<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

ஆத்திச்சூடி ஞாபகம் இருக்கா ?


சமீபத்தில் toys 'r' us க்கு ஒரு பொம்மை வாங்கலாம்னு போனா அடேங்கப்பா... குழந்தைகளுக்கான பொம்மைகள் தயாரிப்பு எவ்ளோ பெரிய வர்த்தக சாம்ராஜ்யமாக வளந்திருக்கு. (பிராணிகள் பராமரிப்பு இன்னொரு சாம்ராஜ்ஜியம்). என் சின்ன வயசு பொம்மை ஞாபகங்களான பச்சைக்கிளி (ப்ளாஸ்டிக் கிளி அடியில் சின்னதாய் இரண்டு சக்கரம் இருக்கும்) , நடவண்டி , நுங்கு வண்டி எல்லாம் இன்னும் வழக்கில் இருக்கான்னு தெரியல.


பேசும்/பாடும் பாடபுத்தகங்கள பாத்தப்போ நான் படிச்ச தமிழ் ரைம்ஸ் (இதுக்கு தமிழ் என்ன - மழலை பாடல்கள் என்பது சரியா) என்னான்னு யோசிச்சேன். 'அம்மா இங்கே வா வா' ஞாபகம் இருக்கு.... வேற ஒன்னும் இப்போதைக்கு ஞாபகம் வரல.. குழுவா மொத்த க்ளாஸ¤ம் ஒப்பிப்பதில் ஆத்திச்சூடி (முழு ஆத்திச்சூடியும் முதல் கமெண்ட்டில்) - ஆறுவது சினம் வரை ஞாபகம் வருது. அது வரைதான் இன்று அர்த்தமே புரிகிறது. முயற்சி செய்தால் வேறு சிலவற்றின் அர்த்தம் புரிகிறது. ஒளவியம் பேசேல் என்பதற்கு சத்தியமாக அர்த்தம் புரியவில்லை. தப்பு என்மேலன்னு எனக்கு தோனல. விரும்பு, சினம், ஊக்கம், கைவிடல், இகழ்ச்சி என்பதை தவிர மற்ற வார்த்தைகள் நமது அன்றாட பேச்சு வழக்கில் இன்று இருக்கிற மாதிரி எனக்கு தெரியவில்லை. ஆத்திச்சூடி கற்கும் ஒரு குழந்தை அதை ஒரு பாடமாக தவிர - அதிக பட்சம் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு பாடிக்காண்பிக்க - வேறு விதத்தில் உபயோகப்படுத்துகிறதா? அப்புறம் எப்படி அடிமனதில் பதியும்.

ரொம்ப வருஷங்களுக்கு முன்பு சுஜாதா ஒரு கட்டுறையில் அவரது நண்பர் ஒருவர் - ராமானுஜம்? - குழந்தைகளுக்கான நர்சரி ரைம்ஸை அழகான தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருப்பதாக, பா பா ப்ளாக் ஷீப்பின் மொழி பெயர்ப்பை கொடுத்திறுந்தார். எளிமையாகவும் அழகாகவும் இருந்தது அது. (யார்கிட்டயாவது நல்ல தமிழ் ரைம்ஸ் இருக்கா). இப்போ மெட்ராஸ் பாஷையில் 'ட்விங்கிள் ட்விங்கிள்' பாடினால் இப்படி இருக்குமா?

பளிச்சி பளிச்சி தம்மாத்தூண்டு இஸ்டாரே!
ஆச்சரியமாத்தான்கீது நான் உன்ன பாக்க சொல்லோ!
ஒலகத்த விட்டு யம்மான் ஒசரத்துல கீர,
வானத்துல ஒரு வைரமணியாட்டமா மின்னிக்கினு
பளிச்சி பளிச்சி தம்மாத்தூண்டு இஸ்டாரே!

