<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/?m%3D0\x26vt\x3d-745251474864776225', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

அன்புள்ள பத்திரிக்கை ஆசிரியருக்கு...


நான் ஃபாரின்ல இருக்குற பிற்படுத்தப்பட்ட தமிழன். அது என்னவோ தெரில, பிளாக்கு எழுத ஆரம்பிசச்துல இருந்தே இப்படிதான் என்ன நான் இன்ட்ரட்யூஸ் செஞ்சிக்கிறது.

இன்னிக்கி பொங்கல். தலைவர் தமிழர் திருநாள்னுதான் சொல்லணும்னு ஆர்டர் போட்டுக்கிறாரு.. தலைவருன்ன உடனே நம்ம கேப்டன சொல்றேன்னு நினைக்காதீங்க. என்னிக்கி வெளிநாடு வந்தேனோ, அன்னிக்கே கேபடன வுட்டு வெலகிட்டேன். இப்பல்லாம் தலைவன்னா அது எங்க வாழ்க்கையில வெளிச்சம் ஏத்துற தலைவர மட்டும்தான் குறிக்கும்.

சின்ன புள்ளயா இருக்க சொல்ல, நமக்கு தீவாளி பொங்கல்னு எதுவா இருந்தாலும் சந்தோசம்தான். ஏன்னா புது சொக்கா ட்ரவுசரு கிடைக்கும். பண்டிக காசு கிடைக்கும். வூட்ல எல்லாம் சந்தோசமா இருப்பாங்க. நாலு நாளக்கி என்னா சேட்ட பண்ணாலும் திட்ட மாட்டாங்க. அதுவும் இல்லாம அல்லா சொந்தக்காரங்களும் இருப்பாங்களா, ஆராவது ஒருத்தராவது காவந்து பண்ண வந்துடுவாங்க. அப்புறம் பெரியவன் ஆனப்புறம், நமக்கு தலைவர் படம் ரிலீஸ் ஆவுற நாள் எதுவோ அதான் தீவாளி, பொங்கல் எல்லாம். அதெல்லாம் ஒரு காலம்க.. அறியாப்புள்ளயா சந்தோசமா இருந்த காலம். அது ஒரு காலம்க.. ஒலகம், பிளாகு எதுவும் அறியாத வயசு..

அப்புறம் இளந்தாரியா ஆனப்புறமா பொங்கலு வேற விதமா ஆச்சி.. பொங்க மொத நாளு அய்யா படியளப்பாரு. கூலியாளுங்க மட்டுமில்லாம வண்ணான், சங்கூதி, சக்கிலியரு, தோட்டிமாரு, நாவிதன்னு எல்லாருக்கும் மூட்ட நெல்லும், வேட்டி பொடவயும், காசு பணமும் அய்யா தருவாரு. சனங்க சந்தோசமா போவும். அப்புறம் கொஞ்ச கொஞ்சமா ஊருல பொங்க களையிழக்க ஆரம்பிச்சிடுச்சிங்க.. போன பொங்கலுக்கு வாழ்த்து சொல்லலாம்னு ஊருக்கு போன் போட்டப்ப அய்யா சொன்னத கேக்க பாவமா ஆயிடுச்சி.. "என்னடா பொங்கலு... ஊர்ல ஒரு நாய் இல்ல... கூலிக்கார நாய்ங்க, அலுங்காம சம்பாதிக்க ஆசப்பட்டு கேரளாவுக்கு கட்டட வேல செஞ்சு பொழக்க போயிட்டானுங்க. மொழி தெரியாத எடத்துல அடிமையா சம்பாதிச்சு என்ன பிரயோசனம், இந்தூர பொருத்த வரைக்கும் பிச்சக்கார பயலுவதான, கூழோ களியோ நம்மூர்ல திங்கிற மாதிரி வருமான்னு நென்னப்பு வருதா பாரு இவனுங்களுக்கு? முந்தி மாதிரி இல்லடா, எனக்கும் வயாசாயிட்டே போகுது. நீ வேற ஃபாரின்ல போய் இருக்க. பெசாம எல்லாத்தயும் ஏரக்கட்டலாம்னு பாக்குறேன்"

என்னய்யா ப்ரச்னைன்னு கணக்குகிட்ட கேட்டா அவரு வேற புலம்புனாரு "சின்னய்யா, இந்த கீழ்சாதியில பொறந்த எளந்தாரி பயலுவளுக்கு மட்டு மரியாத தெரியரதில்ல.. அவனுங்க அப்பனாத்தாளும் அவனுங்களுக்கு சொல்லித்தரதில்ல... நேத்திக்கி பக்கத்தூரு படையாச்சி அய்யா தேவரய்யாவ பாக்க வந்திருந்தாக... பொங்கலுக்கு கேரளாவுல இருந்து வந்திருந்த அந்த சக்கிலி வூட்டு பய, பெரியய்யா திண்ணையில உக்காந்து இருக்கிறது தெரிஞ்சும் கண்டும் கானாத மாதிரி சைக்கிள வுட்டு இறங்காம போனான்.. அத பாத்ததும் படையாச்சி அய்யா நம்ம பெரியய்யாவ பாத்த பார்வ இருக்கே.. என்னாத்த சொல்வேன் போங்க... அப்புறம் சின்ன படையாச்சி போய் அவன் செவுள்ள ரெண்டு வுட்டாங்க. நீங்க இங்க இருந்தா இந்த பயலுங்க இப்பிடி துள்ளுவானுங்களா... பேசாம வந்திருங்க தம்பி"ன்னாரு... இதுனாலதான் வூட்டுக்கு போன் போடுறதுன்னாலே யோசனையா இருக்கு இப்பல்லாம்.

சரி வுடுங்க... சொல்ல வந்த மேட்டர வுட்டுட்டு என்னன்னவோ சொல்லிக்கிணு இருக்கேன்...

சமீபத்துல சுஜாதா கத ஒண்ணு எளுதியிருக்காருன்னு அத நீங்க பப்ளிஸ் பண்ணியிருந்தீங்க. அது பத்தி நான் ரெண்டு வார்த்த சொல்ல ஆசப்படுறேனுங்க.. பொதுவா உங்க பத்திரிக்கைய நான் படிக்கிறதில்ல.. டிவி, ப்ரண்ட்ஸ்ன்னு பொழப்பு ஓடும். அய்யா சினிமாவுலனாலதான் சின்ன பசங்க கெட்டு போறாங்கன்னு சொன்னதால சன் டிவிய நிறுத்தியாச்சி. மக்கள் டிவி இங்க வரதில்ல. வழக்கமா பண்டிகைனா வூட்டுக்கு வர என் பிரண்டு மூக்கையா தேவன், திண்ணியம் ப்ரச்னை பத்தி காரசாரமா விவாதிச்ச நாள்ல இருந்து இங்க வரதில்ல. அதுவும் இல்லாம ஃபாரின் வந்ததுல இருந்து நம்ம சிந்தனை எல்லாம் மாறிப்போச்சி... அய்யமாருங்க பத்திரிக்கை படிக்கிறதில்லை.. முந்தி மாதிரின்னா கஸ்டம், எல்லாமே அய்யமாருங்கதான் நடத்திகிட்டு இருந்தாங்க.. இப்ப அப்பிடி இல்ல. நக்கீரன், தராசுல ஆரம்பிச்சி கீத்து வரக்கும் உண்மைய சொல்ற பத்திரிக்கைங்க வந்தாச்சி. இனிமே வெகுசன ஊடகங்க பப்பு அவ்வளவா வேகாது... இருந்தாலும் பாழாப்போன சனங்க வெகுசன ஊடகங்களத்தான விரும்பி படிக்கிறாங்கங்கிறது மனசுக்கு கஷ்டமா இருக்கு. அதுனால அவங்களோட வேசத்த கலைக்கிறத எப்பியுமே ஒரு தவமா நான் செய்யிறது... அதனால கருமம், வேற வழியில்லாம பொழுத போக்க உங்க பத்திரிக்கைய படிச்சேன். படிச்சப்புறமா ஏண்டா படிச்சி தொலைஞ்சோமின்னு ஆயிப்போச்சி.

