<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("iframes-styles-bubble", function() { if (window.iframes && iframes.open) { iframes.open( '//www.blogger.com/navbar.g?targetBlogID\07512213354\46blogName\75%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\46publishMode\75PUBLISH_MODE_BLOGSPOT\46navbarType\75BLUE\46layoutType\75CLASSIC\46searchRoot\75http://mugamoodi.blogspot.com/search\46blogLocale\75en_US\46v\0752\46homepageUrl\75http://mugamoodi.blogspot.com/\46vt\0753361231228256067100', { container: "navbar-iframe-container", id: "navbar-iframe" }, { }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

ப.ம.க ஆட்சியில்


பச்சோந்தி மக்கள் கட்சி ஆட்சி முக்காலியில் அமரும் நாள் வெகுதொலைவில் இல்லை என்ற நிலையில் ஆட்சி அதிகார செயல்பாடு குறித்த ஆலோசனைக்குழு கூட்டம் இன்று மைலாபெரும் தோட்டத்தில் நடந்தது...


முடிவில் தொலைநோக்காளர்கள் ஆலோசனையின் படி கீழ்க்கண்ட வேலைகளுக்கான ஒப்பந்தப்படிவங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன..

1. கைபர்போலன் கணவாய்க்கு ஓடுதளம் அமைக்கும் பணி - திட்ட மதிப்பீடு ரூ.12000 கோடி.

தமிழ்நாட்டிலிருந்து கைபர் கணவாய் வரை - இதன் துல்லியமான புவியியல் லொக்கேஷன் கண்டுபிடிக்கும் பணி திரு.கோமான் அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது - ஒரு ஓடுதளம்... 2 அடி அகலத்தில் ஒரு ஆள் ஓடும் அளவுக்கு ஜல்லி, சரளைக்கற்களால் தளம் அமைக்கப்பட வேண்டும். ஓடுதளத்தின் இருபக்கமும் பொதுமக்கள் நிற்கும் அளவு இடம் விடப்பட வேண்ட்ம். 10 கிமீ இடைவெளியில் கழுதை சீரமைப்பு புணர்வாழ்வு மையங்கள் அமைக்கப்படவேண்டும். பொதுமக்கள் ஏன் பிடிக்கிறோம் எதற்கு பிடிக்கிறோம் என்றே தெரியாமல் பிடிக்கும் கட்சிக்கொடிகள் விற்பனை மையங்கள் ஒவ்வொரு 30 கிமீ இடைவெளியில் அமைக்கப்படவேண்டும்...

2. இந்தியாவிற்குள் குறுக்கும் நெடுக்குமாக பல ஓடுதளங்கள் அமைக்கும் பணி - மதிப்பீடு ரூ 13000 கோடி.

சொரணை உள்ள தமிழர்கள் 50% மேல் இருக்கும் அனைத்து கிராமங்களிலிருந்தும் மற்ற அனைத்து பெரிய ஊர்களுக்கும் ஓடுதளங்கள் அமைக்கும் பணி... எதிர்காலத்தில் யார் யார் எது எதற்காக தமிழர் விரோத கருத்துக்கள் தெரிவிப்பர் என்று தெரியாததால் தொலை நோக்கோடு அனைத்து சினிமா உலக பிரமுகர்கள் பிறந்த ஊருக்கும் தளங்கள் அமைக்கப்படும்... முதற்கட்டமாக பள்ளிப்பாளையம் to பரமக்குடி, சிலுக்குவார்ப்பட்டி to சின்னமனூர், பட்டிவீரன்பட்டி to பம்பாய், கொண்டலாம்பட்டி to கொத்தவால்சாவடி ஆகியவை நிறைவேற்றப்படும். கைபர் திட்டத்தில் இருக்கும் சில்லறை வேலைகள் இங்கும்
நிறைவேற்றப்பட வேண்டும்...

