புதுப்பிக்கப்பட்ட தளம்
எங்கள் அலுவலகம் இருக்கும் கட்டிடத்தின் பதினான்காவது மாடியில் அலுவலகம் நடத்திக்கொண்டிருந்த டுபாக்கூர் & கோ தங்கள் சொந்த கட்டிடத்தில் குடிபெயர்ந்த பிறகு அந்த தளத்தையும் எங்கள் ஆட்களே குத்தகைக்கு எடுத்துவிட்டார்கள். அதை ஸ்டேட்-ஆஃப்-த-ஆர்ட் தளமாக நிர்மாணிக்கப்போவதாக கேள்விப்பட்டபோது, அட நம்மாளுங்களுக்கு கூட இப்படியெல்லாம் யோசிக்க தோன்றுமா என்று நாங்கள் ஆச்சரியமாக பேசிக்கொண்டோம். அதற்கப்புறம் பொழுதுபோகாதவர்கள் எல்லாம் இது சம்பந்தமான மெயில்கள் பரிமாறும்போது மட்டும் இப்படி ஒன்று இன்னமும் நடந்துகொண்டிருக்கிறது என்று தெரியவரும். திடீரென ஒரு நாள், தள நிர்மாணம் முடிவடைந்துவிட்டது என்றும் திறந்த வீட்டில் நுழைந்து பார்க்க (open house) வரும் வெள்ளி அன்று அனைவரும் வரலாம் என்றும் மெயில் வந்தது. அன்று வேலைப்பளுவால் செல்லவில்லை. அதற்கப்புறம் அங்கு செல்லவே வாய்ப்பு கிடைக்கவில்லை. சரி, ஈயடிக்கும் இடத்தில் எறும்புக்கு என்ன வேலை... அங்கு வேறு டிபார்ட்மெண்ட்.
இன்று காலை பதினான்காவது தள கான்பரன்ஸ் அறையில் நடக்கும் தங்களது மீட்டிங்கில் கலந்து கொள்ள வருமாறு 'அவசியம் கலந்துகொள்ளவேண்டியவர்கள்' பட்டியலில் பெயர் போட்டு மெயில் வந்ததும் வேறு வழியில்லாமல் பதினான்காவது தளத்துக்கு சென்றேன். எங்கள் மீட்டிங் நடக்க வேண்டிய அறையில், அதற்கு முன்பு மீட்டிங் போட்டிருந்தவர்கள் இன்னமும் முடிக்காமல் கடலை வறுத்துக்கொண்டிருந்தார்கள். சரி அப்படி என்னத்தை ஸ்டேட் ஆப்பு த ஆர்ட்டு கட்டிவிட்டார்கள் என்று சித்தி ச்சே சுத்தி பார்த்து வரலாம் என்று கிளம்பினேன்.
சிரிப்புதான் வந்தது. தனித்தனி cubicleஆக இருந்ததையெல்லாம் அப்புறப்படுத்தி ஓபன் டைப் ஆபிஸ் என்று நெஞ்சு வரை மட்டும் தடுப்பு ஏற்படுத்தி இந்த மூலையில் நின்று பார்த்தால் அந்த மூலையில் இருப்பவனை பார்க்கலாம் என்ற அளவில் கல்யாண மண்டபம் போல் ஆக்கிவிட்டிருந்தார்கள். இது வித்தியாசமாக இருந்தாலும் நமக்கு ஸ்டேட் ஆர்ட் எல்லாம் இல்லை. ரொம்ப காலமாகவே நம்மூரில் - இடப்பற்றாக்குறையால் - நிர்மாணிக்கப்படும் ஆபிஸ் தள டிசைன்தான். நம்மூரில் நான்கு பேர் முதுகோடு முதுகு இடித்துக்கொண்டு இருப்போமே அதையே இங்கு ஏகப்பட்ட இடம் விட்டு நடுவில் ஒரு தடம் விட்டு ஓபன் ஆபிஸ் என்று வைத்திருந்தார்கள்.