சுஜாதா ஒரு அய்யரு.. அவரு பையனுக்கு சப்பான் பொண்ண கட்டிவச்சாருன்னவுடனே அவரு லிபரல்னு நானே நெனச்சிகிட்டேன். அவரு பெர்சனல் வாழ்க்கைய பத்தி நமக்கு என்னங்கறீங்களா... என்னங்க பண்றது, தமிழன் பொறந்தவுடனே, பக்கத்து பெட்ல பொறந்த பாப்பா அழுதுச்சான்னு கேட்டுட்டுதான் தன் அழுகையவே ஆரம்பிக்கிறான். அப்புறம் சினிமாக்கரன்ல ஆரம்பிச்சி அரசியல் தலைவன் வரைக்கும் எவனுக்கு எவ கூட காதலு, எவன் எவ்ளோ சம்பாதிக்கிறான், எவ எவங்கூட ஓடிப்போனா அப்படீன்னே யோசன பண்ணி யோசன பண்ணி, ஒரு எழுத்தாளனா இருந்தா கூட சரி, அவனுக்கு ஒரு ஐடல் ஒர்ஷிப் பண்ணி அவன் பெர்சனல் கேரக்டரு என்ன, அவன் என்ன ஜட்டி போடறான்னு எல்லாத்தையும் பிரிச்சி மேஞ்சாத்தான் மனசுக்கு ஒரு நிம்மதி கெடைக்கிது.. இப்ப பாருங்க, சமுதாய முன்னேத்தத்துக்காக நானும் வரிஞ்சி கட்டி எளுதறேன். ஆனா நெகட்டிவ் குத்தா குத்தறானுங்க. ஏன்னா நான் ஒரு தாழ்த்தப்பட்டவன். ஆனா சுஜாதா கதைய பல லட்சம் பேர் படிக்கும்படி பப்ளிஷ் பண்றீங்க.. ஒருத்தனும் அவருக்கு நெகட்டிவ் குத்த மாட்றான்.. ஏன்னா அவரு அய்யங்காரு... இதுதான் சமுதாயம்.

இப்ப கதைக்கு வருவோம்... அதுல அவரு என்ன சொல்றாரு. ஒரு அய்யர் இல்லாத பொம்பள, புருசன் கிட்ட அக்ரசிவ்வா பேசற மாதிரி எளுதறாரு. அய்யர் இல்லாத பொம்பளங்க எதுக்காவது புருசன்கிட்ட சண்ட போட்டு பாத்திருக்கீங்களா... வீட்டு விவகாரம் ஆனாலும் சரி, புருசன் சக்களத்தியே வச்சிகிட்டாலும் சரி, "கள் ஆனாலும் கணவன், full ஆனாலும் புருசன்"னு வாழுறவங்க அவங்க. என்ன ப்ரச்னைனாலும் அமைதியா 'என்னங்க இப்படி பண்ணிக்கலாமா, உங்களுக்கு வேணாம்னா வேணாம்" அப்படீன்னு மட்டுமே பேசற பொம்பளை சாதியில ஒருத்தி புருசன்கிட்ட கொஞ்சம் சவுண்டா பேசுற மாதிரி எழுதறாரு. இது தாழ்த்தப்பட்டவங்க மேல மேட்டுகுடிக்கு இருக்கிற காழ்ப்பத்தான காமிக்கிது.

எங்கூருல தேவமாரு ஊட்டுல பொறந்த பையன் அரிசன காலனியில பொண்ண கடத்துனா பொத்துனாப்புல வெட்டிருவோம்.. தாலிய வெட்டி வுட்டுறுவொம்னு இல்ல, ரெண்டு பேரயும் உண்மையிலேயே வெட்டிருவோம். அப்பிடி இல்லையின்னா, பெரியவங்க எல்லாம் எதுவுமே பேசாம இருப்பாங்க. "ஏண்டா பய போயும் போயும் அந்த எசக்கி பொண்ண இழுத்துகிட்டு ஓடிட்டாணாமே.. அவன் சாதி என்ன, நம்ம சாதி என்ன, ஏண்டா இவம் புத்தி இப்பிடி தரங்கெட்டு போவுது"ன்னு எல்லாம் பேச மாட்டோம். நடமுற இப்பிடி இருக்க, ஒரு அய்யிரு கிழவன், "அவா சாதி என்ன" அப்பிடின்னு சாதி அமைப்ப இழிவு படுத்தற மாதிரி பேசற மாதிரி சுஜாதா எழுதியிருக்கிறது அவரோட மன வக்ரத்த தான் காட்டுது.

அட அவரு எழுதினது வெறும் கதைதான்னு சொல்றீங்களா? அது எப்பிடீங்க... அவரு அய்யங்காரு. அவரு கதைய எப்பிடி வெறும் கதையா பாக்குறது. அதுவுமில்லாம அவரு தி.கவோட "எதிர்வினை"ய நைச்சியமா குற்றம்கிற மாதிரி எழுதறாரு... அத அவரு சாதியோட பொது புத்தியாத்தான் பாப்போம்.. இப்ப பாருங்க சாரு நிவேதிதா, அவரு அமெரிக்காவுல இருந்து ஆஸ்திரேலியா வரைக்கும் இருக்கிற பதினாரு வயசு குட்டிங்க கூட எல்லாம் சைபர் செக்ஸ் வச்சி அவளுங்க எல்லாம் இவரத்தான் கண்ணாலம் கட்டிக்கணும் இல்ல அவரோட டைம வேஸ்ட் செஞ்சதுக்காக அட்லீஸ்ட் ஒரு முறை அவரோட படுத்துக்கவாவது செய்யணும்னு பப்ளிக்கா எழுதும்போதும், அவரு பொண்டாட்டிக்கு மனதளவில ப்ரச்னை, அதனால பொண்டாட்டி கூட புணர்வதே இல்லைன்னு செல்ப் தம்பட்டம் அடிக்கும்போது அத அவரோட சாதியோட பொது புத்தியாத்தானே பாக்குறோம். நக்கீரன் ராசகோபால் எப்பயுமே அரசாங்கத்த எதுத்து எளுதறதுக்கு என்ன காரணம். ஏன்னா அது அவரோட சாதியிலயே ஊறியிருக்கு... ஆக சுஜாதாவுக்கு மட்டும் இல்ல அவர் படிக்கிற எல்லாருக்கும் அவரோட தப்பு புரியணுமின்னு நான் இத எழுதறேன். இத நீங்க வெளியிடுவீங்களா? வாழ்க ஜெய்கிந்த் தனித்தமிழகம்.

ஒரு அன்பான வேண்டுகோள் :: என்னிக்கி பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எல்லாரும் பார்ப்பனீய பத்திரிக்கைகள் படிக்கிறத நிறுத்தி சிறு மற்றும் குறு பத்திரிக்கை மட்டும் படிக்கிற காலம் வருதோ, என்னிக்கி சாதி இல்லாத சமுதாயம் உருவாகுதோ அன்னிக்கிதான் உண்மையான மறுமலர்ச்சி உண்டாகும்... அது வரைக்கும் இப்படிப்பட்ட மறுப்புகள எழுதிகிட்டேதான் இருப்பேன்.. இத நீங்க வெளியிடலேன்னா ஊத்து பத்திரிக்கைல வெளியிட வேண்டியிருக்கும் சாக்கிரதை... இது ஒரு அன்பான வேண்டுகோள் மட்டுமே




š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


என்ன முகமூடி?
முகமூடின்னு பேர் வச்சதுக்கு பதிலா முள்ளம்பன்றின்னு பேர் வச்சிருக்கலாம்..

எங்க தொட்டாலும் குத்துது...

அதுவும்.. இது...
/வழக்கமா பண்டிகைனா வூட்டுக்கு வர என் பிரண்டு மூக்கையா தேவன், திண்ணியம் ப்ரச்னை பத்தி காரசாரமா விவாதிச்ச நாள்ல இருந்து இங்க வரதில்ல. /
 



தலீவா, இப்படி பின்னியிருக்கீங்க. உங்க மின்னாடி நான் ஒரு அமெச்சூர் ஐயா. நல்லாயிருங்க ஐயா.. நல்லாயிருங்க (தமிழ் படத்தில் வரும் ஒரு கிராமத்து துணை நடிகரை நினைத்து படிக்கவும்)
 



கலைச்செல்வி எனும் பெயரை சரஸ்வதி என்று மாற்றிவிடுவார்கள் என்கிறார்கள்.

கலைச்செல்வியின் மாமனார் பா.ம.கவில் இருந்திருந்தால் சரஸ்வதி என்று ராமதாஸின் அம்மா பெயரை மருமகளுக்கு வைத்திருப்பார்.அவர் பாமகவில் இல்லாததால் அந்த சுத்த சமஸ்கிருத பெயரை வைக்க முடியாமல் போய்விட்டது.

எப்படியும் பேரன் பிறந்தால் புருஷோத்தமன் எனும் தூய தமிழ் பெயரையோ அல்லது பேத்தி பிறந்தால் சவும்யா எனும் தூய தமிழ்பெயரையோ வைப்பார் என்று எதிர்பார்க்கலாம். அல்லது ராமதாஸின் சம்பந்தி பெயரான கிருஷ்ணசாமி அல்லது விஷ்ணுபிரசாத் என்று வைக்கலாம்.
 



//என்ன முகமூடி?
முகமூடின்னு பேர் வச்சதுக்கு பதிலா முள்ளம்பன்றின்னு பேர் வச்சிருக்கலாம்..

எங்க தொட்டாலும் குத்துது...//

யப்பா. இது நல்லா இருக்கே! :)))
 



நேரடியான தாக்குதலாய் தெரிகிறது...

