<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("iframes-styles-bubble", function() { if (window.iframes && iframes.open) { iframes.open( '//www.blogger.com/navbar.g?targetBlogID\07512213354\46blogName\75%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\46publishMode\75PUBLISH_MODE_BLOGSPOT\46navbarType\75BLUE\46layoutType\75CLASSIC\46searchRoot\75http://mugamoodi.blogspot.com/search\46blogLocale\75en_US\46v\0752\46homepageUrl\75http://mugamoodi.blogspot.com/\46vt\0753361231228256067100', { container: "navbar-iframe-container", id: "navbar-iframe" }, { }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

கலர் (டிவி) கனவுகள்


ஏழை மக்களுக்கு கலர் டி.வி. வழங்க ரூ. 1060 கோடிதான் செலவாகும். கலர் டி.வி. கொடுத்தே தீருவோம். கருணாநிதி சபதம்.

போடுங்க போடுங்க.. உங்கப்பன் வீட்டுதா எங்கப்பன் வீட்டுதா.. நீங்கள் உழைத்து சம்பாதித்ததா, நான் உழைத்து சம்பாதித்ததா.. அரசு கஜானாதானே.. நல்லா போடலாம்

ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் தந்து பொழுதுபோக்குக்காக, பொது அறிவை பரப்ப, பகுத்தறிவு பாடம் கற்றுத்தர டி.வியை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் அறிவித்திருக்கிறேன்.

காலேஜ் பசங்க உபயோகப்படுத்த ஆரம்பிச்சப்புறம் எப்படி மாமாங்கிற வார்த்தையோட அர்த்தமே கேவலமா ஆச்சோ, அது மாதிரியே திராவிட "கட்சி"ங்க உபயோகப்படுத்த ஆரம்பிச்சப்புறம் பகுத்தறிவுங்கற வார்த்தையோட அர்த்தமும் கேவலமாயிடுச்சி... டிவியால பொது அறிவு வளருதுன்னு சொன்னா "வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்" பாட்டுக்கு டான்ஸ் ஆடுற குட்டி பாப்பா கூட கேவலமா சிரிக்கும். தமிழ்நாட்டுல தூர்தர்சன எவ்வளவு பேர் பாக்குறாங்க அதோட ப்ரோக்ராம் என்னன்னு எல்லாம் யாருக்கும் தெரியாது.. ஆனா "பெரும்பான்மை" பார்க்கிற சன் டிவியின் 24 மணிநேர நிகழ்ச்சி நிரல் இங்கே இருக்கு.... இதில் பொது அறிவை வளர்க்கும் நிகழ்ச்சிகள் எவ்வளவு, பகுத்தறிவு பாடம் கற்றுத்தரும் நிகழ்ச்சிகள் எவ்வளவு என்பது "கடவுளுக்கே" வெளிச்சம்.

தமிழகத்திலே மொத்தம் 156 லட்சம் குடும்பங்கள் உள்ளன. இவர்களில் 53 லட்சம் குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளன.

முப்பது ஆண்டு திராவிட கட்சிகளின் சாதனைன்னு கேட்டா சொல்ல ரொம்ப முக்கியமான புள்ளிவிவரங்கண்ணா.

முதல்கட்டமாக இவர்கள் அனைவருக்கும் கலர் டி.வி வழங்க வேண்டும் என்றால் 53 லட்சம் டி.விக்கள் தேவை.

கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில வையின்னு வறுமைக்கோட்டுக்கு கீழ இருக்கறவங்களுக்கு "முதல்கட்டமா" டி.வி வழங்கணும்னு எப்படிங்கண்ணா தோணுச்சி.. அது சரிதான்.. கும்பி காஞ்ச மக்களுக்கு செவிக்கும் கண்ணுக்கும் சிறிது ஈயவும்னு அய்யன் சொல்லியிருக்காருல்ல.. செய்ய வேண்டியதுதான்... ஆனா சமையல் குறிப்பு ஸ்பெஷல் போடும்போது வினோதினிய வச்சி மைக்ரோவேவ்ல எலிக்கறி சமைப்பது எப்படின்னு சொல்லி கொடுக்க மட்டும் மறக்காதீங்க.. விவசாயம் பொய்ச்சா, இந்த மாதிரி ஒரு அய்ட்டம் செய்யலாம்னே தெரியாம கெரகம் பச்சை எலிய அப்படியே சாப்பிடுறாங்களாம்...