இது குறித்து விளக்கம் தெரிவித்த அமைப்புச்செயலாளர் ஃபாரஸ்ட்கட்டர் தெரிவித்ததாவது ::

இந்த முக்கியமான பணிகளை செய்பவர் காசுக்கான வேலையாக நினைக்காமல் உணர்வோடு இதை ஒரு புனிதப்பணியாக செய்ய வேண்டும் என்பதால் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிப்பவர் தூய தமிழராக மட்டுமே இருத்தல் வேண்டும் என்பது அடிப்படை தகுதியாகிறது. எதிர்காலத்தில் தூய தமிழர் அல்லாதவர் அனைவருமே கைபர் கணவாய்க்கு ஓட ஓட விரட்டப்படுவர் என்ற காரணத்தால் தூய தமிழர் என்ற சான்றிதழ் பெறுவது தமிழ்நாட்டில் வாழும் அனைவருக்கும் அவசியமாகிறது... சில சான்றுகளுடன் சென்று இந்த சான்றிதழை எல்லா தாசில்தார் அலுவலகங்களிலும் நீங்கள் பெறலாம் என்றாலும் பொதுக்குழுவிற்கு பிடிக்காத ஜாதிகள் என்று ஏற்கனவே ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.. அதில் ஏதாவது ஒன்றில் நீங்கள் இருந்தால் குட்டிக்கரணம் போட்டாலும் உங்களுக்கு இந்த சான்றிதழ் கிடைக்காது.. மற்றவர்கள் உங்கள் family treeஐ ஆழமாக தோண்ட வேண்டும்... கல்தோன்றி மண்தோன்றா காலத்தே தமிழ்நாடு என்ற நிலப்பரப்பு உருவானபோது பரிணாம வளர்ச்சி பெற்று உருவானதாக மூன்று குரங்குகளை நாங்கள் அடையாளம் கண்டிருக்கிறோம். உங்கள் மூதாதையர் அந்த மூன்று குரங்கில் ஒன்றிலிருந்து உருவானவராக இருக்க வேண்டும்... இன்றைய உங்கள் உருவ அமைப்பு தமிழ்க்குரங்குகளோடு ஒத்துப்போனால்
உங்களுக்கு செயற்குழுவில் இடம் பெறவும் அதிர்ஷ்டம் அமையும்...

கூட்டத்துக்கு தாமதமாக வந்து சேர்ந்த சுகாதரத்துக்காக மட்டுமே மூச்சு விடும் அமைச்சர் வம்புகனியை நிருபர்கள் சூழ்ந்து அவரது எதிர்கால திட்டங்கள் குறித்து கருத்து கேட்ட போது...

முதலில் தமது தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்ட அவர் 500 புதிய சிகரெட், பீடி, மதுபான தயாரிப்புக்கூடங்கள் திறப்புக்கான கோப்பில் கையெழுத்திட்டு வந்ததாலேயே தாமதம் என காரணம் தெரிவித்தார்... தமது எதிர்கால திட்டமாக சினிமாவில் பீடி, மது ஆகியவை உபயோகிக்கக்கூடாது என்று சட்டம் வரும் என்றார்... மேலும் சினிமாவை நெறிப்படுத்த பல தி(ச)ட்டங்கள் கைவசம் இருக்கிறது என்றும் அது ப.ம.கவில் சினிமாத்துறை அமைச்சராக இருக்கப்போகும் தகரகிச்சான் வசம் கேட்டுக்கொள்ளுங்கள் என்றும் சொன்னார்... அமெரிக்காவில் ஆராய்ச்சி செய்து அதன் முடிவில் மனிதர்களுக்கு ஒவ்வாதது, நீண்ட கால பயனால் அவர்கள் உயிருக்கே உலை வைக்ககூடியது என்று தடை செய்யப்பட்ட பல மருந்துகள் இந்தியாவில் இன்னமும் விற்பனை செய்யப்படுவது குறித்து தினமூடி நிருபர் கேள்வி கேட்டபோது "எந்த கட்சி பத்திரிக்கைடா நீ" என்று சொல்லி கட்சிக்கு அவப்பெயர்
ஏற்படுத்த முனையும் அந்த நிருபரை "மரியாதையாக" வெளியே(ற்)றும்படி கேட்டுக்கொண்டார்.