சாதிப் பெயர்களை சொல்லி எழுத வேண்டுமா ?
 



முள்ளம்பன்றியாரே!
:)
ஒவ்வொரு சொல்லிலும் ஒரு குத்து வைக்கும் இந்தக் கலையை மிஞ்ச உங்களை விட்டால் வேறு ஆளில்லை!

:))
 



//என்ன முகமூடி?
முகமூடின்னு பேர் வச்சதுக்கு பதிலா முள்ளம்பன்றின்னு பேர் வச்சிருக்கலாம்..

எங்க தொட்டாலும் குத்துது...//

யப்பா. இது நல்லா இருக்கே! :)))///
ரிப்பீட்டேய்ய்

//(தமிழ் படத்தில் வரும் ஒரு கிராமத்து துணை நடிகரை நினைத்து படிக்கவும்)//
ஷாமி, எனக்கு ஒன்னுமே புரியலையே ஷாமி. யாருங்க ஷாமி அந்த துணை நடிகரு? எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ஷாமி
 



அடிச்சு ஆடுங்க.
ஏற்கனவே நீங்க இந்த இன்னீங்கஸ்ல அடிச்சு ஆடுனத்துக்கு எல்லா பகுத்தறிவு அரை குறை பகுத்தறிவு ஆளுங்க எல்லாம் ஓடி போயிட்டா.ஜெய் ஹிந்த்
 



// தமிழன் பொறந்தவுடனே, பக்கத்து பெட்ல பொறந்த பாப்பா அழுதுச்சான்னு கேட்டுட்டுதான் தன் அழுகையவே ஆரம்பிக்கிறான். //

:-))))) Tamil Pressure or Peer Pressure????
 



//இத நீங்க வெளியிடலேன்னா ஊத்து பத்திரிக்கைல வெளியிட வேண்டியிருக்கும் சாக்கிரதை... இது ஒரு அன்பான வேண்டுகோள் மட்டுமே//

முகமூடி அய்யா,

கவலை படாதிங்கய்யா. எங்க மருத்துவர் அய்யா, பா.ம.க எம்.எல்.ஏ க்களுக்கு எழுத/படிக்க சொல்லிக்கொடுக்க கிளாஸ் எடுக்கறாரு.இந்த கதையை பாட புஸ்தகத்திலே போட சொல்லி நம்ம குழலி அய்யா மூலம் ஒரு மனு கொடுக்கலாம்.
ஒரு வேளை வொர்க் அவுட் ஆகலன்னா,இருக்கவே இருக்கு அசுரன் அய்யாவோட புதிய கலாசாரம்.

பாலா
 



என்ன எழுதியிருக்கீங்க முகமூடி? எழுதினத மறுபடி படிச்சுப்பார்த்தா உங்களுக்கே கூசியிருக்க வேணாம்?

அதான் நாங்க எல்லாம் சொல்லிட்டோமில்ல, வன்முறை கூடாதுன்னு? பூணூல் விக்கிறவன்
அந்த சமாதானத்தைக் கேட்டுகிட்டு அமைதியா இருந்திருக்க வேணாம்?

அத விட்டுபோட்டு, அவன் சாதிய சான் ஹூசேலே வளர்க்கிறதுக்குப் புறப்படரேன்னு கதை எழுதறாரு சுஜாதா! அதை சும்மா வுட்டுட முடியுமா? சாதிய உருவாக்கின படுபாவிங்க, அதை இல்லைன்னும் சொல்லக்கூடாது, இருக்குன்னும் சொல்லக்கூடாது. அதான் எங்க
நிலைப்பாடு.

கேவலம் அவனுங்க சாப்பிடற சாப்பாட்டை சாப்பிட்டுகிட்டு, அவனுங்க பாக்கிற சினிமாவையே பாத்துக்கிட்டு அவனுங்க பாக்கிற F டிவியே பாக்கிறதுதான் கலாச்சாரமுன்னு நெனைக்கிறான் பாருங்க ஏழை பிற்படுத்தப்பட்டவன், அவனுக்கு
மண்டைக்குள்ளே டார்ச் லைட் ஏத்தறதுதான் எங்க நோக்கம். (டார்ச் லைட் கிடைக்காட்டா தீப்பந்தம் கூட ஏத்துவோம்!)

நாங்க தலித்த அடிச்சாலும். நாங்க அவுனுங்களை அடிச்சாலும், எல்லாத்துக்கும் காரணம் அவுனுங்கதான்றத மறக்காதீங்க!
 



// முகமூடின்னு பேர் வச்சதுக்கு பதிலா முள்ளம்பன்றின்னு பேர் வச்சிருக்கலாம் //

பொங்கலும் அதுவுமா இப்பிடி ஒரு பட்டப்பேரு வச்சி அதயே எல்லாரும் பாலோ பண்ண ஆரம்பிச்சிட்டாங்க... அடி ஆச்சீ, நல்லாருங்கடி (திட்டலீங்க, சாத்தான்குள டைப்புல ஒரு வாழ்த்து அவ்ளோதான்... நீங்க ஆம்பிளையா இருந்தா நல்லாருங்கடே ன்னு மாத்தீக்கோங்க ஆத்தீ)

*

கால்கரி, நாலு நாள் கழிச்சி கண்முழுச்சி பாத்தது ஒங்க புளாக்குல, அதான் குமுதத்துல போடுவாங்களான்னு ஆதங்கமா கேட்ருந்தீங்களே, அதுல... அதோட பாதிப்புதான் இது...

*

நீங்க சொன்ன தமிழ் பேர் எல்லாம் நல்லாருக்கு அநானி... தொண்டர்ங்க வூட்டுக்கு பேர் வைக்க போகும்போது 1 கிராம் வெள்ளிக்காசும் பேரும் வைக்க ஆவும்.

*

இ.கொ, இனிய பொ.வா மற்றும் நன்னி
 



// சாதிப் பெயர்களை சொல்லி எழுத வேண்டுமா ? // இதுல வர்ற மூக்கையா தேவரு, எசக்கி எல்லாம் இன்னமும் எங்க ஊரில் வாழும் பெரிசுகள்தாங்க.. அப்புறம் சுஜாதாவ அய்யங்காரு/அய்யருன்னு இல்லாம எழுத்தாளர்னு எழுதினேன்னு வைங்க, கோமணம் கட்டாத ஊர்ல கோமணம் கட்டுன கதையா ஆயிடும். அதான் அப்பிடி...

// தாக்குதலாய் தெரிகிறது... // தாக்குதல் இல்லீங்க.. நடைமுறைய சொன்னேன்... அடிப்படைகளை மறக்க வைத்து, மாயப்பிம்பங்களின் மேல் கவனத்தை திசை திருப்பி காலங்காலமாக ஊரை ஏமாத்தி திரிவது தலைவர்கள்தான்னு இவ்ளோ நாள் நினைச்சிகிட்டு இருந்தேன். ஆனால் மெத்த படித்த தொண்டர்களும் தலைவன் காலடியை அச்சு மாறாம பின்பற்றும்போது தப்பு தலைவன் மேல மட்டும் இல்லைன்னு தெரியுது... நான் நடுநிலைவாதிதான் என்று சொல்லிக்கொண்டு அய்யர் அய்யங்கார் என்று சொறிந்து கொள்வதால் நாலு பேர் சந்தோஷமாக இருப்பார்கள் என்றால், காசா பணமா செய்துவிட்டு போவோமே.

// நேரடியான // மறைமுகமா எழுதினோம்னு வைங்க, அப்புறம் இது ரத்தத்தின் கொறிப்பா அல்லது சாம்பாரில் போடும் பருப்பான்னு கேள்வி வரும். இதுக்கும் கன்டினியூட்டி போட்டு கதையெல்லாம் முளைக்கும். எதுக்கு வம்பு.
 



நாராயண நாராயண மோடி

*

SK, இளா. உங்களுக்கு என் இனிய பொ.ந.

*

ஜெய் ஹிந்த் எல்லாம் கெட்ட வார்த்தை அனானி.. அஸ்ஸாம்ல திரிபுராவுல எல்லாம் என்ன நடக்குதுன்னு தெரியும்ல.. இல்லைன்னா நக்கீரன் வாங்கி தெரிஞ்சிக்கோங்க

*

பக்கத்துல இருக்கிறது டமிளான்னு வேணா தெரிஞ்சிக்கலாம். ஆனா peer ஆ அப்படீன்னு சர்டிஃபையிங் அத்தாரிட்டிதான் முடிவு செய்வாங்க...

*

புதிய கலாசாரம் ஆன்லைன் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்குமா... உண்மைகள மட்டும் படிக்கணும்னு மனசு துடிக்கிது...

*

// நாங்க தலித்த அடிச்சாலும். நாங்க அவுனுங்களை அடிச்சாலும், எல்லாத்துக்கும் காரணம் அவுனுங்கதான்றத மறக்காதீங்க //

இத இந்த பதிவுல பஞ்ச் டயலாக்கா வச்சிக்கலாம் அநானி. நன்றி.
 