30 ஆயிரம் கோடி தமிழக பட்ஜெட்டில் இது சாதாரண தொகைதான். முடியாதது அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

எங்க ஊர் கிழவி பொட்டிக்கடையாண்ட உக்காந்துகிட்டு என்ன சொல்லும்னா "ஏண்டா வெட்டி பயலுவளா, இப்படி பீடி குடிச்சே காச கரியாக்குறீங்களேடா"ன்னும்.. அதுக்கு நம்ம பயலுவ எல்லாம், "கெழவி, மாச சம்பாத்தியாம் 1000 ரூவா வாங்குறோம்.. அதுல 20 ரூவா பீடிக்கட்டுல என்ன பெரிசா ஆயிடப்போவுது"ன்னு சொல்லுவாங்க. "அட கருமாந்திரம் புடிச்ச பசங்களா... சந்தனம் மீந்துச்சின்னா ***யில தடவ சொல்லுதா.. அத உருப்படியா எதுக்காச்சும் செலவு பண்ணுங்கடான்னும்... இந்த மாதிரி கிழவிங்க எல்லாம் இப்ப இல்ல...

இதை 2 ஆண்டில் வழங்குவோம். ரூ.2 ஆயிரத்தில் டி.வி.வழங்க மொத்தம் 1060 கோடி செலவாகும்.

2 ஆயிரத்தில் டி.வியா? சரி.. சரி... நான் கூட கலர் டிவின்ன உடனே கலர்ல தெரியிற டிவின்னு நினைச்சேன்.. தேர் திருவிழாவுல கிடைக்கிற டிவிக்கு கலர் அடிச்சி கொடுக்கிறாங்க போல... இல்ல உண்மையிலேயே 4 இன்ச் கலர் டிவி எதுவும் 2 ஆயிரத்துக்கு கிடைக்கிதா? இதுல மந்திரி/எம்.எல்.ஏ கமிசனே டிவிக்கு 2 ஆயிரம் ஆயிடுமேப்பா..

அதாவது ஆண்டுக்கு ரூ.530 கோடிதான். இது ஒரு பெரிய தொகையே அல்ல.

அப்படியே வீட்டுக்கு ஒரு டூ-வீலரோ காரோ வாங்கி கொடுக்கலாம்.. 30 ஆயிரம் கோடி தமிழக பட்ஜெட்டில் இது ஒரு பெரிய தொகையே அல்ல. அப்படியே கார் நிறுத்த ஒரு வீடு கட்டி கொடுக்கலாம். 30 ஆயிரம் கோடி தமிழக பட்ஜெட்டில் இது ஒரு பெரிய தொகையே அல்ல. அப்படியே எல்லாருக்கும் மூணு வேளை சோறும் போடலாம். 30 ஆயிரம் கோடி தமிழக பட்ஜெட்டில் இது ஒரு பெரிய தொகையே அல்ல. அப்படியே அன்ன சத்திரம் கட்டி சீட்டு விளையாட கொஞ்சம் பணமும் கொடுக்கலாம். 30 ஆயிரம் கோடி தமிழக பட்ஜெட்டில் இது ஒரு பெரிய தொகையே அல்ல. அப்படியே கோட்டையை இடித்து விட்டு அரண்மனை கட்டி, கார்களுக்கு பதிலாக ரத கஜ துராதிகளை நியமித்துக்கொள்ளலாம். 30 ஆயிரம் கோடி தமிழக பட்ஜெட்டில் இது ஒரு பெரிய தொகையே அல்ல....

