இண்டிப்ளாக்கீஸ் விருதுகள் . Indibloggies Awards 2006
இண்டிப்ளாக்கீஸ் விருதுகள் 2006க்கான மனு தாக்கல் ஆரம்பமாகிவிட்டது. யார் வேண்டுமானாலும் தங்களுக்கு விருப்பமான பதிவை இவ்விருதுக்காக முன்மொழியலாம். மற்றவர்கள்தான் செய்ய வேண்டுமென்றில்லை, தன் பதிவின் மேல் நம்பிக்கை கொண்டவர்கள் 'நமக்கு நாமே' திட்டத்தில் தமது பதிவை தாமே முன்மொழியலாம். பிப்ரவரி திங்கள் ஐந்தாம் நாள் இந்திய நேரம் இரவு 9 மணிக்கு பரிந்துரைப்பதற்கான கெடு முடிவடைகிறது.
எப்படி முன்மொழிவது என்பதற்கான விளக்கம் இந்த சுட்டியில் காணலாம்
இந்த வருட(மு)ம் பல பிரிவுகளாக இப்போட்டி நடத்தப்படுகிறது. தமிழில் மட்டும் எழுதப்படும் பதிவுகள் Best Indic blog பிரிவில் வரும்.
இவ்வருடம் சிறந்த தமிழ்ப்பதிவாக தேர்ந்தெடுக்கப்படும் பதிவுக்கு பரிசாக (இதுவரை) முகமூடி ரூ.1000 மதிப்பிலான புத்தகங்களும், தமிழோவியம் $25 மதிப்புக்கான அமேசான் பரிசு அட்டையும் தரவிருப்பதாக தெரிகிறது. நீங்கள் தமிழ் பிரிவிலோ அல்லது வேறு ஏதாவது பிரிவிலோ சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படும் பதிவுக்கு பரிசுகள் தர விரும்பினால் இங்கே தெரிவிக்கலாம்
இவ்வருடம் தமிழ் பிரிவுக்கான ஜூரி குழுவில் தமிழ் வலைஞர்கள் பத்ரி சேஷாத்ரியும், முகமூடியும் இருப்பதாக இண்டிப்ளாக்கீஸ் வலைக்குறிப்பு தெரிவிக்கிறது.
இவ்விருது சம்பந்தமாக 'அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்' சிலவற்றுக்கு இந்த சுட்டியில் பதில்கள் தரப்பட்டுள்ளன.
நம்பிக்கை இருப்பவர்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்.
தமிழ்ப்பதிவுகள்
அன்புள்ள இயக்குனர் அய்யாவிற்கு...
நீங்க பெரியார் படம் எடுக்கிறது தெரிஞ்சி ரொம்ப மகிழ்ச்சிங்க. நான் பாக்க போறதில்லைன்னாலும் தமிழ்நாட்டுல இருக்கிற முக்காவாசி சனம் பாக்குற அளவு குவாலிட்டியா எடுப்பீங்கன்னு நினைக்கிறேன். நான் பாக்க மாட்டேன்னதும் நான் என்னவோ பெரியாரிய எதிரின்னு நினைச்சிக்காதீங்க.. நான் இன்கேபபில்-ஆஃப்-ஹாண்டிலிங்-சம்-genre-பை-டமில்-இயக்குனர்ஸ் phobia வியாதியால பாதிக்கப்பட்டவன் அப்படீங்கிறதால தமிள்ல வர சில வகை படங்கள பாக்கிறதில்லை..
