<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

இதெல்லாம் சுயநினைவோடதான் செய்றீங்களா...



காமராஜர் பிறந்த நாளையொட்டி அண்ணா சாலையில் உள்ள அவரது சிலை அருகில் 103 பானைகளில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். நடிகை மனோரமா இதில் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

நன்றி : மாலைமலர்











š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


பார்த்துக்கிட்டே இருங்க , இன்னும் பத்துப் பதினைஞ்சு வருசத்துலே கிடா வெட்டி, மொட்டை அடிச்சு புள்ளைங்களுக்குக் காது குத்துவாங்க.
 



தலையில தேங்கா உடைக்கறத வுட்டுட்டீங்களே... மாலைமலர் சுட்டியில அந்த படமும் இருக்கு... என்னமோ போங்க, பகுத்தறிவு முத்தி போயி எங்கியோ போயிடுச்சி... என்னத்த சொல்ல...
 



அப்பிடிப் போட்டுத் தாக்குங்க., இப்பிடி ஏதாவது புதுமையாச் செஞ்சாத்தான் காங்கிரஸ்காரங்களே காமராஜ் அவர்களை நினைப்பாங்கன்னு பொங்கலைப் போட்டுட்டாங்க போல. இதுல என்ன தப்பு?., கட்டவுட்டு., 1000 காருன்னு கலக்கி பொது மக்களுக்கு இடைஞ்சல் பண்ணாம., சிலைக்கு கீழ ஓரமா பொங்கி எத்தனையோ பேருக்கு அன்று உணவளித்து இருப்பார்கள். நல்லதுதானே?.
 



அப்பிடிப் போட்டுத் தாக்குங்க., இப்பிடி ஏதாவது புதுமையாச் செஞ்சாத்தான் காங்கிரஸ்காரங்களே காமராஜ் அவர்களை நினைப்பாங்கன்னு பொங்கலைப் போட்டுட்டாங்க போல. இதுல என்ன தப்பு?., கட்டவுட்டு., 1000 காருன்னு கலக்கி பொது மக்களுக்கு இடைஞ்சல் பண்ணாம., சிலைக்கு கீழ ஓரமா பொங்கி எத்தனையோ பேருக்கு அன்று உணவளித்து இருப்பார்கள். நல்லதுதானே?.
 



இருக்குதா இல்லையா என்று தெரியாத சாமிகளுக்கெல்லாம் படையல் வைத்து மரியாதை செய்யும் போது கடவுள் மாதிரி வாழ்ந்து இன்று தமிழ்நாட்டில் பல விவசாயிகள் மரியாதையுடன் வாழ காரணமான ஒரு மனிதனுக்கு இம்மாதிரி செய்வது தவறில்லை.
பெரும்பாலான மக்கள் காமராசரை மறந்துவிட்டனர். இவர்களாவது ஞாபகம் வைத்திருக்கிறார்களே என்று சந்தோஷப்படவேண்டும்.

நாம் இன்று இணையத்தில் எழுதி முற்போக்குவாதியாக காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் சில சார்பு நிலையை எடுத்துகொண்டு அதையே கண்மூடித்தனாமாக ஆதரிக்கும் ஒரு காட்டானாகதான் இருக்கிறோம். இந்நிலைக்கும் ஒரு அடிமட்டத்தொண்டன் நிலைக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்.
அவன் அதை சிந்திக்காமல் செய்கிறான். நாம் சிந்தனைவாதிகள் என்று கூறிக்கொண்டே செய்கிறோம்.
 



"நாம் இன்று இணையத்தில் எழுதி முற்போக்குவாதியாக காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் சில சார்பு நிலையை எடுத்துகொண்டு அதையே கண்மூடித்தனாமாக ஆதரிக்கும் ஒரு காட்டானாகதான் இருக்கிறோம்"

கொஞ்சம் introspection பண்ண வைத்த சொற்கள். என்னையே நான் திரும்பிப் பார்த்துக் கொள்கிறேன். நிஜமான வார்த்தைகள். என் சார்பு நிலைகள் பற்றி நினைத்துகொள்கிறேன். சின்ன சவுக்கடி மாதிரி இருந்தது.
 



// பல விவசாயிகள் மரியாதையுடன் வாழ காரணமான ஒரு மனிதனுக்கு இம்மாதிரி செய்வது தவறில்லை //
வெற்ற்த்திருமலை... நீர் கடவுள் எதிர்ப்பு கொள்கை கொண்டவரென்றோ நாங்கள் நினைத்திருந்தோம்... காமராஜரை கடவுளாக்குவதை தப்பில்லை என்று சொல்லுவது புதிய செக்கூலரிஸம் கோட்பாட்டின்படியா...

காமராஜரை சாதனைகள் எனக்கு புரியும் முன்பே அவர் மறைந்துவிட்டார்.... ஆனாலும் என்னை பொருத்த வரை இன்று வரை தமிழகத்தின் சிறந்த முதல்வர் காமராஜர்தான்... மாற்றுக்கருத்து கொண்ட 'அண்ணாவை' தெய்வமாக கருதுபவர்கள் பார்வையில், இது காமராஜர் சார்பு நிலையை எடுத்து அதையே கண்மூடித்தனாமாக ஆதரிக்கும் ஒரு காட்டானானின் கருத்தாக பார்க்கப்பட்டாலும் அதனால் ஒன்றும் பாதிப்பில்லை..ஆனால் எக்காரணம் கொண்டும் காமராஜரை கடவுளாக்க முடியாது. இருக்கும் கடவுள்கள் போதும்... ஒருவரால் ஒரு கூட்டம் பயனடைந்தால் அந்த ஒருவரை கடவுளாக்கலாம் என்றால் குஷ்புவால் பயனடைந்த ரசிகர்கள் கூட்டம் அவருக்கு கோயில் கட்டுவதை மட்டும் ஏன் கேலியாக பார்க்க வேண்டும்...