ஆஹா, படம்னா என்னோதுதாண்டா படம், பின்னிட்டேன்ல, பிச்சிபுட்டேன்ல, இந்த நாசமத்து போன திராவிடனுங்க, தமிழன் என் படத்த பாக்காம ஆர்யர்கள் எடுக்கற படத்தை பாத்து வீணாப்போறானுங்க என்று தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்த வருங்கால சினிமா மந்திரி தகரகிச்சானை நிருபர்கள் அணுகியபோது, தனது வருங்கால திட்டங்களாக அவர் சொன்னது..

அ) இனி கதாநாயகிகள் அம்மா வேஷத்தில் மட்டுமே நடிக்க வேண்டும் ; அம்மா வேஷத்தில் நடிக்க விரும்பாத நடிகைகள் இனி நடிக்கவே கூடாது என சட்டம் இயற்றப்படும்
ஆ)கதாநாயகியாகளாக நடிக்க ஏற்கனவே பெண் வேஷத்தில் நடித்துள்ள பிரசாந்த், ரஜினி, சத்யராஜ், வடிவேல், கவுண்டமணி ஆகியோரையும் தத்ரூப நடிப்பிற்கு அப்பாஸ், குணால் ஆகியோரை மட்டுமே நடிக்க வைக்க வேண்டும்.
இ)இனி நாயகன் வாந்தி எடுத்தால் நாயகி அழுதுகொண்டே கையல் அதை ஏந்திக்கொள்வது, நாயகனை நாயகியின் அப்பா செருப்பால் அடித்து தெருவில் தள்ளி துப்பினாலும் வேலைக்கார சிறுமி அளவு கூட சொரணை காமிக்காமல் நாயகி அமைதியாக மனதுக்குள் அழுவது, ஆந்தை கடிச்ச ஆப்பிள் பழம் போன்ற பாடல்கள் போன்று தமிழ்ப்பண்பாடுகள் தூவப்பட்ட கதைகள் மட்டுமே தமிழ்த்திரைப்படங்களாக தயாரிக்க வேண்டும்.. படத்தின் கதைகள் முதல்கட்டமாக அமைச்சர் குழுவாலும் அடுத்த கட்டமாக பமக, அடிமை எலி கட்சிகளின் பொதுக்குழுவாலும், கடைசி கட்டமாக பமக நிறுவனர், அடிமை எலி செயலாளர் ஆகியோராலும் அப்ரூவல் செய்யப்பட்ட பிறகே படமெடுக்க அனுமதிக்கபடும் என்றும் அவர் சொன்னார்...

கூட்டத்தின் முடிவில் கட்சியினருக்கு கேப்பங்களி, சோள ரொட்டி, பனங்கள்ளு, பட்டை சாராயம், கழுதைகளுக்கு (கட்சிகாரங்கள சொல்லல, இது மிருகம்) குஷ்பு, சுகாசினி போஸ்டர்கள் என்று தடபுடலாக விருந்து நடந்தது...


கட்சி மேட்டர் 1 : ப.ம.க வின் பழைய சட்டங்கள்
கட்சி மேட்டர் 2 :
உதயம்: பச்சோந்தி மக்கள் கட்சி


š இப்பதிவை மின்னஞ்சலிட


 

தாக்குடேக்களும் பொம்மலாட்டமும்


வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும்.

இடுக்கண் வருங்கால் நகுக, சரிதான்... அதுக்காக வீட்டில் இரு தாக்கு டே க்கள் இருப்பதை கூட உணராமல் பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு தாக்கரேவை பார்த்து சிரிப்பது....

சரி, காணத்தவறாதீர்கள்:: "கற்பெனப்படுவது யாதெனில்" - நவீன பொம்மலாட்டம்... தினமும் இரு காட்சிகள். அனுமதி இலவசம்.

Live :: உங்கள் அருகாமையில் உள்ள நீதிமன்றங்களில்...
Highlights :: இரவு 8:00 மணி சன் நியூஸ் நிகழ்ச்சியில்...