அதாவது ரொம்பன்னு இல்லாத ஓரளவு சின்ன வயசுல, சாமி பக்தி வரணுமின்னு நம்ம வூட்டுல சாமி படத்துக்கு மட்டும் பர்மிஷன் கொடுப்பாங்க, இராம.நாராயணன் படத்துக்கு மட்டும்னா ஓகேன்னு... ஆடி வெள்ளி, கோடி பல்லின்னு சில பல படங்கள் பாத்ததுல, யானை சில்க்கு சுமிதாவுக்கு முத்தம் கொடுத்தது பாம்பு டிஸ்க் ஜாக்கியா இருக்கிறது குரங்கு கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தயாரிக்கிறதுன்னு பாத்த வேடிக்கை பத்தாதுன்னு, நடுவுல தியேட்டர்ல பல பேருக்கு சாமி வந்து அத சாக்கா வச்சி சூடத்த கொளுத்திகிட்டு ஒரு கூட்டம் அங்கிட்டும் இங்கிட்டும் ஓட, அடப்பாவிகளா தியேட்டர்ல தீ பிடிச்சிச்சின்னா எல்லாரும் சாமிகிட்ட போயிடுவேமோடான்னு நான் சூடத்தட்ட தள்ளிவிட்டு ஓவர் கலாட்டா ஆகி அன்னியிலேர்ந்தே சாமி படம் பாக்க கூடாதுன்னு தீர்மானம் போட்டுட்டேன். அப்புறம் அவளின்ட இரவுகள், அஞ்சரைக்குள்ள வண்டின்னு சில பல சாமி படங்கள் ஓவரா பாத்து அது மேலயும் வெறுப்பு வந்து நிறுத்தி அப்படியே வயசாவ வயசாவ கொஞ்சம் கொஞ்சமா மசாலா படம் நிறுத்தி, ரஜினி படம் நிறுத்தின்னு ஒரு கட்டத்துல தமிழ் படம் நிறுத்திங்கிற அளவு வந்துட்டோம். அப்புறமா செலக்டிவ்வா சில படங்கள் பாக்குறதுதான்னாலும், இந்த நாவல மூவி ஆக்குற படம், சுயசரிதைய ஸ்க்ரீன்ல சமைக்கிற படங்கள்னா கொஞ்சம் அலர்ஜிதாண்ணா.. கண்டிப்பா நோ எண்ட்ரிதான். உங்க பாரதி, மோகமுள் எல்லாம் கூட பாத்ததில்லை நானு.
சரி வுடுங்க... சொல்ல வந்த மேட்டர வுட்டுட்டு என்னன்னவோ சொல்லிக்கிணு இருக்கேன்...
இந்த வார ஜூ.வியில "சீதையை ராமன் தொடவேயில்லை?" அப்படீன்ற தலைப்புல வந்த கட்டுரையும் அதுல உங்க பேட்டியும் பாத்தேன் அய்யா..
அதாவது "அணில் முதுகில் ஸ்ரீராமர் போட்ட கோடு மூணு... அப்படியே இருக்குதுவோய், அழியலையே பாரும்!" என்று பக்தர் ஒருவர் சொல்ல, "ஓஹோ... முதுகைத் தொட்டதும் மூணு கோடு விழுந்துடுச்சோ... எங்காணும்... முதுகைத் தொட்டதும் மூணு கோடு விழுந்துடுச்சோ... சீதையின் முதுகில் கோடுகள் இல்லையா? இல்ல, சீதையை ஸ்ரீராமர் தொடவே இல்லையா?" என்று கிண்டலாகப் பெரியார் கேள்வி எழுப்புவதுபோல் பாட்டு இருக்குதுங்களாம்...
இதுனால இந்து மக்கள் கட்சி கோவமா இருக்காமே.. போராட போவறதா சொல்லியிருக்காய்ங்க போல... கெடக்கிறாங்க விடுங்க வெங்காய பசங்க.. இது சம்பந்தமா எவ்ளோ தன்மையா உங்க கருத்த பேட்டியா கொடுத்திருக்கீங்க..