///முகமூடின்னு பேர் வச்சதுக்கு பதிலா முள்ளம்பன்றின்னு பேர் வச்சிருக்கலாம்..

எங்க தொட்டாலும் குத்துது...//

:))))))))))))) நான் ரொம்ப ரசிச்சது இதுதான். கொஞ்சம் கொல்லுனு பிரச்சினைக்கு சம்பந்தம் இல்லாமே சிரிச்சு வெச்சுட்டேன்...

கருத்து சொல்லி புண்ணாக்கிக்கறதுல எனக்கு இஷ்டம் ( இஷ்டம் தமிழ் வார்த்தையா ?) இல்லை !!!! தலைங்க லேட்டானாலும் லேட்டஸ்டா வரும்...இந்த வாரம் கொஞ்சம் சாலி தான் போங்க !!!!
 



// இஷ்டம் தமிழ் வார்த்தையா //

ஒப்புதல் னு சொல்லலாம். ஆனா அதுவே தமிழ் வார்த்தையான்னு ஒரு கேள்வி வரும். நம்ம லாஜிக் என்னன்னா, நான் நினைக்கிறத கேட்கிறவர் சரியா புரிஞ்சிக்கணும், அதுக்கு மொழி ஒரு மீடியம் அவ்ளோதான்.

// இந்த வாரம் கொஞ்சம் சாலி தான் போங்க // இதத்தான் ஊர் ரெண்டு பட்டால் ***க்கு கொண்டாட்டம்னு சொல்லியிருக்காரோ வள்ளுவர் :))

என்ன பொங்கலும் அதுவுமா ப்ளாக்கு பக்கம்.. ஊராண்ட கோழி (அட பறவை இனம்தான்) எதுவும் மாட்டலையா :))))
 



மூகமூடி

அது சரி திண்ணிய்யத்தில பீயத் திணிச்சவனுக்கும் மூக்கையாத்தேவனுக்கும் என்ன சம்பந்தமுன்னு யோசிச்சேன், சரியான கள்ளரையா (இது வேற கள்ளன்) நீர்!! ஊர்ல உள்ள பாப்பானையெல்லாம் நாக்கூசாமல் திட்டும் மூக்கையாத் தேவர்களுக்கு திண்ணியத்தத் தொட்டா ஷாக் அடிக்கத்தானே செய்யும். அதுக்குப் பதிலா பாப்பான நாலு திட்டு திட்டினீங்கன்னா உங்களுக்கு இணையத்தில இன்னிக்கு இன்னா மதிப்பு சேந்திருக்கும் தெரியுமா, நம்ம **** கூட உங்க பதிவ டாப் டென்னுல போட்டுறுப்பாரு, அடப் போங்க்கப்பா பொளைக்க்க்கத் தெரியாத ஆளாயிருக்கீங்க.
 



\"நம்ம லாஜிக் என்னன்னா, நான் நினைக்கிறத கேட்கிறவர் சரியா புரிஞ்சிக்கணும், அதுக்கு மொழி ஒரு மீடியம் அவ்ளோதான்\"

இத ஸாமி தரிஸனத்துக்கு போறேளே கோயிலுக்கு, அங்கன ஞாபகம் வச்சுக்கிட்டீங்கன்னா சரிதான். அப்படியே \'கலக்கல் காக்டெய்ல்\' ஊத்திக்கொடுக்குற ஸங்கீத கச்சேரிக்கு போறேச்சேயும் ஞாபகம் வச்சுக்கிட்டீங்கன்னா சரிதான்.

முகமூடி,
உங்கள் வாதங்களில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் அதை நீங்கள் பயன்படுத்தும் நோக்கம் இன்னொரு தரப்பின் தவறுகளை நியாயப்படுத்தவே எனும்போது உங்கள் மீதிருக்கும் மரியாதை தேய்கிறது.
 



///இதத்தான் ஊர் ரெண்டு பட்டால் ***க்கு கொண்டாட்டம்னு சொல்லியிருக்காரோ வள்ளுவர் :)) ///

என்னங்க செய்யறது...ஆரியக்கூத்தாடி(ன்)னாலும் காரியத்துல கண்ணாயிருக்கனுமில்லையா...க.க.க போ !!!!!1


///என்ன பொங்கலும் அதுவுமா ப்ளாக்கு பக்கம்.. ஊராண்ட கோழி (அட பறவை இனம்தான்) எதுவும் மாட்டலையா :))))///

நானிருக்க பெங்களூர்லையே நிறைய வெட கோழிங்க இருக்கு சாமியோவ்...ஊருப்பக்கம் கோழிங்க ஓஞ்ச வாழப்பழத்த தின்னுட்டு கறியில்லாம கடக்குதுங்க...பெங்களூர் ப்ராய்லர் எல்லாம் சும்மா வழவழன்னு...!!! நான் சத்தியமா கோழியத்தான் சொல்றேன்.
 



கொட்டங்கச்சி, என் குலசாமி கோயில்ல பூசாரி தமிழ்லதான் மந்திரம் சொல்வாரு... இங்க லாஸ் ஏஞ்சலீஸ் மாலிபு கோயில்ல கூட தமிழ்ல மந்திரம் (திருப்பாவைன்னு நினைக்கிறேன், சூப்பரா பாடுவாரு) சொல்றாங்க. தமிழ்நாட்டுல கூட தமிழ்ல மந்திரம் சொல்லணும்னு சட்டம் இருக்கு போலருக்கே... மத்தபடி பொதுவா நான் ஸாமி தரிசனத்துக்குன்னு கோயிலுக்கு போறது ரொம்ப கம்மி... போனாலும் எனக்கும் ஸாமிக்கும் நடுவுல இண்டர்ப்ரட்டர்னு நான் யாரையும் வச்சிக்கிறது இல்ல.. டைரக்டு கம்யூனிகேஷன்தான். கடவுளுக்கு தமிழ் தெரியுமான்னு பகுத்தறிவு கேள்வி எல்லாம் கேக்ககூடாது. அதுசரி, தமிழ்நாட்டு சனம் ஏகப்பட்டது திருப்பதி கோயிலுக்கு போகுதே, அங்கன என்னத்த சொல்லி போராடுறது...

அப்புறம் எனக்கு தெரிஞ்ச கலக்கல் காக்டெயில் வேற... ஸங்கீத கச்சேரிக்கு போறவா இல்ல ஓய் அதுக்கு கவலப்படணும்.. நம்ம கவலையெல்லாம் போன வருசம் சென்னையில மட்டும் 20 குழந்தைகள காணுமாம்... அதுங்க எல்லாம் என்ன பண்ணிகிட்டு இருக்கோ, இல்ல அரசியல்வியாதியும், அதிகாரிங்களும், வலைப்பதிவர்களும் பொறுமையா எல்லா கருமத்தையும் பேசிட்டு முழிச்சி பாக்கிறப்போ சென்னையில இன்னொரு நாய்டா கண்டுபிடிச்சிடுவாங்களோ அப்படீங்கறதுலதான்..

மத்தபடி இந்த பதிவு சுஜாதா கதையின் தவறுகளை (?!) நியாயப்படுத்த என்று நீங்கள் நினைத்தால் ஸாரி, ரொம்பவே ஓவர்.

அப்புறம், என் மேல இருக்கிற மரியாதை தேயுதா? தேயுற அளவுக்கு அப்படி ஒரு விஷயம் என் மேல இருக்குன்னு தெரிஞ்சதே சந்தோஷம்...
 



//புதிய கலாசாரம் ஆன்லைன் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்குமா... உண்மைகள மட்டும் படிக்கணும்னு மனசு துடிக்கிது...//

முகமூடி அய்யா,

உண்மைகளை அறியத் துடிக்கிறீங்க. பு க ஆன்லைன் சப்ஸ்க்ரிப்ஷன் தேவையில்லை.நீங்க என் கட்சி தலைவர் போட்ட 2x55x55 பதிவுகளை படிச்சு உள்வாங்கினாலே போதும். என்ன, மூச்சு வாங்குமா?சரி, அப்போ டாப் டென் உண்மைகளை தொகுத்து உங்களுக்கு தாரேன்.

