<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener("load", function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <iframe src="http://www.blogger.com/navbar.g?targetBlogID=12213354&amp;blogName=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF&amp;publishMode=PUBLISH_MODE_BLOGSPOT&amp;navbarType=BLACK&amp;layoutType=CLASSIC&amp;searchRoot=http%3A%2F%2Fmugamoodi.blogspot.com%2Fsearch&amp;blogLocale=en_US&amp;homepageUrl=http%3A%2F%2Fmugamoodi.blogspot.com%2F" marginwidth="0" marginheight="0" scrolling="no" frameborder="0" height="30px" width="100%" id="navbar-iframe" allowtransparency="true" title="Blogger Navigation and Search"></iframe> <div></div>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

பூங்கா



படத்தில் இருப்பது எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு இடம். அதன் பெயர்.. PARK. இதுக்கு இங்க்லீஸ்ல பூங்காதானே..? நம்ப முடியாவிட்டாலும் உண்மை அதுதான்.. (காமிராவின் கலர் பேலன்ஸில் ஏதோ கோளாறு... படங்களில் மற்ற வண்ணங்கள் தெரியாமல் சிகப்பு மட்டுமே தெரிகிறது..)

அந்த பக்கம் வருவோர் போவோர் எல்லாம் பூங்காவை எட்டி பார்த்துவிட்டு இதென்ன இப்படி இருக்கிறதே என்று முகச்சுளிப்போடு போகிறார்கள். பூங்கா என்று பெயர், ஆனால் ஏன் இப்படி இருக்கிறதே என்று யாரிடமாவது கேட்கலாம் என்றால் பூங்கா உள்ளே சில குப்பை பொறுக்குபவர்கள் தவிர யாரையும் காணோம். அவர்களிடம் கேட்டால், "அதெல்லாம் எங்களுக்கு தெரியாதுங்க... முந்தியெல்லாம் அங்க இங்க திரிஞ்சி ப்ளாஸ்டிக் பொறுக்கினோம். இப்ப எல்லாத்தையும் ஒரே இடத்துல அலைச்சல் இல்லாம பொறுக்க முடியுது.. ஆள விடுவீங்களா"ன்னுட்டு வேலைய பாக்க போயிட்டாங்க...

ஒரு நாள் சிட்டி சர்வீஸஸ் டிபார்ட்மெண்டுல ஒரு என்ஜினியரு மாட்னாரு. அவருகிட்ட என் சந்தேகத்த கேட்டேன்.. அவரு பலமா சிரிச்சிட்டு "அதான் வழக்கமா எல்லாரும் லேண்ட் ஃபில்னு சொல்றாங்களே.. நாமளாவது வித்தியாசமா ஒரு கலா ரசனையோட இருக்கட்டுமேன்னு பூங்கான்னு பேர் வச்சோம்... இங்க பூக்கள் பூத்து குலுங்கும், உங்கள் குழந்தைகள் விளையாட ஏற்ற இடம் அப்படீன்னு எல்லாம் என்ன போர்டா போட்ருக்கோம்.. பூங்கான்னா இப்படித்தான் இருக்கணும்னு நீங்களா ஒரு கற்பனைய நினைச்சிகிட்டா நாங்க என்ன பண்றது.." ன்னாரு.

நல்ல கலா ரசனைடா சாமி...




š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


உள் குத்தின் திலகமே. இந்த குத்து குத்தியிருக்கிங்க.
 



ஹெஹ்ஹே... ஏதோ இணையப்பூங்காவைப் பத்தி சொல்றீங்களோன்னு நெனச்சேன்...

கிருபானந்தவாரியார் மஹாபாரத கதை சொல்லும்போது, துரியோதனன் தன் மாமன் சகுனியை கூப்பிடுவதாக "மாமனே மாமனே" என்று கத்துவார். அதனை கேட்டு பார்வையாளர்கள் சிரிப்பார்கள்.. அப்போது கிருபானந்தவாரியார் சுவாமிகள் "நான் மஹாபாரத்ததைச் சொல்றேன்.. என்று பூடிகையாக சிரிப்பார்.

அதே... அதே...
 



எல்லாம் சரி.

இந்த பதிவை பூங்கா இதழுக்கு அனுப்பினீர்களா இல்லையா?:))
 



:)))))))))))))))))))

முகமூடி

உங்களுடைய அக்மார்க் பதிவு இது. அது சரி பொதுவா குப்பைகளைத் திரட்டுறவுங்களுக்கும் அதில் சிவப்புக் குப்பைகளை மட்டும் அதிகமா நாற்றமெடுக்கும் குப்பைகளை மட்டும், அழுகிப் போய் நாற்றமெடுக்கும் கருமாந்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து இந்தச் சிவப்புப் பூங்காவில் கொட்டுறவுங்களுக்கும் சம்பந்தமே இல்லை, இரண்டும் வேற வேற என்கிறார்களே அது பற்றி உங்கள் கருத்து என்ன ? அதே இஞ்சினீயர் கிட்ட கேட்டுச் சொன்னாலும் சரி.