"அப்படியா? அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அது அவர்களுடைய சொந்தக் கருத்து. யாருக்கும் அவர்களுடைய கருத்துகளைச் சொல்ல உரிமை இருக்கிறது. அந்தப் பாடலில் உள்ள வரிகள் பெரியாரால் பல மேடைகளில் பேசப்பட்ட கருத்துதான். இன்றும் பெரியாரை பின்பற்றுபவர்கள் அந்தக் கருத்துகளைப் பல மேடைகளில் பேசி வருகிறார்கள். பாடலாசிரியர் வைரமுத்துவும் பெரியாரின் கருத்துகளைதான் அந்தப் பாடலில் பதிவு செய்திருக்கிறார். மற்றபடி அது எங்களுடைய தனிப்பட்ட கருத்து கிடையாது. நான் எப்படி பாரதியாரின் வாழ்க்கையை ஒளிவு மறைவு இல்லாமல் பதிவு செய்தேனோ, அதே போலதான் பெரியாரின் வாழ்க்கையையும் பதிவு செய்து வருகிறேன். அதில் பெரியாரின் கருத்துக்களைத் திரித்துக் கூறாமல் அப்படியே பதிவு செய்திருக்கிறேன். அந்தப் பாடல் வரிகளை நீக்க வேண்டும் என்று சொல்ல, புகார் கூறும் அமைப்பினருக்கு உரிமை இல்லை. அது தணிக்கை குழுவின் வேலை. அவர்களின் வேலையை இந்து அமைப்புகள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை"
நானும் கருத்து சுதந்திரம்தான் முக்கியம்னு நினைக்கிறவந்தான்... உங்க பேட்டியில எனக்கு பரிபூரண சம்மதம்யா.. பெரியாரின் கருத்துக்கள் திரிக்கப்படாமல் மக்களை சென்று அடைய வேண்டியது ரொம்ப முக்கியம்யா.. இருங்க, கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு வாரேன். அதுவரைக்கும் இத படிங்க, மேட்டர் பெரியார் பத்திதான்...
".... குறிப்பாக, சிறுபான்மையினர் குறித்த அவருடைய அணுகுமுறையில் பெரும்பான்மையினரின் குரலைத்தான் நான் பார்க்கிறேன். சிறுபான்மையினர் பிரச்னை தொடர்பான ஒரு கட்டுரையில் முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் மிகக் கடுமையாக அவர் தாக்குகிறார். "பாப்பானுக்குப் பயந்துகொண்டு நாம் முஸ்லிம்களுக்கு இடம் கொடுத்துவிட்டோம். இது சாணியை மிதிக்க விரும்பாமல் மலத்தில் கால் வைத்தது போல் இருக்கிறது" என்று சொல்கிறார் அவர். மேலும், "சிறுபான்மையினர் கையில் அதிகாரம் வருவது நாட்டுக்குக் கேடு" என்றும் சொல்கிறார்...."
வந்துட்டங்க.. ஓ.. இத எங்க புடிச்சேங்கறீங்களா.. பெரியார் பத்தி என்ன சொந்தமாவாய்யா கருத்து சொல்ல போறேன். இல்ல அதுக்கு வயசும் அனுபவமும்தான் எனக்கு போதுமா.. அத சொன்னது எனது மதிப்புக்குரிய வி.சி சட்டமன்ற உறுப்பினர் திரு.ரவிக்குமார் அவர்கள்தான்... வெளிவந்தது, சூலை மாத குமுதம் தீராநதியில (சுஜாதா கதை வந்துச்சே அய்யமார் பத்திரிக்கை, அதேதான்)
சரி, எவ்ளோ ஆராய்ச்சி பண்ணியிருப்பீங்க.. எப்படியும் இதயெல்லாம் படத்துல வச்சிருப்பீங்க, இருந்தாலும் கவனக்குறைவா விட்டு போயிருந்தா படம் ஃபினிஷிங் உள்ளார எப்பிடியாவது ஒரு பாட்டுல சேத்துருலாம்லன்னு ஒரு அணில்குஞ்சா இருந்து சொன்னேன். வேற ஒண்ணுமில்ல.. அப்புறம் பெரியார் சம்பந்தபப்ட்ட சில மெட்டீரியல்ஸ் கிடைக்கலன்னு வருத்தப்பட்டதா எங்கியோ படிச்சேன்.. இங்கதான் நம்ம ப்ளாக்குகல நீங்க ஊஸ் பண்ணிக்கணும். சாமானியமா நினைக்காதீங்க, கொஞ்சம் நோண்டி பாத்தீங்கன்னா கீழ்வெண்மணி ராமய்யா குடிசை எரிஞ்ச காலத்துல வந்த பெரியார் அறிக்கை கூட பிளாக்குல கிடைக்கும். மத்தபடி இந்து அமைப்பெல்லாம் பத்தி கவலையே படாதீங்க... என்னவிதமான தார்மீக சப்போர்ட்னாலும் கேளுங்கய்யா, ரெடியா இருக்கோம்....
