<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

இரண்டு பதிவுகள். தொடர்பு இருக்கா இல்லையா தெரியாது.


டோண்டு பதிவுக்கும் இட்லி பதிவுக்கும் தொடர்பு இருக்கா இல்லையான்னு ஆராய்ச்சி செஞ்சி டாக்டரேட் வாங்கலாம்னு சென்னை பல்கலைக்கழகத்திலே சொம்மா ஒரு அப்ளிகேஷன் போட்டு வச்சேன்.... ஒடனே தமிழ்நாட்டுக்கே தெரிஞ்சு போச்சிது... வுட்டாங்கோ பாரு அறிக்கை:


கருணாநிதி : கழகக்கண்மணிகளாம் டோண்டுவும் இட்லியும் தூங்கிக்கிடந்த தமிழுள்ளங்களை சுனாமி பேரலைகளை போல் சுழற்றி விட்டதை கண்டு உலகத்தமிழர்கள் எல்லாம் உவகை கொண்டார்கள்... இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஆக்கமும் ஊக்கமும் கொண்ட திராவிட தம்பிகள் காட்டாட்சி நடத்தும் மடநாரீமணியின் மாயையை வெளிச்சம் போடும் நாள் எப்போ என்பதே மக்கள் கேட்கும் கேள்வி (எனக்கு மட்டும் தோனற கேள்விய மக்கள் கேக்கறாங்கன்னு இன்னும் எவ்வளவு நாள் ஜல்லியடிக்கணுமோ தெரியல... தொண்டன் - தலைவர நிறுத்த சொல்லுங்கப்பா... நாலு கூட்டத்துல பேசற பேச்ச வச்சி மார்கெட் போன சந்திரசேகர ஈரோவா போட்டு இவரு பாட்டுக்கு பொன்னம்மானு படம் ரிலீஸ் பண்ணிடுவாரு... தியேட்டர் காரனுங்கள கால பிடிச்சி, எல்லா டிக்கட்டையும் நம்மளே வாங்கி, யாருக்கும் தெரியாம அத குப்பையாக்கின்னு நம்ம பொழப்பு நாறி போகுது...)

வைகோ : (மைக்கை பிடித்தவுடன் அழுகிறார்... பின் கண்ணை துடைத்துக்கொண்டு) இந்த கூட்டத்திற்கு தாமதமாக வந்ததற்கு ஒரு காரணம் உண்டு (துரைமுருகன் - அழுவாச்சில வேற கொஞ்ச நேரம் வேஸ்ட். இந்த ஆளு இப்படி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிடரான்... அடுத்த கூட்டத்துல அத பாலோ பண்ணி நாம அழறதுகுல்ல தாவு தீர்ந்து போயிடுது...) டோண்டு / இட்லி இருவருக்கும் சிறந்த தமிழ் குடிமக்கள் விருது வழங்க வேண்டும் என்று அறிவாளியான பிரதமரையும் அன்னை சோனியாவையும் சந்தத்து மனு கொடுத்து 4 மணி நேரம் பேசிக்கொண்டு இருந்தேன். பிரதமர் தலைப்பாகை மூடியிருந்தாலும் காது கொடுத்து கேட்டதாக சொன்னார்... பின்பு மெரீனாவில் நடக்கும் இந்த விழாவிற்காக உடனே கிளம்பிவிட்டேன்... மத்திய பிரதேசம் போபால் வந்த போதுதான் தம்பிகள் சொன்னார்கள், இப்படியே நடந்து போனால் ஸ்டாலின் மகன் முதலமைச்சர் விழாவிற்குதான் போக முடியுமென்று... உடனே ம.பி போலீசை விட்டு துரத்த சொல்லி அவசர அவசரமாக ஓடி வந்தேன்... (குலுங்கி குலுங்கி அழுகிறார். திரும்பி உதவியாளரிடம் - இனிமே க்ளிசரின் வேண்டாம்யா... பழகி பழகி கண்ணீர் தானாவே வருது...)

ராமதாஸ் : நானும் தம்பி திருமாவும் சொன்னத கேக்காம டோண்டுவும் இட்லியும் அவங்க இஷ்டத்துக்கு பதிவு போட்டுகிட்டு இருந்தாங்க... மக்கள் அவங்கள உதாசீனப்படுத்திட்டாங்க.... அப்புறம் நாங்க சொன்னதுல உள்ள உண்மைய புரிஞ்சி ஒழுங்கு மரியாதயா பதிவு போட்டாங்க... இப்ப பாருங்க மக்கள் கொடுக்கிற ஆதரவ.... புரிஞ்சுதா? நான் கேக்குறேன்... எதுக்குய்யா சுதந்திரம் வாங்கினோம். நாங்க சொல்றபடி கேட்டு அப்படியே செயல் படுத்த கூட முடியலன்னா அப்புறம் எதுக்கு இந்தியாவுக்கு சுதந்திரம், எதுக்கு ஜனநாயகம்... இதுக்கு மேல உங்க இஷ்டம்... (திருமா அவர் இஷ்டத்துக்கு கன்டின்யூ பண்ணுவார்) பாட்டாளி சொந்தங்கள் அவங்க அவங்க இஷ்டத்துக்கு கோடாலிசாமி சொல்றபடி கண்டினியூ பண்ணுவாங்க.