என்ன இருந்தாலும் லாண்ட்ஃபில்லை இந்த அளவுக்கு கேவலப் படுத்தியிருக்கக் கூடாதுதான். கம்பேர் பண்ணும் பொழுது இந்த லாண்ட்ஃபில் சுகந்த மணம் வீசும் சொர்க்கம்.

இன்னுமொரு டவுட்டு: நீங்க குலைக்கிற நாயா, கடிக்கிற நாயா? (நாயகன் கமல் ஸ்டைலில் படிக்கவும்)

அன்புடன்
ச.திருமலை
 



சந்தோஷ் aka சந்தோஷ்... இதில் எந்த குத்தும் இல்லை என்று போஸ்ட் மார்ட்ட டிஸ்கி விடுகிறேன்.

*

மஹாபாரதத்தில் சகுனி துரியனுக்கு மாமாதானே. அப்படி கத்தினால் அதில் சிரிக்க என்ன இருக்கிறது.. சற்று விரிவாக விளக்கவும் அனானிநாதரே..

*

செல்வன், பூங்கா என்று இதழ் இருக்கிறதா? யு மீன், நக்கீரன், குமுதம் போல் பேப்பர் இதழ் ஆர் கீற்று, ஓலை போல் இணைய இதழ்.. எக்ஸ்ப்ளனேசன் ப்ளீஸ்

*

இன்ஜினியர் அப்பீட்டு திருமலை. அடுத்த முறை பார்க்க நேர்ந்தால் கேட்டு சொல்கிறேன்.

ஏதோ நாய் கவிதை ரெண்டு எழுதியிருக்கேன், நாய் பிடிக்கும்கிறதால
என்னையே நாய்னு சொல்றது அவ்ளோ நல்லா இல்ல சொல்லிபுட்டேன். மீத் நாய் மேட்டர்களை பற்றிய சந்தேகங்களை நான் கண்ட நாய்கள் இடமே கெட்டு தெளிந்து கொள்(ல்)ளவும்
 



முகமூடி,
சொல்ல மறந்துவிட்டேன், அப்போது மருமகன் பேச்சை கேட்டுக்கொண்டு தன்னை கட்சியிலிருந்து விலக்கிவிட்டதாக கருணாநிதி மீது எம்ஜியார் குற்றம் சாட்டியிருந்தார். அப்படி மாமனே என்று கிருபானந்தவாரியார் கூறும்போது தோளில் போட்டிருக்கும் துண்டை எடுத்து ஒரு தோளிலிருந்து மட்டும் இருப்பதாக நீளமாக (திமுகவினர் பாணியில்) போட்டுக்கோள்வார்.
:-))
 



எப்பா... வாரியார் விட்டதுதான் உண்மையிலேயே உள்ள்ள்குத்து :)))
 



எப்படி முகமூடி உங்களால் மட்டும் இப்படி சிந்திக்க முடிகிறது. வலைப்பதிவின் சிகரமய்யா நீர்...
 



அய்யா சாமி,

குடிசைத்தொழில் பண்ணப்போறேன்னு இந்தியாவுக்கு போனவரை, கோட்டையில களி திங்க வச்சிடாதீங்கப்பா...

நல்லா இருங்க சாமிகளா...
 



இதை சீன மொழியிலோ அல்லது போர்துகீசிய, ஸ்பானிஷ் மொழியிலோ எழுதி, சைனா, கியூபா, வெனிசூலாவில் வினியோகித்தல் பற்றி எதேனும் எண்ணம் உள்ளதா ?
 



சந்தோஷ் சொன்னதை அப்படியே வழி மொழிந்து நான் ஆகிறேன் அபீட்டு......

உங்களது இந்த ரவுண்டு நிலையாக நீடித்து நிற்க முருகனை வேண்டிக்கொண்டு!!
 



நல்ல கலா ரசனைடா சாமி

யார் இந்த கலா?
 



பூங்கா என்று இதழ் இருக்கிறதா? யு மீன், நக்கீரன், குமுதம் போல் பேப்பர் இதழ் ஆர் கீற்று, ஓலை போல் இணைய இதழ்.. எக்ஸ்ப்ளனேசன் ப்ளீஸ்

சூப்பர் குத்து நைனா.
 



// முந்தியெல்லாம் அங்க இங்க திரிஞ்சி ப்ளாஸ்டிக் பொறுக்கினோம். இப்ப எல்லாத்தையும் ஒரே இடத்துல அலைச்சல் இல்லாம பொறுக்க முடியுது.. ஆள விடுவீங்களா //

:)) :)) :))
முகமூடி ஐயா. உங்கள் பாணியே பாணி.

