<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

தீபாவளி + வாழ்த்துக்கள்


Photo Courtesy of the West Virginia Division of Tourism
திடீரென குடும்ப மரத்தை (family tree) ரொம்ப ஆழமாக தோண்டி நரகாசுரன் தமது சொந்தம் எனக்கண்டு மகிழ்ந்து/அதிர்ந்து போயிருக்கும் திரு. நரகா அவர்களின் கஸின் ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ¤க்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

மற்றபடி பெரியோர்கள், சான்றோர்கள், மழலையர், வலைஞர்கள், பெயர் உள்ளவர்கள், பெயர் இல்லாதவர்கள், அனானிஸ் என அனைவருக்கும் தீபாவளி, ரமலான், ஹாலோயின் வாழ்த்துக்கள். இந்த பண்டிகை காலத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்.

தியேட்டரில் பாலாபிஷேகம், தேனாபிஷேகம் ஊற்றி சூடம் கொளுத்தி தீபாவளி கொண்டாடப்போகும் தொண்டர் நண்பர்கள் சூடம் கொளுத்தும் போது உணர்ச்சி வசப்பட்டு தங்களை கொளுத்திக் கொள்ளாமலும், கட்டவுட்டில் இருந்து விழுந்து கைகால்களை உடைத்துக்கொள்ளாமலும் கொண்டாட வாழ்த்துக்கள்.

நமது ப.ம.க தொண்டர்களுக்கு இந்த தீபாவளிக்கு லீவு விடப்பட்டுள்ளது. ஆகவே பழக்க தோஷத்தில் சிறை நிரப்ப போய்விடாமல் வீட்டில் குடும்பம் குட்டியுடன் தீபாவளியை கொண்டாட வாழ்த்துக்கள். ஆனால் வழக்கம் போல கட்சி நிதியை, வீட்டு முன் எலக்ட்ரிக் போஸ்ட் நடப்படுவதை வாய் பிளந்து வேடிக்கை பார்த்த ஒரே காரணத்துக்காக பெர்மணன்ட் மின்சார மந்திரி போஸ்ட் வகிக்கும் நமது பொருளாளர் அறிவுப்பசி அண்ணாசாமி பேருக்கு அனுப்பி வைக்கவும்.

இளவட்டங்கள் இந்த தீபாவளிக்காவது "இந்த டீவியில இருந்து பேசறோம். உங்க மனசுக்கு பிடிச்சவர் பேரு சொல்லுங்க" போன்று ஏதாவது ஒரு ஐடியா பிடித்து உங்கள் மனம் கவர்ந்தவரிடம் மேட்டர் ஓப்பன் செய்து (மேலும் பல ஐடியாக்களுக்கு சுய விலாசமிட்ட தபால் தலை ஒட்டிய மின்னஞ்சல் செய்யவும். முதுகில் 10000 வாலா வெடித்தால் நான் பொறுப்பல்ல. மேட்டர் ஓகேவானால் உங்கள் குழந்தைக்கு பெயர் வைக்கும் வைபவத்துக்கு தலைமை நாம்தான்) வாழ்வில் முன்னேற வாழ்த்துக்கள்

குட்டிகள் வீட்டுக்கு வெளியே தண்ணீர் இல்லாமல் ஏதாவது இடம் இருந்தால் பட்டாசு கொளுத்தி ஜமாய்க்கவும். மற்றவர்கள் வீட்டுக்குள்ளயே உக்கார்ந்து சரித்திர நாயகர்கள் தங்கள் (ஒரே படத்தில் நடித்த) அனுபவத்தை பெனாத்துவதை ரசிக்கவும், செல்வராகவனும் தனுஷ¤ம் மாறி மாறி முதுகு சொறிவதை கண்டு இந்த நிலைமைக்கு தங்களை ஆளாக்கிய இயற்கையை திட்டாமல் அனுபவிக்கும் மனம் வாய்க்கவும் வாழ்த்துக்கள்.

அயல்நாடு வாழ் நண்பர்களுக்கு, தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல போன் போட்டால் கட் ஆகாமல் போன் கனெக்ஷன் கிடைக்க வாழ்த்துக்கள்.

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


// திரு. நரகா அவர்களின் கஸின் ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ¤க்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.//

சூப்பர்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
 



திடீரென குடும்ப மரத்தை (family tree) ரொம்ப ஆழமாக தோண்டி நரகாசுரன் தமது சொந்தம் எனக்கண்டு மகிழ்ந்து/அதிர்ந்து போயிருக்கும் திரு. நரகா அவர்களின் கஸின் ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ¤க்கு//

:-)

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
 



நாங்க ஐ-பீ'யையே தோண்டறவங்க நைனா! குடும்ப Tree எல்லாம் ஜுஜூபீ...

தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!

அப்படியே சின்னவருக்கும் நல்வா(ழ்)த்துக்கள் !!!

இரேஸுக்கும் கூட...

என்னடா இங்கே சொல்றனேன்னு கோவிக்க வாணாம். கரண்ட் இல்லே. ஆபீஸுல வேல ஜாஸ்தி (அட நம்புங்கப்பா :-)

அனைவருக்கும் பண்டிகை வாழ்த்துக்கள் !!!
 



இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
 



தீபாவளி வாழ்த்துக்கள்.
 