1)60 ஆண்டுகள் சுதந்திர இந்திய ஆட்சியில் எம் மக்கள் கையில் திணிக்கப்பட்டது மலம்.
2)இங்கு, எம் மக்கள் என்பது எங்கள் கட்சியின் இளைய தளபதி ராஜ்வனஜ் அய்யாவோட சகோதரர்கள்.மலம் ராஜ்வனஜ் அய்யா கிட்ட கொடுக்க மாட்டாங்க.அவங்க சகோதரர்கள் கையில் மட்டும் தான் கொடுப்பாங்க.
3)கொடுத்தது திராவிட க்ரீமி லேயர் OBC என்றாலும், இந்த அயோக்யத்தனத்துக்கு
ஆணிவேர் பார்ப்பனீயம் தான்.
4)மஞ்ச துண்டுக்காரர் செய்வது தரகு முதலாளித்துவ வியாபாரம் என்றாலும்,அவர் பார்ப்பனீயத்துக்கு எதிரி என்பதால்,இப்போதைக்கு அவருக்கு ஜால்ரா போட்டு விளக்கு பிடித்தா தான் புதிய கலாசாரம் பிறக்கும்.
4)இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது திப்பு,ஹைதர்,பெரியார்,அண்ணா,மற்றும் மஞ்ச துண்டும்,அவருடன் இரட்டை குழல் துப்பாகியா வெடிக்கும் மானமிகு சூரமணி அய்யாவும் தான்.
5)காந்தி ஒரு அஹிம்சை முறையில் வன்முறை செய்பவர்.கெட்டவர்.
5)பாரதியாரின் மீசை அவரோட குடுமியோட extension.அதனால அவரும் கெட்டவர்.
6)எல்லா கோவில் சிலைகளையும் உடைச்சிட்டா புதிய கலாசாரம் சிறப்பா வளரும்.வன்முறையோட இதை செய்யாததால் சூரமணி அய்யா கருப்பு சட்டை கும்பல் ஒரு வேஸ்ட்.அவங்க பிரியாணி பொட்டலம் பொறுக்கத்தான் லாயக்கு. அவங்க பேசாம இந்து முன்ணணியில் சேர்ந்துடலாம்.ஒரே ஒரு கோவிலில் மட்டும் பெட்ரோல் குண்டு வீசி,ஒரே ஒரு தாத்தாவை வெட்டிய, கோழைகள் அவர்கள்.

7)IT துறையில் வேலை செய்து பிழைப்பவர்கள் அமெரிக்க பார்ப்பனீய கூலிகள் with the sole exception of comrade Asuran and Li(nux)on King Raja Vanaj.
8)அவங்க எல்லாம் வேலையை விட்டு,புதிய கலாசாரம் ஏஜெண்டா மாறினா ஓரளவுக்கு பாவ மன்னிப்பு கிடைக்கும்.
9)சிலசமயம், மறு காலனி ஆதிக்க சக்தி ஆடு தோல் போர்த்திய ஓநாய் போல வரும்,மோகினி ஆட்டம் ஆடி எம் மக்களை மயக்கும்,குரல்வளையை கவ்வும்.சில சமயம் அது பாம்பாய் மாறி எம் மக்கள் காலை சுத்திக்கும்.
10) பகுத்தறிவு திராவிடம் ஆட்சிக்கு வந்த உடன்,தரகு முதலாளித்துவமாக உருமாறி செயல்படுவது திராவிட சமுதாய சமூக அமைப்பின் அடிப்படை விதி.அதனாலத் தான் எங்க புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி,திராவிடத்துக்கு விளக்கு பிடிக்கும் வேலையை செய்து,சமுதாய சமூக அமைப்பின் அடிப்படை விதிகளை மாற்றி எழுதிக்கொண்டு வருகிறது.

உண்மைகள் இவ்வளவு தான்னு நினைச்சுடாதீங்கய்யா. டாப் 100 கூட எங்களால் போட முடியும்.

பாலா
 



//இங்க லாஸ் ஏஞ்சலீஸ் மாலிபு கோயில்ல கூட தமிழ்ல மந்திரம் (திருப்பாவைன்னு நினைக்கிறேன், சூப்பரா பாடுவாரு) சொல்றாங்க.//

சொல்றாங்களா? இத்தனை பக்கத்தில் கோயிலை வெச்சுட்டு இன்னும் அங்கே போனதில்லியா? சரியா போச்சு போங்க:)
அங்கே ஒரு தபா போயிருக்கேன். அங்கிருக்கும் அய்யரு அங்க வர்ரவங்க கூட ரொம்ப நல்லா பேசுவாரு.அந்த கோயிலும் சூப்பரா இருக்கும்.திருப்பதி மாதிரியே இருக்குன்னு சொல்லி திருப்பதி தேவஸ்தானத்திலிருந்தெல்லாம் அந்த கோயிலை வந்து பார்த்துட்டு போயிருக்காங்க.

//அதுசரி, தமிழ்நாட்டு சனம் ஏகப்பட்டது திருப்பதி கோயிலுக்கு போகுதே, அங்கன என்னத்த சொல்லி போராடுறது... //

அங்கே தமிழில் திருப்பாவையும் சொல்லுவாங்க,சமஸ்கிருதத்தில் சுப்ரபாதமும் சொல்லுவாங்க, அன்னமாச்சார்யார் பாடல்களையும் பாடுவாங்க. ஆனா என்ன 'மார்கழி திங்கள்'ன்னு சொல்ல வராம மார்கடின்னு சொல்லுவாங்க. ழ சொல்ல வாராது.நம்மூர் ஆளுங்க மாதிரி 'மார்களி'ன்னாவது சொல்ல கத்து குடுக்கணும்:)
 



\\நான் ஃபாரின்ல இருக்குற பிற்படுத்தப்பட்ட தமிழன். அது என்னவோ தெரில, பிளாக்கு எழுத ஆரம்பிசச்துல இருந்தே இப்படிதான் என்ன நான் இன்ட்ரட்யூஸ் செஞ்சிக்கிறது//
எதுக்கு இப்படியொரு முன்னுரை?எல்லோரும் சமம்னு நினைங்க.கல்வி,வேலை வாய்ப்புக்கு மட்டும்மானால் பிரிவினை இருக்கலாம், ஆனால் மனிதன் எனும்போது யாவரும் ஒன்றே.எல்லோரும் ஒரே மாதிரிதானே உண்கிறோம்,மலம் கழிக்கிறோம்..எல்லாமும் செய்கிறோம்.பணம்தான் அளவுகோல் என்றால் ஏழை/பணக்காரான் என்போம் .இனியும் உங்களிடம் இதுபோல் சுயவிமர்சனம் வராது என நம்புகிறேன்
நானும் உங்கள் இனமோ என்று தோன்றுகிறதா?நான் மனிதப்பிறவி
 



//என்ன முகமூடி?
முகமூடின்னு பேர் வச்சதுக்கு பதிலா முள்ளம்பன்றின்னு பேர் வச்சிருக்கலாம்.. //

வாழ்க அடி ஆச்சீ....
 



முகமூடி,

சச்சினை விட தாங்கள் பெட்டர் ! ஓர் இடைவெளிக்குப் பின் அவர் விளையாட வந்தவுடன், சரியாக ஆடாமல் சொதப்பினார் !

நீங்களோ, , வந்தவுடன் பயங்கரமாக அடித்து ஆடி பட்டையை கிளப்புகிறீர்கள் :)

There is a saying,

"Form is temporary but class is perrmanent"

In your case, both FORM and CLASS are permanent ;-)
 



// அதுவுமில்லாம அவரு தி.கவோட
"எதிர்வினை"ய நைச்சியமா குற்றம்கிற //.

அது தி.க இல்லையாம். தி.க ஒன்னுமே செய்யலை என்று
அசுரன் சார் ஏற்கெனவே கோவமா இருக்காரு.

யார் எது செஞ்சாலும் புகழெல்லாம் தி.கவுக்கா?
 



//
ுதிய கலாசாரம் ஆன்லைன் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்குமா... உண்மைகள மட்டும் படிக்கணும்னு மனசு துடிக்கிது..
//

புதிய கண்றாவியின் ஆங்கில மலத்தை...ச்ச்சீ...மூலத்தை இங்கே பார்த்துக் கொள்ளுங்கள்.

"பீ" ples dementia
 



// நான் ஃபாரின்ல இருக்குற பிற்படுத்தப்பட்ட தமிழன். அது என்னவோ தெரில, பிளாக்கு எழுத ஆரம்பிசச்துல இருந்தே இப்படிதான் என்ன நான் இன்ட்ரட்யூஸ் செஞ்சிக்கிறது. //

:-)))))) முதல் பந்துலேயே சிக்சருங்கோ. வேல்ட் கப் இந்தியா டீமுல முகமூடியை சேருங்கய்யா கோட்டா சிஸ்டம்ல :-)) ஓபனிங் பேட்ஸ்மனா....

ஃபாரின்ல இருக்கற மிகவும் பிற்படுத்தப்பட்ட தமிழன்னும்
ஃபாரின்ல இருக்கற தலித்துன்னும்
முதலாளிய நாட்டில் ஜீவிக்கிற கலக புரட்சிகாரன்னும்
இன்ட்ரட்யூஸ் செஞ்சிக்கிறத விட்டுட்டீங்களே!!!!!
 



