<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

ஆனால்...


நம்மாளு ஒருத்தர் க்ளைடர் ஒட்டுவாரு. ஒரு நாளு அப்படி போகும்போது வழி தவறிட்டாரு.. ஒரே மேகமூட்டம் வேற.. அவரு நேரம் அவருகிட்ட இருந்த வழிகாட்டும் இயந்திரங்க வேற ஒன்னும் வேலை செய்யல... நடுவானில் தடுமாறிக்கொண்டிருந்த ஆளுக்கு அங்க ஒரு வானுயர்ந்த கட்டிடத்த பார்த்ததும் நிம்மதி.. அவரு நல்ல நேரம் அந்த கட்டிடத்தோட மொட்ட மாடில ஒருத்தர் தம்மடிச்சிகிட்டு இருந்தாரு.. பைலட் ரொம்ப தாழ்வா பறந்துகிட்டே தம்மர் கிட்டபோய் "நான் எங்க இருக்கேன்"னு கேட்டாரு.. அதுக்கு தம்மரு, "கட்டிடத்துக்கு மேல 800 அடி உயரத்தில் பறந்துகிட்டு இருக்கிற ஒரு க்ளைடர்ல இருக்கீங்க"ன்னு சொன்னாரு... "டாங்க்ஸ்பா"ன்னு சொல்லிட்டு நம்ம பைலட்டு க்ளைடர பத்திரமா ஏர்போர்ட்டுக்கு ஓட்டிகிட்டு போய்ட்டாரு.. கூட வந்த பைலட்டோட ஃப்ரண்டுக்கோ ஒரே ஆச்சரியம். எப்படிய்யா அந்த டப்பா தகவல வச்சி சரியா ஏர்போர்ட்டுக்கு வந்தன்னு கேட்க, நம்ம பைலட் சொன்னாரு "அந்த மனுசன் சொன்ன தகவ்ல் technically correct, ஆனா completely useless... ஆக அவரு வானிலை ஆராய்ச்சி நிலையத்தில்தான் வேலை செய்றவரா இருக்கணும்னு யூகிச்சி அங்கயிருந்து ஏர்போர்ட் திசைய கணிச்சி ஓட்டிகிட்டு வந்தேன்"னு... மைக்ரோசாப்ட் பற்றி சொல்ற ஜோக்கு இது.. இந்த நேரத்தில நம்ம வானிலை அ(ய்யே)றிக்கை கொடுக்கிற இயக்குனரகத்தை பாத்தா அவங்களுக்குத்தான் இது சரியா இருக்கும்னு தோணுது...

தமிழ்நாடு முழுதும் அல்லது பெருநகரங்களில் மட்டும் அல்லது சில கிராமங்களில்..

மிதமானது முதல் கனமானது வரை..
மழை பெய்யலாம், பெய்யாமலும் இருக்கலாம்..
லேசா தூறும், இல்ல கொட்டினாலும் கொட்டும்..
கூட கொஞ்சம் இடி இடிக்கலாம், அல்லது மின்னல் வெட்டினாலும் வெட்டலாம்..
மின்னல்னு இருந்தா வெளிச்சம் கம்மி ஜாஸ்தியாக இருக்கும்...

இவ்ளோதான் நம்ம வானிலை ஆராய்ச்சி நிலைய டெம்ப்ளேட்... இதுல இருந்து வெட்டி ஒட்டி தினமும் டி.வி ஸ்டேஷனுக்கு கொடுத்திடுவாங்க. அத ஸ்டேஷன்ல யாருக்காவது வேண்டிப்பட்டவங்க பொண்ணு கல்யாண ரிசப்ஷன் கணக்கா ட்ரஸ் பண்ணிகிட்டு வானிலை அறிக்கைங்கற பேர்ல லேசா தமிழ நீட்டி நீட்டி படிக்கும்...