வைரமுத்து : ஏஏய் தமிழா... டோண்டுவும் இட்லியும் ஒரு சேதி சொல்லியிருக்கிறார்கள்... அவர்களின் பாதையில் நீ செல்... மற்றவரிடமும் சொல்... மனிதர்களுக்கு மட்டுமல்ல... படுத்திருக்கும் நாயிடம் சொல்... பிறாண்டும் பாயிடம் சொல். பழுக்கபோகும் காயிடம் சொல். டை அடிக்கா சோவிடம் சொல்... யாரிடமாவது சொல்.. எப்படியாவது சொல்... கணீர் என்று சொல்... கஞ்சா அடித்து சொல்... இதுக்கு மேல சொல்றதுக்கு தெம்பில்ல... எப்படியாவது சொல்லிருங்கப்பா....

தி.க. வீரமணி : டோண்டுவும் இட்லியும் இவ்வளவு ஒட்டு வாங்கியிருப்பது பார்ப்பனரான ஜெயலலிதாவுக்கு ஒரு எச்சரிக்கை மணி (ஒரு கருப்பு சட்டை - அண்ணே இப்ப நாம அதிமுகல இருக்கோம்... நீங்க 4 நாள் முன்ன எழுதி வச்ச அறிக்கய படிக்கறீங்க. வீரமணி சுதாரித்து கொண்டு) இவ்வளவு ஒட்டு வாங்கியிருப்பது எதை காட்டுகிறது என்றால் பிஜேபியை எதிர்க்கும் திராணி உள்ள மத சார்பற்ற ஒரே தலைவியாம் புரட்சி தலைவி ஆட்சியை மக்கள் எந்தளவு விரும்புகிறார்கள் என்பதையே... (மொதல்ல எல்லா சொத்தையும் எந்த வில்லங்கமும் இல்லாம நம்ம பேர்ல பத்திரம் பண்ணனும்ப்பா... எப்ப எத பேசறதுன்னு யார ஆதரிக்கறதுன்னு தெரியாம நாக்கு தள்ளி போவுது... இப்படியே போனா தி.க.ல இருக்கற 23 உறுப்பினரும் காணாம போயிடுவாங்க)

ஒ.பன்னீர்செல்வம் : டோண்டுவுக்கும் இட்லிக்கும் வாழ்த்து சொல்லி ஹைதராபாத்தில் ஒய்வெடுக்கும் புரட்சி தலைவி, அற்புத அன்னை, அருமை தாய், மாதர்குல மாணிக்கம், மண்ணின் மைந்தி, மக்களை பெறாத மகராசி, பச்சை விளக்கு (முடியலடா சாமி, எவனாவது தமிழ் புலவர பெர்மனன்டா வேலைக்கு வச்சிக்க வேண்டியதுதான்) அறிக்கை அனுப்பி இருக்கிறார். வழக்கம் போலவே அத்த நான் படிக்கிறேன்.

சுப்ரமணிய சாமி : டோண்டுவுக்கு வாழ்த்துக்கள்... ஆனா இட்லி இவ்வளவு ஒட்டு பெற்றதுல ஜார்ஜ் புஷ்க்கும் CIA வுக்கும் தொடர்பு உண்டுன்னு என்னோட laptop சொல்லுது.... இது சம்பந்தமா நான் மட்டும்தான் உண்மையா விசாரிக்க முடுயும்னு நம்பி ஹ¤யாங் புயாங் (யாருன்னே தெரியலயேப்பா) என்ன கேட்டுண்டிருக்கார். மேலும் சோனியாவும் இத்தாலில இருக்கற அவரோட ஒன்னு விட்ட சித்தப்பாவுக்கும் இட்லியோட link இருக்குங்கறதுக்கு என்கிட்ட ஆதாரம் இருக்கு. இது சம்பந்தமா கோபி அன்னான் என்ன சந்திக்கனுமுன்னு நச்சரிச்சதால நாளக்கி நானும் சந்திரலேகாவும் ஜப்பான் போறோம் (அங்க கோபி அன்னான் இருப்பாரான்னு தெரியல... ஆனா நான் ஜப்பான் போயி ரொம்ப நாளாறது... அதான் அங்க போறோம்)

