<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

பிஞ்சின் மரணம்


21 வயது holly ashcraft செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு குறைந்த பட்ச 25 வருட சிறை முதல் அதிக பட்ச ஆயுள் தண்டனை வரை கிடைக்கும். அவர் செய்த குற்றம் :: புதிதாய் பிறந்த குழந்தையை அட்டை பெட்டியில் வைத்து குப்பை தொட்டியில் போட்டது.


நேற்று குழந்தை கிடந்த குப்பை தொட்டிக்கு அருகில் இருந்த டிபார்மெண்ட்ல் கடையில் இருந்து அவசர உதவிக்கான 911 அழைப்பு வந்ததை அடுத்து விரைந்த பாராமெடிக்ஸ் குழு குழந்தை ஏற்கனவே இறந்து இருந்ததை கண்டுபிடித்தனர். தொப்புள் கொடி கூட சரியாக பிரிந்திராத பச்சை குழந்தை. அந்த தொலைபேசி அழைப்பு தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்பட, அதை கேட்ட ஒருவர் அந்த குரலின் சொந்தக்காரரை அடையாளம் கண்டு அவரை பேசி சரிகட்டி போலீஸிடம் பேச வைக்க அந்த அனானியின் துணையால் இன்று ஆஷ்க்ராஃப்ட் கைது செய்யப்பட்டார். அவர் USC - தென் கலிபோர்னியா பல்கலைக்கழக - மாணவி.

இங்கே குழந்தையை வைத்துக்கொள்ள விரும்பாவிட்டால் அதை அருகில் உள்ள மருத்துவமனை அல்லது தீயணைப்பு நிலையம் ஆகியவற்றில் கொடுத்துவிடலாம். எந்த கேள்வியும் கேட்க மாட்டார்கள். ஏன் ஆஷ்க்ராஃப்ட் குழந்தையை அட்டை பெட்டியில் வைத்து குப்பை தொட்டியில் போட்டார் என்று இதுவரை தெரியவில்லை. இப்போது child abuse, murder ஆகிய பிரிவின் கீழ் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 25 வருட சிறை முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்கும்.

****

இது போன்ற நிகழ்வுகள் அமெரிக்காவில் அபூர்வம். மைக்கேல் ஜாக்ஸன் போல் பணபலம் இந்த பெண்ணுக்கு இருந்தால் ஒரு வேளை அட்டர்னிகள் அவளுக்கு விடுதலை வாங்கித்தராலம் அல்லது குறைந்த பட்ச தண்டனை வாங்கித்தரலாம். அப்படி இல்லாத பட்சத்தில் சட்ட இயந்திரம் வேக வேகமாக செயல்பட்டு எப்படியாவது அவளுக்கு அதிக பட்ச தண்டனை வாங்கித்தர போராடும் (குழந்தை கொடுமைப்படுத்தப்பட்டதற்கான முகாந்திரம் இல்லையென்று சொன்னார்கள். இருப்பினும் child abuse பிரிவிலும் அவள் வழக்கு வருவதாக சேனல் 11 மதியம் சொன்னது)

இந்த விஷயம் பார்த்த நண்பர்கள் குழாம் ஆத்திரமடைந்து அவளை சபித்தது... பச்சை குழந்தையை குப்பையில் எறிந்த அவளை தூக்கில் போட்டாலும் சரி என்று உணர்ச்சிவசப்பட்டது. என்ன நடந்தது என்ற விசாரணை நடக்கும் முன்பே சமூகத்தால் அவளுக்கு தண்டனை கொடுக்கப்படுகிறதே, அவளை பார்த்தால் பரிதாபம்தான் பிறக்கிறது என்ற என் கருத்தில் அவர்களின் கோபம் அதிகமானது. நம்மூரில் நடக்கும் பெண் சிசுக்கொலைகள் ஞாபகப்படுத்தப்பட்டது.

