாசில்தாரை முற்றுகையிட்டதும் வீடியோ ஆதாரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

    பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தை இயக்கத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கோர்ட்டு முன்பு கூடி இருப்பதும், கோஷங்கள் போடுவதும் குஷ்புவை நோக்கி செருப்பை காட்டுவதும், அவரது கார் மீது செருப்பு, தக்காளி, முட்டை வீசுவதும் போன்ற காட்சிகள் வீடியோவில் இடம் பெற்றுள்ளதாக கூறப் படுகிறது.

    சேலம் கலெக்டர் இந்த அறிக்கையை விரைவில் தமிழக அரசிடம் தாக்கல் செய்ய உள்ளார்.

    இந்த அறிக்கையின் அடிப்படையில் பா.ம.க., விடுதலை சிறுத்தை இயக்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தொìகிறது.

    ReplyDelete
  89. இந்த வாரம் வீக்-கும் தன் பங்குக்கு சில சர்வேக்களை வெளியிட்டிருக்கிறது...
    பார்த்தீர்களா!?

    ReplyDelete
  90. ""குஷ்பு விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. இது போன்ற விவகாரங்களில் தலையிடுபவர்களையும் எனக்கு பிடிப்பதில்லை,'' என்று கருணாநிதி கூறினார்.

    ReplyDelete
  91. குண்டு பூ நடிகை கற்பு குறித்து கொடுத்த வாய்ஸிற்கு எதிராக பிலிம் பொட்டி எரிப்பு கட்சி நிறுவனர் போர்க்கொடி துõக்கியுள்ளார் அல்லவா? அவருடன் சமரசம் செய்து கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார் குண்டு பூ நடிகை. இதற்காக நிறுவனரின் பெண் வாரிசை அணுகியுள்ளார். இவர் கூட, "பெண்ணடிமை ஒழிய கற்பை பொதுவில் வைப்போம்...' என்ற தாரகமந்திரத்துடன் ஒரு மகளிர் இதழ் நடத்தி வருகிறார். எனவே, தன் கருத்தோடு ஒத்துப்போகும் வாரிசை கைக்குள் போட்டுக்கொண்டு தந்தை குலந்தை தாஜா பண்ணும் வேலையை ஜரூராக செய்து வருகிறார் குண்டு பூ.

    ReplyDelete
  92. அன்புள்ள முகமுடி,

    இங்கே எழுதப் பட்டுள்ள எல்லாவற்றையும் என்னால் படிக்க முடியவில்லை. படித்தவரையில் உங்களின் பல கருத்துகளுடன் பெரிதும் உடன் படுகிறேன். நான் உங்களின் வேறு பல கருத்துக்களை எதிர்த்தாலும், இந்த விஷயத்தில் நானும் சொல்ல வந்த ப்ல விஷயங்களை நீங்கள் சொலியிருக்கிறீர்கள். அதை தெளிவான ஒரு மொழியிலும் முன் வைத்திருக்கிறீர்கள். அதற்கு எனது பாராட்டுக்கள்!

    ReplyDelete
  93. திரு முகமூடி அவர்களே,

    தங்கள் பதிவிற்கு என் நண்ம்பன் அருணின் வலைபதிவு மூலமாக சுட்டி கிட்ட் வந்தேன். உடல் உறவு பற்றிய தங்கள் வாதங்கள் மற்றும் நிலைப்பாடு மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. உங்கள் கருத்துக்களை நான் ஆதரிக்கிறேன். இதிலே என் நிலைப்பாட்டையும் நான் எனது பதிவில் தந்து இருக்கிறேன். இயன்றால் படித்து மறுமொழி இடுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  94. The recent advances in Archaeogenetics have some interesting results for the Aryan invasion theory but are still in the early stages. Genetic study shows that Indian population as a whole has little similarity to other areas of supposed Indo-European settlement, indicating there was no mass settlement. Indian maternal DNA is generally similar right across the country indicating that the mass of population has been in place there for a long period. [2] (http://www.eva.mpg.de/genetics/pdf/Cordaux_et_al_2003.pdf)

    More recent results (Kivsild et al. 2003b, see also Cordeaux et al. 2003) show that the combined results from mtDNA, Y-chromosome and autosomal genes indicate that "Indian tribal and caste populations derive largely from the same genetic heritage of Pleistocene southern and western Asians and have received limited gene flow from external regions since the Holocene."