சரி, தனித்தனி க்யூபிக்கலில் ஜில்பான்ஸி ஆடிக்கொண்டிருந்தவர்களை ஒருவரின் கண்ணி திரையை குறந்தது அவருக்கு diagonal ஆக அமர்ந்திருக்கும் - குறைந்த பட்சம் - நாலு பேராவது பார்க்க இயலும் எனும் சூழ்நிலையில் விட்டால்... இந்த ஏற்பாடு சகிக்கவில்லை என்று நான் சந்தித்த அனைத்து ந(ண்)பர்களும் குறிப்பிட்டார்கள். முக்கால்வாசி ஆட்கள் docking stationஐ உபயோகப்படுத்தாமல் மடிக்கணினியை மூலையில் வைத்துக்கொண்டு வழக்கம் போலவே ஸ்டாக் மார்கெட்டோடு போராடிக்கொண்டிருந்தார்கள். யாருக்குமே ப்ரைவஸி என்பதே கிடையாது. கான்பரன்ஸ் அறைகள் கூட கண்ணாடி தடுப்புகள் ஊடே அமைக்கப்பட்டிருந்தன. முக்கியமான மீட்டிங் என்றால் பாதிப்பேரின் கண்கள் கான்பரன்ஸ் அறைகளையே பார்த்துக்கொண்டிருந்தது. அதில் கலந்து கொள்பவர்களின் முகபாவங்களை வைத்தே அறையில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளை ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு நிறைய பேருக்கு மனோதத்துவம் கைவசப்பட்டிருந்தது.
மற்ற தளங்களை விட கிச்சன் மிகவும் பெரிதாக இருந்தது. நான்கு குளிர்சாதன பெட்டிகள் (அதே அளவு ஆட்கள் இருக்கும் எங்கள் தளத்தில் இரண்டு), நான்கு புதிய பெரிய மைக்ரோவேவ் (பழைய சிறிய இரண்டு), புதிய வகை காப்புசினோ மெசின்கள் இரண்டு (பழையது ஒன்று), அதிநவீன வெண்டிங் மெசின்கள் மூன்று (பழையது ஒன்று) என்று கலக்கலாக இருந்தது. "இங்கு மெயிடுகள் கிடையாது. இதை நீங்களேதான் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்" என்ற சாயம் போன ப்ரிண்ட்-அவுட்டில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை.
சுத்திய வரை போதும் என்று கான்பரன்ஸ் ஹால் வந்தால் பழைய மீட்டிங் இன்னமும் முடிவடைந்திருக்கவில்லை. சரி என்று பாத்ரூம் பக்கம் நடையை கட்டினேன் (வெறுமே சுத்தி பார்க்க மட்டும் இல்லை). பாத்ரூமும் கலக்கலாக இருந்தது. விஸ்தாரமான அறையில் ஒரு சோபா போட்டிருந்தார்கள். ஏற்கனவே நிறைய பேர் காலையில் எழுந்து வந்து இங்குதான் பாதி வேலையை முடிக்கிறான்கள், இந்த லட்சணத்தில் சோபா வேறா.. உருப்பட்டா மாதிரிதான் என்று நினைத்துக்கொண்டேன். மேலும் தண்ணீர் புழங்கும் அறையில் இப்படி துணி சோபா போட்டிருக்கிறார்களே, விரைவில் mold பிடித்துவிடாதா என்ற யோசனையில் 'காரியமாற்றும்' இடத்தை பார்த்தால் அதிர்ச்சி. நின்ற வாக்கில் செயலாற்ற உதவும் பீங்கான்களை காணோம். அடப்பாவிகளா புதுமை என்ற பெயரில் இதற்கு கூடவா ஆப்பு வைக்க வேண்டும் என்று கம்மோடு அறையில் நுழைந்து "ஆஜா ஆஜா ஆஜா (ஜில்லுன்னு ஒரு காதல்)" விசிலடித்துக்கொண்டே வேலையை முடித்துவிட்டு, கை கழுவ வந்து பார்த்தால் முதல் குழாயில் தண்ணீர் வரவில்லை. அதானே, என்னதான் புதுசாக இருந்தாலும் இப்படி ஏதாவது திருஷ்டி இருக்க வேண்டுமே என்று எதிர்பக்க கடைசி குழாய்க்கு நகர்ந்து (பீங்கான், கம்மோடு, தண்ணீர் குழாய் என்று எதாக இருந்தாலும் ஒன்று இந்த கடைசி அல்லது அந்த கடைசி என்றே தேர்ந்தெடுக்கும் எனக்கு ஏதாவது ப்ரச்னையா) கைகழுவிவிட்டு பக்கத்தில் இருந்த டவல் ஹோல்டரை பார்த்தால் பேப்பர் டவல் இல்லை. சரி என்று பழைய மூலைக்கு திரும்பி வந்து அல்ட்ரா சாஃப்ட் பேப்பர் டவலில் கைதுடைத்துவிட்டு பாத்ரூமை விட்டு வெளியேறும் சமயம் பாத்ரூம் டிசைனை பற்றியதாக சிந்தனை மாறியது.