****

"குழந்தை வளர்க்க துப்பில்லாதவ எதுக்கு பெத்துக்கணும்" இதை கேட்பவர்கள் பெண் சிசுக்கொலையின் பிண்ணனியில் இருக்கும் சமூக அவலத்தை உணர்வதற்கான எந்த வாய்ப்பும் கிடைக்காதவர்களாக இருக்கலாம். 12 பவுன் நகை, 10 ஆயிரம் ரொக்கம் என்ற விஷயத்திற்காக இரண்டு ஆண்டுகள் தன் சொந்தக்கார பெண்ணின் திருமணம் தள்ளிப்போனதாக காய்கறிகாரம்மா சொன்னார். அவர் பேச்சினூடாக அவர் "மேல்தட்டு ஏழைகள்" லிஸ்டில் வருபவர் என்பது புரிந்தது. கீழ்த்தட்டு ஏழைகள் என்போர் 5 பவுனுக்கும் குறைவான நகைகள், 5 ஆயிரம் நகை என்ற அளவில் எல்லாம் பாதிக்கப்படுவர் என்பது புரிந்தது. அதை விட குறைந்த பணத்துக்காக "வாழா வெட்டி" பட்டம் கொடுக்கப்பட்ட பெண்களை பற்றியும் கேள்விப்பட்டேன்.

"சரி குழந்தையை கலைத்து விடுவதுதானே"... அதற்கான வசதி வாய்ப்பு கிடையாது. அல்லது ஒரு கட்டத்திற்கு மேல் அது முடியாமல் போகலாம். மேலும் கருக்கலைப்பு அரசாங்கத்தால் த்டை செய்யப்பட்ட விஷயம். மட்டுமல்ல, அது குற்றம் / பாவம் என்பதாகவும் இருக்கிறது.

"அப்ப தொட்டில் குழந்தை திட்டத்தில் விட்டுவிடுவதுதானே?"... நிழலுக்கும் நிஜத்துக்கும் வித்தியாசம் தெரியாத பெரும்பான்மையினர் இருக்கும் இடத்தில் திரைப்படங்கள் ஆதரவற்ற கேரக்டர்களுக்கு தரும் அர்த்தங்ளும் பயம்/வெறுப்பு தருபவையாகவே இருக்கிறது. பெரும்பாலான படங்களில் "அனாதைகள்" ரவுடிகளாகவும் பொறுக்கிகளாகவுமே சித்தரிக்கப்படுகிறார்கள். ஆதரவற்ற ஒரு குழந்தை ஒரு காப்பகத்தில் கவனிக்கப்பட்டு, ஒழுங்காக கல்வி கற்று ஒரு வேலையில் சேர்ந்து நல்ல முறையில் சமூகத்தில் வாழ்வதாக எந்த திரைப்படமாவது வந்திருக்கிறதா?

கைவிடப்படும் குழந்தைகளை அரசாங்கம் வளர்க்கிறது என்பது வரை சரி. ஆனால் இந்த திட்டம் எல்லா இடங்களுக்கும் பரவியிருக்கிறதா? ஏன் ஒரிரு இடங்களில் மட்டும் தொட்டில் இருக்கிறது? ஏன் எல்லா போலீஸ் நிலையங்கள் அல்லது தீயணைப்பு நிலையங்கள், சமூக நல மையங்கள் முதலிய இடங்களில் தொட்டில்களை வைக்க கூடாது? பெரும்பாலானவர்கள் அரசாங்கத்திடம் விடுவதை காட்டிலும் கொல்வதற்கு ஏன் முன்னுரிமை கொடுக்கிறார்கள்? நாம் பெத்த குழந்தை அனாதையாக கஷ்டப்பட்டு வளர்வதை காட்டிலும் ஒரேடியாக போய் சேருவதே மேல் என்று நினைக்கிறார்களா? அந்த குழந்தைகள் வளர்ந்த பின் அரசாங்கம் என்ன செய்கிறது? அக்குழந்தைகளின் கல்யாணம் முதலிய எதிர்கால திட்டங்கள் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? எத்தனை குழந்தைகள் வளர்ப்பு பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுகின்றன? அப்படி ஒப்படைக்கப்படும் குழந்தைகள் நன்றாக பராமரிக்கப்படுகிறார்களா என்று அரசு கவனிக்கிறதா? எனபன போன்ற கேள்விகளுக்கு அரசு விளம்பரங்கள் மூலம் விடை சொன்னால் ஒருவேளை மாற்றம் வருமோ?