ச(ப்)பதம் நன்றி :: தமிழ்முரசு




š இப்பதிவை மின்னஞ்சலிட


 

ஒரு படம் இரு விமர்சனம்


முந்தின நாள் இரவு விடிய விடிய ஆடிய ஆட்டத்தின் பலனாக ஹாலில் அங்கங்கே உருவங்கள் தூங்கிக்கொண்டிருந்தன... வார நாட்களில் தூக்கமாக வரும் எனக்கு வீக்கெண்டில் மட்டும் விடிகாலையே முழிப்பு வந்துவிடும்.. டைம் வேஸ்ட் செய்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி...

கே டிவி கனெக்சன் வாங்கினோம்னு பேருதான், 15 நாளாச்சி அத ஆன் செஞ்சே.... என்னதான் நடக்குது அதுல... திருப்பினா பேக்ட்ராப்ல பயங்கர புயல் அடிக்க, யாரோ ஒரு மவராசன் பாய்மர கப்பலோட கொடிக்கம்பத்த புடிச்சி சரசரன்னு ஏறுறாரு... சிவாஜியா இருக்குமோன்னு நினைக்கிறதுகுள்ள அரை கண்ண முழிச்சி என்ன நடக்குதுன்னு பார்த்துகிட்டு இருந்த ஒரு உருவம் "வஞ்சிக்கோட்டை வாலிபன்"னு ஒரு கத்து கத்திகிட்டு வாரி சுருட்டி வாகா படுத்தான்...

"அடப்பாவி எதுக்குடா இப்படி கத்துற"
"எவ்வளவு நாளா இத பாக்கணும்னு இருந்தேன்.. ரொம்ப நாளாச்சி பாத்து"
"ஓ பாத்த படத்துக்கே இவ்வளவு ஆர்ப்பாட்டமா"
"ஆமா, கண்ணும் கண்ணும் கலந்து ஒரு பாட்டு போதுமே, எவ்வளவு தடவ வேணும்னாலும் பாக்கலாம்"
"கண்ணும் கண்ணும் கலந்தா, நம்ம வீரப்பா சபாஷ் சரியான போட்டின்னுவாரே அந்த பாட்டா"
"அதேதான்"

நானும் படம் பார்க்க உட்கார்ந்துவிட்டேன்.. காரணம் இருக்கிறது.. அப்பொழுது ஏதோ ஒரு வீட்டில் ஒரு சின்ன ஹாலில் இருந்த ஒரு சின்ன ப்ளாக் & ஒயிட் டிவியின் முன் சம்மணம் போட கூட இடம் இல்லாமல் உட்கார்ந்திருந்த ஊர்க்கூட்ட இம்சையின் நடுவில் பார்த்துக்கொண்டிருந்த ஏதோ ஒரு பெயர் தெரியாத பாட்டு நிகழ்ச்சியில் வந்த "கண்ணும் கண்ணும்" பாடலின் வைஜயந்திமாலா நெஞ்சில் ஒட்டிக்கொண்டார்.. மறுநாள் இஸ்கோலில் கனவுக்கன்னி யார் என்ற கேள்விக்கு எல்லா பயல்களும் ராதா என்று சொல்லும்போது நான் மட்டும் வைஜயந்திமாலா என்று ஆரம்பித்துதான் எனது கனவுக்கன்னி பட்டியலை ஒப்பித்தேன்.. (ஆமா பின்ன கனவுக்கன்னின்னு ஒருத்தர மட்டும் சொன்னா மத்தவங்க கோச்சிக்க மாட்டாங்க?) இன்றும் அந்த பட்டியல் நீண்டிருக்கிறதே தவிர மாறவில்லை...