ஊய்ங்க்... ஊய்ங்க்... ஊய்ங்க்...
(பிகில் சத்தம் பறக்குது மாமு)

நம்ம முகமூடி அண்ணாத்தே ஆடுறார்
ஒத்திக்கோ ஒத்திக்கோ
அது சும்மாத்தான் போகாது
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ

ஊய்ங்க்... ஊய்ங்க்... ஊய்ங்க...
(அகெய்ன் பிகில் சத்தம் பறக்குது மாமு!)

வாத்தியார் பாலாவும் சேந்துட்டார்
பாத்துக்கோ பாத்துக்கோ
பட்டாசு வெடிக்குதுங்கே
ரசிச்சுக்கோ ரசிச்சிக்கோ

ஊய்ங்க்... ஊய்ங்க்... ஊய்ங்க்...

சீட்டு ஒன்னை எடுத்துப் போட்டு
குந்திக்கோ குந்திக்கோ
நையாண்டி கிளாஸ் ஒன்னு நடக்குது
படிச்சிக்கோ படிச்சிக்கோ

ஊய்ங்க்... ஊய்ங்க்... ஊய்ங்க்...
 



நிதரிசனமான உண்மை. முள்ளம்பன்றி போல குத்துமயமா இருந்தாலும் இப்படி சொன்னாத்தான் பல பேருக்கு உரைக்கும்.
 



இப்ப பாருங்க சாரு நிவேதிதா, அவரு அமெரிக்காவுல இருந்து ஆஸ்திரேலியா வரைக்கும் இருக்கிற பதினாரு வயசு குட்டிங்க கூட எல்லாம் சைபர் செக்ஸ் வச்சி அவளுங்க எல்லாம் இவரத்தான் கண்ணாலம் கட்டிக்கணும் இல்ல அவரோட டைம வேஸ்ட் செஞ்சதுக்காக அட்லீஸ்ட் ஒரு முறை அவரோட படுத்துக்கவாவது செய்யணும்னு பப்ளிக்கா எழுதும்போதும், அவரு பொண்டாட்டிக்கு மனதளவில ப்ரச்னை, அதனால பொண்டாட்டி கூட புணர்வதே இல்லைன்னு செல்ப் தம்பட்டம் அடிக்கும்போது அத அவரோட சாதியோட பொது புத்தியாத்தானே பாக்குறோம்.

சாரு சாதியில் செங்குந்த முதலியார்.

வலைப்பதிவர் சாதி தகவல்தானே தணிக்கைக்குட்பட்டது. எழுத்தாளர் சாதி தகவல் இல்லையே. சுஜாதா சாதியை நீங்களே எழுதியிருக்கிறீர்களே.
 



//
சச்சினை விட தாங்கள் பெட்டர் ! ஓர் இடைவெளிக்குப் பின் அவர் விளையாட வந்தவுடன், சரியாக ஆடாமல் சொதப்பினார் !

நீங்களோ, , வந்தவுடன் பயங்கரமாக அடித்து ஆடி பட்டையை கிளப்புகிறீர்கள் :)

There is a saying,

"Form is temporary but class is perrmanent"

In your case, both FORM and CLASS are permanent ;-)//

இதையேத்தான் நம்ம பெனாத்தலாரும் சொல்லி இருக்காரு. அவராண்ட நான் சொன்னது -

//அதுனாலதான் அந்த காலத்துல போர்த் பார்ம், பிப்த் பார்ம் அப்படின்னு சொன்னாக்கூட நீ எந்த கிளாஸ் படிக்கிற என்ற கேள்விதான் நிலைச்சு இருக்கு. சரிதாங்க நீங்க சொல்லறது. :)))//
 



சிஷ்யன் பிச்சு உதற்ராரு!
அதான் தல சும்ம உக்காந்து வேடிக்கை பாக்குதுன்னு நினைக்கிறேன்!
:))
 



பாட்டுகூட பார்ப்பன சிசு கமலின் "அண்ணாத்தே ஆடுறார்" பாட்டுத்தானா என்று பின்னூட்டம் வரலாம் முகமூடி. பாரின்ல இருக்கிற பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட புளாக்கர்களின் பின்னூட்டம் எப்படி இருக்கும் என்று பார்த்து வருவதில் உண்டாகிற எதிர்பார்ப்பு இது. கமல் பிறப்பால் மட்டுமே பார்ப்பு. பல பார்ப்புகளும் சாதி வித்தியாசம் பார்க்கும் அ-பார்ப்புகளும் பெரியார் பிராண்டுக்கு பொதுவாழ்க்கையில் மட்டுமாவது மாறிக்கொண்டு வசதியாக வாழ்கிறார்கள். முற்போக்கு இடதுசாரிய பட்டங்களுடன் முக்கியத்துவம் அடைகிறார்கள். வலைப்பதிவு, கலை, இலக்கியம், சமூகம், அரசியல் இவற்றில் பெரியார் பிராண்டுடன் குத்தாட்டம் போடுகிற இவர்கள் பலரை அடையாளம் காணலாம். அவர்களுக்கு முன்னோடி அன்னார் கமல் ஆவார். அவர் பிறப்பால் மட்டுமே பார்ப்பன "சிசு". பொதுவாழ்க்கையில் பெரியாரின் "குசு"வாகத்தான் இருக்கிறார். அதனால்தான் விவரமாக அனானி கமலின் பாட்டை எடுத்துப் போட்டாரா? :-)) உள்குத்தா படிச்சுப் படிச்சு படித்தது படிக்காதது அறிந்தது அறியாதது எழுதியது எழுதாதது அனைத்துமே குத்தா தெரியுதே ஆத்தா... :-))

பார்ப்பனர் அல்லாதவர் எழுதினால் குமுதம் பிரசுரிக்க வேண்டும் என்று தான் எழுதும்போது சுயநலமாக எதிர்பார்க்கிறார் குழலி. பார்ப்பனர் அல்லாத அவர் கொள்கையுடன் ஒத்துவராத எத்தனை வலைப்பதிவர்மீது குழலியும் அவர் நண்பர்களும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள். அவர்களை மதித்துப் பின்னூட்டம் இடுகிறார்கள்? பாராட்டுகிறார்கள்? அந்த மாதிரியான பதிவர்களை பார்ப்பன அடிவருடிகள் என்றுதானே திட்டுகிறார்கள். பரந்த மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளாமல் குண்டுசட்டிக்குள்தானே குதிரை ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள். பெரியாராவது இந்த விஷயத்தில் மேல். பார்ப்பனரல்லாத ஒருவர் அவரை எதிர்த்துப் பேசினால் வாயளவில் பாராட்டவாவது செய்வார்... ஆகையினாலே இவர்களுக்குப் பெரியாரும் தெரியாது. பிழைப்பு ஓட அன்னைக்கு எது முக்கியமோ அதன் பின்னால் செல்வார்கள். வெறுப்பை விதைத்து வெறுப்பை அறுவடை செய்வது மட்டுமே இவர்கள் தொழில். அறுபதுகளில் இந்தி எதிர்ப்பு, எழுபதுகளில் திராவிடம், எண்பதுகளில் பின்நவீனத்துவம், தொன்னூறுகளில் பெரியாரியம் தலித்தியம், புதிய நூற்றாண்டில் மீண்டும் தமிழ்... இப்படி ஒரு லிஸ்ட் இருக்கு. நான் சிலதை மிஸ் பண்ணி இருக்கலாம். இது ஒரு சுழற்சி. காலத்துக்கேற்ப மாறும். அம்புட்டுதேன்.

இந்த பொய்முகங்களை நையாண்டியுடன் அடையாளம் காட்டும் முகமூடிக்கு "குத்துப் பதிவுகளின் தந்தை" என்ற பட்டத்தை உலகத் தமிழர்களின் சார்பாக வழங்குகிறோம்.

எல்லோரும் ஜோரா கை தட்டுங்கப்பா!

என்றென்றும் அன்புடன்
எந்தப்(பின்/முன்/தாழ்த்த) படுத்தப்பட்ட என்று தெரியாமல் அவஸ்தைப்படும் லோக்கல் தமிழன்
 



முகமூடி அண்ணா

எனக்கொரு பதில் தெரிஞ்சாகனும் அண்ணே. "லாஜிக்"படி இந்த மரம் வெட்டுறது, பஸ்ஸ கொளுத்தறது இதுவும்கூட ஒரு சாதியோட பொதுப்புத்தின்னு கதை எழுதி குமுதத்திற்கு அனுப்பினா பிரசுரிப்பாங்களாண்ணே. சொல்லுங்கண்ணே. ரெண்டு மூனு கத கைவசம் இருக்குன்னே.. மாணவிகள் கொளுத்தப்பட்ட பஸ் எரிப்பு நடந்த மாவட்டத்தில் எந்த சாதியினர் அதிகம்னு களஆராய்ச்சியோடு சமூகவியல்ரீதியாவும் உளவியல் ரீதியாவும் வன்முறைக்கு தூண்டுவது எதுன்னு அறிவியல்ரீதியாவும் எழுதிடலாம்னே. அதான் கேக்குறேன். சொல்ல மாட்டீங்களா? மக்கள் டி.வி.யிலே சீரியலாகூட பின்னாடி வர சான்ஸ் இருக்குதே அண்ணே..
 