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


////குஷ்பு சொன்னதையே நானும் பின்மொழிகிறேன். பெண்கள் தங்கள் உடல் இச்சையை தணித்துக் கொள்ளட்டும்.//

???

//ஆனால் மிகுந்த தற்பாதுகாப்புடன் செயல்படவேண்டும்.. கருவுறக் கூடாது.//

???


//கருகலைப்பு உடலுக்கு கெடுதல். பால்வினை நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.//

???


//ஆணுறை உபயோகத்தை வலியுறுத்த வேண்டும். ரொம்ப முக்கியம், பரம ரகசியமாகச் செயல்படவேண்டும்.//

???

//மாட்டிக் கொள்ளக் கூடாது. என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது.//

???

//ஒருவன் தன்னை கெடுத்துவிட்டால் அவனையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கொள்கையிலிருந்து விடுபடவேண்டும்.//

???

//அதெல்லாம் சினிமாவுக்குத்தான் ஒத்து வரும்.//

???

//ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.//

???

//ஆனால் ஒன்று. எந்த செயலுக்கும் எதிர்வினை வரும். ஆகவே அதற்கெல்லாம் துணிந்தவர்கள்தான் இதையெல்லாம் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு? fire-தான்.//

???

dondu bloggai padikkavum. Because he encourage sex but asked you to escape from marriage!
 



பிறந்த குழந்தையை கொல்வதைக் காட்டிலும் பாதுகாப்பன உடலுரவு முறையை கையாளுவது மிகவும் சுலபம்.
 



நல்ல பதிவு தல..ஆழமான பதிவு...

//ஒழுங்காக கல்வி கற்று ஒரு வேலையில் சேர்ந்து நல்ல முறையில் சமூகத்தில் வாழ்வதாக எந்த திரைப்படமாவது வந்திருக்கிறதா//

ஆனா என்ன இப்படி கேட்டுடீன்ங்க?? அப்படியெல்லாம் காமிச்சு அவங்க பணத்தை வீணடிக்க சினிமா காரவங்க என்ன கோமாளிப்பசங்களா? வெவரமானவங்க சாரே...

--
விட்டா ஆள்தோட்ட பூபதி இதுக்கு ஒரு கோணார் நோட்ஸ் போடுவாரு போல இருக்கே :)
 



USC இல் இருந்துக்கிட்டு Trojans பத்தி தெரியவில்லை என்பது வியப்பளிக்கிறது !
 



//ஒழுங்காக கல்வி கற்று ஒரு வேலையில் சேர்ந்து நல்ல முறையில் சமூகத்தில் வாழ்வதாக எந்த திரைப்படமாவது வந்திருக்கிறதா
//

'ஆசை' அஜீத், சே தேடி தேடி இந்த ஒன்னுதான்பா கிடைத்தது.
 



children do not come from us. they come through us. நாம் பெத்த குழந்தை அனாதையாக கஷ்டப்பட்டு வளர்வதை காட்டிலும் ஒரேடியாக போய் சேருவதே மேல் என்று நினைக்கிறார்களா? - indha mudivu edukkum urimai thanakku ulladhu endru ninaippavargal, avadhu agattum -- idhu en kuzhandhai naan eppadu pattavadhu valarkkiren endru en poruppedukka anjugirargal. 1000 karanangal irundhalum sisu kolai oru miga periya pavam.
 



Ethir Neechaal Nagesh
 



arasangathin vazhiyaga illamal avargale oru nalla idam parthu thaththu kodukalame!
 



http://kasi.thamizmanam.com/?item=204
 



சரி, உங்க கருத்து ??