இவ்வளவு களேபரத்துல எனக்கு ஆராய்ச்சி கட்டுரை எழுதறதா வேணாமான்னு ஒரே குழப்பமா இருக்கு. உங்கள் கருத்து மற்றும் ஒட்ட பொருத்து அத்த நான் முடிவு பண்றேன்... போடுங்கம்மா ஒட்டு நட்சத்திறத்த பாத்து - இந்தியா கள்ள ஓட்டுனாலதான் உருப்படாம போவுதுன்னு நம்பறவங்க மினிமம் 30 ஒட்டாவது போடுங்க...

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


கலக்கல் முகமூடி ;-))
 



முதல் முறையாக ;-) என் பதிவில் கேவலமான கமெண்டை யாரோ ஒரு அனானிமஸ் துப்பியிருந்தார்.... அனானிமஸ்களுக்கு என் பதில் : நீங்க எனக்கு எதாவது கொடுத்து நான் அத ஏத்துகலன்னா என்னாகுமோ அதேதான் உங்க கமெண்டுக்கும்.... திருப்பி எடுத்துகோங்க (பிகு: அருவருப்பான கமெண்டுக்கள் நிரந்தரமாக அழிக்கப்படும்)
 



/கமெண்டை யாரோ ஒரு அனானிமஸ் துப்பியிருந்தார்.... அனானிமஸ்களுக்கு என் பதில் : நீங்க எனக்கு எதாவது கொடுத்து நான் அத ஏத்துகலன்னா என்னாகுமோ அதேதான் உங்க கமெண்டுக்கும்.... திருப்பி எடுத்துகோங்க (பிகு: அருவருப்பான கமெண்டுக்கள் நிரந்தரமாக அழிக்கப்படும்) /

ஏண்டா மடையா நீ என் தலைவன என்ன சொன்னாலும் என்னல ஏத்துக்க முடியாது? அதான்
 



முகமூடி, கலக்கிட்டீங்க. Enjoy பண்ணி படிச்சேன். உங்களுக்கு பெருவாரியான பின்னூட்ட ஆதரவு வேணுமா?

இருந்தாலும் எனக்கு ஒய்வுகிடைக்கும் போது உங்களுக்கு பெருவாரியான பின்னூட்ட ஆதரவு கொடுத்துட்டு போறேன். இப்போதைக்கு ஜீட்....
 



இது மாதிரி டீஸண்டா பேசலாம்ல :-) அதாவது அனானிமஸ் தன்னோட தலைவரான திரு. கருணாநிதி பத்தி நான் எழுதினதுக்காக கோபப்படறார். முரசொலி கூட நான் படிச்சதில்ல.... அண்ணார் சுதந்திர தின உரை கூட இப்படித்தான் எழுதுவார்னு எல்லாருக்கும் தெரியும். அப்புறம் கடந்த 15 நாட்களில் எத்தனை முறை மக்கள் கேட்கிறார்கள்னு கேட்டார்னு தினசரிய படிக்கறவங்களுக்கு புரியும். பொன்னம்மா படம் ரிலீஸானப்போ என்னா நடந்ததுன்னு கழக கண்மணிகள கிட்ட கேட்டா கண்ணீர் விடுவாங்க....
 



தலைவன்.... நான் திமுக வைவிட அதிமுக வை வெறுக்கிறேன்... ஆனா கருணாநிதிக்கு ஜெயலலிதா எவ்வளவோ மேல்... கோயம்புத்தூரில் செக்போஸ்ட் ப்ரச்னைப்ப ரெய்டு போனா நல்லதுன்னு உளவுத்துறை எச்சரித்தும் 'முதல்வன்' பாணில இருந்துட்டு, பின்னாடி நர்ஸ்ங்களோடு சேர்ந்து அழுதப்ப கோயமுத்தூர்ல காரித்துப்பின சனங்கள்ல நானும் ஒருத்தன்... 40 மத்திய மந்திரி. bmw கார்ல மெட்ராஸ்ல இருந்து பாண்டிக்கு போறதுக்கு என்னய்யா 4 நாள் எடுத்துக்கறன்னு கேட்டா, பக்கத்தில் கேரளால 5 நாள் எடுக்கிறார்கள், ஆந்திராவில் 6 நாள் எடுக்கிறார்கள்னு பட்டியல் போடுவார்... தோ, பொது தேர்தல் கூட்டத்துக்கு போனா போதும், என் ஆட்சியில் துவரம் பருப்பு 40 ரூபாய், அம்மா ஆட்சியில் 39 ரூபா 40 காசுகள். மண்ணென்ணை வீசை 10 ரூபாய், கோமளவல்லி ஆட்சியில் 9 ரூபாய் 90 காசுகள்னு பட்டியல் போட்டு முடிக்கறதுகுள்ள பொழுது விடிஞ்சிடுது...
 