உங்கள் ஊர் பட்டியலில் இல்லையா? கவலை வேண்டாம். புதுப்புது யுக்திகளும், கிறீச்சிடும் சவுண்டு எஃபக்ட்ஸும், live animalsம் நிறைந்த இந்த அரிய நிகழ்ச்சியை இலவசமாக கண்டு களிக்க அணுக வேண்டிய முகவரி : குட்டி செயலாளர், கற்பு காப்பாத்தும் கட்சி (அ) அருகாமையிலுள்ள நீதிமன்றம்...


š இப்பதிவை மின்னஞ்சலிட


 

திராவிட இயக்கத்தலைவர் ஜெயலலிதா


கருணாநிதிய திராவிட இயக்கத்தலைவர்னு சொல்றாங்களே, அப்படீன்னா திமுக திராவிட இயக்கமா? ராமதாஸ் inc, வைகோ inc எல்லாம் திராவிட இயக்கமா... வீரமணி கார்ப்பரேஷன் திராவிட இயக்கம்னு பேடண்ட் வாங்கிடுச்சான்னு கேட்டப்பலாம் முறைச்ச மகாஜனங்க, ஜெயலலிதாவும் திராவிட இயக்கத்தலைவர்தானேன்னு கேட்டதுதான் போச்சி, என்னமோ கவுண்டமணி காமெடிய (உயர் சிந்தனை பிரிவு Simpsons) பாத்தா மாதிரி விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க...


எலே இத பத்தியெல்லாம் பேச உனக்கு வயசு பத்தாதுன்னு சொல்றவங்க இந்த பதிவுக்கு அந்துமணி ஸ்டைல்ல "பார்த்தது, கேட்டதுன்னு" தலைப்பு வச்சிக்குங்க... ஆனா கருணாநிதி திராவிட இயக்க தலைவர்னா ஏன் ஜெயலலிதா இல்லைன்னு கேள்வி மண்டைய கொடயுது

விக்கிபீடியா, முக்கிய திராவிட மொழிகளாக தெலுங்கு (530 இலட்சம்) , தமிழ் (450 இலட்சம்) , கன்னடம (280 இலட்சம) , மலையாளம் (275 இலட்சம) என பட்டியலிடுகிறது.. இது தவிர சிறிதும் பெரிதுமாக சுமார் 75 திராவிட மொழிகளும், தென்னிந்தியா மட்டுமின்றி மத்திய, வட இந்தியாவிலும் (குறைந்த அளவு) திராவிட மொழி பேசும் மக்கள் இருக்கிறார்கள் என்றும் சொல்கிறது.

இதில் திராவிடர்களின் முன்னேறத்துக்காக துவங்கப்பட்ட கழகத்துக்கு தமிழ்நாட்டை தவிர மற்ற இடங்களில் இருக்கும் திராவிடர்களின் முன்னேற்றத்தை பற்றி ஆர்வம் இருக்கிறதா , இருந்தாலும் அங்கிருக்கும் திராவிடர்களிடம் சென்று உங்களை முன்னேற்றப்போகிறேன் என்று ஜல்லியடித்தால் அவர்கள் இவர்களை ஜல்லியால் அடிக்காமல் இருப்பார்களா என்பது நமக்கு தேவையில்லாத விஷயம்... இந்த கழகத்தில் கணக்கு கேட்டவர் முதல்வர் ஆசை வந்ததும் திராவிடர்களை முன்னேற்றுகிறேன் அண்ணா (இல்லை அண்ணா திராவிட என்று ஒரு இனம் உண்டா?) என்று புறப்பட்டு விட்டார். இவர்கள் கர்நாடகத்திலும் கொஞ்சம் போல திராவிடர்களை (கன்னட சலுவாலிலே தூங்கும் நேரமாக பார்த்து) முன்னேற்றுகிறார்கள் போல் தெரிகிறது... அதுல இருந்து குருமா ரெடியானவுடன் கறிவேப்பிலை போடவும் என்பது மாதிரி எல்லாரும் "திராவிட" என்று தூவிவிடுகிறார்கள். லேட்டஸ்டா விஜயகாந்த். எப்போதும் தமில் என் பேச்சு, தமில் என் மூச்சு என்றவர், தமிளை தவிர வேறு மொளி படங்களில் கூட நடிக்காத தமிளன் நான் என்றவர், ஏன் தமிழை தமது கழகத்தின் பெயரில் வைக்கவில்லைன்னு ஏடுகொண்டவாடுவுக்கே வெளிச்சம். சரி ஒட்டுமொத்த திராவிடர்களுக்கும் தலைவராகனும்னு (கட்சி பெயரளவிலாவது) இருக்க ஆசை வர்றதில் தப்பில்லை...