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


ஆத்திச்சூடி

அறம் செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்
எண் எழுத்து இகழேல்
ஏற்பது இகழ்ச்சி
ஐயம் இட்டு உண்
ஒப்புரவு ஒழுகு
ஓதுவது ஒழியேல்
ஔவியம் பேசேல்
அஃகம் சுருக்கேல்
 



Ennaaaaaaa Ethuuuuu

Sirupullathnamalllaaaa irukkuuu
 



ஒரு ரைம்ஸ்

டப்பா டப்பா வீரப்பா
எப்பண்டா கல்யாணம்
பட்டம் பறக்குது
பள்ளிக் கூடம் தொறக்குது
மாசி பிறக்கட்டும்
மல்லிகைப்பூ பூக்கட்டும்
நிலா நிலா ஓடிவா
நில்லாமல் ஓடிவா
மலை மீது ஏறிவா
மல்லிக்கை பூ கொண்டுவா
 



எம்ஜியார் சண்டை
பானுமதி கொண்டை
குளத்துல கொக்கு

என்று ஒரு பாடல் பாடுவோம். யாருக்காவது முழுதும் ஞாபகம் இருக்கா?
 



திருக்குறள் பத்து அதிகாரத்துல சொல்றத அழகா ஒரே பாட்டுல சொல்லியிருக்காங்க
நம்ம ஒஉவை பாட்டி.
 



நன்றி சம்மி. சுஜாதா மொழிபெயர்ப்பை ஒரு தகவலாகத்தான் சொன்னேன். தமிழில் அழகான சிறுவர் பாடல்கள் நிறைய உள்ளன. இப்பவும் நமக்கு ஞாபகம் இருப்பது / ஞாபகப்படுத்திக்கொள்வதை குறித்துதான் இந்த பதிவு. நிலா நிலா ஓடிவா, மல்கோவா மாப்பழம் இரண்டும் இப்போ ஞாபகம் வருது... ஆங்கில குழந்தைப்பாடல்கள் நெகடிவ் திங்கிங்கில் முடிவதை நானும் கவனிச்சிருக்கேன். அத பத்தி மேலும் ஆராய்ச்சி பண்றேன். நீங்க சொன்ன சுட்டியில தகவல் இருக்கே தவிர எப்படி வாங்கறதுன்னு தகவல் ஒன்னும் காணோம்... நீங்க எப்படி வாங்கனீங்க.
 



எல்லாத்துக்கும் அர்த்தம் புரியுதா ஆதிரை ??
 



அல்வாசிட்டியாரே.. மேற்படி சி.டி. பர்மா பஜாரிலே கெடைக்குமா?! :)
 



auviyam auviyam = envy

sollvadhu
online tamil lexicon.
 



ரொம்ப நன்றி அல்வாசிட்டி, ஆத்திச்சசூடி இவ்ளோ இருக்குங்கறதே இன்னிக்கிதான் தெரிஞ்சிகிட்டேன். வீரபாண்டிய கட்டபொம்மன் பாணில சொன்னா வெட்கம்ம்ம்... அப்புறம் நிறைய ஆங்கில ரைம்ஸ் ஏன் நெகட்டிவ் திங்கிங்ல இருக்குன்னு பாக்க போனா அதுல ஏகப்பட்ட விசயம் இருக்கும் போல.... சுருக்கமா சொன்னா ஹம்டி டம்டி, ஜாக் அண்ட் ஜில் எல்லாம் சரித்திர காலத்துல ஒல்ட் இங்கிலாந்து அரச பரம்பறைய கேலி பண்றதுக்காக பாடிய பாடல்களாம். நம்மூர்ல சுதந்திர காலத்துக்கு முன் எப்படி நாட்டுப்பாடல்கள்/ பொம்மலாட்டங்கள வெள்ளக்காரனுக்கு எதிரா சூசகமா பாடினாங்களோ அப்படி.... இத பத்தி விரிவா ஒரு வலைப்பூ கட்டறேன்.
 



http://paadal.blogspot.com/
 



இங்கே பார்க்கவும், இன்னும் சில பாடல்கள்

(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)
 



சரி, உங்க கருத்து ??