*

மாலுமியான ஜெமினி ஒரு முறை புயலில் சிக்கும் கப்பலை தன் சாதுரியத்தால் காப்பாற்ற அதற்கு பரிசாக கிடைக்கும் பணத்தை கொண்டு வாழ்க்கையை ஆரம்பிப்பார். அந்நாட்டு சேனாதிபதி (பி.எஸ்.வீரப்பா) ஜெமினியின் தங்கையை கடத்த அப்போது தப்பிக்க முயலும் தங்கை இறந்துவிடுவார். தங்கையின் மரணத்துக்கு பழி வாங்க புறப்படும் ஜெமினி கைது செய்யப்பட்டு சேனாதிபதியால் மரண தண்டனை வதிக்கப்படுவார். சிறையில் தன் தாயை சந்திக்கும் ஜெமினிக்கு அவரின் பழைய கதை சொல்லப்படும்... அந்த ஊர் ராஜாவின் இரண்டாம் மனைவியின் அண்ணனான சேனாதிபதி அரசனை கொன்று அரண்மனைக்கு தீவைத்து நாட்டை கைப்பற்றுவார். அப்போது அரசரின் விசுவாச திவான் சிறுவயது இளவரசரையும், இளவரசியையும்(பத்மினி) காப்பாற்றி படகில் ஏறி தப்பிவிடுவார்.. திவானின் மனைவி தமது குழந்தைகள் (ஜெமினி அவர் தங்கை) படகில் அனுப்ப முயலும்போது சிறை பிடிக்கப்பட குழந்தகள் மட்டும் படகில் சென்று விடுவர். அப்போது அவர்களை காப்பாற்றும் கப்பலிலேயே அவர்கள் வளருவர். அப்புறம்தான் படகு, புயல், பரிசு எல்லாம்... தாய் சிறையிலேயே உயிர்துறக்க ஜெமினி சிறையிலிருந்து கடலில் குதித்து தப்பி வேறொரு கப்பலால் காப்பாற்றப்படுவார். அதில் ஜெமினி அடிமை ஆக்கப்படுவார். இவர்கள் கப்பல் ரத்தினத்தீவு எனும் ஊரில் இருக்கும்போது அடிமையான ஜெமினியின் அழகில் ரத்தினத்தீவு இளவரசி (வைஜயந்திமாலா) மயங்குவார். ஆனால் ஜெமினி கடமை அழைப்பதாக சொல்ல பல பெட்டிகள் வைரம் கொடுத்து அனுப்பி வைப்பார்... அங்கே திவான் பத்மினியையும் இளவரசரையும் அழைத்துக்கொண்டு நாட்டுக்கே திரும்புவார். உள்நாட்டு கலகம் ஆரம்பிப்பதாக ஏற்பாடு. ஆனால் திவான் மீண்டும் சிறை பிடிக்கப்படுவார். பத்மினி ஜெமினியால் காப்பாற்றப்படுவார். வைர வியாபாரியாக அரண்மனைக்குள் நுழையும் ஜெமினி அரசி மற்றும் வீரப்பாவின் ந்ம்பிக்கையை பெற்று அவர்களை ஒரு விருந்துக்கு அழைப்பார். அதற்குள் ஜெமினியை தேடி வைஜய்ந்தி வருவார். ஜெமினி பத்மினியை காதலிப்பதாக வைஜயந்தி நினைக்க, எதிராக பத்மினி நினைக்க அதற்குள் ஒரு பாட்டு. போட்டி நடனத்தின் இடையில் வீரப்பாவின் வேடத்தில் சென்று தன் அப்பாவை சிறை மீட்பார் ஜெமினி. பிறகு உண்மை தெரிய, சண்டை நடுவில் வைஜயந்தி வீரப்பாவால் கொல்லப்பட இறுதியில் வீரப்பா ஜெமினியால் கொல்லப்படுவார். ஜெமினி பத்மினி திருமணம். சுபம்.

*

இனி விமர்சனம்... இது எனது முதல் பட விமர்சனம்... எனவே வார்த்தைகளை இன்னும் எப்படி சிறப்பாக அமைக்கலாம் என்று அனுபவசாலிகள் சொல்லி திருத்தினால் தன்யனாவேன்... அதன் மூலம் மேலும் பல விமர்சனங்கள் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கிடைக்க ஒரு அரிய வாய்ப்பு...

மேலும் இன்றைய தமிழ் வலைப்பூ குமுகாய சூழ்நிலைக்கு ஏற்றவாறு காலமாற்றத்தை அனுசரிக்கும் முகமாக சாதா விமர்சனம் மட்டும் இல்லாமல் செக்கூலர் விமர்சனமும் இணைக்கப்படுகிறது.