    The Haplogroup R1a has been previously linked with the ancient Kurgans and/or Indo-Europeans of southern Russia/Ukraine, who supposedly migrated to Europe, central Asia and India between 3000-1000 BC. (Passarino et al. 2001; Quintana-Murci et al. 2001; Wells et al. 2001). However, the high frequency of R1a found in Punjab and in the South Indian Chenchu tribe, together with a highter R1a-associated STR diversity in India and Iran compared with Europe and central Asia, indicates that R1 and R1a differentiation may have originated in South or West Asia.(Kivisild 2003b) The defining M17 mutation has also been found in several South Indian tribes (Kivisild 2003b, Ramana et al. 2001, Wells et al. 2001). Stephen Oppenheimer, who reports upon the results of the Human Genome Diversity Project in his book "The Real Eve: Modern Man's Journey out of Africa, (p.152)" comments these findings with the conclusion that: "For me and for Toomas Kivisild, South Asia is logically the ultimate origin of M17 and his ancestors; (...),thus undermining any theory of M17 as a marker of a `male Aryan Invasion of India'." Oppenheimer further believes that it is highly suggestive that India is the birthplace of the Eurasian mtDNA haplogroups which he calls the Eurasian Eves. He believes that it is highly probable that nearly all human maternal lineages in Europe (and similarly in East Asia) descended from only four mtDNA lines that originated in South Asia 50'000-10'000 years ago.
    --
    http://www.answers.com/topic/aryan-invasion-theory?method=8

    ReplyDelete
  95. முகமூடியின் கருத்துகளுக்கு ஒரு சபாஷ். பொறுமைக்கு ஒரு பாராட்டு. ஒரு கட்டத்திற்கு மேல் படிக்கக்கூட பொறுமையில்லை. இந்த செவிடர்கள் காதில் சங்கு ஊதி ஊதி தொண்டையே கிழியப் போகிறது!

    நிர்மலா.

    ReplyDelete
  96. அன்பு வீக் சர்வேயை பார்த்தேன்... ஆனால் அவர்கள் சர்வே எடுத்த இந்தியாவில் தமிழ்நாடு வராது... தமிழ்ப்பண்பாட்டு நிலவளவை சட்டத்தின்படி அது வேறு நாடு..

    உஷா, சிறிய வாக்கியத்தில் (99, 100 என்பதை வாக்கியம் என்று சொல்லலாமோ) மிகப்பெரிய விஷயத்தை சொல்லியிருக்கிறீர்கள்... நன்றி ;-))

    உங்கள் அன்புக்கு நன்றி ரோசா, எங்கே ரொம்ப நாளாக ஆளையே காணோம்.

    முரளி நன்றாக எழுதியுள்ளீர்கள்.. (முதல் தமிழ்ப்பதிவா என்ன?)

    அனானி, diverse histories of tribal populations from India குறித்த ஆவணத்திற்கு நன்றி.. வீக்கெண்டிற்கு தீனி.. மனவியலாளர் ஒருவர் எழுதிய நக்கல் அடிப்பது குறித்தான கள ஆய்வு கட்டுரை ஒன்று சமீபத்தில் படித்ததிலிருந்து மிகவும் பயந்திருந்தேன்... இது போன்ற விஷயங்களை படித்தாலாவது அவர்கள் அளவு அடியில் உறங்கும் உண்மைகளை தட்டி எழுப்பும் அளவு ஞானம் கிடைக்கிறதா பார்ப்போம்.