குட்டி குட்டி நாட்டுல எல்லாம் சாட்டிலைட்டயும் மெயின்ஃப்ரேம்/சூப்பர் கம்ப்யூட்டரயும் வச்சி தகவல பிரிச்சி மேஞ்சி இன்னும் 10 நாள் கழிச்சி என்ன நடக்கும்னு 80%க்கும் மேல துல்லியமா சொல்ற நேரத்துல, போதா குறைக்கு கிளி ஜோஸ்யனுங்கள ஆரம்பிச்சி வாஸ்து பாக்கறவன், கல்லு விக்கிறவன், கோலமாவு விக்கிறவன், முதலமைச்சர்னு எல்லாரும் பஞ்சாங்கத்த பாத்து "அன்னிக்கே சொன்னேன் மழை வரும்னு"ன்னு சொல்லி வெறுப்பேத்துற நேரத்துல் இவ்ளோ பொத்தாம் பொதுவா வானிலை அறிக்கை கொடுக்கறதுக்கு ஒரு துறை, அதுக்கு ஒரு இயக்குனர் எல்லாம் இருக்காங்களான்னு ஆச்சரியமா சிலர் கேட்கலாம்... ஆனால் இருக்காங்க..

***

மூப்பின் ப்ரச்னை என்ற தலைப்பில் எனக்கு வந்த ஒரு ஃபார்வேர்டு மெயில் :: வாழ்வின் பிற்பகுதியில் வயதானவர்கள் பல்வேறு அழுத்தங்களுக்கு ஆளாகிறார்கள். இதுவரையிலும் செய்து வந்த பணியின் கட்டமைப்பை சிதையசெய்யும் பணி ஓய்வு ; குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் இருக்கச்செய்த கால அட்டவணையில் ஏற்படும் திடீர் மாற்றம் ; சுற்றமும் நட்பும் கொடுத்து வந்த மரியாதை/அங்கீகாரம் குறையத்தொடங்குவதாக ஏற்படும் எண்ணம் தரும் சமூக இருப்பியல் குறித்த பயம் ; நிதி வரவு மற்றும் அதனால் கிடைத்து வந்த சௌகரியங்களில் ஏற்படும் மாற்றம் தரும் தாழ்வ் மனப்பான்மை... இது தவிர முக்கியமானதாக உடல் செயல்திறனில் ஏற்படும் தொய்வு, அதன் விளைவுகளாக ஞாபக இழப்பு மற்றும் வலிமை குறைதல்..

இவை அனைத்தும் வயதின் காரணமாக ஏற்படும் கூடுதல் சுமை. இவை அவர்களை depression நிலைக்கு எளிதில் எடுத்துச்செல்லும். இது ஒரு நோய் அன்று. இது ஒரு நிலை. இந்நிலையின் ஆரம்பகட்டம் aphasias அதாவது எண்ணங்களை தெளிவான/சிறப்பான வகையில் பேச்சு மற்றும் எழுத்தாக மாற்றும் திறன் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ குறைவது... தான் மிகவும் நேசித்தவரின் மறைவு இந்நிலையை துரிதப்படுத்தும் ஒரு ஊக்கியாக செயல்படுவதாகவும் மருத்துவர்கள் சொல்கின்றனர். மனவியல் மருத்துவரின் உதவியை நாடினால் இந்நிலையிலிருந்து விடுபட்டு மூப்பை பொற்காலமாக மாற்றிக்கொள்ளலாம் என்பதும் மருத்துவர்கள் சொல்கின்றனர்...

இவ்ளோ நல்ல மெயில, மேல படிக்க வுடாம நம்ம கொலீக்கு "ஆமா, உங்க ஸ்டேட் X.சி.எம் அndணர், அndணரல்லாதோர்னு என்னவோ கருத்து சொல்லிக்கிறாரே, இன்னாபா மேட்டர் அது" ன்னு கவனத்த கலைச்சிட்டாரு... அது பத்தி கருத்து சொல்லலாம்னு நினைச்சேன், ஆனால் சொல்லவில்லை...

***

முந்தியெல்லாம் "அப்படி போடு அறுவாள" டைப்பு கருத்த பாக்கணுமுன்னா நம்ம அரசியல்வாதிங்களோட அறிக்கைங்களத்தான் படிக்கணும்... ஆனா இப்ப இந்த இணைய வசதி பரவலா ஆனதுல இருந்து அரசியல்வாதிங்களே துண்ட எடுத்து மூஞ்ச மூடி வெக்கப்படுற அளவு நம்ம பொதுஜனங்க அறிக்கை விட ஆரம்பிச்சிட்டாங்க... ரீஜண்டா அந்த டைப் கருத்து ஒண்ண பாத்தேன்... "ஆச்சர்யம் ஆனால் அவமானமல்ல..." அப்படீங்கற தலைப்புல தங்கமணி என்ற பெயரில் ஒருவர் சூப்பர் ஜஸ்டிபிகேஸன்
கருத்து ஒண்ணு சொல்லியிருக்காரு பாருங்க...