**

வஞ்சிக்கோட்டை வாலிபன் - விமர்சனம் (சாதா)

திடுக்கிடும் திருப்பங்கள் என்று எதுவும் இல்லை. அடிமையாக இருந்தாலும் இளவரசிக்கு காதல் வரும் என்று எதிர்பார்த்தபடியே ஒரே கோட்டில் பயனிக்கிறது கதை. படத்தின் பிற்பகுதியில் நிறைய நாடகத்தனம்.. ஆனால் 2006லும் படம் முடியும் வரை உட்கார வைக்கும் சுவாரசியம் இருந்தால் அன்றைய காலகட்டத்தில் இது எந்தளவு சுவாரசியமாக இருந்திருக்கும், எவ்வளவு வரவேற்பை பெற்றிருக்கும் என்பதை உணர முடிகிறது. டெக்னிகல் சமாச்சாரங்களில் பொதுமக்களுக்கு அந்தளவு பரிச்சயம் இல்லாத அந்த காலகட்டத்தில் படகு தத்தளிப்பது போன்றவை back-drop காட்சிகள் என்பதே புரியாத வண்ணம் தத்ரூபமாக அமைத்திருக்கிறார்கள். செட்டிங்க்ஸும் அபாரம்... அரண்மனை எரியும் காட்சி மினியேச்சர் என்பது அப்பட்டமாக தெரியும் அளவு மிகவும் அமெச்சூரிஷ்ஷாக இருப்பதை மட்டும் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்...

ஆட்சிக்காக ஆளுபவரை கவிழ்ப்பது, பொய் கேஸ் போடுவது, ஏழை பணக்காரன் காதல் போன்றவை இன்றைய காலம் வரை மாறாமல் இருப்பது ஆச்சரியமே. என்னதான் ஆடை அவிழ்ப்பு எல்லாம் நிகழ்த்தினாலும் வைஜயந்திமாலாவின் கண்ணசைவில் கிடைக்கும் போதையை இன்றைய நடிகைகள் கொண்டு வரவே முடியாது என்பதுதான் உண்மை. இன்றைய காலகட்டத்தில் "தலைகள்" என்ன பஞ்ச் வசனம் பேசி என்ன பயன் "சபாஷ் சரியான போட்டி" வசனத்துக்கு ஈடாகுமா இவர்களின் திரையை நோக்கி விரல் நீட்டி விடும் வசனங்கள் ?

**

ஜெமினி கணேசன் எனும் பார்ப்பனர் - வெள்ளை பூண்டு, கோடாலி, பெருங்காய மஞ்சள் கூட்டு விமர்சனம். (செக்கூலர்)

ஆரிய நாட்டிலிருந்து வந்த ஜெமினி கணேசன், ஒரு பார்ப்பனர் என்று தெரியாமலேயே இஸ்லாம் மத பெரியவரான கப்பல் தலைவர் பாம்புக்கு பால் வார்த்த கதையாக பதினாயிரம் வராகன்களை கொடுத்து பிழைத்துக்கொள்ளும்படி சொல்வார். திராவிட குணம் என்பது கிஞ்சித்தாவது இருந்திருந்தால், இல்லை அய்யா, நான் கடமையைதானே செய்தேன் என்று ஜெமினி மறுத்திருப்பார். ஆனால் ஆரிய ஜெமினியோ முதலாளி விசுவாசம் சிறிதும் இல்லாமல் வெட்கம் கெட்ட தனமாக அந்த பணத்தை வாங்கிக்கொண்டு இதுகாரும் தன்னையும் தன் தங்கையையும் பாதுகாத்த தன் முதலாளியையும் சக தொழிலாளிகளையும் விட்டு விட்டு தன் வழியை பார்க்க போகிறார்...