தமிழ்ப்பதிவுகள்
அன்புள்ள பத்திரிக்கை ஆசிரியருக்கு...
நான் ஃபாரின்ல இருக்குற பிற்படுத்தப்பட்ட தமிழன். அது என்னவோ தெரில, பிளாக்கு எழுத ஆரம்பிசச்துல இருந்தே இப்படிதான் என்ன நான் இன்ட்ரட்யூஸ் செஞ்சிக்கிறது.
இன்னிக்கி பொங்கல். தலைவர் தமிழர் திருநாள்னுதான் சொல்லணும்னு ஆர்டர் போட்டுக்கிறாரு.. தலைவருன்ன உடனே நம்ம கேப்டன சொல்றேன்னு நினைக்காதீங்க. என்னிக்கி வெளிநாடு வந்தேனோ, அன்னிக்கே கேபடன வுட்டு வெலகிட்டேன். இப்பல்லாம் தலைவன்னா அது எங்க வாழ்க்கையில வெளிச்சம் ஏத்துற தலைவர மட்டும்தான் குறிக்கும்.
சின்ன புள்ளயா இருக்க சொல்ல, நமக்கு தீவாளி பொங்கல்னு எதுவா இருந்தாலும் சந்தோசம்தான். ஏன்னா புது சொக்கா ட்ரவுசரு கிடைக்கும். பண்டிக காசு கிடைக்கும். வூட்ல எல்லாம் சந்தோசமா இருப்பாங்க. நாலு நாளக்கி என்னா சேட்ட பண்ணாலும் திட்ட மாட்டாங்க. அதுவும் இல்லாம அல்லா சொந்தக்காரங்களும் இருப்பாங்களா, ஆராவது ஒருத்தராவது காவந்து பண்ண வந்துடுவாங்க. அப்புறம் பெரியவன் ஆனப்புறம், நமக்கு தலைவர் படம் ரிலீஸ் ஆவுற நாள் எதுவோ அதான் தீவாளி, பொங்கல் எல்லாம். அதெல்லாம் ஒரு காலம்க.. அறியாப்புள்ளயா சந்தோசமா இருந்த காலம். அது ஒரு காலம்க.. ஒலகம், பிளாகு எதுவும் அறியாத வயசு..
அப்புறம் இளந்தாரியா ஆனப்புறமா பொங்கலு வேற விதமா ஆச்சி.. பொங்க மொத நாளு அய்யா படியளப்பாரு. கூலியாளுங்க மட்டுமில்லாம வண்ணான், சங்கூதி, சக்கிலியரு, தோட்டிமாரு, நாவிதன்னு எல்லாருக்கும் மூட்ட நெல்லும், வேட்டி பொடவயும், காசு பணமும் அய்யா தருவாரு. சனங்க சந்தோசமா போவும். அப்புறம் கொஞ்ச கொஞ்சமா ஊருல பொங்க களையிழக்க ஆரம்பிச்சிடுச்சிங்க.. போன பொங்கலுக்கு வாழ்த்து சொல்லலாம்னு ஊருக்கு போன் போட்டப்ப அய்யா சொன்னத கேக்க பாவமா ஆயிடுச்சி.. "என்னடா பொங்கலு... ஊர்ல ஒரு நாய் இல்ல... கூலிக்கார நாய்ங்க, அலுங்காம சம்பாதிக்க ஆசப்பட்டு கேரளாவுக்கு கட்டட வேல செஞ்சு பொழக்க போயிட்டானுங்க. மொழி தெரியாத எடத்துல அடிமையா சம்பாதிச்சு என்ன பிரயோசனம், இந்தூர பொருத்த வரைக்கும் பிச்சக்கார பயலுவதான, கூழோ களியோ நம்மூர்ல திங்கிற மாதிரி வருமான்னு நென்னப்பு வருதா பாரு இவனுங்களுக்கு? முந்தி மாதிரி இல்லடா, எனக்கும் வயாசாயிட்டே போகுது. நீ வேற ஃபாரின்ல போய் இருக்க. பெசாம எல்லாத்தயும் ஏரக்கட்டலாம்னு பாக்குறேன்"