நன்றி மூர்த்தி, அல்வாசிட்டி... உங்கள் பொன்னான ஆதரவை எப்பொழுதும் வேண்டுகிறேன்...
 



Muamoodianne,

kalakittenga..summa pugunthu viladureenga.. Ippadiye continue pannunga

Namma alungalla pala peru Jokea Jokeaaa parkama konjam serious ayiduvango.. so anonymousoda udharukku ellam unarcivasapadatheenga
Ramesh
 



Subramanaiam swami solrathu than super
 



அன்புள்ள முகமூடி,

'கொன்னுட்டீரய்யா!!!' சிரிச்சு சிரிச்சு இப்ப நெஞ்சுவலி வந்துருச்சேய்யா!!!!!

நல்லா இருமய்யா!!!!!

என்றும் அன்புடன்,
துளசி.
 



அன்புள்ள முகமூடி,

ரசித்தேன். சிரித்தேன். உங்களை என் வலைப்பதிவின் அரசியல் ஆலோசகராக நியமிக்கலாம் என்று இருக்கிறேன். சம்மதமா ?

அன்புடன்,
இட்லி
 



இட்லி... என்னோட விஜய ராஜேந்தரும் வரேன்னு அடம் பிடிக்கிறார்... அவரோட அவர் பழைய கட்சிய சேர்ந்த லட்சோப லட்சம் - சரி சரி டென்சன் ஆகாதீங்க, சிலம்பரசனோட சேர்ந்து 4 பேரு - வரேன்றாங்க.... இடம் இருக்கா ??
 



க்ளீஷேதான், இருந்தாலும் கூறுவேன். சிரித்து சிரித்து வயிறு புண்ணாயிற்று. சு.சா. தான் பல்டி மன்னராயிற்றே. எனக்கு எதிராக அவர் ஏதாவது பேசுமுன்னரே நானே அவருக்காக பாயின்டுகள் எடுத்து வீசுகிறேன்.
இந்த டோண்டூ தான் இஸ்ரேலிய ஆதரவாளர் என்பதை எனக்கு தெரியாமல் ரகசியமாக வைத்து என்னை ஏமாற்றி விட்டார். வலைப்பூவிலும் யாருக்கும் தெரியாது என்று காசியண்ணா, ரோசா வசந்த் ஆகியோர் நெஞ்சடைக்க என்னிடம் கூறினர். சோனியாவிற்காகாக அவர் உளவு வேலை பார்த்து இத்தாலியப் பிரதமருக்கு ஜெர்மனிலும் பிரெஞ்சிலும் அவர் எழுதி அனுப்புவதாக அனாதை சார் வேறு அழுத வண்ணம் கூறிவிட்டாரே! இஸ்ரேலியப் பிரதமர் புஷ்ஷை நிர்பந்தப்படுத்தி சோனியாவை மிரட்டச் சொன்னார் என்பதை நான் மொஸ்ஸாதில் தொடர்பு வைத்திருக்கும் என் ஷட்டகர் (சகலைபாடி) மூலம் அறிந்து கொண்டேன். என்ன இருந்தாலும் இட்லி வடையே குண்டு டோண்டுவை விட சிறந்தவர் என்று சந்திரகாந்தா எனக்கெடுத்துரைத்து விட்டார்.
இதைப்பற்றிப் பேச சீக்கிரம் ஹார்வார்ட் பல்கலை கழகம் செல்வேன். அவர்கள் வேறு மேற்கொண்டு லீவெல்லாம் தர முடியாது என்று கூறிவிட்டார்கள். வைக்கிறேன் அவர்களுக்கும் ஆப்பு. யேல் பல்கலைக் கழகத்துடன் சேர்ந்து கொண்டு ஒற்று பார்க்கும் ஹார்வார்ட் பலகலைக் கழகத் துணைவேந்தர் தன் வேலையை ராஜினாமா செய்யும் வரை ஓய மாட்டேன். இது சந்திரகாந்தா மற்றும் சுர்லா மீது ஆணை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
 



நன்றி சம்மி... உங்க பதிவையும் படிச்சேன்... தனி மனிதனின் விருப்பு வெறுப்புகளை மதித்து கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் சகிப்புதன்மை இருந்தாலே முக்காவாசி ப்ரச்னை கொறையும்.... துளசி, நெஞ்சுவலியெல்லாம் கோர்ட் ஆஜர் அன்னிக்கி அரசியல்வாதிக்கு வர காஸ்ட்லி வியாதி, நம்ம மாதிரி பொதுஜனத்துக்கு வராது...
 