ஆனா திராவிட?

திமுக பாஜகவோடு கூட்டணி வைத்துக்கொண்டது... கொள்கை அளவில் இல்லாமல் பதவி அளவில் என்றெல்லாம் ஜல்லியடித்தாலும், இது திராவிட இயக்க கொள்கைகளுக்கு ஊதிய சங்கில்லையான்னு தெரிஞ்சவங்க சொல்லுங்க...

சாதிய அடக்குமுறை கொள்கை இன்னும் பெரியார் காலத்திலேயே நின்னுகிட்டிருக்கு. உயர் சாதியினர் கீழ் சாதியினர் மேல் செய்த அடக்குமுறையை குறிப்பிட பெரியார் உபயோகித்த பார்ப்பன/பிராமனீய எதிர்ப்புலயே இன்னும் இருக்கிறார்களே தவிர, ஐந்து அடுக்குகளாக உயர் சாதியினர் தாழ்ந்த சாதியினர் மேல் செய்யும் அடக்குமுறைக்கு இன்னமும் தீர்வு கண்டபாடில்லை... மலம் அள்ளுறதை ஒழிச்சி சட்டமெல்லாம் போட்டாங்களே அது சுத்தமா ஒழிஞ்சி போச்சா, அத ஏன் ஒரு சாதிக்காரன் மட்டும் இன்னமும் செய்யறான் அத பாருங்கடான்னா, கோயில்ல மந்திரம் ஓதறது ரொம்ப முக்கியம்னு போராடரானுங்க... பல நூறு கோடி கொட்டி எலக்ட்ரானிக் பூங்கா கட்டுவோம், ஆனா வாங்குற கூலிய ஃபுல்லா அடிச்சாத்தான் வேலை செய்வது மட்டுமல்ல வாழவே முடியும்ன்ற நிலையில செப்டிக் க்ளீன் பண்றவன் வேலைய செய்ற மெசின் வாங்க காசில்ல...

பெண் குழந்தைகள் கொலை ஒரு தொடர்கதை.. இதுக்கு ஒரு நிரந்தர தீர்வு காண ஒரு தொலை நோக்கு திட்டமும் இல்லை... சுயமரியாதைங்கிற வார்த்தை அரசியலில் வழக்கொழிந்து ரொம்ப நாளாச்சி... பகுத்தறிவுத்தொண்டர்கள் மட்டுமல்லாது தலைவர்கள் வீடுகளிலும் கடவுள் பக்தி பெருக்கெடுத்து ஓடுது. இறை நம்பிக்கையோடு தொடர்புடைய நோன்பு கஞ்சியை கட்சி வேறுபாடில்லாமல் குடிக்கிறார்கள்.. குங்குமம் வைப்பது காட்டுமிராண்டித்தனம் என்று தொண்டர்களுக்கு அறிவுரை கூறும் தலைவர் மனைவிக்கும் மறுமகளுக்கும் அதை சொல்வதில்லை. அவர்களின் தனிமனித உரிமையை மதிக்கிறேன் என்கிறார். அவரு கட்டின கோயில்ல பூசை என்னா புனஸ்காரம் என்னா ஒரே தடபுடல்தான்.. எதிர்க்கட்சி அம்மாவோ பொதுமக்களின் வாழ்க்கையை உருட்றதுக்கு கூட சோழி உருட்டுகிறார்..