    நன்றி நிர்மலா.. செவிடர்கள் காதை வேறு மூடிக்கொள்கிறார்கள் ;-))

    ReplyDelete
  97. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  98. முகமூடி:

    அது முதல் தமிழ்ப் பதிவு அல்ல. இதற்கு முன் சில பதிவுகள் செய்து இருக்கிறேன். வந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  99. சுஹாசினி: வழக்கை சந்திப்போம் சாருஹாசன்
    நவம்பர் 23, 2005

    சென்னை:

    சுஹாசினி மீதான வழக்குகளை நீதிமன்றத்தில் சந்திப்போம் என்று நடிகரும், சுஹாசினியின் தந்தையுமான சாருஹாசன் கூறியுள்ளார்.

    நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

    குஷ்புவும், சுகஹாசினியும் கற்பு பற்றி சொன்ன கருத்து தவறல்ல. இங்கே ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்பது தான் எழுதப்படாத விதியாக இருக்கிறது. குஷ்பு கருத்தை கருத்தாக எதிர் கொள்வது தான் முறை. அதை விட்டு துடைப்பத்தால் எதிர்கொள்கிறார்கள்.

    ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை வைத்திருப்பவர், ஒருவர் என் மனைவி, இன்னொருவர் என் தோழி என்கிறார். ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களோடு தொடர்பு வைத்திருந்தால் ஒருவன் என் கணவன், இன்னொருவன் என் தோழன் என்று சொல்ல முடியுமா? ஒழுக்கம் என்றாலும், ஒழுங்கீனம் என்றாலும் அது இருவருக்கும் தான்.

    ஒருவன் மனைவியோடு இன்னொருவன் தொடர்பு கொண்டாலும் யாராலும் அதை தடுக்க முடியாது. அப்படி விரும்பி உடலுறவு கொண்டாலும் அது காதல் தான். கள்ளக்காதலென்று வேண்டுமானால் கலாச்சாரம் சொல்லலாம்.

    விருப்பமில்லாமல் அத்துமீறி வன்முறையாக நடந்து கொண்டால் தான் சட்டத்தின்படி தண்டிக்க முடியும். இந்த உண்மைகளை சொன்னால் கலாச்சாரத்தின் பேரில் வன்முறையை திணிக்கிறார்கள்.



    மன்னிப்பு கேட்டவரை செருப்பு துடைப்பத்தோடு போய் நீதமன்ற வாசலில் அடிப்பது தான் கலாச்சாரமா?

    சுஹாசினி பேசியதில் தவறு இல்லை. அன்று பேசிவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் ஏன் இப்படி பேசினாய் என்று நான் கேட்டேன். என்னிடம் வருத்தம் தெரிவித்தார்.

    தங்கர்பச்சான் விஷயத்திலும் குஷ்பு விஷயத்திலும் நடிகர் சங்கம் நியாயமாக நடந்து கொள்ளவில்லை. குஷ்புவை நடிகர் சங்கம் பலி கடவாக்கி விட்டது. சரத்குமாருக்கு சுஹாசினி எஸ்எம்எஸ் அனுப்பியது தவறு, இதில் சரத்குமார் பக்கம் நியாயம் இருக்கிறது.

    குஷ்பு விஷயத்தில் அமைதியாக இருந்து விட்டோம். தங்கர்பச்சான் விஷயத்தில் தவறு செய்து விட்டோம். சிலரை திருப்திபடுத்தியாக வேண்டும் என்று தான் சுஹாசினிக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியது.

    சுஹாசினி பொது மன்னிப்பு ஏன் கேட்கவில்லை என்கிறார்கள். மன்னிப்பு கேட்ட குஷ்புவையே தாக்கியதால் தான் சுஹாசினி கேட்கவில்லை. சுஹாசினி மீதான வழக்குகளை நீதிமன்றத்தில் முறையாக சந்திப்போம் என்றார் கமலஹாசனின் அண்ணனான சாருஹாசன்.