//நான் ஃபாரின்ல இருக்குற பிற்படுத்தப்பட்ட தமிழன்.//

ஃபாரின்ல இருக்கிற பிற்படுத்தப்பட்ட தமிழன் தமிழ்நாட்ல இருக்கறப்போ எப்படி இருந்தான். ஸ்கூலுக்குப்போக மோட்டாள் சைக்கிள் இல்லையேன்னு வருத்தப்படற வளமையான குடும்பத்து வாலிபனா இருந்தான். தமிழ்நாட்ல பலபேரு ஸ்கூலுக்குப் போக போட்டுக்க டிரஸ், செருப்பு, புஸ்தகங்க வாங்கக்கூட வக்கில்லாம இருக்காங்க. சாதி மூலம் ஆதாயம் தேடுற இந்த கும்பல் மோட்டார் சைக்கிள் இல்லையே ஸ்கூலுக்குப் போகன்னு வருத்தப்படற லெவல்ல இருந்துட்டு ஃபாரின்போயும் கிரீமி லேயர் வேணும்னு ஏன் சொல்றாங்கன்னு இப்போ புரியுதா தலை.
 



யாரு தலை, யாரு சிஷ்யன்னே புரியமாட்டேங்குது....

எனக்கு மட்டுமா இப்படி ??? :))))

அப்டேட்டட் ஹவர்லீ அப்படீன்னு காட்டுது. போஸ்ட் கமெண்ட் 32 லிங்க் இன்னைக்கு மட்டும் காட்டுது..மத்த பின்னூட்டத்தையும் கொஞ்சம் ரிலீஸ் செய்யறது ??
 



///முகமூடின்னு பேர் வச்சதுக்கு பதிலா முள்ளம்பன்றின்னு பேர் வச்சிருக்கலாம்..

எங்க தொட்டாலும் குத்துது...//

:)))))))))))))

so nice
 



இலவசக்கொத்தனார்,

//
அதுனாலதான் அந்த காலத்துல போர்த் பார்ம், பிப்த் பார்ம் அப்படின்னு சொன்னாக்கூட நீ எந்த கிளாஸ் படிக்கிற என்ற கேள்விதான் நிலைச்சு இருக்கு. சரிதாங்க நீங்க சொல்லறது
//
kusumbu jAsthi ungkaLukku :)))
 



This comment has been removed by a blog administrator.
 



பதிவின் கருவைத் தவிர்த்து, த.ம.தா. சற்று அதிகமாகுதல் போலத் தோன்றுகிறதே!

தவிர்க்கலாமோ!
 



உஷா அவர்களுக்கு

இந்தப் பக்கம் வர முடியாத அளவுக்கு அவதி அவதியாக வந்து நெஞ்சு பட படக்க ஈ வெ ரா ஆதரவு புராணம் பாடி உங்கள் முற்போக்குக் கொள்கையை நிலை நாட்டி விட்டுப் போயிருக்கிறீர்கள். இப்படி முற்போக்குக் கொள்கையை நிலை நாட்டி ஆபாசப் பிறவிகளுக்கும் அசிங்கங்களுக்கும் வன்முறையாளர்களுக்கும் வக்காலத்து வாங்கிச் சண்ட பிரசண்டம் செய்து விட்டுப் போயிருக்கிறீர்கள். அப்படியாவது உங்கள் எழுத்துத் திறமையை அங்கீகரித்து திராவிடக் குஞ்சுகள் உங்களை வால் நட்சத்திரமாகவாவது அங்கீகரித்தாலோ அல்லது பூந்தோட்டத்தில் உங்கள் கட்டுரை மலர்ந்து நீங்கள் ஜென்ம சாபல்யம் அடைந்தாலோ எனக்கு மகிழ்ச்சியே. எப்படியாவது முற்போக்குப் பட்டத்தை அடைந்தே தீருவேன் என்று ஒரு உறுதியோட இருக்கிறீர்கள், பாராட்டுக்கள் அதற்கு இதை விட்டால் சரியான வேறு இடம் எங்கு கிடைக்கும் என்பதால் சான்ஸ் கிடைக்கும் இடத்தில் குரல் கொடுத்து விட்டுப் போயிருக்கிறீர்கள். நிற்க.


வேண்டாத பிரச்சினையில் மூக்கை நுழைத்துக் கருத்துப் போடுவானேன் ? இங்கு நாங்கள் வேலை வெட்டியில்லாமல் கும்மி அடித்துக் கொண்டிருக்கிறோம், உங்களுக்கோ இது வேண்டாத கருத்து வேற, அப்புறம் இங்கே வந்து அவசர அவசரமாக கல்லெறிந்து விட்டு ஓடுவானேன்? சும்மா கல்லல எறிந்து விட்டு ஓடிப்போவேன், எதையும் ஒழுங்காகப் புரிந்து கொள்ளாமல் உளறிக் கொட்டுவேன், முட்டாள்தனமாக எழுதுவேன் , ஆனால் யாரும் எனக்குப் பதில் போடக் கூடாது, எனக்கு வேலை இருக்கிறது என்றால் எப்படி ? என்ன அர்த்தம் ? அப்ப வேலையை முடித்து விட்டு வந்து ஊருக்குப் போய் விட்டு வந்து, ஆற அமர, பதில் போட்டிருக்க வேண்டும். ஆனால் அதற்குள் இந்தச் சூடு ஆறிப் போய் விட்டால் நீங்கள் முற்போக்காளினி பட்டம் வாங்குவது எப்படி ? ஆக நீங்கள் போகிற போக்கில் மலத்தை (ஈ வெ ரரவை யாராவது புகழ்ந்தால் எனக்கு அது நாறும் மலம்தான்) அள்ளி எறிவீர்கள், பதிலுக்கு நாங்கள் மூக்கைப் பொத்திக் கொண்டு போக வேண்டும் அப்படித்தானே ? மன்னிக்கவும், இந்த முறை நான் அப்படி மூக்கைப் பொத்திக் கொண்டு போவதாய் இல்லை. திரும்பி எறியப் போகிறேன். அது கடும் வலியைக் கொடுக்கும். எனக்கு கொஞ்சம் தொல்பொருள் துறையில் ஆர்வம் உண்டு, பழைய விஷயங்களை நிறையவே தோண்டி எடுப்பேன், எடுத்தால் அது கடுமையாகத்தான் இருக்கும். இருந்தாலும் விவாதம் என்று வந்து விட்டால் நான் ஜீவ காருண்யம் பார்ப்பது இல்லை. நீங்கள் ஏற்கனவே அறிவீர்கள். ஆனால் ஆபாசப் பதிவை படிக்கச் சொல்லி உங்களுக்கு அறிவுரை சொன்னானே ஒரு ஈனப் பிறவி, (அவன் அக்கா தங்கை ஆத்தாவிடம் அப்படிப்பட்ட ஒரு பதிவை படிக்கச் சொல்லி சிபாரிசு செய்வானா?) அது போல் கண்ணியம் தவறி என்னால் உங்களிடம் பேச முடியாது. என் எழுத்தில் கடுமை இருக்கும் ஆனால் கண்ணியம் தவறாது.



முதலில் உங்கள் பதில் எனக்கு 'எங்க அப்பன் குதிருக்குள் இல்லையை" நினைவு படுத்துகிறது. நான் இங்கு பிராமணர்களாக இருந்து கொண்டு ஆபாசப் பிறவிகளுக்கு ஜால்ரா போடும் பலரையும் எச்சக்கலைகள் என்றும், முற்போக்கு பட்டம் வாங்க எதையும் செய்யும் கீழ்த்தரமான மனிதர்கள் என்று கடுமையாகத் தாக்கியுள்ளேன். அது உங்களை உறுத்தி இந்தப் பதில் போடத் தூண்டி விட்டதோ என்று எண்ணுகிறேன். இல்லாமலும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் உங்களுக்கு பதில் நான் அவசியம் கொடுத்தே ஆக வேண்டும். வேலியில் போய்க் கொண்டிருந்த இந்த ஓணானை விலை கொடுத்து வாங்கியுள்ளீர்கள்.