கலக்கல் டோண்டு... நைசா பல பேருக்கு மெஸேஜ் கொடுத்துவிட்டீர்கள். ஆனா சுசாமி பேர்ல சொன்னதால எல்லாம் வழக்கம் போல தமாசுன்னு நினைச்சுக்குவாங்க...
 



anbuLLa dOndu,

chandralEkhava / chandrakaanthaavaa ? :-))
 



சந்திரலேகாதான், சந்திரகாந்தா அல்ல. பிந்தையவர் சினிமா நடிகை. முந்தையவர் மாஜி ஐ.ஏ.எஸ். அதிகாரி. பார்க்க:
http://www.rediff.com/news/1996/0510lek1.htm
அன்புடன்,
டோண்டு ராகவன்
 



முகமூடி அப்பு,

சொம்மா பின்னிட்டீங்க :)) நம்ம 'தலைவருங்களை' சூப்பரா படிச்சு வச்சிருக்கீங்க !!!!!!!!!!!
(இது இட்லி சொன்னதை காப்பாத்த !!!!!!) ரசிச்சு, சிரிச்சு படித்தேன் :))

சாமீ, நீங்க போட்ட மெயிலுக்கு நான் போட்ட பதில பாத்தீங்களா ? ஒரு "ACK" பண்ண வேணாமா ?

Please contribute your mite (by initiating a controversial discussion!) to make the comment count for my latest 'pathivu' to reach 100 (Now it is 88, I think !!!!!
 



டோண்டு, சுர்லாவுக்கு ஆசிட் வழக்குல தண்டனை கிடைச்சிதா? என்ன ஆச்சின்னு தெரிஞ்சா சொல்லுங்க... ஸாரி பாலா, இன்னிக்கி பதில் எழுதிடறேன்... அப்புறம் உங்க பின்னூட்ட எண்ணிக்கை 102 ஆயிடுச்சி... வாழ்த்துக்கள்.
 



முகமூடி அவர்களே, மேலே உள்ள பின்னூட்டம் தரமானவற்றுக்கு நடுவில் தரமற்று அனாதையாக நிற்கிறது. என்ன செய்வதாக உத்தேசம்? இவர்தான் மூக்கன் அவர்களின் பதிவிலும் எனக்கெதிராக கிட்டத்தட்ட இதே வார்த்தைகளில் பின்னூட்டமிட்டவர் என்று நினைக்கிறேன். அவர் இதைப் பார்த்தால் உறுதி செய்வார் என நம்புகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
 



கவனித்தவுடன் தூக்கியாச்சு டோண்டு... வலைப்பூ எதுக்கு உதவுதோ இல்லையோ... hate crimeக்கு நல்லா உதவுது....
 



ஆனால் மூர்த்தி ஐயர்வாள் ரொம்ப நல்லவர் அப்படித்தானே?
அன்புடன்,
டோண்டு ராகவன்
 



துர்வாசர் மாதிர் சம்பந்தமே இல்லாம, தேவையும் இல்லாம பின்னூட்டம் போடறவங்கள பாத்து பாத்து tiredஆ இருக்குபா... இதுக்காகவே லேட்டஸ்ட் பதிவு ஒன்னு போட்றுக்கேன். படிச்சிட்டு சொல்லுங்க...
 



முகமூடி அவர்களே, உங்கள் புதிய பதிவில் பின்னூட்டப் பெட்டி திறக்கவில்லை. ஆனால் பதிவு நன்றாக இருந்தது. அதை இங்கிடுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
 



துர்வாசர் :: இந்த பதிவோ அல்லது ஏனைய பின்னூட்டங்களோ சாதியை பற்றி பேசாத போது, நீங்கள் சாதியை நுழைப்பதைத்தான் சம்பந்தமே இல்லாலது என்கிறேன்.

டோண்டு :: சுட்டிக்காட்டியதற்கும் ஆதரவிற்கும் நன்றி... இப்பொழுது சரிசெய்துவிட்டேன்.
 



//டோண்டு, மாயவரத்தான், திருமலை, வெங்கடேஷ், கிச்சு, பிகேஎஸ் போன்ற பார்ப்பண வெறியர்களைக் கண்டவுடன் சுட உத்தரவு வேண்டும். //

கொஞ்சமாச்சும் மூளை வளர்ச்சி உள்ளவர் மாதிரி பேசவாவது பழகவும் துர்வாசரே!
 



