<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

கருத்து சுதந்திரம்


அப்பாவி: கருத்து சுதந்திரம்னா என்னண்ணே...

அண்ணாசாமி: அதுவா... எனக்கு பிடிச்ச கருத்த சொல்றதுக்கு உனக்கு சுதந்திரம் உண்டுன்னு அர்த்தம்

***

இது "அறிவுப்பசி அண்ணாசாமி"ன்னு சைடுல ரொம்ப நாளா இருக்கறதுதான். நான் சமீபத்தில் பார்த்த படங்களுக்கான Fahrenheit 9/11 மற்றும் American History X ஆகிய படங்களின் விமர்சனம் தாங்கி வரப்போகும் "சகிப்புத்தன்மை" பதிவுக்கு ஒரு முன்னோட்டமா இருக்கட்டுமேன்னு இங்க தனியா... (படங்களின் பாதிப்பாக தமிழர் மற்றும் தமிழ் சமுதாயத்தின் சகிப்புத்தன்மை குறித்த என் கண்ணோட்டத்தையும் - தமிழா உனக்கு இது தேவையா? - அதில் எழுதறதால அந்த பதிவுக்கு "சகிப்புத்தன்மை'ன்னு பேரு)

சினிமா விமர்சன பதிவுக்கு இது வரை Trailer பதிவு, தமிழ் கூறும் நல்லுலகத்தில் யாரும் எழுதியதுண்டா? என்பதை இந்த நேரத்திலே கேட்டுக்கொள்ள... விரும்புகிறேன் (சினேகா நடித்ததல்ல)

இதுக்கும் எதேச்சையா இந்த காலகட்டத்துல நடக்குற தமிழ்மண
சென்சார் போர்டு (ஒன் மேன் போர்டு என படிக்கவும்) நிகழ்வுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதான் சாக்குன்னு இது எதிர்மறையா இருக்கு, இதயும் தூக்கணும்னு யாரும் ஐடியா கொடுத்திராதீங்கப்பு... எதா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம், சரியா...

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


சகிப்புத்தன்மை ஜாஸ்திஎன்பதால்-
"சகிப்புத்தன்மை" ரெடியா???
 



முகமூடி அண்ணாச்சி!

உங்களையும் சாய்ச்சுபுட்டனுங்க அண்ணாச்சி.

இன்னைக்கி தினமலரில் நீங்க தான் இன்றைய பதிவாளர்
 



அட கடவுளே !!
தினமூடிக்கு வந்த சோதனைய பார்த்தீங்களா ..
வாழ்த்துக்கள் அண்ணாச்சி ..
பட்டையை கிளப்புங்க !
 



முகமூடி

குசும்பன் பதிவில் இட்ட பின்னூட்டத்தை இங்கும் இடுகிறேன். கோவித்துக் கொள்ள மாட்டீர்கள் என நினைக்கிறேன். சர்வாதிகாரத்துக்கு எதிராரன குரல் தமிழ்க் கோமண வாசகர்களுக்கும் தெரிய வேண்டும் என்பதால் தமிழ்க் கோமணத்தின் ஸ்டார் வலைப்பதிவான, கோடிக்கணக்காண தமிழர்களின் ஆதரவைப் பெற்ற உங்கள் பதிவிலும் இடுகிறேன்.

நன்றி

அன்புள்ள குசும்பன்

உங்களது வெகு நாளைய வாசகன். உங்களது புத்தி கூர்மையான அங்கதம் ரசிக்கத் தகுந்தவை பாராட்டுக்குரியவை. சுய அறிவுள்ள எவரும், புத்திசுவாதீனமுள்ள யாரும் இதை ஒரு சட்டயராக மட்டுமே எடுத்துக் கொள்வார்கள். நீங்கள் காசி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தை கிண்டல் செய்து எழுதிய கிண்டலே காசியின் இந்த முடிவுக்குக் காரணம் என்று தெரிகிறது. நீங்கள் எழுதிய கிண்டலுடன் நான் முற்றிலும் உடன் படுகிறேன். அவர் தன்னை தமிழில் எழுதும் அனைத்து ப்ளாகர்கள் சார்ப்பாக அறிமுகப் படுத்திக் கொண்டது ஃப்ராடுத்தனமான ஒரு காரியமாகும். யார் இவருக்கு அந்த தகுதியைக் கொடுத்தது? இங்கு பதிந்து கொள்ளாத தமிழ் வலைப்பதிவர்கள் இருக்கலாம் அல்லவா? அப்படியே இங்கு பதிந்தவர்கள் எல்லோரும் இவருடன் உடன் படுகிறவர்களா? அல்லது இங்கு பதிந்துள்ளவர்கள் எல்லோருக்கும் இவர் தலைவரா? யார் இவர்? என்ன தகுதி இருக்கிறது? ரவுடிகளையும், இந்திய இறையாண்மைக்கு எதிராக எழுதும் தேசத்துரோகிகளையும், தீவிரவாதத்தை ஆதரிக்கும் சக்திகளையும், ஜாதி துவேஷத்தைப் பரப்பும் சமூக விரோதிகளையும், ஜட்டிக்குள் கையை விட்டுப் பாரு என்று எழுதுபவனையும், ஆபாச பதிவுகளைப் போடுபவனையும் துணைக்கு வைத்துக் கொண்டு இவர் ஜனாதிபதிக்கு எழுதுவாராம் அதைக் கிண்டல் செய்தால் நீக்குவாராம், என்னவொரு அயோக்கியத்தனம்? காசியை ஒரு ஜென்டில் மேன் என்று பலரும் நினைத்து அமைதி காக்கின்றனர். அவர் எடுத்த முடிவு சகிப்புத் தன்மையில்லாததும், அநியாயமானதும், சர்வாதிகாரமானதும் ஆகும். அது நிச்சயமாக ஒரு ஜென்டில்மானின் செயல் அல்ல. காழ்ப்புணர்வுடன் கூடிய ஒரு செயல். அவரது உண்மையான முகத்தை இந்த நடவடிக்கைத் துகிலுரித்துக் காட்டி விட்டது.

உங்கள் பதிவு தமிழ்க் கோமணத்தில் இல்லையென்றாலும் எனது ஃபேவரைட்டில் வைத்துத் தொடர்ந்து படிப்பேன், துணிவுடன் எழுதுங்கள்.
 



சித்தன். கொஞ்சம் பொறுங்க... ட்ரைலர் எல்லாம் விட்டு மெதுவாத்தான் ரிலீஸ் ஆகும்.

***

நால்ரோடு, நன்றிங்க. எனக்கு அது ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி. மேல்விபரம் இங்க பாருங்க

***

சின்னவன், நன்றி. நம்ம தினமூடி பத்திரிக்கை பத்தி அவங்களுக்கு தெரியுமான்னு தெரியல. தொழில் போட்டியெல்லாம் பார்க்காம பாரபட்சம் காட்டாம இருக்கறத நினைச்ச சந்தோஷமா இருக்கு

***

அனானி, // ஃபேவரைட்டில் வைத்துத் தொடர்ந்து படிப்பேன் // குசும்பன் என் ஃபேவரைட்டிலும் இருக்கும் ஒருவர்
 



verygood web and fentastic article
thank u
vedarethinam.r
 



எங்கேப்பா போனீங்க எல்லாரும்? இப்ப வாங்களேன் எனக்கு நேரம் இருக்கு, உங்களுக்கு உப்பு புளி போட்டு விளக்குறேன்!
 



சரி, உங்க கருத்து ??