நான் அப்படிக் கடுமையாக விமர்சித்த நபர்களில் நீங்கள் இல்லை. அப்படி நீங்கள் நினைத்திருந்தால் உங்களை ஏமாற்றியதற்கு மன்னிக்கவும். ஏன் நான் உங்களை அந்த அல்லைக்கைகள் கூட்டத்தில் எச்சக் கலைகள் கும்பலில் சேர்க்கவில்லையென்றால் நான் உங்களை பிராமணர் என்று நினைக்கவில்லை. நீங்கள் யாரோ பிராமணர் அல்லாத ஆனால் அரை குறை அறிவால், மூளைச் சலவை செய்யப் பட்டு ஈ வெ ராவை ஒரு சமூக சீர்த்திருத்த்வாதியாக நினைத்துக் கொண்டிருக்கும் தவறான எண்ணப் போக்கில் வாழும் பெண்களில் ஒருவர் என்று தான் இன்று வரை நினைத்துக் கொண்டிருக்கிறேன், நீங்கள் என்ன ஜாதி என்று எனக்குத் தெரியாது, தெரிய வேண்டிய அவசியமும் எனக்குக் கிடையாது. பின் எப்படி எனக்கு நீங்கள் "பிராமணர் அல்லாதவர்" என்று தெரிய வந்தது என்று கேட்கிறீர்களா?

சில ஆண்டுகளுக்கு முன்பாக திண்ணையில் ஒரு கதை வந்தது., அது ரிசர்வேஷன் சம்பந்தப் பட்டது. துணிவாக எழுதப் பட்ட கதை. யாரென்று பார்த்தால் யாரோ ராமச்சந்திரன் உஷா என்று பேர் இருந்தது. அட! பரவாயில்லையே ! இதையெல்லாம் எழுதக் கூட ஆட்கள் இருக்கிறார்களே, யாரோ பாதிக்கப் பட்ட பிராமணப் பெண் போலும் என்று நினைத்துக் கொண்டேன்.

அடுத்த வாரமே உங்களிடமிருந்து திண்ணைக்கு ஒரு கடிதம், அதில் நீங்கள் பிராமணர் அல்லர் என்றும் பொதுவாக ஒரு கதை எழுதியதாகவும் குறிப்பிட்டிருந்ததாக ஞாயபகம். (எனக்கு கொஞ்சம் மறதி அதிகம் அது நீங்கள் இல்லாவிட்டாலோ, அல்லது வேறு யாரோ ராமச்சந்திரன் உஷாவாகவோ இருப்பின் என்னைத் திருத்தவும்.
) உடனே பரவாயில்லையே ஒரு பிராமணர் அல்லாத பெண் கூட நியாயத்தை எழுதியிருக்கிறாரே என்று நினைத்துக் கொண்டேன். அதனால் தான் என்னுடைய "எச்சக்கலைகள்" லிஸ்டில் உங்களை ஒருவராக சேர்க்கவில்லை. இல்லா விட்டால் நிச்சயம் சேர்த்திருப்பேன். நீங்கள் ஏன் பொய் சொல்லியிருக்கப் போகிறீர்கள் பாவம் ? உங்கள் அடையாளத்தை மறைக்க மாட்டேன் என்று வேறு இங்கு சொல்லியிருக்கிறீர்கள். அப்படி இருக்கும் பொழுது திண்ணையில் நீங்கள் பொய் சொல்லியிருக்க வாய்ப்பே இல்லையே அப்படித்தானே ? நீங்கள்தான் அடையாளத்தை மறைத்துக் கொள்ளாத நாணயஸ்த்ர் ஆயிற்றே. ஆக உங்கள் அடையாளத்தை நீங்கள் நிச்சயம் மறைத்திருக்க மாட்டீர்கள். ஆக நிச்சயம் ஒரு பிராமணர் அல்லாத பெண்மணிதான், அது போன்ற ஒருவர் ஈ வெ ராவை பெரியார் என்று முட்டாள்தனமாகக் கருதிக் கொள்வது சகஜம்தானே என்று கருதி உங்களை நான் அந்த அல்லக்கைகள் லிஸ்டில் சேர்க்கவில்லை. ஆகவே உங்களைச் சொன்னேன் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்.


இருப்பினும், அப்படி ஒரு வேளை திண்ணையில் உங்கள் அடையாளத்தை மறைத்து விட்டு, கேவலம் சில பின்னூட்டத்திற்காகவும், முற்போக்குப் பட்டதிற்காகவும் அலையும் ஒரு பிற்போக்கு நபராக இருக்கும் பட்சத்தில் நான் உங்களையும் அதே லிஸ்டில்தான் சேர்ப்பேன். என் எண்ணம் குறித்து உங்களுக்கு கவலையும் அக்கறையும் இருக்காது போகலாம், ஆனால் என்னைப் போன்று இன்னும் நீங்கள் பொருட்படுத்தும் எத்தனையோ பேர்கள் மனதிலும் அதே எண்ணம் தோன்றவே செய்யும்.


மேலும் நீங்கள் யாராக இருந்தாலும், ஈ வெ ராவை காந்தியை விடப் பெரிய மனிதராகக் கருதியதாலும், பிராமணர்களின் படிப்பு/செல்வாக்கு நிலை பற்றி அபத்தமானதொரு கருத்தை இங்கு பொதுவில் வைத்து விட்டதாலும் நான் உங்களுக்கு கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும், அதற்கு நீங்கள் பதில் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் எனது பதில் தொடரும்.


எங்களை எல்லாம் கும்மி அடிக்காதீர்கள் என்று கேவலமாக எச்சரித்து விட்டுச் சென்றிருந்தாலும் ஒரு குறைந்த பட்ச மரியாதை கருதி, நீங்கள் பதில் ஏதேனும் சொல்லுகிறீர்களா என்று காத்திருந்து விட்டு எனது பதிலைத் தொடர்கிறேன். உங்களிடமிருந்து பதில் வந்தாலும், வராவிட்டாலும், என்னைப் பொருட்படுத்தினாலும் பொருட்படுத்தா விட்டாலும், ஈ வெ ராவை நீங்கள் பெரியாராக எண்ணுவது எப்பேர்ப்பட்ட ஒரு அடி முட்டாள்த்தனம் என்பதை உணர வைப்பதற்காகவேனும் என் பதில் தொடரத்தான் செய்யும், உங்கள் வேலைகளை முடித்து விட்டு மெதுவாக வாருங்கள், நானும் காத்திருக்கிறேன். அவையெல்லாம் உங்கள் "முற்போக்கு மூளையில்" ஏறாது என்பதையும் நான் நன்கு அறிவேன், இருப்பினும் இந்த ஈ வெ ரா வை உரித்து அது ஒன்றும் இல்லாத வெங்காயம் என்று நிரூபிக்கும் எனது முயற்சியில் ஒரு பகுதியாக உங்களுக்கான பதிலும் அடங்கும்.

அன்புடன்
ச.திருமலை

பி.கு ஐவேசு என்ற வார்த்தையை நானும் உபயோகித்திருக்கிறேன். எங்கள் பகுதியில் பயன் படுத்துவார்கள். யாருக்கும் அதிகம் பரிச்சியமில்லாத ஒரு பிரயோகம், நீங்கள் எங்கிருந்து பிடித்தீர்கள் ?
 



திருமலை ஐயா,
ஓரளவு இணையத்தில் சில வருடங்களாய் இருப்பதால் எதை எழுதினால் அது எந்த திசையில் எப்படி போகும் என்ற நன்றாக தெரியும்.
பெரியாரோ அல்லது காந்தியோ ஒற்றை தலைவனை பூ போட்டு கும்பிடாதே என்ன சொன்னார்கள்
எப்பொழுது சொன்னார்கள், இந்த காலக்கட்டத்தில் சரிப்படுவதை மட்டும் எடுத்துக் கொள்ளலாமே
என்று தெளிவாய் எழுதியிருக்கிறேனே! நான் அய்யரும் கிடையாது, அய்யங்காரும் கிடையாது. ஆனால் இந்த இரு பிராமண பிரிவு தவிர பிற பிரிவுகளும் உண்டு இல்லையா :-)
பிறகு இன்னென்று காந்தியை விட பெரியார் காரக்டர் பிடிக்கும் என்றால் காந்தி மோசம் என்று பொருள் கொள்ள வேண்டாம்.
மற்றப்படி உங்கள் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
நான் எழுதியது எதுவுமே உங்களை குறித்து இல்லை. இணையத்தில் மிக அசிங்கமாய் பாதிக்கப்பட்ட
ஓரே எழுத்தாளினி நான். அது உங்களுக்கு தெரியுமா என்று எனக்கு தெரியாது. அதுக்காக நான்
என்றும் எந்த குழுவிலும் சேர்ந்து யாருக்கும் கொடி பிடிக்க மாட்டேன் என்பது என்னை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும். நீங்கள் சொன்ன கதை "வாய் சொல்லில் வீரரடி" என்றால் எனக்கு மிகப் பிடித்த ஒன்று. எடுத்து என் பதிவில் மீள்
பதிவாய் போட்டு விடுகிறேன். இணையம் எனக்கு பல நல்ல புரிதல்களை தந்துள்ளது. மாற்றம் ஒன்றே
மாற்றமில்லாதது. நன்றி.
 



velinadu sendrum saathi thollai oyavillaya.sujatha ezuthiyathu pidikkavillai enral thoo thoo endru thuppividdu pongaya
 



சரி, உங்க கருத்து ??