என்னய்யா ப்ரச்னைன்னு கணக்குகிட்ட கேட்டா அவரு வேற புலம்புனாரு "சின்னய்யா, இந்த கீழ்சாதியில பொறந்த எளந்தாரி பயலுவளுக்கு மட்டு மரியாத தெரியரதில்ல.. அவனுங்க அப்பனாத்தாளும் அவனுங்களுக்கு சொல்லித்தரதில்ல... நேத்திக்கி பக்கத்தூரு படையாச்சி அய்யா தேவரய்யாவ பாக்க வந்திருந்தாக... பொங்கலுக்கு கேரளாவுல இருந்து வந்திருந்த அந்த சக்கிலி வூட்டு பய, பெரியய்யா திண்ணையில உக்காந்து இருக்கிறது தெரிஞ்சும் கண்டும் கானாத மாதிரி சைக்கிள வுட்டு இறங்காம போனான்.. அத பாத்ததும் படையாச்சி அய்யா நம்ம பெரியய்யாவ பாத்த பார்வ இருக்கே.. என்னாத்த சொல்வேன் போங்க... அப்புறம் சின்ன படையாச்சி போய் அவன் செவுள்ள ரெண்டு வுட்டாங்க. நீங்க இங்க இருந்தா இந்த பயலுங்க இப்பிடி துள்ளுவானுங்களா... பேசாம வந்திருங்க தம்பி"ன்னாரு... இதுனாலதான் வூட்டுக்கு போன் போடுறதுன்னாலே யோசனையா இருக்கு இப்பல்லாம்.
சரி வுடுங்க... சொல்ல வந்த மேட்டர வுட்டுட்டு என்னன்னவோ சொல்லிக்கிணு இருக்கேன்...
சமீபத்துல சுஜாதா கத ஒண்ணு எளுதியிருக்காருன்னு அத நீங்க பப்ளிஸ் பண்ணியிருந்தீங்க. அது பத்தி நான் ரெண்டு வார்த்த சொல்ல ஆசப்படுறேனுங்க.. பொதுவா உங்க பத்திரிக்கைய நான் படிக்கிறதில்ல.. டிவி, ப்ரண்ட்ஸ்ன்னு பொழப்பு ஓடும். அய்யா சினிமாவுலனாலதான் சின்ன பசங்க கெட்டு போறாங்கன்னு சொன்னதால சன் டிவிய நிறுத்தியாச்சி. மக்கள் டிவி இங்க வரதில்ல. வழக்கமா பண்டிகைனா வூட்டுக்கு வர என் பிரண்டு மூக்கையா தேவன், திண்ணியம் ப்ரச்னை பத்தி காரசாரமா விவாதிச்ச நாள்ல இருந்து இங்க வரதில்ல. அதுவும் இல்லாம ஃபாரின் வந்ததுல இருந்து நம்ம சிந்தனை எல்லாம் மாறிப்போச்சி... அய்யமாருங்க பத்திரிக்கை படிக்கிறதில்லை.. முந்தி மாதிரின்னா கஸ்டம், எல்லாமே அய்யமாருங்கதான் நடத்திகிட்டு இருந்தாங்க.. இப்ப அப்பிடி இல்ல. நக்கீரன், தராசுல ஆரம்பிச்சி கீத்து வரக்கும் உண்மைய சொல்ற பத்திரிக்கைங்க வந்தாச்சி. இனிமே வெகுசன ஊடகங்க பப்பு அவ்வளவா வேகாது... இருந்தாலும் பாழாப்போன சனங்க வெகுசன ஊடகங்களத்தான விரும்பி படிக்கிறாங்கங்கிறது மனசுக்கு கஷ்டமா இருக்கு. அதுனால அவங்களோட வேசத்த கலைக்கிறத எப்பியுமே ஒரு தவமா நான் செய்யிறது... அதனால கருமம், வேற வழியில்லாம பொழுத போக்க உங்க பத்திரிக்கைய படிச்சேன். படிச்சப்புறமா ஏண்டா படிச்சி தொலைஞ்சோமின்னு ஆயிப்போச்சி.