மூடியிருந்த ஆபிஸை திறந்த வெளியாக்கியதாவது வேண்டுமானால் ப்ரொடக்டிவிட்டுக்கு உதவினாலும் உதவலாம், ஆனால் பாத்ரூமை மூடப்பட்ட அறைகளாக மாற்றியது எந்த விதத்தில் உபயோகம். தனித்தனி அறையால் சில நேரங்களில் நெரிசல் + க்யூ ஏற்பட்டு அதனால் அனாவசியமான நேர விரயம்தானே ஏற்படும் என்ற சிந்தனையில் வெளியேறியபோது 'ஏச்சி ஏச்சி என்ன பேச்சு' என்ற வரியில் இருந்த என் விசில் அப்படியே நின்றது. தட்டிய பொறியில் திரும்பி மேலே பார்த்தேன். WOMEN என்று எழுதியிருந்தது.
தமிழ்ப்பதிவுகள்
மக்கள்ஸ் கருத்து ::
தெளிவா எழுதியிருக்கீங்க ஆனா ஒன்னுமே புரியல...:-))
ரொம்ப நாள் கழிச்சு போனீங்களோ "புதுப்பிக்கபட்ட" தளத்துக்கு?
அந்த மட்டும் ஆஜா ஆஜா பண்ணினீங்களே!
அதுவரைக்கும் சந்தோஷம்!
பக்கத்து க்யூபிகிளில் இருந்து ஒண்ணும் சத்தம் வரலியே!
அதுவரைக்கும் சந்தோசஹ்ம்!!!
நான் கூட இப்ப என் பையனை கூட்டி வரப் போகும் போது தெரியாம, காலேஜ் காம்பஸ்ல ஒன்-வேயில நுழைஞ்சுட்டேன்!
நல்ல வேளை! காப்ஸ் வரலை!
அதுவரைக்கும் சந்தோஷம்!!!
அட தல பாத்ரூம் மாறிப்போனதுதான் மேட்டரா..
இங்க பெரிய பிரளயமே நடந்துகிட்டிருக்கு. நீர் என்னடான்னா பாத்ரூம் குழாய்ல தண்ணி வரல... 'பேப்பர் டவல்' வைக்கல. முதல் பேசின்ல கைகழுவட்டுமா கடைசி பேசின்ல கைகழுவட்டுமான்னு ஆராய்ச்சி செஞ்சிட்டு பொழுதக் கழிக்கிறீரு.
கட்சித்தலைவருங்கற பொறுப்பு கொஞ்சமாச்சும் இருக்கா? அப்புறம் நம்ம சின்னவர் தலைமையில் பு.ப.ம.க மீண்டும் உதயமாகிடும்.
அண்ணா
வணக்கங்கண்ணா !
நல்லா இருக்கீங்களண்ணா ?
இரஷ்ய மன்ற செயலாளர் என்மேலே என்னக் கோபத்தில் இருக்கிறார்ன்னு தெரியலீங்கண்ணா.
போட்டுக் கொடுக்கப் பார்க்கறாரு.
தள்ளாத வயதிலும் தமிழ்த் தொண்டாற்ற தலை நீங்க இருக்கும்போது
இந்த வால் ஆடாதுங்கண்ணா.
பமக வின் நிரந்தர தலைவர் முகமூடி வாழ்க வாழ்க !
ஒரு சில பொதுக்கழிப்பறைகளில் Women+men என்று எழுதியதையெல்லாம் பார்த்திருக்கிறேன்.
ஒரு பக்கம் பேப்பர் டவலும், இன்னொரு பக்கம் அல்ட்ரா சாஃப்ட் டவலும் கொடுத்திருப்பார்கள்.
ஆம்ஸ்டர்டாமில் "நின்னுகிட்டு அடிக்கிற" பீங்கான்கள் பெண்கள் கழிவரையின் நட்ட நடுவில் ரவுண்டானா கட்டி வைத்து இருந்ததைக் கூடப் பார்த்திருக்கிறேன்.
ஏங்க ஒரே ஒரு தடவ women போர்டு போட்ட டாயிலெட்டுக்குள்ள ஒண்ணுக்கு போனதுக்கு எல்லாம் ஒரு பதிவா ?
இதெல்லாம் ஞாயமா ?
பமக உடையப் போவுதுன்னி ஒரே பேச்சா கீதுன்னா நீரு உச்சா கதை பேச்சிட்டு இருக்கீரே? அடுத்த பதிவுக்குள்ள எதுக்கும் ஒரு ஜெண்டர் டெஸ்ட் எடுத்துடுப்பா... :-)
வாய் விட்டு சிரிக்க வைத்த பதிவு. நல்ல சிறுகதை இலக்கணத்தோடு எழுதியிருக்கிறீர்கள்.
//அடுத்த பதிவுக்குள்ள எதுக்கும் ஒரு ஜெண்டர் டெஸ்ட் எடுத்துடுப்பா... :-) //
ரிப்பீட்டு!
சரி, உங்க கருத்து ??