அதை நாங்க சொல்லனும். நீங்களே சொல்லிக்ககூடாது. திண்ணை விவகாரம் குறித்து இஷ்டத்துக்கும் எழுத வேண்டாம். அந்த விவகாரத்தில் உங்களுக்கு சிறுமூளைக்கு எட்டியது அவ்வளவு தான்.

உங்களைப் போன்ற ஆட்கள் கடன் கேட்டாலும் கொடுப்பதாக உத்தேசம் இல்லை. அதையும் கெடுத்து விடுவீர்கள்!
 



மேலே இந்த வலைப்பதிவுக்கு சொந்தக்காரரே 'துர்வாசர் மாதிரி பதிவுக்கு சம்பந்தமே இல்லாம, தேவையும் இல்லாம' அப்படீன்னு எழுதியிருக்காரு கவனிக்கவும். தேவையில்லாதவர்ன்னு எழுதியும் இங்கே உளறிக் கொட்டிக் கொண்டிருப்பது ஏன்?!
 



// முகமூடி அவர்களும் ஒரு பார்ப்பண வெறியர் என்பதை நான் அறிவேன் // வந்துட்டாரய்யா கொலம்பஸ¤... சின்ன வயசுல ஸ்கூலுக்கு போவ சொல்லோ அர நிஜார் பசங்க எல்லாம் ஓணான் புடிப்பாய்ங்க - வெளக்குமாத்து குச்சில சுறுக்கு செஞ்சி ஓணான புடிச்சி அதும் கண்ணில என்னமோ ஒரு செடியோட பால வுடுவானுங்க... அதுக்கு பைத்தியம் புடிச்சிறும் - அத பாத்தா நான் அவனுங்க கிட்ட சண்டைக்கு போவேன். அதுக்கு ஒரு சூப்பர் வெளக்கம் கொடுப்பானுங்கோ பாரு... ராமர் சீதைய தேடிக்கிட்டு லங்கைக்கு போவ சொல்சோ தாகமா இருந்திச்சின்னு தண்ணீ கேட்டாரம்... ஓணான் ஒன்னுக்கு அடிச்சி கொடுத்திச்சாம். அணில்தான் எளனி கொண்டாந்து கொடுத்திச்சாம்.. அதனால ஓணானுக்கு பாடம் சொல்லிதரோம்... ஆமா நீ என்னா ஓணானுக்கு வக்காலத்து வாங்கற, நீ ராவணன் ஜாதியான்னுவானுங்க... அவிங்க வயசும் மூளையுந்தான் உமக்கும்னு சொல்லுங்க துர்வாசரே, அப்பாலிக்கா நான் எதுவும் பேசல
 



// எது பதிவுக்குச் சம்பந்தம் இல்லை என்று அவர் விளக்கிச் சொல்லட்டும் // என் தமிழ்ல எந்த பார்ட் உங்களுக்கு புரியவில்லை..... இந்த பதிவிலோ அல்லது பின்னூட்டங்களிலோ ஜாதி அடையாளம் எதுவும் இல்லை.... அப்படியிருக்க திடீரென்று நீங்கள் // டோண்டு, மாயவரத்தான், திருமலை, வெங்கடேஷ், கிச்சு, பிகேஎஸ் // ஆகியோரை ஜாதி அடிப்படையில் இங்கு வந்து விமர்சனம் செய்ய என்ன சம்பந்தம் இருக்க முடியும்....
 



This comment has been removed by a blog administrator.
 



//அவிங்க வயசும் மூளையுந்தான் உமக்கும்னு சொல்லுங்க துர்வாசரே, //

:) :) :) :) :) :)
 



Dear Mr.Mugamoodi

One Dhurvaasar expressed his wish to kill me, you and some other friends. It amounts to a clear murder threat. I've already referred your blog and made a formal complaint to the Tamil Nadu cyber crime wing and also to the federal agencies here in US. They can identify the source and catch hold of this guy from whatever hell hole he is writing from. I also mentioned my doubts and guess about who this person could be to the authorties so that it wll make their job little easier.

Please cooperate with those authorities in identifying the orgin of this Dhurvaasar when they approach you. These sort of blackmails and hatred motives should be immediately brought to the notice of the law and such elements should be properly dealt with.


I request you to gather whatever statistics that you can gather about this hatemonger and save them. Let us deal this guy legally. Please contact me to discuss more about the intricacies of this legal action, that I am pursuing against this guy.

If anything happens to me, I'll hold this guy Dhurvaasaar or whatever his real name as responsible.