"டர்பன் அணிந்தவர்களை டெல்லி தெருக்களில் தேடித் தேடி வெட்டியும் கொளுத்தியும் கொன்ற கட்சியின் விசுவாசிகள் டர்பன் தலை வெட்டிய கட்சிக்காரர்களாய் அறியப்படுவதில்லை. ஆனால் தாங்களே வைத்து உருவாக்கிய மரங்களை, (ஒருவிதத்தில் அவைகள் அவர்களின் சொத்துக்களும் கூட, அதை இழப்பதால் வரும் பொருளாததார, சூழலிய பாதிப்புகளுக்கு முகம் கொடுப்பவர்களும் அவர்கள் தான்) வெட்டியதால் அந்தப்போராட்டமும், போராட்டமுறையும் கொச்சைப்படுத்தப்படுவது ஆச்சர்யத்தை வேண்டுமானால் ஏற்படுத்தலாமே ஒழிய நிச்சயம் அவமானத்தையல்ல. "

எழுத்தர் சொல்கிறாரே தவிர மரங்களின் வயதோடு ஒப்பிட்டால் வெட்டியவர்கள் அந்த மரங்களை வைத்தவர்களாக* தெரியவில்லை.. அப்படியானால் ஒருவேளை இவர்களின் முன்னோர்கள் வைத்ததாக இருக்கும்... பக்கத்து வீட்டு வரலாறு ஆசிரியரோ, சாலையெங்கும் மரம் நட்டது சக்ரவர்த்தி அசோகர் என்கிறார்.. ஆக பாமக குஞ்சுகளுக்கு அடுத்த தேர்தலுக்கு விளம்பரம் ரெடி ::

அரசர் அசோகரின் அரசியல் வாரிசு அய்யா அவர்களின் சின்னம்...

(* வெட்டிய பின் காலியான இடத்தில் பசுமை தாயகம் என்ற பெயரில் செடி நட்டார்கள் என்பதும் ராசியான இடம் என்பதால் தலைவர் அங்கு வரும்போதெல்லாம் அதே இடத்தில் மீண்டும் மீண்டும் செடி நடுவார் என்பதும் நமக்கு தேவையில்லாத விஷயம்)

இந்த ஆச்சர்யம் ஆனால் அவமானமல்ல ரேஞ்ச் கருத்தை பார்த்துவிட்டு கீழ்க்கண்ட பிட் நோட்டீஸ்களும் தயாராவதாக கேள்வி :

பீஹார் யுபி ஆகிய மாநிலங்களை எல்லாம் அரசாங்கமே பிரிக்கும் போது தமிழ்நாட்டை பிரிக்க வேண்டும் என்று சொல்பவர்களை மட்டும் பிரிவினைவாதிகள் என்று கொச்சைப்படுத்தப்படுவது ஆச்சர்யத்தை வேண்டுமானால் ஏற்படுத்தலாமே ஒழிய நிச்சயம் அவமானத்தையல்ல...

பெரிய அளவில் ஆயுதம் ஏந்தி போராடும் ஒரு பிரிவினரை இராணுவம் என்று சொல்லும்போது சிறிய அளவில் ஆயுதம் ஏந்தி போராடும் ஒரு பிரிவினரை மட்டும் தீவிரவாதி என்று கொச்சைப்படுத்தப்படுவது ஆச்சர்யத்தை வேண்டுமானால் ஏற்படுத்தலாமே ஒழிய நிச்சயம் அவமானத்தையல்ல...

வீரப்பன் வேட்டை என்ற பெயரில் ஒரு கூட்டம் சீருடை அணிந்து செய்ததை சீருடை அணியாமல் ஒரு கூட்டம் செய்தால் அவர்களை கேங் ரேபிஸ்டுகள் என்று கொச்சைப்படுத்தப்படுவது ஆச்சர்யத்தை வேண்டுமானால் ஏற்படுத்தலாமே ஒழிய நிச்சயம் அவமானத்தையல்ல...