தங்கை இறந்த பின் பழி வாங்க போன இந்த கசுமாலத்தை ஐயா பி.எஸ்ஸு.வீரப்பர் அவர்கள் தமிழர் பண்பாட்டின் படி மன்னிப்பது மாபெரும் தவறு. இதுவே வேறு யாராவதாக இருந்திருந்தால் மரண தண்டனை இல்லாமல் ஆயுள் தண்டனை தந்த பெரியவர் வீரப்பா அவர்களை உயிர் வாழும் காலம் வரை நன்றியோடு நினைத்திருப்பர். ஆனால் ஆரிய புத்தி என்ன என்பதை ஜெமினி படத்தின் இறுதி சண்டையில் கொஞ்சம் கூட நன்றி விசுவாசம் இல்லாமல் அய்யா வீரப்பரை கொல்வதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இவை எல்லாவற்றையும் கூட மன்னிக்கலாம். ஆனால் இதை பாருங்கள்... அடிமையாக ரத்தினத்தீவுக்கு வரும் ஜெமினி ரத்தினத்தீவின் இளவரசி வைஜயந்தியின் கருணையால்தான் உயிரே பிழைப்பார். பாம்பு குட்டி பார்க்க அழகாக இருந்தாலும் குணத்தால் பாம்புதான் என்பதை உணராமல் பழங்குடி இனத்தை சேர்ந்த வைஜயந்தி ஆரியரான ஜெமினியின் மீது மையல் கொள்வார். ஆனால் ஜெமினியோ பொய் சொல்லி, பல பெட்டிகள் வைரம் வைடூரியங்களையும் இளவரசியிடமிருந்தே வஞ்சகமாக அபகரித்து - இளவரசியே மனமுவந்து தந்ததாக இருந்தாலும், அவர் அப்பாவி... விவரமான ஜெமினி அதை தவிர்க்காமல் சூடு சொரணை அற்று ஏற்றுக்கொள்வது அபகரிப்பே - அதை கொண்டு மெயின் லேண்டிற்கு போய் பத்மினியை காதலிப்பார்.. ரத்தினத்தீவு ஒரு பழங்குடியினர் வாழும் பூமி என்பதை காண்பிக்க ஆளுயர கடவுள் வழிபாடு மூலம் உணர்த்த விரும்பும் இயக்குனர், பொருத்தமான காட்சி அமைப்பு என்று பழங்குடியினர் நரபலி எல்லாம் கொடுப்பார்கள் என்ற தோற்றத்தை உருவாக்க முயல்கிறார்.. அனேகமாக இப்படத்தின் கதையை சுஜாதாவின் தாத்தாதான் எழுதியிருக்க வேண்டும்.

ரத்தினத்தீவு பழங்குடியினர் வாழும் பூமியாக இல்லாமல் மேட்டுக்குடி நாடாக இருந்திருந்தால் ஜெமினிக்கு வைஜயந்தி மீது காதல் என்று கதையையே மாற்றியிருப்பர். ஒரு பழங்குடி இனத்தின் இளவரசி அளவில்லாத காதலை ஜெமினி மீது வைத்திருக்க அதை ஏற்றுக்கொள்ளாமல் கடல் கடந்து மேட்டுக்குடி வர்க்கத்தை சேர்ந்த பத்மினியை காதலிப்பது போன்று காண்பிப்பதை தடுக்காமல் சென்ஸார் போர்டு என்ன கிழித்துக்கொண்டு இருந்தது என்பதுதான் நமது கேள்வி. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் ஒரு இளவரசியாக இருந்தாலும் தாழ்த்தப்பட்டவரின் ஆசை என்பது கிள்ளுக்கீரையா? பழங்குடியினத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக வைஜயந்தியின் காதல் தோல்வி துயரத்தையும் அவர் அவமானப்படுவதையும் அணு அணுவாக காண்பிப்பது தமிழ் சினிமா என்பது உயர்குடி ஆதிக்கத்தில் எப்படியெல்லாம் சீரழிந்தது என்பதை சொல்லாமல் சொல்கிறது.. இதனால்தான் அம்பேத்கார் தமிழ் சினிமா பார்ப்பதையே தவிர்த்தார்.. மேலும் 1855 ஆகஸ்டு 37ம் தேதி விடுதலை இதழ் இதை பற்றி என்ன சொல்கிறது என்று பார்த்தால்.............




š இப்பதிவை மின்னஞ்சலிட