சுஜாதா ஒரு அய்யரு.. அவரு பையனுக்கு சப்பான் பொண்ண கட்டிவச்சாருன்னவுடனே அவரு லிபரல்னு நானே நெனச்சிகிட்டேன். அவரு பெர்சனல் வாழ்க்கைய பத்தி நமக்கு என்னங்கறீங்களா... என்னங்க பண்றது, தமிழன் பொறந்தவுடனே, பக்கத்து பெட்ல பொறந்த பாப்பா அழுதுச்சான்னு கேட்டுட்டுதான் தன் அழுகையவே ஆரம்பிக்கிறான். அப்புறம் சினிமாக்கரன்ல ஆரம்பிச்சி அரசியல் தலைவன் வரைக்கும் எவனுக்கு எவ கூட காதலு, எவன் எவ்ளோ சம்பாதிக்கிறான், எவ எவங்கூட ஓடிப்போனா அப்படீன்னே யோசன பண்ணி யோசன பண்ணி, ஒரு எழுத்தாளனா இருந்தா கூட சரி, அவனுக்கு ஒரு ஐடல் ஒர்ஷிப் பண்ணி அவன் பெர்சனல் கேரக்டரு என்ன, அவன் என்ன ஜட்டி போடறான்னு எல்லாத்தையும் பிரிச்சி மேஞ்சாத்தான் மனசுக்கு ஒரு நிம்மதி கெடைக்கிது.. இப்ப பாருங்க, சமுதாய முன்னேத்தத்துக்காக நானும் வரிஞ்சி கட்டி எளுதறேன். ஆனா நெகட்டிவ் குத்தா குத்தறானுங்க. ஏன்னா நான் ஒரு தாழ்த்தப்பட்டவன். ஆனா சுஜாதா கதைய பல லட்சம் பேர் படிக்கும்படி பப்ளிஷ் பண்றீங்க.. ஒருத்தனும் அவருக்கு நெகட்டிவ் குத்த மாட்றான்.. ஏன்னா அவரு அய்யங்காரு... இதுதான் சமுதாயம்.
இப்ப கதைக்கு வருவோம்... அதுல அவரு என்ன சொல்றாரு. ஒரு அய்யர் இல்லாத பொம்பள, புருசன் கிட்ட அக்ரசிவ்வா பேசற மாதிரி எளுதறாரு. அய்யர் இல்லாத பொம்பளங்க எதுக்காவது புருசன்கிட்ட சண்ட போட்டு பாத்திருக்கீங்களா... வீட்டு விவகாரம் ஆனாலும் சரி, புருசன் சக்களத்தியே வச்சிகிட்டாலும் சரி, "கள் ஆனாலும் கணவன், full ஆனாலும் புருசன்"னு வாழுறவங்க அவங்க. என்ன ப்ரச்னைனாலும் அமைதியா 'என்னங்க இப்படி பண்ணிக்கலாமா, உங்களுக்கு வேணாம்னா வேணாம்" அப்படீன்னு மட்டுமே பேசற பொம்பளை சாதியில ஒருத்தி புருசன்கிட்ட கொஞ்சம் சவுண்டா பேசுற மாதிரி எழுதறாரு. இது தாழ்த்தப்பட்டவங்க மேல மேட்டுகுடிக்கு இருக்கிற காழ்ப்பத்தான காமிக்கிது.