இதெல்லாம் சரி. இன்றைய so-called திராவிட இயக்கங்களுக்கு தாய்க்கழகமான திராவிட கழகம்? அதையேன் கேட்கறீங்க, அங்கன தலைவர் உட்பட யாருக்குமே இந்த கழகம் எதுக்கு, கல்வித்தொழிற்சாலைகள் மெயின்டனென்ஸ் (வசூல்) தவிர வேற வேலை எதுனா இருக்கா? கல்யாணம் நடத்தறத தவிரவும் ஏதாவது செய்ய முடியுமான்னெல்லாம் தெரியாம கெரோன்னு இருக்காங்க. கழகத்துக்காக சொத்துங்கறது போயி சொத்துக்காக கழகம்னு ஆயிடுச்சி... பொழைக்க வழி வாலாட்டுறதுதான்னு தலைவர் முடிவு பண்ணி அத அப்பப்போ விடாம செஞ்சிகிட்டும் இருக்காரு. இதுல திராவிடமாவது ஒன்னாவது... அட போங்கப்பா...

போயி வெளக்குமாறு, செருப்பு எதுனா இருந்தா எடுத்துகிட்டு சித்தாள் வேலைக்கு ஆளெடுக்குற அரசமரத்தாண்ட வாங்க... கலாச்சாரம் காக்க ஆளெடுக்கிறாங்களாம். ரவைக்கு க்வார்டரும் கோழி பிரியாணியும் க்யாரண்டி...

š இப்பதிவை மின்னஞ்சலிட


 

சன் டிவியில் தோன்றுவது எப்படி?


வேல வெட்டி இல்லாத உங்க ஆளுங்க ஒரு 5 பேர சேத்துக்கோங்க... திருவல்லிக்கேணி பக்கமா போயி கோனார் வீடு எங்க இருக்குன்னு கேளுங்க. அதிகாலை மற்றும் மாலை நேரத்தில் கோனார், மாட்டோட வீடு வீடா பால் கறக்க போயிருப்பார். அதனால மத்த நேரத்துல போயி அவரு மாடு எங்கன்னு கேளுங்க... பொதுவா பால் கறக்கறதோட அவரு வேலை முடியுது.. அதுக்கப்புறம் தீனி திங்க அதுங்க எங்க போவுதுன்னு அவருக்கே தெரியாது.. இருந்தாலும் ஒரு முயற்சிதான். அவருக்கு தெரியலையின்னாலும் ஒன்னும் பாதகம் இல்ல... அப்படியே தெருத்தெருவா போனீங்கன்னா ஏதாவது ஒரு சந்துல மாடு போஸ்டர தின்னுகிட்டு இருக்கும்... இப்பல்லாம் நிறைய அலைய தேவையில்லாம ஏகப்பட்ட போஸ்டருங்க கிடைக்குதாம்... அதனால சீக்கிரமே மாட்டை ஸ்பாட் பண்ணிடலாம்... அதுக்கப்புறம் குஷ்பு அல்லது சுகாசினி படம் போட்ட போஸ்டரை தின்னுகிட்டு இருக்குற மாடா பாருங்க... அதான் உங்க டார்கெட்..


இப்ப உங்க நண்பர்கள்ல ஒருத்தர் மாட்டோட வால பிடிச்சிக்கணும். இன்னொருத்தர் மாட்டுக்கு பாவ்லா காமிக்கணும். இன்னொருத்தர் படார்னு அது வாயில இருக்கற போஸ்டர பறிச்சிக்கணும்... நடுவுல வால் பிடிக்கிறவர் மாடு எக்குதப்பா உதைக்காம இருந்தா அவரு அதிர்ஷ்டம் இல்லாத ஜென்மம். ஒதச்சி பல்லு மொகறை பேந்திச்சின்னாதான அப்பால தலைவர் எதுனா பாத்து போட்டு குடுப்பாரு... அப்பத்தான் டிவியிலயும் ஒரு கெத்தா இருக்கும்... அதனால வால் பிடிக்கிறப்போ மாடுகிட்ட எதுனா சில்மிசம் பண்ண சொல்லுங்க...