கஸின் பிரதர் எப்படி டில்லி குண்டுவெடிப்பெல்லாம் நிறுத்துறதுன்னு ஆராய்ச்சி செய்து போட்ட பதிவில எழுதியது . நீக்கப்பட்டதன் காரணமாக இங்கு போடப்படுகிறது. பொறுத்தமில்லை என்றால் நீக்கிவிடலாம்.

ஒவ்வொரு ஜாதி வெறியனுக்கும், இன வெறியனுக்கும், மொழி வெறியனுக்கும், மத வெறியனுக்கும் தனித்தனி நாடு கொடுத்துவிட்டால் தீர்ந்தது பிரச்னை.
சில சமயங்களில் வெளிநாட்டு அரசாங்கங்கள் கூட இப்படி பல ஜாதி வெறியன்களுக்கும், இன வெறியன்களுக்கும் மொழி வெறியன்களுக்கும் தார்மீக ஆதரவு தெரிவிப்பார்கள். உதாரணமாக, பஞ்சாபியர்களுக்காகவும் காஷ்மீரிகளுக்காகவும் பாகிஸ்தான். சிக்கிம் மக்களுக்காக சீனா, அஸ்ஸாம் மக்களுக்காக பங்களாதேஷ், நாகாலாந்து மக்களுக்காக அமெரிக்கா போன்ற நாடுகள் தார்மீக ஆதரவு அளித்து அங்கங்கு வெடிகுண்டு வெடிக்கும் மனித உரிமைகளுக்காக போராடினால், இந்தியா முன்வந்து தன்னைத்தானே உடைத்து தர வேண்டும். தற்போதைக்கு வன்னிய ஜாதி நாட்டுக்கு யாரேனும் அப்படி தார்மீக ஆதரவு அளிக்கிறார்களா என்று தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள் வீர வன்னியரே.
 



அவதாரம் viji, இராமநாதன், --L-L-D-a-s-u---, Kusumban, துளசி கோபால், APDIPODU, Anonymous :: நன்றி + தீபாவளி வாழ்த்துக்கள். பொதுவா தீபாவளி அன்னிக்கி வீட்டுக்கு வரவங்களுக்கு 10 பவுன் தங்க சங்கிலி போடறது வழக்கம். நீங்க மின் வீட்டுக்கு வந்திருக்கறதால ஒரு 10 MB அட்டாச்மெண்ட் அனுப்பி வைக்கவா?

***

இரேஸுக்கும் கூட...

ஆரு இது குஷும்பர்?
 



தீபாவளி, ரமலான் வாழ்த்துக்கள்
 



நன்றி மதுமிதா. உங்களுக்கு இவ்வருட தீபாவளி நினைத்த மாதிரியே நடந்ததா? உங்கள் தீபாவளி கொண்டாட்டங்களை பற்றி கொஞ்சம் சொல்லுங்க்ளேன்
 



This comment has been removed by a blog administrator.
 



ஒரு அழைப்பு 'மயில்' பறக்க விட்டேன் தலைவரே...

வந்துச்சான்னு தனி மடல் அனுப்புங்க.
 



Funny!

ரமலான் வாழ்த்து சொல்லும் "மாற்று மத அன்பர்"களுக்காக - தீபாவளி நல்வாழ்த்துக்கள். (nov1 )
 



இராமநாதன், நம்மகிட்ட இதுவரை கூகிள் இல்லை. இறக்கிகிட்டு மூஞ்சுறு அனுப்பறேன் (எத்தனை காலம்தான் மயில் அனுப்பிகிட்டே இருப்பது?)

***

நம்பி, வாழ்த்துக்களில் என்ன தவறு... தமிழ்ப்படைப்பாளிகள் கழகம் பொங்குதமிழ் 2005 அழைப்பிதழில் கூட வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளதே

***

அனானி, அவங்கதான் மத்தவங்களுக்கு சொல்லக்கூடாதுன்னு இருக்கே தவிர, மத்தவங்க அவங்களுக்கு வாழ்த்து சொல்றது ஹராம்னு சொல்லலியே...
 



அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

ஒருவருடைய பண்டிகை நாளில் அவருக்கு வாழ்த்துச் சொல்வதே மனிதப் பண்பு. அதில் ஐயமேதும் இல்லை.
 



மிக சுவாரஸ்யமான முறையில் வாழ்த்து சொன்ன உங்களுக்கும் , உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் முகமூடி.. !
 



நம்பி, என்ன ஏதுன்னு கொஞ்சம் விசாரிச்சு சொல்லுங்க... "க்"கன்னா மேட்டர்னா கொஞ்சம் சீரியஸாத்தான் பாக்கணும்

***

நன்றி ராகவன். இந்த வருடம் உங்கள் தீபாவளி எப்படி இருந்தது...

***

நன்றி வீ.எம்... உங்க தீபாவளி அனுபவத்த (மழை காரணமா சற்று தாமதமாகவே போட்டாலும் பரவாயில்ல :P ) பதிவா போடுங்க...
 



இரேஸ்நாதரைத் த்ரியாதா உங்களுக்கு?

отбросы :-)
 



test comment.

|8860336|
 



முகமூடி
என்ன ஆச்சு

நலமா இருக்கீங்க தானே

ஆளையே கணவில்லை.
 



முகமூடி

என்ன ஆச்சு
நலமா இருக்கீங்க தானே

ஆளையே காணவில்லை
 



சரி, உங்க கருத்து ??