// யு மீன், நக்கீரன், குமுதம் போல் பேப்பர் இதழ் ஆர் கீற்று, ஓலை போல் இணைய இதழ்.. எக்ஸ்ப்ளனேசன் ப்ளீஸ் //

இது, இது அதைவிட அருமை!
 



முகமூடி அய்யா,

சூப்பர் உள்குத்து.இதை எங்க தலைவர் அசுரன் அய்யா கிட்ட சொல்லி பு க பத்திரிகையில் பிரசுரிக்க ஏற்பாடு பண்ணுகிறேன்.

பாலா
 



//செல்வன், பூங்கா என்று இதழ் இருக்கிறதா? யு மீன், நக்கீரன், குமுதம் போல் பேப்பர் இதழ் ஆர் கீற்று, ஓலை போல் இணைய இதழ்.. எக்ஸ்ப்ளனேசன் ப்ளீஸ்//
முகமுடி அநியாயத்துக்கு நீங்க அப்பாவியா இருக்கிங்க. ஊரு உலகத்துல பாத்து இருமய்யா காலம் கெட்டு கிடக்கு.
 



இந்த மாதிரி பதிவு பத்துன ஐடியாவெல்லாம் அப்படியூ வர்ரதுதானா

இல்லை

இதுக்காக தனியா ரூம் போட்டு உக்காந்து யோசிப்பீங்களா :)
 



//எப்படி முகமூடி உங்களால் மட்டும் இப்படி சிந்திக்க முடிகிறது. வலைப்பதிவின் சிகரமய்யா நீர்...//

அதே, அதே.
 



This post has been removed by a blog administrator.
 



ஆகாயத்தை பாருங்கோ. வண்ணமயமாக இருக்கு.
குருவிகளும் பறக்குது.
 



ஆரம்பிச்சுட்டாங்கய்யா, ஆரம்பிச்சுட்டாங்கய்யா :)

எப்டி இப்டி ? கொஞ்சம் டிரெயினிங் கொடுக்க முடியுமா ;-)

//எல்லாம் சரி.

இந்த பதிவை பூங்கா இதழுக்கு அனுப்பினீர்களா இல்லையா?:))
//

எனக்கு இந்த உண்மை தெரிஞ்சாகணும், ஆமா சொல்லிப்புட்டேன் :))))))
 



டைமிங் போஸ்டுக்கு ஒரு கிளாஸ் ஆரம்பியுங்க தல. :))
 



தமது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருக்கிறது என்று எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல் காரணமாக ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்க சொன்ன ஒரு பின்னூட்டம் அப்பீட் ஆக்கப்படுகிறது. மற்றபடி இந்த இடுகைக்கான இணைப்பு தமிழ்மணம் களஞ்சியத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நமக்கு ஒன்றும் ஆட்சேபம் இல்லை.

அப்பின்னூட்டம் குறித்து எழும் பல உப கேள்விகளை கேட்க இப்பொழுது ஆர்வம் இல்லை... என்பதை விட வேறு உருப்படி எதாவது பார்க்கலாம் என்பதே தற்போதைய அபிப்பிராயம்.

தனிப்பட்ட ஒருவரின் ஜாதி மற்றும் தனித்தகவல் - கொள்கை அல்லது பின்பற்றும் மரபியல் அல்ல, பெர்சனல் ஐடன்டிபிகேஷன் போன்றவை - தவிர்த்த எழுத்துக்கள், என்னளவில் நோ பிக் டீல் என்று கருதும் பட்சத்திலே நான் வெளியிடுவேன் என்றாலும் யாரேனும் அது தனக்கு மன உளைச்சல் தரும் அல்லது பெயருக்கு களங்கம் என்று எண்ணும் பட்சத்தில் எனக்கு தனிப்பட்ட மின்மடலில் - இதுவரை எனக்கு * தனிமடல் - என் பார்வைக்கு மட்டும் * என்று வந்த மடல்களை யாரிடமும்/பொதுவிலும் பகிர்ந்ததில்லை - தெரிவிக்கலாம். எந்த நிபந்தனையும் தேவையில்லாமலே - கடந்த கால பல சம்பவங்களை போலவே - தனிப்பட்ட கொளுகை என்று மட்டும் சொல்லி அதை ஆவன செய்வேன். அதை விட்டு வேறு எங்காவது முறையிடுவது அவரவரின் தனிப்பட்ட இஷ்டம்.
 



நீங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு மாற்று திரட்டி உருவாக்குங்கள். அதுவே தீர்வு.
 



சரி, உங்க கருத்து ??



கூப்பிட்டு வச்சு கும்மியிருக்காங்க ::

Create a Link