காங்கோவிலும் ஆஃப்கனிலும் குழந்தை திருமணங்கள் சர்வ சாதாரணமாக இருக்க இங்கே செய்தால் மட்டும் அதை குற்றம் என்று கொச்சைப்படுத்தப்படுவது ஆச்சர்யத்தை வேண்டுமானால் ஏற்படுத்தலாமே ஒழிய நிச்சயம் அவமானத்தையல்ல...

தசரதன் ஆயிரம் மனைவிகள் வைத்துக்கொண்டு இருந்ததாய் சரித்திரம் இங்கே இரு மனைவிக்கு மேல் வைத்திருப்பவர்களை பாலிகாமிக்கள் என்று கொச்சைப்படுத்தப்படுவது ஆச்சர்யத்தை வேண்டுமானால் ஏற்படுத்தலாமே ஒழிய நிச்சயம் அவமானத்தையல்ல...

தலை வெட்டிய கட்சி தலைவெட்டி கட்சியென்றும் அறியப்படாத நிலையில் தானே வைத்து உருவாக்கிய சந்தன மரங்களை வெட்டியதால் வீரப்பரை சந்தன கடத்தல் வீரப்பன் என்று கொச்சைப்படுத்துவது ஆச்சர்யத்தை வேண்டுமானால் ஏற்படுத்தலாமே ஒழிய நிச்சயம் அவமானத்தையல்ல...




š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


நம்ம் ஊர் வானிலை அறிக்கை மாதிரி ஒரு அசுர மோசடி + துரோகம் இதுவரை நான் பார்த்தது இல்லை. பார்க்கும்போதெல்லாம் (எப்பவாவதுதான்) கபகபவென்று எரியும், சனியன் ஒழியட்டும் என்று விட்டுவிடுவேன். இது பற்றி ஒரு இடுகை எழுத ஆசைப்பட்டு நேரம் கிடைக்காமல் விட்டுவிட்டேன். என்று தணியும் இந்த வானிலை அறிவு தாகம்?

மற்ற ட்ரேட்மார்க் முகமூடி சமாசாரத்துக்கெல்லாம் ஒண்ணும் சொல்வதற்கில்லை!
 



இந்த பதிவைப் படித்துவிட்டு ஆழமான பின்னூட்டம் கொடுக்கலாம் என்று எண்ணினேன்.. ஆனால்..
 



அப்படியே
--
முகமூடியிடமிருந்து இத்தகைய பதிவு வருவதென்பது அவமானத்தை ஏற்படுத்துகிறதேயன்று ஆச்சரியத்தையல்ல.
--
இதற்கு பின்னால் பின்னூட்டமிடுபவர்கள் நான் குறிப்பிட்டுள்ள வரிகளையோ உட்கருத்தையோ பயன்படுத்துமுன் என்னிடம் முன் அனுமதி கோரவேண்டுமென்று எச்சரிக்கிறேன்.!
 



ஏங்க முகமூடி நீங்க அலுத்துக்கறா மாதிரி அவ்வளவு மோசமாவா இருக்கு நம்ம வானிலை அறிக்கை? இப்ப கொஞ்ச நாளா (நேத்தைக்கி சன் செய்திகள் பாத்தீங்களா) பாஸ் சுறாவளியை கிராபிக்ஸ் எல்லாம் போட்டு எப்ப, எந்த நிமிஷத்துல சென்னையைத் தாக்கும்னுல்லாம் காட்டுனாங்களே. சும்மானாச்சும் நம்மளையே நாம குறை சொல்லிக்கறது இப்பல்லாம் ஒரு ஃபாஷனா போச்சி. இதுக்கு நம்ம காசியும் விதிவிலக்கில்ல போலருக்குது.

இப்படி சொல்லி, சொல்லியேதான் நாம இப்படியாயிட்டோம். நம்ம விவேக் சொல்றா மாதிரி எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேங்கறா மாதிரியிருக்கு.
 



இதற்கு பின்னால் பின்னூட்டமிடுபவர்கள் நான் குறிப்பிட்டுள்ள வரிகளையோ உட்கருத்தையோ பயன்படுத்துமுன் என்னிடம் முன் அனுமதி கோரவேண்டுமென்று எச்சரிக்கிறேன்.!


தமாஸ்தானே பண்றீங்க ராமநாதன்?
 



Mr. Mugamoodi,

I think you are using a customized template for your weblog.

However, I note that your template doesn't specify the charset. Because of this, I am always have to manually reset your page, before I can read it in tamil.