Thanks
Regards
S.Thirumalai
strajan123@yahoo.com
 



Dear Thirumalai,
You are moving in the right direction. This guy Dhurvasan seems to be very close to our Mr.Murthy of Singapore and can be easily traced through him. Singapore police too may be roped in for this purpose. I guess this is seriously dealt with in that country.
Even though I have deleted this fellow's vulgar comments in my blog posting, they have come through my gmail inbox and the messages are stored in the same. Police should have no problem in tracing and nailing this guy to the ground. Some stay in the State prison should do wonders for this guy's well-being.
Regards,
Dondu Raghavan
 



It is unfortunate that things (this durvasar business) has come to such a pass. Vulgarity and violence must never be used as weapons to silence people in a discussion or argument. Personal abuse in a public forum has to be dealt with and what Thirumalai has done is right considering his name was dragged unnecessarily into this.
 



திருமலை, என்னளவில் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும்... கண்டுபிடிக்கப்பட்டால் சொல்லுங்கள், எங்கள் அண்டை அயலார் நிறைய சேலை வைத்திருக்கிறார்கள், சிறையில் கட்டிக்கொள்ள சௌகரியமாக இருக்கும்.... டோண்டு, என்னாலேயே இவர்களை ட்ரேஸ் செய்ய முடியும்... அதற்கு செலவிடும் அளவு எனக்கு நேரம் இல்லை. அது தேவையும் இல்லை.
 



அட..துர்வாசரை என்னன்னு நெனச்சீங்க? அவர் வீராதி வீரர், சூராதி சூரர். இதுக்கெல்லாம் பயப்படாத அஞ்சாத சிங்கம். பாயும் புலி. இதோ வந்து அவரே தன்னோட முகவரியை தருவாரு பாருங்க. நிமிஷத்துக்கு ஒரு தபா வாயை தொரந்திட்டிருந்த அவரு 24 மணி நேரத்துக்கு மேல காணும்கிறது வேற விஷயம்.
 



பயத்திலே இங்கே யாரோ என்னவோ ஒளருற மாதிரியில்ல இருக்கு. யாருப்பா அது வீராதி வீரர்?
 



//பயத்திலே இங்கே யாரோ என்னவோ ஒளருற மாதிரியில்ல இருக்கு. யாருப்பா அது வீராதி வீரர்?//

இதுக்கு தான் எங்க ஊர்ல "எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை"ன்னு சொல்லுவாங்க :-). நான் சொன்ன பழமொழி சரி தானா விசயகாந்து?
 



சரியா சொன்னீங்க KVR அண்ணாச்சி, ஆனா உங்க ஊரிலே மட்டுமில்லே எங்க ஊரிலேயும் அப்படிதான் சொல்லுவாங்க தெரியுமா?
 



The link of Paappaan, when clicked leads to Dhurvasar at http://www.blogger.com/profile/9267865; on clicking further we come to http://www.kamalogam.com/, a porno site.
Some of the forum titles are:
1. புதிய தகாத உறவுக் கதைகள்
2. புதிய காம ஆலோசனை/விவாதங்கள்
3. புதிய காமக் கவிதைகள்/விடுகதைகள்
4. புதிய காமச் சிரிப்புகள்
This Dhurvasan has a nerve exposing himself like that.
Regards,
Dondu Raghavan
 



Ennaba ithu..athukullara sandaiya niruthittanga....
 



மே 22, 2005 6:17 PM மற்றும் Mஅய் 22, 2005 6:21 PM க்கு டோண்டு பெயரில் இடப்பட்ட பின்னூட்டங்களில் பெயரை இப்போதுதான் கவனித்தேன். அவை நான் இட்டவையல்ல. . திருமலை மற்றும் மாயவரத்தான் என்னைத் தவறாக நினைக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்கிறேன்.

அப்பெயர்களில் உள்ள லிங்கை அழுத்திப் பார்த்தல் உங்களுக்கு புரியும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 



This comment has been removed by a blog administrator.
 



This comment has been removed by a blog administrator.
 



Dondu Sir, I know that it was not you.. It was by a nameless beggar. Dont feel about that.
 



This comment has been removed by a blog administrator.
 



This comment has been removed by a blog administrator.
 



This comment has been removed by a blog administrator.
 



This comment has been removed by a blog administrator.
 



This is getting more and more ridiculous. The 67th comment above is given in my name after creating a new blogger identity. It leads to http://bramin.blogspot.com
If you click the blog title in that URL, it leads to my regular blog.
This is a sure way of destroying the trust in the blogging world.
I can only hope that this madness will stop.
Regards,
N.Raghavan
 