பக்கத்துல 1 ரூபா போன் இருந்தா சன் டிவிக்கு ஒரு போன போட்டு இந்த மாதிரி, இந்த மாதிரி, ஒரு போராட்டம் பண்லாம்னு இருக்கோம், உங்க டைமுக்கு ஏத்த மாதிரி மிச்ச ஏற்பாடெல்லாம் பாத்துக்கலாம். டைம் சொல்லுங்கன்னு சொல்லுங்க... இதுக்காகவே இப்ப ஒரு டீம் காத்துகினு இருக்காம். அவங்க ஆம்புலன்ஸ விட வேகமா வந்திருவாங்க.. அப்புறம் நீங்க எல்லாம் சேந்து "தமிழ் பண்பாட்ட சீர்குலைத்த குஸ்புவை கண்டிக்கிறோம்" அப்படீன்னு கத்தணும்... இன்னும் உங்களுக்கு தெரிஞ்ச கெட்ட வார்த்தையெல்லாம் சொல்லலாம். போன தபா நீங்க கடன் கேட்டு கொடுக்காத ஆள மனசுக்குள்ள நினைச்சீங்கன்னா ஆக்டிங் தத்ரூபமா வரும்... ஒரு 10 நிமிசம் கத்திட்டு ஏற்கனவே கிழிஞ்சி பரிதாபமா இருக்கற போஸ்டர கொளுத்துங்க... உங்க பார்ட்டு முடிஞ்சிது... அப்பால வீட்டுக்கு போயி "கணவருக்காக" சீரியல் பாத்துட்டு ஒரு க்வாட்டர் போட்டீங்கன்னா, மிட்நைட் மசாலா போடுவாங்க.. அப்படியே தமிழ் பண்பாட்டுக்காக நீங்க ஆற்றிய அரும்பணிய நெனச்சி பெருமிதம்+போதையோட தூங்குங்க...

மறுநாள் சன் செய்திகள் பாருங்க... அதுல உங்க நியூஸ் வரும்... "சுகாசினியை கண்டித்து தமிழ்நாடெங்கும் கொடும்பாவி எரித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்" அப்படீன்னு நீங்களே எதிர்பார்க்காத பில்டப் எல்லாம் கொடுத்து செய்தி வரும். இந்த ந்யூஸ வீடியோ புடிச்சி கட்சித்தலைமைக்கு அனுப்புங்க... மூன்றாவது வட்டத்தை சேர்ந்த நாலாவது தெருவுக்கு அமைப்பு செயலாளர் பட்டம் கிடைக்கும்... எதுக்கும் தமிழ் முரசும் வாங்கி பாருங்க... மேட்டர் பஞ்சத்துல, மந்திரிக்கப்பட்ட தாயத்து இலவச இணைப்போட ஒரு வேளை உங்க போராட்டம் செய்தியா வந்தாலும் வந்திருக்கும்...

***

நேற்று வழக்கறிஞர் ஒருவர் தலைமையில் நடந்த மாபெரும் போராட்டம் (?!) சன் டிவியில் பார்த்ததை ஒட்டி எழுதப்பட்டது... ஈ காக்கா இல்லாத ரோட்டில் தலைவரோடு சேர்த்து அறுவராக இருந்த போராட்ட குழுவுக்க்கு ஒரு கோரிக்கை : அடுத்த முறை முன்னேற்பாடா நல்ல தீப்பெட்டி அல்லது லைட்டர் கொண்டு செல்லவும். ஒரே ஒரு பாதி கிழிஞ்ச சுகாசினி போஸ்டரை கொளுத்துவதற்கு நீங்க பட்ட பாடே பரிதாபமாக இருந்தது. இந்த லட்சணத்தில் சன் தனது செய்தியில் சொன்னது போல் உண்மையிலேயே நீங்க கொளுத்த முயற்சித்தது கொடும்பாவியா இருந்திருந்தா உங்க நெலம என்ன ஆயிருக்கும்னு கற்பனையே பண்ணமுடியலையேப்பா...



š இப்பதிவை மின்னஞ்சலிட