Please correct your webpage template by including something like this...

"meta http-equiv="Content-Type" content="text/html; charset=UTF-8" /"

This is very important.

Also, Please do not prescribe any font. You have specified "Latha" which I hate. I prefer Arial Unicode MS which is inbuilt in the system. Hence, I request you to drop this preference also in the template.

As per the usability guidelines, It is not preferred to hard-core a preferred font.

Please let me know whether you agree to these two suggestions.

I enjoy all your postings. You have a nice and practical sense of humour.

Thank you

Jayaram
 



//why?why?why? //

//தமாஸ்தானே பண்றீங்க ராமநாதன்?//

என்ன பிரதிவாதி, ஜோசஃப் சார்,
உங்க ரெண்டுபேருக்கும் பின்னூட்ட காப்பிரைட் பத்தித் தெரியாதா? :P
 



ஜோசஃப்,

சும்மானாச்சும் நம்மளையே நாம குறை சொல்லிக்கறது ஒரு ஃபாஷன்க்றதால சொல்லலைங்க..

முன்னாடி எல்லாம் நம்மூருல வானிலை அறிக்கைன்னா தூர்தர்சன்ல இந்தியாவின் முக்கிய நகரங்களின் தட்பவெட்பம்னு ஒரு ஸ்லைடு காமிப்பாங்க.. அதுல தில்லி, சென்னையின் அதிகபட்ச, குறைந்தபட்ச செல்சியஸ் இருக்கும். அப்புறம் பொதிகை பரவலான நேரத்துல தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களின் வெப்பநிலை காமிக்க ஆரம்பிச்சாங்க. அதுல பாத்தீங்கன்னா பெரும்பாலான நாட்கள் உதகமண்டலம், கொடைக்கானல் குறைந்த பட்ச வெப்பநிலை வெறுமையாவே இருக்கும்.. அப்புறம் கொஞ்சம் முன்னேறி க்ராபிக்ஸ் (ஸாட்டிலைட்டிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்) காமிச்சப்போ நானும் ரொம்ப குதூகலிச்சி எப்பா எவ்ளோ முன்னேறிட்டோம்டா நாமன்னு பெருமைத்தான் பட்டுகிட்டு இருந்தேன்...

ஆனா அயல்நாடுகளுக்கு போக ஆரம்பிச்சப்புறம்தான் நம்மூரு இந்த விஷயத்துல எவ்வளவு பின் தங்கி இருக்குன்னு உணர முடிஞ்சது... இங்கே வானிலை ஆய்வுங்கறது ஒரு பெரிய துறை.. அதன் முக்கிய பிரிவு forecasting. அடுத்த 5 நாட்களுக்கு கிட்டத்தட்ட துல்லியமாக வானிலை அறிக்கை கொடுக்கிறார்கள். அதிலும் பல நாடுகளில் காலநிலை மாற்றம் என்பது தறிகெட்ட அளவில் இருக்கும். வெயில் திடீரென மாறி மழையும் அது திடீரென பனியாகவும் மாற ஆரம்பிக்கும். இது மக்கள் வாழ்வு முறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். கிழக்கு அமெரிக்காவில் குளிர் காலங்களில் காலையில் எழுந்தவுடன் நியூஸ் பார்த்துவிட்டு அதற்கு ஏற்றார்போல் அலுவலகம் கிளம்பும் அளவு வானிலை அறிக்கை வாழ்வோடு இணைந்தது. அந்தளவு அது துல்லியமாகவும் (கொஞ்சம் முன்னே பின்னே,ஆனால் சகிக்கக்கூடிய அளவில்) இருக்கும்... இது சுலபமான வேலையல்ல.. இவர்கள் காலம் காலமாக தட்பவெட்ப தகவலை சேமித்து வைத்திருக்கிறார்கள். அதனை சூப்பர் கம்ப்யூட்டர் உதவியோடும், weather modeler உதவியோடும் உண்மையிலேயே ஆய்வு செய்து தகவல் தருகிறார்கள். மேலும் இதை இவர்கள் தனியாக செய்யாமல் பல நாடுகளின் கூட்டமைப்போடு செய்கிறார்கள் என்றும் கேள்விப்படுகிறேன். அதனால்தான் நாளை மறுநாள் காற்று வீசும் திசையென
வளைந்து வளைந்து செல்லும் காற்றின் பாதையை இவரக்ளால் 80% துல்லியமாக சொல்ல முடிகிறது...