யாருக்குமே தெரியாது என்றாலும் நீ என்ன சிந்திப்பாய், என்ன செய்வாய் என்பதுதான் நீ 'உண்மையிலேயே' யார் என்பதை கண்டுபிடிக்க எளிய வழி என்று ஒரு ஞானி சொல்லியிருக்கிறார். நகைச்சுவையாக எழுதப்பட்ட பதிவு இது. சம்பந்தமே இல்லாமல் ஒரு தனி மனிதனை பற்றி கேவலமாக பின்னூட்டம் இட்டு துர்வாசர் என்பவர் திசைதிருப்பும் வேலையை ஆரம்பித்தார். பின்பு பாப்பான் என்ற பெயரிலும் அதனை தொடர்ந்தார். அது hackingல் முடிந்திருக்கிறது... துர்வாசர் இப்பொழுது தன் வெற்றி குறித்து மிகவும் மகிழ்ச்சியில் இருப்பார்.... வெற்றிக்களிப்பில் குதூகலமாக சிரித்துக்கொண்டிருக்கலாம்... துர்வாசர் உங்கள் வீட்டில் கண்ணாடி இருந்தால் அதன் முன் நின்று சிரித்துப்பாருங்கள்.... பெருமையக இருக்கிறதா... எனில் உங்களுக்கு உடனடி தேவை ஒரு மாறுதலான வாழ்க்கை முறை... அட்லீஸ்ட் சிறிது காலத்துக்காவது... குழந்தைகளின் சிரிப்பை ரசிக்கப்பாருங்கள்... காலையில் முடிந்தால் கடற்கரை பக்கம் போய் வாருங்கள்... நகைச்சுவை படங்கள் பாருங்கள்... கண்ணியை ஒரு வாரத்துக்கு மூட்டை கட்டி வையுங்கள்... நீங்கள் தற்போது பார்க்கும் வேலையில் ஒரு படி முன்னேற உங்கள் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்துங்கள்.... எல்லா குற்றவாளியும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்ற எண்ணத்தில்தான் குற்றத்தை ஆரம்பிக்கிறார்கள். கண்டுபிடிக்காத குற்றங்களின் விழுக்காடு மிக மிக குறைவு என்பதை நினைவில் கொள்ளுங்கள்... ஒருவரை துன்பப்படுத்தி அதன் மூலம் மகிழ்ச்சி கொள்ளும் sickest mentality (ஸாடிஸ்ட் மனோபாவம்) மனிதனை மனிதன் என்ற நிலையில் இருந்து கீழிக்குகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்... என் திருப்திக்காக இதையெல்லாம் சொன்னேன்.... சிந்தித்துப்பார்ப்பதும் பார்க்காததும் உங்கள் நோயின் தீவிரத்தை பொறுத்தது.

illegitimate பின்னூட்டங்கள் அனைத்தையும் அழித்துவிட்டேன்... எதிர்கால தேவையை மனதில் கொண்டு linkஐ அழிக்கவில்லை. பின்னூட்டங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பபற்று இருப்பது நெருடலாக இருந்தாலும் நன்றாகவே இருக்கிறது.
 



முகமூடி அவர்களே,

மூர்த்தி அவர்கள் கூறுவதும் நியாயமாகவே எனக்கு படுகிறது. அவர் கேட்டுக்கொண்டவாறு அம்மாதிரியான எல்லா பின்னூட்டங்களையுமே அழித்து விடுவதே நியாயமாக இருக்கும் என்று என் தரப்பில் நானும் தங்களைக் கேட்டு கொள்கிறேன்.
அதைப் பார்த்து நானும் சற்று கடுமையாகவே அவரிடம் பேசி விட்டேன். அதையும் நான் எடுத்து விடுகிறேன். அதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்பதில் எனக்கு தயக்கம் இல்லை.

மூர்த்தி அவர்களே என்னை மன்னித்து விடுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 



மூர்த்தி :: பாரபட்சம் எல்லாம் ஒன்றும் இல்லை... நான் லிங்க் எங்கே செல்கிறது என்று பார்த்து அழித்துக்கொண்டே வந்தேன்... உங்கள் பெயரயும் டோண்டு பெயரையும் தாங்கி வந்த போலி லிங்குகள் hidden profileல் முடிந்தன... இது நேரடியாக வலைப்பதிவுக்கு சென்றதும் சற்றே குழம்பிவிட்டேன்... மன்னிக்கவும்... // சம்பந்தமே இல்லாமல் ஒரு தனி மனிதனை பற்றி கேவலமாக பின்னூட்டம் இட்டு துர்வாசர் என்பவர் திசைதிருப்பும் வேலையை ஆரம்பித்தார் // அப்படித்தான் ஆரம்பித்தார் // பின்பு பாப்பான் என்ற பெயரிலும் மற்றவர்கள் மேலும் அதனை தொடர்ந்தார் // என்றிருக்க வேண்டும், தவறுதலாக விட்டுப்போய்விட்டத்து. நேரடியாகவே கேட்டு தெளிவு படுத்த வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி...
 



சரி, உங்க கருத்து ??