எங்கூருல தேவமாரு ஊட்டுல பொறந்த பையன் அரிசன காலனியில பொண்ண கடத்துனா பொத்துனாப்புல வெட்டிருவோம்.. தாலிய வெட்டி வுட்டுறுவொம்னு இல்ல, ரெண்டு பேரயும் உண்மையிலேயே வெட்டிருவோம். அப்பிடி இல்லையின்னா, பெரியவங்க எல்லாம் எதுவுமே பேசாம இருப்பாங்க. "ஏண்டா பய போயும் போயும் அந்த எசக்கி பொண்ண இழுத்துகிட்டு ஓடிட்டாணாமே.. அவன் சாதி என்ன, நம்ம சாதி என்ன, ஏண்டா இவம் புத்தி இப்பிடி தரங்கெட்டு போவுது"ன்னு எல்லாம் பேச மாட்டோம். நடமுற இப்பிடி இருக்க, ஒரு அய்யிரு கிழவன், "அவா சாதி என்ன" அப்பிடின்னு சாதி அமைப்ப இழிவு படுத்தற மாதிரி பேசற மாதிரி சுஜாதா எழுதியிருக்கிறது அவரோட மன வக்ரத்த தான் காட்டுது.
அட அவரு எழுதினது வெறும் கதைதான்னு சொல்றீங்களா? அது எப்பிடீங்க... அவரு அய்யங்காரு. அவரு கதைய எப்பிடி வெறும் கதையா பாக்குறது. அதுவுமில்லாம அவரு தி.கவோட "எதிர்வினை"ய நைச்சியமா குற்றம்கிற மாதிரி எழுதறாரு... அத அவரு சாதியோட பொது புத்தியாத்தான் பாப்போம்.. இப்ப பாருங்க சாரு நிவேதிதா, அவரு அமெரிக்காவுல இருந்து ஆஸ்திரேலியா வரைக்கும் இருக்கிற பதினாரு வயசு குட்டிங்க கூட எல்லாம் சைபர் செக்ஸ் வச்சி அவளுங்க எல்லாம் இவரத்தான் கண்ணாலம் கட்டிக்கணும் இல்ல அவரோட டைம வேஸ்ட் செஞ்சதுக்காக அட்லீஸ்ட் ஒரு முறை அவரோட படுத்துக்கவாவது செய்யணும்னு பப்ளிக்கா எழுதும்போதும், அவரு பொண்டாட்டிக்கு மனதளவில ப்ரச்னை, அதனால பொண்டாட்டி கூட புணர்வதே இல்லைன்னு செல்ப் தம்பட்டம் அடிக்கும்போது அத அவரோட சாதியோட பொது புத்தியாத்தானே பாக்குறோம். நக்கீரன் ராசகோபால் எப்பயுமே அரசாங்கத்த எதுத்து எளுதறதுக்கு என்ன காரணம். ஏன்னா அது அவரோட சாதியிலயே ஊறியிருக்கு... ஆக சுஜாதாவுக்கு மட்டும் இல்ல அவர் படிக்கிற எல்லாருக்கும் அவரோட தப்பு புரியணுமின்னு நான் இத எழுதறேன். இத நீங்க வெளியிடுவீங்களா? வாழ்க
ஒரு அன்பான வேண்டுகோள் :: என்னிக்கி பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எல்லாரும் பார்ப்பனீய பத்திரிக்கைகள் படிக்கிறத நிறுத்தி சிறு மற்றும் குறு பத்திரிக்கை மட்டும் படிக்கிற காலம் வருதோ, என்னிக்கி சாதி இல்லாத சமுதாயம் உருவாகுதோ அன்னிக்கிதான் உண்மையான மறுமலர்ச்சி உண்டாகும்... அது வரைக்கும் இப்படிப்பட்ட மறுப்புகள எழுதிகிட்டேதான் இருப்பேன்.. இத நீங்க வெளியிடலேன்னா ஊத்து பத்திரிக்கைல வெளியிட வேண்டியிருக்கும் சாக்கிரதை... இது ஒரு அன்பான வேண்டுகோள் மட்டுமே
தமிழ்ப்பதிவுகள்