இந்தியாவிலிருந்து இதுவரை அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள் அனைத்தும் தொலைதொடர்பு மற்றும் இந்திய நில/கடல் பரப்பு + புவியியல் தகவல் ஆராய்ச்சிக்காகவே அனுப்பப்பட்டவை என்பது என் எண்ணம்... இந்நிலையில் தமிழகமே வெள்ளக்காடாக இருக்க, இங்கே மழையே பெய்யலையே எப்படி நம்மூர் தண்ணியில மூழ்கிச்சின்னு ஊரே பரிதவிச்சி இருக்க, ஏரி, குளம், அணைகளின் தண்ணீர் பிடிப்பு பகுதிகளில் எங்கே எந்தளவு மழை பெய்தால் அது ஏரி அணைகளுக்கு எவ்வளவு பாதிப்பு ஏற்படுத்தும், அதற்கேற்றார் போல் எப்படி மக்களை கையாளலாம் என முக்கிய தகவல்கள் எல்லாம் வானிலை ஆய்வை எதிர்நோக்கி இருக்க வானிலை ஆய்வு நிலைய இயக்குனர் தொலைக்காட்சியில் தோன்றி இவ்வாறு சொல்கிறார் : அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்யலாம்...

முன்னேறும் நாடான (எப்ப முன்னேறியன்னு பார்ப்போம்) நமக்கு மேற்கத்திய நாடுகள் அளவு மாடல்கள் வைத்து ஆராய்ச்சி செய்யும் வசதிக்கும் தொழில்நுட்பத்திற்கும் ஆகும் செலவை விட நிவாரண நிதிக்கு ஆகும் செலவு குறைந்ததுதானே... இன்னும் பல யுகங்களுக்கு 2000 ரூபாய் + 100 ரூ சேலை/வேட்டிக்கு உயிர்ப்பலி என்ற நியூஸ¤ம் அறிவிப்பு கொடுக்கறதுக்கு முந்தி அவசரப்பட்டு கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற, கதி என்னவென்று தெரியாத மீனவர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சர் ரிலீஸ் செய்த நிவாரண நிதி பற்றிய நியூஸ¤ம் வானிலை ஆய்வு மையத்தின் பொத்தாம் பொதுவான அறிக்கையும் பஞ்சமில்லாமல் கிடைக்கும்...
 



காசி, கிழக்கு கடற்கரையில் வானிலை அறிக்கை பார்த்துவிட்டு நம்மூர் அறிக்கை பார்த்தால் வரும் பகபக நியாயமானதுதான்..

இராமநாதன், "ஆச்சரியமல்ல" கருத்துக்கு எத்தனை பேடண்டுப்பா... உங்களோடது சேர்த்தா மூணு, இதுல நீங்க என்னமோ கோப்பிரைட் கேட்கறீங்களே..

ப்ரதிவாதி, www.weather.com அற்புதமான சைட்தான்... நான் பார்ப்பது weather.yahoo.com..அப்புறம் நீங்களும் ஜோசப்பும் கேட்ட "ஏன் ஏன் ஏன்" கோப்பிரைட் விவகாரத்துக்கு ஒரு பெரிய கதை இருக்கு... அதெல்லாம் ஒரு காலம் ;-))

ஜெயராமன் நீங்கள் சொன்னவாறே செய்திருக்கிறேன்.. இப்பொழுது சுலபமாக தெரிகிறதா என அறியத்தாருங்கள். உங்கள் ஆலோசனைக்கு நன்றி.
 



ஓ! இதுக்குத்தான் அங்கன மாயமாய் மறைஞ்சி இங்கன வெளிப்பட்டீரோ? :-)
 



//இதற்கு பின்னால் பின்னூட்டமிடுபவர்கள் நான் குறிப்பிட்டுள்ள வரிகளையோ உட்கருத்தையோ பயன்படுத்துமுன் என்னிடம் முன் அனுமதி கோரவேண்டுமென்று எச்சரிக்கிறேன்.! //

வந்துட்டாருய்யா ரேசுநாதரு... ப்ரீயா டெம்ப்ளேட் ஒண்ணு போடு வாத்யாரே :-)
 



சரி, உங்க கருத்து ??