பொங்கல் வைப்பதில் ஆரம்பிக்கும் இந்த பழக்கம், இன்னும் 100 ஆண்டுகளுக்குள் காமராஜரின் வீர தீர பராக்கிரமங்களை கதையாக 'சொல்லுவதில்' ஆரம்பித்து ஊர் தெய்வம் காமராஜர் கடவுளுக்கு ஜெயந்தி விழா - பொங்கல் வைத்து வழிபாடு, கூழ் ஊத்துதல், தெருக்கூத்து, ரிகார்டு டான்ஸ் என்ற அளவில் விமரிசையாக நடைபெறும்... அப்படியே வண்டி கட்டி காது குத்துக்கு கருணாநிதி கோயில், மொட்டை அடிக்க ஜெயலலிதா கோயில், அலகு குத்த சிம்ரன் கோயில், கிடா விருந்துக்கு தனுஷ் கோயில்....
 



//கிடா விருந்துக்கு தனுஷ் கோயில்.... //

தமிழணங்கின் தாங்கிகள் பராக் பராக்!!!

ஏதோ என்னாலான உதவி பின்னூட்டம் பெருக :-)
 



// ஆச்சி காங்கிரசுல நுழையுறதுக்கு போடுற முதல் படியாக்கும் இது // இது என்ன சிறுபுள்ளதனமால்ல இருக்கு... காங்கிரசுல நுழையனும்னா வாசனுக்கோ, அம்பிகா சோனிக்கோல்ல "பொங்க" வக்கணும்னு நெனச்சிகிட்டு இருக்கோம்... காங்கிரசுக்கும் காமராசருக்கும் என்ன சம்பந்தம்..

உங்க பேரு என்னா... புலியஞ்சுவனத்தாரா... புலிக்கு ஏன் நீங்க பயப்படணும்... நீங்க ஈ.பி.ஆர்.எல்.எப்.பா
 



தலைவர்கள், அவரவர்களின் பண்புகள், சாதனைகள், குணங்கள் - ஆகியவற்றிர்க்கு ஏற்றவாறு கட்டயாம் கவுரவிக்கப்பட வேண்டும். அது ஒரு சமுதாய கடமை. அவ்வாறு கவுரவிக்கப்பட்டால் அதே போன்ற தலைவர்கள் வெளிவர அடுத்த தலைமுறையை ஊக்கப்படுத்தும்.
நான் அறிந்த வரை காமராஜ் உட்ச கட்ட மரியாதைக்குரியவர், சும்மா "இன்று வரை தமிழகத்தின் சிறந்த முதல்வர்" -ன்னு just like that சொல்லிட்டு, "கருணாநிதி கோயில், ஜெயலலிதா கோயில், குஸ்பு கோயில்ன்னு" கம்பேர் பண்ணி மேட்டர முடிக்கிறது ஒன்றுக்கும் சரியாகாது. படித்த சமுதாயத்தினர் கொடுக்க வேண்டிய மரியாதையை சரியான வழியில் கொடுத்த வழிகாட்டா விட்டால், மற்றவர்கள் தங்களுக்கு தெரிந்த வழியில் மரியாதை செய்யத் தொடங்குவர். உங்களுக்கு தெரியாவிட்டால் ஒரு செய்தி, காமராஜருக்கு already ஒரு கோயில் கட்டியாச்சு (திருவண்ணாமலை பக்கம் ஒரு கிராமம்).
/*
காமராஜரை சாதனைகள் எனக்கு புரியும் முன்பே அவர் மறைந்துவிட்டார்....
*/
அதனாலென்ன ஒரு புக் வாங்கி படுச்சிட்டா தெரிய போது, இல்ல நம்மலொட "காமராஜ் 101" பதிவுகள வாசிங்க ...

-டண்டணக்கா
 



ஏங்க புலியஞ்சுவனத்தார்... நீங்க புலியஞ்சு(ம்)வனத்தாரா அல்லது புவி அஞ்சுவர்ணத்தாரா... இப்படி போட்டு கொயப்புறீங்களே....

அப்புறம் நீங்க ஈ.பி.ஆர்.எல்.எப்பான்னு கேட்டது ஒரு தமாசுக்கு... நீங்க டெலோவாவே இருந்துட்டு போங்க...

மைல் = 'கல்' அப்படீன்னு சொல்லலாம்... அதாவது ஒரு கல் தொலைவுன்னு கேள்விப்பட்டிருப்பீங்களே...

கிலோ மீட்டர் எப்படி சொல்றது... கிலோவுக்கு பழந்தமிழ்ச்சொல் "வீசை"

அதனால கிலோ மீட்டர் = "வீசைக்கல்"

(யார் தமிழ கேள்வி கேக்கறீங்க... இது மாதிரி பல அய்ட்டம் நம்ம கைவசம் இருக்கு சொல்லிட்டேன்)
 



சரி, உங்க கருத்து ??