    ReplyDelete
  100. // மனவியலாளர் ஒருவர் எழுதிய நக்கல் அடிப்பது குறித்தான கள ஆய்வு கட்டுரை ஒன்று சமீபத்தில் படித்ததிலிருந்து மிகவும் பயந்திருந்தேன்... //

    கொஞ்சம் எடுத்து போடுங்க முகமூடி சார்! எனக்கும் பயமாய் இருக்கு :-)

    ReplyDelete
  101. // " மனவியலாளர் ஒருவர் எழுதிய நக்கல் அடிப்பது குறித்தான கள ஆய்வு கட்டுரை ஒன்று சமீபத்தில் படித்ததிலிருந்து மிகவும் பயந்திருந்தேன்... "

    கொஞ்சம் எடுத்து போடுங்க முகமூடி சார்! எனக்கும் பயமாய் இருக்கு :-) //

    அட நீங்க வேற உஷா.. ஏற்கனவே சும்மா வாய திறக்கவே பயமா இருக்கு... ப்ரேக்·பாஸ்ட் சாப்டீங்களான்னு கேட்டா கூட "எலேய் என்ன நக்கலா" அப்படீங்கறாங்க... இதுல நீங்க வேற வம்புல மாட்டி விடறீங்க.. அதுவும் மனவியலாளர் என்ன சாதாரண ஆளா... த(ங்)கரமான மனுசன் சொன்ன கருத்த விமர்சனம் பண்ணதுக்கே டின்னு கட்டிய மக்கள் மணி மணியா கருத்து சொல்ற தங்கமான மனுஷன பத்தி சொன்னா அவ்வளவுதான்... ஆள வுடுங்க சாமியோவ்...

    இருந்தாலும் எதையுமே ஆழமா அலசி ஆராயணும்னு அவரே சொல்றதால (கருத்து தாகம் சுவத்த பிறாண்டற அளவு அதிகமாய்ட்டா மட்டும்) இந்த பாட்டை பாடிக்கொள்ளவும் ___ ஊதி மனமெல்லாம் மட்டை கொண்டடிச்சாடும் இடத்தில் போய் படிச்சிக்.................

    ReplyDelete
  102. திரு குழலி அவர்களே,

    வணக்கம். தங்களது கமெண்டுகளை இங்கே படித்தேன். என்னுடைய முழு ஆதரவும் உஙளுக்குதான். ஒன்று கூரிக்கொள்ள ஆசைப்படுகிறேன். இன்று தமிழ் நாடே பிராமணர்கள் கையில் சிக்கிக்கொண்டுள்ளது. தாங்கள் மிகவும் பொறுமையாக பல கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிற்கள். எனினும் அங்கு இருப்பவர்களுக்கு ஏதேனும் ஏறியிருக்கும் என்று நினைகிறீர்களா? சுத்தமாக ஏறாது. அவர்கள் சொன்னதையே தான் சொல்வார்கள்.

    னான் கோற வேண்டும் என்று எண்ணிய அனைத்தையும் தாங்கள் மிகவும் அருமையாக கூறியிருக்கிறீர்கள். தமிழ் நாட்டின் பரிதாபகரமான நிலமை என்னவென்றால் பிராமணர் அல்லாதவ்ர்கள் கூட பிராமணர்க்ளுக்கு ஜால்ரா தட்டுகிறார்கள். இது தான் உண்மை.

    அங்கே ஒரு ரஜினி நண்பர் பெசினார் குஷ்புவுக்கு சார்பாக, அவருக்கு நான் கூறுவது ஒன்றே ஒன்றுதான். திருவாளர் ரஜினிகாந்த் அவர்கள் இங்கு தமிழ்னாட்டில் சம்பாதிக்கும் பண்த்தை கர்னாடகா வங்கி (பெங்களூர்) ல் பொடுகிறார். முடிந்தால் அதை தடுக்கமுடியுமா சொல்லுங்கள்.

    மொதத்தில் குழலிக்கு என்னுடைய முழு ஆதரவு. ஒட்டு மொத்த தமிழ்நாட்டின் சார்பாக உங்கள் கருதுக்களுக்கு எந்து அதரவை தெரிவிது கொள்கிறேன்.

    இதனை இங்கேயும், இங்கேயும் படிகலாம்.

    ReplyDelete
  103. இங்கே பல சாதிக் காரவுக அடிச்சிகிறத பாக்க முடியுது. மகா சாதிக்கலவரம் இந்த பிளாக்கிலே நடக்குதாம். ஓடு அடுத்த தெருவுக்கு....

    ReplyDelete